Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

ipkfஅவனுக்கு மீசை அரும்பய்த்தொடங்கிய நாளிலிருந்தே போராட்டமும் ஆயுதங்களோடு முளைவிட ஆரம்பித்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே அவனது போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. கல்வியன்காட்டிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் தனது சைக்கிளில் இயக்கக் கூட்டத்திற்குச் சென்று வந்திருக்கிறான். நெல்லியடியில் நான்கைந்து இளைஞர்களோடு ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள மற்றொரு வழியும் இருப்பதாக பலிபீடம் என்ற குழு பிரச்சாரம் செய்துவந்த போது அதனோடு இணைந்துகொண்டான்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்க வேறுபாடுகளின்றி, சோசலிசம், வர்க்கம், புரட்சி என்று அனைத்துப் போராளிகளும் உச்சரித்தனர். தீவிர வலதுசாரி இயக்கமாகக் கருதப்பட்ட விடுதலைப் புலிகள் கூட சோசலிசத் தமிழீழம் என்ற கருத்தை முன்வைத்தது.

வெளி நாட்டுக்குப் போவதைப் பற்றி யாரும் பேசிக்கொள்வதில்லை. வெறுப்பின் மொழி அன்னிய தேசத்தின் செல்வச் செழிப்ப்பைப் பற்றி வியந்துகொண்ட காலம் இன்னும் தோன்றியிருக்கவில்லை. அப்போதெல்லாம், வெற்றியின் மொழியே இளைஞர்களுக்குத் தெரிந்திருந்தது. மனிதாபிமானமும் மற்றவர்களை மதிக்கின்ற பண்பும் ஒரு புறத்தில் சமூகத்தில் துளிர்விட ஆரம்பித்திருந்த அதே வேளை வெறித்தனமும் வன்மமும் கூட மறுபுறத்தில் வேர்விட ஆரம்பித்தது.

அவ்வாறான ஒரு சூழலில் தான் ஜே.ஆர் ஐச் சந்திக்கிறேன். 1983 ஆம் ஆண்டின் மத்திய பகுதியாக இருக்கலாம். அது யாழ்ப்பாணத்தின் ஒரு மாலைப்பொழுது. சிறிய ஜீப் களில் அரச புலனாய்வுத் துறை சுற்றித்திரிகின்ற காலம். ஜே,ஆர் ஈழப் போராட்டத்திற்கு தமது குழுவே அரசியல் தலைமை வழங்கும் என்கிறான். ஆயுத மோகமும் இந்தியத் தலையீடும் மக்கள் போராட்டங்களால் அழிக்கப்பட்டுவிடும் எனக் கூறிய ஜே.ஆர், அவற்றிலெல்லாம் தான் சார்ந்த குழுவின் பதிவுகள் நிச்சயமாக இருக்கும் என்றான்.

கல்வியன்காட்டில் இயக்கங்கள் ஒன்றுகூடும் தேனீர் சாலை தான் அக்கா கடை. அங்கு கடை மூடும் வரையும் நாங்கள் பேசிக் கொள்கிறோம்.

அங்கிருந்து ஜே.ஆர் இன் வீடு நீண்ட தூரமில்லை. சைக்கிளில் கதைத்தபடியே சென்று ஜே.ஆர் இன் வீட்டை அடைகிறோம். அங்கு குடும்பத்தில் அத்தனை பேரும் அரசியல் உரையாடலில் பங்கு கொள்கின்றனர்.

நான் சார்ந்த டெலோ இயக்கத்தைப் பலப்படுத்துவதே எனது நோக்கம். இந்திய இராணுவப் பயிற்சியை நானும் எதிர்க்கிறேன் ஆனால் இன்று சமூகம் முழுவதும் அதன் பின்னால் அணிதிரண்டு நிற்பதால் அதானால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க போராளிகளை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்கிறேன். ஜே.ஆர் ஒத்துக்கொள்ளவில்லை. அவரின் அண்ணன் அது சரி என்கிறார்.

ஜே.ஆர். இன் அண்ணன் ராசபாதையில் அமைந்துள்ள நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிந்தார். கராட்டியில் கறுப்புப் பட்டி வரை பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறுகிறர்.

எனக்கு இன்னும் பத்தொன்பது வயதுதான். ஜே.ஆர் இற்கு பதினேழு வயது முடிந்திருக்கவில்லை.

டெலோ இயக்கத்தில் ஜே.ஆர் இன் அண்ணைப் போன்று ஒருவர் இணைந்துகொண்டால் எமது இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராகிவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

இரண்டு நாட்களின் பின்னர் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முன்பாகப் பல மணி நேரம் காத்து நின்று அவரைச் சந்தித்தேன்.

அச்சந்திப்புக்கள் சில நாட்கள் மட்டுமே நீடிக்கின்றன. அவருடன் அரசியல் பேசுவதற்குக் என்னுடன் வந்த மிசோ ராம் என்ற ரெலோ உறுப்பினர் அவரைப் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பிவைத்ததைப் பின்னதாக அறிந்துகொள்கிறேன்.

ஜே.ஆர் இன் குடும்பம் வறுமையின் விழிம்பிலேயே வாழ்ந்துவந்தது. அண்ணைன் உழைப்பு வயதான தாய் தந்தையர், சகோதரிகள் என அனைவரதும் நாளாந்த வாழ்வாதாரமாக அமைந்திருந்தது. வறுமையின் அமைதிக்குள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவித்திருந்த அந்தக் குடும்பத்தின் வேர் அறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

அப்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த அமெரிக்க அடியாள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சுருக்கமாக ஜே.ஆர் என்றே அழைக்கப்பட்டார். பார்த்தீபனின் மூக்கு ஜே.ஆர் ஐப் போன்று நீளமானது என்பதால் அவர் ஜே.ஆர் என நண்பர்களால் அழைக்கப்பட்டதால் பின்னாளில் பார்த்தீபன் மறைந்து போய் ஜே.ஆர் மட்டுமே நிரந்தரமானார்.

ஜே.ஆர் ஐச் சந்தித்து நடந்தவற்றை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சில நாட்களின் பின்னர் மங்கிய மாலைப் பொழுது ஒன்றில் அவனது வீட்டிற்குச் செல்கிறேன்.

எனது குரல் கேட்டதும் தனது வாடகை வீட்டின் சுருங்கிய படலை வரைக்கும் அமைதியாக நடந்துவந்த ஜே.ஆர் என்னை வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்று தூரே அழைத்துச் சென்றார். அண்ணன் இயக்கப்பயிற்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும் அனைவரும் என் மீது கோபமாக இருப்பதாகக் கூறினார்.

நிலைமைகளைத் தான் விளங்கிக் கொண்டுள்ளதாகவும், உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்கு இந்தியாவிற்குச் செல்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் என்னுடன் ஒத்துழைப்பதாகக் கூறினார். இதனால் நாட்டிலிருந்து அரசியல் வேலை செய்பவர்களோடு தான் இணைந்துகொள்வதாகக் கூறினார்.

அதேவேளை ஜே.ஆர் இன் இயக்கத்தை ஆரம்பித்த தேவதாஸ் தென்னிந்தியா சென்ற பின் அவரது தொடர்பும் அறுந்துபோனதாகக் கூறுகிறார்.

சில நாட்களின் பின்னர் நாங்கள் மீண்டும் சந்தித்து டெலோ இயக்கத்தின் அரசியல் பிரிவில் வேலை செய்வதற்காக மனோ மாஸ்ரிடம் ஜே.ஆர் ஐக் கூட்டிச் செல்வதாக உறுதி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்.

அப்போது டெலோ இயக்கத்தில் மத்திய குழு ஒன்றை உருவாக்கி அதனை ஜனநாயக மயப்படுத்த வேண்டும் என்ற மனோ மாஸ்டரின் முயற்சியோடு இணைந்திருந்தவர்களின் நானும் ஒருவன்.

அந்த முயற்சியில் தோல்வியடைந்து மனோ மாஸ்டருடன் வெளியேறிய எனது டெலோ இயக்க வாழ்கை எட்டு மாதங்கள் வரை மட்டுமே நீடித்தது.

மீண்டும் நான் ஜே.ஆர் ஐச் சந்தித்த போது, டெலோ இயக்கம் என்னைத் தண்டிப்பதற்காகத் தேடிக்கொண்டிருந்தது. மரண பயத்யத்தில் எனது தலைமறைவு வாழ்க்கை கிராமங்களுகுள்ளேயே நகர்ந்து சென்றது.

ஜே.ஆர் டெலோ இயக்கத்தின் பிரச்சாரப் பிரிவில் முழு நேரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
இயக்கத்தில் முற்போக்கு அணியொன்று உருவாகிக் கொண்டிருப்பதாகவும், அதனுடன் இணைந்து இயக்கத்தை மாற்றப் போவதாகவும் கூறிக்கொண்டிருந்தார்.

இயக்கங்களை இனிமேல் மாற்ற முடியாது என்றும் அதற்கு வெளியில் புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் நான் வாதிட்டேன். கிராமங்களின் நான் செய்யும் அரசியல் வேலைகள் பற்றி ஜே.ஆர் இடம் கூறிய போது, அதற்குத் தான் உதவி செய்வதாகக் கூறினார்.

indian_military_training1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே டெலோ இயக்கப் போராளிகள் இந்தியாவிலிருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு ஆயுதங்களோடு நாடு திரும்ப ஆரம்பித்திருந்தனர்.

அண்ணைன் வரவிற்காகக் காத்திருந்த ஜே.ஆர் உம் குடும்பத்தினரும் அந்தத் துயரச் செய்தியை அறிந்துகொண்டனர். ஜே.ஆர் இன் அண்ணன் இந்தியாவில் தற்கொலை செய்து மரணித்துப் போனதாக இயக்கப் பொறுப்பாளர் ஒருவர் செய்தி கொண்டு வந்திருந்தார்.

அது தற்கொலை அல்ல உள் முரண்பாடுகளால் நடத்தப்பட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட நீண்டகாலம் எடுத்தது.

டெலோ இயக்கத்தின் உள் கட்டமைப்ப்க்களின் மாற்றம் ஏறடுத்த முடியாது என்ற முடிவிற்கு சில காலங்களின் முன்னதாகவே ஜே.ஆர் வந்திருந்தான். வெளியில் மற்றொரு அரசியல் இயக்கம் தோன்றினால் பல ஆயிரம் தியாக உணர்வுள்ள் போராளிகள் டெலோவை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று ஜே.ஆர் நம்பியிருந்ததால் என்னுடன் கிராமங்களில் வேலை செய்ய ஆரம்பித்தான். தேசிய மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் தெரு நாடகங்களை அரங்கேற்றினோம். அவற்றுடன் ஜே.ஆர் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தான்.

இதே வேளை ஜே.ஆர் இன் அண்ணன் உயிருடன் இயக்கத்தின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது வீட்டுக்கு அருகிலிருந்து இந்தியா சென்று பயிற்சியெடுத்த ஒருவர் கூறியதும், ஜே.ஆர் இன் இன்னொரு சகோதரரை இந்தியாவிற்கு அனுப்பி அவரைத் தேடுவது என குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

மாதகலில் இருந்து கடத்தல் செய்பவர்களின் படகு ஒன்றை ஒழுங்குசெய்து இந்தியா பயணமான அவர், இடை நடுவில் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்துவிடுகிறார்.

இப்போது, ஜே.ஆர் இன் குடும்பம் அவரும் சகோதரியும், வயதான தாய் தந்தையருமாகச் சுருங்கிவிடுகிறது. புத்திர சோகமும் முதுமையின் வலியும் பெற்றோர்களைக் கொன்று தின்றுகொண்டிருக்க, ஜே.ஆர் வேலைக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

அச்சகம் ஒன்றில் பகுதிநேர வேலை பெற்றுக்கொண்ட ஜே.ஆர் இன் ஊதியம் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவனது வயதான தந்தை சினிமா தியட்டர் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்ற ஆரம்பிக்கிறார்.

86 ஆம் ஆண்டில் டெலோ இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான டெலோ போராளிகள் கண்ட இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். பலர் வீடு வீடாகச் சென்று கைது செய்யப்படுகின்றனர். சிலர் விசாரணையின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ஜே.ஆர் உம் அவரது வீட்டுக்கு அருகாமையிலிருந்து பாஸ்கரனும் கைதாகின்றனர். ஜே.ஆர் டெலோவை விட்டு விலகியிருந்ததாலும் அவரது அண்ணனின் படுகொலை தொடர்பான தகவல்களலும் அவர் ஒரு வாரத்தின் உள்ளாகவே எச்சரிக்கைகளின் பின்னர் விடுதலை செய்யப்படுகின்றான்.

பாஸ்கரனின் மரணச் செய்தி சில காலங்களின் பின்னர் அவரது வீட்டாருக்குத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலையான ஜே.ஆர் இன்னும் தீவிரமாக அரசியல் வேலைக செய்யப்பட வேண்டும் என்றும் , மக்களை அணிதிரட்டி எழுச்சி ஒன்றை ஏற்படுத்தத் தவறினால் இலங்கை அரசாங்கம் ஆயுதப் போராட்டத்தை அழித்துவிடும் என்ற கருத்தை முன்வைக்கிறான். இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தலைமறைவு இராணுவக் குழு ஒன்றை மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக கட்டமைக்க வேண்டும் என்ற கருத்தையும் திட்டத்தையும் முன்வைக்கிறான். டெலோ ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த ஜெகன்நாதன் என்பவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அங்கிருந்த கைக்குண்டுகள் சிலவற்றை எடுத்து கிராமம் ஒன்றில் புதைத்து வைக்கிறோம்.

rajeev1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது இந்திய இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் குண்டுவெடிப்புக்களையும் தயார் செய்ய வேண்டும் என ஜே.ஆர் என்னிடம் வந்து விவாதித்தான்.

பேச்சுக்கள் முறிவடைந்ததும், புலிகள் இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி தென்னிந்தியாவில் தங்கியிருந்த டெலோ இயக்க உறுப்பினர்களை இந்திய இராணுவம் தன்னோடு அழைத்து வந்து பாதுகாப்பு அரண்களிலும், முன்னரங்கங்களிலும் பயன்படுத்திக்கொண்டது.

கல்வியன்காட்டு சந்தியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண் ஜே.ஆர் இன் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்தது. அங்கு காவல் வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் ஜே.ஆர் ஐ அடையாளம் கண்டுகொண்டு அழைத்திருக்கிறார். ஜே.ஆர் அவரோரு நீண்ட நேரம் பேசியிருக்கிறார். நாட்டுக்காகப் போராட அனைத்தையும் துறந்து சென்ற அவர் இந்திய இராணுவத்தின் மாய வலைக்குள் அகப்பட்டிடுப்பதாக ஜே.ஆர் இடம் துயர்பட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு வந்து தமிழீழம் பெற்றுத் தருவதாகவே இந்திய இராணுவம் தங்களைக் கூட்டிவந்ததாகவும் கூறியிருக்கிறார். ஜே.ஆர் தனது அண்ணனுக்கு என்ன நடந்தது எனக் கேட்டிருக்கிறான்.

அதன் பின்னர் அவ்வழியால் போகும் போதெல்லாம் அவர் ஜே.ஆரை இடைமறித்துப் பேச்சுக்கொடுப்பது வழக்கம். இத்தகவல் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்கு எட்டியிருக்க வேண்டும்.

கல்வியன்காட்டுச் சந்திக்கு அருகாமையில் ஜே.ஆர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரால் அவரது தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மட்டும் எனக்குக் கிடைத்தது.

இந்திய இராணுவத்தின் உளவாளி ஒருவரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக கொலை செய்த புலிகளின் உறுப்பினர்கள் அருகிலிருந்தவர்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.

தனது வாழ் நாள் முழுவதும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த ஜே.ஆர் தெருமுனை ஒன்றில் அனாதரவாகக் கிடந்தான்.
ஜே.ஆர் இன் குடும்பத்திலிருந்த மூன்று ஆண்பிள்ளைகளையும் போராட்டம் பலியெடுத்துக்கொண்டது.

நான் பல்கலைக் கழகத்தில் படிப்பைத் தொடர்வதாகத் தீர்மானித்து இரண்டாவது வருடத்தில் தான் கொலை நடந்தது.

அன்று… கணிதத்தில் சிறப்புப் பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டதற்காக விருந்து கொடுக்குமாறு பல்கலைக்கழக நண்பர்கள் கேட்டிருந்தார்கள் பல்கலைக் கழகத்திற்கு முன்னாலிருந்த அபிராமி என்ற உணவுக்கடையில் நண்பர்களை எதிர்பார்த்து தேனீர் ஒன்றை அருந்திக்கொண்டிருக்கிறேன்.

திடிரென ஒரு குரல் என்னைக் கடுமையான வார்த்தைகளால் விசாரித்தது.

‘எங்களது குடும்பத்தையே சிதைத்துவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் தேனீர் சாப்பிடுகிறாயா’ என்று உணவகம் முழுவதும் அதிரும் வகையில் சத்தமிட்டது ஜே.ஆர் இன் அப்பா.

எனக்கு அங்கிருந்து மெதுவாக எழுந்து செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

பின்னர் விசாரித்ததில் பல்கலைக் கழகத்தில் தற்காலிக பாதுகாப்பு உத்தியோகத்தராக வேலை செய்வதற்கு ஜே.ஆர் இன் அப்பா வந்திருந்தாகத் தெரியவந்தது. அந்த தந்தையின் கூற்றில் கோபம் மட்டுமல்ல, நியாயமும் இருந்தது.

நான் வெற்றியின் மொழியைப் பேசி இயக்கத்திற்கு என்ற அழைத்துச் சென்ற நூற்றுக்கணக்கானவர்களுள் ஜே.ஆர் உம் ஒருவன்.

அவர்களில் பெரும்பாலானவர்களை நான் மீளச் சந்தித்ததில்லை. செத்துப் போனவர்கள் எத்தனை பேர் மீண்டவர்கள் எத்தனை பேர் எனக்குத் தெரியாது. என்னுடைய வாழ்கைய ஒருவகையில் செதுக்கிக் கொண்ட சுயநலவாதியாகவே நான் என்னை எண்ணுவதுண்டு. கடந்த கால அழுக்குகளைக் கழுவிக் கொள்வதற்கான மாற்று என்னிடம் இல்லை.

ஆனால் ஜே.ஆர் ஐப் பொறுத்தவரை தியாகி, மாவீரன், என்ற அனைத்து வரைமுறைகளுக்குள்ளும் அடக்கப்படக்கூடியவன்.

ஜே.ஆர் கொல்லப்பட்ட சரியான திகதி எனக்குத் தெரியாது. ஆனால் அவன் கொல்லப்பட்ட முப்பதுவருட இடைக்காலத்தில் புலிகள் சாராத அனைத்துப் போராளிகளும் துரோகிகள் என்ற விம்பத்தை அதிகாரவர்க்கம் திட்டமிட்டு உருவாக்கியது.

சமூகத்தைப் பிளந்து அதன் ஒரு பகுதியைத் துரோகிகளாக்கி ஜே.ஆர் இன் குழும்பத்தைப் பல தடவை கொன்று போட்டிருக்கிறது.

தமது இளவதின் ஆசாபாசங்களை தொலைத்துவிட்டு, புத்தகங்களுக்கு விடைகொடுத்துவிட்டு போராடுவதற்காக மட்டுமே சென்ற ஆயிரக்கணக்கான தியாகிகள் துரோகிகளாக்கப்பட்டனர். மரணித்தவர்களின் புதைகுழிகளிலும் சாம்பல் மேடுகளிலும் அவர்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்யப்பட்டனர். இக் கொலைகள் தமிழினத்தை கோரமான மனோநிலை கொண்ட மக்கள் கூட்டமாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

மக்களும் போராளிகளும் அப்பாவிகள் என்றும் அதிகார வெறிகொண்ட தலைமைகளும் அவை வரித்துக்கொண்ட அரசியலின் மூலமுமே தமிழர்கள் தொடர்பான தவறான பிரதிவிம்பத்தை வழங்கிவருகிறதுஎன ஈனக் குரலில் சொன்னவர்களின் வாதம் எடுபடவில்லை.

இன்று ஐ.நாவும் ஏகபோக அரசுகளும் போராட்டத்தின் நியாயத்தை அழிப்பதற்காக அத் தவறுகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. போராளிகளின் புதைகுழிகளிகளுக்குள் அவர்களை மீண்டும் கொன்று போடுகின்றன.

uk_maveerarஏனைய இயக்கங்களிலிருந்த சந்தர்ப்பவாதிகள் பலர் புலிகளில் இணைந்து தம்மைத் தியாகிகளாகவும், தமது முன்னை நாள் தோழர்களைத் துரோகிகளாகவும் பிரச்சாரம் செய்தனர். புலம்பெயர் புலிகள் இப் போக்கின் பிரதான கருவிகளாகினர். அவர்கள் பெரும்பாலும் தம்மை நியாயப்படுத்துவதற்காக ஏனைய இயக்கங்களிலிருந்த சற்றுப் பேசத் தெரிந்தவர்களை ஆலோசகர்களாக நியமித்துக்கொண்டனர்.

தமது எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக வெறித்தனமான புலிகள் இயக்க விசுவாசிகளாக அவர்கள் தமது போலித்தனத்தை வெளிப்படுத்திக்கொள்கின்றனர். ஏகாதிபத்தியங்களும் அவற்றின் உளவுப்படைகளும் புலிகள் இயக்கப் போராளிகளைப் போர்குற்றத்திற்காகத் தண்டிக்கும் போது முதலில் காட்டிக்கொடுப்பவர்கள் இவர்களாகத்தானிருப்பார்கள்.

புலிகளை அழித்து சொத்துக்களைக் கையகப்படுத்திக்கொண்ட புலம்பெயர் பினாமிகளில் பெரும்பகுதியினர் தாம் சார்ந்திருந்த இயக்கங்களின் தோழர்களை நினைவுகூர்வதில்லை.

இந்த வியாபாரிகளின் கூட்டிணைவில் நடத்தப்படும் புலம்பெயர் மாவிரர் நிகழ்வில் ஜே.ஆர் என்ற ‘துரோகி’ தலைகாட்டமாட்டான். புலிகளின் தலைவர் பிரபாகரனையே அனாதையாக்கிவிட்டு மாவீரர் வியாபாரம் நடத்தும் இக் கூட்டத்திற்கு ஜே.ஆர் ஒரு கேடா என்ன?

(எதுவும் கற்பனையல்ல…)

http://inioru.com/touching-story-of-a-freedom-fighter/

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆருக்கு அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் செய்த இப்படியான "ஏதிரியைத் துரோகியாக வர்ணிக்கும்" தவறும் அதைத் தட்டிக்கேட்காத பொதுசனத்தின் செயற்பாடுகளுமே காலப்போக்கில் தமிழினத்தை வன்முறைகளை ஏற்றுக்கொண்டு வாழும் ஒரு சூழ்நிலையில் வாழ்வதற்கு மக்களை மாற்றியிருக்கின்றது. காலப்போக்கில் அது ஒருவித மனப்பயத்தை அவர்களிடையே உருவாக்கி, அதனின்றும் விலகி கண்டும்காணாது இப்படியான வன்முறைகளை ரசித்து எப்படி வாழ்வது என்பதை அவர்களுக்குப் பழக்கியது, இறுதியில் புலிகள்மீதும் பொதுமக்கள்மீதும் அதே வன்முறை பிரயோகிக்கப்பட்டபோதும் வாய்மூடி மௌனிகளாக்கியது.

 

இப்போதும் இதே சூழலே தொடர்கின்றது. புலம்பெயர் தமிழர்களிள் பலர் அவர்கள் வாழும் நாடுகளின் ஜனநாயக விழுமியங்களில் பரிச்சையம்கொண்டு புதிதாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தாலும் (இதற்குப் புலிகளது அழிவும் ஒரு காரணமாகவிருக்கலாம்) இன்னமும் பலரை இதிலிருந்து விடுபடவிடாது சில விடையங்கள் துரத்திக்கொண்டே இருக்கின்றன.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றுகணக்கான JR கள் எங்களின் போரட்டத்தில் உள்ளனர்.

சின்னபாலா, EROS இல் இரண்டாம் மட்ட தலைவராக இருந்தவர், இவரை போன்ற பல JR களின் பெயர்கள் தூய்மைப்படுத்தபடவேண்டும்.

முப்பது வருடங்களாக அவர்கள் முதல் பணி அதுதான். இன்னமும் பலர் அதையே காவி சுய இன்பம் அனுபவிகின்றார்கள் .tw_angry:

முப்பது வருடங்களாக அவர்கள் முதல் பணி அதுதான். இன்னமும் பலர் அதையே காவி சுய இன்பம் அனுபவிகின்றார்கள் .tw_angry:

போராட்டத்தில் ஒரு நாள் கூட பங்கேற்காது வெளிநாட்டில் குந்தியிருந்து மற்றவர்களை பார்த்து துரோகிகள் என்று விளிக்கும் அனைத்து புலவாலுகளுக்கும் இது பொருந்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

1986 இல் இருந்து இலங்கை இந்திய அரசுடன் சேர்ந்து அப்பாவிகளை போட்டுத் தள்ளியது தான் முதல் பணி. 

இன்றும் புலிகள் உருவாக்கியதில் இருந்து கொண்டு சுய இன்பம் காண்கின்றனர்.

 

காக்கை வன்னியனை துரோகி என விழிக்கும் கூட்டம் அன்று பண்டாரவன்னியன் படையில் ஒருநாள் போராடியவர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் பாதிப்படைந்த எல்லா குடும்பங்களின் கதையிலும் ஒரு டேவிட் இருக்கிறார்.
எங்களுடைய மாமா ஒருவர் கொழும்பில் வேலைசெய்துவிட்டு வந்து பருத்தித்துறையில் இருந்தார்.
இவருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் ... இந்திய இராணுவம் இவரை வைத்தே மக்களுடன் தொடர்பு கொள்ளும்.
இவர் வெளியில் போகும் வரும் போதெல்லாம் இராணுவ அரனை கடந்துதான் போகவேண்டும்.
அப்போதெல்லாம் இராணுவம் இவருடன் பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர் கடை பக்கம்  சென்றால் 
சில சாமன்கள் சொல்லி வாங்கிவித்து கொள்வார்கள். 
ஒருநாள் இவர் வீடு திரும்பும்போது இராணுவம் சொல்லிவிட்ட பீடியை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.
பின்பு இராணுவம் வெளியே போயிருக்கிறது ..... எதிர் எதிராக மென்டிஸ் மாட்டிகொள்கிறார் 
இராணுவம் மெண்டிசை சுட்டுவிட்டார்கள்.
ஆமி காம்  அருகே ஒரு சலூன் இருந்தது அவர் புலிகளுக்கு போட்டுகொடுத்தார் ...இவர்தான் மெண்டிசை காட்டி கொடுத்தது என்று.
அவர்கள் முன்பும் ஒருமுறை மாமாவை எச்சரித்து இருந்தார்கள் இராணுவத்துடன் பழக வேண்டாம் என்று. 
இவர் முன்பு தெரிந்த ஆங்கிலம் இப்போ மறந்துவிட்டேன் என்றா ? கூற முடியும்.

ஒருநாள் கடை பக்கம் போகும்போது காத்திருந்து அழைத்து சென்றுவிட்டார்கள் 
12ஆம் நாள் தகவல் வந்தது அவர் இறந்துவிட்டார் என்று. அதில் சூசை பெரிய பங்கு கொண்டு இருந்தார் 
யார் செய்தது என்பதை அறியும் எண்ணமும் கோவமும் எனக்கு தொடர்ந்துகொண்டே இருந்தது.
1990இல் அதில் பங்கு கொண்ட ஒருவருடன் பேச சந்தர்ப்பம் கிடைத்து. தமக்கு கொலை செய்யும் எண்ணம் இருக்கவில்லை 
அடிக்கும்போது தவறி மண்டையில் பட்டு உடனேயே இறந்துவிட்டார் என்று சொன்னார்.
மாமாவின் மகள் சமத்திய வீடு நடந்தபோது சூசை தனது மனைவியுடன் வந்து 20ஆயிரம் காசு கொடுத்தார் மாமி வாங்கவில்லை. 

இவை எல்லாம் தமிழனின் இழிகுனத்தால் வந்ததே தவிர புலிகள் மீது குற்றம் சுமத்திவிட்டு நகர்ந்துவிட முடியாது.
சுத்தம் இல்லாத ஊரில் அசுத்தம் பஞ்சம் இன்றித்தான் கிடக்கும்.

இனி கட்டுரைக்கு வருவோம் ...
ஜே ஆரின் குடும்பத்தில் 2 பேர் இறந்துவிட்டார்கள்  இவர்களின் மரணத்திற்கு இலட்சியம் இல்லாத தலைமைகளும் 
வரட்டு புத்தி தலைவர்களும்தான் காரண கர்த்தாக்கள்.
இந்த இடத்தில் தமிழ் இளைஞர்களின் தாகமான தமிழ் ஈழத்தை நோக்கி நகர வேண்டும் என்றால் .......
புலிகள் போல் வன்மையான துரித கட்டமைப்பு ஒன்றால் மட்டுமே சாத்தியம் ஆகும்.
புலிகளை உருவாக்கியதில் அழித்ததில் முக்கிய பங்கு தமிழ் ஈழத்தை  காட்டி கொடுத்த துரோகிகள் உடையதே.
நாலுபேர் ஒன்றாக கைபிடித்த போராட்டம் சிதறிப்போனதில் முக்கிய பங்கு றோவின் திசையில் திரும்பியவர்கள் உடையதுதான்.


ஜே ஆர் இறந்துவிட்டார் .....
அவரை துரோகி என்று விட்டார்களாம் என்று காவடி தூக்கும் இவர் 
இறுதியில் இத்தனை தியாங்களுடன் வீழ்ந்த புலிகளுக்கு மாவீரர் நாள் செய்பவனை துரோகி ஆக்கிவிடுகிறார்.
28 வருடம் கழித்துதான் இவருக்கு ஜே ஆரின் ஞாபகம் வருகிறது ....
ஜே ஆரை கொன்றவரே இவர்தான் பிள்ளையார் சுளிபோட்டதெல்லாம் இவர்தான்.
மாவீரர் நாளை எப்படி குழப்பலாம் என்று யோசிக்கும்போது ......?
இவர்களுக்கு ஜே ஆர் நினைவிற்கு வருகிறார். ..........
ஜே ஆரை துரோகி ஆக்கிவிட்டார்கள் என்று புலம்பும் ஒருவன் .... எந்த ரீதியில் இன்னொரு போராளியின் மரணத்தை போற்றுபவனை 
துரோகி ஆக்க முடியும்? 
துரோகி பட்டம் கொடுக்கும் பொறுப்பை இவர்கள்தான் நிர்வகிக்கிறார்களா ?
மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு தெரியும் யார் என்ன செய்தார் என்பது .... இவர்கள் மாறி தவளைபோல் இனி கத்த தேவை இல்லை 
என்பதே என்னுடைய எண்ணம்.
ஆனால்    அடுத்தவனை கொலைசெய்து தம்மை தக்க வைக்க துணிந்த இவர்கள் சுய விளம்பரத்தில் இருந்து விடுபட போவதில்லை.

ஜே ஆரின் குடும்பத்தில் இருவரை கொன்றவர் இவர்தான் ....அப்போதும் இவர் போராட போகவில்லை 
டெலோவை வைத்து சுய விளம்பரம்தான் செய்து கொண்டு இருந்தார். பெருந்தன்மையோடு அதை தானே ஒத்துகொள்கிறார் 
பின்பு மீண்டும் சுயவிளம்பரத்திட்கு ...... யாரை பலி ஆக்கலாம் என்று யோசித்துவிட்டு 
இப்போ மாவீரர் நாளை செய்பவனை தூக்கி இருக்குறார்.
மாவீரர் நாள் செய்பவன் எல்லாம் துரோகி என்று எந்த ஆதாரம் வைத்து இவர் எழுதுகிறார் ?

இப்படியான சுய விளம்பர புத்தி கார துரோகிகளல்தான் ஜே ஆர்  புலிகள் ..... 
இப்படியான வேஷ காரர் உடன் இருப்பார் என்ற இறுமாப்பில் 
சிறிசபாரத்தினம் உமாமகேஸ்வரன் பட்பநாபா எல்லோரும் இறந்துபோனார்கள்.

எல்லோருக்கும் பாடை கட்டிய இவர்கள் 
இப்போ துரோகி பட்டம் அளிக்க  மேடைக்கு வந்திருக்கிறார்கள். 
பாவம் மேடைக்கு முன்னால்தான் யாரும் இல்லை ......... 
இவர்களை போன்ற ஒரு சில சுயவிளம்பர தாரிகள் மட்டும் தம்மை சுயவிளம்பரம் செய்யும் சுயநலத்துடன். 

(இந்திய இராணுவ நேரம் கல்வியங்காட்டில் எந்த இந்திய இராணுவ முகாமிலும் டெலோ இருக்கவில்லை) 

போராட்டத்தில் ஒரு நாள் கூட பங்கேற்காது வெளிநாட்டில் குந்தியிருந்து மற்றவர்களை பார்த்து துரோகிகள் என்று விளிக்கும் அனைத்து புலவாலுகளுக்கும் இது பொருந்தும். 

துரோகம் செய்தவர்களை எப்படி அழைப்பது என்று நீங்கள் அறிவித்துவிட்டால் 
அவர்கள் துரோகிகள் என்று அழைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

காய்ச்சலில் பலவகை உண்டு இது மாவீர்ர் தினக் காய்ச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இனவிடுதலைக்காகப் போராடப் போனவர் எல்லாம் உண்மையான உணர்வுடந்தான் சென்றார்கள். அது புலிகளாயிருக்கட்டும், டெலோவாக இருக்கட்டும், புளொட்டாக இருக்கட்டும், ஈ.பி. ஆர் எல்.எப் ஆக இருக்கட்டும், எல்லோருமே இனத்தின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போனார்கள்.

ஆனால் தலைமைகளின் திடமில்லாத முடிவுகளால் அந்த உண்மையான போராளிகளின் எண்ணங்களும், ஏக்கங்களும் அதனுடன் இணைந்த அவர்களின் வாழ்வும் வீணடிக்கப்பட்டு விட்டது என்பது வேதனை.

இதுவரை எமக்காக மரணித்த அனைத்துப் போராளிகளுக்கு எனது அஞ்சலிகள். அவர்கள் யாரென்பதோ அல்லது எந்த இயக்கத்தில் இருந்தார்கள் என்பதோ எனக்குத் தேவையில்லாதது. 

முடிந்தவரை எல்லோருமே தமது வழிகளில் போராடித்தான் பார்த்தார்கள். இறுதியில் புலிகளும் போராடினார்கள். ஆனால் முடிவு என்னவோ நாம் விரும்பியதாக மட்டும் இருக்கவில்லை.

இனியாவது நாட்டுக்காகப் போராடப் போனவர்களை குறுகிய வட்டங்கள் கீறிக் கொச்சைப் படுத்தாமல் இருப்போம். எம்மைப் பொறுத்தவரை அவர்கள் எல்லோருமே தியாகிகள்தான் !

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இனவிடுதலைக்காகப் போராடப் போனவர் எல்லாம் உண்மையான உணர்வுடந்தான் சென்றார்கள். அது புலிகளாயிருக்கட்டும், டெலோவாக இருக்கட்டும், புளொட்டாக இருக்கட்டும், ஈ.பி. ஆர் எல்.எப் ஆக இருக்கட்டும், எல்லோருமே இனத்தின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போனார்கள்.

ஆனால் தலைமைகளின் திடமில்லாத முடிவுகளால் அந்த உண்மையான போராளிகளின் எண்ணங்களும், ஏக்கங்களும் அதனுடன் இணைந்த அவர்களின் வாழ்வும் வீணடிக்கப்பட்டு விட்டது என்பது வேதனை.

இதுவரை எமக்காக மரணித்த அனைத்துப் போராளிகளுக்கு எனது அஞ்சலிகள். அவர்கள் யாரென்பதோ அல்லது எந்த இயக்கத்தில் இருந்தார்கள் என்பதோ எனக்குத் தேவையில்லாதது. 

முடிந்தவரை எல்லோருமே தமது வழிகளில் போராடித்தான் பார்த்தார்கள். இறுதியில் புலிகளும் போராடினார்கள். ஆனால் முடிவு என்னவோ நாம் விரும்பியதாக மட்டும் இருக்கவில்லை.

இனியாவது நாட்டுக்காகப் போராடப் போனவர்களை குறுகிய வட்டங்கள் கீறிக் கொச்சைப் படுத்தாமல் இருப்போம். எம்மைப் பொறுத்தவரை அவர்கள் எல்லோருமே தியாகிகள்தான் !

தற்போதைய சிரியா விடயங்ககளை முடிந்தால் என்ன நடக்கிறது என்று வாசித்து அறியுங்கள் .... 
கசப்பான உண்மைகள் அப்படியே 1983-1986 வரையான கால பகுதியில் எமது நாட்டில் நடந்தது 
அங்கே இப்போ நடந்துகொண்டு இருக்கிறது.
நாம் பயங்கரவாதிகள் என்றுவிட்டு இருந்துவிடலாம் ...
இஸ்லாம் மதத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று ... உலகு எங்கும் உள்ள முஸ்லீம் இளைஞர்களை 
மத வெறி ஊட்டி அழைத்து வருகிறார்கள்.
இஸ்லாமிற்கு எதிரானவர்களுடன் போராட என்றுதான் அவர்கள் வருகிறார்கள்.
இறுதியில் முஸ்லீம்களுடன் போராட வைக்க படுகிறார்கள்.
இன்னொரு இஸ்லாமியரே இவர்களை வேட்டையாடவும் காத்து இருக்கிறார்.
சிரியா வந்த பின்பு திரும்பி ஓட முடியாத நிலையில் பலர் மாட்டி கொண்டு இருக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் பாதிப்படைந்த எல்லா குடும்பங்களின் கதையிலும் ஒரு டேவிட் இருக்கிறார்.
எங்களுடைய மாமா ஒருவர் கொழும்பில் வேலைசெய்துவிட்டு வந்து பருத்தித்துறையில் இருந்தார்

உங்கள் மாமாவுக்கு நடந்தது மிகவும் கவலைக்கு உரியது. அதே வேளை உங்கள் தெளிவும் பாராட்டுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் போராடப் போனவர்களில் பலர் பதின்ம வயதினராக இருந்தாலும் அரசியல் விழிப்புணர்வுடனும், ஓர்மத்துடனும் இருந்தார்கள். ஆனால் போராட்டங்கள் பற்றிய சரியான அனுபவங்கள் இல்லாததால் பிழையான தலைமைகளின் பின்னால் போனார்கள். அவர்களில் மதிப்புக்குரிய சபா.நாவலனும் ஒருவராக இருந்திருக்கின்றார்.

ஆரம்பத்தில் போராடப் போனவர்களில் பலர் பதின்ம வயதினராக இருந்தாலும் அரசியல் விழிப்புணர்வுடனும், ஓர்மத்துடனும் இருந்தார்கள். ஆனால் போராட்டங்கள் பற்றிய சரியான அனுபவங்கள் இல்லாததால் பிழையான தலைமைகளின் பின்னால் போனார்கள். அவர்களில் மதிப்புக்குரிய சபா.நாவலனும் ஒருவராக இருந்திருக்கின்றார்.

சபா நாவலன் ,டேவிட் ஐயா போன்றவர்கள் பிழையான தலைமையையும் கருணா ,பிள்ளையான் போன்றவர்கள் சரியான தலைமையும் தேர்ந்து எடுத்திருக்கின்றார்கள் போல .:cool:

 

சபா நாவலன் ,டேவிட் ஐயா போன்றவர்கள் பிழையான தலைமையையும் கருணா ,பிள்ளையான் போன்றவர்கள் சரியான தலைமையும் தேர்ந்து எடுத்திருக்கின்றார்கள் போல .:cool:

ஆகா ... டம்பிங் கந்தசாமி, சங்கிலி, வாசுதேவா, மாணிக்கதாசன் ... எல்லாம் கண்ணுக்கு எங்களுக்கு தெரியுதில்லையாம்???

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் போராடப் போனவர்களில் பலர் பதின்ம வயதினராக இருந்தாலும் அரசியல் விழிப்புணர்வுடனும், ஓர்மத்துடனும் இருந்தார்கள். ஆனால் போராட்டங்கள் பற்றிய சரியான அனுபவங்கள் இல்லாததால் பிழையான தலைமைகளின் பின்னால் போனார்கள். அவர்களில் மதிப்புக்குரிய சபா.நாவலனும் ஒருவராக இருந்திருக்கின்றார்.

 

அரசியல் விழிப்புணர்பு என்பது மட்டு மட்டாகத்தான் இருந்தது.
சிங்கள காடை இராணுவத்தின் கொடூரங்களின் மேல் வந்த கோபம் மட்டுமே அனைவரையும் தூக்கி சென்றது என்பது 
என்னுடைய தனிபட்ட எண்ணமும் அனுபவமும் கூட.

தமிழர்களுக்கு கேட்ட காலத்திலும் ஒரு நல்ல காலம் போலவே சில சம்பவங்கள் 
பாரிய அழிவுகளை தடுத்து இருந்தன. 

ஒரு வேளை தாசண்ணைவை சிறியரும் பொபியும் சுட்டாத நேரத்தில் புலிகள் டெலோமீது 
கை வைத்திருந்தால் நிலைமை சற்று வித்தியாசமாகவே இருந்திருக்கும். யாழ்பாணத்தை பொறுத்தவரை 
டேலோவில் தாக்குதல் குழு என்று ஏதும் இருக்கவில்லை. நாங்களே கல்வியங்காட்டு காடை கோஸ்டி என்றுதான் 
மறைமுகமாக தாசண்ணாவை சுடும்வரை கூறிவந்தோம் பின்பு நேரடியாகவே கூற தொடங்கி விட்டோம். 
அதுவே புலிகளுக்கு இலகுவாகிபோனது.

பின்பும் புளொட் ஈப்பியுடன் இணைந்து திரும்பி வந்து ஈப்பி முகாம்களில் தங்கி இருந்து 
ஈப்பியும் புளொட்டும் புலிகளை அழிக்க திட்டம் போட்டுகொண்டு இருந்தார்கள்.
வீணாக அழிவு வரும் என்று சில ஈப்பி காரர்கள்தான் (பயத்திலுமாக இருக்கலாம்) புலிகளிடம் போட்டு 
கொடுத்திருந்தார்கள்.  புலிகள் ஈப்பியை தடை செய்யும் முன்னர் ஈப்பியும் புளொட்டும் முந்தியிருந்தால் ?
அது பாரிய அழிவாகத்தான் இருந்து இருக்கும்.

போகும்போது தமிழ் ஈழ விடுதலை என்று போனாலும் ....
பின்பு தளபதிகளை தொழுது அவர்களின் பால் ஏமாந்தவர்கள்தான் அதிகம். 
பெரியோரை மதிக்கவேண்டும் என்று சின்னவயதில் சொல்லி தந்ததன் பிரதி பலனோ என்னமோ.

கருணாவை காசு திருடியதட்கு புலிகள் விலத்தியபோது ....
கிழக்கு மாகாண புலிகள் கொள்கையையே தூக்கி எறிந்தார்கள்.
இதுதான் எல்லா இயக்கத்திலும் நடந்தது.
(டெலோ தாஸ் குறுப் மட்டும் விதி விலக்கு. தாஸ்அண்ணா தான் இறந்து மற்றவர்களை காப்பாற்றினார். ஈரோஸ்சும் கொண்ட கொள்கையுடன் 
எதோ ஒரு வடிவில் இறுதிவரை இருந்துவிட்டார்கள்) 

போராட போன பெரும்பானமையினர் ஒரு சண்டையில் சிங்களவன் சுட்டு சாவது என்பதை 
பெருமையாகத்தான் எண்ணினார்கள். சொந்த துப்பாக்கிகளே குறிவைத்தது பெருத்த அவமானம் 
அப்படி ஒரு அவமான சாவை யாரும் விரும்பி இருக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

 ஆரம்பத்தில்  போராடப் போனவர்கள் இலட்சியம், விடுதலை என்ற உணர்வோடுதான் சென்றார்கள், அதற்காகவே பாடுபட்டார்கள். நாட்கள் நகர படிக்க கள்ளப்பட்டதுகள், கடன்வாங்கி கொடுக்க முடியாதவர்கள், காதலித்து கரம் பிடிக்க மறுத்ததுகள் இப்படிப் பலதும் போய்ச் சேர்ந்து பாடை கட்டிப்போட்டுதுகள். காட்டிக்கொடுத்தது என்று சில பேரின் இறப்புக்கு நான், நீங்கள், நமது சமுதாயம் தான் காரணம். ஒருவர் சிங்களம் பேசினால், அரசாங்க  உத்தியோகம் பாத்தால் ஆமிக்கு உளவு சொன்னார் என்று மனம் பொறுக்காத  ஊரவர்கள் தாங்கள் வால் பிடிக்கிற சாதாரண போராளிகளை கொண்டு இப்படியான பல வேலைகள் நடந்ததுண்டு. இவையெல்லாம் தலைமைக்கு தெரிந்ததோ, அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் நடந்தது என்றோ அல்லது சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப் படவில்லை என்றோ கூறிவிட முடியாது. இந்திய ஆமிக் காலத்தில் போராளிகள் ஒருவரோடொருவர் கதைக்கவோ சந்திக்கவோ, கட்டளைகளை பிறப்பிக்கவோ முடியாத காலம். அவரவர் தங்களை பாதுகாத்து, தங்களால் இயன்றதை செய்து வாழவேண்டிய நிலை. அங்கே ஒரு போராளி எதிரிக்கு பல அழிவுகளை ஏற்படுத்தி வந்தான். அவனோடு உறவாடிய சிலர் அவனை தமது சொந்த பகையை தீர்க்க பயன்படுத்திக் கொண்டார்கள். பசிக்கு ஆமியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்ட இள வயதில் உள்ள பலரை "காட்டிக் கொடுத்தார்கள்" என்று போட்டுக்கொடுத்து அவர்கள் கதை முடிந்தது. இதுமட்டுமல்ல எவ்வளவோ. இந்தியன் ஆமி எவ்வளவு முயன்றும் அவனை எதுவும் செய்ய முடியவில்லை. ஒருநாள் அவன் சுடுபட்டு இறந்து விட்டான். இந்தியன் ஆமிதான் சுட்டது என்று கதை பரவியது. அவனது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்தியன் ஆமி தாங்கள் அவனை சுடவில்லை ஆகவே அவனது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்  என வற்புறுத்தினார்கள். ஆனால் அதற்கு அவனது குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்து விட்டனர். இப்படி எத்தனையோ சம்பவங்கள். எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

வெளியில்வராமல் இன்னும் எத்தனை இருக்குமோ? 

எல்லா பக்கத்தாலையும் துன்பப்பட்ட ஒரு இனம் தான் எங்கள் தமிழினம். 

 

 

அரசியல் விழிப்புணர்பு என்பது மட்டு மட்டாகத்தான் இருந்தது.
சிங்கள காடை இராணுவத்தின் கொடூரங்களின் மேல் வந்த கோபம் மட்டுமே அனைவரையும் தூக்கி சென்றது என்பது 
என்னுடைய தனிபட்ட எண்ணமும் அனுபவமும் கூட.

தமிழர்களுக்கு கேட்ட காலத்திலும் ஒரு நல்ல காலம் போலவே சில சம்பவங்கள் 
பாரிய அழிவுகளை தடுத்து இருந்தன. 

ஒரு வேளை தாசண்ணைவை சிறியரும் பொபியும் சுட்டாத நேரத்தில் புலிகள் டெலோமீது 
கை வைத்திருந்தால் நிலைமை சற்று வித்தியாசமாகவே இருந்திருக்கும். யாழ்பாணத்தை பொறுத்தவரை 
டேலோவில் தாக்குதல் குழு என்று ஏதும் இருக்கவில்லை. நாங்களே கல்வியங்காட்டு காடை கோஸ்டி என்றுதான் 
மறைமுகமாக தாசண்ணாவை சுடும்வரை கூறிவந்தோம் பின்பு நேரடியாகவே கூற தொடங்கி விட்டோம். 
அதுவே புலிகளுக்கு இலகுவாகிபோனது.

பின்பும் புளொட் ஈப்பியுடன் இணைந்து திரும்பி வந்து ஈப்பி முகாம்களில் தங்கி இருந்து 
ஈப்பியும் புளொட்டும் புலிகளை அழிக்க திட்டம் போட்டுகொண்டு இருந்தார்கள்.
வீணாக அழிவு வரும் என்று சில ஈப்பி காரர்கள்தான் (பயத்திலுமாக இருக்கலாம்) புலிகளிடம் போட்டு 
கொடுத்திருந்தார்கள்.  புலிகள் ஈப்பியை தடை செய்யும் முன்னர் ஈப்பியும் புளொட்டும் முந்தியிருந்தால் ?
அது பாரிய அழிவாகத்தான் இருந்து இருக்கும்.

போகும்போது தமிழ் ஈழ விடுதலை என்று போனாலும் ....
பின்பு தளபதிகளை தொழுது அவர்களின் பால் ஏமாந்தவர்கள்தான் அதிகம். 
பெரியோரை மதிக்கவேண்டும் என்று சின்னவயதில் சொல்லி தந்ததன் பிரதி பலனோ என்னமோ.

கருணாவை காசு திருடியதட்கு புலிகள் விலத்தியபோது ....
கிழக்கு மாகாண புலிகள் கொள்கையையே தூக்கி எறிந்தார்கள்.
இதுதான் எல்லா இயக்கத்திலும் நடந்தது.
(டெலோ தாஸ் குறுப் மட்டும் விதி விலக்கு. தாஸ்அண்ணா தான் இறந்து மற்றவர்களை காப்பாற்றினார். ஈரோஸ்சும் கொண்ட கொள்கையுடன் 
எதோ ஒரு வடிவில் இறுதிவரை இருந்துவிட்டார்கள்) 

போராட போன பெரும்பானமையினர் ஒரு சண்டையில் சிங்களவன் சுட்டு சாவது என்பதை 
பெருமையாகத்தான் எண்ணினார்கள். சொந்த துப்பாக்கிகளே குறிவைத்தது பெருத்த அவமானம் 
அப்படி ஒரு அவமான சாவை யாரும் விரும்பி இருக்கவில்லை. 

 

புலிகளை தவிர வேறு எந்த இயக்கத்திற்கும் மற்ற இயக்கங்களை அழிப்பது என்ற சிந்தனையே இருக்கவில்லை . எழுதும் போது ஏதாவது ஆதாரம் வைத்தால் நாங்களும் நம்பலாம் இல்லாவிட்டால் இந்த பந்தி பந்தியான எழுத்துகளை கதை கதையாம் பகுதிக்கு தான் வைக்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தவிர வேறு எந்த இயக்கத்திற்கும் மற்ற இயக்கங்களை அழிப்பது என்ற சிந்தனையே இருக்கவில்லை . எழுதும் போது ஏதாவது ஆதாரம் வைத்தால் நாங்களும் நம்பலாம் இல்லாவிட்டால் இந்த பந்தி பந்தியான எழுத்துகளை கதை கதையாம் பகுதிக்கு தான் வைக்கவேண்டும் .

மன்னிக்கணும் அண்ணே ....!
என்ன செய்ய நாங்கள் குண்டு சத்தம் இராணுவ கெடுபிடி என்று ஈழத்தில் இருந்ததால் 
ஆழ்ந்த உறக்கத்திற்கு போக முடியவில்லை.

முன்பு ஒன்றாக இருந்து ....மனகசப்பு அது இது என்று வந்து 
தனி நபர்களாக அடிபட்டு திரிந்தார்கள்.

தனி தனி பெயரில் கட்டமைப்பாக இயக்கங்களாக தொடங்கி 
இந்தியாவில் பயிற்சி முகாம். என்றெல்லாம் தொடங்கியபின்.

சுதுமலையில் தாட்டு பிள்ளையார் சுழி வைத்ததே அண்ணர்தான்.
இப்போ உண்மையை எழுத சொன்னால் நாங்கள் எங்கு போறது ?

இன்னொரு திரியில் ஈப்பிடிப்பி தினமுரசில் வந்த 
அல்பேட் துரையப்பா முதல் காமினி வரை என்று ஒரு தொடரை 
பெருமாள் இணைத்துக்கொண்டு இருக்கிறார்.

உங்களுக்கு மனசஞ்சலம் வரும் என்று நாங்கள் எழுதாமல் விடலாம் ....
உலகில் எல்லோரும் விட வேண்டுமே ? 

(சிரியர் தாசண்ணாவை ஏன் சுட்டார் என்பது தெரியுமா ?. பொற்கோவிலில் எடுத்த ஆயுதங்களை இந்தியா டெலோவுக்கு கொடுத்தது 
அங்கிருந்து மன்னார் கரைக்கு வரும்போதே புலிகள் 3 மாதம் முன்பு ஆட்களுடன் கொண்டு சென்றுவிட்டார்கள். ஆயுதம் மட்டுமல்ல செய்திகளும் கூட.
உங்களுக்கு கசக்கும்தான் .... புலிகள் பெரும்தன்மையோடு தமது பலம் தெரிந்ததினால் பொறுத்துக்கொண்டு இருந்தார்கள்) 

மன்னிக்கவும் கதை கதை பகுதிக்கு அல்ல சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு தான் மாற்றவேண்டும் .

அற்புதன் கொலை செயப்பட்டு பதினந்து வருடங்கள் ஆகப்போகுது இப்பதான் பலர் தொடர் வாசிக்கினம் போல .

ஏழு எட்டு பேரிடம் கதை கேட்டு பலதும் பத்தும் வாசித்து நல்லா சாம்பாறு வைக்கின்றீர்கள் .

ஏதாவது ஒரு விடயத்தை நம்பமாக உண்மையாக எழுத முடிந்தால் எழுதுங்கள் பார்க்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

* மருது அது சுழிபுரத்தில் நடந்தது. 

சிலருக்கு தாயகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நாட்டில் இருந்தால் தானே.

தானே பத்து பேரிடம் கதை கேட்டு கதை அளந்து கொண்டு திரியும் போது கஸ்டம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

 

சபா நாவலன் ,டேவிட் ஐயா போன்றவர்கள் பிழையான தலைமையையும் கருணா ,பிள்ளையான் போன்றவர்கள் சரியான தலைமையும் தேர்ந்து எடுத்திருக்கின்றார்கள் போல .:cool:

TELO இன் என்ன கொள்கையை நம்பி சபா.நாவலன் போனார்? மற்றவர்களையும் சேர்த்துவிட்டவர்??

அவர்களின் அரசியல் கொள்கைகளை வகுக்கப் போயிருப்பார் என்றுதான் நினைக்கின்றேன்!

டேவிட் ஐயா புளட்டின் கொள்கைகளை விட சந்ததியாரின் வசீகரத்தால் போயிருப்பார்.

 

கருணாவையும், பிள்ளையானையும் நான் இப்போதும் புலிகளாகத்தான் பார்க்கின்றேன்<_<

 

அரசியல் விழிப்புணர்பு என்பது மட்டு மட்டாகத்தான் இருந்தது.
சிங்கள காடை இராணுவத்தின் கொடூரங்களின் மேல் வந்த கோபம் மட்டுமே அனைவரையும் தூக்கி சென்றது என்பது 
என்னுடைய தனிபட்ட எண்ணமும் அனுபவமும் கூட.

அரசியல் விழிப்புணர்வு என்று அரசியலை நன்குணர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. தமிழர்களுக்கு விடுதலைவேண்டும் என்று சிந்தனையுடன் அது பற்றிய உரையாடல்களையும், செயற்பாடுகளையும் இளவயதில் மேற்கொண்டார்கள். அதே வயதுகளில் உள்ள இன்றைய இளைஞர்கள் அரசியலில் அக்கறை குறைந்து காணப்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களுக்கு அரசியல் அக்கறை வந்துவிடக் கூடாது என்பதற்காக அரசு மிகக் கவனமாக செயற்படுகிறது. எத்தனை இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து தமது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்கள்.இவர்கள் எந்த இயக்கத்துடனும் தொடர்பற்றவர்கள். இளைஞர் என்ற ஒரே காரணத்துக்காக பல தடவை சிறை பிடிக்கப்பட்டு மீளுவதற்காக சேர்த்த செல்வங்களை எல்லாம் இழந்து குடும்பம் என்ற கட்டமைப்பு சிதறி மனநோயாளிகளாக அன்றாட பாதுகாப்புக்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் ஓர் சிலரின் தப்பான தேவைகளுக்குப் பயன் படுத்தப்பட்டு  எந்த வித சுதந்திரமின்றி வாயில்லாப் பூச்சிகளாக நடமாடுகிறார்கள். இளைஞர்கள் தங்கள் வயதுக்குரிய மிடுக்கை இழந்து கோழைகளாக அல்லது முட்டாள்களாக வாழவேண்டிய இப்போதய கட்டாயத்தை  நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் கதை கதை பகுதிக்கு அல்ல சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு தான் மாற்றவேண்டும் .

அற்புதன் கொலை செயப்பட்டு பதினந்து வருடங்கள் ஆகப்போகுது இப்பதான் பலர் தொடர் வாசிக்கினம் போல .

ஏழு எட்டு பேரிடம் கதை கேட்டு பலதும் பத்தும் வாசித்து நல்லா சாம்பாறு வைக்கின்றீர்கள் .

ஏதாவது ஒரு விடயத்தை நம்பமாக உண்மையாக எழுத முடிந்தால் எழுதுங்கள் பார்க்கலாம் .

ஐயா!  நீங்கள் சிரிக்கவும், சிறக்கவும் நாங்கள் இங்கை கதை எழுத வரவில்லை. உங்களுக்கு சிரிப்பும், சிறப்பும் குறைவாய் இருக்கலாம். நாம் குடும்ப உறவுகளை இழந்து ஒருவருக்கொருவர் ஆற  முடியாத மனப்புண்களை சுமந்து மருந்து தேடி அலைகிறோம். நம்புவதும்,விடுவதும் உங்கள் இஸ்டம். நாங்கள் உங்களை வர்ப்புறுத்தபோவதில்லை. அந்த அனுபவம் உள்ளவர்கள் நிறையப் பேர் இங்கு இருக்கிறார்கள். உண்மை புரியாமல் வெறுப்பவர்களும் உண்டு. எனக்கு தெரிந்த அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேனே ஒழிய, உங்களுக்காகவல்ல. ஆதாரம் என்று எதைக் கேட்கிறீர்கள்? இறந்தவனை எழுப்ப முடியுமா? இந்தியன் ஆமியை கூப்பிட முடியுமா? அப்படி என்றால் இவை நடைபெற முன்னாடியே வெளியேறி விட்டீர்களா? எதையும் அனுபவித்தால்த்தான் விளங்கும், சொல்லி விளங்காது. எங்கள் வேதனை உங்களுக்கு சிரிப்பு. இருவேறு உலகத்தில் இருக்கிறோம் நாம். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு கருத்தும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.