Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையும் ஏமாற்றமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையும் ஏமாற்றமும்.

என் மகன்மீதா பழிபோடுகிறாய்…! என்ன திமிரடி உனக்கு…!!“ பத்து வீடுகளுக்குக் கேட்கும் வண்ணம் பெரும் குரலெடுத்துக் கத்தினாள் பவானியம்மாள்,  பக்கத்துவீட்டு ராதா படபடத்து ஒடிவந்தாள். மிதித்தால் புல்லும்கூடச் சாகாத மென்மையானவள். அந்தத் தாய் பவானியம்மாள். இருமினால்கூட இரண்டாம் ஆளுக்குக் கேட்காது இருமுவாள். அப்படிப்பட்டவளா இன்று.....? அதிர்ந்துபோய் வந்தவள், தன்தோழி நந்தினி பேயறைந்ததுபோல் நிற்க, அவள் மாமியார் பவானியம்மாள் பத்திரகாளியாக நின்றாள். ஆருக்கடி சொல்லுகிறாய்…! என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைச்சுப் பத்துமாத்திலை என் பேரனைக் கொஞ்சுகிறேனா இல்லையா பாரடி. என்று உச்சகட்டத்தில கூச்சலிட்டு ஆடினாள். நந்தினியின் கணவனோ கல்லாய்ச் சமைந்து நின்றான்.

தேவலோகத்து ரம்பை ஊர்வசிகளைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கமுடியாத அழகுநிறைந்தவள் நந்தினி. காண்போர் அனைவரையும் வசீகரிக்கும் அழகியான ராதாகூட நந்தினின் அழகு கண்டு பிரமித்தவள். திருமணமாகி நந்தினி அந்தப் பக்கத்து வீட்டிற்கு வந்தபோது கர்வியாக இருப்பாளோ....! என்றெண்ணிப் பழகத் தயங்கியவள் ராதா. அவள் கணவன் நந்தினியின் அழகுபற்றி ஏதாவது ஒரு சொல் சொன்னாலே பொருமியவள். போகப் போக நந்தினியின் பூப்போன்ற உள்ளம்கண்டு புன்னகைபூக்க....! அந்தப் புன்னகையே அவர்களைத் தோழிகளாக இணைத்தது. அந்தரங்களையும் கூச்சமின்றிக் கதைக்கும் அளவிற்குச் சினேகிதிகளாக்கி விட்டிருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து செல்லும்போது இருவரின் அழகு கண்டு தடுமாறும் இளவட்டங்களைக் கண்டு, தங்களுக்குள்ளேயே கேலியாகப் பேசி சிரித்துக் கொள்வார்கள்.

பவானியம்மாளும் நந்தினியை உள்ளம்கையில் வைத்துத் தாங்கினாள். கணவன் நந்தகுமாரோ...! சித்தெறும்புகூட வீட்டிற்குள் நுளையாது பார்த்துக்கொண்டான். இப்படியே இனிமையாக இரண்டு வருடங்கள் பறந்தோடிவிட்ட நிலையில்தான்,! இரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குழந்தைல்லையே என்ற ஆதங்கத்தினால்.! பவானியம்மாளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. அற்ப விங்களுக்கெல்லாம் குறைகண்டுபிடிக்கத் தொடங்கினார். இதனால் கவலைகொண்ட நந்தினி அவளது கவலைகள்பற்றி ராதாவோடு மனம்விட்டுக் கதைத்தபோது....! நந்தினி எனக்குத் தெரிந்த லேடி டாக்டர் ஒருவர் இருக்கிறார் நீ அவரிடம் சென்று செக்கப் பண்ணிப் பார். உன்னிடம் குறையில்லை என்றால் உன் கணவரைச் செக்கப்பண்ணச் சொல்லு. என்று அறிவுரை வழங்கினாள். சரி என்று நந்தினியும் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்றாம் நாள் அவளிடம் குறை எதுவும் இல்லையென்று ரிப்போட் வந்ததை அடுத்து தன் கணவனைச் செக்கப்பண்ணச் சொன்னபோதுதான் பிரளயமே வெடித்தது.

நந்தகுமாரும் தன்னில் குறையில்லை, தான் பரிசோதனைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லயென்று உறுதியாக நம்பினான். அதற்குக் காரணமும் இருந்தது. முன்பு ஒருமுறை நந்தினிக்கு நாட்கள் தள்ளிப்போனபோது. வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது ஆனாலும் அந்த மகிழ்ச்சி ஆறேழு நாட்களிலே அற்றுப்போனது. கொடுத்ததைப் பாதுகாக்க முடியாத குறையை அவள் உடல் கொண்டிருப்பதாக அவன் பூரணமாக நம்பினான். அதற்காக அவளைப் பரிசோதனைக்கு அனுப்பிப் பார்க்க அவன் விரும்பவில்லை. கிடைக்கும்போது கிடைக்கட்டும் என அவன் இருந்துவிட்டான். அத்தோடு பக்கத்துவீட்டு ராதா குடும்பம் தங்களுக்கு 5 வருடங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று செயற்கையாகவே முயற்சிகள் செய்யும்போது.... தங்களுக்கு இயற்கையாகவே அந்த வரம் கிடைத்திருப்பதை வரவேற்கவே செய்தான்.

நந்தினியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் தீண்டிப்பார்க்காத நந்தகுமாரைத் தாயின் உத்திர தாண்டவம் ஆட்டங்கொள்ளச் செய்தது. அம்மா எத்தனையோ குடும்பங்களில் பத்து வருடங்களுக்குப் பின்பும் குழந்தை கிடைத்துள்ளது எங்களுக்கு இரண்டு வருடங்கள்தானே, எனக்கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றான். மகனின் ஆதங்கத்தைக் கண்டு இறங்கிவந்த பவானியம்மாள், சரி இன்னமும் ஒருவருடம் பார்க்கிறேன், அப்போதும் இல்லையென்றால்....! உனக்கு வேறு கலியாணம்தான். நீ மறுத்தால் இந்த உலகைவிட்டே நான் போய்விடுவேன்.“ என்று மகனை ஆட்டம்காணச் செய்து அவனிடம் சத்தியமும் வாங்கிவிட்டாள். .

நந்தினியின் கணவன் நந்தகுமார் பரிசோதனைக்கு உட்பட மறுப்பதை அறிந்த அந்தப் பெண் வைத்தியரின் ஆலோசனைப்படி, பிறிதொரு நாளில் நந்தகுமாருக்கு வந்த சாதாரண நோய்க்கு மருந்தெடுக்கும் சாட்டில், ராதாவின் கணவனே நந்தகுமாரை அந்தப் பெண் வைத்திரிடம் கூட்டிச் செல்லவே சந்தேகம் எதுவும் இன்றி, வைத்தியரும் தனது பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையுமே பெற்றுக்கொண்டார். சோதனையின் முடிவை வைத்தியர் நந்தினியை மட்டுமே தனியாக அழைத்துத் தெரிவித்தார். நிவர்த்தி செய்யக்கூடிய குறையே அவள் கணவனுக்கு இருப்பதாகவும். அதற்கான மருந்தைப் பாலில் கலந்து ஒரு மாதம் மட்டும் கொடுத்தால் போதும். பலன் ஆறுமாதங்களின் பின்பு நிச்சயம் எனவும் தெரிவித்தார்.  

என்னதான் கூச்சல் போட்டாலும், மாமிக்கு மருமகளிடத்தில் அன்பு, பாசம் இல்லையென்று கூறிவிட முடியாது. தன் மகனைக் குறைகூறிவிட்டாளே…! என்ற ஆதங்கமே அவரை உருக்கொண்டு ஆடவைத்தது. சிறிதுநாளில், சற்று ஆத்திரம் அடங்கியதும் மருமகளைக் கடிந்துவிட்டோமே என்ற கவலை அவரை வாட்டியது. மருமகளைக் கூப்பிட்டு ஆறுதல் கூறத்தொடங்கினார். நந்தினி குழந்தை வரம் கடவுள் அருளால் கிடைப்பது. உந்த டாக்குத்தர்மாருக்கு உது ஒன்றும் புரியாது. என் சித்தப்பா இருக்கும் ஊரில் உள்ள அம்மன் மிகவும் சக்திவாய்ந்தவர். தற்போது அந்த அம்மனின் ஆச்சிரமத்தில் இருக்கும் இரண்டு சாமிமார்கள் சாத்திரம், குறி பார்ப்பது, காண்டம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்களாம். பலருடைய குறைகளைக் கேட்டறிந்து அதற்குப் பரிகாரமும் சொல்லிப் பலனடைய வைத்துள்ளார்களாம். சித்தப்பாவின் இருக்கும் ஊருக்கு இங்கிருந்து ஒரு நாளில் சென்றுவர முடியாது ஆகவே நீ அங்கு ஒருமுறை சென்று சித்தப்பா வீட்டில் ஒருநாள் தங்கி, அம்மனின் அருள்பெற்று உன் சாதகத்தையும் சாமிமார்களிடம் கொடுத்து உன் குறைகளையும், அதற்கான பரிகாரங்களையும் அறிந்துவா!“ என்றார். 

நந்தினியால் அதை மீறமுடியவில்லை.

நந்தகுமாருக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் விடுமுறை பெறுவது கடினமாக இருந்தது. சாத்திரங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் தாயை ஆறுதல்படுத்த வேண்டி நந்தினியை அனுப்பவேண்டிய தேவையும் இருந்தது. ஆகவே தன் மனைவியின் தோழியான ராதாவையும் அழைத்துச்செல்ல அவள் கணவனிடம் அனுமதியும் யாசிக்கப்பட்டது. நிலமையின் தாக்கத்தை உணர்ந்த அவரும் அனுமதி அளித்தார். சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நந்தினியும், ராதாவும் வேறு வழியின்றிப் புறப்பட்டனர்.

இன்று மாலை கோவிலிலே அன்னதானம் வழங்குவார்கள். பூசை முடிய 10மணியாகும் அதன்பின்புதான் சாமிமார்கள் உங்களின் குறைகளைக் கேட்டுப் பரிகாரமும் சொல்வார்கள். சாமத்தில் இங்கு திரும்ப வருவது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் அங்கே மடத்திலேயே படுத்துறங்கவும் வசதியுள்ளது. காலையில் புறப்படும் பேரூந்தில் நேராகஊருக்கும் சென்றுவிடலாம் பவ்வியமான சித்தபாவின் கூற்றில் கஞ்சத்தனம் கடுகளவும் குறையாது தெரிந்தது.

அம்மன் பூசை முடிந்து அன்னதானமும் அருந்தியபின் சாமியார்களிடம் தங்கள் குறையறிந்து பரிகாரம்தேடவந்த பக்தர் கூட்டம் சாமிகளைச் சுற்றி இருந்தது. தங்கள் தியானத்திலிருந்து கண்களின் இமைகள் திறந்த சாமிகளைக் கண்டு பக்தர்களி்ன் முகங்கள் மலர்ந்தன. ஆனால் சாமிகளின் முகங்களோ…! நந்தினி ராதா என இருவரது முகங்களையும் கண்டு மலர்ந்தது. இவர்களைக் கண்டு வியக்கும் மனிதர்கள் பலரைக் கண்டு பழகிவிட்டதால் இருவருக்கும் அது பெரிதாகத் தெரியவில்லை. கைவிரல்களை மடித்தும், எண்ணியும், கண்கள்மூடித் தியானித்தும்  பக்தர்கள் கொண்டிவந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்தும், அவற்றில் கண்டுகொண்ட குறைகளுக்கான பரிகாரங்களைச் செய்வதற்கான நாட்களையும் மின்னல் வேகத்தில் தெரிவித்த சாமியார்கள் நந்தினி ராதா இருவரது குறிப்பேடுகளைப் பார்த்ததும் உடனேயே இவற்றுக்குப் பரிகாரம் செய்யவேண்டும் எனக்கூறி. அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தங்கள் ஏவல் ஆட்களுக்குக் கட்டளைகளை இட்டபின், ஏனைய பக்தர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்கள். இருவருக்கும் கிடைத்த அதிட்டத்தைக் கண்டு பக்தர்களும் அவர்களை வாழ்த்திக் கலைந்தார்கள்.

இந்தக் குடிலுக்கு வாருங்கள் அம்மா, பரிகாரத்திற்கு 2000 ரூபா செலவாகும் உள்ளதா என வினவினார்கள். ஆமாம் உள்ளது எனத் தெரிவித்துக் குடிலுக்குள் இருவரும் நுளைந்தனர். குடிலின் உள்ளே இருந்து வந்த நறுமணம் இனம்புரியாத உணர்வை உண்டுபண்ணியது. அம்மா இப்படி அமருங்கள்.சாமிகளில் ஒருவர் னிமையாக அழைத்து தனக்கு எதிரில் இருக்க வைத்தார். அவரின் இருபக்கமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் நறுமணத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. அம்மா உங்களுக்கு அம்மனின் ஆசி பரிபூரணமாய் கிட்டட்டும் என்று தனது இரு கைகளையும் இருவரின் தலைகள்மீது வைத்து ஆசீர்வாதம் வழங்க, அதனைக் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். ஐயம் வேண்டாம்! நம்பிக்கை இல்லாதுவிட்டால் நீங்கள் எழுந்து செல்லலாம்.“ சாமிகள் கூறத் திடுக்கிட்ட இருவரும்…! எங்கள் மனதை எப்படி இவர் அறிந்துகொண்டார் என வியந்து அவரிடம் தயக்கமும், பயம்கலந்த பக்தியும் ஏற்பட்டது. அப்படி எதுவும் இல்லை சாமிகளே.“ என்று தெரிவித்த அவர்கள் மனம் தீர்க்கமாகன பயத்துடன் அம்மனையும் தியானித்தது.

சாதகக் குறிப்பை மீண்டும் புரட்டிப் பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. கா.! மிக அருமையான ஜாதகங்கள்.! என்றவர், ஏதோ மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போது மற்றச் சாமியார் கையில் பால் செம்புடன்வந்து எங்கள் இருவரையும் அருந்தச் செய்தார். சாமிகள் மந்திரம் ஓதி முடிந்ததும், பரிகாரத்தை ஆரம்பிக்கலாம் என்றார். வீபூதியை எடுத்து கண்களை மூடச்சொல்லி இருவரது முகங்களிலும் ஊதினார். ஊதிய சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஏதோ மயக்கம் வந்ததுபோல் தெரிந்தது. மலர்ந்த இன்முகத்துடன் மயங்கி உறங்கினார்கள்.

பறவைகளின் சத்தமும் வானத்தின் சிவந்த ஒளியும் விடியலை உணர்த்தியது. கண்விழித்தபோது அடித்துப் போட்டதுபோல் உடம்பெல்லாம் வலி, எழமுடியாது அவர்கள் தலைகள் சுற்றியது. மிகவும் சிரமப்பட்டு இருவரும் எழுந்தபோதான் நடந்ததவை நினைவிலும், உணர்விலும் தெரிய விழிபிதுங்கி அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களின் நிலையைக்காண.... அங்கு எவரும் இல்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே முடியாத நிலையில் கூனிக் குறுகிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நடந்தவற்றை வெளிப்படுத்தி அவர்கள் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதைவிட, அனைத்தையும் மனதுக்குள்ளே இறுகப் பூட்டிவைப்பதென முடிவானது.   

சாமிகளின் பரிகாரம் முடிந்து வந்து மாதம் ஒன்றும் கழிந்து, சிலநாட்களில் பவானியம்மாள் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவித் குதித்தார். பெற்ற தாயைவிடவும் அன்போடு மருமகளை அரவணைத்தார். தானே அவள் முகத்தைக் கழுவித் துடைத்து வீபூதி குங்குமம் இட்டு அழகுபார்த்தார். சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே...! மருமகளுக்காக அதைத் தானே உண்ணமுடியாத நிலைமைக்கு வருந்தினாரென்றால் பார்க்கவேண்டுமே...! அத்தனை கவனிப்பு...!!

இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....! நந்தினியின் கண்கள் பனித்தது. ராதா அவள் கண்ணீரைத் துடைத்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாதென்று கண்ணசைத்தாள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....!நந்தினியின் கண்கள் பனித்தது

 நவீன  உலகின் இன்னும் இப்படி வாழ்கிறார்கள்   என் நினைக்க வேதனையாக   உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

பச்சை தங்களின் எழுத்து நடைக்கு..! 'ஆசாராம் பாபு' கதைக்கு அல்ல..!! draplol.gif

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நித்தியானந்தா

8 hours ago, Paanch said:

இந்தக் குடிலுக்கு வாருங்கள் அம்மா, பரிகாரத்திற்கு 2000 ரூபா செலவாகும் உள்ளதா என வினவினார்கள். ஆமாம் உள்ளது எனத் தெரிவித்துக் குடிலுக்குள் இருவரும் நுளைந்தனர்.

 ஐயம் வேண்டாம்! நம்பிக்கை இல்லாதுவிட்டால் நீங்கள் எழுந்து செல்லலாம்.“ சாமிகள் கூறத் திடுக்கிட்ட இருவரும்…! எங்கள் மனதை எப்படி இவர் அறிந்துகொண்டார் என வியந்து அவரிடம் தயக்கமும், பயம்கலந்த பக்தியும் ஏற்பட்டது. அப்படி எதுவும் இல்லை சாமிகளே.“ என்று தெரிவித்த அவர்கள் மனம் தீர்க்கமாகன பயத்துடன் அம்மனையும் தியானித்தது.

அப்போது மற்றச் சாமியார் கையில் பால் செம்புடன்வந்து எங்கள் இருவரையும் அருந்தச் செய்தார். சாமிகள் மந்திரம் ஓதி முடிந்ததும், பரிகாரத்தை ஆரம்பிக்கலாம் என்றார். 

சாமி.... பயங்கர சாமி போல் உள்ளது. 
2000 ரூபாயையும் வாங்கி விட்டு தான்... அலுவல் பார்த்திருக்குது.
"என்னில்.... நம்பிக்கை இல்லாவிட் டால், நீங்கள் போகலாம் என்று... "வார்னிங்" கொடுத்த பிறகும், 
நந்தினியும், ராதாவும்.... உசாராகாமல், சிஷ்ய சாமி... கொடுத்த பாலை குடித்ததால்.....
குரு சாமிக்கும்,  சிஷ்ய சாமிக்கும்.... "வெள்ளி  திசை" அடிச்சிருக்குது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாய் இருக்கு பாஞ்ச்... ! tw_blush:

துருச்சாமிக்கும் இவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முக்கியமாய் அவருக்கு ஆசிரமங்களோ கிளைகளோ கிடையாது....!  :unsure:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லற உறவின்....அத்திவாரத்தையே ஆட்டி வைக்கின்ற அளவுக்கு ...சம்பவங்கள் நடந்துள்ளன!

நந்தினியும்..ராதாவும் எடுத்த முடிவு...அவர்கள் வாழும் சூழ்நிலையில் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு முடிவு தான்!

அவர்கள் வேறு எந்த முடிவும் எடுத்திருக்க முடியாது தான்!

நாளை ..அந்தக் குழந்தையை, அவளது கணவன் தூக்கிக் கொஞ்சும் ஒவ்வொரு நாளும்..அவளுக்கு வலிக்கத் தான் போகின்றது!

இப்படியே வாழ்ந்து முடித்தவர்கள் ஏராளம்!

ஊரில் வேறு வழியில்லாமல் .. இவ்வாறான மூட நம்பிக்கைகளில் மக்கள் மூழ்கிப்போய் விடுவதை..ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியுமாயினும்...புலத்திலும் இந்த அட்டகாசங்கள் எந்த விதத் தடங்களும் இல்லாமல் தொடர்வது தான்...மிகவும் வருத்தத்துக்குரியது!

எழுத்து நடை.....அற்புதம்!

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சு 
இப்படியான பிரச்சனைகள் எமது சமூகத்தில் மட்டுமல்ல பல தரப்பட்ட மக்களும் இப்படியான லீலைகளுக்கு பலியாகிறார்கள்.

மிக கவனமாகவும் நன்றாகவும் எழுதியுள்ளீரகள்.

யார் குத்தியும் அரிசியாச்சே!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தவர்கள் இப்படி சாமியார்,பூசை என்று போகின்றவர்களா?....சும்மா கோயிலுக்குப் போய் ஜயரைக் கொண்டு நூல் கட்டுறது தான் எனக்குத் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு பாஞ்ச்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சென்ற வெள்ளிக்கிழமை மாலை, சோமபானம் தம்பி தமிழ் சிறியை  உசார்படுத்த, அந்த உற்சாகத்தில் அவர் "பாஞ்சண்ணை...! ஏன் இன்னமும் சுய ஆக்கத்துக்கு வரவில்லை..!!" என்று உரிமையோடு பாஞ்சண்ணைமீது பாய்ந்த பின்புதான், சுய ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதைக் கவனித்தேன். கவனித்து இந்தப் பதிவையும் பதிந்து, உறவுகளின் பாராட்டுகளையும் பெற்றேன். ஆகவே முதலில் சோம பானத்திற்கு என் நன்றிகளைத் தெரிவித்து.:100_pray: என் பதிவுக்குக் கருத்துக்களும் எழுதிப் பச்சைகளும் வழங்கிய
நிலாமதி
ராசவன்னியன்
தமிழ் சிறி
சுவி
புங்கையூரன்
ஈழப்பிரியன்
ரதி தமிழினி
மெசொபொத்தேமியா சுமேரியர்
ராசம்மா
இணையவன்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.:100_pray::100_pray:
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

ஈழத்தவர்கள் இப்படி சாமியார்,பூசை என்று போகின்றவர்களா?....சும்மா கோயிலுக்குப் போய் ஜயரைக் கொண்டு நூல் கட்டுறது தான் எனக்குத் தெரியும்

ஈழத்தில், தமிழர் உயிர்களையும் உடமைகளையும் சிங்களம் சூறையாட முதல்காரணமாக விளங்கும் புத்த பிக்குகளின் தாரக மந்திரம், "புத்தம் சரணம் கச்சாமி" என்று சாமியில் முடிவதால்.....! பிக்குகளை வெறுக்கும் ஈழத்தமிழர்களிடம் சாமிகளுக்கு வரவேற்புக் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். :shocked: :shocked:
 
  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2017 at 8:20 PM, நிலாமதி said:

இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....!நந்தினியின் கண்கள் பனித்தது

 நவீன  உலகின் இன்னும் இப்படி வாழ்கிறார்கள்   என் நினைக்க வேதனையாக   உள்ளது 

கனடா வரும்போதெல்லாம் .................
சாத்திர காரர்களின் விளம்பரங்களை அடிக்கடி காண்கிறேன்.

அப்போதெல்லாம் ..
இங்கு வந்தும் திருந்தாத கூடடத்திடம் 
அவங்கள் புடுங்குவதில் என்ன தப்பு?
 என்றுதான் எண்ணி கொள்வேன் ! 

உங்களுக்கு அடிக்கடி பார்ப்பதால் 
ஒரு வழமையான விடயமாக ஆகியிருக்கும். 

எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். போலிச்சாமியார்கள், போலியான மதங்கள் எல்லாம் இன்னும் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் பச்சை நகி ....இரவுக்கு அல்லது நாளை போடுகிறேன்.....எதற்கும் சாத்திரியிடம் கேட்டு பாருங்கோ என்னிடம் எத்தனை பச்சை இருக்கு என்று....சாமிமார் தொல்லை தாங்கமுடியவில்லை ...உங்கள் கதையை வாசித்த பின்பு எனக்கும் பார்ட் டைம் சாமியாக போகலாமோ என்று எண்ணம் வருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் இப்படியான நிறைய விடயங்கள் எங்கள சமூகத்திற்குள் இன்றுவரைக்கும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் பயன்படுத்தி கில்லாடித்தனம் பண்ணுபவர்களைத்தான் சனங்களும் நம்புகிறார்கள். தெளிவாக அவர்களின் நடவடிக்கைபற்றி எடுத்துரைத்தாலும் ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலையை நம்மவர்களிடம் காணக்கூடியதாக இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை எதிர்கொள்ளும் தைரியம் அற்றவர்கள் இப்படியான கபடச்சாமியார்களிடம் அகப்பட்டு பொருள்களை தன்னம்பிக்கையை இழந்து பிடிவாதக்கோழைகளாக மாறுவதைத் தவிர்க்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் பொய் பிரட்டு சொல்லும் ஆக்களுக்கு தான் மச்சமும் கூட (நான் சாமியாரை சொன்னன்)

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று வேலைக்கு வரும்போது இந்தியர் இருவர்கள் (ஆண், பெண்) ஒரு விளம்பர அட்டையை வினியோகித்துக் கொண்டிருந்தார்.  இலங்கை, இந்தியர்கள், சீனர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டிருந்தது. அதில் பிரபல பண்டீட் விஸ்வநாதன் , பென்டில்கில்லில் சோதிட சேவை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் " குழந்தை இல்லாதவர்களுக்கும் ஆலோசனை வழங்குவார்" என்றும் இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.