Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ மண்ணின் வீர தியாகத்தை மகாகாவியம் ஆக்குவேன்! வைரமுத்து

Featured Replies

ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் மண்ணை நான்தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது.

முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு ஒரு உயிர்ப்பு வரும். முதல் முத்தம் பெறும்போது உயிருக்குள் பூப்பூக்கும். குழந்தைக்கு முதலில் இரத்தம் சொட்டும்போது தாயின் இதயம் துடிக்கும் துடிப்பு போன்றே இந்த மண்ணை நான் தொட்டபோது உணர்ந்தேன.

தமிழனின் விவசாய அறிவு மற்றும் மரபு தொழில் நுற்பங்கள் எல்லாம் மறைக்கப்பட்டமைக்குக் காரணம் வேறுநாட்டவரின் நுற்பங்களை திணிக்கப்பதற்கே என்றும் சுட்டிக்காட்டிய அவர்,

வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் போன்ற ஊர்களின் பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. அவை  சரித்திரத்தில் இடம் பெறும் குறிப்புக்களாகவே இந்த உலகம் உணர்ந்திருக்கிறது என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

mullai_vairamuththu_003.JPG

mullai_vairamuththu_004.JPG

http://www.tamilwin.com/show-RUmuyBRXSWho4A.html

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து  அவர்களே இந்த மண்ணிற்காக உயிரை விட்டவர்கள் வாழ்ந்த மண்ணில் அந்த மண்ணின் வீரத் தியாகத்தை  காவியமாக்குவதற்கு போதிய அளவு கவிஞர்களை ஈழமண் பெற்றெடுத்திருக்கிறது. அவர்களாலேயே அந்த உணர்வின் வலிகளை உயிப்புடன் எழுத முடியும். ஈழத்தாய் வலியில் துடித:துக் கொண்டிருந்த பொழுது எங்களை துடிக்கவிட்டு துரோகம் செய்த கலைஞரின் கூடாரத்தைச் சேர்ந்தவர்தானே நீங்கள்.நீங்கள் கலைஞரையும் .ரஜனியையும் ,புகழ்ந்து எழுதவே உங்களுக்கு நேரம் போதாது. 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஒண்ணும் கிழிக்காம இருந்தாலே போதும்.காசு பாக்க என்னமா யோசிக்கிறாங்க

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து சினிமா வியாபாரக் கவிஞன் என்றாலும்.. ஈழத்தில் சனம் செத்த போது தமிழகத்தில் துடித்த மனிதர்களில் ஒருவர் என்ற வகையிலும்.. இந்திய அளவில் பேசப்படும் ஒரு கவிஞன் என்ற வகையிலும் எமது வீரவியலை.. துன்பியலை.. காவியமாக்குவதில் தன் பங்களிப்பை நல்குவது அவசியம்.

நம்மவர்கள்.. புலி விமர்சனம் என்று புலி வாந்தியில் காலம் கழிப்பதே அதிகம். எதுவும் உருப்படியா ஆக்கினதாகத் தெரியவில்லை. தமிழீழமே கேட்கல்லை என்ற அளவில் அரசியல் செய்ய வெளிக்கிட்டம்.

அந்த வகையில்.. வைரமுத்துவின் இந்த முயற்சியை பாராட்டுவதோடு அந்த இலக்கியம் உண்மையை கூடிய அளவு பிரதிபலித்து நிற்கச் செய்வது நல்லம்.

வன்னி மண்ணில் வாழ்ந்துவிட்டு தமிழகம் ஓடிய எம்மவர்கள் கூட புலி வாந்தி எடுப்பதன் மூலமே தம்மை அடையாளப்படுத்த முனைகின்ற இவ்வேளையில்.. வைரமுத்து ஐயாவின் இந்த இலக்கிய சிந்தனையோட்டம் நல்லது...  வரவேற்க வேண்டியது.

2009 மே க்குப் பின் மகாவம்சத்தை மாற்றி எழுதி வைச்சிட்டான் சிங்களவன். அவன் எல்லாத்திலும் கெட்டித்தனமாக நகர்கிறான். நாங்க.... எந்த முயற்சியிலும் நொட்டையில் தான் காலம் கழிக்கிறம். ஒன்றும் உருப்படியான பண்ணினதில்ல. tw_angry::rolleyes:

நாடெல்லாம் ஓடி வாழும் எம்மவர்கள்.. முள்ளிவாய்க்கால் துன்பியல் அடையாளங்களை எங்கும் பதியவில்லை இன்னும். ஆனால் தஞ்சையில் நினைவு தூபி தொடங்கி தமிழகத்தான் தான் தன் வாழ்வியலில் அந்த துன்பியலை அதிகம் சுமக்கிறான். நம்மவர்கள்.. புலி விமர்சனம்.. மீளாய்வு என்று தியாகங்களை மலினப்படுத்தும்.. செயலையும் அரசியலையுமே முன்னெடுக்க தலைப்படுகிறார்கள். அவர்களை விட வைரமுத்து எவ்வளவோ மேல். வீரம் விளைந்த மண்ணில் நின்று இதை அறிவிக்கும் துணிச்சல் கூட பாராட்டத்தக்கது.

எம்மவர்கள் போல ஹொலிடே போயிட்டு ஊர் சூப்பரா இருக்கென்று கதையளக்கவோ அல்லது கடந்த காலத்தை மறக்கவோ மறைக்கவோ விரும்பவில்லை அவர். அது தான் தேவை.. இப்போ.

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட ஒரு பச்சோந்திதனமான எழுத்தை எங்கும் காணமுடியாது.

 

12553046_1002525026476169_89113642732333
இலங்கை முல்லைத்தீவில் வடக்கு மாகாண
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமை உரையாற்றினார். விவசாயத் துறை அமைச்சர் ஐங்கரநேசன் வரவேற்புரை ஆற்றினார். அதில் சிறப்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து, “ஈழமகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
 
கவிஞர் வைரமுத்து பேசியதாவது,
 
இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் தமிழினம். தமிழினத்தின் முகவரியை உலகம் எங்கும் எழுதியவர்கள் இலங்கைத் தமிழர்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறீர்கள் உங்கள் நம்பிக்கையைத் தவிர. அந்த நம்பிக்கையை ஊட்டத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
 
விழா தொடங்கும் போது வானம் மெல்லிய தூறல் போடத் தொடங்கியது. பெரு மழையே வந்துவிடுமோ என்று பலரும் அஞ்சினார்கள். எந்த மழை வந்தாலும் தமிழர்கள் கலைய மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். வெடி மழையிலேயே கரைந்து போகாத தமிழர்கள் இந்த இடிமழையிலா கரைந்துபோவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். வந்த மேகம் கலைந்து போய்விட்டது. உழவர் பெருவிழா கொண்டாடும் முதலமைச்சரையும் பொதுமக்களையும் பெரிதும் பாராட்டுகிறேன்.
 
தமிழர்களின் ஆதிப் பெருந்தொழில் முதலில் வேட்டை, பிறகு வேளாண்மை. மரபு வழி அறிவோடு வேளாண்மையை அறிவியல்பூர்வமாகக் கையாண்டவர்கள் தமிழர்கள். ஜப்பானிய நடவு முறை தான் பயிர்களுக்கு இடைவெளியைச் சொல்லிக்கொடுத்தது என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதற்கும் முன்பே வேளாண்மையில் நடவுமுறையை விஞ்ஞானப்படுத்தியவர்கள் தமிழர்கள். நெல் நாற்று நட்டால் இரண்டு நெற்பயிர்களுக்கு இடையில் நண்டு ஊர்ந்து செல்லவேண்டும், கரும்பு நட்டால் இரண்டு கரும்புகளுக்கு மத்தியில் நரி ஓடும் இடைவெளி இருக்கவேண்டும். வண்டி ஓடுகின்ற இடைவெளியில் வாழைக் கன்றுகள் நடப்படவேண்டும். தென்னை மரம் நட்டால் இரண்டு தென்னைகளுக்கு இடையில் தேர் ஓடவேண்டும்.
 
“நண்டு ஊர நெல்லு, நரி ஓடக் கரும்பு, வண்டி ஓட வாழை, தேர் ஓடத் தென்னை”
 
என்ற வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள். அதனால் தான் திருவள்ளுவர் உழவுக்கு என்று அதிகாரமே இயற்றினார்.
 
இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இரசாயன உரங்களால் விளையும் விளைச்சலால் மனிதகுலம் புற்று நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது.
 



இராசயன உரங்கள் வளர்ந்து வந்த கதையே வேறு. முதல் உலகப்போரில் எட்டு இலட்சம் கைதிகளைக் கொன்று குவித்த அமோனியாப் புகை தான் போர் முடிந்ததும் பூச்சி கொல்லிமருந்தாய் உருமாறியது. இரண்டாம் உலகப்போரில் மனித குலத்தை அழிக்கப்பயன்பட்ட அமோனியா சூப்பர்பாஸ்பேர்ட் என்ற வெடி உப்புக்களைத் தான் போர் முடிந்ததும் வர்த்தகச் சூதாடிகள் இரசாயன உரங்களாக மாற்றி விற்பனைச் சந்தையை ஏற்படுத்தினார்கள். ஆனால் தமிழர்கள் கண்டறிந்த இயற்கை உரம்தான் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்யாதது. மண்ணுக்கு உயிர் உண்டு என்று கண்டறிந்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் மண்ணை நிலமென்னும் நல்லாள் என்றும் பூமாதேவி என்றும் கொண்டாடினார்கள்.
 
புது யுகத்தின் தமிழ் இளைஞர்களே, உங்கள் வாழ்வு கணிப்பொறியோடு முடிந்துவிடுவதில்லை. விஞ்ஞானம் கற்றுக்கொண்டு வேளாண்மைக்குத் திரும்புங்கள். நடந்து முடிந்த பெரும்போர் உங்கள் வாழ்வைக் குலைத்திருக்கிறது. உங்கள் உறவுகளை அழித்திருக்கிறது. பெற்ற பெரும்துன்பங்களிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். அடைந்த துன்பங்களையே அனுபவங்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். எல்லாத் துயரங்களுக்குக் கீழேயும் நம்பிக்கை என்ற விதை அழியாமல் கிடக்கிறது. அதை முளைக்கச்செய்யுங்கள்.
 
யாழ்ப்பாணம் வந்து இறங்கியதும் இந்த மண்ணை என் உள்ளங்கையிலெடுத்து என் நெற்றியில் வைத்து வணங்கினேன். முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கனத்த மனத்தோடு என் கண்ணீரைச் சிந்தினேன். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, ஆனையிறவு, அம்பாறை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை, புங்குடுதீவு என்பவை எல்லாம் வெறும் ஊர்ப்பெயர்கள் அல்ல. இந்த நூற்றாண்டின் வரலாற்றுக்குறிப்புக்கள். ஈழமகாகாவியம் ஒன்றை எழுதிமுடிப்பதைத் தான் என்வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதிக்கொண்டிருக்கிறேன். கடும் உழைப்பில் அதை நான் நிறைவு செய்வேன்.
 
இனி இந்த மண்ணில் இரத்தம் சிந்தவேண்டாம், எங்கள் தமிழ் மக்கள் புதிய திசையில் புதிய வாழ்வு பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தத் தியாகத்திருமண்ணில் நின்றுகொண்டு சொல்லுகிறேன்,
 
ஏ நிலமே உன்னில் நாங்கள் புதைத்தது போதும் இனிமேல் விதைப்பதற்கு இடம்கொடு.
 
ஏ கடலே உன் அலைகள் இரத்தத்தால் சிவந்தது போதும் இனிமேலாவது வெள்ளை அலைகளை வீசு.
 
ஏ தீயே எங்கள் கூரைகளில் எரிந்தது போதும் இனியாவது அடுப்பில் எரி.
 
ஏ காற்றே எங்கள் சுவாசப்பைகளை வாழ்வால் நிரப்பு,
 
ஏ ஆகாயமே உன் மீது வெடிகுண்டுப் பறவைகள் பறந்தது போதும். இனியாவது சமாதானப் புறாக்களைப் பறக்கவிடு.
 
தமிழர்களே,
 
கல்வியால் உழைப்பால் உங்கள் வாழ்வை மேம்படுத்துங்கள் நாளை நம்முடையது.
 
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
 
விழாவில் சிறந்த வேளாண்மை செய்த நூற்று ஆறு விவசாயிகளுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பரிசு வழங்கினார். விழாவின் தொடக்கமாக கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
10649931_1002524836476188_15935866451920
 
12507122_1002525206476151_20044965949360
 
12507319_1002524566476215_29768269978338
 
12524207_1002524139809591_25586308436555
 
12540582_1002525033142835_22273552866273
 
famer_day_004.jpg
 
famer_day_002.jpg
 
12553046_1002525026476169_89113642732333
 
12552756_1002523899809615_84166301239538
 
famer_day_005.jpg
 
famer_day_007.jpg
 

வைரமுத்து ஒரு மிக சிறந்த கவிஞர் என்பதில் மாற்று கருத்தில்லை 

ஆனால் ஆள் ஒரு கச போக்கிலி .

முன்னரும் பல முறை இதே கருத்தை எழுதியிருந்தேன் .துரோகம் செய்பவர்களை விட அவர்களை தட்டி கொடுப்பவர்களும் துதி பாடுபவர்களும் தான் சமூகத்தில் நஞ்சை விதைப்பவர்கள்.

தொண்ணுறுகளில் வைரமுத்து கனடா வந்தார் .இரண்டு நாட்கள் கவிதை அரங்கு .எனது ஒரு சகோதரமும் அதில் பங்குபற்றி இருந்தார் .முதன் நாள் நிகழ்வில் கவிதை வாசித்த கவிஞர் சக்கரவர்த்தி " ஐயா கனடா பற்றி தண்ணீர் தேசம் எழுதியிருகின்றார் அருகில் இருக்கும் கண்ணீர் தேசம் அவர் கண்ணு தெரியவில்லை " என்று கவிதை வாசித்துவிட்டார் .

கோபமடைந்த வைரமுத்து தன்னை நீங்கள் அவமதித்துவிட்டீர்கள் என்று இரண்டாம் நாள் நிகழ்வை ரத்து செய்ய சொல்லிவிட்டார் .

கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது அவரை துதி பாடுவதில் தான் இவர் தொழில் ஒருநாள் கூட விடுதலை போராட்டத்திற்காக குரல் கொடுக்காதவர் இன்று எல்லாம் முடிந்த பின் ஒப்பாரி வைக்க போறாராம் .

 

தான் பாடல் எழுதும் சினிமா படங்களுக்கு வேறு கவிஞர்களை பாடல் எழுத அனுமதிக்ககூடாது  என்று  நிபந்தனை போட்ட  புண்ணியவான் இவர் .

இன்று  இளிச்ச வாயர் இலங்கை தமிழர்கள் பணத்தில் உலகம் சுற்ற நினைத்துவிட்டார் .

நாங்கள் திருந்தவே இடமில்லை ஒருவன் எங்களை சும்மா புழுகி விட்டால் காணும் உடனே டிக்கெட் அனுப்பி கூப்பிட்டு மேடை ஏற்றிவிடுவோம் .

Edited by arjun
எழுத்து பிழை திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

வைரமுத்து ஒரு மிக சிறந்த கவிஞர் என்பதில் மாற்று கருத்தில்லை 

ஆனால் ஆள் ஒரு கச போக்கிலி .

முன்னரும் பல முறை இதே கருத்தை எழுதியிருந்தேன் .துரோகம் செய்பவர்களை விட அவர்களை தட்டி கொடுப்பவர்களும் துதி பாடுபவர்களும் தான் சமூகத்தில் நஞ்சை விதைப்பவர்கள்.

தொண்ணுறுகளில் வைரமுத்து கனடா வந்தார் .இரண்டு நாட்கள் கவிதை அரங்கு .எனது ஒரு சகோதரமும் அதில் பங்குபற்றி இருந்தார் .முதன் நாள் நிகழ்வில் கவிதை வாசித்த கவிஞர் சக்கரவர்த்தி " ஐயா கனடா பற்றி தண்ணீர் தேசம் எழுதியிருகின்றார் அருகில் இருக்கும் கண்ணீர் தேசம் அவர் கண்ணு தெரியவில்லை " என்று கவிதை வாசித்துவிட்டார் .

கோபமடைந்த வைரமுத்து தன்னை நீங்கள் அவமதித்துவிட்டீர்கள் என்று இரண்டாம் நாள் நிகழ்வை ரத்து செய்ய சொல்லிவிட்டார் .

கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது அவரை துதி பாடுவதில் தான் இவர் தொழில் ஒருநாள் கூட விடுதலை போராட்டத்திற்காக குரல் கொடுக்காதவர் இன்று எல்லாம் முடிந்த பின் ஒப்பாரி வைக்க போறாராம் .

 

தான் பாடல் எழுதும் சினிமா படங்களுக்கு வேறு கவிஞர்களை பாடல் எழுத அனுமதிக்ககூடாது  என்று  நிபந்தனை போட்ட  புண்ணியவான் இவர் .

இன்று  இளிச்ச வாயர் இலங்கை தமிழர்கள் பணத்தில் உலகம் சுற்ற நினைத்துவிட்டார் .

நாங்கள் திருந்தவே இடமில்லை ஒருவன் எங்களை சும்மா புழுகி விட்டால் காணும் உடனே டிக்கெட் அனுப்பி கூப்பிட்டு மேடை ஏற்றிவிடுவோம் .

உங்கள்  கருத்தோடு  உடன்பாடு தான்

வைரமுத்து சுயநலவாதி தான். இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை

இதையே சோபா சக்திமீது நாங்கள் எழுதிவிட்டால் உங்கள் பதில்........???

அவர் எங்கேயோ போய்விட்டார் 

அவரை நாம் பாவிக்கணும் என்பது தானே....

அதையே வைரமுத்துவை வைத்து செய்தாலென்ன?

அவரும் தமிழுலகில் பெரிய எழுத்தாளர் தானே...

6 minutes ago, விசுகு said:

உங்கள்  கருத்தோடு  உடன்பாடு தான்

வைரமுத்து சுயநலவாதி தான். இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை

இதையே சோபா சக்திமீது நாங்கள் எழுதிவிட்டால் உங்கள் பதில்........???

அவர் எங்கேயோ போய்விட்டார் 

அவரை நாம் பாவிக்கணும் என்பது தானே....

அதையே வைரமுத்துவை வைத்து செய்தாலென்ன?

அவரும் தமிழுலகில் பெரிய எழுத்தாளர் தானே...

அண்ணை ஏன் ஆட்டிற்குள் மாட்டை விடுகின்றீர்கள் .

"பாவிக்கணம் " என்ற சொல் எனது அகராதியில் இல்லை .பாவிக்க வெளிக்கிட்டால் விரைவில் பழுதுஆகிவிடும் 

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே க்குப் பின் எங்களுக்குள் இருந்து முளைத்திருக்கும் பச்சோந்திகளைக் காட்டிலும்.... வைரமுத்து எவ்வளவோ மேல்.

காட்டிக்கொடுத்தவனை எல்லாம் புகழ்ந்து திரிகிறம்.. சாதியம் பேசுறவை எல்லாம் வரவேற்கிறம்.. குழந்தைகள் கொல்லப்பட்டதை மறைத்து.. குழந்தைப் போராளிகள் என்பதை உச்சரித்து சொந்த வயிறும்.. புகழும் தேடுபவனை வாழ்த்திறம்.. ஆனால்.. அயலில் சொந்த இனம் மடிந்த போது கையாலாகாமல் இருந்தமே என்ற தவிப்பில் ஒரு கவிஞன் தன் பாவத்திற்கான பிராய்ச்சித்தமாக.. அந்த இனத்தை இன்னும் இன்னும் வேதனைப்படுத்தாமல்.. காட்டிக்கொடுத்து சீரழிக்காமல்.. அதன் துன்பியலை காவியமாக்கி வைக்கனும் என்று துடிக்கிறானே அந்த துடிப்பு வரவேற்கப்பட வேண்டும்.

இன்று தமிழீழ கலைபண்பாட்டுக்கழகம் இருந்திருந்தால்..  வைரமுத்து ஐயா சிகரம் தொட்டிருப்பார். இங்கு திட்டும் சிலர் மெளனமாகிக் கிடந்திருப்பர். இன்னொரு சந்தர்ப்பத்திற்காக. ஆனால்.. அவை இல்லாத பொழுதும் இனப்பற்றால்.. துடிக்கிறானே ஒரு கவிஞன்.. அது போலியாக உளத்தில் இருக்கோ இல்லையோ என்பதை விட எம்மவர்கள் பலரின் சுயநலத்தை.. விட புனிதமாக உள்ளது. அது வரவேற்கப்பட வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர்களுடன் சேர்ந்தே இருப்பது; வறுமை. (புலமையும், வறுமையும்). மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் என பட்டியல் நீளும்.

ஆனாலும், வாலியும், வைரமுத்துவும் கவிப்புலமை மட்டுமின்றி, பணத்தை கவனமாக சேர்த்த, பணக்கார கவிஞர்கள்.

90 களில் இலண்டன் வந்திருந்தார் வைரமுத்து. பத்திரிகை ஒன்று பேட்டி வாங்க முயன்றது. உதவியாளர், கவிஞர் தயார், ஆனால்.... 

கேள்விக்கு £100 என்றாரே பார்ககலாம். அடுத்த இதழில், இதை அப்படியே பிரசுரித்த பத்திரிகை, எம்மை இழித்த வாயர்கள் என்றா கருதுகிறீர்கள் என்று கேட்டு வைத்தது.

என்னைப் பொறுத்த வரை இவர் ஒன்றும் எழுதார், யாரும் பணம் தரும் வரை...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எதோ சொல்லுங்க,
இங்கு வரும் பிரபல பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், நடிக, நடிகைகள் எல்லோரிடமும் பறந்து இருக்கும் ஒன்று சுயநலமும். அது தான் "சினிமாத்தனம்".
அந்தவகையில் கவிஞரின் சுயநலமும்  எல்லோரும் அறிந்த ஒன்று தான்.
அவரின் அழகு தமிழிலும் எமது போராட்ட வரலாறு எழுதப்படுமானால் ... நான் வாசிப்பேன். அவ்வளவே.

உதாரணம் : கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு புலிக்கொடி தூக்கிய நாட்களில் அவர்களை தூற்றி மண்ணை வாரி இறைத்தோம் ...இன்று அவர்கள் இலங்கையில்  அரசியல் செய்யும் தமிழ் அமைப்புகளுடன் கைக்கோர்த்தல் அதிலும் குறை கண்டு மீண்டும் மண்ணை வாரி இறைகிறோம்...
எது சரி எது பிழை? நமக்கு தலை சுத்துகிறது.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

முனி.. பகிரங்கமாக அறிவிச்சிட்டு.. பணம் கேட்பாரா என்பது கேள்விக்குரிய விடயம். மேலும் விக்கி ஐயா ரகசியமாக் கேட்டுக் கொண்டதையே மேடையில் பகிரங்காமகவும் சொல்லி இருக்கிறார். பார்ப்போம்.

வியாபாரிகள் அவரை அணுகும் பொது அவர் நடந்து கொள்வதற்கும்.. ஒரு இனத்தலைமைகள் அவரை அணுகும் போது அவர் நடந்து கொள்வதற்கும் இடையில் வேறுபாடு இருக்கும். அந்த வேறுபாடு தான் இவர் யார் என்பதை மக்களுக்கு இனங்காட்டும்.

பொறுத்திருந்து பார்ப்பமே. எது எதுக்கோ எல்லாம் இலவு காக்கிறம். tw_blush:

10 minutes ago, Nathamuni said:

கவிஞர்களுடன் சேர்ந்தே இருப்பது; வறுமை. (புலமையும், வறுமையும்). மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் என பட்டியல் நீளும்.

ஆனாலும், வாலியும், வைரமுத்துவும் கவிப்புலமை மட்டுமின்றி, பணத்தை கவனமாக சேர்த்த, பணக்கார கவிஞர்கள்.

90 களில் இலண்டன் வந்திருந்தார் வைரமுத்து. பத்திரிகை ஒன்று பேட்டி வாங்க முயன்றது. உதவியாளர், கவிஞர் தயார், ஆனால்.... 

கேள்விக்கு £100 என்றாரே பார்ககலாம். அடுத்த இதழில், இதை அப்படியே பிரசுரித்த பத்திரிகை, எம்மை இழித்த வாயர்கள் என்றா கருதுகிறீர்கள் என்று கேட்டு வைத்தது.

என்னைப் பொறுத்த வரை இவர் ஒன்றும் எழுதார், யாரும் பணம் தரும் வரை...

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

எதோ சொல்லுங்க,
இங்கு வரும் பிரபல பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், நடிக, நடிகைகள் எல்லோரிடமும் பறந்து இருக்கும் ஒன்று சுயநலமும். அது தான் "சினிமாத்தனம்".
அந்தவகையில் கவிஞரின் சுயநலமும்  எல்லோரும் அறிந்த ஒன்று தான்.
அவரின் அழகு தமிழிலும் எமது போராட்ட வரலாறு எழுதப்படுமானால் ... நான் வாசிப்பேன். அவ்வளவே.

கைல காசு, வாயில தோசை...

சிறந்த கவிஞர்: பேசாமல், இப்படி கவிதை வடித்துத் தர, உங்கள் நேரத்துக்கு தகுந்த சன்மானம் தருகின்றோம் என்று நேரடியாக பேசுவது நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து தன் காவியத்தில் 3 மணித்தியாலங்களில் போரை முடித்து வைத்த காவியநாயகனாக கலைஞர் கருணாநிதியின் பாத்திரத்தையும் சித்தரிப்பார். Okayயா?ஏனென்றால் இந்தக்காவியத்திற்கு முன்னுரை எழுதப்போவதும் அதனை வெளியிட்டு வைக்கப்போவதும் கலைஞர்தான்(அவர் உயிரோடு இருக்கும் போது காவியம் வெளிவந்தால்)கலைஞரோடு ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் பேசும் வைரமுத்து போரின் இறுதிநாட்களில் கலைஞருக்கு இடித்துரைத்திருக்கின்றாரா?இவரை விட கலைஞர் இந்தக்காவியத்தை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.okayயா?

இடிப்பாரை இல்லா ஏமராமன்னன்

கெடுப்பார் இல்லாவிடினும் கெடும்.

வைரமுத்து உண்மையில் தமிழின் விடுதலைக்காக எழுதுபவர் என்றால் அன்றே வன்னிக்கு அழைக்கப்பட்டிருப்பார்.ஒருமுறை கனடாவில் வைத்து ஈழத்தின் தேசிய கீத்த்தை தானே எழுதுவேன் என்றும் சொன்னவர்.ஈழத்தின் வலியை அதனை உணரந்தவர்களாலேயே எழுத முடியும் .அவர்ஒரு நல்ல கவிஞர் ஆனால் ஈழகாவியம் எழுத தகுதி அவருக்கு இல்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்து எழுதிய

"விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?"

போன்ற பாடல் வரிகள் ஏற்படுத்தும் உணர்வுகளை யோசித்துப் பார்த்தால் அவர் ஈழ மகாகவியம் எழுதலாம் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நேர்மையான முறையில் அரசியல் சார்பின்றி எழுதுவாரா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் யார்தான் அப்படி எழுதமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

விவசாய் அமைச்சின் விழாவில் வைரமுத்துவிற்கு என்ன வேலை?...இவரை யார் அழைத்தார்கள்? எதற்காக அழைத்தார்கள்?...ஈழ மக்கள் இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரருக்குப் பின்னால் போக தொடங்கி விட்டார்கள். நல்லதிற்கில்லை

வைரமுத்து இதை பலமேடைகளில் சொல்லிவிட்டார் ,செய்தபாட்டை காணவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகப் ஈழ காவியத்தையும் அதன் நாயகரையும் கவியெழுத வைரமுத்து தகுதியானவரே!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Gari said:

வைரமுத்து இதை பலமேடைகளில் சொல்லிவிட்டார் ,செய்தபாட்டை காணவில்லை .

அது தான், காரணம் மேலே சொல்லி விட்டேனே!

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து மகா காவியம் எழுத தகுதியானவர்தான். அதுசரி தேர்தல் நேரத்தில் கவிஞரின் திக்கு விஜயம் யோசிக்க வைக்கிறது. 2009 இல் நிறையவே செய்திருக்கலாம். இந்தக் குளத்தில் திரும்பவும் யாரோ கல் எறிகிறார்கள் போல் உள்ளது.

குறிப்பு: 2009 இன் பின்பு திருமா கருணாநிதியின் சார்பில் லண்டன் வந்தார். ஒரு தொலைகாட்சி நேரலை நிகழ்சியில் நேர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் , மிகவும் கோபப் பட்டார், ஏன்? எல்லாம் கருணாநிதியை பற்றிய இடக்கு முடக்கான கேள்விகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2016 at 5:57 PM, arjun said:

அண்ணை ஏன் ஆட்டிற்குள் மாட்டை விடுகின்றீர்கள் .

"பாவிக்கணம் " என்ற சொல் எனது அகராதியில் இல்லை .பாவிக்க வெளிக்கிட்டால் விரைவில் பழுதுஆகிவிடும் 

எழுதும் பதில்களிலேயே தெரிகிறது சிலர் அதைப்பாவிப்பதில்லை என்று.
இன்று நீங்களே அதை சொல்லிவிட்டீர்கள். கனகாலம் பாவிக்காமல் விட்டால் மங்கிப்போயவிடும் என்று சிலர் சொல்லக் கேள்வி.

பாவிக்க வேண்டியதை பாவிக்காமல் விட்டாலும் பழுதாய் போய்விடும்.
பிறகு வேற பிரச்சனைகள்அக்கம்பக்கத்திலை இருந்து  வரப்பார்க்கும்.:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சிலர் வைரமுத்துவை பற்றி எழுதுவதை பார்த்தால் குழப்பமாக உள்ளது. அவர் வட இலங்கைக்கு வந்தது தவறா?. தான் ஈழ மகா காவியம் எழுதுவேன் என்று தைரியமாக சிங்கள படை முன்னர் சொன்னது தவறா?. ஈழ மக்களை உயர்த்தி பேசியது தவறா?. எதற்கெடுத்தாலும் ஒரு தவறான அர்த்தத்தை காண முற்படாமல் ஒருவர் வந்து உங்களுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறாரே என்று எண்ண வேண்டும். அவருக்கு இந்த பயணத்தால் ஒரு லாபமும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை. ஆம், அவர் கருணாநிதியுடன் நெருக்கமாக உள்ளவர். அதற்காக அவர் கருணாநிதியை பற்றி ஒரு வார்த்தையும் இலங்கையில் வைத்து சொல்ல வில்லையே. அவர் பேசியதெல்லாம் தன்னுடைய கவிதை பணி பற்றியே அன்றி ஒன்றுமில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.