Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பேரணியில் பொலிசாருடன் முரண்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவாவில் ஐ.நா நோக்கி நடத்தப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ் விசேட காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்கு தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டனர்.

பேரணி ஐ.நா பிரதான வாயிலை அண்மிக்க முற்பட்ட வேளை வழமைக்கு மாறாக முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொலிசாரின் பாதுகாப்பு ஐ.நாவின் முன்பகுதியில் அதிகரிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

geneva-demo-220915-seithy%20(1).jpg

geneva-demo-220915-seithy%20(2).jpg

geneva-demo-220915-seithy%20(3).jpg

geneva-demo-220915-seithy%20(4).jpg

geneva-demo-220915-seithy%20(5).jpg

geneva-demo-220915-seithy%20(6).jpg

geneva-demo-220915-seithy%20(7).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=140961&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டனர்.

இந்த லொல்லுதானே வேணாம் எங்கிறோம்....தமிழீழ காவல்துறையினரின் பொலிஸ்மாதிபர் சுப்பரமணியின் தலைமையில் கண்ணீர் புகை அடித்து ஆர்ப்பாட்டக்காரரை தடுத்தனர்:cool:

  • கருத்துக்கள உறவுகள்

வர வர இவங்களின்ட லொல்லு தாங்க முடியல்ல. "Police" என்ற சொல்லை உபயோகப்படுத்துவது எவ்வளவு பாரதூரமான விடயம் என்று இந்த லூசுகளுக்கு தெரியாதா? 

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாஸ் திடல், தமிழீழ காவல்துறை....

அட விடுங்கப்பா... ஒரு சிறிய சந்தோசம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகளா இன்னுமா இவிங்க திருந்தள்ள !!!
இப்பிடி நெறைய லூஸு கூட்டங்கள் திரியுதே என்ன செய்யலாம்? :unsure:

இப்படியான அத்துமீறல்கள் போராட்டத்தில் இருக்க கூடிய நியயத்தன்மையே கேலிக்குரியதாக மாற்றிவிடும்.

இவர்களின் புண்ணியத்தினால் புலிகளின் மீதான தடை இன்னும் ஒரு நூற்றாண்டுக்காவது தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீல யூனிபோர்மில தமிழீழக் காவல் நண்றாக இருக்கு. நல்லா செலவளிச்சு இருக்கினம் போலை!:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யூனிபோர்முக்கு செல்வழிக்க எங்க இருந்து காசு? த.கா.துவுக்கு என்ன வருமானம், எவ்வளவு செலவு? ஊரில இருக்கிர முன்னாள் போராளிகளுக்கு இந்தக் காசை அனுப்ப இயலாதா?

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசாங்கம் இருக்கும்போது  நாடு கடந்த காவற்துறை   இருக்க முடியாதா?:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யூனிபோர்முக்கு செல்வழிக்க எங்க இருந்து காசு? த.கா.துவுக்கு என்ன வருமானம், எவ்வளவு செலவு? ஊரில இருக்கிர முன்னாள் போராளிகளுக்கு இந்தக் காசை அனுப்ப இயலாதா?

ஏன் அனுப்ப முடியாது ?  அனுப்பலாமே ......
ஊர்வலத்தை ஒழுங்கு முறையாக வீதி போக்குவரத்து சட்டவிதிகளுக்கு ஊடக 
ரயில்வேயில் இருந்து  ஐ நா வரை நகர்த்தும் பொறுப்பை நீங்கள் சென்று ஏற்றால் 
அவர்கள் செலவிடும் இந்த தொகையை 
அங்கு அனுப்பிவிடலாம். 

(இவர்கள் ஜட்டிபோடாமல் வாழ முடியாதா என்று ஒரு ஆராய்ச்சிக்காக என்றாலும் அவர்கள் ஜட்டி வாங்கும் பணத்தை பிடுங்கி அங்கு அனுப்பும் அடுத்த கட்ட நிலைக்கு எமது பரப்புரையை தொடங்க வேண்டும்) 

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் சுவிஸ் இலை இருக்கும் நாடுகடந்த தமிழீழ காவல்துறை!  வாழ்த்துக்கள். இந்த முன்மாதிரியைப் பின்பற்றி கனடாவிலும் ஒரு பிரதிக் காவல்துறை மாஅதிபர் ஒருவரை நியமித்து  காவல்துறை அலுவலகம் ஒன்றைத் திறக்கவேண்டும்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வேலை வெட்டி ... மனைவி பிள்ளை .....விடுப்பு பார்த்தல் 
என்பதை விட்டுத்து பகுதி நேரம் என்றாலும் ....
மக்களுக்கு ஏதும் செய்ய என்று ஒருவன் வீதிக்கு வந்துவிட்டான் 

அவனை பிடித்து அடித்து கொடுமை படுத்தி 
சிலுவையில் அறையாது போனால் ..................?

எமது பிறவி பலன் எப்படி ஈடேறும் ?

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் காவல்துறையே இந்தச் செயற்பாட்டை  அனுமதித்து  பேரணியை எந்தவித குழப்பமும் இல்லாமல் நடத்தி முடிக்க உதவி செய்த இளைஞர்களுக்கு  நன்றியும் கூறியிருக்கின்றனர்.

ஆனால் இங்கு சிலபேருக்கு நல்ல விடையங்களும் கண்ணுக்குள் குத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சுவிஸ் கெதியில காவல்துறையில் ஒரு பிரிவாக அங்கீகாரம் கிடைச்சிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ காவல் துறைக்கு மணிமகுடம் கட்டுகிறோம் என்று பேரணியில் பங்குபற்றிய மக்களுக்கு "ஆர்ப்பாட்டக்கார்ர்கள்" என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு ஊர்வலத்தை / பேரணியை ஒழுங்குபடுத்தி அனுமதி பெறும் போது எத்தனை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உதவியாளர்கள், தொண்டர்கள் தேவை என அறிவிப்பார்கள். காவல்துறை உறுப்பினர்கள் அல்ல.

இங்கு தமிழீழ காவல்துறை உத்தியோகத்தர்களாக பணியாற்றியவர்களின் குற்றப்பின்னணி பற்றி விசாரிக்கப்பட்டதா?

சுவிஸ் காவல்துறையே இந்தச் செயற்பாட்டை  அனுமதித்து  பேரணியை எந்தவித குழப்பமும் இல்லாமல் நடத்தி முடிக்க உதவி செய்த இளைஞர்களுக்கு  நன்றியும் கூறியிருக்கின்றனர்.

ஆனால் இங்கு சிலபேருக்கு நல்ல விடையங்களும் கண்ணுக்குள் குத்துகின்றது.

சுவிஸ் காவல்துறை தமிழீழ காவல்துறையின் சுவிஸ் செயற்பாட்டை அனுமதித்ததா? இப்போ இனி சுவிசில் தமிழீழ காவல்துறையே பொறுப்பேற்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அனுப்ப முடியாது ?  அனுப்பலாமே ......
ஊர்வலத்தை ஒழுங்கு முறையாக வீதி போக்குவரத்து சட்டவிதிகளுக்கு ஊடக 
ரயில்வேயில் இருந்து  ஐ நா வரை நகர்த்தும் பொறுப்பை நீங்கள் சென்று ஏற்றால் 
அவர்கள் செலவிடும் இந்த தொகையை 
அங்கு அனுப்பிவிடலாம். 

(இவர்கள் ஜட்டிபோடாமல் வாழ முடியாதா என்று ஒரு ஆராய்ச்சிக்காக என்றாலும் அவர்கள் ஜட்டி வாங்கும் பணத்தை பிடுங்கி அங்கு அனுப்பும் அடுத்த கட்ட நிலைக்கு எமது பரப்புரையை தொடங்க வேண்டும்) 

ஜட்டி சீருடையின் ஒரு அங்கமாக இருந்தால், அந்த சீருடை புலம்பெயர் தமிழர்களின் பொதுப் பணத்தில் வாங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஜட்டியையும் துறந்து ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்பதே எட்டுப் பட்டிக் கிராமத்துக்கும் நாட்டாமையின் தீர்ப்பு! :cool:

(சீரியசாக: "தொண்டர்" அல்லது "அலுவலர்" என்று போட்ட ஒளிரும் மேலங்கிகள் அணிந்தும் இந்த ஒழுங்கு படுத்தல் வேலைகள் செய்ய முடியும்! இதை விடப் பாரிய நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்த வேளைகளில் அப்படி தான் தொண்டர்கள் வேலை செய்தார்கள்! இப்பிடி த.கா.து சீருடை போட்டுக் கொண்டு கோமாளிக் கூத்துக்கள் செய்ய ஏன் வீணாகப் பணம் செலவழிப்பான் எண்டு தான் கேட்டேன்! மற்ற படி அவர்கள் ஜட்டியை வைத்திருக்கட்டும்!)

  • கருத்துக்கள உறவுகள்

சமூக சேவை என்பதன் பொருள் விளங்காத ஒரு கூட்டம் எப்போதுமே எம்மினத்தில் உண்டு.
தமிழனின் கேடு கெட்ட நிலைகளுக்கு தமிழனே காரணம். 
ஒரு மனித கூட்டம் அல்லது விலங்கு கூட்டம் தனது  குழுமத்தை தக்க வைப்பதில்தான் 
மிகுந்த அக்கறை உடையதாக இருக்கும். காரணம் "தனது" என்ற சுயநல வாழ்விற்கும் அதுவே 
அத்திவாரமாகும் இன்னொன்றில் இருந்துதான் ஒன்றை பெற முடியும் அதுதான் உலக நியதி.
தமிழன் மட்டும் இதற்கு விதிவிலக்கு தமிழன் குழுமத்தை சிதறடித்து தன்னை நிலை நிறுத்தலாம் என்று கற்பனையில் 
வாழ்பவன். குழுமம் எப்போது இல்லையோ அப்போது தன்னிலையும் தகர்ந்துபோகும். 
இது ஐந்தறிவு விலங்கினத்திட்கு கூட விரிவாக விளங்கிய ஒன்று. 
தமிழனுக்கு இன்னமும் விளங்கவில்லை.

மேற்படி ஊர்வலம் ஜெனிவாவில் நடந்ததால்... ஜெனிவாவில் நடந்த ஊர்வலங்கள் பலதில் நான் பங்கு கொண்டேன் 
என்பதாலும். ஜெனிவாவில் வாழும் பலர் என்னுடைய நண்பர்கள் என்பதாலும் 
சிலதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஜெனிவாவில் 1992இல் இருந்து ஊர்வலங்கள் நடக்கின்றன. அதற்கு முன்பும் சிறு குழுக்களாக ஏதும் நடந்திருக்கலாம் 
எனக்கு தெரிய 1992 இல் தொடங்கிய பேரணியாக நடக்கிறது. 2000ஆம் ஆண்டு வரை இங்கே சுவிசில் இருந்தவர்கள்தான் 
பங்கேற்று பேரணிகள் நடந்தது அதன் பின்பு அதை சுற்றி உள்ள நாடுகளில் இருந்தும் பஸ் ரயில் மூலம் மக்கள் வர தொடங்கி 
இப்போ மாபெரும் பேரணியாக நடக்கிறது.
ஜெனிவா என்பது ஒரு சிறிய நகரம் இங்கே தமிழர்கள் மிக குறைவு பெரும்தேவையான சரீர உதவிகள் என்பது 
இந்த ஜெனிவாவில் வாழும் சிறிய தொகை மக்கள் மீதே சுமத்தப்படும். ஆரம்ப நாட்களில் அவர்கள் இளைஞர்களாக இருந்தார்கள் 
அவர்களுக்கும் அது பெரும் சுமையாக இருக்கவில்லை இரண்டு இரவு நித்திரைகள் முழித்து அதை செய்வார்கள்.
சுவிசின் மற்றைய பகுதிகளில் இருந்து வருபவர்கள் 5 6 மணித்தியாலம் கூட பயணம் செய்து வருவார்கள். பின்பு ஊர்வலம் முடிந்து 
அதே அளவு பயணம் செய்து திரும்ப வேண்டும் அதலால். ஊர்வலம் முடிந்த பின்பு எல்லோருக்கும் சோடா கான்கள் சான்ட்விச் எல்லாம் கொடுப்பார்கள் 
இதெல்லாம் ஜெனிவாவில் வசித்தவர்கள் தமது சொந்த பணத்தில்தான் செய்து வந்தார்கள்.
அதுவே சூரிச்சை தளமாக கொண்ட தலைமை புலிகளுக்கு வாய்ப்பாகி விட்டது. பின் நாட்களில் கிட்டதட்ட இவளவு சனம் வரும் 
இவளவு சான்ட்விச் தேவைபடும் என்ற ஒடர்தான் இங்கிருந்து போகும். அவர்கள் மேல் மேலும் மேலும் சுமைகள் சுமத்த தொடங்கினார்கள்.
இது இப்படியே வளர்ந்து அவர்களும் பலர் மனைவி பிள்ளை என்று வந்துவிட்ட போதும் இந்த ஊர்வல கால சுமை என்பது 
எழுத படாத ஒரு சுமையாக லாபகமாக சுமத்தி விட்டார்கள். 
அவர்களுடைய இப்போதைய நிலை யுத்தம் நடந்த உச்ச காலத்தில், வேலை இல்லாத அவர்களுடைய மனைவி மாருக்கும் 
களவாக பேசீட் தயாரித்து 35-45 ஆயிரம் வரை லோன் எடுத்து விட்டு அவர்களை கடன்காரர் ஆக்கி ரோட்டில் விட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் அவர்கள் தொடர்ந்தும் ஊர்வல சுமைகளை சும்மக்கிரார்கள். 
தமிழ் இணையங்களில் பிரகாசிக்கும்.... பலருக்கு கண்ணுக்குள் சுடு எண்ணை 
ஊற்றும் புலிக்கொடி ... தலைவர் பதாதைகள் ... போலிசு சீருடை போன்ற பட்டொளி வீசும் படங்களுக்கு பின்னால்.
ஒரு சிறிய கூட்டம் நசி பட்டுக்கொண்டு இருக்கிறது.
தமிழனுடைய அற்ப புத்தி இன்னமும் வேண்டுமென்றால் அவர்களை மித்தித்து செல்லுமே தவிர ...
இலவசமாக ஒரு பாணை சாப்பிடுகிறேன் யார் காசு கொடுத்திருப்பான் ? என்று ஒருபோதும் சிந்திக்காது.

இன்று இந்த சீருடை கூட போட்டிருப்பவர்கள் பணத்தில்தான் வந்திருக்கிறது. ஊர்வலங்கள் நடக்கும்போது முன்வந்து 
மக்களை வரிசை படுத்த ஒழுங்கு முறையாக கூட்டி செல்ல முன்வந்தவர்கள் மேல் சுமத்த பட்டிருக்கும் இன்னொரு சுமை.
இதை போட்டதால் நாளை சுவிஸ் போலிஸ் வழக்கு போட்டு இவர்களை உள்ளுக்கு போடலாம்.
ஆனாலும் அவர்கள் கோமணத்தை உருவ முடியாதா ? என்று ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு ...
எப்படி என்றால் ... அங்கு மக்கள் கஸ்ட்ர படுகிறார்களாம். அவர்களுடைய நல்ல மனதுக்கு பொறுக்கவில்லை 
இங்கு கண்முன்னே இவனே சுமையோடுதான் நிற்கிறான். அது மட்டும் தெரிய போவது இல்லை. 

எல்லா நாட்டு மக்களும் தனது இனம் நிமிர்ந்து நின்றால் பெருமை கொள்ளும் 
தமிழன் மட்டுமே இதற்கு உலகில் விதி விலக்கு. எழுந்து ஒருவன் நின்றால் அவனிடம் எதை பிடுங்கலாம் என்றுதான் யோசிக்கும்.
எத்தனையோ அறிவியல் மெய்ஞ்ஞான சுவாமிகள் தோன்றிய இனத்தில் இருந்து..... மற்ற நாட்டு காரன் எல்லாம் எதை எதையோ கற்று கொள்கிறான் 
சுவாமியிடம் இருந்து எதையாவது பிடுங்கலாமா ? என்று யோசித்த ஒரு இனம் என்றால் தமிழன்தான். 
ஒரு ஞானியிடம் சென்று ஞானத்தை பெறுவதை விட்டு விட்டு .... இறந்துபோன எனது மகனை எழுப்பு 
சூரியனை நிறம் மாற்று .... நீயெல்லாம் என்ன அறிவாளி ? என்று கேட்ட ஒரு மடையன் என்றால் அது தமிழன் மட்டுமே. 
இன்று எத்தனையோ பொய் சாமிகள், இவர்களை எல்லாம் தமிழன்தான் உருவாக்குகிறான்.
உண்மையான சாமி தமிழனுக்கு விரோதியாக மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் அவர்கள் நல்லதை மட்டுமே போதிப்பார்கள்.
தமிழனுக்கு தனக்கு பிடித்ததை போதிக்கும் சாமி மட்டுமே வேண்டும். அதனால் எதை தேடுகிறானோ தமிழன் அதை பெற்று கொள்கிறான்.

முள்ளிவாய்க்கால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று இங்கு நான் பலமுறை எழுதியதன் காரணம்.
புலிகள் இருந்தால் நல்லவர்கள் இறந்து கொண்டே போவார்கள்.
இனம் கேடு கெட்டவர்கள் மட்டுமே எஞ்சிய ஒரு அநாகரீக கூட்டமாக போயிருக்கும்.
இப்போதும் அப்படிதான் ஆனால் அங்கொன்று இங்கொன்று என்றாவது சில நல்லவர்கள் இருக்கிறார்கள்.
இல்லாவிட்டால் அதுகும் அழிந்திருக்கும். 

மருது அவர்களின் செயலுக்கு தலை வணக்கிறேன்.ஆனால் த.கா.து.....கேணல்,பிரிகேடியர் ....போன்றவை  தேவையற்றவை என்பது என் கருத்து........இதனால் எந்தவித நன்மையும் எமக்கு கிடைக்கபோவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண High Vissible Jacket உடன் Security, Steward, Vaulnteer என முடிக்க வேண்டிய விடயத்திற்கு "தமிழீழ காவல்துறை" உருவாக்கம் தேவையா? 

இந்த சுவிஸ் இல் உருவான "தமிழீழ காவல்துறை" பேரணிகளிலும் மற்றய நிகழ்வுகளிலும்  "ஆர்ப்பாட்டக்கார்ர்களை" அடக்க மட்டும் போகிறதா அல்லது சுவிசில் சிவில் நடவடிக்கைகளிலும் ஈடுபடப்போகிறதா? 

மருது,

"இதைப் போட்டதால் நாளை சுவிஸ் போலிஸ் வழக்குப் போட்டு உள்ளுக்குள் போடலாம்" என்றால் ஏன் இந்த தேவையில்லாத வேலை?

ஊர்வலங்கள் நடக்கும் போது மக்களை வரிசைப்படுத்த ஒழுங்கு முறையாக கூட்டிச் செல்ல முன்வந்தவர்களுக்கு  "தமிழீழ காவல்துறை" சீருடை தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் யாருக்குதான் சீருடை தேவை ?
ஏன் தேவை ?

யாருக்குமே தேவை இல்லையே ...?
காட்டுக்குள் போகும் இராணுவத்திற்கு உருமறைக்க வேண்டும் என்று சொல்லலாம் 
ஊரில் திரியும் இராணுவத்திற்கு எதற்கு சீருடை ?

அது மக்கள் பணம் இல்லையா ?

நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் யாரவது எழுந்து நின்றால் ....
குமுறிகொள்ளும் ஒரு கேடு கெட்ட இனம் உலகில் தமிழன்தான்.

நாம் தான் அறிவாளி என்ற நிலையை 
அறிவில்லாத எவனும் உலகில் கொள்வதில்லை 
தமிழன் மட்டும் விதி விலக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

சார் நீங்க நிஜப் பொலிசா? இல்லை சிரிப்புப் பொலிசா?

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் காவல்துறையே இந்தச் செயற்பாட்டை  அனுமதித்து  பேரணியை எந்தவித குழப்பமும் இல்லாமல் நடத்தி முடிக்க உதவி செய்த இளைஞர்களுக்கு  நன்றியும் கூறியிருக்கின்றனர்.

ஆனால் இங்கு சிலபேருக்கு நல்ல விடையங்களும் கண்ணுக்குள் குத்துகின்றது.

சுவிற்சர்லாந்து ஆட்சிமுறை மற்றும் நாடுகளைவிட சற்று வித்தியாசமானது. மக்கள் வாழ்வை ஒழுங்குபடுத்துவதற்கு அதற்கான அமைச்சையும், இலாகாக்களையும் உருவாக்கிக் கொண்டாலும், ஒழுங்குபடுத்துவதை அதற்குரிய அதிகாரிகள்தான் செய்யவேண்டும் என அவர்கள் அரசாங்கம் எதிர்பார்ப்பதில்லை. பொதுமக்கள் உதவ முன்வந்தால் அதனை அவர்கள் ஊக்கப்படுத்துவார்கள். ஆட்சி ஒழுங்கில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினாலும், அதனை மக்களிடம் விட்டு, அவர்கள் ஆணையைப்பெற்றே செய்கின்றனர். நாங்கள் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என்று, தாங்களுக்குள்ள அதிகாரத்தை வைத்து தாங்கள் நினைத்தபடி எதனையும் நடைமுறைப்படுத்த முற்படுவதில்லை.

சுவிற்சர்லாந்து நாட்டில் வசிக்கும் தமிழர்களிடம் பிணக்குகள் ஏற்பட்டால் அந்தப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும்படி, அந்த நாட்டுக் காவல்துறையானது, தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட சுவிற்சர்லாந்து நாட்டுப் பொறுப்பாளரிடம் அனுப்பிவைத்த செயற்பாடுகளும் சுவிற்சர்லாந்து நாட்டில்தான் நடைபெற்றது. இதனை அனுபவமூலமாகக் கண்டுகொண்ட தமிழர்கள் இன்றும் அங்கு உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்ச் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் ......
இனி சுவிசுக்கு எதிரா வழக்கு தொடர வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பும்.

தமிழனை அவர்கள் மக்கள் கூட்டம் என்று நினைத்திருக்கலாம் ........

முப்பது வருடங்களாக இப்படி எத்தனை கூத்துக்கள் பார்த்துவிட்டம் .

சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் .

புலம் பெயர் தேசத்தில் இடைக்கிடை தானே இப்படி நிகழ்வுகள் நல்லவேளை நாட்டில் இப்ப இல்லை அதுவரை புண்ணியம் .

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி, புலிகள் ஒப்பற்ற தியாகங்கள் பல செய்திருக்கின்றார்கள்...அவர்கள் என்ன தான் நல்லது செய்து இருந்தாலும்,அவர்கள் செய்த சில பிழைகள் செய்த நல்லவற்றை தூக்கி சாப்பிட்டு விட்டு விடும்.

அதையே தான் புலம் பெயர் தேசியவாதிகளும் செய்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.