Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் போரின் போது... மூன்று மணித்தியால உண்ணாவிரதம் இருந்ததன் மூலம்.
மக்களின் வெறுப்பை சந்தித்து... மீண்டும் முதல்வராகமலே மறைந்தார்.  

பேரோடும் புகழோடும்  இருந்திருக்க வேண்டிய ஒருவர்,
தனது சுயநல அரசியலால்... கெட் ட பெயருடன் மறைய வேண்டி வந்தமை...  அவரின் துர் அதிர்ஷ்டம்.

  • Replies 124
  • Views 21.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கருணாநிதி நல்லடக்கத்துக்கு மெரினாவில் அனுமதி மறுப்பு ஏன்! - பின்னணி சர்ச்சைகள், சமரசங்கள்

 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அண்ணா சமாதியில் இடம் அளிக்கப்படாததைக் கண்டித்து காவேரி மருத்துவமனை வாசலில் பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர் தொண்டர்கள். ‘கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். சில அரசியல் காரணங்களால் அமைதி காக்கிறார்’ என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

கருணாநிதி


காவேரி மருத்துமனையில் கடந்த 10 நாள்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கருணாநிதியின் உடல்நிலை, நேற்று கடும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, அவருக்கு 24 மணி நேர கெடுவை விதித்தனர் மருத்துவர்கள். இன்று அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாததால், அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்குமாறு குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினர் மருத்துவர்கள். இதன்பின்னர் கலங்கிய கண்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கக் கிளம்பினார் ஸ்டாலின். அவருடன் அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் உடன் சென்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த சந்திப்பில், ‘ உங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கிறேன். எங்கள் தரப்பில் எந்தவிதச் சிக்கலும் இல்லை’ என முதல்வர் தரப்பில் விவரித்ததாகத் தெரிவித்தனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். 

 

 

இதற்கு முன்னதாக, நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் கடந்த 6-ம் தேதி முதல்வரைச் சந்தித்து இதே கோரிக்கையை வைத்தபோது, ‘ காந்தி மண்டபம் அருகில் இடம் பார்த்துக் கொள்ளலாம். அண்ணா சமாதியில் கிடைப்பது அரிது’ எனத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அந்தநேரத்தில் எந்தப் பதிலும் சொல்லாமல், நேரம் கடத்திப் பதில் அளித்தது தி.மு.க தரப்பைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. ‘ நாம் நினைத்திருந்தால் எப்போதோ இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இதெல்லாம்’ எனக் குடும்ப உறுப்பினர்கள் கொந்தளித்தனர். 

 

 

ஆம்புலன்ஸில் கொண்டுவரப்படும் கருணாநிதி உடல்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், “அண்ணா சமாதியில் இடம் கொடுக்கப்படுவது தொடர்பாக, கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக கருத்து மாறுபாடு இருந்து வந்தது. அ.தி.மு.க தரப்பில் இருந்து வரும் எதிர்ப்புகளைக் கவனித்த கனிமொழி, ‘ஒரு போன்காலில் பிரதமரிடம் அனுமதியை வாங்கிவிட முடியும்’ எனக் கூறியபடியே அவரைத் தொடர்பு கொண்டு பேசினார். அங்கிருந்தும் நல்ல பதிலே கிடைத்துள்ளது. இதன்பின்னர் நேற்று கருணாநிதியை சந்திக்க வந்த நிதின் கட்கரியிடமும் இந்த விவரத்தை எடுத்துக் கூறியிருக்கிறார் ஸ்டாலின். அவரும், நான் முதல்வரிடம் பேசுகிறேன் என உறுதியளித்தார். இவ்வளவும் நடந்த பிறகு, ஆளும்கட்சி தரப்பில் அனுமதி மறுக்கப்படுவதன் பின்னணியில் பா.ஜ.க அரசு இருப்பதாகச் சந்தேகிக்கிறார் ஸ்டாலின். 

தங்களிடம் இருந்து பா.ஜ.க நிர்வாகிகள் சில வாக்குறுதிகளை எதிர்பார்ப்பதால்தான், சமாதியில் இடம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் குடும்ப உறவுகள் நினைக்கின்றனர். ‘ தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞருக்கு இடம் கொடுப்பதை பெருந்தன்மையான விஷயமாகத்தான் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். ஆனால், டெல்லியின் நோக்கம் வேறு விதமாக இருக்கிறது. இப்படியொரு அரசியல் மூவ் நடப்பதை அறிந்து பா.ஜ.கவின் சிக்னலைப் பெறுவதற்காக தனக்கு வேண்டிய முக்கிய நபர் ஒருவரை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டாலின். அவரிடம் இருந்தும் உறுதியான தகவல் வரவில்லை. நாளை மாலைக்குள் அண்ணா சமாதியில் இடம் கிடைத்துவிடும் என நம்பிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்” என்றார் விரிவாக. 

 

 

ஸ்டாலின்

அதேநேரம், சமாதி விவகாரம் குறித்துப் பேசும் அ.தி.மு.க நிர்வாகிகளோ, “ ஜெயலலிதா பாணியிலேயே இந்த விவகாரத்தை அணுகும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இல்லை. ‘ அனுமதி கேட்டு வந்தால் சட்டச் சிக்கல்களை விவரித்துக் கூறுங்கள். தி.மு.க எதிர்ப்பை வலுப்படுத்தினால்தான், நீங்கள் உயர முடியும். அதையும் மீறி சமாதிக்கு இடம் அளித்தால் அ.தி.மு.க தொண்டர்களின் வாக்குகளே கிடைக்காமல் போய்விடும்’ என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியின் அழுத்தம் காரணமாகத்தான் அமைதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கின்றனர். 

“அண்ணா சமாதியில் உடனடியாக இடம் அளித்தால், ‘ தி.மு.கவோடு கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்’ என்ற எண்ணம் தோன்றிவிடும். எனவே, பிரச்னை வீரியமானதும் அனுமதி கொடுத்துவிடுவார் எடப்பாடி பழனிசாமி. அண்ணா சமாதியில் நிச்சயம் இடம் பெறுவார் கருணாநிதி” என்ற குரல்களும் கோபாலபுரம் வட்டாரத்தில் எதிரொலிக்கின்றன. இதுதொடர்பாக தி.மு.க தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/133337-background-details-of-tn-government-refuse-to-allocate-land-to-karunanidhi-on-marina.html

 

 

தொண்டர்கள் புடைசூழ கோபாலபுரம் இல்லத்தை அடைந்தது கருணாநிதியின் உடல்! #RIPKarunanidhi

 

தொண்டர்கள் புடைசூழ கோபாலபுரம் இல்லத்தை அடைந்தது கருணாநிதியின் உடல்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இதையடுத்து இன்று இரவு 9 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் நோக்கி கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் கதறி அழுதபடி, கருணாநிதியின் உடலோடு கோபாலபுரம் நோக்கி அணிவகுத்தனர். ஆம்புலன்ஸ்க்கு முன்னால் மு.க.ஸ்டாலின் தனது காரில் பயணித்தார்.

திரளான தொண்டர்களுக்கு மத்தியில் மெதுவாக ஊர்ந்து சென்ற ஆம்புலன்ஸ்,1.30 மணி நேரத்துக்குப் பின்னர் தற்போது கோபாலபுரம் இல்லத்தை வந்தடைந்தது. தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தை சூழ்ந்து கொள்ள... கருணாநிதியின் உடல் வீட்டினுள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கருணாநிதியின் உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பின்னர் நள்ளிரவு 1.30 மணிக்கு சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அஞ்சலி மற்றும் இறுதி மரியாதை நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து, அங்கிருந்து நாளை அதிகாலை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி இல்லத்துக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்படுகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி முதல்வராக இருந்த நேரம், முன்னாள் தமிழக முதல்வர்  காமராஜர் மறைந்த போது.... 
மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்தவர்  தான்... கருணாநிதி.

அதற்கு அவர் கூறிய காரணம்... முதல்வராக இருக்கும் போது  இறந்தால் தான்... 
மெரினாவில் காமராஜரை அடக்கம் செய்ய முடியும்.  என்று கூறி  நிராகரித்தவர்.
அதே.. கூற்று, இன்று கருணாநிதிக்கும் பொருந்தும்.

ஆன  படியால்... கருணாநிதியின் உடலை, அவர் பிறந்த திருக்குவளையில் அடக்கம் செய்வதே... பொருத்தமானது.

  • தொடங்கியவர்

கோபாலபுரம் இல்லம் வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா... கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி #RIPKarunanidhi

 

கருணாநிதி உடலுக்கு மம்தா பானர்ஜி அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல்நலிவுற்று இன்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்கள் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது சென்னை வந்தார். கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவர், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் கருணாநிதியின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினர்.

mamtha98sds_23524.jpg

 

 

மெரினாவில் இடம் கிடைக்குமா? சற்று நேரத்தில் துவங்குகிறது விசாரணை!

தி.மு.க. தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனு மீதான விசராணை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஸ் முன்னிலையில் அவரது இல்லத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி, தி.மு.க. மனுத்தாக்கல் செய்ததையடுத்து தலைமை வழக்கறிஞர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். இன்னும் சற்று நேரத்தில் வழக்கு விசாரணை துவங்க உள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெரினாவில் இடம் மோரி தி.மு.க. மனு... தொடங்கியது வழக்கு விசாரணை! #RIPKarunanidhi

 
 

மெரினாவில் இடம் மோரி தி.மு.க. மனு... தொடங்கியது வழக்கு விசாரணை!

தி.மு.க. தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு  தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியது தி.மு.க. இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க தி.மு.க. கோரியதையடுத்து, நீதிபதிஹூலுவாடி ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பட்டியல் இடப்பட்ட மனு ,வழக்கு ஆவணங்களுடன் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் ,நீதிபதி வீட்டிற்குள் சென்றார். 
தலைமை நீதிபதி வீட்டிற்குள் செல்ல திமுக வழக்கறிஞர்கள் பலருக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையில் கோபாலபுரம்!

 

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, இன்று மாலை வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட இவரது உடல் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், சிஐடி காலனி இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அதிகாலை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 

 

பொதுமக்களின் அஞ்சலிக்கு நாளை காலை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து முற்றுகையிட்டுள்ளனர்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இரவு 1 மணிக்குள் கோபாலபுரம் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை முடித்து, சிஐடி காலனி இல்லத்துக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் கோபாலபுரம் இல்லத்தை கண்ணீரோடு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கலைஞரை பலர் திட்டி தீர்க்கின்றார்கள். இது பிழை. நாங்களும் பல கோஸ்டிகளாக பிரிந்து ஒற்றுமையின்றி அடிபட்டு எல்லாத்தையும் இழந்து விட்டு போராட்டத்தை தோல்வி அடைய செய்து விட்டு பிறகேன் மற்றவர்களை குற்றம் சொல்வானேன்.  

கருணாநிதியும் ஒரு அரசியல்வாதி நன்றாக வாழ்ந்து மறைந்தார்.

ஆழ்ந்த இரங்கல்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்

Dont give a place in Marina for Karunanidhi says S Gurumurthy

கருணாநிதிக்கு மெரினாவில் இடமளிக்க கூடாது.. எஸ்.குருமூர்த்தி சொல்லும் காரணம்!

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.

இது தமிழகம் முழுக்க பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது. இந்த விஷயத்தை திமுகவினர் தேவையில்லாமல் அரசியலாக்க கூடாது. அவருக்கு மெரினாவில் இடமளிப்பது நடைமுறையில் இல்லை.

மெரினாவில் முதல்வராக இருக்கும் போதே மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதிக்கு அங்கு இடமளிக்க முடியாது

முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபத்திலேயே இடமளிக்கப்படுவது வழக்கம். காமராஜர், ராஜாஜி ஆகியோருக்கு மெரினாவில் இடமளிக்கப்படவில்லை. அதனால் கருணாநிதிக்கும் மெரினாவில் இடமளிக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

http://allindiannewspapers.com/oneindia-tamil/

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

இங்கு கலைஞரை பலர் திட்டி தீர்க்கின்றார்கள். இது பிழை. நாங்களும் பல கோஸ்டிகளாக பிரிந்து ஒற்றுமையின்றி அடிபட்டு எல்லாத்தையும் இழந்து விட்டு போராட்டத்தை தோல்வி அடைய செய்து விட்டு பிறகேன் மற்றவர்களை குற்றம் சொல்வானேன்.  

கருணாநிதியும் ஒரு அரசியல்வாதி நன்றாக வாழ்ந்து மறைந்தார்.

ஆழ்ந்த இரங்கல்கள்!  

The Only Thing Necessary for the Triumph of Evil is that Good Men Do Nothing

கொழும்பான், திரு கருனாநிதி அவர்கள், தமிழறிஞராக, அரசியவாதியாக மிகவும் சிறப்பாக வாழ்ந்து முடித்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவரது தமிழுக்கு நானும் தலை வணங்குகிறேன். ஆனால், அவர் செய்யக்கூடிய அல்லது அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் அவர் பேசாமலிருந்ததுபற்றியே இங்கே பலரதும் கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

மற்றும்படி, அவர் அப்படியொன்றும் தவறானவர் இல்லை. அவருக்கிருக்கும் தமிழ் மீதான பற்றும், ஆளுமையும் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

  • தொடங்கியவர்

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கலைஞர் கருணாநிதி மறைவு செய்தி

 

 
KARUNANIDHI-TERM2MARCH151971

திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவு செய்தியை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

"Veteran South Indian Politician Muthuvel Karunanidhi Dies" என்று அசோசியேட் பிரஸ் செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கலைஞர் கருணாநிதி மறைவு செய்தியை பதிவு செய்துள்ளது.

 

அதில் அரசியல்வாதி, சினிமா வசனகர்த்தாவாகிய முத்துவேல் கருணாநிதி மறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் 1950களில் தொடங்கி தமிழ்மொழி திரைத்துறையை கருணாநிதி ஆதிக்கம் செலுத்தினார் என்றும் அதனுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இப்போது உலுக்கி வரும் மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான திமுகவின் கோரிக்கையையும் நடப்பு அரசு அதற்கு மறுப்பு தெரிவித்ததையும் அந்தச் செய்தி பதிவு செய்துள்ளது.

திமுக இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது வரையிலும் நியுயார்க் டைம்ஸ் செய்தி பதிவு செய்துள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24626958.ece?homepage=true

  • தொடங்கியவர்

"ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா' என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?" - மு.க.ஸ்டாலின் உருக்கமான கவிதை #RIPKarunanidhi

 

"ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா' என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?" - மு.க.ஸ்டாலின் உருக்கமான கவிதை

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, அவரது மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உருக்கமான கவிதை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எங்கு சென்றாலும் சொல்லி விட்டுச் செல்லும்
எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன்
சொல்லாமல் சென்றீர்கள்?

 

 

என் உணர்வில், என் உடலில் ரத்தத்தில்,
சிந்தனையில் இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட
தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே
ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு 
கொண்டிருக்கிறான்" என்று நினைவிடத்தில் எழுத 
வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே
எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக 
இடையறாது உழைத்தது போதும் என்ற மன நிறைவுடன்
புறப்ப்பட்டு விட்டீர்களா?

 
 

 

95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன்
சளைக்காமல் ஓடி, "நாம் தாண்ட வேண்டிய உயரத்தை
யார் தாண்டுவார்கள் பார்ப்போம்' என்று போட்டி 
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வதுபிறந்தநாளாம்
சூன் 3ஆம் நாள் நான் பேசும்போது, 'உங்கள்
சக்தியில் பாதியைத் தாருங்கள்'என்றேன். அந்த சக்தியையும்,
பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற
இதயத்தையும் யாசிக்கிறேன்.
தருவீர்களா தலைவரே!

அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத 
உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும்
வென்று காட்டுவோம்.

கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து
ஒரு வேண்டுகோள்.... ஒரே ஒரு முறை...
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...!"
என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!

"அப்பா அப்பா" என்பதை விட, "தலைவரே தலைவரே"
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா'
என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?

கண்ணீருடன்
மு.க.ஸ்டாலின்

 

 

கருணாநிதி மரணம்... இரு நாள்கள் துக்கம் அனுசரிக்கிறது பீகார் அரசு!

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இதேபோல் மத்திய அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்த 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது பீகார் மாநில அரசு. இரு நாட்கள் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து, தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு பீகார் மாநிலம் துக்கம் அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

stalin letter

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பல தடவைகள் முதலமைச்சராக ஆட்சியில் இருந்து, தமிழ்நாடு மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பெரும்பங்காற்றிய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தி.மு.க. கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு எமது அஞ்சலி!: மக்கள் அதிகாரம்

karunanithi1-300x200.jpg

காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.

தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.

“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.

“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.

அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.

அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.

பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.

*****

நினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.

இந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.

அவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.

அன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.

இவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.

*****

ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.

எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.

டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.

1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.

எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.

ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.

கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

*****

கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.

காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.

கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.

கலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

 

http://inioru.com/dmk-leader-karunanithi-passed-away/

Edited by கிருபன்

1 hour ago, colomban said:

இங்கு கலைஞரை பலர் திட்டி தீர்க்கின்றார்கள். இது பிழை. நாங்களும் பல கோஸ்டிகளாக பிரிந்து ஒற்றுமையின்றி அடிபட்டு எல்லாத்தையும் இழந்து விட்டு போராட்டத்தை தோல்வி அடைய செய்து விட்டு பிறகேன் மற்றவர்களை குற்றம் சொல்வானேன்.  

கருணாநிதியும் ஒரு அரசியல்வாதி நன்றாக வாழ்ந்து மறைந்தார்.

ஆழ்ந்த இரங்கல்கள்!  

உண்மை. 1989 ல் கலைஞர் முதல்வராக வந்த போது  இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது  போராளிகளுகுக்கு ஆதரவாக எம்மவர் அங்கு சுதந்திரமாக செயற்பட அங்கு இடமளித்தார்.  ஆனால் துரதிஸ்ரவசமாக அந்த சந்தர்ப்பம் எம்மவரால்  துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  வரலாற்றையும்  நாம் மறக்க‍க்கூடாது. எம்மில் உள்ள தவறுகளை மறைப்பதற்காக கலைஞர் மீது முழுப்பழியையும் போட சிலர் முயல்கிறார்கள். நான் கலைஞருக்கு ஆதரவாக அவரின் தவறுகளுக்கு வக்காலத்து வாங்க வில்லை. அவரும் விமர்சனத்து உரியவர் தான். அதற்காக  தமது தவறுகளை மறைக்க அவர் மீது முழுபழியையும் போடும் செயலை கண்டிக்கிறேன். 

Edited by tulpen

  • தொடங்கியவர்

திராவிடம் என்ற வார்த்தையை நீக்கும் ஆலோசனையை ஏற்க மறுத்த கருணாநிதி

 

 
karuna

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எப்போதும் மாநில உரிமைகளை, மாநிலத் தன்னாட்சி உரிமைகள் சார்பாக வாதிட்டவர். கூட்டாட்சிக் கொள்கையை தீவிரமாக வலியுறுத்தி வந்தவர்.

சுதந்திர தினத்தில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற உரிமையையும் பெற்றுத் தந்தவர்.

 

இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் பிராந்தியக் கட்சிகளையே தடை செய்யும் ஒரு அச்சம் நிலவிவந்தது.

அப்போது திமுகவின் மூத்த தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிப் பெயரில் உள்ள திராவிட என்ற வார்த்தையை நீக்குமாறும் கருணாநிதியிடம் வலியுறுத்தினர். ஆனால் கருணாநிதி திராவிட என்ற வார்த்தையை நீக்கும் ஆலோசனைகளை ஏற்க மறுத்து கொள்கையில் தீவிரம் காட்டினார்.

இதனை திமுக வரலாறு குறித்து எழுதிய கே.திருநாவுக்கரசு என்பவர் பகிர்ந்துள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24627238.ece?homepage=true

2009 இல் தீவிரமாக எம் மண்ணில் யுத்தம் நடந்து கொண்டு இருந்த வேளை, உள்ளே விட்டு பெடியல் அடிப்பார்கள் என்ற கனவில் இருந்த என்னை போன்ற புலம்பெயர் தமிழர்கள் இனி கட்டாயம் தோல்விதான் என்று காலம் கடந்து உணர்ந்த பிறகு கருணாநிதியை தலையிடச் சொல்லி மடல் மேல் மடல் அனுப்பிக் கொண்டு இருக்கையில், யாழ் இணையத்தின் செயலரங்கத்தினூடாக கடிதம் எழுதிய ஆட்களுக்குள் நானும் ஒருவன்.

ஆனால் அந்த காலப்பகுதியில் கருணாநிதியால் மட்டுமல்ல எந்த தமிழக தலைவர்களாலும் யுத்தம் நிறுத்தப்பட்டு இருக்காது என்பது தான் யதார்த்தம். ஒரு கன அடி தண்ணீரை கூட அதிகமாக பெற்று விட முடியாத அதிகாரங்களை கொண்ட மானிலத்தின் தலைவர்களால் சர்வதேசத்தின் பலம் மிக்க நாடுகளின் ஆதரவுடன் இந்திய மத்திய அரசு இலங்கையில் நடாத்திக் கொண்டு இருந்த புலிகளுக்கு /தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தத்தினை நிறுத்தி இருக்க முடியாது.

16 அ.தி.மு.க எம் பிக்கள் ஆதரவை வாபஸ் பெற்று இருந்தாலும் கூட பகுஜன் சமாஜ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இதர சிறு கட்சிகளின் துணையுடன் காங்கிரஸ் அரசு ஆட்சியை தொடர்ந்து இருக்கும். அதுதான் அன்றைய நிலவரம்.

கருணாநிதி ஒரு தெளிவான அரசியல்வாதி. அவருக்கு தம் பலம் மத்திய அரசினை ஒன்றும் செய்யாது என்பதை உணர்ந்து இருந்தார். ஆட்சி போகாட்டியும் தார்மீக காரணங்களால் அரசிற்கு ஆதரவை வாபஸ் பெற்று வெளியேறுவதற்கு அவர் ஒரு போராளி அல்ல. தியாகி அல்ல, அவர் ஒரு இந்திய அரசியல்வாதி. முக்கியமாக ஊழலின் மூலம் தன் குடும்பத்துக்கு, பரம்பரைக்கு, பல பத்து தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்த பின் சீவனை விட வேண்டும் என்று நினைக்கின்ற பழுத்த தமிழ் அரசியல்வாதி. எம் ஜீ ஆரால் தமிழகத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் ஆட்சியை அவருக்கு பின்னால் திறம்பட வளர்த்து எடுத்தார்.

அவர் எவ்வளவு ஊழல் செய்து இருப்பினும் தன் மக்களுக்காக செய்த நல்ல விடயங்கள் ஏராளம்.தமிழகத்தில் சமூக நீதியை நிலை நாட்டியவர்களில் முக்கியமானவர். அவரால் பெண்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்பட்டு இருந்த சமூகங்களுக்கு என்று கொண்டு வரப்பட்ட விடயங்கள் ஏராளம். தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்கு தமிழக கல்லூரிகளில் இடம் கொடுத்தவரும் அவர்தான் ( பின்னர் வந்த ஜெயலலிதா அரசு அதை நீக்கி இருந்தது. ஆனால் பின்னாளில் கொடுக்கப்பட்டது). ஏனைய பல மானிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாட்டினை முன்னுக்கு கொண்டு வந்தவர்களில் ஒருவராகவும் அவர் இருக்கின்றார். அத்துடன் ஈழ ஆதரவால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி மட்டுமே.

கருணாநிதி மீது எனக்கிருக்கும் கோபம் 2009 இன் இறுதிப் பகுதியில் தீவிரமாக எம் மக்கள் கொல்லப்படும் போதும் கூட அதையொட்டி ஒரு சிறு அளவிலேனும் தமிழக மக்கள் எழுச்சி கொள்ள கூடாது என்பதில் கவனம் செலுத்தி இருந்தார். திமுக வின் கையில் பல பலமிக்க மீடியாக்கள் இருந்தமையால் தமிழ் மக்களின் அழிவு பற்றி எந்த செய்தியும் பெரியளவில் வரவிடாமல் பார்த்துக் கொண்டார் (ஆனால் அப்பவும் சன் ரீவியை நாம் புறக்கணிக்காது சந்தா கட்டிக் கொண்டு இருந்தோம்- இன்று வரைக்கும்). இரு மனைவிகள் புடை சூழ 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து தன் கட்சிக்கு வரக்கூடிய எள்ளளவு மக்கள் எதிர்ப்பையும் சமாளித்து வெற்றி அடைந்தார். ஆனால் இவை எல்லாம் எம் தோல்விக்கு காரணம் அல்ல.

எம் தோல்விக்கு கருணாநிதி ஒரு காரணம் அல்ல என்பதை பல முறை அழுத்தி சொல்கின்றேன். அவரால் ஒன்றும் செய்து இருக்க முடியாது. அவரால் மட்டுமல்ல தமிழகத்தால் எதுவும் செய்து இருக்க முடியாது. எம் அழிவுக்கு காரணம் முழுக்க முழுக்க நாம் தான். இங்கு நாம் என்பது புலிகள், புலம்பெயர் தமிழர்கள், தாயக தமிழர்கள், ஒட்டுக் குழுக்கள் என அனைவரும் தான். யதார்த்தம் இவ்வாறு இருக்க வெறுமனே கருணாநிதியை வசை பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானதாக இன்றும் இருக்கின்றது. அவர் இன்றும் பல இலட்சக்கணக்கான தமிழக தமிழர்களின் தலைவராக இருக்கின்றார். நாளையும் அவர் தமிழக மக்களின் மனங்களில் அப்படித்தான் இருப்பார். வரலாறு அவரை நல்ல தலைவராகத்தான் நினைவில் கொள்ளும்.

கருணாநிதிக்கு என் அஞ்சலிகள்!
 
5 minutes ago, நிழலி said:
2009 இல் தீவிரமாக எம் மண்ணில் யுத்தம் நடந்து கொண்டு இருந்த வேளை, உள்ளே விட்டு பெடியல் அடிப்பார்கள் என்ற கனவில் இருந்த என்னை போன்ற புலம்பெயர் தமிழர்கள் இனி கட்டாயம் தோல்விதான் என்று காலம் கடந்து உணர்ந்த பிறகு கருணாநிதியை தலையிடச் சொல்லி மடல் மேல் மடல் அனுப்பிக் கொண்டு இருக்கையில், யாழ் இணையத்தின் செயலரங்கத்தினூடாக கடிதம் எழுதிய ஆட்களுக்குள் நானும் ஒருவன்.

ஆனால் அந்த காலப்பகுதியில் கருணாநிதியால் மட்டுமல்ல எந்த தமிழக தலைவர்களாலும் யுத்தம் நிறுத்தப்பட்டு இருக்காது என்பது தான் யதார்த்தம். ஒரு கன அடி தண்ணீரை கூட அதிகமாக பெற்று விட முடியாத அதிகாரங்களை கொண்ட மானிலத்தின் தலைவர்களால் சர்வதேசத்தின் பலம் மிக்க நாடுகளின் ஆதரவுடன் இந்திய மத்திய அரசு இலங்கையில் நடாத்திக் கொண்டு இருந்த புலிகளுக்கு /தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தத்தினை நிறுத்தி இருக்க முடியாது.

16 அ.தி.மு.க எம் பிக்கள் ஆதரவை வாபஸ் பெற்று இருந்தாலும் கூட பகுஜன் சமாஜ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இதர சிறு கட்சிகளின் துணையுடன் காங்கிரஸ் அரசு ஆட்சியை தொடர்ந்து இருக்கும். அதுதான் அன்றைய நிலவரம்.

கருணாநிதி ஒரு தெளிவான அரசியல்வாதி. அவருக்கு தம் பலம் மத்திய அரசினை ஒன்றும் செய்யாது என்பதை உணர்ந்து இருந்தார். ஆட்சி போகாட்டியும் தார்மீக காரணங்களால் அரசிற்கு ஆதரவை வாபஸ் பெற்று வெளியேறுவதற்கு அவர் ஒரு போராளி அல்ல. தியாகி அல்ல, அவர் ஒரு இந்திய அரசியல்வாதி. முக்கியமாக ஊழலின் மூலம் தன் குடும்பத்துக்கு, பரம்பரைக்கு, பல பத்து தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்த பின் சீவனை விட வேண்டும் என்று நினைக்கின்ற பழுத்த தமிழ் அரசியல்வாதி. எம் ஜீ ஆரால் தமிழகத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் ஆட்சியை அவருக்கு பின்னால் திறம்பட வளர்த்து எடுத்தார்.

அவர் எவ்வளவு ஊழல் செய்து இருப்பினும் தன் மக்களுக்காக செய்த நல்ல விடயங்கள் ஏராளம்.தமிழகத்தில் சமூக நீதியை நிலை நாட்டியவர்களில் முக்கியமானவர். அவரால் பெண்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்பட்டு இருந்த சமூகங்களுக்கு என்று கொண்டு வரப்பட்ட விடயங்கள் ஏராளம். தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்கு தமிழக கல்லூரிகளில் இடம் கொடுத்தவரும் அவர்தான் ( பின்னர் வந்த ஜெயலலிதா அரசு அதை நீக்கி இருந்தது. ஆனால் பின்னாளில் கொடுக்கப்பட்டது). ஏனைய பல மானிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாட்டினை முன்னுக்கு கொண்டு வந்தவர்களில் ஒருவராகவும் அவர் இருக்கின்றார். அத்துடன் ஈழ ஆதரவால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி மட்டுமே.

கருணாநிதி மீது எனக்கிருக்கும் கோபம் 2009 இன் இறுதிப் பகுதியில் தீவிரமாக எம் மக்கள் கொல்லப்படும் போதும் கூட அதையொட்டி ஒரு சிறு அளவிலேனும் தமிழக மக்கள் எழுச்சி கொள்ள கூடாது என்பதில் கவனம் செலுத்தி இருந்தார். திமுக வின் கையில் பல பலமிக்க மீடியாக்கள் இருந்தமையால் தமிழ் மக்களின் அழிவு பற்றி எந்த செய்தியும் பெரியளவில் வரவிடாமல் பார்த்துக் கொண்டார் (ஆனால் அப்பவும் சன் ரீவியை நாம் புறக்கணிக்காது சந்தா கட்டிக் கொண்டு இருந்தோம்- இன்று வரைக்கும்). இரு மனைவிகள் புடை சூழ 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து தன் கட்சிக்கு வரக்கூடிய எள்ளளவு மக்கள் எதிர்ப்பையும் சமாளித்து வெற்றி அடைந்தார். ஆனால் இவை எல்லாம் எம் தோல்விக்கு காரணம் அல்ல.

எம் தோல்விக்கு கருணாநிதி ஒரு காரணம் அல்ல என்பதை பல முறை அழுத்தி சொல்கின்றேன். அவரால் ஒன்றும் செய்து இருக்க முடியாது. அவரால் மட்டுமல்ல தமிழகத்தால் எதுவும் செய்து இருக்க முடியாது. எம் அழிவுக்கு காரணம் முழுக்க முழுக்க நாம் தான். இங்கு நாம் என்பது புலிகள், புலம்பெயர் தமிழர்கள், தாயக தமிழர்கள், ஒட்டுக் குழுக்கள் என அனைவரும் தான். யதார்த்தம் இவ்வாறு இருக்க வெறுமனே கருணாநிதியை வசை பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானதாக இன்றும் இருக்கின்றது. அவர் இன்றும் பல இலட்சக்கணக்கான தமிழக தமிழர்களின் தலைவராக இருக்கின்றார். நாளையும் அவர் தமிழக மக்களின் மனங்களில் அப்படித்தான் இருப்பார். வரலாறு அவரை நல்ல தலைவராகத்தான் நினைவில் கொள்ளும்.

கருணாநிதிக்கு என் அஞ்சலிகள்!
 

யதார்த்தமான கருத்து. நன்றி நிழலி. 

  • தொடங்கியவர்

கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கப்படுமா? - காலை 8.30 மணிக்குத் தீர்ப்பு! #RIPKarunanidhi

 

காலை 8.30 மணிக்குத் தீர்ப்பு!  

கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கில் காலை 8.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 8 மணிக்கு தமிழக அரசு மனுத் தாக்கல் செய்த பின்னர், அதனை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறியதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும் கருணாநிதி உடல்

 

 

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் அஞ்சலிக்குப் பின்னர் அதிகாலை 4 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

 

தி.மு.க தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அவசர வழக்காக விசாரித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க காலை 8 மணி வரை அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மரணம் ஏனோ... மனதில் எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவில்லை. அந்தளவுக்கு அவர் எம் மக்களின் மரணங்களோடு விளையாடி விட்டுத்தான் சென்றுள்ளார்.

சாகும் வரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒரு வருத்தம் கூட தெருவிக்க மறுத்து மானுடத்தில் தனக்கென ஒரு மோசமான நிலையை உருவாக்கிவிட்டு போனதாலோ என்னவோ.. இவருக்காக.. இரங்கவோ.. கண்ணீர் விடவோ.. முடியவில்லை. 

இவரின் ஏமாற்று நாடகத்தால்.. தம் இன்னுயிர்களை சிங்கள இனவெறிக்கும்.. ஹிந்திய பாசிச வெறிக்கும் பலி கொடுத்த எம் மக்களின் நினைவுகளோடும்..... பேரன்னை பார்வதியம்மா நினைவுகளோடும்..  ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதாசிரியரும் சிறந்த மேடைப்பேச்சாளரும் ஆகிய கருணாநிதி அவர்கள் மறைந்து விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

கருணாநிதிக்கு மெரினாவில் இடமளிக்க கூடாது.. எஸ்.குருமூர்த்தி சொல்லும் காரணம்!

DkBoXuDUwAA1g2L.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்

91ல் தமிழக ஆட்சியினைக் கைப்பற்றுகிறார் ஜெயலலிதா அம்மையார்.  தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் பல்கலைக்கழக அனுமதிகள் மறுக்கப்படுகின்றன.  அகதிமுகாம்களில் இருந்து ஈழ அகதிகள் சிலர் காணாமல் போகிறார்கள். அவர்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன.  பலர் கைது செய்யப்படுகிறார்கள்.  96ல் கலைஞர் ஆட்சியினைக் கைப்பற்றுகிறார்.  ஈழ அகதிகளுக்கான பல்கலைக்கழக அனுமதியினை வழங்குகிறார். தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 இடங்களை ஈழ அகதிகளுக்கு வழங்குகிறார்.  அதாவது பொறியியல்துறைக்கு 20 இடங்களும், மருத்துவதுறைக்கு 10 இடங்களுமாக கோட்டா முறையில் 30 ஈழ அகதிகளுக்கு இலவசக்கல்வியினை வழங்குகிறார்.  

ஈழத்தில்  பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளைகளை வெற்றிகரமாக செய்து முடித்து திரும்பிய இந்தியப்படைகளினை வரவேற்க செல்லாமல் தவிர்த்தவர் கலைஞர்.  

ஆனால் அவரின் இறுதிக்காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு செய்ய வேண்டியவற்றை புத்திர பாசத்தினால் செய்யாமல் தவிர்த்தார். செய்திருந்தால் இன்னும் உயர்ந்திருப்பார்.  

கலைஞரின் பராசக்தி திரைப்படத்தினை பலமுறை பார்த்து இரசித்திருக்கிறேன். அவரின் நாவல்கள் பலவற்றினை வாசித்திருக்கிறேன். 'வான் கோழி'  பிடித்தநாவல்.

எனக்குப்பிடித்த கலைஞரின் பேட்டிகளில் சில

1) 90களில் ஒரு பத்திரிகையாளர் கலைஞரினைப் பார்த்து ஒருவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிச் சொல்லும் படி கேட்டிருந்தார்.
அவரின் பதில்  - ஜெயலலிதா ஒரு சிறந்தநடிகை.     மேலோட்டமாகப்பார்த்தால் நடிகை ஜெயலலிதாவைப்பற்றிச் சொல்வதாகத் தோன்றும். ஆனால் அரசியல்வாதி ஜெயலலிதாவைப் பற்றி கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

2) இன்னுமொரு பத்திரிகையாளர்   'திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கலைஞரைப்பார்த்து கேட்டிருந்தார்.

கலைஞரின் பதில்  'சுத்தம்' உடன் 'அ' சேர்த்தால் 'அசுத்தம்' என்று வரும்
'நீதி' உடன் 'அ' சேர்த்தால் 'அநீதி' வரும்.
'திமுக'வுடன் 'அ' சேர்த்தால் 'அதிமுக' வரும்.

தமிழக உறவுகளுக்கு ஆழ்ந்த  இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.