Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளி நாட்டுக் காசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 இம்முறை  கனடாவின் பனிக்காலம்    மிகவும் உக்கிரமான குளிராக இருந்தது ...எத்தனை ஆடைகளுக்கு மேல் ஆடைகளாக துணி  மூடடையாக  உடுத்தினாலும் எலும்பை ஊடுருவும் குளிராக இருந்தது ...அது ஒரு மார்கழி மாதத்தின் இறுதி வாரம் ..வனிதாவின்   கனடா  வாழ்வின் ஏழாவது 
வருடம் ..தாயகத்தில்  மூன்று அண்ணா மாருக்கு செல்லத்தங்கையாக வாழ்ந்தவள் .  வான் மீகனுக்கு  வாழ்க்கைப்பட்டு ஆறு வயதில்  ஒரு மகளையும் .. தற்போது  ஆறுமாதக் குழந்தையாய் ஒரு ஆண்மகவையும் பெற்று இருந்தாள் .  

நாட்டுக்கு வந்த தொடக்கத்தில்  வெண் பனியை  அள்ளி அழைந்து    விளையாடியவள்.   தற்போது வெளியில் செல்லவே அஞ்சும் குளிராக மாறிவிட்டிருந்தது . வான்மீகனுக்கு இரண்டு பெண் சகோதரிகள் அவர்களது கலியாணம்    வயதான பெற்றோரின் தேவைகள் அது இது என்று  அவர்களை கரை சேர்த்து விட்டு  ..அவன் திருமணம் முடிக்கும் போது  முப்பத்தைந்து வயதாகி விட்ட்து ..வனிதாவும் வந்து  தான் கற்ற கல்வியின்  பயனால் வங்கியில்  ஆரம்ப நிலை பணியில் சேர்த்துக்கொள்ள படடாள் .  முதலில் மகள்    பிறந்ததும்  ..அவர்கள்   இருந்த  தொடர் மாடிக்கு குடியிருப்பில் ஒரே பூச்சி த்  தொல்லை  இந்த குழந்தையை வைத்து கொண்டு இங்கிருக்க வேண்டாம்  என  நண்பர்கள் சொன்னதால்   ஒரு  சிறு வீடடை கடன்  பட்டும்  கைமாற்றகவும்  நண்பர்களின் உதவியினாலும்  வாங்கி  கொண்டனர் . மகள்   பிறந்து ஒருவருட மகப்பேற்று விடுமுறை முடித்தும் வேலைக்கு செல்ல முயன்றவளை  வான்மீகன் தடுத்தான் .  இருந்தும்  உறவுக்கார பெரியம்மா  குழந்தையை  பராமரிக்க முன்  வந்ததினால் ..அவளும் வேலைக்கு சென்று  நண்பர்களின் கடன் கட்டி முடித்தனர் . இருந்தும் குழந்தைகளின் செலவு   வீட்டு  அடமானக் கடன்  மாதாந்த  கடடணங்கள்  தாய் தந்தைக்கு  நல்ல  நாள்  பெருநாட்களில் அனுப்பும் சிறு தொகை     என  வனிதாவின் சம்பளம் கை கொடுத்தது .  மீண்டும்  ஒரு வாரிசு வேண்டும் என்  எண்ணவே மகனும் பிறந்து ஆறுமாதங்களாயின. 

அதிகாலை  ஆறுமணியிருக்கும் .. ஒரு வெளிநாட்டு தொல்லை பேசி அழைப்பு .. உறவினரின்  அவசர அழைப்பாக இருக்கும் என   எண்ணி .. எடுத்தவளுக்கு   ஏன்  அழைப்பை   எடுத்தோம் என்றாகி விட்ட்து ...  அப்போ து தான் இரவிரவாய் சளித்தொல்லையால்  உறக்க  மின்றி அழுத  பிள்ளை  உறங்க ஆரம்பித்திருந்தான்.  வான்மீகனும்  இரண்டு வேலை செய்கிறான்  குழந்தைகளின் செலவுக்காக .  அவனும் இரவு வேலையால்  வந்து  அப்போது தான்  உறங்கச் சென்று இருந்தான் .   இந்த நேரத்தில்   இப்படியும் சில மனிதர்கள் .

ஊரில் பக்கத்து  வீட்டு   செல்வம் அக்கா .... கொஞ்சம் கஷ்டரமாய் இருக்கு   உதவி  செல்வீர்களா என் கேட்ட்பதற்காக எடுத்து இருந்தாள்  . ...ஏற்கனவே   ...ஒருதடவை கேட்ட்  போது    வான்மீகனிடம் சொல்லிவிட்டு அனுப்பி இருந் தாள் .  மீண்டும்  .... கணவன் வேறு  பெண்ணுடன்  ஓடி  ..விடடான் .. ஒரு நேரக்கஞ்சி தான் குடிக்கிறோம் ...கூலி வேலைக்கு  தான்  போகிறேன் .. இரண்டு   பிள்ளைகளுக்கும்    பள்ளிக்கூட செலவு ..  மாறி போடா யூனிபோம்  இல்லை 
 ஆன சப்பாத்து இல்ல ..lஎன்று அழுது  மன்றாடினாள்.  கணவனுக்கு தெரியாமலே  கொஞ்சம் பணம் அனுப்பி இருந்தாள் ....

இப்பொது மூத்தவள் ஓடிபோய்வி டடாள்  இருந்ததெல்லாம்  விற்று ... அவள் போன இடத்தில் கண் கலங்க கூடாதென்று  அவளை    பொடியன்   வீட்டாரிடம்  அனுப்பி     விடடேன் ..  இப்பொது  ...முன்பு போல  வேலை செய்ய முடியவில்லை ..ஒரே நெஞ்சு நோ ... என் காலம் முடிவதற்குள்   சின்னவளையும்  
க ட்டிக்கொடுக்க வேண்டும்.  என்று  தன சோகத்தை  சொல்லி அழுதாள்.   பிள்ளையை  ஏதும் வேலைக்கு அனுப்பலாம்தானே? என்று  சொன்னதற்கு மறு முனையில் பேச்சு இல்லை...  தனக்கு தெரிந்த  வேறு உறவினர்   ஊரவர்கள் பெயரை சொல்லி அவர்களின் நம்பர் தாருங்கோ என்றும் கேடடாள் ...  ..நன்றாக்  வாங்கி   ...அனுபவ பட்டு   இருக்கிறா போல. இர ந்து வாழ்தல் பல வகை இதுவும் ஒரு வகையோ ..


... செல்வம் அக்கா போனை வையுங்கோ  இவரிடம்  கேட்டு பார்க்கிறேன் நானும் மகன்  பிறந்து இருப்பதால் வேலைக்கு போவதில்லை எங்கள் பாடும் கஷ்டம் அக்கா என்று போனை வைத்து    விடடாள் .

 ஊர வர்களிடம் வாங்கி  வாழ்க்கையை கொண்டு செல்ல இருக்கும் இவர்களின்  திறமையை எங்கோ போய்  சொல்வது ...  நாட்டுப்  பிரச்சினைகளுக்கு பின் எத்தனயோ தொழிற் சார் நிறுவங்கள் வந்துவிட்ட்ன .. உழைத்து  வாழ  இவர்களுக்கு ஏன்  தெரிவதில்லை. வெளிநாட்டிலும்   கடுங்  குளிர் ..கொடிய வெயில்  கால  நிலை தொல்லைகளுக்கு மத்தியில்  இயந்திரத்தனமாக தானே வாழ்கிறார்கள் , உழைக்கிறார்கள் . ஏனொ  இந்த ஜனங்களுக்கு உழைத்து வாழ்வை கொண்டு செல்ல மனம்  வருவதில்லை .. எதுவரை இவர்களை  தூக்கி விட முடியும்.  .இப்போது பிரச்சினைகள்  தணிந்துவிட்ட்னவே ...ஒரு  வழி   அடைத்தால்  மறு   வழி    திறக்க இவர்கள் பாடு படுவதே இல்லை . வாழ் நாள் முழுக்க பிறர் கையை நம்பி  இருக்கலாமா   ஏன்   இவர்களைப் போன்ற்வர்களுக்கு  புரிவதில்லை .  முயற்சியும்  தன்னம்பிக்கையும் இருந்தால் ..முடியும் வரை வாழலாம் .

  கடவுளே ...இந்த ஊரில் இருப்பவர்களுக்கு   வெளிநாட்டில் காசு மரத்தில் காய்கிறது என்ற எண்ணம் போலும்.  வெளி நாட்டில் வேலை     ..இயந்திரங்களோடு இயந்திரமாய்  எட்டு பத்துமணி நேரம் கால் கடுக்க நின்று  ..உழைத்து ..பின் வீட்டுக்கு வந்து .. சமைத்து  குழந்தைகளை குளிக்க வார்த்து  ..உணவூட்டி  படுக்க விட்டு அப்பாடா என்று . காட்டிலில் சாய மணி   பதினொரு ,பன்னிரண்டுமணியாகி விடும்.    அப்போது தான்  உறங்கச்  சென்றது  போல் இருக்கும்  அதிகாலை ஐந்து  மணி என்று அலாரம் கிணுகிணு க்கும்.   கணவனை வேலைக்கு அனுப்பி  குழந்தையை   பாடசாலையில் விட்டு   கைக்    குழந்தையை  தூங்க வைத்து  வீடடை ....ஒழுங்கு படுத்தி . முடிந்ததை  .சமைத்து    .. அப்பாடா  என்று  உட்க்கார    மற்ற குழந்தையை   எடுக்கும்  நேரம் வந்து விடும்.   நாட்கள் வாரங்களாகி  ,வாரங்கள்   மாதங்கள்   ஆகி  காலம் தான் வெகு வேகமாக ஓடுகிறது.  ..

.விடுமுறை காலத்தில் இங்குள்ளவர்கள்  ஊருக்கு சென்று படங்காட்டுவது ...கடன் பட்டு சென்று செலவழிப்பது ...எல்லாம் மாயை என்று எங்கே அவர்களுக்கு விளங்க போகிறது ...   காசு ..காசு ... வெளி நாட்டுக் காசு..

க ஷ்ர ரப்படடவர்களுக்கு ..உதவி ஒருமுறை செய்யாலாம் .இரு முறை செய்யலாம் .  வாழ்நாள்மு ழுக்க கொடுத்துக் கொண்டே  இருக்கமுடியுமா ?அதை விட அவரக்ளுக்கு ஒரு வேலை வாய்ப்பை   வருமானம் ஈட்டும் முறைமையை ஏற்படுத்தி கொடுப்பது தான் ...புத்திசாலித்தனம்.  ஒரு   மூத்தோர்  வாக்கு மொழி இருக்கிறது ...பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை  கொடுத்துக் காடடாமல் ...  வாழ வழியைக் காட்டுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு காசில் வாழலாம் , வெளிநாட்டுக்கு வந்துவிட்டால்  சொர்க்கம் என்று நினைப்பவர்களூக்கும் சேர்த்து 2009 போட்டது ஆப்பு...

பளபளப்பான எமது கார்களும், வீடுகளும், உடைகளும்,காலணிகளும்..பிரஜாவுரிமையும்...

செத்துப்போன போராளிகளும் மக்களும் எமக்கு தந்த மூலதனம்... இனிமேயாவது சொந்தமா வாழ சொல்லுறீங்க...

புரியுது நிலாமதி அக்கா...

  • கருத்துக்கள உறவுகள்
  1. நாம் எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் புலத்தில் இருப்பவர்களுக்கு புலம் பெயர்ந்தவர்களின் வழ்வு மாயமான்தான். என்றாலும் அங்கிருப்பவர்களுக்கு உதவ வேண்டுமென்பதே எம் அனைவரின் ஆழ்மனதிலும் வேடூன்றி இருக்கும் தாகம். அதை சிலர் தவறாக உபயோகிப்பதை காணக்கூடியதாய் இருந்தாலும் மீண்டும் மீண்டும் உதவ விரும்பும் மனதை என்ன செய்வது.  இப்போது பலரும் வழ்வாதாரத்துக்கு தேவையான நடைமுறைகளைச் செய்து கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிருந்து போய் வருபவர்கள் அங்கு ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கி வருபவர்கள் போல் படம் காட்டினால் அவர்கள்தான் என்ன செய்வார்கள். முதலில் திருந்த வேண்டியவர்கள் நாங்களே.  நல்லதொரு ஆக்கம் நிலாமதி.
  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் நிலை இப்போதிக்கு மாறாது அக்கா. எப்ப நாம் திருந்துகிறோமோ  அப்பா கொஞ்சம் மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

.பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ...

இந்த முதுமொழியை சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங் சொல்லியிருந்தார்.

இந்தப் பிரச்சனை பலருக்கும் உண்டு.சொல்லி விழங்க வைக்க முடியாது.பத்து தரம் கொடுத்து ஒரு தடவை இல்லை என்றால் பத்து தடவை கொடுத்ததும் வீண்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளவன் கண்மணி அக்கா சுமேரியர் ஈழப்பிரியன் ஆகியோருக்கும்   விருப்பு வாக்கு இடடவர்களுக்கும் நன்றி . 

  • கருத்துக்கள உறவுகள்

“பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை  கொடுத்துக் காடடாமல் ...  வாழ வழியைக் காட்டுவோம்”  சத்தான வரிகள் நிலாமதி.??

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் காசில் வாழவேண்டிய நிலையில் இன்னும் பலர் தாயகத்தில் உள்ளனர். ஒரு பகுதியினர் தமது ஆடம்பர வாழ்வுக்கு வெளிநாட்டுக் காசை வேண்டி நிற்கின்றனர். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.

அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் இருந்தாலும் தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு உதவும் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக பலர் இப்போதும் வெளிநாடுகளில் உள்ளனர். ஆனால் இந்த வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பும் நிலை அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும் என்றுதான் நினைக்கின்றேன்.

தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது முன்பைக் காட்டிலும் பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது.  மேலே கூறியது போல்  அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும். வெளிநாட்டுப் பணம் சமநிலையற்ற சூழுலை உருவாக்கியுள்ளது. பலருக்கு வெளிநாட்டுப் பணம் கடன் கட்டவும் அன்றாட சீவியத்துக்குமே தேவைப்படுகின்றது. சிலருக்கு தொழில் முதலீடாகவும்நிலம் வாகனங்கள் வாங்கவும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுப் பணம் இறுதியில் சில முதலாளிகளை உருவாக்கிவிட்டே  நின்றுகொள்ளும். நேரடியாகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏராளமான காணிகளை வாங்கியுள்ளார்கள். தற்போது ஐம்பது நூறு ஏக்கரில் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்கள். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததுபேல் போரால் பாதிக்கப்பட்ட பல வறுமைப்பட்ட மக்களை வெளிநாட்டுப் பணம் என்னும் வறுமைக்குள்ளாகவே தள்ளியும் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ நிலைமை தலைகீலாகுது போல் உள்ளது.அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன .

இந்தியாவில் முகாம்களை தவிர்த்து வெளியில் இருந்தவர்கள் பலர் தாயகம் திரும்பி உள்ளார்கள் .

வெளியில் இப்படியான குளிர் நோய் களை தவிர்க்க இங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த வாடகை பணத்தில் அங்கு போய் செட்டிலாகுதுகள் .

Image may contain: sky, cloud, tree and outdoor

https://www.facebook.com/HariEngineersLK/?hc_ref=ART40bwDUXKKbfU4IbUBDwl95_0cBcYOL22mUZmR2gGl8t3e_fKI8eiU5v4BoUQsZUs&pnref=story

இப்படி திரும்பி வருபவர்களுக்கு வீடு கட்ட என்று யாழில் இவர்களை போல் பலர் கிளம்பி உள்ளார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

4 hours ago, சண்டமாருதன் said:

தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது முன்பைக் காட்டிலும் பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது.  மேலே கூறியது போல்  அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும். வெளிநாட்டுப் பணம் சமநிலையற்ற சூழுலை உருவாக்கியுள்ளது. பலருக்கு வெளிநாட்டுப் பணம் கடன் கட்டவும் அன்றாட சீவியத்துக்குமே தேவைப்படுகின்றது. சிலருக்கு தொழில் முதலீடாகவும்நிலம் வாகனங்கள் வாங்கவும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுப் பணம் இறுதியில் சில முதலாளிகளை உருவாக்கிவிட்டே  நின்றுகொள்ளும். நேரடியாகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏராளமான காணிகளை வாங்கியுள்ளார்கள். தற்போது ஐம்பது நூறு ஏக்கரில் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்கள். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததுபேல் போரால் பாதிக்கப்பட்ட பல வறுமைப்பட்ட மக்களை வெளிநாட்டுப் பணம் என்னும் வறுமைக்குள்ளாகவே தள்ளியும் உள்ளது. 

நல்ல விடையம் தானே

4 hours ago, சுவைப்பிரியன் said:

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

நல்ல விடையம் தானே

 

[இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்]

நீங்கள், புல்லுப்படுங்கிற, தறைசாறுற வேலையத்தானே சொல்லுறியள், இருந்தா சொல்லுங்கோ நாங்கள் எங்கடை குடும்பமாய்ப்போய் செய்கின்றோம். *****: ****** **********

Edited by நியானி
சாதிய சொல்லாடல் நீக்கப்பட்டுள்ளது

6 hours ago, சுவைப்பிரியன் said:

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

நல்ல விடையம் தானே

நல்ல விடயம் என்று எலலாவற்றையும் சொல்வதற்கில்லை. வெளிநாட்டுப்பணம் தாயக மக்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும் போரால் நலிந்தவர்களை மேம்படுததவும் அவர்களை இயல்பான பொருளாதார சூழலுக்கு திருப்பவும் உதவும் வகையில் இருக்கும் வரையே நல்லது. வெளிநாட்டுப்பணம் புதிய முதலாளிகளை உருவாக்கும் போது அதில் எந்த நன்மையும் கிடையாது. பணமுள்ளவர்கள் மற்றும் அரச சார்பு பணியாளர்கள் பேரினவாதத்தை அனுசரித்து அண்டிப்பிழைப்பதுபோல் முதலாளிகளும் பேரினவாதிகளை அண்டிப்பிழைக்கும் நிலை சாதராணமானது. வறுமைப்பட்ட மக்கள் இரட்டிப்பு அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். தற்போதும் இந்த நிலை பரவலாக உள்ளது. அனுப்பப் படும் வெளிநாட்டுப் பணத்தை வறுமைப்பட்டமக்களுக்கு வட்டிக்கு  கொடுப்பதும் வாழ்நாள் முழுக்க வட்டி கட்ட உழைப்பதும்.. வயல்க்காணிகளை ஈடுவைப்பதும் அதை மீளமுடியாமல் விவசாயம் செய்ய வேண்டியவர்கள் கூலிவேலை செய்வதும் என ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இயல்பான கதை சகோதரி....! 

என்ன மீன் பிடிக்க கற்றுக் குடுப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை, பிறகு தூண்டிலும் புழுவும் வாங்கிக் குடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி வசதி....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் அக்கா சொல்வது சரிதான்  சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்ப்டுத்துகிறார்கள் சிலர் அதை பயன்படுத்துகிறார்கள் நிலமை  சீராக வேண்டும் எங்கே எப்போது என்ன நடக்குமென்று தெரியாத சூழ் சிலை தற்போதும் நிகழ்கிறது  உங்களின் சொந்தங்கள் மூலமாக சிறிய சிறிய தொழில் தொடங்கலை ஆரம்பிக்கலாம் ஆனால் பெரிய தொழிலை செய்யவே கன பேர் நினைக்கிறார்கள் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் ஒரு இளம் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதை பேசியிருக்கிறது. இந்தக் கதை பேசாத விடயங்களும் உண்டு. பல குடும்பங்களில் கணவன் மனைவி முகம்பார்த்து பேசுவது கூட குறைவாக இருக்கிறது. எங்கள் சமூகம் அகதிகளாக வந்து படிப்படியாக உழைப்பால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்கள். ஒரு தலைமுறையின் வாழ்வே மகிழ்ச்சியான தருணங்கள் என்பனவற்றை இழந்து பொருளாதாரப்பலவீனங்களால் வாழ்க்கையை வரமாக அல்ல சாபமாக நினைக்கும் பலரை வெளிநாடுகளில் காணமுடிகிறது. வெளிநாட்டுக்கு வந்தவர்கள் தமக்காக மட்டுமல்ல அவர்களுக்கு இரு குடும்பச் சுமைகள் வெளிநாட்டில் ஒன்று தாயகத்தில் மற்றையதுபோன்று விட்டெறிந்து விடமுடியாத சுமைகள். போருக்கு முகங்கொடுத்தவர்கள் என்ற அங்குள்ளவர்கள் மீதான இரக்கத்தை அங்குள்ளவர்கள் பலரும் தமது ஆடம்பரத்திற்கு பயன்படுத்த முனைவது கண்கூடு. உழைக்க விரும்பாத ஒரு சமூக வளர்ச்சி வெளிநாட்டில் வாழும் நம்மவர்களை சுரண்டி பருத்திருக்கிறது. அங்கு வேலைக்கு ஆட்களைப்பிடிப்பது குதிரைக்கொம்பு என்ற அளவில்... பலரும் சும்மாவே வெட்டியாக இருக்கிறார்கள் ஏதாவது வேலை செய்ய முயற்சிப்பதே இல்லை ஆனால் வசதியாக நம்மைவிட செல்வச் செழிப்போடு இருக்கிறார்கள். நாம்தான் வெளிநாடுகளில் வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவையாவது காலநிலை மாற்றத்தால் நோய்வாய்ப்பட்டு ஓரிரு வாரங்கள் படுக்கையில கிடப்பதும் பின்னர் எழுந்தால் ப்ரேக்கில்லாத சைக்கிளில் உழக்குவதும் போல வாழ்வு இதற்குள் ஊருக்குப் போனால் கையேந்தி வந்து நிற்பவர்களுக்கு தான தருமம். இவற்றை மீறித்தான் அங்கு நிற்கும் சிலநாட்களாவது வாழ்க்கையை அனுபவிப்போம் என்ற பேரவா... வாழாமல் வாழ்வதாய் நம்மை நாமே ஏமாற்றி இப்போதும் வாழ்கிறோம். காதலோடு முகம்பார்த்து பேச நேரமற்றவர்களாக.... நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் இனியாவது எமக்காக வாழ்வோம் என்று முடிவெடுத்தால் இப்படியான இரக்கும் சோம்போறிகள் குறைவார்கள். நல்ல கருப்பொருளை  கதையின் மூலம் பேசுபொருள் ஆக்கியிருக்கிறீர்கள் நிலாமதியக்கா பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் இனியாவது எமக்காக வாழ்வோம்

?

  • கருத்துக்கள உறவுகள்
On 18/02/2018 at 9:18 AM, பெருமாள் said:

எனக்கென்னவோ நிலைமை தலைகீலாகுது போல் உள்ளது.அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன .

இந்தியாவில் முகாம்களை தவிர்த்து வெளியில் இருந்தவர்கள் பலர் தாயகம் திரும்பி உள்ளார்கள் .

வெளியில் இப்படியான குளிர் நோய் களை தவிர்க்க இங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த வாடகை பணத்தில் அங்கு போய் செட்டிலாகுதுகள் .

Image may contain: sky, cloud, tree and outdoor

https://www.facebook.com/HariEngineersLK/?hc_ref=ART40bwDUXKKbfU4IbUBDwl95_0cBcYOL22mUZmR2gGl8t3e_fKI8eiU5v4BoUQsZUs&pnref=story

இப்படி திரும்பி வருபவர்களுக்கு வீடு கட்ட என்று யாழில் இவர்களை போல் பலர் கிளம்பி உள்ளார்கள் .

இதில் என்ன தவறு உள்ளது? தமிழர்களால் தமிழர்களை கொண்டு நடத்தப்படும் நிறுவனம்.

என்னுடன் கூடப்படித்தவர்கள் கட்டடத் தொழிலில் உள்ளனர், புலம்பெயர் நாடுகளில் உள்ள Dr, Eng, Accountants என்று பலர் அங்கு வீடுகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். Bank to Bank பணத்தை அனுப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இதில் என்ன தவறு உள்ளது? தமிழர்களால்

மன்னிக்கவும் "பலர் கிளம்பி உள்ளார்கள் ." எனும் சொற்பதம் உங்களை கோபப்படுத்தி உள்ளதுபோல் இருக்கு .

அவர்கள் செய்வது நல்ல விடயமே புலம்பெயர் பணம் வடகிழக்கில் புழங்குவது .

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இருக்கும் பழைய மாணவர் சங்கமொன்றுக்கு,  ஊரில இருக்கும் பாடசாலையினர் உதவி கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அதிபர் ஒருவரின் பிரியாவிடை விழாவுக்கும் , சரஸ்வதி பூசை விழாவுக்கு காசு கேட்டு அனுப்பி இருந்தார்கள்.  போர்க்காலத்தில் மிகவும் வசதியற்ற காலத்தில் அங்கு சரஸ்வதி பூசையோ , பிரியாவிடை நிகழ்வுகள் நடக்கவில்லையா? . எல்லாம் இப்பொழுது அங்கு ஆடம்பரமாகி விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.