Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிக் குடும்பம்

Featured Replies

கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிக் குடும்பம்

கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிக் குடும்பம்
 
எனக்கு ஒரு காலும் இல்லை கையும் இல்லை அரசு முதல் அரசியல் வாதிகள் வரை எங்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது விட்டாலும் பரவாயில்லை ஒரு கால் மற்றும் கை இல்லாத நான் சிரமம் இன்றி மலசலம் கழிப்பதற்கு ஒரு மலசலக் கூடத்தையாவது அமைத்துதாருங்கள் என்று பலரிடம் கேட்டப்போதும் எவரும் எம்மை கண்டுகொள்ளாமை மிகுந்த மனவருத்தம் தருகிறது. சாதாரன மலசல கூடம் ஒன்றில் ஒரு பக்கத்தில் சீமெந்து கல் ஒன்றை வைத்து பயன்படுத்துகிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின்  நிலைமையும்  இப்படிதான் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியில் வாழ்கின்றனர். என்கிறார்
 
இராஜேந்திரம் ரூபன் வயது 30. கிளிநொச்சி தர்மபுரம் உழவனூ; கிராமத்தில்  வாழ்கின்ற ஒரு கையையும், கால் ஒன்றையும் நாட்டுக்காக இழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு முன்னாள் உறுப்பினர். 
 
2009 இற்கு முன் ஹீரோக்களாக வலம் வந்தவர்களில் ஒருவர். பேராளிகள் எங்கள் வீட்டுக்கு வர மாட்டார்களா? ஒரு  வேளை சாப்பிட மாட்டார்களா? நாங்கள் வாங்கிக்கொடுக்கும் உடைய உடுத்த மாட்டார்களா? என ஒரு காலத்தில் ஏங்கிய சமூகத்தில்தான் இன்று ரூபன் எவருமே கண்டுகொள்ளதாவராக வாழ்கின்றார். எல்லோராலும் கைவிடப்பட்டவராக உணர்கின்றார். 
 
எந்தச் சமூகத்திற்காக  ஆயுதம் ஏந்தினாரோ எந்தச் சமூகத்திற்காக தனது  கால் ஒன்றையும், கையையும் இழந்தாரோ அந்தச் சமூகத்தின்  பிரதிநிதிகளால் கைவிடப்பட்டுள்ளார் ரூபன். 
 
2009 இற்கு முன் இவர்களை பயன்படுத்தி வாழ்ந்தவர்கள், தற்போது இவர்களை பயன்படுத்தி அரசியலில்; வாழ்கின்றவர்கள் எல்லாம் இவர் போன்ற ஆயிரக்கணக்கானவர்களை அசிங்கமாக பார்க்கின்றனர்.
 
இது தனியொரு ரூபனின் கதையல்ல  ரூபன் ஒரு உதாரணம். ரூபனை போன்றுதான் இன்று புனர்வாழ்வின் பின் விடுதலையாகி வந்த ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள்  உறுப்பினர்களின் கதைகள் காணப்படுகிறது. இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இப்போது சொந்த வாழ்வில் வாழ்வதற்காக போராடுகின்றனர்.
 
ரூபனும் அவ்வாறுதான் தனது ஏஞ்சிய வாழ்க்கைகாக போராடுகின்றார். இவரின் மனைவியும் புனர்வாழ்வுப் பெற்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு முன்னாள் உறுப்பினர். ரூபன் தனது கால் ஒன்றையும், கையினையும் தனது தேசத்திற்காக  இழக்கும் முன்பே காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டார்.
ஒரு குழந்தையுடன் நிரந்தர வீடு இன்றி வாழ்ந்து வரும் இவர்களுக்கு அரசோ, வடக்கு மாகாண சபையோ அறிவித்தமைக்கு அமைவாக எந்த உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்காக சமூகசேவைகள் அமைச்சினால் வழங்கப்படுகின்ற மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு மட்டும் கிடைப்பதாகவும் அதற்காக அக்கறையோடு செயற்பட்ட கண்டாவளை சமூகசேவைகள் உத்தியோகத்தருக்கு நன்றி தெரிவிப்பதாகவும குறிப்பிடுகின்றார் ரூபன்.
 
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் போது அரசு உள்நாட்டிலும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி பெரியளவில் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆதாவது வேலைவாய்ப்பு, சுயதொழில் ஊக்குவிப்புக்கான இலகு வங்கிகடன், வாழ்வாதார நடவடிக்கைகளில் முன்னுரிமை என கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் செய்யப்பட்டது. ஆனால் நடைமுறையில் அவை எவையும்  பெருமளவுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை சென்றடையவில்லை. இந்த நடவடிக்கைகள் எல்லாம் அரசின் பிரச்சாரத்திற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு சில முன்னாள் உறுப்பினர்களோடு முடிந்துவிட்டது.
 
தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதர்கொண்டு வருகின்றனர். அவற்றில் மிக முக்கியமானது அவர்களது பொருளாதார நெருக்கடி.  விடுதலைப்புலிகள் அமைப்பின் பல முன்னாள் உறுப்பினர்கள் தனித்து விடப்பட்டவர்களாக தவித்துகொண்டிருக்கின்றார்கள்.
 
ரூபனும் அவ்வாறுதான். தன்னுடைய பொருளாதார நெருக்கடிகள், தங்களை எல்லோரும் கைவிட்டமை தொடர்பில் விரக்தியும் வெறுப்பும் கொண்டுள்ள ரூபன,; தனக்கு ஒரு காலும் கையும் இன்மையால் ஏனையவர்கள் போன்று தனது சுய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது இருக்கின்றது எனவும், அதனை கருத்தில் எடுத்து மாற்று திறனாளிகள் வசதியாக மலசலம் கழிக்க கூடிய வகையில்  மலசலக்கூடம் ஒன்றை அமைத்து தருமாறு அதிகாரிகள் முதல் மாவட்டத்தின் அரசியல் வாதிகள் வரை சென்றதாகவும் ஆனால்  இதுரை எதுவும் நடக்கவில்லை என்றும் எனவே எனது வசதிகேற்ப ஒரு சாதாரன மலசல கூடத்தை அமைத்துள்ளதாகவும் குறிப்பிடும் அவர்.
 
அந்த மலசல கூடத்தை என்னால் சாதாரன மனிதர்கள் பாவிப்பது போன்று பாவிக்க முடியாது எனவும் எனவே மலசல கூடத்தின் ஒரு பகுதியில் சீமந்து கல் ஒன்றை வைத்து உடலை சமநிலைப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிடும் அவர் நீண்ட நேரத்திற்கு அவ்வாறு இருக்க முயாது என்றும் கவலையுடன் தெரிவித்தார்.
 
மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கொமற் வைத்து ஒரு மலசல கூடம் அமைப்பதற்கு ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் தேவை என்றும்  உணவுத் தேவைக்காக நாளும் பேராடுகின்ற தனக்கு இந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனாலேயே எம்பிமார் உள்ளிட்ட பலரிடம் சென்று உதவி கோரிய போதும் எவரும் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கின்றார்.
 
எனவேதான் இனி எவரிடமும் செல்லக் கூடாது என்று முடிவெடுத்துள்ளதாகவும் விரக்த்தியுடன் தெரிவிக்கின்றார்.
வார்த்தைக்கு வார்த்தை விடுதலைப்புலிகள் அமைப்பின் பல முன்னாள் உறுப்பினர்களை பற்றியும் அவர்களுது வாழ்க்கை பற்றியும் பேசுகின்றவர்கள் அவர்களை வைத்து உள்ளுர் முதல் சர்வதேசம் வரை அரசியல் ஆதாயம் தேடுகின்றவர்கள்  ரூபன் போன்று உள்ள முன்னாள் போராளிகளுக்கு என்ன செய்யப் போகின்றார்கள்? 
 
மு.தமிழ்ச்செல்வன்
 
எங்கட கணக்கு  பார்த்தபின் மலசலகூடம் என்ன  வீடே கட்டி தாறம் 

 கணக்கு பார்த்து முடியும் ஆனால் முடியாது . 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, arjun said:

எங்கட கணக்கு  பார்த்தபின் மலசலகூடம் என்ன  வீடே கட்டி தாறம் 

 கணக்கு பார்த்து முடியும் ஆனால் முடியாது . 

அர்சுன் அங்கவீனர்களைக் கூட விடமாட்டீர்களா?

6 minutes ago, ஈழப்பிரியன் said:

அர்சுன் அங்கவீனர்களைக் கூட விடமாட்டீர்களா?

அவ்வளவு கோவம் இவர்களை இப்படி உருவாக்கி விட்டு கை விட்டவர்களில் .

எப்படி இவர்களுக்கு சாப்பாடு சேமிக்கிறது என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் கட்டும் மாவீரர் சமாதியின் செலவில் இருந்து ஒரு துளி தானும் கொடுக்கலாம்! இப்ப வருவார்கள் பாருங்கள், தேசியம், தேசிக்காய் புடலங்காய் கத்தரிக்காய் எண்டு கொண்டு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, arjun said:

அவ்வளவு கோவம் இவர்களை இப்படி உருவாக்கி விட்டு கை விட்டவர்களில் .

எப்படி இவர்களுக்கு சாப்பாடு சேமிக்கிறது என்று தெரியவில்லை .

உருவாக்கியவர்களை அழிக்கும் வரைக்கும் தம்மக்களை சிறப்போடுதான் வைத்திருந்தார்கள். இதை சர்வதேசம் இன்றும் சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

அவ்வளவு கோவம் இவர்களை இப்படி உருவாக்கி விட்டு கை விட்டவர்களில் .

எப்படி இவர்களுக்கு சாப்பாடு சேமிக்கிறது என்று தெரியவில்லை .

எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாய் செய்வதால் எவ்வளவோ சாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் உருவாக்கினார்கள்

அழித்தவர்கள் யார்?

அவர்களது கட்டுமானங்களையெல்லாம் தூர நோக்குடன் அழித்தவர்கள்

அழிக்க துணை போனவர்கள் யார்?

ஒருவரை அழித்தவன் மிகுதிக்கு பதில் சொல்லணுமா?

அழிந்து போனவன் பதில்சொல்லணுமா?

அழித்தவர்கள் மீதுதானே கோபம் வரணும் 

எதுக்கெடுத்தாலும் காலைத்தூக்கும் கூட்டத்துக்கு 

அவர்களும் ஒரு கல்லாகத்தான் பயன்படுகிறார்கள்...

ஆடு நனையுதெண்டு ஓநாய்கள் அழுவதன் நோக்கம்  யாழ் அறியும்...

19 hours ago, குமாரசாமி said:

உருவாக்கியவர்களை அழிக்கும் வரைக்கும் தம்மக்களை சிறப்போடுதான் வைத்திருந்தார்கள். இதை சர்வதேசம் இன்றும் சொல்கின்றது.

அப்ப மக்கள் ஏன்  அங்கிருந்து வெளியில் போக நினைத்தார்கள்

அப்ப புலிகள் ஏன் பாஸ் குடுக்க மறுத்தார்கள் 

வெளிநாட்டில் இருந்து ஏன் எவரும் திரும்பி போகவில்லை .

சர்வதேசம்? ஒரு நாட்டின் பெயரை எழுதவும் .

 வன்னியில் தேனும் பாலும் பொழிந்தது

முப்படையும் கொண்டு சீரும் சிறப்பாக ஆட்சி நடந்தது  என்று காலம் பூரா உங்களுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கலாம் .

வாயே திறக்க ஏலாது அதற்குள் இந்த புலுடாக்கள்  வேறு .

31 minutes ago, விசுகு said:

ஆடு நனையுதெண்டு ஓநாய்கள் அழுவதன் நோக்கம்  யாழ் அறியும்...

ஆடுகளுக்கு கிடைக்க வேண்டிதை வெளிநாட்டு ஓநாய்கள் ஆட்டையை போட்டதை தான் அவர்களும் கூறுகிறார்கள். உங்களுக்கு தெரிந்த அமைப்புகள் எத்தனை முன்னாள் போராளிகளுக்கு இதுவரை உதவியிருக்கிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலும் சரி.. புலம்பெயர் நாட்டிலும் சரி பலர் முன்னாள் போராளிகள் என்று சொல்லி மொத்த உலகத்தையும் ஏமாற்றி வருவதும் நிகழ்கிறது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு குடும்பத்தினர் இப்படி சொல்லிச் சொல்லி பலரிடம் உதவி வேண்டி இருந்தமை வெளிப்பட்டிருந்தது.

மிக அண்மையில்.. நடந்த ஒரு சம்பவம்..

ஒரு குடும்பத்தில் ஒருவர் லண்டனில் ஒருவரை மணம் முடித்து ஊரில் இருந்து வருகிறார்...

வந்து 3 வருடங்கள் ஆனதும்.. குழந்தையை வயிற்றில் காவுகிறார்.

அந்தக் குழந்தையை பெற்றெடுக்க.. கவனிக்க.. தாயைவிட்டு தங்கையை லண்டனுக்கு கூப்பிட முனைகிறார்... (ஏனென்பது உலகிற்கே வெளிச்சம்)

அவர் வங்கிக் கணக்கை விசா பிரிவுக்கு சமர்ப்பிக்கிறார்.

500,000 லண்டனில் இருந்து போயிருக்குது. (இத்தனைக்கு கணவரும் மனைவியும் லண்டனில் வேலை செய்வதில்லை. கணவர் சுகவீனம் என்று சொல்லி அந்த அரச கொடுப்பனவை மட்டுமே எடுக்கிறார்.)

350,000 அரசாங்க வீட்டு கடனுதவி.

150,000 எப்படியோ வந்து சேர்ந்துள்ளது. (கேட்டால்.. புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்த உதவியாம்)

இத்தனைக்கும்.. இவர்கள் போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களே இல்லையாம். 

----------------

இப்படியான சம்பவங்களும் நிகழ்கின்ற இடத்தில்.. சரியான இடங்களை சரியான ஆதரங்களோடு அணுகின் நிச்சயம் முன்னாள் போராளிகளுக்கு உதவ பலர் இன்னும் தயாராகவே உள்ளனர்.:rolleyes:

இப்போது தாயகத்தில் தமிழ் மக்கள் பேரவை.. முன்னாள் போராளிகள்.. மாவீரர் குடும்பங்கள் பற்றிய விபரக் கோவையை தயாரித்து வருவதாகக் செய்திகள் வந்தன. அது நடந்து உண்மையாக உதவி தேவைப்படும்  முன்னாள் போராளிகளும் மாவீரர் குடும்பங்களும் போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களும்.. இனங்காணப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய தமிழ் மக்கள் பேரவை சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு சரியான பரிந்துரைகளை வழங்கின் அது மிக நன்மையாக அமையும்.

அதுமட்டுமன்றி.. இப்படியான குற்றச்சாட்டுக்களின் பின்னால் இருப்பது உண்மையா.. பொய்யா.. வெளிவேசமா.. பாசாங்கா... ஊடகங்களின் நீலிக்கண்ணீரா.. விளம்பரம் தேடலா.. என்பது தெரிய வரும். உண்மை என்றால் உதவிகள் போய் சேர வகை செய்ய வேண்டும். tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் 
உறவெல்லாம் முள்ளாகும் 
உயிரெல்லாம் கல்லாகும் 
...
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு   tw_cry: 
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

அப்ப மக்கள் ஏன்  அங்கிருந்து வெளியில் போக நினைத்தார்கள்

உலக நாடுகளில் உள்ள திகதி முடிந்த செல்கள் எல்லாம் வாங்கி 
சென்று ஆயிர கணக்கில் வாண வேடிக்கை காட்டவா அடித்தார்கள் ?

அப்ப புலிகள் ஏன் பாஸ் குடுக்க மறுத்தார்கள் 

புலிகள் பாஸ் நடைமுறை கொண்டு வரமுதல் 
ஏன் எல்லோரும் ஓடி தப்பவில்லை ?
சிங்கள இராணுவத்திடம் ஓடி இருந்தால் அவர்கள் 
சீராட்டி வளர்த்திருப்பர்களே ? 

வெளிநாட்டில் இருந்து ஏன் எவரும் திரும்பி போகவில்லை .

ஏன் இப்போ தேனிலும் பாலிலும் குளிக்க ஒருவரும் போகவில்லை ?
இங்கு பனியில் நடுங்கி திறிகிறார்கள் ?
அதே காரணம்தான் !

சர்வதேசம்? ஒரு நாட்டின் பெயரை எழுதவும் .

அமெரிக்கா 
சிங்கபூர் 
மெக்ஸிகோ 
சுவிஸ் 
நோர்வே (எரிக் சொல்கேம் உட்பட) 

 வன்னியில் தேனும் பாலும் பொழிந்தது

முப்படையும் கொண்டு சீரும் சிறப்பாக ஆட்சி நடந்தது  என்று காலம் பூரா உங்களுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கலாம் .

அப்ப வெற்றி நிச்சயம் என்று 30 ஆயிரம் படை எடுத்துப்போன 
சிங்கள காடைகள் வன்னியில் நின்ற மாடுகளை பார்த்து 
ஓடி வந்தார்களாக்கும் ? 

வாயே திறக்க ஏலாது அதற்குள் இந்த புலுடாக்கள்  வேறு .

வாய் திறந்திருக்கு ...
இனி உங்களின் புளுடாக்களுடன் வாருங்கள் 

  • தொடங்கியவர்

முன்னாள் போராளிகளே கிடைத்த உதவிகளை மறைக்காதீர்கள் - போதாவிட்டால் மேலும் கேளுங்கள்..

ஊடகவியலாளர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றாதீர்கள்....

முன்னாள் போராளிகளே கிடைத்த உதவிகளை மறைக்காதீர்கள் - போதாவிட்டால் மேலும் கேளுங்கள்..

முன்னாள் போராளிகளே கிடைத்த உதவிகளை மறைக்காதீர்கள் - போதாவிட்டால் மேலும் கேளுங்கள்.. ஊடகவியலாளர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றாதீர்கள்....

இந்தப் பதிவை மனவருத்தத்துடன் வெளியிடுகிறோம்.. முன்னாள் போராளிகளை, அவர்களது தியாகங்களை கொச்சைப்படுத்துவது எமது நோக்கம் அல்ல. ஆயினும் முன்னாள்,  போராளிகள் பலர் ஏற்கனவே பல உதவிகளை பலரிடம் பெற்றுக்கொண்டு, தமக்கு யாருமே உதவவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல... மறுபுறத்தில் உண்மையில் எந்த உதவிகளுமே கிடைக்காத பல முன்னாள் போராளிகளுக்கு உதவ முன்வருபவர்களும் பின் வாங்கும் சூழல் ஏற்படலாம்.. எனவே தயவு செய்து இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்...  ஏற்கனவே உதவிகளை பெற்று ஒன்றுமே கிடைக்கவில்லை என இனிவரும் காலங்களிலும் எவரும் கூறக் கூடாது என்பதனை தெளிவுபடுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்,

நன்றி

ஆ.ர்

மதிப்புக்குரிய நடராஜா குருபரன் அவர்களுக்கு,

கடந்த 26ம் திகதி தங்களின் இணையத்தளத்தில் "கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிக் குடும்பம்" என்ற தலைப்பில்  மு.தமிழ்ச்செல்வன் என்பவர் எழுதியிருந்த ஆக்கத்தைப் பார்த்து  புலம்பெயர் தமிழர்கள் பலர் வேதனையடைந்ததையும் வெட்கப்பட்டதையும் தமது முகநூல் வாயிலாக வெளிப்படுத்தியிருந்ததுடன் இவர்களைப் போன்ற எமது முன்னாள் போராளிகளுக்கு எவ்வாறு உதவுவதுஇவர்கள் போன்றவர்களின் தரவுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்று அறிய ஆவல்பட்டதையும் அறிய  முடிந்தது.    

எமது தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புலம்பெயர் மக்களால் தனிப்பட்ட ரீதியாகவும்சிறு அமைப்புக்கள் மூலமாகவும்  ஆங்காங்கே சிறு உதவிகள்  செய்யப்பட்டு வருவது நம்மில் பலர் அறிந்ததேகனடாவில் இருந்து கல்வி கனெக்சன் என்ற எமது  நிறுவனமும் எமது புலம் பெயர் மக்கள் சிலரின் உதவியுடன் கிளிநொச்சியில் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்களால் நிர்வகிப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை ஊடாக இவ்வாறன சில குடும்பங்களுக்கு நிரந்தர வருமானம் பெறக்கூடிய ஒரு சிறிய தொழில் ஒன்றை உருவாக்கிக் கொடுத்து கடந்த மூன்று வருடங்களாக உதவிவருகின்றது, அதில் பல முன்னாள் போராளி குடும்பங்களும் அடக்கம்இதனை நான் இங்கு ஏன் விபரிக்க முயல்கின்றேன் என நீங்கள் எண்ணலாம். 

awvsdz.jpg

 நீங்கள் குறிப்பட்ட கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த இராஜேந்திரம் ரூபன் வயது 30 என்பவரின் முழுப்பெயர் இராஜேந்திரம் ரத்தினராஜா 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எறிகணை வீச்சில் இடது கால்இடது கை இரண்டையும் இழந்து வாழ்பவர்திரு இ.ரத்தினராஜா அவர்கள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகத்தினரை கடந்த வருட முடிவுப் பகுதியில் சந்தித்து தம்மிடம் தற்போது வடமாகாண சபையினால் வழங்கப்பட்ட ஒரு கறவை மாடு உள்ளதாகவும் அதன் மூலம் கிடைக்கின்ற வருவாய் தமக்கு போதாது என்றும் தமக்கு இன்னுமொரு கறவை மாட்டை வழங்கினால் தமது குடும்பம் கஷ்டமின்றி வாழமுடியும் எனக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவருக்கு கடந்த ஜனவரி  மாதம் (6-1-2016) இவருக்கு தினமும் 5லீட்டர் பால்  கறக்கக் கூடிய ஒரு கறவை மாடு கன்றுடன் வழங்கப்பட்டது.

எமது மதிப்பீட்டின் படி இரண்டு மாடுகளும் தினமும் பத்து லீற்றர் பால் கறக்கும் போது (10X60 ரூபா) இவருக்கு குறைந்தது 600 ரூபா நாளாந்தத வருமானம் கிடைகின்றதுமாட்டுக்கான உணவுச்செலவு  போக இவர் இலகுவாக மாதம் 12,000 ரூபாவை வருமானமாகப் பெற முடியும், (இந்தக் கணக்கு எம்மால் உதவி வழங்கப்பட்டு வருமானம் பெறும் குடும்பங்களின் சராசரி வருமானத்தை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடப்பட்டது).

hsn9s6.jpg

இவற்றுடன் இவர் அண்மையில் புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட உடைத் தொழிற்சாலையில் தற்போது மேற்பார்வையாளராக நியமனம் பெற்று அதன் மூலம் மாதம் 15,000 ரூபா வேதனமாகப் பெறுகின்றார் என்பது புதிய தகவல்

உங்களுக்கு வழக்கப்பட்ட தகவல்களில் "மாற்றுத் திறனாளிகளுக்காக சமூகசேவைகள் அமைச்சினால் வழங்கப்படுகின்ற மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு மட்டும் கிடைப்பதாகவும் அதற்காக அக்கறையோடு செயற்பட்ட கண்டாவளை சமூகசேவைகள் உத்தியோகத்தருக்கு நன்றி தெரிவிப்பதாகவும்"  குறிப்பிட்ட ரூபன் (ரத்தினராஜா) இந்த மாடுகள் பற்றியோ,அதன் மூலம் கிடைக்கின்ற வருமானம் பற்றியோமாடுகளை வழங்கிய கல்வி வளர்ச்சி அறக்கட்டளை பற்றியோவடமாகாண சபை பற்றியோ  குறிப்பிடாமல் விட்டதன் காரணம் என்ன?ஒட்டு மொத்த தமிழ் இனமே முன்னாள் போராளிகளை கைவிட்டு விட்டதாகவும் அதற்கு ஒரு உதாரணமாக ரூபன் (ரத்தினராஜா) இருப்பதாகவும் கூறப்பட்டதன் காரணம் என்ன?  இது போன்ற ஆதாரமற்ற கட்டுரைகளும்ரூபன் (ரத்தினராஜா) போன்றவர்களும்இன்றைய நாட்களில் எமது புலம் பெயர் சமூகத்தில் தாயகத்திற்கு உதவ நினைக்கும் ஒரு சிலரையும் உதவிகளை வழங்குவதன் முன்னர் ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது.

தமிழ் இலத்திரனியல் ஊடகங்களில் புலம் பெயர் மக்களால் உண்மையான செய்தியினை வழங்குகின்ற ஒரு ஊடகமாக பார்க்கப்படுகின்ற  குளோபல் தமிழ்ச் செய்தி நிறுவனமும் அதன் ஊடகவியலாளர்களும்ரூபன் (ரத்தினராஜா) போன்ற போலிகளின் கதையை சரியாக ஆய்வு செய்யாமல் எமது புலம் பெயர் மக்களையும்எமது சமூகத்தின் பிரதிநிதிகளையும்,எழுந்த வாக்கில் குற்றம் சொல்லாமல்,எமது முன்னைநாள் போராளிகளில் இதுவரை உதவிபெறாதவர்களை இனம் கண்டு எம்மைப் போன்ற நிறுவனக்களுக்கு  அறியத் தருவதன் மூலம்,புனர்வாழ்வின் பின் விடுதலையாகி வந்த ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின்  தமது குடும்பத்தின் வறுமைநிலை கண்டு தம் உயிரை நீற்கின்ற நிலையை மாற்ற முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

நன்றி

கனடா கல்வி கனெக்சன்.

Contact:

Sasi Kunaratnam

Co-Founder

001-416-358-8638001-416-358-8638

Kuna Nagalignam

Co-Founder

001-416-402-4545001-416-402-4545
 
தொடர்புடைய பதிவு...

26 பெப்ரவரி 2016 - Comments (0)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நவீனன் said:

இணைப்புக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் தாயகத்துக்காக தம்மை அர்ப்பணித்தோர் மற்றும் பங்களித்தோரையும்

களத்தில் தம்மை அர்ப்பணித்தோர் மற்றும் பங்களித்தோரையும்

தமிழ் மக்களிடமிருந்து அகற்றும் அடுத்த கட்டம் நோக்கி நகர்பவர்களுக்கு இது உதவும்.

எதிர்பார்த்தது தான்...

இறைவா

இதுவும் கடந்து போகக்கடவது..

உறவுகளே  

நா காக்க .....

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான விடயங்களிலும் புலனாய்வு செய்தியிடல் அவசியமா? மு.தமிழ்ச்செல்வன்:-

கடந்த 26 ஆம் திகதி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக என்னால் எழுதப்பட்ட கைவிடப்பட்ட முன்னாள் போராளிக் குடும்பம் எனும் கட்டுரையில்,  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் சில தகவல்கள் மறைக்கப்பட்டன. மறைக்கப்பட்ட தகவல்களை என்னால் வெளிக் கொண்டுவர முடியாமைக்கு எனது வருதத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூபன் ஒரு முன்னாள் போராளி. தனது ஒரு கையினையும், கால் ஒன்றையும் இழந்தவர். எனவே அவரது விடயத்தில் நான்  மனிதாபிமானத்தோடு மட்டுமே நடந்துகொண்டேன். அவர் கூறிய தகவல்களை புலனாய்வு  செய்தியிடல் முறைக்கு ஊடாக  உறுதிப்படுத்திக் கொள்வதனை அவரின் கடந்த கால தியாகத்திற்கு மதிப்பு கொடுக்காது போய்விடுமோ என்ற உணர்வில் அவர் கூறியதனை மட்டுமே செய்தியாக்கியிருந்தேன்.

நானும் மற்றுமொரு சிரேஸ்ட ஊடகவியலாளரும் கிளிநொச்சி உழவனூர் கிராமத்தில் அமைந்துள்ள இராசேந்திரம் ரூபனின் வீட்டுக்கு நேரடியாக சென்றிருந்தோம். அங்கு ரூபன் இன்றும் வறுமையில் வாழ்கின்றார் என்பதனை அவர் கூறித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய எந்த அவசியமும்  எமக்கு ஏற்படவில்லை.

 ஒரு தற்காலிக வீட்டில் வாழ்ந்து வரும் ரூபன் இன்று ஒரு காலும் கையும் தனது இனத்திற்காக இழந்த ஒரு அரை மனிதனாகவே வாழ்கின்றார் என்பதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் அவர் தனக்கு கிடைத்த வாழ்வாதார உதவிகள் சிலவற்றை எங்களிடம் மறைத்திருக்கின்றார். இது அவர் எதிர்கொள்ளும் வறுமையின் வெளிப்பாடே. அதேவேளை இரண்டு மாடு அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்திவிடும் என்பதனை எம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உதவி செய்வது என்பது மதிக்கதக்கது. அது சிறிய உதவியோ பெரிய உதவியோ எதுவாக இருப்பினும் உதவி செய்தலை மதிக்க வேண்டும். அதற்கு மாற்று கருத்து கிடையாது. வன்னியை பொறுத்தவரை 90 வீதமானவர்களுக்கு மாடு, ஆடு, கோழி என அவரவர்  தொழில் முயற்சிக்கு ஏற்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வறுமையை நீக்கி வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என்பது உதவி செய்கின்ற அரசுக்கும் சரி நிறுவனங்களுக்கும் சரி. தனிநபர்களுக்கும் சரி தெளிவாக தெரியும். இந்த உதவிகள் மூலம் வறுமை நீங்கும் என்றால் தற்போது வன்னியில் வறுமை இருக்காது. எனவே இந்த உதவிகள் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதிக்கே.

ரூபன், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான அவரது மனைவி, மற்றும் ஒரு குழந்தையுடன் வாழுபவர். அவர் தற்போது ஒன்றரை மாதங்களாக புதுக்;குடியிருப்பு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில்  பதினையாயிரம் ரூபா மாதச் சம்பளத்தில் பணியாற்றுகின்றார்.

இது ஒருபுறமிருக்க வழங்கப்பட்ட மாடுகளை நன்கு பராமரிக்கின்ற போது மாத்திரமே அதிலிருந்து முழுமையாக ஜந்து  அல்லது ஆறு லீற்றர் பால்  பெறமுடியும். ஆனால் வன்னியில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை தவிர  பெரும்பாலான மாடு வளர்க்கின்றவர்களால் முழுமையாக பால் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. அத்தோடு வருடம் முழுவதும் மாடு பால் கொடுப்பதில்லை. எனவே தற்போதைய நிலைமையில் ரூபனுக்கு வழங்கப்பட்ட மாடுகளில் ஒன்றில் மாத்திரமே நாளாந்தம் இரண்டு லீற்றர் பால் பெறமுடிகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 120 ரூபா மாத்திரமே வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த யதார்த்த நிலைமைகளை இங்கு வெளிப்படுத்துவது என்பது ரூபன் தனக்கு கிடைத்த உதவியை வெளிப்படுத்தாது விட்டதனை நியாயப்படுத்துவது அல்ல. ஆனால் எவ்விதமான சுய இலாபங்களுக்கோ, சுய நலன்களுக்காகவோ அன்றி இந்த தேசத்திற்காக தனது கால் மற்றும் கை ஒன்றை இழந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரின் தியாகத்தை இரண்டு மாடுகள் வழங்கப்பட்டதனை மறைத்துவிட்டார் என்பதனை வைத்து கொச்சைப்படுத்த முடியாது என்பதனை வலியுறுத்த விரும்புகின்றேன்.

இதேவளை நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் கைவிடப்பட்டவர்களாக எமது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் எனும் கசப்பான கள யதார்த்தத்தையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

எனவே ரூபனின் விடயத்தில் தவறு நடந்திருக்கிறது. அது உதவி செய்தவர்கள், செய்கின்றவர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக கட்டுரையாளன் என்ற வகையில் நான் மனம் வருந்துகிறேன். ஆனால் இந்த தவறை வைத்து ஒரு போராளியின் கடந்த கால தியாகத்தை கொச்சப்படுத்தும் விமர்சனங்களை முன்வைக்காதீர்கள் என்பதோடு,

மனிதாபிமான விடயங்களிலும் கூட புலனாய்வு செய்தியிடல் முறை அவசியமா எனும் கேள்வியையும் எழுப்புகிறது.

மு.தமிழ்ச்செல்வன்
 
.......................

தமிழ் செல்வன் அவர்களே, நாங்கள் இங்கு எவரின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதற்கும் வரவில்லை, உங்களை புலனாய்வாளராக மாறவும் கேட்கவில்லை, ஆனால் நீங்கள் புலம் பெயர் மக்களின் உதவியைக் கொச்சைப்படுத்தாதீர்கள், "வன்னியைப் பொறுத்தவரை 90 வீதமானவர்களுக்கு மாடு, ஆடு, கோழி என அவரவர் தொழில் முயற்சிக்கு ஏற்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்று நீங்கள் கூறுவது முற்று முழுதான ஆதரமற்ற தகவல்,பத்திரிகையாளனாக நடுநிலையாளனாக, கோபப்படாமல் உண்மையை ஆதாரத்துடன் எழுதுங்கள்.

"இரண்டு மாடு அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்திவிடும் என்பதனை எம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறுகின்றீர்கள், இன்று அதுவும் அற்று எத்தனை பேர் வன்னியில் வாழ்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? அப்படியானவர்களுக்கும் உதவிகள் சென்று அடைய வேண்டும் என்பதே எமது விருப்பம். 

தமது அங்கங்களை இழந்த முன்னாள் போராளிகள், அப்பாவிப் பொதுமக்கள் அனைவரையும் சிறு உதவியாவது சென்றடைய வேண்டும் என்பதே எமது விருப்பம், நாம் எமது உதவிகளின் மூலம் எவரையும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்ற முடியாது, இந்த உதவி அவர்களின் வளர்ச்சிக்கு ஒரு உந்துகோலாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம். 

குருபரன் அண்ணா மன்னிக்க வேண்டும், நான் இங்கு உங்களின் பத்திரிகையாளருடன் கருத்து மோதல் செய்யவேண்டும் என்பதற்காக வரவில்லை, புலம்பெயர் தமிழர்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் சாடுவதற்கு முன்னால் போராளிகளின் அவலத்தைப் பயன்படுத்தாதீர்கள் என்பதே எமது வேண்டுகோள்.  

நன்றி, 
குணா நாகலிங்கம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129601/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உதவி பெறுவோர் ஒரு புரிந்துணர்வோடு தம் உண்மை நிலையை  உதவுவோருக்கு வெளிப்படுத்தினால் யாரும் புலனாய்வு செய்ய வேண்டியதில்லை. நிதி வளங்கள் எப்பவும் வரையறுக்கப் பட்டவை தான். அந்த நிலையில் உண்மை சொல்லாமல் பல உதவிகள் பெறுவோர் எந்த உதவியும் கிடைக்காமலிருக்கும் இன்னொருவரது வயிற்றில் அடிக்கிறார்கள் என்பதே உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.