Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ அதிகாரியை உருக வைத்த விஸ்வமடு மக்கள்!

Featured Replies

இராணுவ அதிகாரியை உருக வைத்த விஸ்வமடு மக்கள்!

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில்,

சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

 

Rajith Keerthi Tennakoon
vor 6 Stunden

අද කර්නල් රත්නප්‍රිය බන්දු විශ්වමඩු වලින් මාරුවෙලා අබේපුස්ස කදවුරට යන දවස. මේ ඉන්නේ එල්ටීටීඊ සංවිධානයේ හිටපු උදවිය. සිවිල් ආරක්ෂක බලකායට බදවාගත්ත පුනරුත්ථාපනය වූ උදවිය. ඒ විතරක් නොවෙයි, ගමේ මිනිස්සු.

ආරක්ෂක හමුදාවල උතුරේ මිනිස්සු හදවතින්ම ආදරය කරන, තමන්ට ආදරය කරන මිනිස්සු, කාකි ඇදුම් කදුළුවලින් තෙත් වෙනකල් අඩන නිලධාරීන් ද සිටිති. ඒ බව බොහෝ දෙනා නොදන්න නිසාත්, රටම දැනගත යුතු නිසාත් දඹුල්ලේ කාංචන එවපු මේ ඡායාරූප ටික මෙහි ඇතුලත් කළා.

මොන විලේ පිපුනත් මානෙල් සුවදමය!

... Mehr anzeigen
Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Personen, die stehen
Bild könnte enthalten: 1 Person, steht und im Freien
Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen und im Freien
Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen und im Freien
Bild könnte enthalten: 6 Personen, Personen, die lachen, Personen, die stehen, Blume und im Freien
+2
 
4.447
532

பாதுகாப்பு படைகளில் வடக்கில் உள்ள மக்களை உண்மையில் நேசிக்கும் அதிகாரிகள் இருப்பதுடன், அவர்களை நேசிக்கும் மக்களும் இருக்கின்றனர்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தம்புள்ளையை சேர்ந்த நபரொருவர் எனக்கு இந்த புகைப்படங்களை அனுப்பியிருந்தார் என தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/security/01/185081?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பினாமி வியாபரிகளை விட இவர் ஒர் நல்ல உள்ளம் படைத்த அதிகாரி போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

புலிப்பினாமி வியாபரிகளை விட இவர் ஒர் நல்ல உள்ளம் படைத்த அதிகாரி போல் தெரிகின்றது.

சிங்களவன் எல்லோரும் கெட்டவன் என்றால் தமிழ் மக்கள் இப்பவும் இருந்திருக்க முடியாது  அரசிலயலுக்கு வருபவனுக்கு இனவாதம் தேவை அதை வைத்தே அவனது அரசியல் வாழ்வு செல்கிறது செழிக்கிறது  அரசியலால் தமிழர்கள் பிரச்சினைய தீர்ப்பதென்பது  மலையில் மாட்டை ஏற்றுவது போல தான் 

 

இப்படி ஒரு தமிழ் அரசியல் வாதிக்கு மாலை கழுத்தில் விழுந்து இருக்குமா? என்பது மனதில் எழும் கேள்வி :unsure:

 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி போரில் தோத்தும்,தலைவர்,அவ்வளவு சனம்  இறந்ததற்கு கூட இப்படி அழுது இருப்பார்களோ தெரியாது? 

 

இவர் உண்மையிலேயே நல்லவராக இருக்கலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டப்படும் கடாவுக்கும் தண்ணி காட்டிற கூட்டம் இருக்குது.

அதுசரி.. உந்தக் கூலிங் கிளாஸும்.. முகத்தில் இருக்கும் அந்த திமிர் சிரிப்பும்.. மக்களுக்காக பரிந்துருகின ஆள் மாதிரி காட்டுதில்லை.

ஒருவேளை மிகக் கொடூரமானவர்கள் மத்தியில் உதித்த மிதமான கொடூரமானவராக இவர் இருந்திருப்பார் போலும். ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, colomban said:

புலிப்பினாமி வியாபரிகளை விட இவர் ஒர் நல்ல உள்ளம் படைத்த அதிகாரி போல் தெரிகின்றது.

இதுக்கை புலிப்பினாமி வரவேண்டிய அவசியமென்ன?

இனமத மொழி பேதங்களை தவிர்த்து விடுதலைப்புலிகள் சிங்கள மக்களுக்காக செய்த விடயங்களும் ஏராளமாகவே உண்டு. அந்த இடத்திலும் சிங்கள மக்கள் கண்ணீர் விட்டார்கள்.

  • தொடங்கியவர்

வடக்கின் பிரதேசங்கள் மட்டும் அல்ல, மக்கள் மனங்களும் இராணுவமயமாகின்றன…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி…

RAT05.jpg?resize=800%2C600

 

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு கட்டளை அதிகாரி கேணல் ரட்ணப் பிரிய பண்டுவுக்கு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து மக்கள் வழியனுப்பி வைத்தள்ளனர்.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 66 மாதங்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற கேணல் ரட்ணபிரியபந்துவின் சேவைநலன் பாராட்டும் முகமாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் RAT09.jpg?resize=800%2C600RAT07.jpg?resize=800%2C600  RAT04.jpg?resize=800%2C450rat03.jpg?resize=722%2C543RAT02.jpg?resize=800%2C450Rat01.jpg?resize=800%2C450

RAT11.jpg?resize=540%2C720

RAT06.jpg?resize=800%2C465

http://globaltamilnews.net/2018/83083/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இதுக்கை புலிப்பினாமி வரவேண்டிய அவசியமென்ன?

இனமத மொழி பேதங்களை தவிர்த்து விடுதலைப்புலிகள் சிங்கள மக்களுக்காக செய்த விடயங்களும் ஏராளமாகவே உண்டு. அந்த இடத்திலும் சிங்கள மக்கள் கண்ணீர் விட்டார்கள்.

நல்ல கேள்வி கு.சா.....புலிபினாமியும் புலியும் இல்லாவிடில் சிலருக்கு கருத்து பிரச்சனை.....சிங்கள அரசியல் வாதிகளுக்கு தமிழர் இல்லை என்றால் அரசியல் நடத்த முடியாது என்பது போன்று.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நல்ல கேள்வி கு.சா.....புலிபினாமியும் புலியும் இல்லாவிடில் சிலருக்கு கருத்து பிரச்சனை.....சிங்கள அரசியல் வாதிகளுக்கு தமிழர் இல்லை என்றால் அரசியல் நடத்த முடியாது என்பது போன்று.....

 

புலிப்பினாமிகள் தாங்கள் அடித்த காசில் ஏதாவ்து இந்த ஏழை மக்களுக்கு ஏதாவது செய்தால் இந்த மக்கள் அவர்களையும் கும்பிடுவார்கள் அல்லவா? நன்றாக வாசித்து பாருங்கள் என் கோபம் புலிபினாமி சொத்துக்களை அபகரித்த வியாபரிகள் மீது தான். விடுதலைபுலிகள் மீது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

 

புலிப்பினாமிகள் தாங்கள் அடித்த காசில் ஏதாவ்து இந்த ஏழை மக்களுக்கு ஏதாவது செய்தால் இந்த மக்கள் அவர்களையும் கும்பிடுவார்கள் அல்லவா? நன்றாக வாசித்து பாருங்கள் என் கோபம் புலிபினாமி சொத்துக்களை அபகரித்த வியாபரிகள் மீது தான். விடுதலைபுலிகள் மீது அல்ல. 

புலிபினாமிகள் அடித்த காசில் இவர்களுக்கு எவ்வளவோ நல்லதுகள் செய்திருக்கலாம்....என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.....ஆனால் இனியும் புலிபினாமிகளை பற்றி கதைத்து கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை....எப்படி இராணுவ‌போர்குற்றவாளிகளைப்பற்றி பேசுவதில் பயனில்லையோ அது போன்றுதான் இதுவும் என்பது என் கருத்து....

  • கருத்துக்கள உறவுகள்

போர்குற்றவாளிகளை ஏன் இவர்களுடன் ஒப்பிடுகின்றீர்கள்?
இவர்களை உலகமே காப்பாற்றும்.

இப்படியாவது மனம் இரங்கி பினாமிகள் இந்த மக்களுக்கு உதவி செய்யமாட்டார்களா என்ற நப்பாசைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, colomban said:

போர்குற்றவாளிகளை ஏன் இவர்களுடன் ஒப்பிடுகின்றீர்கள்?
இவர்களை உலகமே காப்பாற்றும்.

இப்படியாவது மனம் இரங்கி பினாமிகள் இந்த மக்களுக்கு உதவி செய்யமாட்டார்களா என்ற நப்பாசைதான்.

அப்படி மனம் இருந்திருந்தால் அப்படியான ஒரு கெடுகெட்ட செயலை செய்திருக்க மாட்டார்கள்.....இனிமேலும் திருந்தி அப்படி செய்யப்போவதுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இராணுவ அதிகாரியின் இடமாற்றலை எண்ணி முன்னாள் போராளிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால்,

அவர் செய்த உதவிக்கு நன்றி சொல்ல மட்டும் அழுதிருக்கமாட்டார்கள், இனி என்ன செய்யபோகிறோம் என்று நினைத்தும் அழுதிருப்பார்கள்.

  சொந்த மண்ணுக்காக போராட புறப்பட்டு  சொந்த மக்களாலேயே கைவிடப்பட்ட போராளிகளை,

எவர் ஆதரித்து அணைத்தாலும் அவர் முதலில் பாராட்டுக்குரியவர், இராணுவம்,பொலிஸ்,சிங்களம் எல்லாம் அதுக்கு அப்புறம்தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஒரு இராணுவ அதிகாரியின் இடமாற்றலை எண்ணி முன்னாள் போராளிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால்,

அவர் செய்த உதவிக்கு நன்றி சொல்ல மட்டும் அழுதிருக்கமாட்டார்கள், இனி என்ன செய்யபோகிறோம் என்று நினைத்தும் அழுதிருப்பார்கள்.

  சொந்த மண்ணுக்காக போராட புறப்பட்டு  சொந்த மக்களாலேயே கைவிடப்பட்ட போராளிகளை,

எவர் ஆதரித்து அணைத்தாலும் அவர் முதலில் பாராட்டுக்குரியவர், இராணுவம்,பொலிஸ்,சிங்களம் எல்லாம் அதுக்கு அப்புறம்தான்! 

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

விசுவமடுவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிக்கையில் ரெட்பானா சந்திக்கு முன்னர் வீதியின் இடப்புறம் (குமாரசுவாமிபுரம் என்று நினைக்கிறேன்) பெரிய சீமெந்திலான அறிவிப்பு பலகையில் - சிவில் பாதுகாப்பு திணைக்களம் - என்று மும்மொழிகளிலும் எழுதி அழகாக பராமரிக்கப்பட்ட கல்லை காணலாம்.

வள்ளிபுனத்தை கடந்து நடனமிட்டான் பிள்ளையார் கோயிலை கடந்ததும் வீதியின் வலப்புறம் இதேபோலொரு அறிவிப்புக்கல்லை காணலாம்.
வன்னியில் CSD என்று சுருக்கி அழைக்கப்படும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண்ணைகள் இந்த அறிவிப்பு கற்கள் காணப்படும் இடத்திலிருந்து உள்ளே அமைந்திருக்கின்றன.

இந்த பண்ணைகள் அமைந்திருக்கின்ற பெரிய நிலப்பரப்புகள் முன்னர் பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் முகாம்கள் காணப்பட்ட இடங்களே.
வன்னியில் இன்னமும் வெவ்வேறு இடங்களில் இந்த சி.எஸ்.ரி பண்ணைகள் இயங்குகின்றன. இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிதியொதுக்கீடு பெறுகின்ற திணைக்களம் ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற உற்பத்தி பண்ணைகள்.

இந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள் இராணுவ அதிகாரிகள். அங்கு ஒப்பந்த அடிப்படையில் - நிரந்தரமாகவும் - தற்காலிகமாகவும் பணியாற்றுகின்ற பலர் அந்தந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளும் - அவர்களின் குடும்பத்தினரும்.
அவர்களுக்கென்று தனியான சீருடை உண்டு.

இளமண்ணிற வர்ணத்தில் இலங்கை இராணுவ சீருடை அமைப்பில் அந்த சீருடையும் தொப்பியும் இருக்கும். சாதாரண பணியாளர்களுக்கு கறுப்பு மேலாடையும் - கறுப்பு ரக்-ஷூட், சப்பாத்து, தொப்பி, ஆகியனவற்றோடு பெண்பணியாளர்கள் கொண்டையிடுதல் - ஆண்கள் இராணுவ முறையில் சிகையலங்காரம் உள்ளிட்ட சகல கட்டமைப்புக்களும் ஒரு இராணுவ பிரிவைப்போன்றே இருக்கும்.

முல்லைத்தீவு கடற்கரை சாலையில் கொண்டாடப்படுகிற சுதந்திர தின அணிவகுப்புக்கு, சி.எஸ்.ரி அணிகளும் வரும். இரண்டுவகையான சீருடைகளிலும் வருவார்கள்.

சி.எஸ்.ரி அதாவது சிவில் பாதுகாப்பு திணைக்களம், முன்பள்ளிகளை இயக்குகின்றது.
அந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தனியான சீருடைச்சேலை உண்டு.

சி.எஸ்.ரி முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் - கல்விவலய முன்பள்ளி இணைப்பாளர்களுக்கு அவ்வளவாக ஒத்துழைப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.
அவர்களின் லீவுகளை கூட சி.எஸ்.ரி பணிப்பாளரிடமே விண்ணப்பித்து பெறுகின்றார்கள்.
வலயமட்ட நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பதில்லை.
முக்கியமாக மாகாண கல்வித்திணைக்களத்தின் கல்விநிரலை தங்களது முன்பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதில்லை உட்பட இன்னமும் சொல்லமுடியாத நிறைய குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது கடக்க நேரிட்டிருக்கிறது.

கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களின் கல்விவலயங்கள் இந்த சி.எஸ்.ரி முன்பள்ளி ஆசிரியர்களை கட்டுப்படுத்த தனியான பொறிமுறை எதையும் வகுத்ததில்லை.
காரணம் - சாதாரண மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற முன்பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை போன்று சி.எஸ்.ரி ஆசிரியர்களின் சம்பளம் மூன்று மடங்கு!
அவர்களின் குடும்ப பொருளாதாரம் சார்ந்த விடயம் இது.

தீர்மானம் நிறைவேற்றிய மாகாணசபைக்கும், பதவியிலிருந்த மற்றும் பதவியிலிருக்கும் அமைச்சர்களுக்கும் இந்த வேறுபாடும் - முரண்பாடுகளும் நன்கே தெரியும். ஆனாலும், அவர்களை குறுக்கிட மனமொப்புவதில்லை.

சி.எஸ்.ரி - இந்த மக்களின் சமூக பொருளாதார நிலையில் வெவ்வேறு மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. பாதகமான பக்கங்களையும்...
இந்த பண்ணைகளை அண்மித்து வாழுகின்ற குழந்தைகள் சாதாரணமாக சொல்லுவார்கள் தங்களது பெற்றோர் சி.எஸ்.ரி என்பதை. சில குழந்தைகள் பாம்வேலை என்று பதிலளிப்பார்கள்.

நிறைவாக உழைக்கிறார்கள். அவர்களது உழைப்பை அவர்களது சம்பாத்தியம் சமப்படுத்துகிறதா என்பதை சொல்லமுடியவில்லை ஆயினும் இந்த சி.எஸ்.ரி பணியாளர்களின் சராசரி மாதச்சம்பளம் இலங்கை ரூபாக்களில் 25000 முதல் 30000 வரை அவர்களின் பணிகளை பொறுத்து வேறுபடுகிறது.

புதுக்குடியிருப்பு துணிக்கடையொன்றில் மாதம் 8000 ரூபாவுக்கு நாள்முழுக்க கால்கடுக்க நிற்கும் சகோதரிகளை எனக்குத்தெரியும்.
யாழ்ப்பாணத்தின் பிரபல தினசரி பத்திரிகை முதலிரு வருடங்களுக்கும் 10000 ரூபாவுக்கு பணியமர்த்தும் யுவதிகள், சம்பள உயர்வு கேட்க தொடங்கியதும் அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை பணியமர்த்தும் கைங்கரியத்தை இன்றளவும் கம்பெனி கொள்கையாக வைத்திருப்பது இரகசியமில்லை.??

அப்படியிருக்க, இந்த 25000 அல்லது 30000 வன்னியை பொறுத்தவரையில் வரமென்றால் மிகையில்லை.

அம்மாவுக்கு இருபத்தைந்து வயது.
மூத்தமகன் ஐந்தாம்வகுப்பும் அடுத்தடுத்த தங்கைகள் இரண்டு வயதிடைவெளிகளிலும் இருக்க. அப்பா இன்னமும் தடுப்பிலிருந்து திரும்பாத குடும்பத்தில்.
வேறொரு ஆணுடன் குடும்பம் நடாத்தும் அல்லது ஓடிப்போய்விட்ட தாய்க்கு பதிலாக அம்மம்மா அல்லது அப்பம்மாவுடன் ரிப்போட் வாங்க பள்ளிக்கு வருகிற பிள்ளைகளுக்கு அந்த இராணுவ அதிகாரி தாயாக - தந்தையாக ஏன் கடவுளாக கூட தெரிந்தால் உங்களுக்கென்னடா??

அவர்களையும் - இராணுவப்புலனாய்வாளர்களையும் இணைத்து பலகதைகள் - பலப்பல கதைகள் உண்டுதான்.
இருக்கட்டுமே!

அவர்களின் குடும்பவிழாக்களை கூட சொந்தங்கள் நடத்துவதை பங்குபற்றுவதை விட சி.எஸ்.ரி பணியாளர்களும் இராணுவத்தினரும் பங்குபெறுவது தான் அதிகம் - அதுஉண்மையும் தான்.

சொந்தமாக நிலம் இல்லாமல், உழைக்கவென்று குடியமர்ந்த மக்கள் தான் இந்த எல்லைக்கிராமங்களை சேர்ந்தவர்கள். தோட்டக்காட்டார் - எஸ்டேட் ஆக்கள் போன்ற உங்களது கேலிகளை விடவா பெரிய கேவலம் இராணுவத்தோடு கொண்டாடுவது??

புனர்வாழ்வின் பின்னர் சகமனிதர்களாக மதிக்க கூட தயக்கம் காட்டுகின்ற எளிய தமிழ்ப்புத்தியின் இடைவெளியில் தான் சிங்கள இராணுவம் புகுந்து அவர்களையும் குடும்பங்களையும் போசிக்கின்றது.

அதிகார கட்டமைப்புக்களால் அவர்களது சக இனத்தவர்கள் செய்யமுடியாததை அவர்களின் நேற்றைய எதிரி சாத்தியமாக்கி சிறப்பாக செய்கிறான்.
அவனுக்காக உழைக்கிறார்கள் - அவனிடமிருந்து நியாயமான கூலியை பெற்று ஆகக்குறைந்த அடிப்படை வாழ்க்கையை வாழ்கின்றார்கள். அவ்வளவுதான்??

பாராளுமன்றம் - மாகாணசபை - உள்ளுராட்சி - நிதியம் - பேரவை - ஒன்றியம் - முன்னணி - கூட்டணி - கூட்டமைப்பு - கழகம் - அமைப்பு ஆகிய சகல “வ*********” சொற்களை விடவும் அவர்கள் “சி.எஸ்.ரி” என்கிற இராணுவ திணைக்களத்தை நேசிக்கின்றார்கள் என்றால், முகத்தில் கரியைப் பூசிக்கொள்ள வேண்டியது நீங்களில்லையா??

இந்த தேசத்தின் விடுதலை என்ற இலட்சியத்தை எந்தவித கேள்வியும் சந்தேகமும் இல்லாமல் முழுமனதோடு நம்பியவர்கள் அவர்களும் தான்.
அவர்கள் ஆயுதம் ஏந்தியபோது இருந்த அதே வெண்மனம் தான், இன்றைக்கும் குடும்பமும் பிள்ளைகளுமாவது நன்றாக வாழட்டும் என்ற இலட்சியத்திலும் மிளிர்ந்துகொண்டிருக்கின்றது.

அவர்களை நோக்கி கல்லென்ன - ஒரு சொல் கூட எறிய எங்களில் எவருக்குமே தகுதியில்லை!

 

இது ஒரு முகநூல் பதிவு. தேவையில்லை என்று நிர்வாகம் கருதினால் தாராளமாக நீக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Aathavan Gnana,

"வேறொரு ஆணுடன் குடும்பம் நடாத்தும் அல்லது ஓடிப்போய்விட்ட தாய்க்கு பதிலாக அம்மம்மா அல்லது அப்பம்மாவுடன் ரிப்போட் வாங்க பள்ளிக்கு வருகிற பிள்ளைகளுக்கு அந்த இராணுவ அதிகாரி தாயாக - தந்தையாக ஏன் கடவுளாக கூட தெரிந்தால் உங்களுக்கென்னடா??"

முதலில் பண்பாட்டுடன் எழுதுவதற்கு பழகுங்கள். முக நூலில் உட்புகாமல் உங்கள் பக்கங்களை மேலோட்டமாக  பார்த்த போது நீங்கள் கிந்திய புலனாய்வு (ரா) வயப்பட்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே தென்படுகிறது.

"அவர்களையும் - இராணுவப்புலனாய்வாளர்களையும் இணைத்து பலகதைகள் - பலப்பல கதைகள் உண்டுதான்.
இருக்கட்டுமே! "

" புதுக்குடியிருப்பு துணிக்கடையொன்றில் மாதம் 8000 ரூபாவுக்கு நாள்முழுக்க கால்கடுக்க நிற்கும் சகோதரிகளை எனக்குத்தெரியும். "

கால் கடுக்க நாள் முழுக்க நின்று 8000 சம்பளம் எடுக்கும் சகோதரி, தனது உடம்பை காட்டியிருந்தால் நிச்சயமாக பல மடங்கு 8000 சம்பளம் எடுத்திருக்கலாம். அது சரி என்கிறீர்களா?

ஆனாலும், கல்வி இயக்குனாராக பணியாற்றும் நீங்கள், இவ்வாறு பண்பாடு இல்லாமல் பகிரங்கமாக எழுதுவதை நிவர்த்தி செய்வதற்கு முயலுங்கள்.

ஆயினும், அது நாய்  வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பான ஓர் காரியமாகவே இருக்கும் என்று மிகவும் ஐயப்படுகிறேன். ஏனெனில், நீங்கள் ந்க்கிந்திய என்ற சகதிக்குள் மூழ்கிவிட்டீர்கள்.   

சுயமாக, தனித்துவமாக, சுதந்திரமாக சிந்திக்கும் ஆற்றலை இழந்து அதுவே சுகம் எனும் மாயையை, சந்தர்ப்ப வசத்தால் அடிமைக்கப்பட்ட மக்களுக்கு, வெளிப்படையான பார்வைக்கு நன்மையாக தெரிந்தாலும்,
அவர்களின் மதியும் மனமும் அடிமையாக்கப்படுவதை நியாயப்படுத்தி, அதை வேறு கோணத்தில்  நோக்குவோரை கடிந்து, ஏதொ அந்த மக்களில் அக்கறை கொண்டவர் போல காட்டிக்கொள்ளும்  உமது புலனாய்வு நடிப்பு பிசு பசித்து விட்டது என்பதுவே உண்மை.              

 

 

18 hours ago, ரதி said:

இறுதி போரில் தோத்தும்,தலைவர்,அவ்வளவு சனம்  இறந்ததற்கு கூட இப்படி அழுது இருப்பார்களோ தெரியாது

இதற்குள் ஏன் தலைவர் பிரபாகனை இழுக்கிறீர்கள்?

Edited by Kadancha
add questions.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

 

முன்னாள் போராளிகள் சிங்களவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஆயிரம் முன்னாள் போராளிகள் இன்றும் யாசகம் செய்கிறார்கள்.. இனத்துக்காக மண்ணுக்காக தம் தோழர்களும் மக்களும் உயிரையே கொடுத்துவிட்டதை எண்ணி வாழ்பவர்கள்.. பலர்.

ஆனாலும்... காட்டிக்கொடுத்து உபயம் பெற்றோரும் உண்டு.

ஒரு கொலைக்காரக் கும்பலில் ஒருவன் கொஞ்சம் நல்லவனாக நடித்தான் என்பதற்காக.. ஒட்டுமொத்த கொலைகாரக் கும்பலுக்கும் வெள்ளையடிக்கும் கைங்கரியத்தை உண்மையான தமிழன் செய்யமாட்டான்.

பல சொந்த உறவுகளின் உயிர் பறித்தவன் கையால் வாங்கி உண்பதிலும் மடிவது மேல்.. என்று வாழ்ந்த இனம்..

இன்று......................................... ஏவல் செய்வதில் இன்பம் காண்கிறது. 

அதுக்கு பக்கம் பங்கமா வியாக்கியானம் வேற.?

எத்தனை முன்னாள் போராளிக் கடன்தொல்லை வறுமை காரணமாக தற்கொலை செயதிருக்கின்றார்கள் ! முன்னாள் போராளி தற்கொலை என்று கூகுளில் தேடினால் நிறைய வரும். அதபோல் போர் முடிந்தபின்னர் யாழ் பல்கலைக் கழகத்தில் படிக்க முற்பட்டு நிந்திக்கப்பட்டு தற்கொலை செய்தவர்கள் உண்டு. கல்வியை  இடைநிறுத்தியவர்கள் ஏராளம். போரால் பாதிக்கப்பட்ட மக்களை விட முன்னாள் போராளிகளின் வாழ்வு மிக மோசமானது.  அச்சமும் வறுமையும்  சமூகத்தின் நிந்திப்பும் என மிக மோசமான அவல வாழ்வு அவர்களுக்குத்தான்.  தமிழ் அரசியல் கட்சிகள் இவர்களுக்காக என்னத்தை உருப்படியாக செய்தார்கள் ? புலம்பெயர் தேசத்தில் இருந்து எத்தனை லட்சங்களை கோயிலுக்கும் கும்பாபிசேகத்திற்கும் ஆடம்பர பகட்டுக்கும் செய்திருப்பார்கள் அதில் இரண்டு வீதத்தை முன்னாள் போராளிகளின் புனர் வாழ்வுக்குச் செய்திருந்தால் கூட அவர்கள் வறுமையில் இருந்து மீண்டிருப்பார்கள். மில்லியன் கணக்காக புலிகளின் சொத்தை ஆட்டயை போடட புலம்பெயர் கும்பல் அதில் ஒரு சொற்பத்தை அவர்கள் புனர் வாழ்வுக்கு கொடுத்திருக்கலாம். இப்படி எத்தனையோ விசயங்கள் இருக்கின்றது.  எதிரியாய் இருந்தாலும்  முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு தோழ்கொடுத்த அவரது மனிதாபிமானத்துக்கு நன்றிகள். 

 

புலம்பெயர்ந்த பார்வையாளர்கள்/கண்காணிப்பாளர்கள் மனம் கோணாதபடி வாழ்ந்து அங்குள்ள மக்கள் இவர்களை திருப்திப்படுத்துவது நடக்கும் காரியம் இல்லை. ?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நவீனன் said:

அப்படியிருக்க, இந்த 25000 அல்லது 30000 வன்னியை பொறுத்தவரையில் வரமென்றால் மிகையில்லை.

அம்மாவுக்கு இருபத்தைந்து வயது.
மூத்தமகன் ஐந்தாம்வகுப்பும் அடுத்தடுத்த தங்கைகள் இரண்டு வயதிடைவெளிகளிலும் இருக்க. அப்பா இன்னமும் தடுப்பிலிருந்து திரும்பாத குடும்பத்தில்.
வேறொரு ஆணுடன் குடும்பம் நடாத்தும் அல்லது ஓடிப்போய்விட்ட தாய்க்கு பதிலாக அம்மம்மா அல்லது அப்பம்மாவுடன் ரிப்போட் வாங்க பள்ளிக்கு வருகிற பிள்ளைகளுக்கு அந்த இராணுவ அதிகாரி தாயாக - தந்தையாக ஏன் கடவுளாக கூட தெரிந்தால் உங்களுக்கென்னடா??

இப்படிதான் பிரித்தானியா தனது கால‌ணித்துவ நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு சலுகைகள் ,கல்வி போன்றவற்றை கொடுத்து தங்களது நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆக்கினார்கள்....அதன் பலனை இன்றும் புலம்பெயர் தேசத்திலும் அவர்கள் பெற்று கொள்கிறார்கள் ....வறுமை இருக்கும் மட்டும் ஆதிக்கவாதிகள் தாங்கள் விரும்பியதை மக்களுக்கு செய்வார்கள்... அழிப்பார்கள் ஆதரவளிப்பார்கள்......பிரித்தானிய ,போத்துக்கீஸ்,ஒல்லாந்தர் எல்லோரும் க‌ரையோரத்தை கைப்பற்றி அங்கு கோட்டைகளை கட்டி அந்த பகுதியில் வாழ்ந்த மக்களை அழித்து பின்பு சலுகைகள் கொடுத்தார்கள்.....


இங்கு இராணுவ அதிகாரிக்கு மக்கள் கொடுத்த ஆதரவை குறை சொல்ல வில்லை ...அது பாராட்டப்படவேண்டியது....

அழிப்பான் அவனே ஆக்கம் செய்வான் இது அதிகாரவர்க்கத்தின் நியதி....என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் ஆனால் அந்த மக்களுக்கு தேவை வாழ்வாதாரம்... 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎11‎/‎2018 at 3:43 AM, Kadancha said:

      

 

 

இதற்குள் ஏன் தலைவர் பிரபாகனை இழுக்கிறீர்கள்?

பின்னே! நீங்களோ,நானோ செத்தால் இப்படி ஆட்கள் அழுவினமோ 

 

On 6/10/2018 at 4:22 PM, நவீனன் said:

கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலுக்கு நீண்ட காலமாகவே ஜனநாயக பூச்சு அடித்துவரும் கபே அமைப்பின் கீர்த்தி தென்னகோன் இந்த செய்தியை வெளிக்கொண்டு வந்ததிலிருந்து இந்த சம்பவத்தின் பின்னணியில் ஆழமான திட்டமிடலும் பாரிய சதித்திட்டமும் இருப்பதை உணரலாம்.

பாதிக்கப்பட்ட மக்கள் குழுமம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு தாராளமாக வழங்கப்படும் உதவிகள் அவர்களை அடிமைப்படுத்துவது வரலாறு. மதமாற்ற கும்பல்களும் இதே வகையில் தான் செயற்படுகின்றன. இதற்காக பாதிக்கப்பட்ட பாமர மக்களை குறை கூறுவதில் பயனில்லை.  

இங்கு மிக முக்கிய விடயம், இவ்வளவு உதவிகளையும் செய்ய தேவையான பணம், அதிகாரம், வளங்கள் எங்கிருந்து வந்தது என்பது தான்? தமிழர்களிடம் கொள்ளையடித்த பணத்தை வைத்தே தமிழர்களை அடிமைப்படுத்தும் திட்டங்களில் இதுவும் ஒன்று.

போரால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணங்ககளில் இயங்கும் ஜனநாயக நிர்வாக இயந்திரங்களுக்கு மிகமிக குறைவான நிதியை ஒதுக்குவதோடு, அவர்கள் செயற்படமுடியாதபடி தடைகளை ஏற்படுத்துவதோடு, தமிழின படுகொலைகளை முன்னெடுக்கும் சிங்கள-பௌத்த முப்படைக் கொலைகாரர்களுக்கு பாரிய நிதியை ஒதுக்குவதன் மூலம் தமிழின அழிப்பை பலவழிகளில் தொடர ஆழமான திட்டமிடலும் பாரிய சதித்திட்டமும் இருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.   

போர்க்குற்றச்சாட்டுகள் வலுவிழக்காத பின்னணியில் சர்வதேசத்தை ஏமாற்ற இதுபோன்ற நாடகங்களையும்,  தமிழினத்தை தொடர்ந்து அழிக்க வாள்வெட்டு கும்பல்கள், போதைப் பொருள் விநியோகம், சட்டவிரோத செயற்பாடுள் போன்றவற்றை அரங்கேற்ற வேண்டிய தேவை சிங்கள-பௌத்த அரச போர்குற்றவாளிகளுக்கு இருந்து வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.