Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றியுள்ளோம்! - என்கிறார் மங்கள சமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் நான்கு அம்ச திட்டம் ஒக்டோபர் மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  அதன்படி அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி ஜனவரி மாதம் தொடங்கி 18 மாதத்திற்குள் உள்நாட்டு பொறிமுறை குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் நான்கு அம்ச திட்டம் ஒக்டோபர் மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி ஜனவரி மாதம் தொடங்கி 18 மாதத்திற்குள் உள்நாட்டு பொறிமுறை குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

   

உள்நாட்டு பொறிமுறையை செயற்படுத்தும் போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறவுள்ளதோடு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

´2009 ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்தபோது அன்றைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட உடன்படிக்கையும் பின்னர் அதனை நிறைவேற்றாது உள்நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றியமையின் விளைவே இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் வெளியாகியுள்ள அறிக்கையாகும்.

13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல், சர்வதேச மனித உரிமை மேம்பாடு, அரசியல் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை செயற்படுத்தல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை சர்வதேசத்திடம் வழங்கி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு மாறாக செயற்பட்டார். அதனால் அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றியது.

எனினும் அதிஸ்டவசமாக ஜனவரி 8ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட பின் சர்வதேசத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உள்நாட்டில் எடுக்கப்பட்ட ஜனநாயக வலுவூட்டல் செயற்திட்டங்களால் மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்த போர்க்குற்ற அறிக்கை செப்டெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வழங்கிய கால அவகாசத்தை பயன்படுத்தி நாம் முன்னெடுத்த நல்லாட்சி திட்டங்களால் இன்று வெளியாகியுள்ள விசாரணை அறிக்கையின் தீவிரத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள போதும் தனிப்பட்ட எவருடைய பெயரும் பதியப்படவில்லை. அதனை தேடி தண்டிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான திட்டத்தை நாம் அனைவரது ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவது புதுமையான விடயம் கிடையாது. மனம்பெரி கொலை, போகொட வாவி தமிழ் இளைஞர்கள் கொலை மற்றும் கிரிஷாந்தி குமாரசாமி கொலை போன்ற சம்பவங்களில் சட்டம் செயற்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

உலகத்தில் சிறந்த இராணுவமாக கீர்த்திநாமம் எடுத்துவந்த இலங்கை இராணுவம் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் மேலிடத்தில் இருந்து விடுக்கப்பட்ட சில தவறான உத்தரவுகளை சில இராணுவத்தினர் செயற்படுத்தியதால் முழுமையாக இழுக்குப் பெயருக்கு ஆளானது. ஆனால் அந்த நிலைமையில் இருந்து இராணுவத்தை மீட்டெடுத்து உலகத்தில் உள்ள எந்த நாட்டு இராணுவத்திற்கும் இரண்டாம் நிலையாகாது கீர்த்திநாமத்துடன் இருக்கும் வகையில் இலங்கை இராணுவத்தை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் ஒரு கட்டமாக மாலி நாட்டுக்கு சமாதானப் படையாக இலங்கை இராணுவ வீரர்கள் பலரை அனுப்பி வைக்க நாம் பேச்சு நடத்தியுள்ளோம்.

அது மாத்திரமன்றி உள்நாட்டு பொறிமுறை செயற்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா விஜயம் செய்யும் போது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பலருடன் பேச்சு நடத்த எதிர்பார்த்துள்ளோம். அதன்மூலம் புதிய இலங்கைக்கான அடிக்கல்லை நாட்ட எதிர்பார்த்துள்ளோம்.

ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியை சந்தித்திருந்தால், பழைய ஆட்சியாளர் மூலம் இலங்கை நினைத்து பார்க்க முடியாத ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும். மார்ச் மாதத்தில் போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்டு அதில் பெயர்கள் குறிப்பிட்டு இராணுவத்தினர் மீது போர்க்குற்றம் சுமத்த வாய்ப்பு இருந்தது. பின் சர்வதேச விசாரணை மூலம் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டு சர்வதேச தடைகள் பல விதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை மீது தடை விதித்தால் போதும் இலங்கையில் முழு பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து ஆடைத்தொழிற்சாலை துறையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்திருப்பர்.

ஆனால் அப்படி ஒன்று நடக்காமல் நாம் பாதுகாத்துள்ளோம். உண்மையை சொல்வதாயின் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச போர்க்குற்ற விசாரணை மூலம் மின்சார நாற்காலிக்கு செல்லவிருந்த ஆபத்தை தடுத்தது தமது அரசாங்கமே´ என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=140725&category=TamilNews&language=tamil

//ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியை சந்தித்திருந்தால், பழைய ஆட்சியாளர் மூலம் இலங்கை நினைத்து பார்க்க முடியாத ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும். மார்ச் மாதத்தில் போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்டு அதில் பெயர்கள் குறிப்பிட்டு இராணுவத்தினர் மீது போர்க்குற்றம் சுமத்த வாய்ப்பு இருந்தது. பின் சர்வதேச விசாரணை மூலம் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டு சர்வதேச தடைகள் பல விதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை மீது தடை விதித்தால் போதும் இலங்கையில் முழு பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து ஆடைத்தொழிற்சாலை துறையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்திருப்பர்.

ஆனால் அப்படி ஒன்று நடக்காமல் நாம் பாதுகாத்துள்ளோம். உண்மையை சொல்வதாயின் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச போர்க்குற்ற விசாரணை மூலம் மின்சார நாற்காலிக்கு செல்லவிருந்த ஆபத்தை தடுத்தது தமது அரசாங்கமே´ என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.//

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்கள் தங்களுக்குள் இனபாசம் உள்ளவர்கள். அண்மைக்காலங்களில்அவர்கள்   கட்சி/கொள்கைகளால் கூட பேதப்படவில்லை. பிரிந்து நிற்கவில்லை. தமது இனம் என்றவகையில் கரம்கோர்த்து நிற்கின்றார்கள்.tw_star:

இரு பெரும் கட்சிகளும் ஒன்றாகி தம் மக்களையும் காப்பாற்றி  தங்கள் தலைவனையும் காப்பாற்றியிருக்கின்றார்கள்.tw_thumbsup:


எம்மினத்தின் இவ்வளவு அழிவிற்கு பின்னரும் முட்டையில் மயிர்புடுங்கும் ஈனத்தமிழன் இருக்கும் வரைக்கும் ஈழத்தமிழர் உரிமையை யாராலும் வென்றெடுக்க முடியாது. tw_rage:

  • கருத்துக்கள உறவுகள்

//ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியை சந்தித்திருந்தால், பழைய ஆட்சியாளர் மூலம் இலங்கை நினைத்து பார்க்க முடியாத ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும். மார்ச் மாதத்தில் போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்டு அதில் பெயர்கள் குறிப்பிட்டு இராணுவத்தினர் மீது போர்க்குற்றம் சுமத்த வாய்ப்பு இருந்தது. பின் சர்வதேச விசாரணை மூலம் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டு சர்வதேச தடைகள் பல விதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை மீது தடை விதித்தால் போதும் இலங்கையில் முழு பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து ஆடைத்தொழிற்சாலை துறையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்திருப்பர்.

ஆனால் அப்படி ஒன்று நடக்காமல் நாம் பாதுகாத்துள்ளோம். உண்மையை சொல்வதாயின் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச போர்க்குற்ற விசாரணை மூலம் மின்சார நாற்காலிக்கு செல்லவிருந்த ஆபத்தை தடுத்தது தமது அரசாங்கமே´ என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.//

இவை தேர்தல் நேரம் நான் எழுதியது .......

அறிவாளிகள் சிரித்தார்கள்.
மைத்திரி 100 நாளில் பாய் விரிப்பார் 
ரணில் தலாணி போடுவார் 
அப்படியே புரளலாம் என்று கொட்டாவி விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 

மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றியுள்ளோம்! - என்கிறார் மங்கள சமரவீர

புலிகளை மின்சார நாற்காலிக்கு கொண்டு பொகாமல் தூக்கம் வராது - தமிழர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை மின்சார நாற்காலிக்கு கொண்டு பொகாமல் தூக்கம் வராது - தமிழர்கள்

தவறு விசுகு அவர்களே !! 

  • கருத்துக்கள உறவுகள்

யார் மின்சார நாற்காலிக்கு போனாலும் போகாட்டிலும் எமக்கு கவலையில்லை.

நாம் உணர்சிவசப்பட்டு பழிவாங்குவதை காட்டிலும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு கெளரவமான தீர்வை பெற முயற்சிப்பதே புத்திசாலித்தனம்.

மங்களவின் கூற்றுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் புரியாமல் அல்லது புரியாதமாதிரி நடித்த படி அவர் என்னவோ அரிச்சந்திரன் மாதிரி கதை விடுகிறார்கள் சிலர்.

சர்வதேச கண்காணிப்பு, பங்களிப்புடன் கூடிய உள்ளக விசாரணை எனும் விடயத்தை இப்படி லாவகமாய் சிங்களவர் மத்தியில் விற்க்கப் பார்கிறார் மங்கள.

தவிர ஜனவரியில் மகிந்த வெண்டிருந்தால் ஒரு மாங்காயும் நிகழ்ந்திராது.

இந்தியா சைனா பாகிஸ்தான் இருக்கும் வரை ஓரளவுக்கு மேல் இலங்கையை அமேரிக்க ஐரோப்பிய தடைகள் ஒண்டும் செய்திருக்க முடியாது.

வட கொரியா, ஈரான் ஏன் தன் வாசலில் இருக்கும் கியூபா மீது அமெரிக்கா போடாத தடைகளா?

பல தசாப்தமாயும் அந்நாட்டு அரசுகளை இவர்களால் ஒண்டும் செய்ய முடியவில்லை.

மங்கள நீளமா கொடுக்கிறார் ( கையிறுதான்) என்பதற்க்காக கண்ணை மூடிக்கொண்டு விழுங்கக்கூடாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே எழுதியது தான் மகிந்தா இன்னும் 10 வருடம் ஆட்சியில் தொடர்ந்து இருந்திருந்தால் சிங்கள மக்களே அவருக்கு எதிராக கிளர்ந்து எழுந்திருப்பார்கள்.பெரிய தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கலாம். சில நேரம் அது தூக்காகவும் இருந்திருக்க கூடும்.ஆனால் இப்ப அது எல்லாவற்றிலும் இருந்து அவர் தப்பி விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுத் தமிழர்  இலங்கையில் இருக்கும்வரை மகிந்த போன்றவர்களைச் சிங்களம் காப்பாற்றிகொண்டேயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு விசுகு அவர்களே !! 

எங்கே குற்றம் கண்டீர் ஐயா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றியுள்ளோம்! - என்கிறார் மங்கள சமரவீர

அதுதானே உங்களின் திட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை ரதி,

10 வருடத்தின் பின்பும் மகிந்த இப்போ நடந்தது போல் ஒரு தேர்தலில் தோற்று வெளியேறி இருப்பார். 

எங்களுக்குத்தான் மகிந்தவின் வரையறை என்னெவென்று புரியவில்லை. அவருக்கு தன் பலம் பலவீனம் பற்றி தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, மின்சாரக் கதிரை போகுமளவுக்கு பெரும் தவறு தமிழருக்கு எதிராக நடந்து உள்ளது என்று சொல்கிறாரே.:oO:

மகிந்த மாமே இருந்தபோது எதையுமே புடுங்கேலாமல் அமெரிக்காவும் ஐ.நா வில் அறிக்கை மேல் அறிக்கைதான் விட்ட முடிந்தது. அதை மீறி எதுவும் நடந்திராது. அனால் மாமே இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் தமிழினம் இதைவிட இன்னும் சிதைந்திருக்கும்.

நடக்கக்கூடியதை பார்ப்பீர்களா? 

சிரிப்பு சிரிப்பாய் கிடக்கு .

அப்ப மகிந்தா தான் ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்று தேர்தலில் நின்றது வெல்ல ஆசைப்பட்டது எல்லாம் மின்சார நாற்காலிக்கு போகவா ?

மகிந்தா ஜனாதிபதியாக வந்திருந்தால் அந்த பதவியை வைத்து தன்னால் காய் நகர்த்த முடியும்  அவருக்கு தெரியும் .

எவர் எது சொன்னாலும் அதை நம்பி ஒரு கதை .

கொஞ்சம் உங்கள் மண்டைக்குள் இருப்பததையும் பாவியுங்கோ .

 

 

 

 

 

 

மகிந்த மீண்டும் வந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்காது. மகிந்தவின் பின்னால் பலமாக சீனாவும் ரஷ்ஷாவும் நின்று இருக்கும். சிரியாவின் பிரச்சனையிலேயே இவ் இரு நாடுகளையும் கடந்து மேற்கால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்குது. கூடவே இப்ப அகதிப் பிரச்சனை வேறு. வீற்றோ அதிகாரம் மிக்க இவ் இரு நாடுகளையும் எதிர்த்துக் கொண்டு பெரும் செலவில் இலங்கையில் தலையிட வேண்டிய தேவை மேற்கிற்கும் இல்லை.

மகிந்தவிற்கு இருக்கப் போகும் நெருக்கடி, உள் நாட்டில் அவர் செய்த ஊழலுக்கான விசாரணை தான். ஐயா அனேகமாக மாட்டுப்படுவார் என்று நினைக்கின்றேன். கோத்தாவுக்கு  எதிராக போர்க் குற்ற விசாரணை   எழலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மீண்டும் வந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்காது. மகிந்தவின் பின்னால் பலமாக சீனாவும் ரஷ்ஷாவும் நின்று இருக்கும். சிரியாவின் பிரச்சனையிலேயே இவ் இரு நாடுகளையும் கடந்து மேற்கால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்குது. கூடவே இப்ப அகதிப் பிரச்சனை வேறு. வீற்றோ அதிகாரம் மிக்க இவ் இரு நாடுகளையும் எதிர்த்துக் கொண்டு பெரும் செலவில் இலங்கையில் தலையிட வேண்டிய தேவை மேற்கிற்கும் இல்லை.

மகிந்தவிற்கு இருக்கப் போகும் நெருக்கடி, உள் நாட்டில் அவர் செய்த ஊழலுக்கான விசாரணை தான். ஐயா அனேகமாக மாட்டுப்படுவார் என்று நினைக்கின்றேன். கோத்தாவுக்கு  எதிராக போர்க் குற்ற விசாரணை   எழலாம்

நீங்கள் ஏற்றுகொள்ளபோவதில்லை ....
அதுகும் நான் எழுதி நீங்கள் ஏற்றால் அது அழுக்கு !

பிரச்சனை இப்போ நாடு ஆளுமை பற்றியது அல்ல.
ஒரு அரசு இயங்க அடித்தளமாக இருப்பதே பொருளுதாரம். இலங்கை ஏற்கனவே மேற்கு பொருளாதாரத்தில் தான் இயங்கி கொண்டு இருந்தது.
ஜப்பான் ஐரோப்பிய பிரித்தானிய நாடுகள்தான் கடனுதவி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
இந்த கடனுதவி எல்லாம் இந்தா வைச்சுக்கோ என்ற அடிப்படையில் வழங்கியதில்லை. இன்டர்நேஷனல் மொநேட்ரி பண்ட் இடம் பாரிய கடன் இலங்கைக்கு இருந்தது  இவையெல்லாம் பிரித்தானியா ஜப்பான் அமெரிக்க நாடுகளினால் விலக்க பட்டவை. சரி அவரிடம் இனி காசு கேட்காதீர்கள் என்று விலத்தியது இல்லை 
எல்லாம் ஒரு வழிக்கு நீ வந்தால் இதை விலத்துகிறோம் என்று விலத்தியதுதான்.

சீனாவின் உடையது வெறும் இராணுவ பார்வை 
சீன எவளவு தொகையையும் இலங்கைக்குக்கு கொடுக்கலாம் ஆனால் திரும்பி போகாது. அல்லது சர்வீஸ் ஒப்பந்த அடிப்படையில் எதையாவது பெற்றுகொல்லால்லாம். அதாவது நான் உனக்கு மின்சாரம் உற்பத்தி செய்து தருகிறேன் 20 வருட லாபம் எனக்கு உரியது போன்ற அடிப்படையில். 
இது சீனவிட்கும் நன்கு தெரியும் என்றாலும் ... இந்தியாவிற்கு அருகில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை எவளவு செலவிலும் பெற்றுகொள்ளலாம் எனும் ஒரு போக்கு இருந்தது. 

இந்தியாவே இப்போ அமெரிக்காவின் இன்னொரு மாநிலம் போலதான்  இயங்குகிறது இந்த நிலையில் கோசன் மேலே பூச்சாண்டி காட்டுவதுபோல் 
இந்தியா பாகிஸ்தான் இருக்கு மட்டும் அமெரிக்கா  எதுவும் செய்யமுடியாது என்று வேடிக்கை மட்டுமே காட்ட  முடியும்  பொருளாதார அடிப்படையில் இன்று 
ஒன்றை விட்டு ஒன்று இனி பிரிய முடியாது. 

இங்கு பலருக்கும் விளங்காத ஒன்று சீனாவின் பொருளாதாரமே அமெரிக்காவின் கையில் என்பது. 
இன்றைய நிலையில் எதோ ஒரு விடயத்தில் அமெரிக்காவும் சீனாவும் ஒன்றோடு ஒன்று ஒத்துபோய்தான் தீரவேண்டும். டிவியில் செய்தி பார்பவர்கள் 
இந்த சீனா அடிக்க போகுது அமெரிக்க அடிக்க போகும் நிலைமை உள்வீட்டில் இல்லை. 
இரண்டு கிழமைக்கு முன்பு சீனா மத்திய வங்கி வட்டி வீதத்தை கூட்ட வேண்டிய இக்கட்டான நிலைக்கு போனதும். ஸ்டாக் மார்க்கெட் திங்கள் கிழமை (2 கிழமை முந்தி) பாரிய வீழ்ச்சி கண்டது. புதன் அமெரிக்கா இறக்குமதியை 10வீதம் கூட்டி சீனாவை தக்க வைத்தும் நீங்கள் செய்தியில் படித்திருக்கலாம். 
என்ன ஆட்டமும் ஆடலாம் எதற்கும் பணம்தான் அடிப்படை 
இவை ரஷ்யாவிடம் இல்லவே இல்லை ரசியாவின் வீட்டோவை யாரும் சாப்பிட முடியாது.
ஆயுதம் இருக்கிறது இவை தற்காலிக நகர்கவுகளாக மட்டுமே இருக்கும். உத்தரனாம் தற்போதைய சிரியாவின் விடயம் இப்போ சிரியாவிற்கு ஒரே வழி இதுதான். மேற்கு உலகு இப்போ அமைதியாக நகர்வதின் ஒரே ஒரு காரணம் ரசியா ஒருவேளை சிரியாவிற்கு அணு ஏவுகணைகளை கொடுத்திருக்கலாம் 
அவை இஸ்ரேல் மீது வீச பட்டால் என்ன செய்வது ? இவைகள் பற்றிய நுண்ணிய தகவல்கள் கிடைத்தும் மேற்கின் நகர்வு தொடங்கும்.
சிரியா மீது எதை சொல்லி போரை திணிப்பது என்பது இரண்டாவது விடயம் .... அதில் நகர தொடங்கி விட்டார்கள்.
ஒபாமா ரசியாவை எச்சரித்து இருக்கிறார் ரசியாவின் ஆயுத உதவி ஆசாத் ஊடாக தீவிரவாதிகளிடம் போகிறதாம். (உண்மையில் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர்கள்  இவர்கள்தான்). ஆனால் இப்படி பேசுகிறார் என்றால் ....... இந்த பழியை  தூக்கி அங்கு போடுகிறார்கள் என்பதே அதன் உள் அர்த்தம். 

அடுத்து ஈரான்!
இப்போ அணுவும் வேண்டாம் மண்ணும் வேண்டாம் நீங்களே வந்து எல்லாத்தையும் பரிசோதியுங்கள் 190 ரியாக்டர் இருக்கிறது அதில் 180தை அழித்து கொள்கிறோம் பொருளாதார தடையை நீக்குங்கள் என்று ஒப்பந்தம் ஆகி இருக்கிறது. 
இப்போ கேள்வி முன்னேறுவதா ?
பின்ஏறுவதா? எனபதுதான் முன்னேறுவது என்று முடிவு செய்தால் மேற்கு உலகை பகைத்து எதுவும் செய்ய முடியாது.
இப்போ ஈரான் மீது பொருளாதார தடையை நீக்கும்போது ஈரான் 300 மில்லியன் பரல் எண்ணை உற்பத்தியை  உலக சந்தைக்கு கொண்டுவரபோகிறது. இப்போதே எண்ணைவிலை அடிபாதளத்தில் இருக்கிறது. எண்ணையை மட்டுமே வைத்து ஆடும் ரசியாவின் நிலைமயை யோசித்து பாருங்கள் ?
ஈரானை வைத்தே ரசியாவிற்கு ஆப்பு அடிக்க போகிறார்கள்.  
உலகமயமாதல் எனும் பூதமே இந்த நிலையை தோற்றுவித்து இருக்கிறது. இன்று கியூபாவின் நிலையும் அதுதான். 
1990 காலங்களில் இப்போ உலகு இல்லை. சாதாரண பொருளாதார நிலைமை நிலவ வேண்டும் என்றால். நாடும் சாதாரண நிலைமையில் இருக்க வேண்டும்.
அப்போதான் ஒருவன் முதலீடு செய்ய முன்வருவான்.

இவை எல்லாம் தாண்டி மகிந்த என்ற ஆட்சி ஆளர்கள் போர்குற்றம் புரிந்தவர்கள்.
போர்குற்ற வழக்கை சர்வதேச நீமன்றுக்கு கொண்டுபோனால் ....?
அடங்கித்தான் ஆகவேண்டும் இது மகிந்தவிற்கும் தெரியும் இருந்தாலும் தற்போதையா சிரியா மாதிரி ஒரு தற்காலிக ஆட்டமாக சீன புரளியை கிளப்பிக்கொண்டு இருந்திருக்க முடியும். அது தற்காலிகம் மட்டுமே. 
ஐ நாவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது. 

வடகொரியாவின் நிலைமையை தென்கொரியாவோடு ஒப்பிட்டாலே போதுமானது.
தென்கொரியா 15 வருடங்கள் முன்னோக்கி இருக்கிறது. வட கொரியாவில் மக்கள் சுவாசிக்கிறார்கள் அவளவுதான். 
இந்த நிலைமை இன்னும் சில காலங்களில் வட கொரிய இராணுவத்தாலேயே தகர்க்க படலாம். 

0013729e43191245ffe303.jpg

us-chinatradecomparison-2[1].jpg

இதில் நீங்கள் இன்னொரு விடயத்தை கவனிக்க வேண்டும் 
உதரணமாக ......
ஐபோன் சீனாவில் உற்பத்தி செய்யபட்டு அமெரிக்காவிற்கு அனுப்புகிறார்கள். அது சீனாவின் ஏற்றுமதி கணக்கில் வருகிறது. அமெரிக்க இறக்குமதி கணக்கில் வருகிறது. கொன்பணி அப்பிள்ளின் உடையது ஆப்பிள் அமெரிக்கா.
இது ஒரு சிறிய உதாரணம் 
கடைகளில் உள்ள எல்லா பொருட்களையும் ஒருமுறை என்னிபருங்கள். 
லக்ஸ்சரி எக்ஸ்போர்ட் 28 பில்லியன் .........
கோச் 
மைக்கேல் கோர்ஸ் 
போன்றவை அமெரிக்க கொம்பனிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-of-the-Day-18_09_2015(1).jpg

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே குற்றம் கண்டீர் ஐயா

 

பொருள் விளக்கம் சற்று மாறி விளங்கியதால் தவறு ஏற்பட்டது மன்னிக்கவும்.Terribly Sorry animated emoticon

 

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

பொருளாதாரத்தில் இலங்கை ஒரு சுண்டங்காய் இதுக்குப் போய் நீங்கள் ஹவார்ட் எக்கனோமிஸ்ட் ரேஞ்சில் விளக்கம் கொடுப்பதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருது.

உலகப் பொருளாதாரத்தை ஏதோ வீட்டுக்கடன் போல ஒப்பிட்டுப் பேசுகிறீர்கள். இலங்கை ஐ எம் எப் பிடம் வேண்டிய கடனை தரமால் விட்டால், வந்து என்ன தாலியையா புடுங்கப் போகிறார்கள்?

கிரேக்கம் வாங்கிய கடனை பார்த்தீர்களா?

உங்களுக்கு ஒரு சின்ன உதாரணம் தருகிறேன் சிம்பாப்வேயின் முகாபே.

மேற்கு வெறுக்கும் ஒருவர், தென் ஆபிரிக்கா ஆதரிப்பதால் அவரைத் தொட முடியவில்லை.

இது போலத்தான் இந்தியா இலங்கையின் நட்புநாடாக இருக்கும் வரை இலங்கையில் பதவியில் உள்ள எந்த ஜனாதிபதியையும் தொடவிடார்கள்.

மகிந்த இன்னும் ஒரு பத்து வருசம் இருந்திருந்தால் .... இலங்கையில் தமிழரை அருங்காட்சியகத்தில் கூட பாத்திருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவேயில் அவரை வழிக்கு கொண்டுவந்துதான் எதிர்கட்சியை உருவாக்கி உள்ளார்கள்.
நாட்டில் பொருளாதாரம் முடங்கு நிலையில் போகிறது (போகவைக்க படுகிறது) 
வெள்ளையரிடம் இருந்து பறித்த தோட்ட நிலங்களை 
மீண்டும் வெள்ளையரிடம் மக்கள் விற்க தொடங்கி விட்டார்கள்.
அடுத்த தேர்தலோடு அன்னார் வீடு போவார் என்பதால் மேற்படி நடவடிக்கைகள் தேவை இல்லாதது. 

 

இந்தியாவே அமெரிக்காவின் பிடிக்குள் என்கிறேன் ... நீங்கள் இந்தியா இலங்கைக்கு பாதுகாப்பு என்கிறீர்கள். 
அதுதான் மகிந்தவிற்கு போயிருக்க கூடிய மிக பெரிய ஆப்பு!


என்னுடைய விளக்கம் பொருளாதாரம்தான் இன்றைய அத்திய அவசியமான விடயம்.
தமிழ் கட்டுரையாளர்கள் யாருக்கும் இந்த சூட்சமம் புரிவதில்லை.
அதனால்தான் மோதகம் கூடாது குளுக்கட்டை நல்லது என்று வாந்தி கட்டுரைகள் வடிக்கிறார்கள். 

நீங்கள் கூட லாபகமாக அதை மறைத்துதான் எழுத பார்கிறீர்கள் 
உங்கள் மூல கருத்துக்கு களங்கம் வரமால் பார்த்து கொள்கிறீர்கள்.

என்னுடையது எனது தனிபட்ட கணிப்பு மட்டுமே. 
நான் இதுதான் 100 வீதம் நடந்திருக்கும் என்று அடம்பிடிக்க முடியாது .... எது சாத்தியம் என்பதை எழுதுகிறேன்.
காரணம் நாட்டு பொருளாதாரங்கள் கூட இன்று தனியாரின் உடையது தனியார்தான் நாட்டு பொருளாதாரங்களை நிர்ணயிக்கிறார்கள் முதலீடு செய்கிறார்கள்.
சீனா வட்டிவீதம் கூடியதால் 2 கிழமை முன்பு நான் 15 ஆயிரம் வரையில் இழந்தேன். முதலீட்டாளர்களின் நிலைமைகளை சிந்தித்து பாருங்கள்.
நாட்டில் சாதாரண நிலைமை என்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்று ..... சிம்பாவேயில் நீங்கள் சென்று முதலீடு செய்வீர்களா ? 

இப்போ நான் எதை கூறினேனோ அதை இலங்கை வெளி அமைச்சர் அப்படியே பிரதி செய்கிறார் எனபதே எனது சுட்டி காட்டல். 

அது நடக்கவில்லை 
இப்போ நடப்பதில் பிடுங்க கூடியதை பிடுங்க வேண்டும் என்பதில் யாருக்குதான் எதிர் கருத்து இருக்க முடியும் ?
ஆனால் எமது அரசியல் தலைமைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
நீங்கள் நம்புகிறீர்கள் ....
பொறுத்துதான் முடிவை பார்க்க முடியும். 

மகிந்த இன்னும் ஒரு பத்து வருசம் இருந்திருந்தால் .... இலங்கையில் தமிழரை அருங்காட்சியகத்தில் கூட பாத்திருக்க முடியாது..

மிச்சத்தையும் ஏன் விட்டு வைப்பான் என்ற நல்லெண்ணமாக இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா போன்ற இனவாதிகளிடம் நாம் அடிபட்டு போயிருப்போம் என்பதை யார் மறுக்கிறார் ?

அதே வேகத்தில் கோத்தாவை தூக்கவேண்டிய தேவை 
மேற்கு நாட்டு முதலீடாளர்களுக்கு இருந்தது என்பது மட்டுமே எனது வாதம். 
நாட்டின் இஸ்திரதன்மை என்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. 
அதை எவ்வாறு உருவாக்கி இருக்க முடியும் ? இதற்கான தேடலும் பதிலும்தான் எனது பக்க வாதம் 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இன்னும் ஒரு பத்து வருசம் இருந்திருந்தால் .... இலங்கையில் தமிழரை அருங்காட்சியகத்தில் கூட பாத்திருக்க முடியாது.

பத்து வருடங்கள் என்பது சரியல்ல.. பன்னிரண்டு என்பதுதான் சரி. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.