Jump to content

நான் விதானை மாமரம்


arjun

Recommended Posts

நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது எனது காணியில் பாதையை அடைத்துக்கொண்டு நின்ற மாமரத்தை தறிக்கவேண்டியிருந்தது. பெருமரங்கள் தறிப்பதற்கு முதல் விதானையிடம் அனுமதி பெறவேண்டும் என்றார்கள்....அதனால் விதானையாரின் அலுவலகம்? சென்றேன். அவரது அலுவலகம் ஒரு பழையவீட்டின் முன் விறாந்தையில் ஒரு அறையுடன் ஒதுக்கப்பட்டிருந்தது....வீட்டுவிறாந்தையில் ஒரு மேசையும் அதன் முன் ஒரு வாங்கும் போடப்பட்டிருந்தது. அவர் ஒன்று விட்டு ஒருநாள் வேலைக்கு வருவார் என்று போர்ட்டில் எழுதப்பட்டிருந்தது....எனது நல்லகாலம் நான் போனபோது onduty யில் இருந்தார்....ஆனால் பெரும்பாலும் அவரை தேத்தண்ணி கடைகளில்தான் காணமுடியும் என்றார்கள்.....வேலை நேரத்திலும் அடிக்கடி வெளியேபோய் நினைத்த நேரத்திற்கு வருவாராம்....

நான் போனது ஒருமழைநாளில்......விதானையார் சிவனே என்று வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்....நானும் பக்கத்துவீட்டு பொண்ணும் போனபோது.....மேலும் கீழும் பார்த்தபடி என்னவேணும் என்றுகேட்டார்....நான் விடயத்தை சொன்னேன்....இருங்கோ என்றார்....உட்கார்ந்தால் மேலே கூரை ஒழுகி தண்ணி விழுந்து தெறித்துக்கொண்டிருந்தது, கீழே சிவப்பு அட்டைகள் இலங்கை C.T.B. பஸ் போல் குறுகும் மறுக்குமாக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன......நான் காலை சிறிது உயர்திப்பிடித்தபடி அவர் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தேன்.....அவர் கேள்வி கேட்கும்போது முகத்தை ஒரு விசனமாகவே வைத்திருந்தார் (அவர் இயல்பு அப்படிதான் என்பதை ஓரிரு நிமிடங்களில் அறிந்துகொண்டேன்).....சில கேள்விகள் எரிச்சலை தந்தது......நீங்கள் வேதக்காரியா, ஏன் போட்டுவைக்கவில்லை, கலியாணம் பண்ணிவிட்டீர்களா என.....அதற்கு நான் “வேதக்காரி இல்லை, போட்டு வைத்தால் வியர்வையில் கரைந்துவிடும், எனக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றேன்....உடனே கூடவந்த பெண்ணிடம் நீங்கள் யார் எங்கு இருக்கிறீர்கள், திருமணம் முடித்துவிட்டீர்களா எனக்கேட்டார்....

எல்லாவற்றிற்கும் பதில் அளித்தபின்...அப்ப மாமரம் என்ன சைஸ் இருக்கும் எனக்கேட்டார்.... வாய்க்குள் வந்த பதிலை விட்டுவிட்டு... அவர் வீட்டுக்கு முன் இருந்த மாமரத்தை காட்டி..அந்த மாமர சைஸ் இருக்கும் என்றேன்...பின் உயரம் ஒரு பனையடி இருக்குமா என்றார்....பனைமரம் அறுபதடி வளரும் மாமரம் அந்தளவு வளராதே என்றுவிட்டு....மீண்டும் அந்த மாமரத்தை காட்டி அதைவிட ஒரு பத்து இருபது அடி கூட இருக்கும் என்றேன். எல்லாவற்றையும் எழுதிவிட்டு.. மரத்தை பார்த்துவிட்டு தான் அனுமதி தரமுடியும் என்றார்....இதற்கிடையில் ஒரு வயதுபோன அம்மா ஒருவர் வந்து தனது காணிப்பிரச்சனையை முறையிட்டுக்கொண்டிருந்தார்....


நான் அந்த அம்மாவின் காலையே பார்த்துக்கொண்டிருந்தேன் காரணம் அட்டை காலில் ஏறிவிடுமோ என்ற பயம்....அந்த பெண்மணி விதானையாரை சராமாரியாக திட்டதொடங்கியிருந்தார்.......வந்த பெண்மணியின் காணிப்பாதையை அடுத்தவீடுகாறருக்கு விதானையார் அனுமதி அளித்துவிட்டாரம்.....அவர் விதானையாரை பேசும்போது “விதானயார் நீங்கள் வேலைக்கு புதுசு உங்களுக்கு சட்டம் கிட்டம் ஒண்டும் சரியா தெரியாது சும்மா தேவையில்லா வேலைகள் பாக்கதையுங்கோ, என்ன செய்யிறதெண்டாலும் முதல்ல உறுதிய பார்த்து அதன்படி செய்யுங்கோ” என்று. அத்துடன் விதானையார் சரண்டர்....”சரியம்மா கத்தாதையுங்கோ” நான் பாக்கிறன் நீங்கள் போங்கோ என்று அவரை அனுப்பிவிட்டு என்னுடைய காணிக்கு கிளம்பி வந்தார், வந்தவர் மாமரத்தை மேலும் கீழும் பார்த்துவிட்டு....அனுமதி தாறன் ஆனால் நீங்கள் காணி விக்கககூடாது, அப்படி விக்கிறதென்றால் sign பண்ணமாட்டன் என்று ஒரு குண்டை தூக்கிபோட்டார்....நான் ஒருகணம் சமாளித்துவிட்டு...ஆ......நான் கடைசிவரையும் விக்க மாட்டேன், அப்படி ஒரு எண்ணமே எனக்கில்லை என்று ஒரு பொய்யை சொல்லி...மனதுக்குள் signஐ போடுமான் என்று வேண்டிக்கொண்டேன். ஒருவழியாக மோட்டார் seatன் மேல்வைத்து sign பண்ணி தந்துவிட்டு..மேலும் நல்லூரில் இருக்கும் பிரதேச சபையிடம் அனுமதி பெறவேண்டும் என்றார், அட கடவுளே என்றுவிட்டு உடனேயே ஒரு ஆட்டோ பிடித்து பிரதேச சபைக்குசென்று கொடுத்தால்...அங்கு D.O. sign பண்ணவேண்டுமாம்.....

அதற்குமுன் D.O. ஒருவரை அனுப்பி மரத்தை வெட்டுவது சரியா இல்லையா என செக்பண்ணி...எல்லாம் ஓகே என்று சொன்னால் sign பண்ணுவார்....அதற்கு ஒரு இரண்டு, மூன்று நாட்களாகும் என்றார்கள்...நானும் பெருமூச்சுவிட்டபடி வெளியில் வந்தேன்..........ஒவ்வொருநாளும் நானும் விடாமல் போன் அடிப்பேன் அவர்களும் விதவிதமான கரணங்கள் கூறுவார்கள் ஒருநாளைக்கு D.O. “மீட்டிங், off, விஜயதசமி என.... ஆனால் சரியாக எட்டு நாட்களின் பின்தான் மரம்வெட்ட அனுமதி தந்தார்கள் அதுவும் தெரிந்தவர் மூலம் வேண்டிகொண்டதானால்.
அதன்பின் மரத்தை வெட்டி வெளியில் எடுத்து செல்வதற்கு roadpermit எடுக்கவேண்டும் என்றார்கள் உடனேயே 3rd cross street இல் (சரியாக ஞாபகம் இல்லை ) இருக்கும் இன்னுமொரு பிரதேச சபைக்கு சென்று அனுமதி கேட்டபோது......மாமரத்துக்கு அனுமதி தேவையில்லை என்றுகூறி ஒரு வர்த்தமானியை தூக்கி கையில் தந்துவிட்டார்கள்... அதுமுழுக்க சிங்களத்தில் பிரிண்ட் பண்ணபட்டு இருந்தது. அதில்அனுமதி எடுக்கதேவையில்லாத மரங்களுள் மாமரமும் அடக்கம்(சிங்களம் தட்டு தடுமாறி கொஞ்சம் வாசிப்பேன்). ......இவ்வளவு நாளும் அநியாயமாக போச்சே என்ற கவலை......விதானை, பிரதேச சபை ஒருவருக்குமே இதுபற்றி தெரியாதது ஆச்சரியமாக இருந்தது. 


.........எல்லாம் முடிந்து மாமரம் தறிக்கவெளிக்கிட்டால் ஒரே அடைமழை....அப்படி இருந்தும்...மழை விட்டு இடை வெளி வரும்போது தறிக்கத்தொடங்கிவிட்டார்கள்....எனக்கோ மனது கனத்து பாரமாக இருந்தது......நாங்கள் ஏறி விளையாடிய, ஊஞ்சல்கட்டி ஆடியமரம், நன்றாகக் காய்த்த மரம், ருசியான அம்பலவி மாம்பழம், தம்பி ஏறி மாங்காய் பிடுங்கி எறிய நான் சாக்கைவைத்து கேட்ச் பிடிப்பேன்...பிற்காலத்தில் அக்காவின் மகன் மாமரபுட்டியில் ஏறி நின்று பக்கத்து அறையில் தூங்கும் என்னை “ஆண்டே....ஆண்டே” என்று கூப்பிட்டு நித்ரையை குழப்புவார்.... இன்றும் கூட ஒரு சாக்கு முட்ட காய்த்து நின்றது.....ஆனால் நோய்வந்த முதியவர் போல்......நீண்ட கால பராமரிப்பில்லாமல் ஏராளமான குருவிச்சை பிடித்து நோய்வாய்பட்டது போல் தோற்றமளித்தது....இந்த மரத்தை வளர்க்க அம்மம்மா எவ்வளவு பாடுபட்டிருப்பார், இதுவளர எவ்வளவு காலம் எடுத்திருக்கும்..........”BACK TO THE FUTURE” படம் போல் காலச்சக்கரதில் ஏறி முன்னைய வாழ்கை வாழ்ந்து விட்டு வந்தால் எப்படி இருக்கும்.... எல்லா நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துபோயின...மனம் கனத்து வெறுமையாகி போக கடைசியில் அடி மாமரத்தை வாள்கொண்டு அறுக்க....பார்க்க...சகிக்காமல் பின்புறம் போய்விட்டேன்.

 

 

- ஊருக்கு போன மனைவியின் பதிவு .

12239692_10153242744188354_2456049653390

12243268_10153242744218354_7210924235911

12227037_10153242744223354_2782363774084

12239595_10153242744473354_5234825025988

12235021_10153242744548354_7336708890771

12234987_10153242744698354_2761280456137

12193620_10153242744828354_2126341618085

12196242_10153242744928354_9037685040411

12234956_10153242744943354_9108893800825

12227740_10153242745118354_6323039294056

12246898_10153242745163354_7446839416533

12246830_10153242745568354_3820899635987

12196367_10153242745763354_7437458698755

12239937_10153242745953354_7933376167256

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அர்ஜுன் அண்ணா! :) தொடர்ந்து பகிருங்கள் வாசிக்க ஆர்வம்!! 

உந்த அட்டையின் படத்தை எடுத்துவிடுங்கள் தயவு செய்து.... இங்கால் பக்கம் வர முடியாமல் இருக்கு :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமந்த மாமரம்..

Link to comment
Share on other sites

25 minutes ago, arjun said:

- ஊருக்கு போன மனைவியின் பதிவு .

அர்ஜுன் உங்கள் மனைவியின் எழுத்து நடை நன்றாகவுள்ளது. ஊக்கப்படுத்துங்கள் மேலும் எழுத. பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரமானாலும் ஆயுள் முடிந்தால் கிளம்ப வேண்டியதுதான்....! பார்க்கப் பதறுது...!!

பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி அர்ஜுன்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு படங்களை பார்க்கும் போது, பாடசாலையில் படிக்கும் போது பெடியலுடன் இந்த மாமரதிலும் காய் பறித்த மாதிரி கிடக்கு .....

பசியாற்றிய மரம் வீழ்திருப்பதை பார்க்க மனதிற்கு கஸ்டமாக இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது அர்ஜுன்.. உங்கட துணைவியாரிட்டைச் சொல்லுங்கோ... அருமையான எழுத்து நடை...அவவுக்குக் கை வந்துள்ளது என்று!

அந்தப் பச்சை உங்களுக்கில்லை! அது அவவுக்குத் தான்!

அவவும் தோட்டத்திலிருந்து.. முற்றத்துக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்! அழைத்துக் கொண்டு வாருங்கள்!

உங்கள் அம்மாவின் கவிதை நடையும் நினைவுக்கு வருகின்றது!

காய்க்கா விட்டால்.. மாமரத்துக்கு மட்டுமில்லை...மனித மரங்களுக்கும் இது தான் கதி..!

இணைப்புக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அருமந்த மாமரம்..

 

13 hours ago, suvy said:

மரமானாலும் ஆயுள் முடிந்தால் கிளம்ப வேண்டியதுதான்....! பார்க்கப் பதறுது...!!

பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி அர்ஜுன்...!!!

 

37 minutes ago, உடையார் said:

வீட்டு படங்களை பார்க்கும் போது, பாடசாலையில் படிக்கும் போது பெடியலுடன் இந்த மாமரதிலும் காய் பறித்த மாதிரி கிடக்கு .....

பசியாற்றிய மரம் வீழ்திருப்பதை பார்க்க மனதிற்கு கஸ்டமாக இருக்கு

அதே... உணர்வு தான் எனக்கும் ஏற்பட்டது.
இந்த மாமரத்துக்கு, 70 - 80 வயது இருக்கும் என்று நினைக்கின்றேன்.
எத்தனை தலைமுறையை கண்டது... வீழ்ந்து  கிடப்பதை பார்க்க, மனதிற்கு சங்கடமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

இப்படி வளர்ந்த பலன் தந்த மாமரத்தை வெட்டுவது பஞ்சமா பாதகம் தான் ஆனால் வெட்டவேண்டிய கட்டாயம் .

ஒரு வளவிற்குள் மனைவிக்கும் அவரது இரு சகோதரிகளுக்கும் காணிகள் இருந்தது .அவர்கள் இருவரும் தமது காணிகளை விற்றுவிட்டார்கள் .மனைவியுன் காணியின் பாதைக்கு குறுக்கே தான் அந்த மாமரம் நிற்கின்றது .எனவே வெட்ட வேண்டிய கட்டாயம் என்று சொன்னார் .

புதிததாக காணி வாங்கியவர்கள் முன்பின் தெரியாதவர்கள் எனவே இடையில் வேலியோ மதிலோ போட வேண்டிய நிலை .அந்த பகுளறுபடிகள் பற்றியும் மனைவி எழுதினால் பதிகின்றேன் .

பின்னோட்டம் இட்டவர்களுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாமரம் பெயருக்கேற்ற மாதிரி அந்தளவு உயரமாக இருக்கின்றதே.

உந்த விதானைமார் வெளி நாட்டுக்காரர் என்றால் அடிக்கிற நடப்பைப் பாக்க வேணும்.....
தாங்கள் தான் அந்தக் குறிச்சிக்கு அரசன் என்ற நினைப்பு அவர்களுக்கு
பகிர்விற்கு நன்றி அர்ஜுன் அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பை தூண்டும் இயல்பான எழுத்து...
விதானையாரின் அதிகப் பிரசங்கித்தனம், சபலம், இலங்கையில் இருக்கும் சோம்பேறித்தனமான அரசாங்க இயந்திரம், பொறுப்புக் கூறல் அற்ற ஊழியர் இவர்களை  நன்கு அவதானித்து எழுதியிருக்கிறார்.
பாவம் அந்த மாமரம்... எவ்வளவு பெரிய மரம்.... ஒரு குடும்பத்தின், அயல் 'அட்டைகளின்' எல்லா இன்ப துன்பங்களையும் கம்பீரமாக நின்று அவதானித்து வளர்ந்த மரம் போல தெரிகிறது. 
இந்த ஒரு மரத்தை வேட்டியதற்கு பிராசித்தமாய் இன்னும் 10 மரங்களை வாங்கி நடச்சொல்லி அக்காவுக்கு ஆணை பிறப்பிக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுண்,

நீங்கள் உங்களது காணியை விக்கவேண்டிய தேவை என்ன? அதை வித்துக்காசாக்கி எதைச் சாதிக்கப்போகுறீர்கள்?

கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கள். சுமார் ஏழு வருடத்துகுமுதல் நானும் எனது குடும்பமும் யாழ்ப்பாணம் போயிருந்தோம், அப்போது பிலாப்பழ சீசன் எனது சின்ன மகன் சாப்பிட்ட பிலாப்பழச் சுழையின் விதை கொஞ்சம் முளை விட்டிருந்தது, அதைக்கொண்டுபோய் மதில்கரையில தாட்டுவிட்டு அம்மம்மா இது முளைத்தால் தண்ணிவிடுங்கள் எனக்கூறிவிட்டு மீண்டும் புலம்பெயர்தேசம் பயணம், அது வளர்ந்து மரமாகி போனவருசம் காய்க்ககத் தொடங்கிவிட்டது 

கவிஞர் ஜெயபாலன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார் என் பேரனும் பூட்டனும் பகிர்ந்துண்ண யார் பழமரம் வைப்பார்கள் என எனது மகன் தனது பேரனுக்காய்ப் பழமரம் உண்டாக்கியுள்ளான்

இந்த உலகமும் அதன் சுற்றுச்சூழலும் வளங்களும் எங்களது சொந்தமில்லை எமது அடுத்த சந்ததிக்கானதுஅதைப்பாதுகாத்து அவர்களது கைகளில் கையளித்ததும் அது அவர்களுக்கு உரியதானதாக இருக்காது அவர்களது அடுத்த சந்ததிக்கானது.

எனிலும் மிகவும் அருமையான பதிவு, இயல்பாக எழுதுகிறார் ஆக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் கூட மரத்தைத் தறித்ததை ஏற்றுக்கொள முடியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் ......கழுவாத எல்லோரும் கழுவுபவர்களின் பார்வையில் அந்தகர்களே. 
    • இதைத் தான் எனக்கும் சொன்னார்கள்.
    • மலைப்பாம்பு, தான்  கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
    • ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ .  ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.  ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.  “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார்.  பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?  பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?  பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.  கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......  கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : ஆம், ஒருவகையில்   1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.