Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் முதல் பத்து கோடீஸ்வர அரசியல்வாதிகள் பட்டியலில் கருணா ஐந்தாம் இடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதல் பத்து கோடீஸ்வர அரசியல்வாதிகள் பட்டியலில் கருணா ஐந்தாம் இடம்.

Published on October 4, 2018-1:33 pm   ·   No Comments

இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான “FORBES”சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள்.

நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள்.

நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.

இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள்.

முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள்.

  • முதலாமிடம் – மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)
  • இரண்டாமிடம் – அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)
  • மூன்றாமிடம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)
  • நான்காமிடம் – ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)
  • ஐந்தாமிடம் – கருணா (17 லட்சம் டொலர்)
  • ஆறாமிடம் – ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)
  • ஏழாமிடம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)
  • எட்டாம் இடம் – ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)
  • ஒன்பதாம் இடம் – ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)
  • பத்தாம் இடம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்)

இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் இதில் தகிடுதம் பண்ணும் ஒரு முக்கிய முஸ்லீம் அமைச்சரின் பெயரும், குதிரை பெட் கம்பனி நடாத்தும் சிங்கள அரசியல்வாதியின் பெயரும் இதில் இல்லாமை ஆச்சரியமான விடயம் தான்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் நமது வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் ஏமாளிகள் தான்.

https://thinakkathir.com/?p=69732

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் மிகவும் இலகுவாக பணத்தை இழக்கக்கூடிய நிலைமையில் இருப்பவர் கருணாவே. Easy come Easy go.

கருணாவை, அவர் தனது இனத்துக்கு செய்ததை, புலிகள் காட்டிய பராபட்சத்தினாலேயே என்று இன்றும் கூட இங்கே வக்காலத்து வாங்குவோருக்கு இது சமர்ப்பணம். 

கருணா எதற்காக போராடினார் என்பது மிகவும் தெளிவு. கருணாவின் கைகளில் புலிகளின் அந்த பிரதேச நிதி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரைக்கும், அதே நேரத்தில், இங்கு கருணாவிடற்கு வக்காலத்து வந்குவூர் கூறிய படியே, காயமடைந்த அல்லது அங்கவீனமடைந்த கருணாவின் பிரதேச  போராளிகளை புலிகள் வீட்டிட்ற்கு அனுப்பிய போதும், தேனும் பாலும் புலிகளில் கூடவே ஓடியது கருணாவிற்கு.    

இது கருணா வின் செலவச் செழிப்பால்????? ஏற்றப்பட்ட பொறாமையோ அல்லது எரிச்சலோ அல்ல.

நேர்ந்து விடப்பட்ட ஆட்டிற்கு நன்றாகவே தீனி வழங்கப்படும். நேர்த்தவனுக்கும்  எப்போது ஆடு வெட்டப்படும் தேவை என்பது தெரியாது, ஆட்டீற்கும்  நேர்ந்தது தெரியாது.   

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு  அதிகார பகிர்வு குறித்து இன்னும்   20 ,30 வருடங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kadancha said:

மூன்றாமிடம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)

உந்தாள் சரியான சிம்பிள் எளிமையானவர்.....பெரிசாய் ஆசைப்படாதவர் எண்டெல்லாம் புளுகிச்சினம்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய செய்தி ஆச்சே:grin:

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இது பழைய செய்தி ஆச்சே:grin:

தினகுரலுக்கும் செய்திப் பஞ்சம்.. அது தான் பழைய செய்திகளை போட்டு நிரப்புகின்றனர். 

செய்திகளை யாழில் இணைப்பவர்களும் பிழம்பு உட்பட ஏற்கனவே வந்த செய்தியா என்று பார்ப்பதும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது பழைய செய்தி ஆச்சே:grin:

பழைய செய்தியாக கேள்விப்பட்ட நினைவு உண்டு.

ஆனால், கருணாவை இங்கு நியாயப்படுத்துவோர் பார்வைக்கு.

வேறு ஓர் விடயம், கருணா சிங்களத்தால் ஏமாற்றப்பட்டு விட்டாரா?

1.7 million dollars? தெற்காசிய தரத்திலேயே இல்லலையே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

பழைய செய்தியாக கேள்விப்பட்ட நினைவு உண்டு.

ஆனால், கருணாவை இங்கு நியாயப்படுத்துவோர் பார்வைக்கு.

வேறு ஓர் விடயம், கருணா சிங்களத்தால் ஏமாற்றப்பட்டு விட்டாரா?

1.7 million dollars? தெற்காசிய தரத்திலேயே இல்லலையே.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை பயன்படுத்தி தேவை முடிந்த பின் தூக்கியெறிவது  உலக நாடுகள் வழக்கம் இது இலங்கை மட்டும் என்ன செய்யும் பூசை போடுமா என்ன 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை பயன்படுத்தி தேவை முடிந்த பின் தூக்கியெறிவது  உலக நாடுகள் வழக்கம் இது இலங்கை மட்டும் என்ன செய்யும் பூசை போடுமா என்ன 

இது என்னும் நடைபெறவில்லை.

ஏனெனில், கருணாவிற்கு எப்போதுமே கழுத்தில் கத்தி என்று நினைவு இருந்து கொண்டே இருக்கும்.

சமீபத்தில் கூட, ஏதோ ஓர் புதிய வாகன இறக்குமதியில் வரி காரணமாக கருணை கைது செய்யப்பட்டு, கருவினாவின் இடம் அவருக்கு நினைவூட்டப்பட்டது என்றே வெளித்தோற்றத்தில் கூட தெரிகிறது.  

கருணாவின் சொத்துக்கள் எல்லாமே சட்டத்தின் அடிப்படியில் அவருக்கு உரித்தானது அல்ல. கருணாவின் நிலைமை மிகவும் அந்தரம்.

இந்த பட்டியலில் உள்ள ஏனையோர், எவ்வளவு முறைகேடு இருப்பினும் சட்டத்தின் பாதுகாப்பிலேயே சொத்துக்களை வைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப் பேருக்கு நல்லாய் எரியுது போல...போய் சில் என்று தண்ணீர் எடுத்து குடியுங்கோ ?
 
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

.  

கருணாவின் சொத்துக்கள் எல்லாமே சட்டத்தின் அடிப்படியில் அவருக்கு உரித்தானது அல்ல. கருணாவின் நிலைமை மிகவும் அந்தரம்.

இந்த பட்டியலில் உள்ள ஏனையோர், எவ்வளவு முறைகேடு இருப்பினும் சட்டத்தின் பாதுகாப்பிலேயே சொத்துக்களை வைத்துள்ளனர்.

எப்படி இதை.நீங்கள் அறிந்தீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

எப்படி இதை.நீங்கள் அறிந்தீர்கள்?

கருணாவின் எல்லா சொத்து எனும் போது, அவரது பூர்விக சொத்துக்கள் அல்ல.
 
கருணா எப்போது பணத்திற்காக உழைத்தார்?

சிங்கள அரசு அவரின் 'சேவைக்கு' சன்மானம் உத்தியோக பூர்வமாக கொடுத்ததா?

இவை மிகவும் வெளிப்படையானவை.

இவை எல்லாம் கருணாவின் பூர்விக சொத்துக்கள் என்றால், ஏனெயயோருக்கு சொறி லங்கா GDP ஐ விட கூடியளவு இருக்கவேண்டும்.

கருணாவின் (அது யாராக இருக்கட்டும்), gazette மூலம் பறிக்கலாம். சிங்கள அரசை பொறுத்தவரையில், கருணா பயங்கரவத்தில் இருந்து சட்ட அடிப்படியில் விலக்கப்பட்டுளார் என்பது மாத்திரமே.

முரண்பாடுகள் எப்போது எந்த வடிவத்தில் வரும் என்பதை, அதுவும் இந அடிப்படையில் வேறுபடுத்தி பார்க்கும் ஓர் அரசமைப்பை கொண்ட அரசுடன் , ஓர் போதும் எதிர்வு கூறமுடியாது.

சிங்கள அரசு தற்றபோது பல தேசம் கடந்த (சுப்ரனஷனல்) அமைப்புகளுடன், மிகவும் கட்டுப்பாடுடைய நிதி  ஓழுங்காற்று ஒப்பந்தங்களை சையது வருகிறது. இவை எல்லாம் சிங்கள அரசை, அமெரிக்கா-சீன மேலாண்மை போட்டியில், மேற்கு நிதி ரீதியாக கட்டுப்படுத்துவதத்திற்கு.

சுருக்கமாக, கருணாவின் செல்வதால் ஓர் உதாரணம் காட்ட சிங்கள அரசு பின்னிற்றகுமா?

நிச்சயமாக  எதிர்வாதங்கள் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின்  நிலையை, ஒருவர் வெளிப்படையாக கிடைக்கும் தகவல்களில் இருந்து ஊகம் சொன்னால் ஏன் அது வெகு சிலராய் குறுக்குறப் பண்ணுகிறது. 

On 10/6/2018 at 6:47 PM, நிழலி said:

செய்திகளை யாழில் இணைப்பவர்களும் பிழம்பு உட்பட ஏற்கனவே வந்த செய்தியா என்று பார்ப்பதும் இல்லை.

ஆமா இந்த செய்திய Kadancha தானே இணைத்திருந்தார்

அப்ப Kadancha, பிழம்பு ... எல்லாரும் ஒரே ஆட்தான் என்ற முடிவுக்கு நான் வரலாம் போலிருக்கே. ??

****

Edited by நியானி
சீண்டல் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா இந்த செய்திய Kadancha தானே இணைத்திருந்தார்

அப்ப Kadancha, பிழம்பு ... எல்லாரும் ஒரே ஆட்தான் என்ற முடிவுக்கு நான் வரலாம் போலிருக்கே. ??

****

யாழில் நீங்களும் பல id களில் வந்து போவது எனக்கு தெரியும் என்றால் எவ்வாளவு கோவம் உங்களுக்கு வருமோ அது போல் மற்றவர்களுக்கும் வரும் ஜீவன் பார்த்து இங்கு கருத்து எழுதுபவர்கள் சிங்களவர்கள் அல்ல நமது சகோதரம்கள்தான் .

17 minutes ago, பெருமாள் said:

யாழில் நீங்களும் பல id களில் வந்து போவது எனக்கு தெரியும் என்றால் எவ்வாளவு கோவம் உங்களுக்கு வருமோ அது போல் மற்றவர்களுக்கும் வரும் ஜீவன் பார்த்து இங்கு கருத்து எழுதுபவர்கள் சிங்களவர்கள் அல்ல நமது சகோதரம்கள்தான் .

இந்த செய்தியை இங்கு இணைத்தவர் Kadancha

இங்கு பிழம்பு பற்றி நிழலி குறிப்பிட்டதுக்குத்தான் இந்த பதில் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2018 at 10:24 PM, ரதி said:

கொஞ்சப் பேருக்கு நல்லாய் எரியுது போல...போய் சில் என்று தண்ணீர் எடுத்து குடியுங்கோ ?
 
அக்கோய் எரிய வேண்டியது உங்களுக்கு ...இது ரொம்ப வத்திப்போன செய்தி, அண்ணை பீக்கில இருந்த காலகட்டம் லவட்டியது, பங்குபிரிப்பு என்று ஜலாதியாக இருந்த போது போட்ட செய்தி இது . இதுக்குப்பிறகு வழக்கு போட்டு அண்ணையிண்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து கட்சியை விட்டும் காலிசெய்து அண்ணை இப்ப பியூஸ் போன பல்ப்பு. அண்ணை அடிக்கும் தண்ணிக்கே கையில் இருக்கும் பைசா காணாமலிருக்காம்  என்று நமது பட்சி சொல்லுது.  அண்ணனும் மஹிந்த மாத்தையா மாதிரி குத்தி முறிஞ்சி கொஞ்சம் காசு பார்ப்பம் என்று  பார்க்கிறார் ஒரு பயலும் நம்பமாட்டெண்டுரானுவ  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/6/2018 at 7:47 PM, நிழலி said:

தினகுரலுக்கும் செய்திப் பஞ்சம்.. அது தான் பழைய செய்திகளை போட்டு நிரப்புகின்றனர். 

செய்திகளை யாழில் இணைப்பவர்களும் பிழம்பு உட்பட ஏற்கனவே வந்த செய்தியா என்று பார்ப்பதும் இல்லை.

5 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா இந்த செய்திய Kadancha தானே இணைத்திருந்தார்

அப்ப Kadancha, பிழம்பு ... எல்லாரும் ஒரே ஆட்தான் என்ற முடிவுக்கு நான் வரலாம் போலிருக்கே. ??

****

"பிழம்பு உட்பட" எனும் பதத்திற்கு தங்களுக்கு விளக்கம் போதாது என்பதை இங்கே மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்கோய் எரிய வேண்டியது உங்களுக்கு ...இது ரொம்ப வத்திப்போன செய்தி, அண்ணை பீக்கில இருந்த காலகட்டம் லவட்டியது, பங்குபிரிப்பு என்று ஜலாதியாக இருந்த போது போட்ட செய்தி இது . இதுக்குப்பிறகு வழக்கு போட்டு அண்ணையிண்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து கட்சியை விட்டும் காலிசெய்து அண்ணை இப்ப பியூஸ் போன பல்ப்பு. அண்ணை அடிக்கும் தண்ணிக்கே கையில் இருக்கும் பைசா காணாமலிருக்காம்  என்று நமது பட்சி சொல்லுது.  அண்ணனும் மஹிந்த மாத்தையா மாதிரி குத்தி முறிஞ்சி கொஞ்சம் காசு பார்ப்பம் என்று  பார்க்கிறார் ஒரு பயலும் நம்பமாட்டெண்டுரானுவ  

லிவர்பூலிலும் கிடந்ததை லவட்டி விட்டாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருணாவின் செல்வத்தை பற்றி கதைப்பவர்கள் அவரை ஓர் துரோகியாகவும் சட்டவிரோதமாகவும் இவைகளை சேர்த்ததாகவும் கதைக்கின்றார்கள். 

இதேவேளை புலிகளின் பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்களை தாங்கள் வசப்படுத்தி /ஆட்டையை போட்டு கொண்டு மதஸ்தாபனங்களிலும் / அறக்கட்டளை நிறுவங்களிலும் பெரிய தலைவர்களை போல சமூகத்தில் வலம் வருபவர்களை கண்டு கொள்வதில்லலை. இத்த‌கையா "பெரியவர்களே" தமிழ் தேசியவாதிகள் என தாங்களை கூறிக்கொள்கின்றார்கள். 

ஏன் இந்த இரட்டை வேடம்? போரட்டத்தை காட்டி அசூல் அடித்து, தாங்கள் வாழ்வை வளப்ப‌டுத்திகொண்டவர்கள் உட்பட‌  எல்லோரும் ஏதோ ஒருவகையில் திருடர்கள்தான்.

பிறகேன் திரிகளில் ஒருவரை பற்றி களுவி ஊத்திகொண்டி இருக்கின்றோம்? இது ஆரோக்கியமான திரியா / விவாதமா/ கருத்தாடாலா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, colomban said:

அப்ப, அப்படியான ஒரு பத்து பேரின் விபரங்களை பட்டியல் இடுங்கள், பார்ப்போம்......

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

அப்ப, அப்படியான ஒரு பத்து பேரின் விபரங்களை பட்டியல் இடுங்கள், பார்ப்போம்......

யாரை, அசூல் அடித்து செட்டிலான 10 பேர்களின் விபரங்களையா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

இங்கு கருணாவின் செல்வத்தை பற்றி கதைப்பவர்கள் அவரை ஓர் துரோகியாகவும் சட்டவிரோதமாகவும் இவைகளை சேர்த்ததாகவும் கதைக்கின்றார்கள். 

இதேவேளை புலிகளின் பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்களை தாங்கள் வசப்படுத்தி /ஆட்டையை போட்டு கொண்டு மதஸ்தாபனங்களிலும் / அறக்கட்டளை நிறுவங்களிலும் பெரிய தலைவர்களை போல சமூகத்தில் வலம் வருபவர்களை கண்டு கொள்வதில்லலை. இத்த‌கையா "பெரியவர்களே" தமிழ் தேசியவாதிகள் என தாங்களை கூறிக்கொள்கின்றார்கள். 

ஏன் இந்த இரட்டை வேடம்? போரட்டத்தை காட்டி அசூல் அடித்து, தாங்கள் வாழ்வை வளப்ப‌டுத்திகொண்டவர்கள் உட்பட‌  எல்லோரும் ஏதோ ஒருவகையில் திருடர்கள்தான்.

பிறகேன் திரிகளில் ஒருவரை பற்றி களுவி ஊத்திகொண்டி இருக்கின்றோம்? இது ஆரோக்கியமான திரியா / விவாதமா/ கருத்தாடாலா?

கொழும்பான் நாங்கள் இங்கே இருப்பவர்கள் எங்களுக்கு வெளிநாட்டில் அமுக்கி, அடித்து செட்டிலானவர்கள் பற்றி தெரியாது 
ஆனால் இங்கே அடித்து ,கட்டப்பஞ்சாயத்து, ரௌடிசம்,கூலிக்கொலைகள்   செய்து  ஆட்டையை போட்டவர்களில் கும்மான் முதன்மையானவர் அது மட்டும் தெரியும். அதுதான் அவரை கழுவி ஊத்திறோம்.   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

யாரை, அசூல் அடித்து செட்டிலான 10 பேர்களின் விபரங்களையா?

அசூல் அடித்தவர்களை எழுதப்போனால் 10 இலட்சம் பேர்களை எழுத வேண்டும். முடியுமா உங்களால்???

8 hours ago, colomban said:

இங்கு கருணாவின் செல்வத்தை பற்றி கதைப்பவர்கள் அவரை ஓர் துரோகியாகவும் சட்டவிரோதமாகவும் இவைகளை சேர்த்ததாகவும் கதைக்கின்றார்கள். 

இதேவேளை புலிகளின் பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்களை தாங்கள் வசப்படுத்தி /ஆட்டையை போட்டு கொண்டு மதஸ்தாபனங்களிலும் / அறக்கட்டளை நிறுவங்களிலும் பெரிய தலைவர்களை போல சமூகத்தில் வலம் வருபவர்களை கண்டு கொள்வதில்லலை. இத்த‌கையா "பெரியவர்களே" தமிழ் தேசியவாதிகள் என தாங்களை கூறிக்கொள்கின்றார்கள். 

ஏன் இந்த இரட்டை வேடம்? போரட்டத்தை காட்டி அசூல் அடித்து, தாங்கள் வாழ்வை வளப்ப‌டுத்திகொண்டவர்கள் உட்பட‌  எல்லோரும் ஏதோ ஒருவகையில் திருடர்கள்தான்.

பிறகேன் திரிகளில் ஒருவரை பற்றி களுவி ஊத்திகொண்டி இருக்கின்றோம்? இது ஆரோக்கியமான திரியா / விவாதமா/ கருத்தாடாலா?

இயக்கமே அசூல் அடித்தவர்களை பற்றி கவலைப்படவில்லை நீங்கள் ஏன் ஊறையிடுகிறீர்கள்? ஏன் நீங்களும் அவ்வாறானவரா?

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஐந்தாவது இடத்தில் இருந்தவர் இப்போது எத்தனையாவது இடத்தில் நிற்கிறார்?

யாருக்காவது தெரியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.