Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி

Featured Replies

கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி

கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து,

இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/22845

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் போனவையை விட விபத்தில் போற தமிழர் எண்ணிக்கை  கூடிபோச்சு போல் தெரிகிறது .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

யுத்தத்தில் போனவையை விட விபத்தில் போற தமிழர் எண்ணிக்கை  கூடிபோச்சு போல் தெரிகிறது .

சரியாச் சொன்னியள்

காரணம் மக்களுக்கு விபத்துக்களை தவிர்க்க அறிரூட்டுவதில்லை... பணம் கொடுத்தும் சாரதிப் பத்திரம் வாங்கும் அவலம்.. மனிதர்கள் மீது மனிதர்களுக்கு அக்கறையின்மையான மனநிலைகளின் வக்கிர வளர்ச்சி.. என்று சொறீலங்கா தேசம்.. ஒரு காட்டுமிராணி நிலமாகிக் கிடக்குது.

எங்கும்.. ஒரு.. ஒழுங்கு.. ஒழுக்கம்.. நீதி.. நேர்மை கிடையாது. அப்ப எப்படி அந்த நாடு வளமாக முடியும்..??1

தினமும் மக்கள் போராட்டத்தின் மத்தியில் தான் சாதாரண வாழ்க்கையையே ஓட்ட வேண்டி இருக்குது. 

சரியான மக்கள் தலைமைத்துவம் இன்மை.. சரியான தலைவர்களை மக்கள் இனங்கண்டு தேர்வு செய்யும் முறைகள் இன்மையும்.. மக்கள்..  தமது சரியான தெரிவைச் செய்ய வழி.. மற்றும் வலுவிழந்து போய் உள்ளதுமே இதற்கான முக்கிய காரணம். :rolleyes:

இப்படி ஒரு சம்பவம் மேற்கு நாட்டில் நடக்கும் என்றால்.. உடனடியாக அந்தக் கோவிலே மூடப்பட்டு.. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படும் வரை அது திறக்கப்படாது என்ற நிலை தான் வரும்.

அண்மையில்.. ஒரு பெரிய திறந்த வெளி இசை நிகழ்ச்சி.. நிலம் சேறாக இருக்கு என்பதற்காக நிறுத்தப்பட்டது.. இங்கிலாந்தில்.

இது சமூக அக்கறை. அங்க....????! மக்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுகிறார்கள்...!!!

இவ்வளவு பக்தர்கள் வரும் இடத்தில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான படுக்கை கூட இல்லை என்றால்.. அந்த நாட்டில் இருப்பது என்ன  சிவில்.. நிர்வாகமா அல்லது சர்வாதிகாரமா..?!!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nedukkalapoovan said:

இதே விபத்து பிரபலமான புத்த கோவிலில் நடந்தால் மேற்க்கு நாடுகள் போல் சொரிலங்கன் ஆட்சியாளர் நடவடிக்கை எடுப்பினம். இங்கு  செத்தது தமிழன்தானே ...................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து,

இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்

  நன்றாக வாசியுங்கள் கோவில் அருகே மைதானம் இல்லை அங்கே புற் தரைகள் மட்டுமே உண்டு மேலும் அங்கே கோவில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் உள்ள விட்டதாக நான் இதுவரை பார்த்த தில்லை  இது கதிர்காமத்தில் நட்ந்திருக்கலாம் ஆனால் கோவில் இருக்கும் பிரதேசத்தில் மைதானம் இல்லை என்பது  எனது கருத்து   உள்ளே செல்லும் பாதைகளை அடைத்தே  மக்களை உள்ளே விடுவார்கள்  வாகனத்தை அல்ல 

வடக்கு கிழக்கில் ஏன் விபத்துகள் நடக்கவில்லையா காரணம் விபத்தென்பதை குறைக்கலாம் தடுக்க முடியாது அது கண் இமைக்கும் நேரத்தில் நட்ந்து விடுவது முந்த நாள் கிளிநொச்சியிலே  பஸ் ஒன்று உள்ளே போனது அதே போல் கிழக்கில் மட்டக்களப்பில் மாட்டுடன் மோதி இளைஞன்  உயிர் இழந்தது அதே போல் பாண்டிருப்பில் ஒரு குடும்பஸ்தர்  எல்லாம் போதையும்  போக்குவரத்து விதிகள் தெரியாததும்  காரணமாகும்   தற்போது வடக்கு கிழக்கிலே அதிக விபத்துக்கள் நடக்கின்றன கொழும்பில்   அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒருவன் நீங்கள் சொல்வது புரியவில்லை விபத்தை தடுக்கமுடியாது ஆனால் விபத்து ஏற்படாவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் அதை செய்யாமல் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் அசண்டையீனமாக உள்ளது அழிவது தமிழன்தானே .

இங்கும் எங்களவெண்ட கூட்டம் உள்ளது ஆப்ரிக்கர்கள் வாழும் லூசியம்,லம்பெர்த் போன்ற இடங்களில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகம் காரணம் நான் சொல்லதேவையில்லை விளங்கும். கவுன்சில் எவ்வளவோ செய்தும் குறைந்தபாடில்லை கடைசியாக எடுத்த பாதுகாப்பு நடவடிக்கை 20 மைல் தான் அதிக பட்ச்ச வேகம் ஆமை வேகம் இங்குள்ளவர்களுக்கு உயிரின் பெறுமதி தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் ஓட்டப் பழகுவோருக்கான பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதுபோல் போக்குவரத்து சம்பந்தமான பாடவகுப்புகளும் முக்கியம். பாடவகுப்பு நிறைவு செய்தபின் அதில் வைக்கப்படும் பரீட்சையில் சித்தியடைந்தவருக்கு மட்டுந்தான் ஓட்டுநர் பரீட்சை வைக்கவேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஆரம்பிக்கவேண்டிய இடம் சாரதி பயிற்சிக் கல்லூரிகள். விபத்துகளை குறைப்பதற்கு அல்ல அவற்றை தடுப்பதற்கே வேண்டிய திட்டத்தை அரசு வகுத்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்தல் அவசியம். மனித உயிர் சம்பந்தப்பட்ட விடயங்களில் நாம் ஒரு உயிரை இழந்தாலும் அது அதிகம் என்ற எண்ணம் சமுகத்தில் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் எல்லா மட்டத்திலும் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸின் அடியில் உறங்கிய இருவர், சில்லில் சிக்கி மரணம்

 கிளிநொச்சியிலிருந்து கதிர்காம யாத்திரைக்காக வந்த பஸ்ஸில் சிக்கி இருவர் மரணமடைந்துள்ளனர். நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த யோவான் (35) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிதர்ஷன் (18) ஆகிய இருவரே மணமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் கதிர்காம எசல பெரஹராவை பார்வையிட வந்துள்ள நிலையில் நேற்று (08) இரவு, கதிர்காமம் ரஞ்சித் மத்தும பண்டார மைதானத்தில் தரித்து நின்ற தாங்கள் வந்த பஸ்ஸின் பின்புறமாக அதன் அடியில் தூங்கியுள்ளனர். இரவு 11.00 மணியளவில் பஸ்ஸிற்குள் வந்த சாரதி, குறித்த பஸ்ஸை பின்புறமாக செலுத்த முற்பட்ட வேளையில் அதற்கடியிலிருந்த இருவரும் பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கிய நிலையில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் உறங்கிய மேலும் இருவர் உயிருக்காக போராடியுள்ளனர். இதனையடுத்து குறித்த இருவரும் மீட்கப்பட்டு, ஒருவர் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலைக்கும் மற்றையவர் அங்கிருந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாவர் என்பதோடு, மரணமடைந்தவர்களின் சடலம் தற்போது கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=153277 .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

பஸ்ஸின் அடியில் உறங்கிய இருவர், சில்லில் சிக்கி மரணம்

அப்ப வீரகேசரி பொய் எழுதுகிறது என்று சொல்கிறிர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

தனி ஒருவன் நீங்கள் சொல்வது புரியவில்லை விபத்தை தடுக்கமுடியாது ஆனால் விபத்து ஏற்படாவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் அதை செய்யாமல் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் அசண்டையீனமாக உள்ளது அழிவது தமிழன்தானே .

சிங்கள அரசு ஒவ்வொரு சாரதியையும்  கவனிக்க முடியாது மற்றதுவாகனங்களுக்கு புல் இன்சுரன்ஸ் பண்ணியிருக்கிறதால அவர்கள் வாகனங்கள் பற்றி கவலைப்படுவதும் இல்லை மக்கள் உயிர்கள் பற்றி கவலைப்படுவதும் இல்லை பணம் தான் முக்கியம்  இங்கே ஒரு தனியார் பேருந்தில் ஏற்றும் போது  வாங்கோ கல்யாண வீட்டில் சாப்பிடுவதற்கு கூப்பிடுவது கூப்பிட்டு பந்திக்கு அடிபடுவது போல உள்ள போ முன்னுக்கு போ என்று சொல்வார்கள் 

இவர்கள் உறங்கி  இருப்பது  தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கும் இடம் என்றே நினைக்கிறேன்  இறப்பது என்னவோ தமிழர்கள்தான் அதிகமாக இருக்கிறது  விபத்துக்களால்  சிங்கள அரசு அசண்டையீனமாக இல்லை முக்கியமா ஒரு சிலருக்கு லைசன்ஸ் எடுத்தால் போதும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள் ஆனால் சாலை விதியென்பது இன்னும் தெளிவாக தெரியாது அதிலும்  காத்தான்குடிக்கால வாகனம் ஓட்டுறது   கண்ணுக்க  கறுவா தைலத்தை ஊற்றிக்கொண்டுதான் ஓட்டணும்  

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லைசன்ஸ் எடுக்கும் போதும் அதனை 9 வருடங்களின் பிறகு புதுப்பிக்கும் போதுமே மருத்துவ பரிசோதனை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு போவதற்கு 5/6 நாட்களாக சீனி உபயோகிக்காமல் இருந்தும் பாவற்காய் சாறு, குறிஞ்சா போன்றவற்றை உண்டு தனியார் இரத்த பரிசோதனை நிலையத்திற்கு சென்று குருதியில் குளுக்கோசின் அளவை பரிசோதனை செய்து பார்த்துவிட்டே செல்கிறார்கள்.

  • தொடங்கியவர்

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த இருவர் விபத்தினால் உயிரிழப்பு

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த இருவர் விபத்தினால் உயிரிழப்பு
 
கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த இருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த மூவர், அங்குள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் அருகில் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த நிலையில், பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி நகர்த்தியுள்ளார்.

இதன்போது, பஸ் சக்கரத்தில் அகப்பட்ட மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அவர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி – பாரதிபுரத்தைச் சேர்ந்த 18 வயதான வெல்ஸன் விது மற்றும் கிளிநொச்சி – இராமநாதபுரத்தைச் சேர்ந்த 41 வயதான அஸன் ஹரன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த பஸ்ஸின் சாரதியாக ஹரன் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் உறக்கத்தில் இருந்த போது வேறு ஒருவர் பஸ்ஸை செலுத்தியுள்ளமையினால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் கதிர்காமம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/08/கதிர்காமத்திற்கு-யாத்தி/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இங்கு லைசன்ஸ் எடுக்கும் போதும் அதனை 9 வருடங்களின் பிறகு புதுப்பிக்கும் போதுமே மருத்துவ பரிசோதனை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு போவதற்கு 5/6 நாட்களாக சீனி உபயோகிக்காமல் இருந்தும் பாவற்காய் சாறு, குறிஞ்சா போன்றவற்றை உண்டு தனியார் இரத்த பரிசோதனை நிலையத்திற்கு சென்று குருதியில் குளுக்கோசின் அளவை பரிசோதனை செய்து பார்த்துவிட்டே செல்கிறார்கள்.

இங்கு(லண்டனில் ) இரத்த பரிசோதனை செய்யும்போது கடந்த ஆறுமாத சீனி அளவுகள் துல்லியமாய் தெரியும் என்பார்களே அப்படி அங்கு இல்லையா ?

நெடுக்கர் போன்றவை விளக்கம் குடுத்தால் நல்லது 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இங்கு(லண்டனில் ) இரத்த பரிசோதனை செய்யும்போது கடந்த ஆறுமாத சீனி அளவுகள் துல்லியமாய் தெரியும் என்பார்களே அப்படி அங்கு இல்லையா ?

நெடுக்கர் போன்றவை விளக்கம் குடுத்தால் நல்லது 

இங்கு லைசன்ஸ் இற்கு விண்ணப்பிப்பதற்கு National Transport Medical Institute இற்கு சென்று medical எடுக்க வேண்டும். அங்கு சென்றால்

A கவுன்டரில் ஒருவர் தராசில் எற்றி உயரம் எடை என்பவற்றை ஓர் துண்டில் எழுதித் தருவார்.பின்னர் B கவுன்டரில் உங்கள் அடையாள அட்டையையும் அந்த துண்டையும் கொடுக்க உங்களை படம் எடுத்துவிட்டு, அடையாள அட்டையின் இலக்கம், விலாசம் என்பவற்றை கணனியில் பதவு செய்வார். பின்னர் C கவுன்டருக்கு சென்று 750/= கட்டி துண்டை எடுத்துக்கொண்டு D கவுன்டருக்கு போனால் உங்களின் கண்பார்வை பரிசோதிக்கப்படும். பின்னர் E கவுன்டரில் குளுக்கோசின் அளவு பரிசோதிக்கப்படும். அதுவும் இடது கை நடு விரலில் தான் குத்த்துவார்கள். பின்னர் F இல் மூடி மறைக்கப்பட்ட அறையில் வைத்தியர் குருதியின் அழுத்தத்தை பரிசோதித்த பின்னர் இரு கைகளையும் நீட்டி குந்தி எழு வேண்டும்,  முழங்கால் காட்ட வேண்டும், இப்படி சில பயிற்சிகளை செய்துவிட்டு G கவுன்டருக்கு சென்று உங்கள் medical இல் ரப்பர் முத்திரையை குத்திக் கொண்டு கிளம்ப வேண்டியது தான்.

நடுவிரலில குத்தி என்னண்டு 6 மாத கால அளவுகளை கண்டு பிடிக்கிறது, blood group ஐ தான் கண்டு பிடிக்கலாம்.

Medical எடுக்கும் போது குளுக்கோசின் அளவு கூடுதலாக இருந்தாலோ அல்லது நீரிழிவு நோய் இருக்கிறது என்றாலோ டாக்கரிடம் காட்டி சீனியின் அளவை குறைத்துக் கொண்டு 6மாத ரிப்போட்டுடன் வா என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

 அப்படி அங்கு இல்லையா ?

அப்படி இங்கு இல்லை   சிபாரிசு செய்யப்பட்டாலே போதும் வாகனம் ஓட்டலாம்   கொஞ்ச அனுபவம் போதும்ம் ஆனால் கொஞ்சம் இறுக்கிக்கொண்டு வருகிறார்கள் நடந்து வரும் விபத்துக்களால் 

  • கருத்துக்கள உறவுகள்

லைசன்சுக்கான பரீட்சை எழுதப் போகும் போது தமிழா? சிங்களமா? என்ற ஒற்றைக் கேள்வி. எல்லோரும் பாஸ்.

வாகனத்தை ஓட்டிக் காட்டும் போது கட்டாயம் கறுப்புக் காற்சட்டையும் வெள்ளை சேட்டும் அணிய வேண்டும். கலர் உடுப்புக்களை கண்டால் லைசன்சுக்கு ஆகாதா அல்லது examiner ஆகாத என்று தெரியவில்லை.

மிக முக்கியம் "மிகவும் பவ்வியமாக கையை கட்டிக்கொண்டு பாடசாலையில் இருந்தது போல இருக்க வேண்டும்."

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

1. பஸ்ஸின் அடியில் உறங்கிய இருவர்இ சில்லில் சிக்கி மரணம்

2. மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் அருகில் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த நிலையில்

3. மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்துஇ

இதனை கவனிக்காதஇ பஸ்ஸின் சாரதி ...

ஒரே செய்தியை எப்படியெல்லாம் போடுகிறார்கள்.

வண்டி நிறுத்தும் இடத்தில்  உறங்கியதும் தவறு
உறங்கும் இடத்தில்  வண்டி நிறுத்தியதும் தவறு
கவனிக்காமல் வண்டியை பின்னே நோக்கி எடுத்ததும் தவறு 
ஆக மொத்தத்தில் இந்த அநியாய உயிர் பழியே தவறு    

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

பஸ்ஸின் பின்புறமாக அதன் அடியில் தூங்கியுள்ளனர். 

சாரதி வாகனத்தை எடுக்கும் முன்

பஸ்ஸின் அடியில் எவரும்  இல்லையா  என்பதை பரீசீலிக்க  வேண்டுமா இல்லையா?

சாரதியின்  அசட்டையீனம் தானே  காரணம்

இங்கே இறந்தவர்களுக்கான  பாரபட்சமற்ற

நட்டஈடும்  சாரதியின் கவனக்குறைவுக்கு  தண்டனையுமே 

இதற்குள்  அரசியல் வருவதை  தடுக்கும்..

நடக்குமா  சிறீலங்காவில்?????

1 hour ago, விசுகு said:

விசுகு, நீங்கள் உங்கள் வாகனத்தை வெளியே எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அடியில் எவராவது படுத்துக் கொண்டு இருப்பினம் என்று செக் பண்ணி விட்டா எடுப்பீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நிழலி said:

விசுகு, நீங்கள் உங்கள் வாகனத்தை வெளியே எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அடியில் எவராவது படுத்துக் கொண்டு இருப்பினம் என்று செக் பண்ணி விட்டா எடுப்பீர்கள்?

இடத்திற்கு இடம்...

நேரத்திற்கு நேரம்....

அவதானிப்புகள் வேறுபடும்...

வித்தியாசப்படும்.

கோவில்கள்/திருத்தலங்களில் அதிகமாக  பக்தர்கள் யாத்திரை சென்றவர்கள் கூடுமிடம். அந்த இடங்களில்  பஸ்வண்டிகளுக்கு கீழ் இரவு மட்டுமல்ல பகலிலும் படுத்துறங்குவது வழமையான ஒரு விடயம். இரவு 11மணியென்றால் யாராவது படுத்திருப்பார்கள் என்ற எண்ணம் சிறிதளவேனும் வந்திருக்க வேண்டும். பஸ்/லொறியின் கீழ் படுத்திருப்பது இலங்கையில் சாதாரண விடயம்.

இது இலங்கையில் வழமையான ஒரு விடயம்.

காரணம் ஆசிய நாட்டு காலநிலை வசதிகள் அப்படி...

பிரான்ஸ்சில் அல்லது ஜேர்மனியில் ஏன் இங்கிலாந்தில் இப்படியான சம்பவம் நடந்திருந்தால் உங்கள் கேள்வி நியாயமானது.tw_blush:

லொல் விட்டவரை சுகம் கேட்டதாக சொல்லவும்..Haha

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கதிர்காம கோவில் உள்ள வீதியில் எத்தனை லட்சம் சனமும் படுத்துறங்கலாம் இவர்கள் பஸ்ஸிக்கு கீழ் படுத்திருக்கிறார்கள் அதுதான் ஏன் என தெரியவில்லை சில வேளை  பஸ் நடத்துனர்களாக இருக்கலாம் 

தங்கள் வந்த பஸ்ஸின் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாமல் கீழ் படுத்தவர்கள் மீதும், அந்த பஸ்ஸை இருளில் இன்னொருவர் துணையும் கவனமுமின்றி பின்னால் நகர்த்தியவர் மீதும் தவறுகள் உண்டு. அதற்கான விலை இரண்டு உயிர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

விசுகு, நீங்கள் உங்கள் வாகனத்தை வெளியே எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அடியில் எவராவது படுத்துக் கொண்டு இருப்பினம் என்று செக் பண்ணி விட்டா எடுப்பீர்கள்?

புலத்தில் அது தேவையற்றது

அதே நேரம் வீடுகளில் சிறு பிள்ளைகள்  அல்லது வளர்ப்பு மிருகங்கள் வைத்திருப்பவர்கள் செய்வது  நல்லது

அடுத்து தாயகத்தில் திருவிழாக்காலங்களில்

பல லட்சம் மக்கள்  கூடும் இடங்களில் இவ்வாறு தூங்குவது வழமையாக நடப்பது

எனவே  சாரதிகளுக்கு  இது முதல் அனுபவமாக  இருக்காது என்பதே எனது பார்வை.

12 hours ago, குமாரசாமி said:

கோவில்கள்/திருத்தலங்களில் அதிகமாக  பக்தர்கள் யாத்திரை சென்றவர்கள் கூடுமிடம். அந்த இடங்களில்  பஸ்வண்டிகளுக்கு கீழ் இரவு மட்டுமல்ல பகலிலும் படுத்துறங்குவது வழமையான ஒரு விடயம். இரவு 11மணியென்றால் யாராவது படுத்திருப்பார்கள் என்ற எண்ணம் சிறிதளவேனும் வந்திருக்க வேண்டும். பஸ்/லொறியின் கீழ் படுத்திருப்பது இலங்கையில் சாதாரண விடயம்.

இது இலங்கையில் வழமையான ஒரு விடயம்.

2 hours ago, விசுகு said:

அடுத்து தாயகத்தில் திருவிழாக்காலங்களில்

பல லட்சம் மக்கள்  கூடும் இடங்களில் இவ்வாறு தூங்குவது வழமையாக நடப்பது

நான் இருந்த காலம் முழுக்க போர் காலம் என்பதாலோ என்னவோ நல்லூர் திருவிழாவை தவிர இவ்வாறு திருவிழாக்களுக்கு பெருந்திரளாக மக்கள் கூடுவதையும் அவர்கள் இப்படி வாகனத்துக்கு அடியில் போய் படுப்பதையும் ஒரு போதும் கண்டிருக்கவுமில்லை கேள்விப்படவும் இல்லை.

விளக்கத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வண்டியின் ஓட்டுனர், அல்லது அவரோடு துணை இருப்பவர் இவர்கள் தான் இப்படி அவர்கள் ஓட்டி வந்த வண்டிக்கு அடியில் சற்று அசர்ந்து ஓய்வு எடுப்பதை இங்கு ஒன்றும் அங்கொன்றுமாக கண்டுள்ளேன்.
என்னைக்கேட்டால் வண்டிக்கு அடியில் படுப்பதே தவறு!! விபரீதம் அங்கே தொடங்குகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.