Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Eppothum Thamizhan said:

அதுபோலத்தான் உங்கள் கருத்துக்களையும் யார் மீதும் திணிக்க முடியாது.
அதெப்படி நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மை மற்றவர்கள் சொல்வதெல்லாம் கற்பனை அல்லது கான்ஸபிரசி. முதலில் நான்தான் அதிமேதாவி சுமந்திரன்தான் எங்களை மீட்டெடுக்க வந்த கலியுக கடவுள் என்ற புராணத்தை விடுத்து தாயகத்தின் பொருளாதாரத்தை கட்ட எழுப்ப யாழ் கள உறுப்பினர்களாகிய  நாம் என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்ற மருதுவின் யோசனைக்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்யப்போகிறோம் அல்லது அதற்கான திட்ட வரைபுகள் ஏதேனும் இருந்தால் அது பற்றி விவாதிப்போம். கைவிடப்பட்ட மக்களுக்காவது எதாவது நல்லது செய்ய யோசிப்போமா?? 

எ.த, நல்ல ஐடியா, நீங்கள் செய்யலாம்! நான் ஏற்கனவே இங்கே எனது நகரில் இருக்கும் அமைப்பு மூலம் செய்து வருகிறேன், யாழில் அதிகம் இதில் பங்களிக்கும் நோக்கம் இல்லை. ஆனால் நான் சும்மைக் கடவுளாகவோ அதிமேதாவியாகவோ காட்டுகிறேனென்ற தோற்றம் உங்களுடையது! எனக்கு யாரும் கடவுள் இல்லை! எதன் மீதும் reverence இல்லை! சுமந்திரன் அடுத்த தேர்தலில் காணாமல் போய் ஒரு நரேந்திரன் வந்து நடை முறைச்சாத்தியமான தீர்வு பற்றி நகர்ந்தால் அவருக்கும் என் ஆதரவு இருக்கும்! ஆதரவு அணுகுமுறைக்கேயொழிய தனி நபருக்கல்ல!

  • Replies 108
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2019 at 5:52 AM, Jude said:

ரகுநாதன்,  எங்களைப் பற்றிய உங்கள் விளக்கத்துக்கு நன்றி. இதுவே உண்மையும் ஆகும்.

இன்னொரு வேலுப்பிள்ளை பிரபாகரன் வராவிட்டாலும், விக்னேஷவரனோ, சுமேந்திரனோ ஒரு நல்ல தீர்வை பெற்றுத் தருவதில் வெற்றி பெறத்தான் போகிறார்கள். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். இங்கே நான் நாம் என்று சொல்வது எம் போன்றவர்களையே. ஜஸ்டின் வேறு விதமாக நினைத்தால் அது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும்.

முதலில்  அவர்கள்  இருவரும்  ஒரே  கோட்டிலும்  இல்லை

அவர்களுக்குள்  ஒற்றுமையுமில்லை

இந்த  நிலையில்  தமிழர்  தீர்வு  இவர்கள் இருவரது  கைகளில்??????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே புடுங்குப்பட்டுக்கிருக்க ஒரு நாள் வடை போச்சே கதை தான் நடக்கும்.சம் சும் அவர்களால் ஒன்றம் நடக்காது என்று நினைத்தால்( அது தான் எனது கருத்தும்).எமது வாக்குனளால் துக்கி எறியிது தானே.

சகோதர/அரசியல் படுகொலைகள் எம்மை அழித்த ஒரு மிகப்பெரிய காரணி! புலிகள் பிழை விடவில்லை? பிழைகள் சுட்டிக்காட்டப்பட கூடாது? அன்று விட்ட பிழைகளில் இருந்து பாடங்களை படிக்காதே? என்று யாரும் கூறவில்லை! புலிகளினால் சில அரசியல் படுகொலைகள் நிகழ்ந்தனதான், ஆனால் நடந்தேறிய எல்லா பிழைகள்/படுகொலைகளையும், புலிகளின் மேல் போட்டு விட்டு, இன்று பலர் பசுத்தோல் போர்த்தபடி ...!  "நாயுக்கு எங்கே அடித்தாலும் ஓர் காலைத்தானாம் தூக்கி ஓடுமாம்" என்பதனை போல், அன்று கொலைகளைகளையே கொள்கைகளாக்கிய ஆயுதார மாற்றுக்கருத்து மாமணிகள் முதல் இன்று கூட்டமைப்பு வரை "புலி வாந்தி" எடுப்பதை நிறுத்தவில்லை.  

அன்று தமது சுய அரசியல் தேவைகளுக்காக "தமிழ் இளைஞர் பேரவை" மூலம் இளைஞர்களை ஆயுத கலாச்சாரத்திற்கு இட்டுச்சென்ற பெருமை தமிழரசுக்கட்சி/தமிழர் விடுதலை கூட்டமைப்பு தளபதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றோரையே சாரும்.  ஆயுத போராட்டத்திற்கு முற்பட்ட காலத்திலேயே அமிர்தலிங்கத்தின் அரசியலை எதிர்த்த பத்திரிகையாளர்கள்/விமர்சகர்கள் என்று பலர் அமிர்தலிங்கத்தின் ஒரு மகன் பகீரதன் தலைமையில் இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயுத போராட்டம் தொடங்கிய பின்னும் அமிர்தலிங்கத்தின் இளைய மகன் (காண்டீபன் என நினைக்கிறேன்) அமிர்தலிங்கத்தின் ஊடான இந்திய உதவியுடன் ஆயுத குழுவொன்றை (ரி என் ஏ என நினைக்கிறேன்) ஆரம்பித்து, இந்தியா கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள் நடுத்தெருவில் விடப்பட்டது வரை நடைபெற்றது.  புலிகளுக்கு என்று கூறி மகனின் கும்பலுக்கு பணம் சேகரித்த சம்பவங்களும் நிகழ்ந்தன. ஈழ அரசியலில் மாற்று அரசியல் உள்ளவர்களை "துரோகிகள்" எனும் அடைமொழி இட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துக்களை இளைஞர் மத்தியில் விதைத்து, துரையப்பாவின் கொலையுடன், சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்கள் எமது ஜனநாயக அரசியல்வாதிகளே! 

இன்னொருபுறம், இன்று சுமந்திரனினும், செம்புது தூக்கிகளினதும் அரசியலுக்கு களம் அமைத்து கொடுப்பது, ஈபிடியின் டக்லஸ் தேவானந்தாவே. டக்லஸினால் வழங்கப்படும் சலுகைகளினால் காலத்தை ஓட்டும் கம்பவருதி மூலம், இவர்களுக்கான மேடைகள் கிடைக்கின்றன. இன்று சுமந்திரனினதும், டக்லஸினினதும் கொள்கைகளில் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஒன்று ரணிலின் அல்லக்கை, மற்றது மகிந்தவின் அல்லக்கை. அல்லக்கைகளாக இருந்தும் ஏதாவது இவர்கள் மூலம் எம்மக்களுக்கு கிடைத்தனவா??  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nellaiyan said:

நான் மீண்டும் மீண்டும் அமிர் கொலைக்கும் சகோதரப் படுகொலைகளுக்கும் கேட்கும் காரணம் இது தான்: அமிர் தூண்டினார், புலிகள் போட்டார்கள், இந்தியா தூன்டியது புலிகள் போட்டார்கள்! இதைச் சொன்ன மறு வளத்திலேயே திரும்பிச் சொல்வார்கள்: உறுதியான உன்னதமான  தலைமை புலிகளுக்கு இருந்ததென! இது தலைமையா? அல்லது பப்பெற்றா? மற்றவன் தூண்டினால் உங்களுக்கு  சொந்த மூளை இல்லையா? இதனால் தான் சும் மீது நம்பிக்கை, யார் திட்டினாலும் கணக்கெடுப்பதில்லை, காரியத்தில் கண்! சப்பை கட்டுகளை விட்டு விட்டு மேலே சுவையர் சொன்ன மாதிரி தேர்தலில் பதில் கொடுங்கள்! எலக்சன் தான் வருகிறதே?

35 minutes ago, Justin said:

ஜஸ்ரின்,

 ... இனி சும்மின் மீது நீரே துப்ப விடுகிறேன். சும்மின் சொந்த இணையத்தளம் கீழே ...  சொன்னால், சொல்லில் உறுதி வேண்டும்! ... பின் துண்டை போட்டு சத்தியம் பண்ணி தாண்டல் நடக்குது,  பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ!

http://sumanthiran.com/

அதில் இன்னொன்று ... இன்னொருவரை சும் கூறுகிறார் ... துரோகியாம்!!!!!!!!!! பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ!

http://sumanthiran.com/2018/10/01/விக்­னேஸ்­வ­ர­னின்-துரோ­/

அடுத்தது ... நானும் வடமராட்சியான் தான் .. சுமந்திரனின்  50000 மேலான வாக்கு வெற்றியை அங்குள்ளவர்களிம் கேட்டால் திகைக்கிறார்கள்! பல கதைகள் சொல்கிறார்கள்! ... சும்மிற்கு முன்னை தேர்தல்களென்ன இனிவரும் தேர்தல்களிலும், வாக்குகள் வீழ்ந்தால் என்ன? வீழாவிட்டால் என்ன? ... சும்மின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

இத்தோடு நிறுத்துவம் ... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியே புடுங்குப்பட்டுக்கிருக்க ஒரு நாள் வடை போச்சே கதை தான் நடக்கும்.சம் சும் அவர்களால் ஒன்றம் நடக்காது என்று நினைத்தால்( அது தான் எனது கருத்தும்).எமது வாக்குனளால் துக்கி எறியிது தானே.

சம்சும் கொம்பனியின் குறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றது. அல்லது அவர்களின் ஒளிவுமறைவான அரசியல் நடவடிக்கைகளை மக்கள் தெரிந்து கொள்ள ஆதங்கப்படுகின்றார்கள். 
சம்பந்தன் முதுபெரும் அரசியல்வாதி என்பதற்காக மற்றவர்கள் வாயைப்பொத்திக்கொண்டு இருக்கவேண்டிய அவசியமில்லை.

எல்லாம்    நான் உயிருக்கு உயிராய் ஆதரித்த அமிர்தலிங்கம் எண்ட நாதாரியால் வந்தவினை...tw_angry:

On 12/29/2018 at 8:38 PM, பிழம்பு said:

தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் "ஜனநாயக அரசியல் கட்சிகள்" என்ற பெயரில் தமிழின படுகொலைகாரர்களுக்கு உதவிய கும்பல்களுக்கும், கடத்தல் கப்பம் கொலை கொள்ளைகளில் ஈடுபட்ட கும்பல்களுக்கும், காமுகர்களாக வலம் வந்த உதிரிக் கும்பல்களுக்கும், பல சமூக விரோதக் கும்பல்களுக்கும், கைக்கூலிகளாக இயங்கிய தமிழின விரோத கும்பல்களுக்கும், மதவெறிக் கும்பல்கள் நடத்திய போலி ஊடகங்களுக்கும், இப்படியான பல சமூகவிரோதக் கும்பல்களுக்கும் விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர் என்பது உண்மை தான்.

இந்த உண்மைகளை போர்குற்றவாளிகளுடன் ஒட்டிஉறவாடி தமிழின விரோத அரசியல் நடத்தும் சுமந்திரனிடம் எதிர்பார்க்க முடியாது.

கடந்த 10 வருட நிகழ்வுகளை அலசினால், சுமந்திரன் தமிழர் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டதே தமிழினத்தை அழிப்பதற்கும், திட்டமிட்ட தமிழின அழிப்பில் நேரடியாக/மறைமுகமாக ஈடுபடும் சிங்கள-பௌத்த கொலைகாரர்களுக்கு தடையாக உள்ளவற்றை அகற்ற உதவுவதற்கும் என்பது தெளிவாகும்.

காலத்துக்கு காலம் எட்டப்பர்கள் வெவ்வேறு வடிவங்களில் நுழைக்கப்டுகின்றனர். அதில் இவரும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nellaiyan said:

ஜஸ்ரின்,

 ... இனி சும்மின் மீது நீரே துப்ப விடுகிறேன். சும்மின் சொந்த இணையத்தளம் கீழே ...  சொன்னால், சொல்லில் உறுதி வேண்டும்! ... பின் துண்டை போட்டு சத்தியம் பண்ணி தாண்டல் நடக்குது,  பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ!

http://sumanthiran.com/

அதில் இன்னொன்று ... இன்னொருவரை சும் கூறுகிறார் ... துரோகியாம்!!!!!!!!!! பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ!

http://sumanthiran.com/2018/10/01/விக்­னேஸ்­வ­ர­னின்-துரோ­/

அடுத்தது ... நானும் வடமராட்சியான் தான் .. சுமந்திரனின்  50000 மேலான வாக்கு வெற்றியை அங்குள்ளவர்களிம் கேட்டால் திகைக்கிறார்கள்! பல கதைகள் சொல்கிறார்கள்! ... சும்மிற்கு முன்னை தேர்தல்களென்ன இனிவரும் தேர்தல்களிலும், வாக்குகள் வீழ்ந்தால் என்ன? வீழாவிட்டால் என்ன? ... சும்மின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

இத்தோடு நிறுத்துவம் ... 

சாமிகள் செய்தால் குற்றமில்லை ....
எல்லாம் காணாத மாதிரி கடந்து போய்விடவேண்டும்.
இப்படி காவி திரிய கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

முதலில்  அவர்கள்  இருவரும்  ஒரே  கோட்டிலும்  இல்லை

அவர்களுக்குள்  ஒற்றுமையுமில்லை

இந்த  நிலையில்  தமிழர்  தீர்வு  இவர்கள் இருவரது  கைகளில்??????

தமிழர் தீர்வு அவர்களின் கையில் இல்லை. அது அமெரிக்க - இந்திய - சீன நலன்களின் கையில் இருக்கிறது.

அமெரிக்க - இந்திய - சீன அரசுகளுக்கு  தேவையான புவியியல் அரசியலில் ஸ்ரீ லங்கா அரசு செய்யும் அரச பொருளாதார கட்டமைப்பு மாற்றங்களில், இரு துருவங்களாக விக்னேஸ்வரனும் சுமேந்திரனும் இருந்து எமது மக்களுக்கு தேவையான சுயாட்சியை இடம்பெற செய்வார்கள். 

ஒற்றுமை இருந்தால் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லாத நிலையில் தவறுகள் இடம் பெறும் சாத்தியம் அதிகம். பிரிந்து இருக்கும் இந்த அறிவாளிகள் ஒருவரை ஒருவர் அவதானித்து தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு வழி ஏற்படும். அவர்கள் இப்படி பிரிந்து இருப்பதே சிறப்பானது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2019 at 10:47 AM, Maruthankerny said:

நீஇப்போ தாயக தமிழர் பொருளாதார ரீதியாக விருட்ஷமாக எழவேண்டும் 
இதுக்கான அனைத்த்து சாத்தியமும் எம் கண் முன்னே கிடக்கிறது. இலங்கை பொருளாதாரத்தில் 
குறைந்த பட்ஷம் 25% கட்டுப்படுத்த கூடிய சக்தி புலம்பெயர் தமிழரகளிடம் இருக்கிறது.
இப்போ எமக்கு தேவை நேர்மையுடன் தமிழர் நலன் சார்ந்து இருக்க கூடிய ஒரு தலைவர்.கனடாவில் மட்டும்.
2-3 லட்ஷம் மக்கள் இருக்கிறார்கள் ஒவ்வருவரும் மாதம் வெறும் $10 கொடுத்தால் $25 லட்ஷம். இதை இலங்கை பணத்தில் இப்போது மாத்தினால்  457,350,688.00 ரூபா. இவளவு பணத்திலே போதும் போதும் என்று ஒரு மாதம் யுத்த பாதிப்புக்கு உள்ளன மக்களை பார்த்துக்கொள்ள முடியும்.
இனி புலம்பெயர் மக்கள் நண்கொடையாக கொடுக்க தேவை இல்லை 
ஒவ்வருவரும் $500 முதலீடு செய்கிறோம் என்று வைத்து பாருங்கள் குறைந்த பட்ஷம் 10% சாத்தியமான வருமானம் இப்போ இலங்கை பொருளாதார நிலைமையில் இருக்கிறது.
இப்போதைய அரசியல் சூழலில் இலங்கை சந்தையை 25% என்றாலும் கைப்பற்றுவதே தமிழர்களின் பெரு வெற்றி. இதுக்கான சாத்தியம் என்னவோ 1980 களில் கோவில் திருவிழாவில் கச்சான் வாங்குவதுபோன்று 
கனிந்து கிடக்கிறது. 

இந்த பொருளாதார சக்திதான் பிராந்திய அரசியல் பேச முடியும் 
பேசினால் அவர்கள் கேட்ப்பார்கள் ... கேட்கவேண்டிய ஒரு சூழ்நிலை உண்டு 
ஒற்றுமையின்பால் நம்பிக்கையின்பால் கட்டியமைக்க எமக்கு ஒரு தலைமை மட்டுமே வேண்டும்.
பொருளாதார வியூகங்களை விளங்க கூடிய மக்களுக்கு விளக்க கூடிய வெறும் 25 ஈழத்தமிழர்கள் போதும்.

இந்த இணையத்தில் உள்ள அமைப்பு இவ்வாறான முயற்சியில் அமைதியாக முன்னோக்கி செல்வது போல தெரிகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?

http://www.nidi-lanka.org/

அமெரிக்காவில் இலாப நோக்கற்ற முதலீட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கனேடிய, ஐரோப்பிய, அமெரிக்க முதலீட்டாளர்கள் தமிழ் பகுதிகளில் முதலீடு செய்து அவர்கள் இலாபம் பெறும் அதே வேளை அங்கே ஏற்றுமதிக்கான தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவி குறுகிய காலத்தில் விஸ்தரித்து பொருளாதாரத்தை வளர்க்க முடியும். விவசாயம், கடற்தொழில் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களை நம்பிய உற்பத்தி பொருளாதாரம் அந்த பகுதியை செல்வந்த பகுதியாக்க உகந்த பொருளாதார அணுகுமுறை இல்லை. இதற்கு காரணம் அந்த சிறிய பிரதேசத்தில் உள்ள இயற்கை வளங்கள் அபிவிருத்திக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்க காணாது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Edited by Jude

1 hour ago, Jude said:

இந்த இணையத்தில் உள்ள அமைப்பு இவ்வாறான முயற்சியில் அமைதியாக முன்னோக்கி செல்வது போல தெரிகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?

http://www.nidi-lanka.org/

இந்த அமைப்பின் முகாமைத்துவ குழுவில் எந்தவொரு தமிழர்களும் இல்லை. நடவடிக்கை குழுவில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களால் அறியப்படாதவர்கள்.

தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சொறிலங்கா அரசின் வழிகாட்டலில் இயங்கும் எந்தவொரு அமைப்பும் தமிழர்களின் வளத்தை கொள்ளையடித்து தமிழினத்தை அழிப்பதையே உள்ளார்ந்த குறிக்கோளாக கொண்டிருக்கும்.

அண்மையில் கூட, 2009 இன் பின்னர் சர்வதேசத்தால் வட-கிழக்கு மீள் கட்டுமானத்துக்கு சொறிலங்கா அரசின் ஊடாக வழங்கப்பட்ட நிதியில் 60% க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு.

சுமந்திரன் போன்ற பேர்வழிகளின் துணையுடன் வட மாகாணசபை நிதியத்தை சட்டவிரோதமாக அனுமதிக்காது இழுத்தடித்த சொறிலங்கா அரசு, தமிழர்கள் இல்லாத இவ்வாறான ஒரு அமைப்பை அனுமதித்தது,  அதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் நிதியை கொள்ளையடித்து வடமாகாண அபிவிருத்தி என்ற பெயரில் பெருமளவு நிதியை கொள்ளையடிக்கும் கபட நோக்கமுடைய முயற்சி என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

எனவே ஏமாந்த பேர்வழிகளும், சொறிலங்கா அரசினால் சுயலாபங்களைப் பெறுபவர்களுக்கும் இவ்வாறான நிதியத்தை ஆதரிக்க முன்வரலாம்.

முகாமைத்துவதில் 70% ஆனவர்கள் தமிழரால் நன்கு அறியப்பட்ட / ஏறுக்கொள்ளத்தக்க தமிழர்களாக இல்லாத எந்த அமைப்பையும் தமிழர் ஏற்றுக்கொள்ளவது தற்கொலைக்கு  சமனானது.

இது போன்ற அமைப்புக்கள் இலாப நோக்கம் இல்லை என்றாலும், கிடைக்கும் நிதியில் 50% முதல் 65% வரை நிர்வாக செலவு, ஒவ்வொருவருக்கும் 4 - 5 இலட்சம் மாத சம்பளம், போக்குவரத்து, உணவு, அதிசொகுசு விடுதிகளில் தங்குதல், தொலைத்தொடர்பு செலவு  என்ற பெயரில் கொள்ளையடிப்பது இலங்கையில் சர்வ சாதாரணம். எனவே வழங்கும் நிதியில் சிறுபகுதியே மக்களை போய்ச் சேரும்.

1 hour ago, Jude said:

இந்த இணையத்தில் உள்ள அமைப்பு இவ்வாறான முயற்சியில் அமைதியாக முன்னோக்கி செல்வது போல தெரிகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?

http://www.nidi-lanka.org/

இவர்கள் பகற் கொள்ளையர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nellaiyan said:

ஜஸ்ரின்,

 ... இனி சும்மின் மீது நீரே துப்ப விடுகிறேன். சும்மின் சொந்த இணையத்தளம் கீழே ...  சொன்னால், சொல்லில் உறுதி வேண்டும்! ... பின் துண்டை போட்டு சத்தியம் பண்ணி தாண்டல் நடக்குது,  பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ!

http://sumanthiran.com/

அதில் இன்னொன்று ... இன்னொருவரை சும் கூறுகிறார் ... துரோகியாம்!!!!!!!!!! பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ!

http://sumanthiran.com/2018/10/01/விக்­னேஸ்­வ­ர­னின்-துரோ­/

அடுத்தது ... நானும் வடமராட்சியான் தான் .. சுமந்திரனின்  50000 மேலான வாக்கு வெற்றியை அங்குள்ளவர்களிம் கேட்டால் திகைக்கிறார்கள்! பல கதைகள் சொல்கிறார்கள்! ... சும்மிற்கு முன்னை தேர்தல்களென்ன இனிவரும் தேர்தல்களிலும், வாக்குகள் வீழ்ந்தால் என்ன? வீழாவிட்டால் என்ன? ... சும்மின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

இத்தோடு நிறுத்துவம் ... 

ஓம், நெல்லையன்! கடந்த முறையும் இங்கே யாழில் உட்பட தலை கீழாக நின்று திட்டினார்கள், இணைக்கப் பட்ட அவதூறான செய்திகள் எல்லாம் ஆதாரமில்லாதவையாக வலம் வந்தன! தேர்தலுக்கு முதல் நாள் கனடாவில் இருந்து கரி (Gary) இணைத்த சில சுமந்திரன் பேச்சு வீடியோக்கள் எல்லா fake news ஐயும் பொய்யாக்கின! அவதூறுச் செய்திகளை இணைத்தவர்கள் திரும்பி வந்து மன்னிப்புக் கோரும் நீதியுணர்வு கூட இல்லாமல் மறைந்து போனார்கள்!

பிறகு சும் விருப்பு வாக்கில் இரண்டாவதோ மூன்றாவதோ வந்து வென்றார்! மறைந்தவர்கள் திரும்பி வந்து கள்ள வாக்குகளில் வென்றார் என்றார்கள்! ஆதாரம் கேட்டால், வேறு திரிகளில் தாம் எழுதிய கருத்தையே ஆதாரமாகக் காட்டுகிற அளவுக்கு "கெட்டிக் காரர்களாக" இருந்தார்கள்! இப்ப நீங்களும் வந்து "நான் வடா, எனக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சும் எப்படி வாக்கு வென்றார்?" இந்த முறையும் அப்படியே வெல்வார்!" என்று தேர்தலையும் ட்ரம்ப் ஸ்டைலில் கொன்ஸ்பிரசி தியரியாக மாற்ற முயற்சிக்கிறீர்கள்! இது புதிதில்லை! இது யதார்த்தமான மிதவாத அரசியல் எங்களுக்குக் கசக்கும் மட்டும் எங்கள் தேசிக்காய் கூட்டத்திடம் இருக்கப் போகும் குணம். இதன் விளைவு? ஒன்றுமேயில்லை! வாக்காளர்களுக்கு விரும்பினால் அவர்கள் தேர்வார்கள், இல்லையானால் தூக்கி விட்டு வேறு யாரையோ கொண்டு வருவார்கள்! உங்கள் கொன்ஸ்பிரசிக் கதைகள் பெரும்பாலாக இருக்கிற நிதானிகளின் முடிவில் ஒரு மாற்றத்தையும் உருவாக்காது!

நானும் இத்துடன் முடிக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2019 at 6:55 PM, Justin said:

எ.த, நல்ல ஐடியா, நீங்கள் செய்யலாம்! நான் ஏற்கனவே இங்கே எனது நகரில் இருக்கும் அமைப்பு மூலம் செய்து வருகிறேன், யாழில் அதிகம் இதில் பங்களிக்கும் நோக்கம் இல்லை. 

நாங்களும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் அது சில  குடும்பங்களுக்குத்தான் உதவுகிறது.சற்று பெரிய அளவில் திட்டமிட்டு செய்ய முடியாதா??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

நாங்களும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் அது சில  குடும்பங்களுக்குத்தான் உதவுகிறது.சற்று பெரிய அளவில் திட்டமிட்டு செய்ய முடியாதா??

எனக்கு அங்கே இருந்து உதவி கேட்பவர்கள் யார் உண்மையாகக் கேட்கிறார்கள், யார் தேவைகள் இன்றிக் கேட்கிறார்கள் என்று கண்டு பிடிப்பது கடினம்! ஒரு தடவை தேவையில்லாதவருக்கு என் கடின உழைப்பு போய்ச் சேர்ந்து விட்டது! அடிப்படையில் கஞ்சனான நான் எனக்கே என் உழைப்பைச் செலவு செய்வதில்லை. அதனால் ஒரு ஸ்தாபிக்கப் பட்ட மானில அளவிலான அமைப்பின் மூலம், அவர்கள் கேட்கும் போது மட்டும் உதவுவது! இங்கே இதில் அனுபவம் உள்ளோர் இருக்கிறார்கள், அவர்களுடன் இணையுங்கள்! வாழ்த்துகள்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Justin said:

எனக்கு அங்கே இருந்து உதவி கேட்பவர்கள் யார் உண்மையாகக் கேட்கிறார்கள், யார் தேவைகள் இன்றிக் கேட்கிறார்கள் என்று கண்டு பிடிப்பது கடினம்! ஒரு தடவை தேவையில்லாதவருக்கு என் கடின உழைப்பு போய்ச் சேர்ந்து விட்டது! அடிப்படையில் கஞ்சனான நான் எனக்கே என் உழைப்பைச் செலவு செய்வதில்லை. அதனால் ஒரு ஸ்தாபிக்கப் பட்ட மானில அளவிலான அமைப்பின் மூலம், அவர்கள் கேட்கும் போது மட்டும் உதவுவது! இங்கே இதில் அனுபவம் உள்ளோர் இருக்கிறார்கள், அவர்களுடன் இணையுங்கள்! வாழ்த்துகள்! 

நீங்கள் விரும்பினால்... எனக்கும் அந்த விலாசங்களை தரலாம். இரகசியம் காத்து உதவிசெய்ய விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் விரும்பினால்... எனக்கும் அந்த விலாசங்களை தரலாம். இரகசியம் காத்து உதவிசெய்ய விரும்புகின்றேன்.

மன்னிக்கவும்! நான் விரும்பவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

நாங்களும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் அது சில  குடும்பங்களுக்குத்தான் உதவுகிறது.சற்று பெரிய அளவில் திட்டமிட்டு செய்ய முடியாதா??

5 hours ago, குமாரசாமி said:

நீங்கள் விரும்பினால்... எனக்கும் அந்த விலாசங்களை தரலாம். இரகசியம் காத்து உதவிசெய்ய விரும்புகின்றேன்.

http://www.nowwow.org/

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2019 at 12:09 AM, Jude said:

இந்த இணையத்தில் உள்ள அமைப்பு இவ்வாறான முயற்சியில் அமைதியாக முன்னோக்கி செல்வது போல தெரிகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?

http://www.nidi-lanka.org/

அமெரிக்காவில் இலாப நோக்கற்ற முதலீட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கனேடிய, ஐரோப்பிய, அமெரிக்க முதலீட்டாளர்கள் தமிழ் பகுதிகளில் முதலீடு செய்து அவர்கள் இலாபம் பெறும் அதே வேளை அங்கே ஏற்றுமதிக்கான தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவி குறுகிய காலத்தில் விஸ்தரித்து பொருளாதாரத்தை வளர்க்க முடியும். விவசாயம், கடற்தொழில் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களை நம்பிய உற்பத்தி பொருளாதாரம் அந்த பகுதியை செல்வந்த பகுதியாக்க உகந்த பொருளாதார அணுகுமுறை இல்லை. இதற்கு காரணம் அந்த சிறிய பிரதேசத்தில் உள்ள இயற்கை வளங்கள் அபிவிருத்திக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்க காணாது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இப்போதான் இதை பற்றி தெரிந்து கொள்கிறேன் 
இவர்களின் செயல்பாடு பற்றி தாயகத்தில் விசாரித்துதான் அறிய வேண்டும்.
முதலீடு என்பதில் இரண்டு வகை உண்டு 
ஒன்று உள்ளூர் வளங்களை சுரண்டுவது 
இரண்டு உள்ளூர் உற்பத்தியை பெருக்குவது 

எனது கருத்து எமது லாபம் சார்ந்தது இல்லை 
ஆனாலும் இலங்கை சந்தையை நோக்கி நகரும்போது 
வரும் வருமானம் என்பதை 10% வரையாவது பெற்றுக்கொள்ளலாம். 

உள்ளூர் வாசிகளை முதலாளிகள் ஆக்க வேண்டும் 
தாயகத்தில் உள்ள காணிகள் அனைத்தும் தமிழ் இனத்தை தவிர்த்து 
வேறு எங்கும் போவதை (வறுமை காரணமாக ) தடுக்க வேண்டும் 
வறண்ட பூமிகளை விவசாய தோட்டமாக மாற்ற வேண்டும். 

இங்கு தொடர்ந்து எழுதி ... ஓர் இணைப்பு முகப்புத்தகத்தில் பார்த்தேன்! தோழர் பாலன் ... ஆயுத போராட்டம் தொடங்கிய ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் ...

•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு
மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா?

2.1.1982 தோழர் சுந்தரம் கொல்லப்பட்ட நாள்.

பட்டப்பகலில் மக்கள் மத்தியில் நடந்த முதலாவது சகோதரப் படுகொலை நாள்.

"புதியபாதை" சுந்தரம் யாழ் வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால் சித்திரா அச்சகம் அருகில் கொல்லப்பட்ட நாள்.

முகநூலில் சிலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர். சுந்தரம் நினைவு கூரப்படவேண்டிய ஒரு போராளிதான்.

ஆனால் புலிகளால் சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனரேயொழிய யாரும் சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கை குறிப்பிட வில்லை.

இது சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கு மறைக்கப்படுகிறதா அல்லது மறக்கப்படுகிறதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.

புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் வேறு இயக்கத்தில் சேர்ந்து இயங்கக் கூடாது. அவ்வாறு இயங்கினால் அது மரண தண்டனை குற்றமாகும் என்ற புலிகளின் அமைப்பு விதிக்கு அமைய சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அன்று புலிகள் கூறினார்கள்.

புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பலர் இருக்கும்போது சுந்தரம் மட்டும்; எதற்காக குறி வைக்கப்பட்டார்? அதுவும் பட்டப்பகலில் மக்கள் மத்தியில் வைத்து ஏன் கொலை செய்யப்பட்டார்?

இந்த சகோதர படுகொலையை ஏன் தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் உடனே தலையிட்டு தடுக்க முனையவில்லை?

உண்மை என்னவெனில் இந்த சுந்தரம் படுகொலையின் சூத்திரதாரியே அந்த தலைவர் அமிர்தலிங்கம்தான்

துரையப்பா, கனகரட்ணம் போன்றவர்களை துரோகி என்று முத்திரை குத்தி இளைஞர்களால் சுட வைத்தவரும் அமிர்தலிங்கமே.

அதுபோல் "புதியபாதை" பத்திரிகையில் தன்னை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதிய சுந்தரத்தையும் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமே.

இந்த உண்மை அன்று போராளிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தது.

சுந்தரத்தின் படுகொலையை கண்டித்து நாகராஜா(வாத்தி) பத்மநாபா, விசுவானந்ததேவன், "டெலா" தேவன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிரசுரத்திலும் இந்த உண்மை கூறப்பட்டீருக்கிறது.

இன்று சம்பந்தர் அய்யா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய இளைஞர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள்.

ஆனால் துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்களே என்ற உண்மையை வரலாற்றில் இனி ஒருபோதும் மறைக்க முடியாது.

https://www.facebook.com/balan.tholar?__tn__=%2CdC-R-R&eid=ARAHmfAZMovefd7pcizTR_ki9PMoGnvVyIG_pkILLlY0rXdYeOetws9cNLD-sm3db7RslSDw2ZwhMH-b&hc_ref=ARTKz1N7lYGKBXw0ipnNy2mXwNE6Iv51v54HuumNOE-1nTDn8_MarAssPm8DRL5eJXE&fref=nf

  • கருத்துக்கள உறவுகள்

சரி நெல்லையன், இப்போது முகநூல் எனப்படும் நம்பிக்கையான நூலில் எழுதியுள்ள படிக்கு, துரோகி என்று கையில் நகம் கூட இல்லாத ஒருவர் சொன்னால், அதைக் கேட்டு ஒரு ஆயுததாரி துரோகி என்று அழைக்கப்  பட்டவரைக் கொன்று போட்டால், துரோகி என்று கூப்பிட்டவருக்கு கொலையில் பாரிய பங்கு! கொலை செய்தவன் தூண்டப் பட்ட பலியாடு! அப்படியா? சரி , இப்ப சுமந்திரனுக்கு எதிராக எத்தனை சேறடிப்பு நீங்கள் உட்பட இங்கே பலரிடம் இருந்து? பல சேறடிப்புகளுக்கு அடிப்படையான செய்தியே பொய்ச்செய்தி! நாளை சுமைந்திரனுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் உட்பட இந்தப் பொய்ச் செய்திகாவிகள் பெரும் பொறுப்பை ஏற்பீர்களா? நடை முறை எல்லாருக்கும் ஒன்றல்லவா? ஆமா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள்!  

15 hours ago, Nellaiyan said:

அதுபோல் "புதியபாதை" பத்திரிகையில் தன்னை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதிய சுந்தரத்தையும் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமே.

அப்பாடா 

தலைவருக்கு சொந்தமா சிந்திக்கவே தெரியாது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

இதுக்கு மேல நான் என்னத்தை சொல்ல / நன்றி வணக்கம் 

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தார்களா என்ற கேள்வியை கேட்டால் ஆம் அது உண்மை  என்பதே பதில். உண்மையில் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்திலேயே நம்பிக்கை வைத்திருந்தார்கள். அரசியல் தொடர்பான ஆர்வம் அவர்களிடம் குறைவாகவே இருந்தது. மற்றயவர்கள் அரசியல் செய்ய அவர்கள் தடையாக இருந்தார்கள் என்பதும் உண்மைதான். அதுவே அவர்களது பலவீனமாகவும் இருந்த‍து. ஆயுதப்போராட்டத்தின் மூலம் அவர்கள் செய்த அளப்பரிய சாதனைகளின் பயன்றறதாக்குவதற்கு அவர்களின் இந்த பலவீனம் தான் காரணம் என்பது எனது கருத்து. 2002 ம் ஆண்டு இராணுரீதியில் மிக பலமாக பேரம் பேசும் வலுவுடன் இருந்த புலிகள் அரசியலை ராஜதந்திரத்துடன் மேற்கொண்டிருந்தால் தீர்வுக்காக  தமிழ்மக்கள் இப்போதய  சுயநல அரசியல்வாதிகளை நம்பும் நிலை இருந்திருக்காது. ஆகவே இதற்காக பொறுப்பு விடுதலை புலிகளையே சாரும். 

ஆனால் விடுதலைபுலிகள் அரசியலை செய்ய தடையாக இருக்காவிட்டாலும் நமது தமிழ் கனவான் அரசியல்வாதிகள் சிறந்த அரசியலை முன்னெடுத்திருக்க மாட்டார்கள் என்பதற்கு ஆதாரம் விடுதலைபுலிகள் உருவாக முன்பே அவர்கள் கீழ்தரமான சுயநல அரசியலை தான் செய்தார்கள் என்ற வரலாற்று பாடம். அவர்கள்  மக்கள் அரசியலை செய்திருந்தால் ஆயுதப்போராட்டமே உருவாகி இருக்காது. ஆயுதப்போராட்டம் முடிந்து 10 வருடமாகி விட்ட போதிலும்  இப்போது கூட அவர்களால்  சிறந்த ராஜதந்திர அரசியலை செய்ய முடியாமல் இருப்பதை காண்கின்றோம்.  தமிழ் மக்களிடம் நன்கு படித்த சட்ட அறிஞர்களை கொண்ட பல அரசியல் தலைமைகள் நாடு சுதந்திரம் அடைய முன்பே இருந்தார்கள். அரசியலை மேற்கொள்ள போதிய கால அவகாசமும் இருந்த‍து. அதை பயன்படுத்தாமல் இருந்து  காலத்தை விரயம் செய்து ஆயுத போராட்டதில் மக்களை தள்ளி விட்டு இப்போது விடுதலை புலிகள் மீது மட்டும் பழி போடுவது சரியானதல்ல. அதே போல் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு மற்றயவர்கள் மீது மட்டும் பழியை போடுவதும் சரியானதல்ல. 

இது அனைவரினதும் ஒட்டு மொத்த தவறு . அதற்குகுள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸும் அடக்கம் , விடுதலை புலிகளும் அடக்கம். இதில் ஒருவரை ஒருவர் மீது சேறு வாரி இறைப்பது சிறுபிள்ளைத்தனம். 

Edited by tulpen

1 hour ago, tulpen said:

இது அனைவரினதும் ஒட்டு மொத்த தவறு . அதற்குகுள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸும் அடக்கம் , விடுதலை புலிகளும் அடக்கம். இதில் ஒருவரை ஒருவர் மீது சேறு வாரி இறைப்பது சிறுபிள்ளைத்தனம். 

விடுதலைப் புலிகள் தங்கள் குறிக்கோளை தெளிவாக சொல்லி, அதன்படி நடக்க முற்படடார்கள். அவர்கள் தங்களை அரசியல் கட்சி என்று அறிவிக்கவில்லை. அவர்களின் பிரதான குறிக்கோள் விடுதலைப் போராட்டம். பிற்காலத்தில் உருவான அவர்களது அரசியல் துறை அவர்களுக்கு ஆயுத போராட்டத்துக்கு வலு சேர்க்கத் தான். சில்லறை அரசியலுக்கு இல்லை.  எனவே இதற்குள் விடுதலைப்புலிகளை ஒப்பிடுவது சிறுபிள்ளைத் தானம் என்டு நான் நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.