Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்

e62364c2f7f171a55bd567409bd0caa3?s=26&d=By ஈழமதி On Feb 10, 2019
 
Share

17882-2-9d20d639128e598820430c741125ad73வடதமிழீழம், யாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிக்கிய இளைஞர் மக்களினால் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக கொடிகாமம் வரணி பகுதியில் இடம்பெற்ற களவு மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் இளைஞர்களிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில் தண்டனை கொடுக்கப்பட்டதுடன், இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

  • Replies 58
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயல்பாடுகள்தான் எமது இடத்தின் களவு கொள்ளையை குறைக்கமுடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு  திருடர்கள் என்றால்... 40 - 50 வயதுக்கு மேல் இருப்பார்கள்.
இவரைப் பார்க்க இளைஞராக உள்ளார். படிக்கிற காலத்தில், இந்த அவமானம் தேவையா...

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இளவாலையில் நடந்த ஒரு பாலியல்வன்புணர்வு தொடர்பான குற்றத்தில் ஏழாலை வடக்கைச் செர்ந்த ஒருத்தனும் அடக்கம் அவனுக்கு ஏழாலை வடக்கைச் சேர்ந்த அனைவரதும் ஆதரவு இப்போதும் இருக்கு. யாராவது உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் ஏழாலை வடக்குப்பகுதியில் சம்பந்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஒருபோதும் சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க கூடாது. இது பிழையான செயல். இதென்ன முற்காலம்? எது அது?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, colomban said:

மக்கள் ஒருபோதும் சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க கூடாது. இது பிழையான செயல். இதென்ன முற்காலம்? எது அது?

அப்ப கள்ளனை பிடிச்சு அவனிடம் இலஞ்சம் வாங்கிவிட்டு.. ஓடிடா என்று துரத்திவிடும்.. சொறீலங்கா பொலிஸில் ஒப்படைப்பது தான் சட்டமாகுமோ..?!

சொறீலங்காவில் எவ்வளவு.. சட்டம் மதிக்கப்படுகிறது.. அமுல்படுத்தப்படுகிறது...?!

50 minutes ago, colomban said:

மக்கள் ஒருபோதும் சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க கூடாது. இது பிழையான செயல். இதென்ன முற்காலம்? எது அது?

முற்காலம் என்பது மக்கள் civilization ஆக முற்பட்டதான காலம். குழுக்களாக ஆளை ஆள் கட்டி வைத்து துன்புறுத்தும் காலம்.

போராட்ட தொடங்கிய ஆரம்பத்தில் சிவில் நிர்வாகம் அற்றுப் போனதால் போராளிகள்  இவ்வாறான தண்டனைகளை கொடுத்ததை மக்கள் தற்காலிகமாக வரவேற்றார்கள். புலிகள் நீதிமன்றங்களை உருவாக்கிய பின்னர அந்த நடைமுறை அற்றுப் போனது. இப்போது அதைச் செய்வது சரியல்ல.  உண்மையில. காட்டுமிராண்டித்தனம். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனை வழங்குவது என்பது பழிதீர்ப்பது அல்ல குற்றவாளியை திருந்தி நடக்க செய்வதாக அமையவேண்டும். சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது உண்மை. இதுபோன்ற தான்தோன்றித்தனமான தண்டனைகள் வழங்குவதன்மூலம் திருடன் திருந்துவானாக இருந்தால் மிக்க சந்தோசம். ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழினத்தின்அடுத்த தலைமுறைக்கு நல்ல அடித்தளத்தை இட்டுச் செல்லாது. இந்த கள்வன் இந்த தண்டனைக்கு பின் இன்னும் உற்சாகமாகவும் தந்திரமாகவும் எப்படி செயற்படலாம் என்று எண்ணுவதற்கும் அல்லது தனது இனத்தை நிரந்தரமாக வெறுப்பதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. இராணுவம் பொலிஸ் சிங்கள அரசும் இவனைப்போல சூடுபட்ட பூனைகளை உதவிக்கு வைத்துக்கொண்டு இவர்களின் சேவைகளை நாசகார வேலைகளுக்கு பயன்படுத்த திட்டமிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தக்காட்டு மிராண்டிதனமான ஒரு காரியத்தை செய்துவிட்டு அதை சரியென்றும் நியாயப்படுத்துகின்றார்கள்.

இவர்களுக்கும் தென்னிந்திய பஞ்சாயத்து கூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Elugnajiru said:

அண்மையில் இளவாலையில் நடந்த ஒரு பாலியல்வன்புணர்வு தொடர்பான குற்றத்தில் ஏழாலை வடக்கைச் செர்ந்த ஒருத்தனும் அடக்கம் அவனுக்கு ஏழாலை வடக்கைச் சேர்ந்த அனைவரதும் ஆதரவு இப்போதும் இருக்கு. யாராவது உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் ஏழாலை வடக்குப்பகுதியில் சம்பந்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

ஏற்கனவே ஏழாலைக்காரருக்கு கிணறு காவியள் எண்டொரு பட்டமும் இருக்கு. 🤣

யாழ்களத்திலை ஏழாலைக்காரர் ஆரும் இருந்தால் மன்னிக்கவும்.நான் சும்மா பகிடிக்கு சொன்னனான்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

அண்மையில் இளவாலையில் நடந்த ஒரு பாலியல்வன்புணர்வு தொடர்பான குற்றத்தில் ஏழாலை வடக்கைச் செர்ந்த ஒருத்தனும் அடக்கம் அவனுக்கு ஏழாலை வடக்கைச் சேர்ந்த அனைவரதும் ஆதரவு இப்போதும் இருக்கு. யாராவது உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் ஏழாலை வடக்குப்பகுதியில் சம்பந்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

அய்யயோ... ஏழாலைகுள தான் நம்ம குறிப்பு உலாவுது... 😨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, Nathamuni said:

அய்யயோ... ஏழாலைகுள தான் நம்ம குறிப்பு உலாவுது... 😨

tw_anguished: tw_anguished: tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

மக்கள் ஒருபோதும் சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க கூடாது. இது பிழையான செயல். இதென்ன முற்காலம்? எது அது?

சட்டம் தன் கடமையைச் செய்தால் மக்கள் ஏன் சட்டத்தில் கை வைக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

முற்காலம் என்பது மக்கள் civilization ஆக முற்பட்டதான காலம். குழுக்களாக ஆளை ஆள் கட்டி வைத்து துன்புறுத்தும் காலம்.

போராட்ட தொடங்கிய ஆரம்பத்தில் சிவில் நிர்வாகம் அற்றுப் போனதால் போராளிகள்  இவ்வாறான தண்டனைகளை கொடுத்ததை மக்கள் தற்காலிகமாக வரவேற்றார்கள். புலிகள் நீதிமன்றங்களை உருவாக்கிய பின்னர அந்த நடைமுறை அற்றுப் போனது. இப்போது அதைச் செய்வது சரியல்ல.  உண்மையில. காட்டுமிராண்டித்தனம். 

அரசும் காவல்துறையும் தங்கள் கடமைகளை சரிவர செய்தால் பொதுமக்கள் ஏன் சட்டத்தை தம்வசம் ஆக்கப்போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vanangaamudi said:

. இந்த கள்வன் இந்த தண்டனைக்கு பின் இன்னும் உற்சாகமாகவும் தந்திரமாகவும் எப்படி செயற்படலாம் என்று எண்ணுவதற்கும் அல்லது தனது இனத்தை நிரந்தரமாக வெறுப்பதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.

ஒளி நாடாவில் தடவி கொடுப்பது போல்  அடி போட்டால் நீங்கள் சொல்வது போல் திரும்பவும் களவுக்கு வரலாம்.  

காட்டுமிராண்டித்தனமே ஒழிய இது வேறில்லை

லண்டனில் கடை ஒன்றில் காசை திருடியவரை திட்டி வீடியோ எடுத்த செயலையே தவறென்றவர்கள், அவரை பிடித்து பொலிசில் கொடுத்து இருக்கலாம் என்றவர்கள் இங்கு இதை நியாயப்படுத்த முனைவது அல்லது அமைதியாக இருப்பது ஏன்?

 சமூகமே தவறு செய்யும் போது அதால் பாதிக்கப்பட்டவர் வணங்காமுடிஎழுதியிருப்பதை போல, பிடிபட்டவர் மேலும் மேலும் சமூக விரோத செயலை செய்யத்தான் இது தூண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இப்படியான கள்வர்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது களவெடுக்க போன இடத்தில்  சிறுமி வன்புணர்வு களவெடுக்க சென்ற இடத்தில் கொலை எல்லாம் அங்குதான் அங்கு போலிஸ் பெயருக்கு த்தான் இந்த நாடுகளில் அப்படியா கள்வன் என்று பிடித்துகொடுத்தால் ஆதாரம் கிடைக்கும்வரை கொக்கு போல் நின்று அமத்துவார்கள். அங்கு காசு குடுத்தால் எல்லாம் சரி அல்லது களவில் பங்கு குடுத்தால் சரி மறுபடியும் களவுக்கு அடுத்த ஏரியாவுக்கு செல்லலாம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

காட்டுமிராண்டித்தனமே ஒழிய இது வேறில்லை

லண்டனில் கடை ஒன்றில் காசை திருடியவரை திட்டி வீடியோ எடுத்த செயலையே தவறென்றவர்கள், அவரை பிடித்து பொலிசில் கொடுத்து இருக்கலாம் என்றவர்கள் இங்கு இதை நியாயப்படுத்த முனைவது அல்லது அமைதியாக இருப்பது ஏன்?

 சமூகமே தவறு செய்யும் போது அதால் பாதிக்கப்பட்டவர் வணங்காமுடிஎழுதியிருப்பதை போல, பிடிபட்டவர் மேலும் மேலும் சமூக விரோத செயலை செய்யத்தான் இது தூண்டும்.

இலண்டணில சரியான பொலீஸ் சிஸ்டம் இருக்குது.

அங்கே நேர் எதிர்.... 

இங்க பொலீஸ்காரர்கள் கையை நீட்டினால் துளைந்தார்கள். அங்கே காசுக்கும், சாத்துக்கும் கையை நீட்டுவார்கள்.

காசுக்கு நீட்டினால், ஆள் மீண்டும் பிஸ்னஸில் இருப்பார் என்பதால், நாலு சாத்துபோட்டு, ஊருக்கு முகத்தையும் காட்டியாச்சு.

ஆகவே இரண்டையும் ஒப்பிடமுடியாது.

1 hour ago, பெருமாள் said:

அங்கு இப்படியான கள்வர்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது களவெடுக்க போன இடத்தில்  சிறுமி வன்புணர்வு களவெடுக்க சென்ற இடத்தில் கொலை எல்லாம் அங்குதான் அங்கு போலிஸ் பெயருக்கு த்தான் இந்த நாடுகளில் அப்படியா கள்வன் என்று பிடித்துகொடுத்தால் ஆதாரம் கிடைக்கும்வரை கொக்கு போல் நின்று அமத்துவார்கள். அங்கு காசு குடுத்தால் எல்லாம் சரி அல்லது களவில் பங்கு குடுத்தால் சரி மறுபடியும் களவுக்கு அடுத்த ஏரியாவுக்கு செல்லலாம் .

29 minutes ago, Nathamuni said:

இலண்டணில சரியான பொலீஸ் சிஸ்டம் இருக்குது.

அங்கே நேர் எதிர்.... 

இங்க பொலீஸ்காரர்கள் கையை நீட்டினால் துளைந்தார்கள். அங்கே காசுக்கும், சாத்துக்கும் கையை நீட்டுவார்கள்.

காசுக்கு நீட்டினால், ஆள் மீண்டும் பிஸ்னஸில் இருப்பார் என்பதால், நாலு சாத்துபோட்டு, ஊருக்கு முகத்தையும் காட்டியாச்சு.

ஆகவே இரண்டையும் ஒப்பிடமுடியாது.

ஆகவே அங்கே பொலிஸ் தவறு செய்யுது, காசு வாங்குது (கொடுப்பதும் தமிழ் மக்கள் தான்), எனவே மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறி தாமே திடீர் நீதிவான்களாக ஆகி விசாரணை எதுவும் இன்றி தண்டனை கொடுக்கும் தவறை செய்யலாம்.

தவறுக்கு தவறு சரியாகிப் போச்சு! அப்படித்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

ஆகவே அங்கே பொலிஸ் தவறு செய்யுது, காசு வாங்குது (கொடுப்பதும் தமிழ் மக்கள் தான்), எனவே மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறி தாமே திடீர் நீதிவான்களாக ஆகி விசாரணை எதுவும் இன்றி தண்டனை கொடுக்கும் தவறை செய்யலாம்.

தவறுக்கு தவறு சரியாகிப் போச்சு! அப்படித்தானே.

இது தவறான புரிதல் என்றே நினைக்கிறேன்.

பொலிஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்.. மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சுயமாக நடவடிக்கை எடுப்பார்கள்.. என்பதை குற்றவாளிகளுக்கும்... அவர்களை ஊக்குவிக்கும் சிங்களப் பொலிஸாருக்கும் ஏவல்படைகளுக்குமான செய்தியாகவே இது இருக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளியை துன்புறுத்துவதும் உடலைக் காயப்படுத்தி வேதனைக்குள்ளாக்குவதும் ஒரு மனிதாபிமானமுள்ள நாகரிக வளர்ச்சியடைந்த ஒரு இனத்தின் தண்டனை மார்க்கமாக இருக்கமுடியாது. ஒரு மனிதன் குற்றவாளியாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குற்றவாளியின்  மனோநிலையும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அதற்கு உகந்தால் போல் தண்டனை வழங்கப்பட்டால் குற்றவாளி திருந்தி இயல்புவாழ்கைக்கு திரும்புவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

எத்தனையோ மனிதர்கள் வேறொருவரால் தெரிந்தோ தெரியாமலோ அநியாயமாக ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டு விட்டோம் என்று அங்கலாய்ப்பதை நாம் கண்டிருப்போம் கேட்டிருப்போம். நாட்டில் சட்டம் செவ்வனே செயற்படவில்லை என்ற கவலை ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று என்றாலும் அதை தனிமனிதர் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது. இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டில் மிஞ்சப்போவது  எதிர்காலத்தில் எவராலும் சரிசெய்ய முடியாத இனக்குழப்பம் களேபரம் காழ்ப்புணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாங்கள் என்னதான் குத்தி முறிந்து நியாயம் பேசினாலும் அங்குள்ள மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் களவு எடுத்தால் இனி அடிதான் என்பதில் மாற்றம் இருக்காது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலிபான்கள் என்று சொல்லிக்கொண்டு செய்தால் நல்லது!

ஊருக்குப் போய்வந்த நண்பர் சொன்னது. அங்கு பொலிஸும் இராணுவமும்தான் ஒன்றில் களவெடுக்கப் போவது அல்லது களவு எடுப்பவர்களுடன் கூட்டாகச் சேர்ந்துகொள்வது. இந்த இலட்சணத்தில் நீதி கிடைக்கும் என்றும் சொல்லமுடியாது!

6 minutes ago, கிருபன் said:

ஊருக்குப் போய்வந்த நண்பர் சொன்னது. அங்கு பொலிஸும் இராணுவமும்தான் ஒன்றில் களவெடுக்கப் போவது அல்லது களவு எடுப்பவர்களுடன் கூட்டாகச் சேர்ந்துகொள்வது. இந்த இலட்சணத்தில் நீதி கிடைக்கும் என்றும் சொல்லமுடியாது! 

அது தான் உண்மை!

சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் இராணுவ கும்பல்கள் ஒருபக்கம் சட்டவிரோத புத்தர் சிலைகளை நிறுவிக்கொண்டு மறுபுறத்தில் சகல சமூக விரோத செயல்களிலும் வழிகாட்டிகளாகவும் பங்காளிகளாகவும்  இருந்து கொண்டு புத்தர் சிலை என்பது காட்டுமிராண்டிகளின் சின்னம் என்பதை நிலைநிறுத்தி வருகின்றனர். இவர்களின் காட்டுமிராண்டித் தனத்தைக் கட்டுப்படுத்த தமிழர் பகுதியில் உரிய கட்டமைப்புகள் தற்போது இல்லை.

இந்தப் பின்னணியில் வேறுவழியின்றி தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சமூகவிரோத கும்பல்களை கட்டுப்படுத்தும், காமுகர் பிடியிலிருந்து தப்பும் முயற்சியில், நீதியை நிலைநிறுத்தும் முயற்சியில், தமது பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் மக்கள் தாங்களே ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.