Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினர்! அமெரிக்க பேராசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் மைக்கல் நியூட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சுமத்தியுள்ள யுத்தக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், விடுதலைப் புலிகள் போரின்போது பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியது ஒரு யுத்தக்குற்றமாகும்.

அத்துடன் அவர்கள் கனரக ஆயுதங்கள் கொண்டு இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள்.

அத்துடன் விடுதலைப் புலிகள் தரப்பு மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கிடையிலான மோதல்கள் இராணுவ ரீதியானவை என்றும் பேராசிரியர் நியூட்டன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/ltte/01/109646

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தமிழரசு said:
 
பூனைக்குட்டி மெல்ல மெல்லமாய் வெளியிலை வருது....... katzen-smilies-0004.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பூனைக்குட்டி மெல்ல மெல்லமாய் வெளியிலை வருது....... katzen-smilies-0004.gif

ரணிலை ஜனாதிபதியாக வரமுடியாமல் செய்து இராஜபக்சவை பதவிக்கு கொண்டு வர வழி செய்து தமது தீவிர அமெரிக்க எதிர்ப்பை விடுதலை புலிகள் தெளிவாகவே வெளிப்படுத்தி இருந்தார்கள்.

  1. விடுதலை புலிகளின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கை அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது.
  2. இராஜபக்சவின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கை அவரின் அழிவுக்கு காரணமாக இருந்தது.
  3. ரணில் விக்கரமசிங்கவின் அமெரிக்க ஆதரவு கொள்கை ரணிலை மீண்டும் சக்தி வாய்ந்த மனிதராக மாற்றி உள்ளது.

சம்பந்தன் - சுமேந்திரனின் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கையை கொண்டுவரும் சாத்தியம் உள்ளது. ஆனால் அதனை தடுப்பதற்கு விடுதலை புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் இன்னமும் தொடர்ந்து முயற்சிப்பது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

சும் இப்பவும் அமெரிக்காவில் நிக்கிறார் போல....

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழிக்குள் தீர்வு கிடைக்கும் நம்புங்கள் மக்காள். (இதே களத்தில் பலர் கூறியது. இப்போ ரிப்பீட்டு.

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஜால்றா அடிச்சு, எட்டப்ப பிழைப்பு நடத்தும் கும்பல்களின் தொல்லை அதிகமா போச்சு!
முன்னர் ஹிந்திய நாசகாரக் கும்பல்களுக்கு ஜால்றா அடிச்சு தமிழினத்தை அழிக்க சில கும்பல்கள் பேருதவி செய்தன.
இப்ப இன்னொரு கும்பல் கிளப்பியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, போல் said:

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஜால்றா அடிச்சு, எட்டப்ப பிழைப்பு நடத்தும் கும்பல்களின் தொல்லை அதிகமா போச்சு!
முன்னர் ஹிந்திய நாசகாரக் கும்பல்களுக்கு ஜால்றா அடிச்சு தமிழினத்தை அழிக்க சில கும்பல்கள் பேருதவி செய்தன.
இப்ப இன்னொரு கும்பல் கிளப்பியிருக்கு.

யாருப்பா அது ??

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கப் பேராசிரியர் சொன்னா அது மகா பெரிய உண்மையாத்தான் இருக்கும். 

தன்ர பிழைப்புக்கு எதையும் சொல்லக் கூடிய நிலையில் தான் அமெரிக்கா உள்ளது. இதில எங்கட ஆக்கள் கனவு வேற.. அமெரிக்கா தமிழர்களுக்கு உதவும் இன்னு.. அதுவும் புலிகளில் பிழை பிடிச்சுக் கொண்டு.. நல்ல கற்பனை. 

அமெரிக்கா எந்தக் காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நியாயமுன்னு சொன்னது. எப்போதுமே பயங்கரவாதம் என்று தான் சொல்லிக்கிட்டு இருந்தது.. இருக்குது. அதுக்கு தெரிஞ்ச மொழி அது மட்டும் தான். தனக்கு ஆதாயம் வரும் என்றால் மட்டும் பயங்கரவாதம் விடுதலைப் போராட்டம்.. மொடரேட் போராட்டம் ஆகும். லிபியாவில்..  சிரியாவில் நிகழ்த்தப்படுவது போல.:rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

6 minutes ago, முனிவர் ஜீ said:

யாருப்பா அது ??

முனிவர்ஜீ! விக்கிலீக்ஸ் வரும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

அமெரிக்கப் பேராசிரியர் சொன்னா அது மகா பெரிய உண்மையாத்தான் இருக்கும். 

தன்ர பிழைப்புக்கு எதையும் சொல்லக் கூடிய நிலையில் தான் அமெரிக்கா உள்ளது. இதில எங்கட ஆக்கள் கனவு வேற.. அமெரிக்கா தமிழர்களுக்கு உதவும் இன்னு.. அதுவும் புலிகளில் பிழை பிடிச்சுக் கொண்டு.. நல்ல கற்பனை. 

அமெரிக்கா எந்தக் காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நியாயமுன்னு சொன்னது. எப்போதுமே பயங்கரவாதம் என்று தான் சொல்லிக்கிட்டு இருந்தது.. இருக்குது. அதுக்கு தெரிஞ்ச மொழி அது மட்டும் தான். தனக்கு ஆதாயம் வரும் என்றால் மட்டும் பயங்கரவாதம் விடுதலைப் போராட்டம்.. மொடரேட் போராட்டம் ஆகும். லிபியாவில்..  சிரியாவில் நிகழ்த்தப்படுவது போல.:rolleyes:tw_angry:

தமிழர்களின் சிறப்பு நம்பி ஏமாந்து போவது இதிலே அமெரிக்க என்ன ஆபிரிக்கா என்ன 

அவனுகளுக்கு எங்கே ஆதாயம் கிடைக்குமோ அங்கே சுரண்டிக் கொண்டு இருப்பது 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nedukkalapoovan said:

அமெரிக்கப் பேராசிரியர் சொன்னா அது மகா பெரிய உண்மையாத்தான் இருக்கும். 

உண்மை/பொய் பற்றிய நிலைப்பாடு மக்களின்  விடுதலைக்கு பயன் அற்றது. அவர் இந்த ஆக்கத்தை ஏன் தயாரித்தார்? அதன் தாக்கம் என்ன? என்ற கேள்விகளே பயன் உள்ளவை. இந்த ஆக்கத்தில் உள்ளவை முற்றிலும் பொய்யாக இருந்தாலும் அதன் தாக்கம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை நீங்கள் தடுக்க முடியுமா?

38 minutes ago, nedukkalapoovan said:

தன்ர பிழைப்புக்கு எதையும் சொல்லக் கூடிய நிலையில் தான் அமெரிக்கா உள்ளது. இதில எங்கட ஆக்கள் கனவு வேற.. அமெரிக்கா தமிழர்களுக்கு உதவும் இன்னு.. அதுவும் புலிகளில் பிழை பிடிச்சுக் கொண்டு.. நல்ல கற்பனை. 

அமேரிக்கா இலங்கை தமிழர்களுக்கு ஏன் உதவ வேண்டும்? அமேரிக்கா, அமெரிக்க மக்களின் நலன்களில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. அந்த நலன்களுக்கு விடுதலை புலிகளும் அவர்கள் தலைமையில் இலங்கை தமிழர்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். ஆகவே அமெரிக்க மக்களின் நலன் கருதி விடுதலை புலிகள் அழிக்க பட்டார்கள். மீதம் உள்ள ஆதரவாளர்களும் (நீங்கள் உட்பட) அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயற்படுகிறீர்கள். இது தொடரும் வரை இலங்கை தமிழர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாது. 

38 minutes ago, nedukkalapoovan said:

அமெரிக்கா எந்தக் காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நியாயமுன்னு சொன்னது. எப்போதுமே பயங்கரவாதம் என்று தான் சொல்லிக்கிட்டு இருந்தது.. இருக்குது. அதுக்கு தெரிஞ்ச மொழி அது மட்டும் தான். தனக்கு ஆதாயம் வரும் என்றால் மட்டும் பயங்கரவாதம் விடுதலைப் போராட்டம்.. :rolleyes:tw_angry:

அமெரிக்க நலன்களுக்கு எதிரான போராட்டங்கள் நியாயமற்றவை. அவை பயங்கரவாதம். இலங்கை தமிழரின் ஆயுத போராட்டமும் இவற்றுள் ஒன்று. ஆகவே இலங்கை தமிழ் மக்களுக்கு அழிவு தவிர வேறு எதிர்காலம் இல்லை. இந்த நிலை தொடர வேண்டும் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?

29 minutes ago, முனிவர் ஜீ said:

தமிழர்களின் சிறப்பு நம்பி ஏமாந்து போவது இதிலே அமெரிக்க என்ன ஆபிரிக்கா என்ன 

அவனுகளுக்கு எங்கே ஆதாயம் கிடைக்குமோ அங்கே சுரண்டிக் கொண்டு இருப்பது 

முட்டாள்கள் "நம்பி ஏமாந்து போனோம்" என்று ஒப்பாரி வைப்பது வழக்கம்.

சிங்கபூர், இசுரேல், தென் சூடான், எரித்ரியா, கிழக்கு தீமோர்  போன்ற நாடுகள் நம்பவும் இல்லை ஏமாறவும் இல்லை.

அவை மற்றவர்களின் ஆதாயத்தை அறிந்து, அவர்களுக்கு தேவையானதை கொடுத்து தமக்கு வேண்டிய விடுதலையை பெற்று கொண்டார்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Jude said:

அமெரிக்க நலன்களுக்கு எதிரான போராட்டங்கள் நியாயமற்றவை. அவை பயங்கரவாதம். இலங்கை தமிழரின் ஆயுத போராட்டமும் இவற்றுள் ஒன்று. ஆகவே இலங்கை தமிழ் மக்களுக்கு அழிவு தவிர வேறு எதிர்காலம் இல்லை. இந்த நிலை தொடர வேண்டும் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒபாமா வாய்கிழியக் கத்தியும் பிரிட்டிஷ் மக்கள் எப்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக துணிவாக வாக்களித்தார்களோ.. அந்த வகையான ஒரு உறுதி தமிழ் மக்களிடம் தமது உரிமை தொடர்பில்  தேவை.

மக்களின் விருப்பை.. அவர்களின் பிரதிநிதிகள் ராஜதந்திரமாக எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர.. அமெரிக்காவுக்கு வால்பிடிப்பதாலோ அடிபணிவதாலோ அமெரிக்கா தமிழர்களுக்கு உதவி நிற்கும் என்று நினைக்க வைப்பது பிழையான வழிகாட்டலாகும்.

அமெரிக்காவை எதிர்த்தால்.. அழிவு.

அமெரிக்காவை ஆதரித்தால்.. மிதிப்பு.

இது தான் அமெரிக்காவின் கொள்கை என்று தெரிந்த பின்னும்.. அமெரிக்கா என்ற ஒன்றைச் சுற்றி நாம் நகர வேண்டியதில்லை. மாறாக.. அமெரிக்கா எப்படி எம் மீது சவால்களையும் சாதகத்தையும் காட்டி தனது நலனை முன்னிலைப்படுத்திப் பயணிக்க நினைக்கிறதோ.. அதே போல.. எங்கள் மண்ணில் அமெரிக்கனுக்கு உள்ள தேவையை எமக்கு சாதகமாகப் பாவிச்சு.. நாம் தேவையான எல்லா நாடுகளையும் அரவணைச்சுப் போகனும். அதில் அமெரிக்கா கடுப்பானாலும் இலாபம்.. சந்தோசப் பட்டாலும் இலாபம் என்று அமையனும். அதுதான் ராஜதந்திர அரசியல்.

சம் சும் கும்பல் போல போய் அமெரிக்கன் காலில் குப்புறப்படுப்பதால்.. அமெரிக்கன் ஏறி மிதிச்சிட்டுப் போவானே தவிர எதையும் பெற்றுத்தர அவனுக்கு அது எந்த வகையான அழுத்தத்தையும் அது கொடுக்காது.

அமெரிக்கனுக்கோ.. எவருக்குமோ.. எமது பிராந்தியத்தில் கண் வைத்தால்... உனக்கு எப்படியாவது நாம் அழுத்தம் கொடுக்கும் வழிமுறையை கொண்டு வருவம் என்று பாடம் எடுத்தால் மட்டுமே எமக்கு இலாபங்கள் கிடைக்கும். இன்றேல்.. புலிகள் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன அழிவு அழிவு தான். இது தான் யதார்த்தம். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஜால்றா அடிச்சு, 

ஊருடன் ஒத்து வாழ் அல்லது ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

இதுதான் தமிழர்களுக்கு ந‌டந்தது, இன்னும் அறிவு வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

அமெரிக்காவை ஆதரித்தால்.. மிதிப்பு.

இது தான் அமெரிக்காவின் கொள்கை என்று தெரிந்த பின்னும்..

இது அமெரிக்காவின் கொள்கை அல்ல. உங்கள் தவறான விளக்கமே உங்கள் அழிவுக்கு காரணம்.

சிங்கபூர், இசுரேல் போன்ற அமெரிக்க ஆதரவில் விடுதலை பெற்ற நாடுகள் மிதிக்கப் படவில்லை. மாறாக மூன்றாம் உலக அகதிகள், கூலிகள் என்ற நிலையில் இருந்து அமெரிக்க உதவியுடன் முதலாம் உலக நாடுகளாக உயர்ந்து வாழ்கிறார்கள்.

5 hours ago, nedukkalapoovan said:

அமெரிக்காவை எதிர்த்தால்.. அழிவு.

அமெரிக்காவை எதிர்த்தால்.. அழிவு. - அனுபவித்து தான் அறிவோம் என்று பிடிவாதம் பிடித்து அனுபவம் பெற்று இருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். 

Edited by Jude

4 hours ago, colomban said:

ஊருடன் ஒத்து வாழ் அல்லது ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

இதுதான் தமிழர்களுக்கு ந‌டந்தது, இன்னும் அறிவு வரவில்லை.

ஊருடன் தான் ஒத்து வாழவேண்டும்.
கொலைகாரர், கொள்ளைக்காரருடன் ஒத்து வாழ் என்று எங்கும் பழமொழி இல்லை.
இந்த அடிப்படை அறிவு கூட இன்னும் சிலருக்கு வரவில்லை.

"துஷ்டனைக் கண்டால் தூர விலகு"  என்பதுவும் பழமொழி.
"பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?" என்பதுவும் பழமொழி.

"மாற்றானுக்கு இடங் கொடேல்" என்பதுவும் பழமொழி.

"பகைவர் உறவு புகை எழு நெருப்பு" என்பதுவும் பழமொழி.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, முனிவர் ஜீ said:

தமிழர்களின் சிறப்பு நம்பி ஏமாந்து போவது இதிலே அமெரிக்க என்ன ஆபிரிக்கா என்ன 

அவனுகளுக்கு எங்கே ஆதாயம் கிடைக்குமோ அங்கே சுரண்டிக் கொண்டு இருப்பது 

இந்திய அமெரிக்க நலன்களுகளோடு( நலன் - சுரண்டல், ஏகாதிபத்தியம்) உடன்படாததன் கரணியமாகத் தமிழரது உரிமைப்;போராட்டமானது பயங்கரவாதமாகச் சித்தரிகப்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கே அமெரிக்காவோடு பகைநிலையில் இருந்த இந்தியா இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டத்தை ஊக்குவித்ததோடு தமக்கான பாதுகாப்பு நிலையைப்பேணவும் இலங்கையை அமைதியற்ற பதட்ட சூழலுள் வைத்திருக்கவும் முயன்றது. சோவியத்தின் உடைவின் பின்பாக உலகில் ஏற்பட்ட மாற்றம், சீனாவின் அபரிதமான வளர்ச்சி , இந்திய – அமெரிக்க உறவுகளில் ஏற்பட்ட புரிந்துணர்வு என்பவற்றின் விளைவாகத் தமிழரது தேவை இந்தியாவுக்கு அவசியமில்லாமற்போன சூழல் போன்றனவும் தமிழரது அழிவுக்குக் கரணியமாகியது. 

இங்கே தமிழரது உயிர்தொடர்பாக உலகுக்கோ அல்லது யாருக்குமே அக்கறையில்லை. இருந்தால் யுத்தப்பகுதியில் இருந்து ஐநாவை வெளியேறச் சொன்னபோது தடுக்கவில்லை. இங்கே தமது நலன்களுக்காக ஒரு இனப்படுகொலையை அனுமதித்துவிட்டு, இன்று  தமது நலன்களுக்காக அதனை நியாயப்படுத்த கொலைகளுக்கு உதவிய ஒரு தரப்பான அமெரிக்கா முனைகிறது. இலங்கைத்தீவிலே தமிழரின் குருதியில் தமது நலன்காக்கும் கீழ்தரமான செயலை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடு செய்வது நியாயமா? என்ற வினாவை ஏன் அமெரிக்க இந்திய சார்புத் தமிழர்கள் அமெரிக்க இந்திய தரப்புகளை நோக்கி முன்வைக்கிறார்களில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nochchi said:

இந்திய அமெரிக்க நலன்களுகளோடு( நலன் - சுரண்டல், ஏகாதிபத்தியம்) உடன்படாததன் கரணியமாகத் தமிழரது உரிமைப்;போராட்டமானது பயங்கரவாதமாகச் சித்தரிகப்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கே அமெரிக்காவோடு பகைநிலையில் இருந்த இந்தியா இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டத்தை ஊக்குவித்ததோடு தமக்கான பாதுகாப்பு நிலையைப்பேணவும் இலங்கையை அமைதியற்ற பதட்ட சூழலுள் வைத்திருக்கவும் முயன்றது. சோவியத்தின் உடைவின் பின்பாக உலகில் ஏற்பட்ட மாற்றம், சீனாவின் அபரிதமான வளர்ச்சி , இந்திய – அமெரிக்க உறவுகளில் ஏற்பட்ட புரிந்துணர்வு என்பவற்றின் விளைவாகத் தமிழரது தேவை இந்தியாவுக்கு அவசியமில்லாமற்போன சூழல் போன்றனவும் தமிழரது அழிவுக்குக் கரணியமாகியது. 

இங்கே தமிழரது உயிர்தொடர்பாக உலகுக்கோ அல்லது யாருக்குமே அக்கறையில்லை. இருந்தால் யுத்தப்பகுதியில் இருந்து ஐநாவை வெளியேறச் சொன்னபோது தடுக்கவில்லை. 

தெளிவாக எழுதியிருகிறீர்கள். பெருமளவு ஆய்வாளர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட நிலைப்பாடு இது.

இலங்கைத்தீவிலே தமிழரின் குருதியில் தமது நலன்காக்கும் கீழ்தரமான செயலை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடு செய்வது நியாயமா? என்ற வினாவை ஏன் அமெரிக்க இந்திய சார்புத் தமிழர்கள் அமெரிக்க இந்திய தரப்புகளை நோக்கி முன்வைக்கிறார்களில்லை?

அமெரிக்காவில் பல அமைப்புகள் இவற்றை செய்கின்றன. நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமெரிக்காவில் இயங்கும் இவ்வாறான தமிழர் அமைப்பு. இது தவிர வேறு பல அமைப்புக்களும் உள்ளன. இவை இப்படி "நியாயமா?" என்ற கேள்வியை நீண்ட காலமாக கேட்டு வருகின்றன.

ஆனால் உண்மையில் "நியாயம்", "அநியாயம்" என்பவை அவரவர் தேவையை பொறுத்தது.

யாழ்ப்பணத்தில் உள்ள சென் ஜோன்ஸ் பாடசாலையின் அதிபராக திரு ஆனந்தராஜா இருந்தார். பலருக்கும் நிறைய உதவிகள் செய்த மனிதர் அவர். அவர் விடுதலை புலிகளால் சுட்டு கொல்லப்பட்டார். 

நாம் கேட்டோம் "நியாயமா"? என்று. 

திரு ஆனந்தராஜா  இராணுவத்துக்கும் மாணவருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தார். விடுதலை புலிகள் பாடசைக்குள் மதில் பாய்ந்து செல்வதை தடுக்க மதிலை உயர்த்தி கட்டினார். ஆகவே அவர் துரோகி என்றார்கள்.

"நியாயமா"?  நீங்களே சொல்லுங்கள். அனுபவமும் அறிவும் உள்ள மக்கள் தலைவர்கள் விட்டுடிட்டு ஓடிவிட்ட போர்க்கால நாட்டில் இந்த கொலை நியாயமா?

இப்படி பல .. 

அமெரிக்காவிடமும் நீங்களும் நாங்களும் கேட்கலாம். விடுதலை புலிகளிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த பதிலே அமெரிக்காவிடமும் இருந்து கிடைக்கிறது. இது "நியாயமா"?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

புலிகள் மீதான உண்மையான விமர்சனம் என்பது வேறு. (அதனையும் வெளியே நின்று செய்யும் தகமை இருக்கிறதா என நான் யோசிப்பவன்) அவர்களை வில்லங்கமாக ஒரு விடயத்துள் இழுத்துவிடுவதென்பது வேறு. உண்மையில் "நியாயம்", "அநியாயம்" என்பவை அவரவர் தேவையை பொறுத்தது என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இங்கே புலிகளுக்கு நியாயமானது, புலிகளுக்கு எதிரானவர்களுக்கு அநியாயமாகப்படும். ஆனால் இந்தத் திரிபேசுவது யாதெனில், மைக்கல் நியூட்டனின் போர்க்குற்ற மறுப்புத் தொடர்பாக, இது ஒரு முழுப்பூசணிக்காயைச் சோற்றிலே புதைக்கும் விடயத்துடனான உங்களின் ஒப்பீடு பொருத்தமா? அல்லது பொருந்துமா? என்பது குறித்து நீங்கள் ஆய்வுசெய்வது பொருத்தமாகும். நாங்கள் தமிழினத்தின் அவலம் தொடர்பில் மறுத்துரைக்கும் எவரையும் அனுமதிக்கக் கூடாது என்ற பொதுக்கருத்தியலில் புலிகள் மீதான வெறுப்பை உமிழ்வது பொருத்தமா என்று சிந்திக்க வேண்டியது அவசியமாகும். புலிகளின் தவறுகளில் இருந்து விமர்சன ரீதியான ஆய்வுகள் எமது விடுதலையைத் துரிதப்படுத்துவதோடு, தமிழினத்தைப் பலப்படுத்தவதாக அமைய வேண்டும் என்பதை நாங்களனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.தேசம் எல்லோருக்குமானது. விடுதலைப்போராட்டமும் எல்லோருக்குமானது என்பதை ஏற்றுக்கொண்டு நாங்கள் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டுமென்பதை புரிந்துகொண்டு நகர்வதே இன்றைய தேவையாகும். 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தராஜாவை புலிகள் சுட்டது 100 % நிஜயமானது!

அந்த காலக்கட்டிடத்தில் எனக்கு புலிகளையோ கிட்டுவையோ தனிப்பட பிடிக்காது எனப்தையும் 
தாண்டி அவர்களுக்கு எதிராகவே இருந்தேன் 
அந்த சூழலில் கூட இவரை போட்டுவிடடார்கள் என்று கேள்விப்பட்டதும் 
ரொம்ப மகிழ்ச்சி உற்றேன். 

காரணம் தேசம் ஒரு இனவாதப்போருக்கு முகம்கொடுத்து 
ஒரு உலக கேவலம் கேட்ட இனவாத அரசுக்கு எதிராக ஒரு ஆயுத போரை நடாத்திக்கொண்டு 
இருக்கின்றது இனவாத அரசின் இராணுவம் தமிழரை தமிழர் என்ற ஒரே காரணத்தால் கொன்று கொண்டு இருக்கிறது.

இவருக்கு மூன்று தடவை மேல் எச்சரிக்கை செய்தார்கள் 
இவர்கள்  யார் என்னை கேட்க நான் அரச ஊழியன் எனக்கு இராணுவம் இருக்கிறது என்ற அகங்காரத்தின் 
அடிப்படியில் இவரின் துள்ளல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இராணுவத்திட்கு கொலைசெய்யும் அதே நேரம் ஒரு குறிப்பிட்ட பகுதி 
தமக்கு நட்பாக இருக்கவே விரும்பும் காரணம் உளவு.
மாணவரை வைத்து போராளிகளின் விடயங்களை பெறுவது என்பது இராணுவத்திட்கு தேவையான ஒன்று
ஒரு பள்ளி மாணவர்களையே ஒரு இராணுவத்திட்கு உளவாளிகளாக்கும் 
வேலை இவருக்கு தேவை இல்லாதது.

ஆங்கிலேயனுக்கு கிறிஸ்த்து யார் ?
போன இடமெல்லாம் கிரிஸ்தவத்தை பரப்பியது தமக்கு நம்பிக்கையான ஒரு கூட்டத்தை 
தாம் ஆக்கிரமிக்கும் இடங்களில் உருவாக்குவதுதான் முதன்மை நோக்கம்.

மாணவர்கள் கல்வியையும் விட்டுவிட்டு உயிரையும் தேசத்திட்காக விடுவதட்கு 
துணிந்து காவலரணில் நிட்கிறார்கள் 
அவர்கள் மரணம் இவருக்கு இஞ்சை இல்லாது இருக்குமெனில் 
இவரை போட்டது என்பதிலும் எனக்கும் மகிழ்ச்சியே. 

பின்னாளில் உளவாளிகளான 10-15 மாணவரை தண்டிப்பதிலும் விட 
முளையிலேயே கிள்ளிவிட்டால் செடி முளைக்க சந்தர்ப்பமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Jude said:

சிங்கபூர், இசுரேல் போன்ற அமெரிக்க ஆதரவில் விடுதலை பெற்ற நாடுகள் மிதிக்கப் படவில்லை. மாறாக மூன்றாம் உலக அகதிகள், கூலிகள் என்ற நிலையில் இருந்து அமெரிக்க உதவியுடன் முதலாம் உலக நாடுகளாக உயர்ந்து வாழ்கிறார்கள்.

இஸ்ரேல் உச்சாவுக்கு போகவும் அமெரிக்காவை கேட்டிட்டுத்தான் செய்யனும்.. அப்படி ஒரு விதிப்பு அதுக்கு. மீறிப் போகட்டும் பார்க்கலாம்.. மிதிப்பு தெரிய வரும்.

சிங்கப்பூர் சொல்லத் தேவையில்லை.. சீனா பக்கம் சாய்ஞ்சு பார்க்கட்டும்.. மிதிப்பின் தன்மை தெரிய வரும். 

ஆனானப்பட்ட சதாமை மிதிச்ச மிதிப்பு.... இதுக்கும் சதாம் அமெரிக்க விசுவாசியா வெள்ளைமாளிகையின் செல்லப் பிள்ளை ஒருகாலத்தில். அதே போல் தான் ஒசாமாவும். tw_blush:

நீங்க என்ன சி ஐ ஏ ஏஜென்டு கணக்கில அவுட்டு விடுறீங்க. உலகமே அறியும் அமெரிக்காவின் தார்ப்பரியம். :rolleyes:

அமெரிக்காவை சந்திக்க வேண்டிய சரியான வழிமுறை வடகொரிய.. ரஷ்சிய வழிமுறை தான். tw_blush:

அமெரிக்காவை எதிர்த்து வளர்ந்தவர்கள்.. கியூபாவும்.. வியட்நாமியரும். இன்று அமெரிக்கா வலிந்து போய் கைகுலுக்குது. இதனையும் அண்ணன் யூட் அறிய பக்குவம் பெற வேண்டும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருதடவை இலங்கை அரசால் ஒரு செய்தி பரப்பப்படடது. அதாவது தான் போரை வெற்றி கொண்டதைப்பற்றியும், தனது செயட்பாடுகளையும் பாப்பாண்டவர் பிரதிநிதி பாராட்டியதாக தன்னையும்,  தனது செயற்பாடுகளை நியாயப்படுத்தி. ஆனால் குறித்த பகுதியினரால் தாம் அப்படிப்படட எந்தப் பாராட்டுதலையும்  செய்யவில்லை என மறுப்பறிக்கை வந்ததும். அதுபற்றி வாயே திறக்கவில்லை. அப்படித்தான் இந்தச் செய்தியும் திரிவு படுத்தி தாம் பொறியில் விழுந்ததை மறைத்து, தமக்கு சாதகமாய் சிங்களவருக்கு பூச்சுத்தலோ, தீர ஆராய்ந்தால் தெரியும். அல்லது அவர் கூறியது உண்மையாயின் தமது அழித்தலை இந்தக் கூற்றின்  மூலம் சரி செய்ய முயலுகிறார்.இந்த அதிகாரி  

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Jude said:

தெளிவாக எழுதியிருகிறீர்கள். பெருமளவு ஆய்வாளர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட நிலைப்பாடு இது.

அமெரிக்காவில் பல அமைப்புகள் இவற்றை செய்கின்றன. நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமெரிக்காவில் இயங்கும் இவ்வாறான தமிழர் அமைப்பு. இது தவிர வேறு பல அமைப்புக்களும் உள்ளன. இவை இப்படி "நியாயமா?" என்ற கேள்வியை நீண்ட காலமாக கேட்டு வருகின்றன.

ஆனால் உண்மையில் "நியாயம்", "அநியாயம்" என்பவை அவரவர் தேவையை பொறுத்தது.

யாழ்ப்பணத்தில் உள்ள சென் ஜோன்ஸ் பாடசாலையின் அதிபராக திரு ஆனந்தராஜா இருந்தார். பலருக்கும் நிறைய உதவிகள் செய்த மனிதர் அவர். அவர் விடுதலை புலிகளால் சுட்டு கொல்லப்பட்டார். 

நாம் கேட்டோம் "நியாயமா"? என்று. 

திரு ஆனந்தராஜா  இராணுவத்துக்கும் மாணவருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தார். விடுதலை புலிகள் பாடசைக்குள் மதில் பாய்ந்து செல்வதை தடுக்க மதிலை உயர்த்தி கட்டினார். ஆகவே அவர் துரோகி என்றார்கள்.

"நியாயமா"?  நீங்களே சொல்லுங்கள். அனுபவமும் அறிவும் உள்ள மக்கள் தலைவர்கள் விட்டுடிட்டு ஓடிவிட்ட போர்க்கால நாட்டில் இந்த கொலை நியாயமா?

இப்படி பல .. 

அமெரிக்காவிடமும் நீங்களும் நாங்களும் கேட்கலாம். விடுதலை புலிகளிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த பதிலே அமெரிக்காவிடமும் இருந்து கிடைக்கிறது. இது "நியாயமா"?

இதற்கு ஏன் புலி உதாரணம்? இது நியாயமா?tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தினர் கண்ணியமானவர்கள் என்றும் விடுதலைப்புலிகளே மக்களைக் கேடயமாகப் ப் பாவித்துப் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்றும் அப்பாவி இராணுவத்திற்கு எதிராக கனரக ஆயுதங்களைப்பாவித்தார்கள் என்றும் சொல்கிறார்.அமெரிக்கா 3 தடைவைகள் ஐநாவில் தீர்மானம் கொண்டுவந்த தீர்மானம் சிறிலங்கா அரசு இராணுவம் போர்கு;குற்றம் இழைத்திருக்கிறது என்பதே அதன் சாரம்சம். அந்தத்தீர்மானத்தை பலநாடுகள் ஆதரித்து வாக்களித்திருந்தன.ஆனால் சீனச்சார்பு மகிந்த வீழ்தப்பட்டதும் அந்தத்தீர்மானத்தை வலுவிழக்கம் செய்யும்வகையில் இலங்கை அரசே ஒர தீர்மானத்தை கடந்த வருடம் முன்மொழிந்தது.சரி அமரிக்கத்தீர்மானம் சரியா? அல்லது இப்போது இந்த அமெரிக்கப் பிரதிநிதி கூறுவது சரியா. பல நாடுகள் ஆதரித்த தீர்மானத்துpற்கெதிரதாகக் கருத்துக் கூறும் ஒற்றை நபரின் உளறல்களை கருத்திற்கெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

இதற்கு ஏன் புலி உதாரணம்? இது நியாயமா?tw_tounge_wink:

"நியாயம்", "அநியாயம்" என்பவை அவரவர் தேவையை பொறுத்தது. புலியுடன் வாழ்ந்து அழிந்த தமிழருக்கு புலியை தெரிந்த அளவுக்கு அமெரிக்காவை தெரிந்திருக்க கூடிய சாத்தியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவில் அமெரிக்க அரசுடன் வாழ்ந்து அனுபவப்படவில்லை. ஆகவே தெரிந்தததை வைத்து தெரியாததை புரிய வைக்கும் முயற்ச்சியே இது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nedukkalapoovan said:

இஸ்ரேல் உச்சாவுக்கு போகவும் அமெரிக்காவை கேட்டிட்டுத்தான் செய்யனும்.. அப்படி ஒரு விதிப்பு அதுக்கு. மீறிப் போகட்டும் பார்க்கலாம்.. மிதிப்பு தெரிய வரும்.

அவர்கள் புத்திசாலிகள் - உங்களைப் போன்றவர்கள் அல்ல.

20 hours ago, nedukkalapoovan said:

சிங்கப்பூர் சொல்லத் தேவையில்லை.. சீனா பக்கம் சாய்ஞ்சு பார்க்கட்டும்.. மிதிப்பின் தன்மை தெரிய வரும். 

ஏன் சிங்கபூர் சீனா பக்கம் சாயவேண்டும்? மலேசியாவில் சீன கம்முனிச ஆயுத போராட்டம் தோற்ற நாட்களில் இருந்து சிங்கபூர் சீனாவின் ஆதிக்கம் பற்றி மிகவும் அவதானமாக இருக்கிறது. ஆனால் சீனா தனது பொருளாதாரத்தை திறந்த பொருளாதாரமாக மாற்ற பயிற்ச்சியும் ஒத்துழைப்பும் கேட்ட போது சிங்கபூர் தாரளமாக செய்தது. இன்று சீனாவில் தனது தொழிற்சாலையை கொண்டிருக்காத பாரிய வணிக நிறுவனம் ஒன்று கூட அமெரிக்காவில் இல்லை. உலகில் அதிகமாக  அமெரிக்க அரசின் கடன் முறிகளை வாங்கி அமெரிக்க அரசுக்கு தனது நிதிவளத்தை அதிகம் கொடுத்துள்ள நாடு சீனா. ஒருமுறை ஷாங்காய்க்கு போய் பாருங்கள், அமெரிக்காவை அங்கு காண்பீர்கள்.

20 hours ago, nedukkalapoovan said:

ஆனானப்பட்ட சதாமை மிதிச்ச மிதிப்பு.... இதுக்கும் சதாம் அமெரிக்க விசுவாசியா வெள்ளைமாளிகையின் செல்லப் பிள்ளை ஒருகாலத்தில். அதே போல் தான் ஒசாமாவும். tw_blush:

பார்த்து படிக்க இன்னும் ஒரு உதாரணம்.

20 hours ago, nedukkalapoovan said:

அமெரிக்காவை சந்திக்க வேண்டிய சரியான வழிமுறை வடகொரிய.. ரஷ்சிய வழிமுறை தான். tw_blush: tw_blush:

வட கொரியா??? நீங்கள் ஏன் இன்னமும் அங்கு போய் குடியேறவில்லை?

ரஸ்சியாவின் சோவியத் யூனியன் எங்கே என்று தெரியுமா?

20 hours ago, nedukkalapoovan said:

அமெரிக்காவை எதிர்த்து வளர்ந்தவர்கள்.. கியூபாவும்.. வியட்நாமியரும். இன்று அமெரிக்கா வலிந்து போய் கைகுலுக்குது. இதனையும் அண்ணன் யூட் அறிய பக்குவம் பெற வேண்டும். tw_blush:

கியூபா வளர்ந்ததா? போய் பாருங்கள் புரியும், ஒரு டொலருக்கு என்னவும் செய்ய தயாராக இருக்கும் மக்கள் அவர்கள். வறுமையின் கொடுமை அப்படி.

அமெரிக்காவின் பெரும் இராணுவ தளம் கியூபாவில் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அங்கு தான் மத்திய கிழக்கு பயங்கரவாதிகள் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு கியூபா இப்போது வேறு நோக்கங்களுக்கு தேவை. கியூபாவின் இன்றைய அரசு அமெரிக்காவுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆகவே அமெரிக்கா பொருளாதார தடையை அகற்றி இருக்கிறது. இனிமேலாவது அவர்களின் வறுமை குறையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.