Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கடன் நிலவரம் மிகவும் மோசமான நிலையில்; முழுக்கடன் எவ்வளவு என்பதே தெரியாத நிலையில் அரசாங்கம்

Featured Replies

960x0

இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதுசர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.

இலங்கை தற்போது செலுத்தவேண்டிய கடன் 64.9 பில்லியன் டொலர் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். அதில் 8 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் கடன் வீதத்தை ஒப்பிட்டால் அது 75 வீதமாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை செலுத்துவதற்காகவே செலவாகின்றது.

கடன் நிலை என்பது  தொடர்ந்து தாங்கமுடியாதவொன்று. ஆனால், இதனை விட வேறு விடயங்களும் உள்ளன.

முன்னைய அரசாங்கம் வழமையான வழிமுறைகளுக்கூடாக கடன்களை பெற்றதிற்கு அப்பால், அரச நிறுவனங்களை தனது சார்பில் கடன்களை பெறுமாறு கேட்டுக்கொண்டமையும் தற்போது தெரியவந்துள்ளது. இதன் முழுமையான அளவு இன்னமும் தெரியவராத அதேவேளை, தற்போது வரையான மதிப்பீடுகளின் படி 9.5 பில்லியன் டொலர் கடன் இந்த வழியில் பெறப்பட்டிருக்கலாம் என நம்பமுடிகின்றது. இவை எவையும் நிதியமைச்சின் ஆவணங்களில் காணப்படவில்லை.

இலங்கையின் கடன் நிலவரம் குறித்த துல்லியமான புள்ளிவிபரங்கள் எங்களிடம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுடன் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரும், அதிக செலவாகும் உள்கட்டமைப்பு திட்டங்களிற்காகவே இலங்கை அதிக கடன்களை பெற்றுள்ளது.

2009ஆம் முதல் 2014ஆம் ஆண்டிற்கு இடையில் இலங்கையின் ஒட்டுமொத்த கடன் மூன்று மடங்கால் அதிகரித்தது, வெளிநாட்டுக் கடன் இரண்டு மடங்காகியது. இலங்கை பெரும் பணச்செலவுடனான கட்டுமான திட்டங்களை முன்னெடுத்ததே இதற்குக் காரணமாகும். நாடுகாடுகளுக்கு நடுவில் பல மில்லியன் டொலர் செலவில் புதிய நகரத்தை உருவாக்க முயன்றது (இதற்குள் உலகின் மிகப்பெரிய வெறுமையான சர்வதே விமான நிலையமும்அடங்கும்). உலகில் அதிக செலவுடன் நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையையும் குறிப்பிடவேண்டும். மேலும், அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து பாரிய கல்லொன்றை அகற்றுவதற்கு 42 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டது.

எனினும், தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படுகின்றது என்பது இதன் அர்த்தமல்ல, 2015 ஆரம்பத்தில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் கீழ் உள்நாட்டு கடன் 12 வீதத்தினாலும், வெளிநாட்டு கடன் 25 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது. புதிய பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எதனையும் ஆரம்பிக்காமலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இதனைக் கவனிக்கத் தவறவில்லை. அவர் தற்போதைய அரசாங்கம் பெற்ற வெளிநாட்டுக் கடனைப் பயன்படுத்தி தான் இரு மத்தளை விமான நிலையங்களையும், ஒரு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், ஒரு நுரைச்சோலை அனல்மின் நிலையத்தையும், ஒரு கொழும்பு மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையையும், ஒரு கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையையும், ஒன்றல்ல இரண்டு கொழும்பு போர்ட் சிட்டிகளையும், 500 மெகாவோட் கொண்ட ஒரு சம்பூர் அனல்மின் நிலையத்தையும்ஏற்படுத்தியிருப்பேன் என சமீபத்தில் குறிப்பிட்டார்.

இலங்கை தான் வெளியேறமுடியாத கடன் பொறியில் சிக்கியிருக்கலாம். இந்த வருடம் மாத்திரம் வெளிநாட்டு கொடுப்பனவாளர்களுக்கு அது 4.5 பில்லியன் டொலர்களை வழங்கவேண்டியுள்ளது, அடுத்த வருடம் 4 பில்லியன் டொலர்களையும் செலுத்தவேண்டியுள்ளது, இதனை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து நாடு இன்னமும் திட்டமிடவில்லை.

கடன் நெருக்கடிக்கு பல இடைக்கால தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, சமப்பரிமாற்றத்திற்கு ஈடான கடன்கள், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மையப்படுத்துதல் போன்றன அவற்றில் சில. எனினும், இவை குறித்து இதுவரை எந்த ஆர்வமும் காண்பிக்கப்படவில்லை.

இலங்கை தனது வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பொருளதாரத்தின் திசையை சரிசெய்வதற்காக சில தகுதிகளிற்கு இணங்கியதை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் இவ்வருடம் ஏப்ரல் இலங்கைக்கு 1.5 பில்லியன்டொலர்களை வழங்க முன்வந்தது. எனினும், இந்த நிதியைப் பெற்றுக்கொண்ட பின்னர் சர்வதே நாணய நிதியத்திடமிருந்து மேலும் 5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்ததாககிழக்கு ஆசியா மன்றம் தெரிவித்துள்ளது.

“Sri Lanka’s Debt Crisis Is So Bad The Government Doesn’t Even Know How Much Money It Owes” என்ற தலைப்பில் ‘போர்ப்ஸ்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

http://maatram.org/?p=5011

  • கருத்துக்கள உறவுகள்

  DR.N. M. Perera.jpg     Bildergebnis für புத்தர்   

இலங்கை 1948´ம் ஆண்டில் சுதந்திரமடைந்து, 68 வருடங்களாகியும் கடன் சுமையில் இருப்பதற்கு.....
சிங்கள,  புத்த சமய அரசில்வாதிகள் , தமது சொந்தக் காசில்.... தமக்கே செய்த சூழ் வினைகளும், தமிழனின் சாபம் மட்டுமே.
தமிழருக்கு சம உரிமை வேண்டும் என்று... 1958´ம் ஆண்டில், காலி முகத்திடலில்  ஆரம்பித்த அகிம்சை  போராட்டத்தை நசுக்க...
ஆயுதத்தை.... கையில் எடுத்த சிங்களத்திற்கு, பதில் கொடுக்க, 
தமிழரின் தேசியத் தலைவர் பிரபாகரனை உருவாக்க காரணமாகியதும், அதே சிங்களம் தான். 

இதற்கிடையில்.... 1977´ம் ஆண்டு,  தமிழர்களுக்கு எதிராக... சிங்களம் நடாத்திய கலவரத்தில்...
அப்போதைய பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ  பண்டாரநாயக்காவின், அமைச்சரவையில்  நிதி அமைச்சராக பதவி வகித்த.
என். எம். பெரேரா... இந்தக் கலவரம், "இலங்கையை... 30 ஆண்டுகள் பின் தள்ளி விட்டது" என்று சொன்னார்.

தமிழருக்கு.... சம உரிமை கொடுத்தால், இலங்கை.... சிங்கப்பூர்  மாதிரி இருக்க வேண்டிய நாடு என்று,
சிங்கப் பூரை... இன்று, மேற்கு உலக நாடுகளுக்கு சரி சமனாக கொண்டு வந்த, 
முன்னாள்  சிங்கப்பூர்  பிரதமர் லீ குவான் யூ சொல்லியும் கேட்காத புத்த   சிங்களவருக்கு....
கடன் வாங்கி.... புத்தர் சிலை கட்ட மட்டும்  ஆசை என்றால்.... கடன் வராமல், வேறு என்ன வரும்.

ஈழத்து தமிழர் மேல்... சிங்களம் தொடுத்த  போருக்கு, வாங்கின கடனை...
அந்த புத்தர் தான்... அடைக்க வேணும். :)

1 hour ago, தமிழ் சிறி said:

இதுக்குத்தான் சொல்லுறது "மோட்டு சிங்களவன்" ,  எங்கட ஆக்கள் சிலர் சொல்லினும் அவன் அறிவாளியாம்.

சகல வளங்களும் இருந்த நாட்டை பிச்சைக்கார நாடாக்கியது தான் சிங்களவனின் 68 வருட சாதனை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இப்ப எங்கடை எதிர்கட்சித் தலைவர்..மோட்டு எஹிர்கட்சித் தலைவரோ?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, alvayan said:

அப்ப இப்ப எங்கடை எதிர்கட்சித் தலைவர்..மோட்டு எஹிர்கட்சித் தலைவரோ?

My crew when we see people we don’t like fighting with each other.

நமக்கு... சோறு தான் முக்கியம், ரசத்தை ஊத்து. (ஒண்டுக்குமே... சம்பந்தப் படாத, வாழ் நாள் சாதனையாளன்) 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலையக தமிழனும் வடகிழக்கு தமிழனும் இல்லாவிட்டால் சிங்களவன் இன்றும் காட்டுவாசிகளாக கோவணத்துடனேயே திரிந்திருப்பான்கள்.

14 hours ago, Dash said:

இதுக்குத்தான் சொல்லுறது "மோட்டு சிங்களவன்" ,  எங்கட ஆக்கள் சிலர் சொல்லினும் அவன் அறிவாளியாம்.

சகல வளங்களும் இருந்த நாட்டை பிச்சைக்கார நாடாக்கியது தான் சிங்களவனின் 68 வருட சாதனை.

ஒரு மோட்டு சமுதாயம் 68 வருடமா இன்னொரு மொக்கு சமுதாயத்தை அடிமைப்படுத்தி வைச்சிருக்கே.

இப்ப யார் மோடு, யார் மொக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

ஒரு மோட்டு சமுதாயம் 68 வருடமா இன்னொரு மொக்கு சமுதாயத்தை அடிமைப்படுத்தி வைச்சிருக்கே.

இப்ப யார் மோடு, யார் மொக்கு?

மோட்டுத்தனமாகத்தான் வென்றான்

அடிமைப்படுத்தி வைச்சிருக்கின்றான்...

மகிந்த மற்றும் கோத்தாவின் நிலையைப்பார்த்தாலே புரியும்

சிங்களவன் தமது  மொக்குத்தனத்தை புரிந்து  வைத்திருக்கின்றான் என்பது....

1 hour ago, ஜீவன் சிவா said:

ஒரு மோட்டு சமுதாயம் 68 வருடமா இன்னொரு மொக்கு சமுதாயத்தை அடிமைப்படுத்தி வைச்சிருக்கே.

இப்ப யார் மோடு, யார் மொக்கு?

நீங்கள் வீதியில் கவனமாக வாகனம் செலுத்துகின்றிர்கள் ஆனால் இன்னொருவன் வேண்டும் என்றே உங்கள் மீது வந்து பிடிக்கிறான் என்றால் யார் மீது தவறு யார் மீது???

அதைவிட தமது தாயக பகுதியில் வாழ்ந்து வந்த இனத்தை அடிமைப்படுத்த தனது வளமான நாட்டை சின்னாபின்பமாக்கியவர்கள் மூடர்கள் இல்லாமல் அறிவாளிகளா??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

நீங்கள் வீதியில் கவனமாக வாகனம் செலுத்துகின்றிர்கள் ஆனால் இன்னொருவன் வேண்டும் என்றே உங்கள் மீது வந்து பிடிக்கிறான் என்றால் யார் மீது தவறு யார் மீது???

நீங்கள் கவனமாக வாகனம் செலுத்தினால் மற்றவர் தவறுகளில் இருந்தும் உங்களை காப்பாற்றும் அளவுக்கு உங்கள் கவனம் இருக்க முடியும் என்றே வாகன காப்பறுதி நிறுவனங்களின் காப்பறுதி கணிப்பீடுகளில் கருதப்படுகிறது. சாதாரண நகரங்களில் வேண்டும் என்றே ஒருவர் வாகனத்தால் வந்து தாக்குவதற்கான சாத்தியம் கோடியில் ஒன்று. நீங்கள் வாழும் நகரத்தில் அறுபது வருடங்களாக தினமும் இவ்வாறு யாராவது உங்களை வந்து வாகனத்தால் மோதுகிறார்கள் என்று நீங்கள் காப்பறுதி நிறுவனத்துக்கு தெரிவித்தால் உங்களுக்கு காப்பறுதி கிடைக்காது. உங்கள் வாகன அனுமதி பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவையும் இரத்து செய்யப்படும். மற்றவர் மீது தவறு என்று நீங்கள் சாதிக்கலாம். ஆனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட தகுதி அற்றவர் என்பதும் உங்கள் வாகனத்தை காப்பறுதி செய்வது கட்டுப்படி ஆகாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

8 hours ago, Dash said:

அதைவிட தமது தாயக பகுதியில் வாழ்ந்து வந்த இனத்தை அடிமைப்படுத்த தனது வளமான நாட்டை சின்னாபின்பமாக்கியவர்கள் மூடர்கள் இல்லாமல் அறிவாளிகளா??

 அவர்கள் அறிவாளிகள் அல்ல. ஆனால் நீங்கள் இலங்கை தமிழர்களை அறிவாளிகள் என்றோ அல்லது வளமாக வாழும் ஆற்றல் கொண்ட மக்கள் என்றோ சாதிக்கவும் முடியாது. அப்படி வாழத்தக்க இனம் என்று இந்த மக்கள் இன்று வரை எந்த ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அதற்கு  மாறாக, உள்ளிருந்தும் வெளிக்காரணிகளாலும் தாம் தொடர்ச்சியாக அழிந்து போகும் இனம் என்பதையே இந்த மக்கள் நிருபித்து வருகிறார்கள். சாதி வேறுபாடுகள் அந்த நாட்களிலும், சீதனம் எந்த காலத்திலும், வெளிநாட்டு பணத்தில் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களால் தாம் தம்மை தாமே உள்ளிருந்து அழிக்கும் இனம் என்பதை இலங்கை தமிழ் இனம் தொடர்ந்து நிருபித்து வருகிறது. பலம் பொருந்திய அயல் நாடான இந்தியாவுடனும், நாட்டில் ஆளும் சக்தி கொண்ட சிங்கள மக்களுடனும் பொருத்தமான முறையில் உறவுகளை கட்டி எழுப்புவதன் மூலம் தமது இருப்பையும் வளத்தையும் உறுதி செய்யும் வலுவற்ற தன்மை  வெளிக் காரணிகளில் அடங்கும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

கடனாம் கடன் ..?  இலங்கை அதிபரை .. முதலில் சீனா போய்ட்டு அப்புறம் கிந்தியா வரசொல்லுங்க... அப்புறம்... பாகிஸ்தான் ..போகட்டும் .. அப்புறம் பாருங்க எல்லா பிரச்சனையும் சரியாக போகிடும் ..

டிஸ்கி :
கேம் சரியா இருக்கலாம் .. ஆனால் ஒருத்தன் எல்லொருக்கும் நண்பனாக ஒருக்கலும் இருக்க முடியாது .. என்னைக்கு ஒருநாள் மாட்டி கொண்டு உதை வாங்க போறங்கள் என்று தெரியல ..!!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2016 at 4:47 PM, Athavan CH said:

அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை செலுத்துவதற்காகவே செலவாகின்றது.

கவனிக்க இங்கு கடன் போர் முடிந்த காலபகுதியில் இன்னும் வேகமாகா அதிகரித்துள்ளது இதன் அர்த்தம் இங்குள்ள பொருளாதார வல்லுனர்களுக்கு விளங்கும் என நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

கவனிக்க இங்கு கடன் போர் முடிந்த காலபகுதியில் இன்னும் வேகமாகா அதிகரித்துள்ளது இதன் அர்த்தம் இங்குள்ள பொருளாதார வல்லுனர்களுக்கு விளங்கும் என நினைக்கிறன். 

விளங்கும் ஆனா விளங்காது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடன் பற்றிக் கவலைப்படும் நண்பர்களே உங்கள் வீட்டுக் கடன் எவ்வளவு என்று தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இலங்கையின் கடன் பற்றிக் கவலைப்படும் நண்பர்களே உங்கள் வீட்டுக் கடன் எவ்வளவு என்று தெரியுமா?

சகோதரி ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டால் எல்லாமே அம்பேல்.

குறிப்பு: எனக்கு வீட்டுக்கடன் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9.10.2016 at 2:49 PM, ரதி said:

இலங்கையின் கடன் பற்றிக் கவலைப்படும் நண்பர்களே உங்கள் வீட்டுக் கடன் எவ்வளவு என்று தெரியுமா?

அது வீட்டுக்காரனைத்தான் கேக்கவேணும்......எனக்கேன் தேவையில்லாத சோலி k61.gif

8 hours ago, ரதி said:

இலங்கையின் கடன் பற்றிக் கவலைப்படும் நண்பர்களே உங்கள் வீட்டுக் கடன் எவ்வளவு என்று தெரியுமா?

இங்கு யார் கவலைபட்டவர்கள் சகோதரி சிங்கள தேசம் மீள முடியா கடன் சுமையில் மாட்டுப்பட்டது சந்தோசமே இதன் பாதிப்பு தமிழர்களையும் தாக்கும் என்பதை மறுக்கமுடியாது ஆனால் பெரும்சுமையை தூக்க போவது சிங்களமே .

40,50வயதுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களின் வீடுகள் பெரும்பாலும் கடன்கள் கட்டி முடிக்கும் நிலையில் உள்ளன இனி அடுத்த கட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் நிலையில் உள்ளனர் (ஒரு பகுதி அரசவீடுகளில் இருந்த வண்ணம் அந்த வீடுகளையும் மிக குறைந்த விலையில் உரிமையாக்கும் நிலையை நோக்கி நகர்கிறார்கள் ) 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2016 at 8:59 PM, Jude said:

அவர்கள் அறிவாளிகள் அல்ல.

உங்கள் எழுத்துக்கள் நிறைய முரண்

On 10/8/2016 at 8:59 PM, Jude said:

நாட்டில் ஆளும் சக்தி கொண்ட சிங்கள மக்களுடனும் பொருத்தமான முறையில் உறவுகளை கட்டி எழுப்புவதன் மூலம் தமது இருப்பையும் வளத்தையும் உறுதி செய்யும் வலுவற்ற தன்மை  வெளிக் காரணிகளில் அடங்கும்.

உண்மையில் அவர்களுக்கு ஆளும் சக்தி உள்ளதா என சிந்திக்கவேண்டி உள்ளது ஒரு பெரும்பான்மை இனமாய் உள்ளபடியால் மாத்திரமே அது கிடைகின்றது இனத்துவேசம் எனும் நெருப்பால் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை அழிவை நோக்கி  பயணிப்பது தெரிந்தும் இன்றும் மாற முடியாமல் இருப்பவர்களை என்னவென்று சொல்வது சொரிலன்காவின் முக்கியமான பண வருவாய் உள்ள நிருவனம்கள் இனி ஒவ்வொன்றாய் வெளிநாட்டு கொம்பனிகளின் உடைமைகள் ஆக்கப்படும் அது நல்ல பணமீட்டும் நிறுவனமாக இருந்தாலும் வெளியால் நட்டகன்க்கு  காண்பித்து விட்டு விற்பது வழமை கடன் பற்றிய செய்தி வந்த அதே  போர்ப்ஸ் ல் பின்வரும் செய்தி http://www.forbes.com/sites/wadeshepard/2016/10/07/sri-lankas-mismanaged-cash-hemorrhaging-airline-is-for-sale-and-there-are-actually-takers/#35cb1e0115df

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

உங்கள் எழுத்துக்கள் நிறைய முரண்.

உண்மையில் அவர்களுக்கு ஆளும் சக்தி உள்ளதா என சிந்திக்கவேண்டி உள்ளது

நீங்கள் ஆளும் சக்தியையும், சிறந்த ஆளுமையையும் ஒன்றாக பார்ப்பதாலேயே உங்களுக்கு எனது கருத்துகள் முன்பின் முரணாக தெரிகின்றன. ஆளும் சக்தி குறைந்த சிறந்த ஆளுமை உள்ள ஆட்சிக்கு விடுதலை புலிகளின் தமிழ் ஈழ ஆட்சி உதாரணம். அவர்களிடம் உணவு, போக்குவரத்து, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் தன்னிறைவு காணும் சக்தி இருக்கவில்லை. ஆனால் போற்றத்தக்க ஆட்சி செய்யும் ஆளுமை இருந்தது.

உண்மையில் அவர்களுக்கு ஆளும் சக்தி உள்ளதா என சிந்திக்கவேண்டி உள்ளது ஒரு பெரும்பான்மை இனமாய் உள்ளபடியால் மாத்திரமே அது கிடைகின்றது 

ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை வாக்குபலம் பிரதானமான ஆளும் சக்தியாகும்.

 இனத்துவேசம் எனும் நெருப்பால் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை அழிவை நோக்கி  பயணிப்பது தெரிந்தும் இன்றும் மாற முடியாமல் இருப்பவர்களை என்னவென்று சொல்வது 

நீங்கள் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழர்கள் சிங்கள மக்களின் ஒன்று பட்ட நிலைப்பாட்டை "இனத்துவேசம்" என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கி அதற்கு அப்பால் சென்று சிந்திக்க மறுப்பது இலங்கை தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு முக்கியமான காரணமாகும். இது அறிவு குறைவான அணுகுமுறை - ஆனால் கடந்த அறுபது வருடங்களாக அதையே நாம் செய்கிறோம். 

தென் ஆபிரிக்க தமிழர், மலேசிய தமிழர், தமிழ் நாட்டு தமிழர் எல்லோரும் விரும்புவதும் கடுமையாக முயற்சிப்பதும் தமிழருக்கு என்று ஒரு நாட்டுக்காக. இந்த நாடு இந்தியாவிலோ தென் ஆபிரிக்கவிலோ அல்லது மலேசியாவிலோ சாத்தியம் இல்லை. இலங்கைக்குள் இந்த நாடு உருவானால் இந்த தமிழர்கள் தாம் விரும்பி உருவாக்கிய இந்த நாட்டுக்கு தமது பணம் பலம் அனைத்தும் கொண்டு வர மாட்டார்களா? அவர்களுக்கு தேவையான நிலத்துக்காக சிங்களவர்களின் நிலங்களை இந்த பணம் படைத்த தமிழர்கள் பறிக்க மாட்டர்களா? சிங்களவர்களுக்கு உலகில் வேறு யார் இருக்கிறார்கள்? நீங்கள் சிங்களவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Jude said:

 நீங்கள் சிங்களவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? 

நல்ல கேள்வி யூட் அவர்களே!

நாங்கள் சிங்களவராக இருந்தால் மிருகங்களாகச் சிந்தித்து செயல்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

நல்ல கேள்வி யூட் அவர்களே!

நாங்கள் சிங்களவராக இருந்தால் மிருகங்களாகச் சிந்தித்து செயல்படுவோம்.

சோழர் ஆக்கிரமிப்பு முதல், குண்டுவெடிப்புகள், எல்லை கிராமங்களில் பொதுமக்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்கள், இயக்க மோதல்கள், இராணுவ துணைக்குழுக்களின் பொதுமக்கள் மீதான அக்கிரமங்கள் அனைத்தும் இதை ஐயம் திரிபற தெளிவாகவே காட்டி நிற்கின்றன. சிங்கள மக்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்ட நாடுகளுக்கும் இதில் எந்த சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

சிறிலங்கா பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்து சிங்களவரின் கையில் ஆட்சி சென்ற பின் 1948ல் இருந்து 1980 வரையில் தமிழர்கள் அடி வாங்கி கொண்டு தான் இருந்தார்கள். யாரும் திருப்பி அடித்ததாக தெரியவில்லை.2016 வரைக்கும் அப்படி இருந்திருந்தாலும் தொடர்ந்து தமிழர்கள் அடி வாங்கிக்கொண்டே இருந்திருப்பார்கள்.இதற்கு என்ன சொல்கிறீர்கள்? 

இதில் சிங்கள மக்களுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் கூறவும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால் உலகளாவிய தமிழர் மீதும் அவர்கள் இலங்கையில் தமிழருக்கு ஒரு நாட்டை அமைப்பதால் தாம் பாதிக்கப்பட இருப்பது பற்றியும்  சிங்களவர்களுக்கு உள்ள பயத்தை இந்த அடி வாங்கிய வரலாறு போக்கவில்லை. 1947இல் நேரு யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு ஏதாவது நடந்தால் இந்தியா பார்த்துக்கொண்டு இருக்காது என்று பேசியதும் அடங்கத் தமிழர் சுந்தரலிங்கம் அறுபதுகளில் தமிழ் எயோளம் கேட்டதும் எந்த வகையிலும் சிங்களவரின் பயத்தை போக்கவில்லை. தமிழர்கள் தொடர்ந்து அடி வாங்கி கொடிருக்க வேண்டும் என்று சிங்களவர்கள் விரும்பியிருக்கலாம். அதில் பெருமளவுக்கு சிங்களவர்களே சந்தேக பட மாட்டார்கள். ஆனால் தமிழர்கள் தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டு இருப்பார்கள் என்று சிங்களவர்கள் நம்பி இருக்க மாட்டார்கள். காரணம் சிங்களவர்களில் பலர் யாழ்ப்பாணம் தமிழ்நாட்டின் தொடர்ச்சி என்றே நினைக்கிறார்கள். உலகளாவிய தமிழர்கள் தங்களை எப்போதாவது அழித்து விடுவார்கள் என்ற பயத்தில் சிங்களவர்கள் தம்மை தொடர்ச்சியாக தயார் படுத்தி வருகிறார்கள். அதானால் தான் தமிழர்கள் உரத்து பேசினாலே சிங்களவர்கள்  அடித்து அடக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2016 at 4:13 PM, Jude said:

பெரும்பாலான தமிழர்கள் சிங்கள மக்களின் ஒன்று பட்ட நிலைப்பாட்டை "இனத்துவேசம்" என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கி அதற்கு அப்பால் சென்று சிந்திக்க மறுப்பது இலங்கை தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு முக்கியமான காரணமாகும்

ஒன்று பட்ட இலங்கை க்குள் தீர்வு என்பவர்கள் கவனிக்க சொறிலங்கா ஏற்கனவே பல தேசங்களுக்கு விலை போன விலை மாது போல் இதற்க்குள் எப்படி தீர்வு வரும்  உள்ளவனுக்கு எல்லாம் நாட்டை வித்து விட்டு இப்ப ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்டால் யார் நம்புவது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.