Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன?

Featured Replies

கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன?

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதேபோல் ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால்,கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம். புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும்.

கஞ்சாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்றி கனடா வாழ் தமிழ் மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

80 வயதான பொன்னம்மாள், "அரசே இப்படி செய்கிறார்கள், என்ன சொல்வது? முக்கியமாகச் சிறுவர்களும், இளைஞர்களும் கெட்டு போய்விடுவார்கள். கஞ்சா உடலுக்கும், மனதிற்கும் நல்லதல்ல. மேலும், அந்த நாற்றத்தைத் தாங்க முடியாது." என்கிறார்

இவரது மகள் ப்ரீத்தி கூறும்போது. "என் கவலை என்னவென்றால் இளைஞர்களால் இதை எந்த அளவில் நிறுத்த வேண்டும் என்று அனுமானிப்பது கடினம். குறுகிய மற்றும் நீண்ட நாள் விளைவுகளைப் பற்றி படிக்கும் போது மார்பு நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன, " என்றார்.

கஞ்சாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"சட்டரீதியாக இதனை அனுமதித்தால் கலப்படம் இல்லாத தரமான பொருள் கிடைக்கும். கஞ்சா பிடிப்பவர்கள் எப்படி இருந்தாலும் அதை தேடி பிடிப்பார்கள். குறைந்தபட்சம் தரமில்லாத பொருளை உபயோகப்படுத்த மாட்டார்கள்," என்றும் அவர் கூறினார்.

வாசன் மற்றும் கீதா தம்பதியினர் கூறும்போது, "சட்டரீதியாக மருத்துவ உபயோகத்திற்காக ஏற்கனவே கஞ்சாவை கொண்டுவந்தாயிற்று. அதிக வலியில் துடிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இது போதாதா? உற்சாகத்திற்காக சட்டபூர்வமாக இதை கொண்டு வருவதை முற்றிலும் எதிர்க்கிறோம். இளைஞர்களைப் போதைக்கு அடிமை ஆக்கிவிடும்'' என்றனர்.

https://www.bbc.com/tamil/global-44429651

  • கருத்துக்கள உறவுகள்

அரசு இதன் மூலம் மிகக்கூடிய வருமானத்தை ஈட்டப்போகிறது. சட்டரீதியற்ற வியாபாரிகளை இதன் மூலம் அப்புறப்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
சாராயக்கடைகள்  போல இக்கடைகளும் காலப்போக்கில்  வருவதால் கூடுதலானவர்கள் இலகுவாக புகைக்க முடியும் . pain killer என்று அரசு சொல்வது அரசின்  நொட்டிச்சாட்டு என நினைக்கிறேன். அதற்காக கஞ்சாவை சட்டரீதியாக்குவதை ஒரு காரணமாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்கிறாரகள் ஏன் புகைத்தலுக்கு அடிமையானோரின் அனேகமானவர்களின் வாழ்வும் அந்த புகை புகைபோலவே போயும் இருக்கிறது;அப்படியிருக்கையில் கஞ்சாவை எவ்வாறு வலி நிவாரணி என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்கிறாரகள் ஏன் புகைத்தலுக்கு அடிமையானோரின் அனேகமானவர்களின் வாழ்வும் அந்த புகை புகைபோலவே போயும் இருக்கிறது;அப்படியிருக்கையில் கஞ்சாவை எவ்வாறு வலி நிவாரணி என்கிறார்கள்.

வலி நிவாரணிகளை நீங்கள் புகைக்க தேவை இல்லை 
அவை கஞ்சாவில் இருந்து தயாரித்த குளிசை திரவ வடிவில் பெற்று கொள்ளலாம்.
ஒரு நாட்டில் கஞ்சாவை தடை செய்யும்போது ..
அதன் மூலம் பெற  கூடிய பல நன்மைகளுக்கான கதவுகளும் 
அடைபடுகின்றன. 
இப்போதும் பல வலி நிவாரணிகள் கோக்கையின் ... ஒபின் ... கஞ்சாவில் இருந்துதான் தாயாரிக்கிறார்கள் 
ஆனால் சில கொம்பனிகள் மட்டும் அரசியல் வாதிகளை லஞ்சம் மூலம் 
வாங்கி சட்டத்தை ஏய்த்து பிழைத்து பெருத்த லாபம் பெறுவதோடு 
தொடர்ந்தும் தடை விதிக்க பல மில்லியன் டொலர்களை அரசியல் வாதிகளுக்கு 
கையூடாக கொடுத்து வருகிறார்கள்.

சிகரெடை விட கஞ்சா மேலானது எனும்போது 
எப்படி சிகரெட் எல்லா இடமும் கிடைக்கிறது ... கஞ்சா வுக்கு மட்டும் தடை?
சிகரெட்  கொம்பனிகளின் லஞ்சம்தான் முக்கிய காரணம். 

கஞ்சா காலம் காலமாக தமிழரோடு இருந்து இருக்கிறது 
பல முனிவர்மார் பாவித்து பயன் அடைந்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒல்லாந்தில் கஞ்சா சர்வசாதாரணமாக வாங்கலாமாம். அந்த நாட்டில் உள்ள கஞ்சா பிரச்சனைகளையும் ஆராய்ந்து பார்க்கலாமே?

கஞ்சா அடிக்கிறதுக்கெண்டே ஒல்லாந்துக்கு  ரூர் போறசனம் எக்கச்சக்கம். கஞ்சா அடிச்சால் ஒரு வித்தியாசனமான கிக்தான்....?

வலிக்கு நிவாரணியாய் மட்டும்  இருந்தால் சந்தோசம்.:cool:

சாராய விற்பனை, லொட்டோ கசினோ எல்லாம் அரசுதான் செய்கின்றது. இப்போது கஞ்சாவும் கனேடிய அரசின்கீழ் வருகின்றது. இவ்வாறான விசயங்கள் தனியாரிடம் இருப்பதை விட அரசின் கீழ் இருப்பதுதான் சிறந்தது. தனியார் முதலாளிகள் லாபத்துக்காக இவ்வாறான விசயங்களில் செய்யும் முறைகேடுகள் மேலும் பாதகத்தை விழைவிக்கும். கஞ்சா பாலியல் தொழில் போன்றன முற்றாக எங்கும் தடுக்க முடியாதவை. அதை அதன் போக்கில் கையாழ்வதே சிறந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா விற்பதை பற்றி ஏன் ஏனையா சமூகங்கள் அலட்டிக் கொள்வதில்லை? இங்கு வாழும் சைனீஸ் அல்லது சீக்கியர் /பிலிப்பினோ இதை பற்றி கவலைப்படுகின்றார்களா?   தமிழரும் இவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை.

என்னுடைய தெரிவுகளே என் உடலையும் மனதையும் பாதிக்கின்றது. எது நல்லது எது தீயது என எனக்கு தெரிவு செய்யும் மன‌ப்பக்குவம் எனக்கு இருந்தால் இவையெல்லாம் தூசு.     

  • கருத்துக்கள உறவுகள்

சர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி,  இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வல்வை சகாறா said:

... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.?

தற்பொழுது மதுபான‌ம் சர்வசாதரணமாக் கிடைக்கின்றது ...ஆனால் இது வரை உங்கள் கருத்துக்கள் அப்படி பாவித்திட்டு எழுதிய மாதிரி தெரியவில்லை  ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

தற்பொழுது மதுபான‌ம் சர்வசாதரணமாக் கிடைக்கின்றது ...ஆனால் இது வரை உங்கள் கருத்துக்கள் அப்படி பாவித்திட்டு எழுதிய மாதிரி தெரியவில்லை  ?

புத்தன் நீங்கள் சகராவின் எல்லா பதிவுகளையும் வாசிப்பதில்லை என்று தெரிகிறது.?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிகரட்டோ  சுருட்டோ பாவிப்பதால் பாவிப்பவர் சுய உணர்வுடன் இருப்பார். ஆனால் கஞ்சா,அபின் போன்றவை அப்படியல்ல அவர்களை ஒரு மயக்கமான நிலையில் வைத்திருக்கும். நடப்பவை தெரியும்.ஆனால் தடுக்க சக்தி இருக்காது. போதை இறங்கியதும் மீண்டும் அதை நாடித்தான் மனம் ஓடும். இளைஞர்களுக்கு அது கெடுதல்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வல்வை சகாறா said:

சர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி,  இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.?

எல்லாம் வருவத்துக்கு முன் வரும் பர பரப்பு மட்டுமே 
கஞ்சாவின் மீது இருந்த தடைதான் இப்படி எங்களை சிந்திக்க வைக்கிறது 
தடை இல்லாது இருப்பின் அது இன்னொரு சாதாரணமாக இருந்து இருக்கும்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

தெரிந்தும் எவ்வளவு கொழுப்பு சீனி சத்து கொலஸ்டரோல் உணவுகளை 
உட்க்கொள்கிறோம்? பின்பு நோயால் அவதி படுகிறோம்.
எல்லாம் சந்தை யுத்திக்குள் சிக்குண்டு சிதறி போகிறோமே தவிர 
சொந்த புத்தி இருந்திருந்தால் ..... சைவமதத்தை கைவிட்டு 
இந்து மதம் என்ற சாக்கடைக்குள் தமிழன் விழுந்திருப்பானா ? 

மனிதர்களில் எப்போதும் இரு சிந்தனை உடையவர்கள் இருக்கிறார்கள் 
தானும் முன்னேறி அடுத்தவரையும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் 
மற்றது தானும் முன்னேறாது அடுத்தவனையும் இழுத்து பிடித்து வைத்திருப்பவன்.

ஒவ்வொரு நாளும் குடிப்பவனும் இருக்கிறான் 
வாரத்தில் ஒருநாள் எங்காவது ஏதும் பார்ட்டி வந்தால் குடிப்பவனும் இருக்கிறான் 
குடிக்காதவனும் இருக்கிறான்.

சவூதி அரேபியாவில் மது விக்க சட்டம் கொண்டுவந்தால் 
நீங்கள் எழுதியதுபோல் பல பேர் எழுதுவார்கள். அதுக்காக அதில் உண்மை இல்லை 
என்றும் இல்லை. அதுக்காக இப்போ சவுதியில் மட்டுமே ஆண்கள் கண்ணியமாக இருக்கிறார்கள் 
என்றும் இல்லையே? 

வந்த புதுசுல ஒருக்கா புகைத்து பார்ப்பார்கள் அவளவுதான் 
பின்பு புகைக்க பிறந்தவர்கள் மட்டும்தான் புகைப்பார்கள்.

எனக்கு தனிப்பட 
அதன் மணம்தான் பிடிப்பதில்லை 
அதை ரோட்டில் நின்று பத்தி நாம் போய் வரும் பாதைகளில் 
மணங்களை உண்டுபண்ணினால்தான் கொஞ்சம் தலையிடி. 

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா புகைத்தவர் ஒருவர் பஸ்சுக்குள் ஏறினால் அந்த பஸ்சே நாறும்.

சட்டபூர்வமாக ஆக்கப்பட்ட நிலையில் கஞ்சா பாவிப்பவர்கள் அதிகரித்து பாவனையாளர்கள்  பத்துபேர் ஒரு பஸ்சுக்குள் பயணம் செய்தால் அதில் பயணிக்கும் பெண்கள்,வயதானவர்கள் குழந்தைகள், போதை வாடையை ஒவ்வாமையாக கொண்டவர்களிற்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?

உடன் பயணிப்பவர்களின் உடைகள் கஞ்சா மணத்தை உறிஞ்சி வைச்சிருக்கும்,அதனை பாவிக்காதவர்கள்கூட அந்த மணத்தோடையே வீட்டுக்குள் நுழைந்தால் வீடு என்னாகிறது?

வேலை செய்யும் இடங்களில் பிறேக்குக்கு வெளியில்போய் நாலு வலிப்பு வலிச்சிட்டு உள்ளே வந்தால் கூட வேலை செய்பவர்கள் எப்படி பக்கத்தில் நின்று வேலை செய்யுறது?

அடுத்த பிரச்சனை சுதந்திரமான அனுமதி கிடைத்தால் குரூப் குரூப்பா சேர்ந்து எங்கு வேணும் எண்டாலும் புகைச்சிட்டு குழுமோதல் அதிகரிக்கும், வாகனங்களுக்குள்ள அவர்கள் பொருள்கள் என்றழைக்கப்படும் வாள்,கத்தி,கோல்ப் ஸ்டிக் தாராளமாக புழங்கும். ஒரு தலைக்காதல் அதிகமா ஏற்படும், பெண் ஓகே சொல்லாவிட்டால் கடத்த சொல்லும்.

அனுமதி கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் கஞ்சா அடித்தவர்கள் அடித்துகொண்டுதான் இருந்தார்கள்,இருப்பார்கள்  எவன் சொல்லியும் அவர்கள் கேட்கவோ திருந்தவோ போவதில்லை,இப்போ அதுவல்ல பிரச்சனை..

  சட்டபூர்வமாக்கப்பட்டபிறகு பொதுவெளியில் கஞ்சா பாவனையாளர்கள் தொகை சடுதியாக அதிகரித்து எங்கு வேண்டுமானாலும் புகைக்க,நடமாட அரசாங்கமே அனுமதிக்கும்போது 

கஞ்சா பாவிப்பவர்களைவிட அதனை பாவிக்காதவர்களுக்குத்தான் பிரச்சனை அதிகமாகபோகிறது என்பதே கவலையான விஷயம். ஆககுறைந்தது பொதுவெளியில் புகைப்பதையாவது தடை செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, வல்வை சகாறா said:

சர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி,  இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.?

அந்தக்காலத்திலை  சாராயம் விஸ்கி எல்லாம் புதிசாய் வரேக்கை அப்ப இருந்தவையளும் உப்பிடிச்சொல்லித்தான் முன்னுரை வாசிச்சிருப்பினம்.....பிறகு எல்லாம் வழக்கமான ஒண்டாய் வந்திட்டுது. விரும்பினவன் குடிக்கிறான்  அனுபவிக்கிறான்.....அதை துர்ப்பிரயோகம் செய்தவன் அரைகுறையிலை போறான்.உலகத்தில இருக்கிற சனமெல்லாம் குடிக்கிறதுமில்லை. அதே போலத்தான் கஞ்சாவும்......தீமையெண்டு தெரிஞ்சவன் கிட்டவும் போகான் போகவும் மாட்டான்.

உப்பிடித்தான் அந்தக்காலத்திலை உந்த சினிமா தியேட்டரிலை படம் போகிறவையை எல்லாம் எங்கடை பழசுகள் கண் பழுதாய்ப்போகும் கண்பழுதாய்ப்போகும் எண்டு பேசினவையள். இப்ப சின்னப்பால்குடியும் கைத்தொலைபேசியை கண்ணுக்கு கிட்ட வைச்சு நோண்டுதுகள். அதுகளை பாத்து கண் பழுதாப்போகும் எண்டு பேசு பேசெண்டு பேசுறம். பறிச்சு வைக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் கனக்க வேண்டாம் அந்தக்காலத்தில் தேனீரே வலுக்கட்டையாமாகத்தானாம்  வெள்ளைகள் எம் முத்தோர்களுக்கு பழக்கினவர்களாம்.இப்ப நிலமை என்ன என்று நான் சொல்த்தேவையில்லை.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏன் கனக்க வேண்டாம் அந்தக்காலத்தில் தேனீரே வலுக்கட்டையாமாகத்தானாம்  வெள்ளைகள் எம் முத்தோர்களுக்கு பழக்கினவர்களாம்.இப்ப நிலமை என்ன என்று நான் சொல்த்தேவையில்லை.?

 என்ரை சிவனே!  நீங்கள் எங்கடை பழங்கஞ்சி, ஊறுகாய்த்தண்ணி,மோர்த்தண்ணி,தேசிக்காய்த்தண்ணி,கருப்பநீர்,பனங்கள்ளு,தென்னங்கள்ளு,இளநீர் எண்டு எல்லாத்தையும் நினைக்க வைச்சிட்டியளே..:grin:

கஞ்சா நல்லதா,  கெட்டதா  என்றும் அது தொடர்பான வாதப் பிரதி வாதங்களிலும்  யாழ் உறவுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்க, கஞ்சா விற்பனை / வளர்ப்பு என்றோ ஒரு நாள் சட்டபூர்வமாக்கப் படும் என்று "தீர்க்கதரிசனமாய்"  சில ஆண்டுகளுக்கு முன்னர் உணர்ந்து கொண்ட ( மணந்து பிடித்த) எம்மவர்களில் சிலர் கஞ்சா,  வளர்ப்புக்கென்றே மலிவு விலையில் கனடாவின் புறநகர்ப்பகுதிகளில் காணி வாங்கி  விட்டிருக்கினமாம்.  அவர்கள் காட்டில் மழையோ மழை.....வாழ்க தமிழ்..வளர்(க்)க கஞ்சா ...:-((

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.