Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 
[Saturday 2015-12-05 07:00]

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம். இனியும் பொறுக்க முடியாது.  அரசியல் கைதிகளின்  விடுதலை உள்ளிட்ட, எமக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முன்னாள் கடற்படைத் தளபதி கரண்ணாகொட "கடந்த காலங்களில் இரகசிய முகாம்கள் இயங்கியதாக, கூறுகிறார். ஆனால் அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறான இரகசிய முகாம்கள் இயங்கவில்லையென கூறுகிறார். கடந்த காலத்தில் படையினருக்கு கட்டளையிடும் அதிகாரியொருவர் இரகசிய முகாம் இருப்பதாக கூறும் போது அமைச்சர் இல்லையென்கிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?

பூஸா தடுப்பு முகாம் விளக்கமறியலாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பூஸா தடுப்பு முகாம் உட்பட பயங்கரவாத தடுப்பு முகாம்களிலும் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆட்சிக்காலத்தில் தான் இரகசிய முகாம்கள் இயங்கின. பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எமது ஆட்சியில் இவ்வாறான தடுப்பு முகாம்கள், குறுகிய முகாம்கள் எதுவும் இல்லையென புதிய அரசு கூறுகின்றது. அப்படியென்றால் அரசு அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் 07 ஆம் திகதிக்குள் விடுதலை செய்து விடுவோம் என அரசு எமக்கு உறுதி மொழி வழங்கியது. கடும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் மொத்தம் 217 பேர் உள்ளனர். அவர்களில் 39 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். சிறு சிறு குற்றங்களை செய்த 21 பேர் புனர்வாழ்வு நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என உறுதி வழங்கப்பட்டது. ஆனால் அதில் ஒருவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று 150 மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 மற்றும் 20 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நீதிமன்றம் அவசியமற்றது. இதனை கைவிட வேண்டும். மாவட்ட அபிவிருத்திகளுக்கு அமைக்கப்படும் சபைகளுக்கு எமது எம்.பி.க்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியும் எமக்கு வழங்கப்பட்டது.ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை. 6 வாக்குகளால் வெற்றி பெற்ற ஐ.தே.க.எம்.பி.க்களுக்கே உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அநீதியான செயற்பாடாகும்.

கடந்த ஆட்சியாளர்கள் எமக்கு உறுதிமொழிகளையும் வழங்கவும் இல்லை, எதனையும் நிறைவேற்றவும் இல்லை. ஆனால் ஐ.தே.க. வின் புதிய ஆட்சியில் எமக்கும் தமிழ் மக்களுக்கும் அனைத்து உறுதி மொழிகளும் வழங்கப்பட்டுள்ளது. நாம் அதன் மீது நம்பிக்கை வைத்து அரசின் வரவு-செலவுத் திட்டத்திற்கும் ஆதரவு வழங்கினோம். கடந்த காலங்களில் ஐ.தே.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தற்போது அந்நிலைப்பாட்டிலிருந்து மாறியிருப்பார்கள் என நினைத்து ஆதரித்தோம். ஆனால் இன்றும் ஐ.தே.கட்சியின் பழைய கொள்கைகள் மாறவில்லையென்றே தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் உறுதிமொழிகளை வழங்கவில்லை. ஆனால் நீங்கள் உறுதி மொழிகளை வழங்குகின்றீர்கள். ஆனால் அதனை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றுகின்றீர்கள். அனைத்து வாக்குறுதிகளும் பொய்யான வாக்குறுதிகளாகவே உள்ளன.

ஐ.தே.கட்சி கடந்த காலங்களில் மேற்கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மக்களிடமிருந்து ஓரம்கட்டி இடைவெளியை ஏற்படுத்தும் நாடகத்தை அரங்கேற்றுவதாகவே புலப்படுகிறது. எமது மக்கள், அரசியல் கைதிகள் எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள். வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தீர்கள். இதனால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன எதை சாதித்தீர்கள் எனக் கேட்கின்றனர்.

இரண்டு கூட்டமைப்பு எம்.பி.க்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் எமக்கு தமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள். தமிழ் அரசியல் கைதிகளை இனி எந்த முகத்தோடு நாம் போய் சந்திக்க முடியும். அவர்களை விடுவிப்போம் என்றோம். நீங்களும் அதற்கு உறுதிமொழி வழங்கினீர்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. எனவே இனியும் நம்பி நம்பி ஏமாற முடியாது பொறுமைக்கும் எல்லையுண்டு. தற்போது அந்த எல்லை தாண்டிவிட்டது.

இன்று கிழக்கை விட வடக்கில் பெருமளவிலான இராணுவத்தினர் உள்ளனர். இன்று யுத்தம் இல்லை. எனவே பெருமளவில் வடக்கிற்கு இராணுவம் அவசியமில்லை. எனவே 40–45 வயதுக்கு மேற்பட்ட இராணுவத்தினரை பணியிலிருந்து விடுவித்து அவர்கள் சிவில் சமூகத்துடன் இணைந்து வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும். படையினரை பராமரிப்பதற்கு செலவழிப்பதற்கான அதிக பணம் இதனால் மீதமாகும். படையினரும் இதனை விரும்புவார்கள். அரசிடம் இவ்வாறான திட்டம் எதனையும் மேற் கொள்ளும் நிலைப்பாடு உள்ளதா?

அண்மையில் நீதியமைச்சில் சிற்றூழியர்கள் 95 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் இவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ் பேசுபவர். நீதித்துறையில் வட கிழக்கில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆனால் ஒருவர் மட்டுமே தமிழ் பேசுபவர் . இது அநீதியானது. இதேபோன்று உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் உட்பட மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் பேசும் நீதிபதிகளின் குறைபாடுகள் நிலவுகின்றன. எனவே தமிழ் பேசும் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மொழி பெயர்ப்பாளர்கள் அதிகளவில் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=146293&category=TamilNews&language=tamil

  • Replies 107
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் சகல‌ தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லொரும் பொறுமையின் எல்லைக்குத்தான் வருவினம்....அதுதான் அவ‌ர்களால் இலகுவாக செய்யக்கூடிய விடயம் ......சிறிலங்காவில்....

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் எழுந்து தூக்கக் கலக்கத்துடன் யாழைத்திறந்தேன். அதில் பொல்லனறுவையின் எல்லைக்கே வந்துவிட்டோம் என்பதாக ஒரு தலையங்கம் தெரிந்தது. யார் இந்த வீரவசனம் பேசியது என்றுபார்த்தால் அது நம்ம சுமந்திரன் தம்பி.... தூக்கக் கலக்கம் குறையத்தான் துலங்கியது, அது பொலனறுவை இல்லை பொறுமையின் எல்லை என்று.. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

ரொம்பத் தூங்கினா 'ஒன்னு', 'ரெண்டா'தான் தெரியும்..! vil-paix.gif

  • கருத்துக்கள உறவுகள்

இங்க ரொம்ப பேரு 'ஒன்னு', 'ரெண்டா' தெரிஞ்ச பிற்பாடுதான் தூங்கவே போவாங்க.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 

இந்தநிலைதான் வரும்  என்பது தெரிந்தது தான்

சீற்றம் எதற்கு??

அதெல்லாம் செய்து பார்த்தாச்சு??

உறுதி கொடுத்தவ சிங்களம் மட்டுமா??

மற்றவர்களையும் நாடி பிடியுங்கள்....

முடிவில் ஒரு புள்ளியில் சந்திப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Surveyor said:

எப்படித்தான் பொருத்தமான பின்னூட்டத்தை உங்களால் தேடிக் கண்டுபிடிக்க முடிகிறது சேவியர். அருமை!!!:)

3 hours ago, ராசவன்னியன் said:

ரொம்பத் தூங்கினா 'ஒன்னு', 'ரெண்டா'தான் தெரியும்..! vil-paix.gif

உண்மைதான் வன்னியரே! ஆனாலும் எனக்கு ஒன்றே ஒன்றுதான் என்று பிரமனே எழுதிவிட்டான். என் உடம்பிலும் ஒரே ஒரு மச்சத்தையே பதித்துள்ளான்.tw_heart::)  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Surveyor said:

சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னாகிட்டுது இதுக்கு காரணம் நம்ம புலம்பெயர் மாற்று கருத்து மாணிக்கங்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசியில் இந்த நிலைமை சும்முக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் எல்லை எதுவரை என்று சிங்களவர்களுக்குத் தெரியும்.
பாவம் ஒரு சில தமிழர்கள்.... அவர்கள் தான் சுமந்திரன் அவர்களின் எல்லை எதுவரையென்று  தெரியாமல் அவருக்குப் பின்னாலை அலைகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அறுக்கை களைப்பார்த்து நாங்களும் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டோம் .

  • கருத்துக்கள உறவுகள்

எழுபதுகளில் ஓடிய ரீல் மீண்டும் ஓடுகிறது.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை யாரை பதவியில் இருந்து இறக்கபோராரோ  கைபுள்ளை தெரியவில்லை அனேகமா மைத்ரி யாக இருக்கும் தல அமரிக்க ஆக்களுடன் அவ்வளவு செல்வாக்கு தல ராசா தந்திரம் அப்படி .

..நான் இனி சுமந்திரனை ... "பண்பற்ற வசனமான பினவாசல்" ... என்று யாழில் விளிக்க மாட்டேன் .. யாழ் நிர்வாகத்திற்கு உறுதி கூறுகிறேன் ... இதை சுமந்திரன் தொடர்பாக ஏதாவது, நான் பதியும்போது, இவ்வுறுதி மொழியை திரும்ப பதிவிடுகிறேன்.

ஆங்....

... உன்னைச் சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லொ குற்றமில்லை! ........ காலம் செய்த கோலம் ..

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

சுமந்திரனின் எல்லை எதுவரை என்று சிங்களவர்களுக்குத் தெரியும்.
பாவம் ஒரு சில தமிழர்கள்.... அவர்கள் தான் சுமந்திரன் அவர்களின் எல்லை எதுவரையென்று  தெரியாமல் அவருக்குப் பின்னாலை அலைகின்றனர்.

உண்மை அய்யா, அந்த எல்லை முல்லைத் தீவின் கிழக்கு கடற்கரையாக இருக்காது என்பது திண்ணம். சிறையில் இருக்கும் கைதிகள் சும்மா பூப்பறித்த குற்றத்துக்காக கைதுசெய்யப்படவில்லை. ஏதோ ஒரு வகையில் பயங்கரவாத நடவடிக்கையில் தொடர்பாகவே கைதுசெய்யப்பட்டு இருப்பார்கள். இலங்கையில் இன்னொரு பயங்கரவாதத்துக்கு இனி இடமில்லை என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. இன்று புலிகளும் மகிந்தவும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்திருப்பார்களானால் இக் கைதிகள் விடுதலை செய்யப்படுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த இரு சத்திகளும் அகற்றப்பட்டது கைதிகள் தொடர்பில் நல்ல விடயமே! சுமந்திரன் அவர்கள் கைதிகள் விடுதலைக்காக தம்மாலான முழு முயற்சிகளையும் செய்துகொண்டு இருக்கிறார். புலம்பெயர் புலிவால் அன்பர்களுக்கு இந்தக் கைதிகள் விடுதலையில் எவ்வித உண்மையான கரிசனையும் கிடையாது, மாறாக கைதிகள் விடயத்தில் தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டு இருக்கும் சுமந்திரன் மீது சேறடிக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முப்பது வருடங்கள் விசிலடித்த வாய்கள் சும்மா இருக்கும் என்பதை எவரும் எதிர்பார்க்க முடியாது. இப்போது கார்த்திகைத் திருவிழா முடிவுற்று இருக்கின்றது , இனி விசாகப் பெருவிழா வரும்வரை கூட்டமைப்பின் மீதும் சுமந்திரன் மீதும் ஈழ விடுதலைக்கான தமது அடுத்த கட்ட போரைப் 'புவா'க்கள் தொடங்குவார்கள். அதற்கு உதவியாக ஆஸியில் இருந்து ஒரு படையணியும் ஆயத்தமாக இருப்பதாகத் தெரிகின்றது!

3 hours ago, பெருமாள் said:

எழுபதுகளில் ஓடிய ரீல் ஆகவும் சந்தர்ப்பம் இருக்கு,

ஆனால் அதற்கு பிறகு உருவான ஒரு  தலைவர் போல் மீண்டும்  ஒருவர் உருவாக மக்கள் என்றும் அனுமதிக்கபோவதில்லை -வரலாற்றில் இருந்து மக்கள் கற்றுக்கொண்ட பாடம் அது.

எனவே போராட்டம் வெல்லவும் சந்தர்ப்பம் வரலாம் .

Edited by arjun
சிறு திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம்.   kaluthai.gif

visaran.gif

sampanth.jpg

மடி .. மன்னிக்கவும் ... முடி துறப்பாரா?

visaran.gif

முந்தாநாள் ..

visaran.gif

நேற்று ..

visaran.gif0-02.jpg?resize=620%2C364visaran.gif

இன்று..

visaran.gif

Edited by no fire zone

உண்மையை வெளிப்படையாக ஒத்துக்கொண்டதுக்காக  சுமத்திரனை பாரட்ட வேண்டும்...

புலிகளின் நீண்ட கால இருப்புக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கிய காரணமாக இருந்தது  புலம்பெயர்ந்தவர்களையும்  தாயகத்தில் இருந்த மக்களையும் ஒருசேர இணைக்க முடிந்தமை தான்...  

இங்கே இருக்கும் அர்சுண் , வாலி போண்ற உசுப்பேத்திகள் நிறையவே தமிழர்கள் மத்தியில் நிறையவே இருக்கிறார்கள்...   அவர்களை இனங்காண்பதோடு  அவர்களை புறம் தள்ளி   விட்டு  புலம்பெயர்ந்த மக்களோடும் ஒருங்கிணைய கூட்டமைப்பின் தலைமை முன்வர வேண்டும்... 

புலம்பெயர்ந்தவர்களும் அவதானமாக இருக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, காத்து said:

நல்ல வேடிக்கை!  இதை எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?  இப்படி இணைய புலிவால்கள் விடுவார்களா? சுமந்திரனுக்கு ஆஸியில் நல்லாக் குடுத்து பிரபாகரன் படையணி களமிறங்கும் என்று வெருட்டி அனுப்பினது எல்லாம் கானல்நீரா? tw_blush:<_<

2 minutes ago, வாலி said:

இது தான் உங்களின் தேவை எண்று சொல்லுங்கள்...   அப்படி நடக்க புலிகள்வாலுகள் விடமாட்டார்கள் என்பதை விட உங்களுக்கு விருப்பம் இல்லை...  அதுவே மிக முக்கியம்....

கிட்டத்தட்ட 17 லட்ச்சம் பேர் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள்...    நீங்கள் சொல்லும் அவர்கள் வெறும் சில நூறு மட்டுமே...

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு 17 இலட்சம் பேரிலோ அல்லது 6.5 கோடிப் பேரிலோ கரிசனை இல்லை. நாங்கள் விரும்புவதெல்லாம் தாயகத்தில் வாழும் எங்கள் மக்கள் நிம்மதியாகக் கொஞ்சம் வாழவேண்டும் என்பதே!

2 minutes ago, வாலி said:

எங்களுக்கு 17 இலட்சம் பேரிலோ அல்லது 6.5 கோடிப் பேரிலோ கரிசனை இல்லை. நாங்கள் விரும்புவதெல்லாம் தாயகத்தில் வாழும் எங்கள் மக்கள் நிம்மதியாகக் கொஞ்சம் வாழவேண்டும் என்பதே!

 சிங்களவனுக்கு சிக்கல் ஒண்டும் வந்திட கூடாது எண்டு மினக்கெடுகிறீயள்  ஆக்கும்...    நல்வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்வெடியாக சுமந்திரன் இருப்பார் என்று நினைத்திருந்த ஆதரவாளர்களுக்கு அவர் வெறும் புஸ்வாணம்தான் என்ற யதார்த்தம் புரிந்துவிட்டது. அதனால்தான் புலிகள் பயங்கரவாதிகள் என்று திசையைத் திருப்பி சுமந்திரனின் இயலாமையை அதற்குள் ஒளிக்க முயற்சிக்கின்றார்கள். 

எதுவித அழுத்தங்களையும் பிரயோகிக்கமுடியாத கூட்டமைப்பினர் தமிழர்களுக்கு நீதியான தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பார்கள் என்று நம்புவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அதிர்வெடியாக சுமந்திரன் இருப்பார் என்று நினைத்திருந்த ஆதரவாளர்களுக்கு அவர் வெறும் புஸ்வாணம்தான் என்ற யதார்த்தம் புரிந்துவிட்டது. அதனால்தான் புலிகள் பயங்கரவாதிகள் என்று திசையைத் திருப்பி சுமந்திரனின் இயலாமையை அதற்குள் ஒளிக்க முயற்சிக்கின்றார்கள். 

எதுவித அழுத்தங்களையும் பிரயோகிக்கமுடியாத கூட்டமைப்பினர் தமிழர்களுக்கு நீதியான தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பார்கள் என்று நம்புவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

இதற்கு வரும் காலம் பதில்கொடுக்கும். நிச்சயம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுவரும். ஏனெனில் அதைக் குழப்ப இப்ப இலங்கை அரசியலில் புலிகள் இல்லை. முற்றுமுழுவதும் சிறந்த ஒரு தீர்வு என்று வராவிட்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுகிடைக்கும் என உறுதியாக நம்பலாம். ஒருவேளை அது சிறந்ததொரு தீர்வாக அமைந்தால் கூட புலிவால்கள் தொடந்தும் புலம்பிக்கொண்டே இருப்பர்கள். அவர்களையும் பார்த்து நாங்கள் சேர்ந்து பரிதாபப்படவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.