Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வநாயகத்தின் கோரிக்கை அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்க மாட்டார்

Featured Replies

புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின.

இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள் குறித்து அவர் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த விஷேட உரையை நிகழ்த்தினார்.

புதிய அரசியலமைப்பு அமைக்கப்படவுள்ளதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இதன்போது உரையாற்றினார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாவது,

நாட்டு மக்களின் விருப்பு வெருப்புக்கள் உள்வாங்கப்பட்ட மற்றும் காலத்துக்கு பொருந்தக் கூடியவாறான அரசியலமைப்பு முறை இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

டட்லி சேனாநாயக்க - செல்வநாயகம் மற்றும் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தங்கள் அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் என்று ஒருவர் உருவாகி இருக்க மாட்டார்.

நிறேவேற்று அதிகார ஜனாதிபதி முறை இருந்தததனால் தான் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்ததாகவும், ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லாது செய்யப்படக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றார்கள்.

அவ்வாறு நிறேவேற்று அதிகார ஜனாதிபதி முறை இருந்தால் தான் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என்றால் எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட வேண்டிய தேவை இருக்கின்றதா?

மேலும் ஒரு யுத்தம் ஒன்று ஏற்படாதிருப்பதற்கு நாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளையே நாங்கள் செய்ய வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ளது குறித்து வெவ்வேறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பை மாற்றுகின்றபோது, பெடரல் என்றால் தெற்கில் உள்ள அடிப்படைவாதிகளுக்கு கசக்கின்றது.

ஐக்கியம் என்றால் வடக்கில் உள்ள அடிப்படைவாதிகளுக்கு கசக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்யவேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்குவதனால் பெளத்த மதத்திற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மஹா சங்கத்தினர் என்னிடம் கேட்டனர்.

ஏன் நாங்கள் கலக்கமடைய வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு நிலமை ஏற்படப் போவதில்லை.

எங்களிடம் அறிவு, திறமை, கடந்தகால அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன.

இவற்றை கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும், நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்துமே செயல்பட வேண்டும்.

வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவே புதிய அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட இருப்பதாக சிலர் கூறுகின்றார்கள்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனக்கோ பிரதமருக்கு எந்த வெளிநாடுகளும் அழுத்தங்கள் பிரயோகிக்கவில்லை.

26 வருட கால யுத்தத்தில் வடக்கு இளைஞர்கள் போலவே தெற்கிலும் எவ்வளவோ இளைஞர்கள் உயிரிழந்தார்கள்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் முறையே எமக்குத் தேவை.

அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் ஐக்கியத்துடன் வாழ்வதற்குறிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தங்களை அன்று நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார்- மைத்திரி:-

10 ஜனவரி 2016
ஒப்பந்தங்களை அன்று நடைமுறைப் படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார்- மைத்திரி:-

 அன்றைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
பண்டா - செல்வா ஒப்பந்தம் அல்லது டட்லி - செல்வா ஒப்பந்தம் முறையாக அன்றைக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் என்றும் ஒப்பந்தங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப் படாமையினாலேயே பிரபாகரன் உருவாக நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது இனவாதிகள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இதன்போது ஜனாதிபதி கோரிக்கை முன்வைத்தார். கடந்த காலத்தில் அரசியலமைப்பை மாற்ற முற்பட்டபோது ஏற்பட்ட பிரச்சினைகளை தனக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார். 
 
அரசியலமைப்பை மாற்றுகின்றபோது பெடரல் என்றால் தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு கசக்குகின்றது என்றும் ஐக்கியம் என்றால் வடக்கில் உள்ள இனவாதிகளுக்கு கசக்கிறது என்றும் கூறிய ஜனாதிபதி இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127696/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பண்டா - செல்வா ஒப்பந்தம் அல்லது டட்லி - செல்வா ஒப்பந்தம்
:unsure:

இந்த ஒப்பந்தங்கள் ஏன் உருவாமனது என்ற உண்மை என‌க்கு தெரியும் மைத்திரி சொல்வது போன்று தமிழ் ம‌க்களுக்கு உருவானத‌ல்ல ...அரசியல் அறிவற்றோருக்கு வேணுமென்றால் மைத்திரி ரீல் விட‌லாம்.... என் போன்ற அர‌சியல் மேதைகளுக்கு அல்ல‌:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தங்களை அன்று நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார்- மைத்திரி:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளா் கொழும்பு:-

ஒப்பந்தங்களை அன்று நடைமுறைப் படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார்- மைத்திரி:-

அன்றைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
பண்டா - செல்வா ஒப்பந்தம் அல்லது டட்லி - செல்வா ஒப்பந்தம் முறையாக அன்றைக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் என்றும் ஒப்பந்தங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப் படாமையினாலேயே பிரபாகரன் உருவாக நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது இனவாதிகள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இதன்போது ஜனாதிபதி கோரிக்கை முன்வைத்தார். கடந்த காலத்தில் அரசியலமைப்பை மாற்ற முற்பட்டபோது ஏற்பட்ட பிரச்சினைகளை தனக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார். 
 
அரசியலமைப்பை மாற்றுகின்றபோது பெடரல் என்றால் தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு கசக்குகின்றது என்றும் ஐக்கியம் என்றால் வடக்கில் உள்ள இனவாதிகளுக்கு கசக்கிறது என்றும் கூறிய ஜனாதிபதி இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

நல்லவிதமாத்தான் கதைக்கிறார் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன தீர்வை முன்வைக்கிறார், அரசியலமைப்பில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவருகிறார் என்று :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nunavilan said:

ஒப்பந்தங்களை அன்று நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார்- மைத்திரி:-

ஓமோம் உப்பிடித்தான் சொல்லுவியள்....  

பிக்குகள் மிரண்டுபிடிக்க எழுதின ஒப்பந்தத்தையே கிழிச்சு எறியிற இனமாச்சே.......:cool:

அதுவும் பொறுத்த ஆளை(அணில்) மடியிலை வைச்சுக்கொண்டு பெரிசா ஃபீல் பண்ண வேண்டாம்.tw_blush:

முரண்டு பிடிக்கும் சிலரின் குரல் மாறுவதே ஒரு நம்பிக்கையை தருகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

முரண்டு பிடிக்கும் சிலரின் குரல் மாறுவதே ஒரு நம்பிக்கையை தருகின்றது .

அவர்கள் குரலை மாற்றித்தானே ஆகவேணும். 2016 இல் தீர்வு எண்டு உறுதியாகீட்டுது. இல்லாட்டி தாங்கள் இறக்கின விக்கி குறூப் குடுத்த அழுத்தத்திலை தான் தீர்வு வந்தது எண்டு சீடியை மாத்துவினம். அதுக்கு மேலை நிலாந்தனின் காமடிகள் வேறு. நிலாந்தன் கஜே கோஸ்டி பாராளுமன்றம் போகுமென கனவு கண்டவர். <_< 

ஒன்றுபட்ட இலங்கைக்கும் சமஸ்டிக்கு ஒப்பான தீர்வு நிச்சயம். இப்பதான் குழப்ப எவருமே இப்ப இல்லியே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

 நல்லது செய்பவரை வரவேற்று  பாராட்டுவதும், தவறு விடும்போது சுட்டிக்காட்டுவதும் நடுவுநிலைமை. தனிப்பட்ட குரோதத்தை வைத்து யார் என்ன செய்தாலும், சொன்னாலும்  குறிப்பிட்ட சிலரை இழுத்து  தாக்குவது சிறுமைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

அவர்கள் குரலை மாற்றித்தானே ஆகவேணும். 2016 இல் தீர்வு எண்டு உறுதியாகீட்டுது. இல்லாட்டி தாங்கள் இறக்கின விக்கி குறூப் குடுத்த அழுத்தத்திலை தான் தீர்வு வந்தது எண்டு சீடியை மாத்துவினம். அதுக்கு மேலை நிலாந்தனின் காமடிகள் வேறு. நிலாந்தன் கஜே கோஸ்டி பாராளுமன்றம் போகுமென கனவு கண்டவர். <_< 

ஒன்றுபட்ட இலங்கைக்கும் சமஸ்டிக்கு ஒப்பான தீர்வு நிச்சயம். இப்பதான் குழப்ப எவருமே இப்ப இல்லியே!

வாலி அண்ணை ...எங்களுக்கு யார் எடுத்து தருகிறார் என்பது முக்கியமல்ல ....தீர்வு மட்டும் தான் முக்கியம் .....
முதலில் தீர்வு வரட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரை பற்றி கனடாவிலை கொஞ்சப்பேருக்கு விளங்கவில்லை என்பது மட்டும் புரிகிறது. உள்ளூராட்சி தேர்த்தல் மட்டும் ஒரு தாளம். பிறகு தெரியும் தப்பு தாளங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

அவர்கள் குரலை மாற்றித்தானே ஆகவேணும். 2016 இல் தீர்வு எண்டு உறுதியாகீட்டுது. இல்லாட்டி தாங்கள் இறக்கின விக்கி குறூப் குடுத்த அழுத்தத்திலை தான் தீர்வு வந்தது எண்டு சீடியை மாத்துவினம். அதுக்கு மேலை நிலாந்தனின் காமடிகள் வேறு. நிலாந்தன் கஜே கோஸ்டி பாராளுமன்றம் போகுமென கனவு கண்டவர். <_< 

ஒன்றுபட்ட இலங்கைக்கும் சமஸ்டிக்கு ஒப்பான தீர்வு நிச்சயம். இப்பதான் குழப்ப எவருமே இப்ப இல்லியே!

நான் குரலை மாற்றவில்லையே. தெளிவாகத்தான் எழுதியிருக்கிறேன். எப்படி மைத்திரி அரசியலமைப்பை மாற்றப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போமென்று.

இதை விழங்காத காமெடி பீசெல்லாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டிக்கு ஒப்பான தீர்வு நிச்சயம் என்று குகுகுடுப்பை அடிக்கிதுகள். சமஷ்டி என்றதுக்கு ஒருக்கா விளக்கம்  தருவியளோ.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Eppothum Thamizhan said:

நான் குரலை மாற்றவில்லையே. தெளிவாகத்தான் எழுதியிருக்கிறேன். எப்படி மைத்திரி அரசியலமைப்பை மாற்றப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போமென்று.

இதை விழங்காத காமெடி பீசெல்லாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டிக்கு ஒப்பான தீர்வு நிச்சயம் என்று குகுகுடுப்பை அடிக்கிதுகள். சமஷ்டி என்றதுக்கு ஒருக்கா விளக்கம்  தருவியளோ.

சமஸ்டி எண்டால் என்னவென்று காமடி பீசுகளுக்கெல்லாம் என்னால் வகுப்பெடுக்கமுடியாது. 

குறி சொல்லுற ஆக்கள் ஊரிலையும் யாழிலையும் கொஞ்சம் அதிகம் தான்...  

45 minutes ago, வாலி said:

சமஸ்டி எண்டால் என்னவென்று காமடி பீசுகளுக்கெல்லாம் என்னால் வகுப்பெடுக்கமுடியாது. 

சொன்னாலும் விளங்க போவது மாதிரி 

3 minutes ago, arjun said:

சொன்னாலும் விளங்க போவது மாதிரி 

விளங்கி என்னதான் செய்யப்போகிறார்கள். சொறிலங்கா என்று சொல்லி தன்னைத்தானே சொறிய வேண்டியதுதான்.

6 minutes ago, arjun said:

சொன்னாலும் விளங்க போவது மாதிரி 

அண்ணை நீண்ட காலமாய் இதை குழப்பி உங்கட வாலுகளையும் குழப்பினது தாங்கள் தான்...

உந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் உந்த கூட்டாட்சி தத்துவத்தை தான்  நீண்ட காலமாக கேக்கிறது.. ஒரு தேசம் இரு நாடுகள் எண்டு... இப்ப ஏதோ கூட்டமைப்பு புதுசா ஒண்டை கண்டு பிடிச்ச மாதிரி சமஸ்ரி எண்ட ஒரு வசனத்தோடை வந்து நிக்கிறீர்கள்.... 

இதை பற்றி பாலா அண்ணை பெடலறிசம் எண்ட இடலறை பற்றி நிறையவே பேசி இருக்கிறார்...  ஆனாலும் நீலன் சந்திரிக்கா தயாரித்த தீர்வு பொதியே சிங்களத்தால் தமிழருக்கு அதிகபட்ச்சமாக தர முடியும் என்பதையும் ஆவர் குறிப்பிட தவற வில்லை... 

பேசாமல் நீலன் தயாரிச்ச தீர்வு பொதியை தோண்டி எடுங்கோ அது ஒரு வேளை உங்களுக்கு புதுசாக இருக்கலாம்... 

அண்ணை தமிழரசு கட்சி 1950 முன் வைத்த கோரிக்கை தான் சுயாட்சி .

தமிழில் தமிழரசு கட்சி ஆங்கிலத்தில் FEDERAL PARTY .

இதை அடிக்கடி ஜி ஜி நக்கல் அடிப்பார் .தமிழர்களின் இன வாதத்தை தூண்ட ஒரு பெயர் சிங்களவனிடம் உரிமை கேட்க இன்னொருபெயர் என்று .

பலருக்கு வரலாறே தெரியாது போல .

தமிழரசு கட்சி பற்றி நீங்கள் சொன்னது  முற்றிலும் உண்மை...  ஆனால் சேர்க்காமல் விட்ட முக்கிய மான நிகழ்வு இருக்கு...   1970 களிலை தமிழர் விடுதலை கூட்டணி யை நிறுவி இர்ந்தனர்...   பின்னரான காலங்களில்  முஸ்லீம் காங்கிரசும் , மலையக மக்கள் முன்னணியும் களட்டி கொண்டு ஓட , கூட்டணிமட்டும் தொங்கிக்கொண்டு இருந்தது... 

கூட்டமைப்பு அமைந்தபின் ஆனந்த சங்கரியார்  உதய சூரியன் சின்னத்தை தேர்தலுக்கு தரமாட்டன் எண்டு அடம் பிடித்ததால் தான் பின்னர்  தமிழரசு கட்சியை தூசு தட்டி எடுத்தார்கள்... 

இந்த வரலாறுகளையும் ( நிச்சயமாக உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும் )   வசதியாக மறைத்து விட்டீர்கள்...

Edited by தயா
இலக்கண தவறு

11 hours ago, வாலி said:

சமஸ்டி எண்டால் என்னவென்று காமடி பீசுகளுக்கெல்லாம் என்னால் வகுப்பெடுக்கமுடியாது. 

நம்ம சம்பந்தரும் சுமந்துவும் சிங்களத்திடம் தங்களில் இயன்ற அளவு  யாசகம் செய்து என்ன பெறுகிறார்களோ அது தான் எனக்கு உலகில் சமஸ்டி என்று தெளிவாக பதிலளித்திருக்கலாமே வாலி சார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.