Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயமானது தமிழ் மக்கள் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதயமானது தமிழ் மக்கள் பேரவை

எதிர்கால தமிழர் அரசியல் நடவடிக்கைகளை 
கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்திருக்கின்றனர்.
இவ் அமைக்கப்பட்ட பேரவையில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சியின் பிரமுகர்களும் வடமாமாகாண முதலமைச்சரும் மதத் தலைவர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழரசு கட்சியிலிருந்து முக்கியமான தேசியத்திற்காக குரல்கொடுப்பவர்களும் கிழக்கு மாகாணத்திலிருந்து பேரவையில் நியதியுடன் செயற்படுவதற்கு சம்மதிப்பவர்களும் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தமிழ்கிங்டொத்திற்கு கிடைத்த உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.tamilkingdom.org/2015/12/19_62.html

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு நல்லசெய்தி அல்ல...

ஆனால் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின்  தான்தோன்றித்தனமான செயல்களே இதற்கு காரணம்..

அதேநேரம் தமிழரசுக்கட்சிக்கு  இது இனிக்கும் செய்தி...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருக்கும் சிலருக்கும் இது மதுரமான செய்திதான். ஆனால் என்ன அரிதாரம் பூசினால் அது தெரியாமல் போய்விடும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனத்திற்கும் அவர்களின் பொறுப்பற்ற போக்குககும் எதிராக அனைத்துக் கட்சியினரையும் ஓருங்கிணைக்கும் முயற்சியாகவே பார்கிறேன். தமிழருக்கு என்ன ஆபத்து வந்துவிடப்போகிறது. தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமிழர் நலனை மறந்து ரெசுடன் சேர்ந்து கூத்தடிக்கும் போது ஆயிரம் அமைப்புகள் வரட்டும்.

யாழில் புதிய பேரவை உருவாக்கம்?

 


யுhழ்ப்பாணத்தில்  பேரவை ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.

குறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி இரவு 9 மணி வரையில் இடம்பெற்றது.

அந் நிகழ்வில்  வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.கே. சிற்றம்பலம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட மாகாண சபை உறுப்பினரும் புளெட் அமைப்பினை சேர்ந்தவருமான  க.சிவநேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள், மருத்துவர்கள் என 30 பேர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். குறித்த அமைப்பினது அங்குரார்ப்பனமானது, மிக ரகசியமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


தமிழ் மக்கள் பேரவை எனும் குறித்த அமைப்பின் அங்குரார்ப்பன நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் அதனை கேள்வியுற்று ஊடகவியலாளர்கள் நிகழ்வு நடைபெற்ற யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்திற்கு சென்ற போது மண்டபத்திற்குள் செல்வதுற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்து.

அதனால் ஊடகவியலாளர்கள் மண்டப வாயிலுக்கு வெளியில் காத்து இருந்தனர். அதன் போது நிகழ்வு முடிவடைய முதல் வெளியில் சென்ற பலர், ஊடகவியலாளர்கய், தம்மை புகைப்படம் எடுக்காதவாறு மிக வேகமாக நடந்து சென்று தமது வாகனங்களில் ஏறி சென்றனர்.

இதேவேளை, நிகழ்வின் நடுவில் வெளியேறிய வடமாகாண முதலமைச்சரை ஊடகவியலாளர்கள் இடைமறித்து கேள்வி கேட்க முற்பட்ட வேளை மிக வேகமாக ஊடகவியாளர்களை கடந்து சென்றார்.

அவரை விடாது பின் தொடர்ந்த ஊடகவியலாளர்கள் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நிகழ்வு தொடர்பான சகல விபரங்களையும் ஏற்பாட்டாளர்கள் தருவார்கள் அவர்களிடமே கேளுங்கள். என கூறி தனது வாகனத்தில் ஏறி சென்றார்.

அரசியல் கட்சிகள் சரியில்லை அதனாலையே அமைப்பு உதயம்.

அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில்,

இருக்கின்ற கட்சிகள் சரியான முறையில் செயற்படவில்லை அதனால் புதிய அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் தமிழ் மக்களுக்கான தீவுர்த்திட்டடத்தை அரசாங்கத்திடம் முன் வைப்பதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

இக் கூட்டத்திற்கு அழைத்தமை மத தலைவர் என்ற ரீதியிலையே என்னை அழைத்து இருந்தனர்.என தெரிவித்தார்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு.

அமைப்பு குறித்து வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் நலன் கருதி அரசியலுக்கு அப்பால் ஒரு புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளோம். நான் புளெட் சார்பாக கலந்து கொண்டேன். எமது அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் இருப்பதனால் என்னை இந்த நிகழ்வுக்கு செல்லுமாறு கூறினார். அவரின் பிரதிநிதியாக நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

இந்த அமைப்பின் உருவாக்கம் பற்றிய மேலதிக தகவல்களை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பார்கள் என தெரிவித்தார் .


அரசியல் தீர்வினை எட்டவும் . கலாச்சார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உருவாக்கம்.

இந்த அமைப்பின் உருவாக்கம் பற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி வைத்தியர் லஷ்மன் ஆகியோரின் இணைத்தலைமையில்  தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு உருவாக்க ப்பட்டு உள்ளது.

இந்த கட்டமைப்பு அரசியல் கட்சிக்களுக்கு அப்பால்பட்டு மத தலைவர்கள்  தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளாகி இருந்த வேளை மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றிய சமூக பெரியோர்கள் ஆகியோரை உள்வாங்கி இந்த அமைப்பு உருவாக்க பட்டு உள்ளது.

இந்த அமைப்பு ஏற்கனேவே இரு உப குழுக்களை  உருவாக்க தீர்மானித்து உள்ளது ஒன்று அரசியல் தீர்வு சம்பந்தமாக மற்றையது கலாச்சார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடனும் உருவாக்க பட்டு உள்ளது

மேலதிகமாகவும் பல தீர்மானங்களாக எடுக்கப்பட்டு உள்ளது அவை உத்தியோக பூர்வ அறிக்கையாக ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்படும். என தெரிவித்தார்.


இனப்பிரச்சனைக்கு  தீர்வு காணவே அமைப்பு உருவாக்கம்.

இந்த அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது அதன் முக்கிய நோக்கம் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பது.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டும்

இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடாத்துவதும் ஐநா சபையால் அறிவுறுத்தப்பட்ட தீர்மானம் தொடர்பான பொறுப்பு கூறல் போன்ற நடவடிக்கையை கண்காணித்து அவை தொடர்பில் கண்காணிக்க இந்த அமைப்பு உருவாக்க பட்டு உள்ளது. என தெரிவித்தார்.


இறுதி வரை ஏற்பாட்டாளர்கள் யார் என தெரியவில்லை.

இந்த அமைப்பின் உருவாக்கம் தொடர்பிலும் அதன் எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் ஊடகவியலாளர்களால் கேள்விகள் எழுப்ப பட்ட போது, அனைவராலும் சொல்லப்பட்ட பதில் ஏற்பாட்டாளர்களை கேளுங்கள் அவர்கள் தெரிவிப்பார்கள் என ..

ஆனால் நிகழ்வு முடிவடைந்து அந்த நிகழ்வில் பங்கு பற்றிய 30 பேரும் அதே பதிலையே சொல்லி சென்றனர். இறுதி வரை யார் ஏற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்படவில்லை.

பத்திரிகை பிரதம ஆசிரியர் பங்கேற்பு.

யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் ஒருவரின் அழைப்பின் பேரிலையே மத தலைவர்களில் ஒருவர் எனும் ரீதியில் தான் அழைக்கப்பட்டதாக மத தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதே வேளை மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவர் நிகழ்வு முடிவடைந்து வரும் அனைவரிடமும் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என கூறிவிட்டு எவ்வாறு ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியரை அனுமதித்தீர்கள என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அதனை ஏற்பாட்டாளர்களை கேளுங்கள் என பதிலளித்து சென்றனர். இறுதிவரை ஏற்பாட்டாளர்கள் யார் என தெரிவிக்கப்படவில்லை.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127048/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்வுத்திட்டத்தைக் குழப்பும் ஒரு செயற்பாடாகவே இது இனம்காணப்படுகின்றது. சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியினால் மாத்திரமே வடக்கு கிழக்கு மக்களை ஓரணியில் திரட்டமுடியும். மற்ற எவருக்கும் அது எட்டாக் கனிதான். இவர்கள் தமிழரசு கட்சிக்கு ஒருபோதும் மாற்றீடாக முடியாது. புலிகளின் பெயரை விட்டுப் பிழைக்கும் தான்றோன்றித்தனமான புலம்பெயர் அமைப்புகளின் செல்லப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு எதை பெரிதாக சாதித்துவிடப்போகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. 

Edited by வாலி
எழுத்துப் பிழை

பவனிடம் கேட்டால்  என்ன நடந்தது என்று சொல்லுவார்  (அதுதான் க.சிவநேசன் )

Edited by arjun
சிறு திருத்தம்

ஒழுங்கமைப்பாளர்கள் யாரெனத் தெரியவில்லை. கலந்து கொண்டவர்கள் 30 பேர். இது தமிழரசுக் கட்சிக்கு எதிரான செயற்பாடு மட்டுந்தான். தமிழர் பிரச்சனைக்கான தீர்வுக்குரியதல்ல.

இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை ,முதலமைச்சர் தலைமையில் குப்பைகள் எல்லாம் ஒன்று சேரட்டும் பொறுத்திருந்து பார்ப்போம் ,இப்படி எத்தனையோ விடயங்களை பார்த்து விட்டோம் ,சரி இந்த ஆட்டத்தையும் பார்ப்போமே ?

நீண்ட காலத்தின் பின் யாழில் இருந்து நிகழ்த்தப்பட்ட மிகத் தெளிவான ஒரு அரசியல் பார்வை. யாழ்க் களத்தில் இருக்கும் புல வாசிகள் பார்க்க வேண்டிய பேச்சு

 

http://tamilpeoplescouncil.org/lakshmanspeech.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சார்ந்து தமிழ் மக்களுக்காக செயற்படுவதை உறுதி செய்யும் தேவை எழுந்துள்ள நிலையில்.. அதனை வழிநடத்த உலகத்தமிழினத்தை சேர்ந்த அறிஞர்கள் சட்டவாளர்கள் சமூகவாளர்கள் அரசியல் புத்திமான்களை உள்ளடக்கிய ஒரு பொது ஆலோசனைச் சபை அமைக்கப்படுதல் அவசியம். அந்த வகையில் தாயகத்தில் அதற்கான ஆரம்பப் புள்ளியாக இந்தத் தொடக்கம் அமையின் வரவேற்பது அவசியம்.

தாயகத்திலும் சர்வதேச மட்டத்திலும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் ஒற்றுமையை சிதைக்கும் வேலைத்திட்டங்களை சிங்களம் மற்றும் சில சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகள் சொந்த ஆதாயம் தேடிச் செய்ய முற்பட்டுள்ள இவ்வேளையில்.. பல்லாயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட அரசியல் ஒற்றுமை சிதைக்கப்பட அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதிப்பது தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் உரிமை என்பது எதுவும் அற்றதாக மாறுவதை தடுக்க முடியாது.

அந்த வகையில் தமிழினம் வேண்டி நிற்கும் அரசியல் ஒருமைப்பாட்டுக்கான.. வலுவை இந்தப் தமிழ் மக்கள் பேரவை உறுதி செய்யின் அது வரவேற்கப்பட வேண்டியது மட்டுமன்றி.. இந்தப் பேரவை தாயகம் கடந்து உலக அளவில் தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒன்றிணைக்கும் பணியையும் செய்வது அவசியம். தமிழ் நாடு  மலேசியா.. சிங்கப்பூர்.. மொரிசியஸ்.. தென்னாபிரிக்கா.. உள்ளடங்க. tw_blush:

வடக்கு முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி! ஆனால் முன்னரைப்போன்று இப்பொழுதும் ஊமை என்கிறார் அவர்!
[ சனிக்கிழமை, 19 டிசெம்பர் 2015, 05:58.13 PM GMT ]
vikki_sir_001.jpg
வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான் முன்னரைப் போன்று இப்பொழுதும் ஊமை என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அவை அங்குரார்ப்பண கூட்டம் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9மணி வரையில் யாழ்.பொது நூலகத்திலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதில் அளிக்கும் முகமாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த கூட்டத்தில் செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு முழுமையான தடைவிதிக்கப்பட்டு நடைபெற்ற நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

மேற்படி கட்சிகள் சார்பில் முறையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர் சிவநேசன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டத்தின் நிறைவில் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்கள் அவை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்திருக்கின்றோம். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், மற்றும் அரசியல் கட்சிசார்ந்தவர்கள் கலந்து கொண்டிருக்கிறோம்.

இதனுடைய முக்கியமான நோக்கம் தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதும், தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான பிரரேரணை எந்தளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதனை பார்த்துக் கொள்வதுமாக இருக்கும்.

இதற்காக இந்த அவை, இரு குழுக்களை பிரித்துள்ளது. அதில் ஒரு குழு அரசியல் தீர்வு விடயத்தையும், மற்றைய குழு தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினை விடயத்தையும் ஆராயும்.

இதனடிப்படையில் நாங்கள் தொடர்ந்தும் கூட்டங்களை கூட்டி பேசுவோம். தொடர் நடவடிக்கைகளையும் எடுப்போம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை மேற்படி அவையின் இணைத் தலைவர்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி லக்ஸ்மன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்டம் நிறைவடைவதற்கு சற்று முன்னதாக வெளியேறிய முதலமைச்சரிடம் இந்த விடயம் தொடர்பாக கேட்டபோது நான் முன்னரைப்போன்று 
இப்போதும் ஊமை தான் எனக் கூறிவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/

 
 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Gari said:

இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை ,முதலமைச்சர் தலைமையில் குப்பைகள் எல்லாம் ஒன்று சேரட்டும் பொறுத்திருந்து பார்ப்போம் ,இப்படி எத்தனையோ விடயங்களை பார்த்து விட்டோம் ,சரி இந்த ஆட்டத்தையும் பார்ப்போமே ?

பாதிக்கப்பட்டோர் சேர்ந்து உருவாக்கியிருக்கும் அணி.  முதலமைச்சரின் நாடகம் சமந்தா பவரிடம் எடுபடவில்லை. அமெரிக்க மறும் இந்திய வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக இவர்களால் எதிர்த்து நிற்கமுடியுமா என்ற கேள்விக்கு பதில் மக்களை முட்டாளாக்கப் பார்க்கின்றார்கள் என்று அமையும். புலிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கும் போக்கை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. கஜேந்திரகுமார், பிரேமசந்திரன் போன்றோர் தமது பழிவாங்கும் அரசியலுக்காக எதனையும் விற்றுப்பிழைக்கக் கூடியவர்கள். நிர்வாக மற்றும் செயல் திறமையற்ற விக்னேஸ்வரன் ஒரு பெரிய சவாலாக இல்லை என்பதை மட்டும் உறுதிபடக் கூறலாம். அடுத்த தேர்தலுக்கு ஆயத்தம் செய்ய்யும் வகையிலும் நடைமுறையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களைக் குழப்பும் வகையிலுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது. சம்பந்தன் இதனை சாணக்கியமாகக் கையாளக்கூடியவர் என்ற நம்பிக்கை உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போகப்போக எல்லாம் தெரியும் தானே......ஏன் எல்லாத்தையும் இப்ப போட்டுடைப்பான் :cool:

ஜனநாயகத்தின் சிறப்பே இது தானே. புலவாலுகளின் தாளத்திற்கு ஆடாமல் தாயக மக்களின் நலன் சார்ந்து இவர்கள் இயங்குவார்கள் என்று நம்புவோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, தெனாலி said:

ஜனநாயகத்தின் சிறப்பே இது தானே. புலவாலுகளின் தாளத்திற்கு ஆடாமல் தாயக மக்களின் நலன் சார்ந்து இவர்கள் இயங்குவார்கள் என்று நம்புவோம். 

தாளத்திற்கு ஆடுவதினால் புலவாலுகளுக்கு என்ன ஆதாயம் என்பதையும்  நீங்களே சொல்லிவிடுங்கள்.

3 minutes ago, குமாரசாமி said:

தாளத்திற்கு ஆடுவதினால் புலவாலுகளுக்கு என்ன ஆதாயம் என்பதையும்  நீங்களே சொல்லிவிடுங்கள்.

அதை நீங்கள் அவுஸில சுமந்திரனை தாக்கின தூசன வீரர்களிடமும் மாவையை சுவிஸில கூப்பிட்டு வெருட்டின கூட்டத்திடமும் தான் கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, தெனாலி said:

அதை நீங்கள் அவுஸில சுமந்திரனை தாக்கின தூசன வீரர்களிடமும் மாவையை சுவிஸில கூப்பிட்டு வெருட்டின கூட்டத்திடமும் தான் கேட்க வேண்டும்.

கருத்து சொன்னது நீங்கள்! அந்த கருத்தை வைத்துத்தான் உங்களிடம் கேள்வி கேட்டேன்.
ஆனால் நீங்கள் வேறு யாரிடமோ பதிலை கேட்கச்சொல்கின்றீர்கள்!!!!! 

பானையில் இருந்தால்தானே அகப்பையில வரும்.

4 hours ago, Gari said:

இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை ,முதலமைச்சர் தலைமையில் குப்பைகள் எல்லாம் ஒன்று சேரட்டும் பொறுத்திருந்து பார்ப்போம் ,இப்படி எத்தனையோ விடயங்களை பார்த்து விட்டோம் ,சரி இந்த ஆட்டத்தையும் பார்ப்போமே ?

நிராகரிக்கபட்ட கூட்டணி என்று பெயரை வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

கஜேந்திரனும் சிரேசும் இருபதனால் சொல்கிறேன்.

நல்லது நடந்தால் சரிதான், இவர்கள் நம்பிக்கை வைக்க முடியுவிலை.

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தெனாலி said:

ஜனநாயகத்தின் சிறப்பே இது தானே. புலவாலுகளின் தாளத்திற்கு ஆடாமல் தாயக மக்களின் நலன் சார்ந்து இவர்கள் இயங்குவார்கள் என்று நம்புவோம். 

இதேதான் எனது கருத்தும்.. இந்திய/அமெரிக்க தாளங்களுக்கு தொடர்ந்தும் ஆட வேண்டும் என்பதே எனது அவா..! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இது அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலன் கருதி அமைக்கப் பட்டுள்ள ஒரு அமைப்பாகவே தெரிகிறது.

இது சம்பந்தனுக்கோ அல்லது சுமேந்திரனுக்கோ எதிரான விக்னேஸ்வரனின் அரசியல் அமைப்பாக தெரியவில்லை.

இதில் இடம் பெற்று இருப்பவர்களை பாருங்கள்:

Co-chairs


  1. Hon. Justice C V Vigneswaran – (Chief Minister, NPC)
     
  2. Dr. P Lakshman – (Senior Cardiologist, Teaching Hospital, Jaffna)
     
  3. Mr. T Vasantharajah – (Secretary, Batticaloa Civil Society)
     

 

Action Committee Members


  1. Nallai Aathina Muthalvar
     
  2. Sivasiri Saba Vasutheva Kurukkal
     
  3. Rev. Fr. Jeyabalan Croos – (Diocese of Mannar)
     
  4. Rev. Fr. S V B Mangalarajah –(President, Justice & Peace Commission)
     
  5. Prof. C K Siththampalam – (Senior Vice President, TNA-Thamil Arasuk Katchchi)
     
  6. Mr. D Siththarthan - (Leader, TNA-PLOTE)
     
  7. Mr. Suresh Premachandran - (Leader, TNA-EPRLF)
     
  8. Mr. Gajendrakumar Ponnambalam – (Leader, TNPF)
     
  9. Prof. V P Sivanathan – (Patron, Jaffna Economist Association)
     
  10. Dr. K Premakumar – (Fmr. Dean, Faculty of Agriculture, Eastern University)
     
  11. Mr. K Sathasivam – (Batticaloa)
     
  12. Mr. S Somasundaram – (Treasurer, Batticaloa Civil Society)
     
  13. Mr. Muraleetharan – (Trincomalee)
     
  14. Mr. V Gopalapillai -(Amparai)
     
  15. Dr. G Thirukumaran – (President, University Teachers Association, Jaffna)
     
  16. Dr. A Saravanapavan – (Vice President, University Teachers Association, Jaffna)
     
  17. Rev. Fr. Racichandran – (Diocese of Jaffna)
     
  18. Mr. V Puvitharan – (President, Tamil Lawyers Association)
     
  19. Mr. N Singam – (Secretary, Tamil Civil Society Forum)
     
  20. Mr. N Inpanayagam – (National Fisheries Solidarity Movement)
     
  21. Mr. M Sivamohan – (Iranamadu Farmers’ Organizations Federation)
     
  22. Mr. Thevarajah - (President, Vavuniya Civil Society)

 

Office of Convening Committee


  1. Dr. S Sivansuthan
     
  2. Mr. N Vijayasuntharam
     
  3. Mr. Alan Sathiadas
     
  4. Mr. S Janarthanan

 

 

கூட்டமைப்பிற்கு இன்னும் ஒரு வருடம் கொடுத்துபார்த்திருக்கலாம் .

ஆனால் கூட்டமைப்பு சில தவறுகளை விட்டே வந்துள்ளது 

கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதியாதது ,அதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் தமிழரசு  கட்சியே அதை தவிர்த்து வந்தது .மற்றைய கட்சிகளின் நிலைமை வெளியே போனால் ஒரு சீட்டும் வெல்ல முடியாது கூட்டமைப்பில் இருந்தால் ஒன்றோ இரண்டோ ஆசனங்கள் கிடைக்கும் இதானால் மற்றைய கட்சிகளுக்கு விட்டுவிட்டு போகமுடியாத நிலை ,இதை கூட்டமைப்பு நன்கு புரிந்து வைத்திருந்தது அதானால் அவர்களை வைத்து தனது விருப்பத்திற்கு ஆட்டிப்படைத்தது .

சிங்கள அரசுடன் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் வேலை செட்கின்றோம் .இந்தியா சொல்லுது அமேரிக்கா அழைக்குது என்றால் அது என்ன?  அவர்கள் என்ன சொல்லுகின்றார்கள் என்றால் அது சிதம்பர ரகசியம் இப்ப சொல்ல முடியாது என்கின்றார்கள் .

நல்லது நடக்கும் பொறுப்பும் என்றால் பிறகு தாங்களே அறிக்கை விடுகின்றார்கள் விடுதலை கைதிகள் விடயத்தில் ஏமாந்துவிட்டோம் என்று .ஏமாற போகின்றீர்கள் என்று சொன்னவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் இந்த அரசை நாங்கள் நம்புகின்றோம் என்று அப்படியானால் ஏமாந்துபோனோம் என்ற பதிலே வரக்கூடாது .

உண்மையில் உங்களால் ஒரு துரும்பும் அசைக்கமுடியாது என்று தோன்றினால் அதை வெளிப்படையாக சொல்லவேண்டும் பாராளுமன்ற கதிரைக்காக இருக்கு மட்டும் இழுத்துகொண்டு போவம் என்று அப்பாவி மக்களையும் ,சிறை கைதிகளையும் ,பிள்ளைகளை தேடி அலையும் தாய்மாரையும் ஏமாற்றுவம் என்று ஒரு சிறு எண்ணம் உங்கள் மனதில் இருந்தாலே உங்களை அடித்து துரத்துவதில் எந்த பிழையும் இல்லை .கூட்டமைப்பில் பல எம் பி மார்களின் நிலை அதுதான் ஆனால் அவர்களை பலர் எக்காலமும் நம்பவில்லை ஆனால் சம்பந்தரிலும் புதிதாக எதையோ புத்திசாலித்தனமாக தமிழர்களுக்கு செய்வார் என்று சுமந்திரனையும் இன்றும் பலர் நம்புகின்றார்கள் .

இன்னும் ஒரு வருடம் மைத்திரி ரணில் அரசை நம்பும் சம்-சும் இற்கு கொடுத்து பார்க்கலாம் ,அதன் பின்னும் ஒரு இஞ்சி நிலத்தை விடிவிக்கவும்  ஒரு கைதியை வெளியில் விட  இவர்கள் அரசை கெஞ்சிக்கொண்டும் இருக்கும்  நிலை என்றால் இவர்களை அகற்றுவதை தவிர வேறுவழி இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி? எதற்காக இந்தக் காள்ப்புணர்வு மனோபாவம்? புலிகளின் ஏகபிரதிநிதித்துவம் பிழை. கூட்டமைப்பின் ஏகபிரதிநிதித்துவம் சரி? ஏனிந்தப் பிறழ்வுநிலை மனோபாவம் கொண்டு சிந்திக்கத் தலைப்படுகின்றமை சரியா? அழிவுகளைச் சந்தித்து அவலங்களோடு வாழ்பவர்களாகவும், அந்த அவலத்தை எதிர்கொண்டவாறு தமது நிலங்களுக்காகவும், காணாமற்போகச் செய்யப்பட்டோர், சிறைகளிலுள்ளோர் எனத் தம்மை அர்பணித்து, இழந்து இன்றும் போராடும் மக்களை ஏன் மனங்கொள்ளத் தவறுகின்றோம். சரி. புலிகள் தவறு செய்துவிட்டார்கள். இன்று புலிகள்தான் இல்லையே; பிறகேன் புலிவாந்தி. புலிவாந்தி எடுப்பதை விடுத்து சொந்த அரசியலை நகர்த்துவதானே! இதனையேதான் தென்னிலங்கைச் சிங்கள பேரினவாத சக்திகளும் செய்கின்றன. புலிப்பூஞ்சாண்டி காட்டி சிங்களவரிடையே இனவாதத்தைத் தூண்ட முற்படுகின்றன. இதனைச் சாட்டாக வைத்து ஆட்சியாளர்கள் தமிழரை மிதிக்கின்றனர். 

புலிகளை அகற்றிவிட்டால் சிங்களம் தீர்வை வைக்கும் என்று உலகப்பெருமரசுமுதல் கிந்திய அரசுவரை குத்தி முறிந்தன. ஆனால், ஆறு ஆண்டுகள் கடந்துள்ளது. என்ன செய்துவிட்டார்கள். சிங்களம் கூறியது தீர்வுக்குப்  புலிகளே தடையென்று அது இன்று நிதர்சனமான உண்மை. தீர்வுக்கு அல்ல தமிழரைத் தீவிலிருந்து தீர்த்துக்கட்டிவிடத் தடையாக இருந்தார்கள் என்பதை காணமுடிகிறது.   இன்று வடக்கிலே 2009இற்குப்பின் 18க்கு மேற்பட்ட விகாரைகள் கட்டல், 34 தமிழ்க்குடும்பங்களின் நிலத்தோடு, 2000 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு அத்துமீறிய குடியேற்றம் எனத் தமிழரை இலங்கைத்தீவிலிருந்து அகற்றும்முயற்சிகள்தான் தீவிரமடைந்துள்ளன………………..! 
சிங்களம் எதையும் அனைத்துலக அழுத்தமும் தமிழரின் ஒன்றிணைந்த இறுக்கமான செயற்பாடுகளின்றித் தமிழருக்குச் செய்யாது என்பதற்கானதொரு சான்றாக அரசியல்கைதிகளின் விடயமே போதுமானது. மு.வி.மு பொதுமன்னிப்பு வழங்க முடியும் சிங்கள இயையோரென்பதால். தமிழருக்கு வழங்கமுடியாது அது தமிழரென்பதால். இந்த லட்சணத்தில் ஒருதாயமக்கள் நாம் சிறீலங்கர்கள் …… என்ற வாய்ப்பட்டு வேறு. எனவே இவற்றைத் தட்டிக் கேட்கவும் பொதுவெளியில் காத்திரமான அரசியலையும் தமிழத்தின் வாழ்வாதார சுய அபிவிருத்தி நிதிவள ஒருங்கிணைப்பு என்னபவற்றைக் காத்திரமாகக் கையாளவும் குரல்கொடுக்கவும் நேர்மையோடும் பற்றுறிதியாடும் முன்வரும் எவரையும் தமிழினம் வரவேற்கும். 
இதனை களத்தில் தலைமைதாங்குவோர் உரிய செயற்பாட்டின் வழிநின்று முறியடித்து நிமிர்ந்தால் தமிழர் அவர்களோடு பயணிப்பர். இதற்குப் புலத்திலே இருந்து நாம் புலி வாந்தி கூத்தமைப்பு வாந்தி யென்றெடுக்காது சரியான திசையில் செல்ல முனைவோரை திசைவழி நகர வழிவிடுதலே தேவையாகும்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்சுன் அவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நல்ல கருத்தை எழுதியிருக்கிறார். அவர் சார்ந்த அமைப்பினரும் இந்த அமைப்புக்குள் இருப்பதாலோ தெரிய வில்லை. சரியான கருத்தை யார் பேசழனாலும் வரவேற்கத் தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கூட்டம் தொடர்பான ஒளிப்பதிவுக் காட்சிகள்!!!

http://www.tamilkingdom.org/2015/12/19_62.html

தமிழ்மக்கள் பேரவை தொடர்பான செய்திகள் செத்த வீட்டு இணையத்தளத்தில் இருட்டடிப்பு!!!!ஒண்ணுமே நடக்காததுமாதிரி பீப்சாங் செய்திகளைப்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.