Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத் திட்டம்

Featured Replies

வணக்கம்

போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது.

யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன்  நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக் தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

இன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும்.

https://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பில் ஒரு விளக்கம் கேட்டிருந்தேன் நிழலி. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

அறிவித்தல் விளம்பரங்கள் என்று தான் சொல்லப் பட்டிருந்தது.

ஏனெனில், அறிவித்தல் விளம்பரம் என்பது பிறந்தநாள், மரண அறிவித்தல் அல்லது திருமண அறிவித்தல் குறித்த விளம்பரம் மட்டுமே என்று பொருள் படுவதால் தான் கேட்டேன். (உங்கள் உறவினர் அல்லது நண்பரின் இழப்பினை அல்லது அந்தியேட்டி, நினைவு தின, திவசம் கண்ணீர் அஞ்சலி போன்றவற்றை)

அறிவித்தல், விளம்பரம் (கமாவினைக் கவனியுங்கள்) என எடுக்கலாமா என்று கேட்டிருந்தேன். அதாவது, இவை தவிர்ந்த ஏனைய சேவைகள் குறித்த விளம்பரங்கள் போட முடியுமா என்பது தான் என் கேள்வி.

இது குறித்து தெளிவு படுத்தினால் நல்லது.
 
Edited by Nathamuni

நன்றி நாதம்.

அறிவித்தல்கள் (பிறந்த நாள், கலியாண நாள், மரண அறிவித்தல், நினைவஞ்சலி போன்ற) மட்டுமல்ல, விளம்பரங்களும், சேவைகளை ஒட்டிய விளம்பரங்களும் தாராளமாக போட முடியும்.

பிரமிட் போன்ற போலி வியாபாரங்கள், சாமியார்கள் / சாத்திரகாரர்கள் ஆகியோர் போன்ற விளம்பரங்களை தவிர்ந்த ஏனையவற்றையும் தாரளமாக போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்ச்சி

வாழ்த்துக்கள்

ஏற்கனவே  சில  அனுபவங்களின்படி.....

1) அமைப்புக்கள் அல்லது  நிறுவனங்கள்  விளம்பரத்துக்கான பணத்துக்கு  பற்றுச்சீட்டை எதிர்பார்ப்பார்கள்

2) எந்த எந்த  நாடுகளில்  யாழ்   இணையத்தை எத்தனை  ஆயிரம் வாசகர்கள்  பார்வையிடுகிறார்கள்  என்ற விபரத்தை வெளியில் கொண்டு  செல்லணும். அதுவே யாழில்  விளம்பரங்களை  செய்ய  அந்த  அந்த  நாட்டு  நிறுவனங்களை  தூண்டும்)

மற்றவர்களும்  எழுதட்டும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. மோகன் 20  வருடங்கள் காலந்தாழ்த்தி ஆரம்பித்துள்ளார். Better than never!

  வீட்டுக்கடன், வங்கிக்கடன், காப்புறுதி போன்ற விளம்பரங்கள் அனுமதிக்கப்படுமா?

விளம்பரங்கள், அறிவித்தல்கள் தமிழரிடம் மட்டும் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றதா அல்லது கூகிள் AdSense மூலமும் விளம்பரங்கள் காட்டப்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...உந்த விளம்பர விடயத்தில் என்னால் உதவி செய்ய முடியாது..மன்னிக்கவும்...எனக்கு வியாபரம் செய்பவர்களைத் தெரியாது ...தவிர "யாழ் " என்று ஒரு இணையம் இருக்கு அதில் போய் விளம்பரம் செய்யுங்கோ என்று சொந்தக்காரர்,தெரிந்தவர்களுக்கு சொன்னால் அவர்கள் யாழை வாசிக்க ரதியால் சுயமாய் எழுத  முடியாது🤔

மாதம்,மாதம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா?...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா?...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்...யாரும் யாழை ஆட்டையை 🤣போட நினைக்க மாட்டார்கள்.

உங்கள் கருத்தை சொல்லுங்கள்  ☺️

  • தொடங்கியவர்
1 hour ago, விசுகு said:

1) அமைப்புக்கள் அல்லது  நிறுவனங்கள்  விளம்பரத்துக்கான பணத்துக்கு  பற்றுச்சீட்டை எதிர்பார்ப்பார்கள்

அதற்கான ஒழுங்குகளைச் செய்ய முடியும்.

1 hour ago, விசுகு said:

2) எந்த எந்த  நாடுகளில்  யாழ்   இணையத்தை எத்தனை  ஆயிரம் வாசகர்கள்  பார்வையிடுகிறார்கள்  என்ற விபரத்தை வெளியில் கொண்டு  செல்லணும். அதுவே யாழில்  விளம்பரங்களை  செய்ய  அந்த  அந்த  நாட்டு  நிறுவனங்களை  தூண்டும்)

விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

வணக்கம் மோகன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...உந்த விளம்பர விடயத்தில் என்னால் உதவி செய்ய முடியாது..மன்னிக்கவும்...எனக்கு வியாபரம் செய்பவர்களைத் தெரியாது ...தவிர "யாழ் " என்று ஒரு இணையம் இருக்கு அதில் போய் விளம்பரம் செய்யுங்கோ என்று சொந்தக்காரர்,தெரிந்தவர்களுக்கு சொன்னால் அவர்கள் யாழை வாசிக்க ரதியால் சுயமாய் எழுத  முடியாது🤔

மாதம்,மாதம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா?...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா?...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்...யாரும் யாழை ஆட்டையை 🤣போட நினைக்க மாட்டார்கள்.

உங்கள் கருத்தை சொல்லுங்கள்  ☺️

மாம்பழத்துக்குள்ள, கொய்யாப்பழத்தினை கலக்காதீர்கள்.

இது விளம்பர பகுதி. நோக்கம் சிறந்தது.

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், நேரடியாக அந்த தொண்டு நிறுவனத்துக்கு ( TNRA அமைப்பு) அளிக்கலாமே.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
1 hour ago, கிருபன் said:

நல்ல முயற்சி. மோகன் 20  வருடங்கள் காலந்தாழ்த்தி ஆரம்பித்துள்ளார். Better than never!

  வீட்டுக்கடன், வங்கிக்கடன், காப்புறுதி போன்ற விளம்பரங்கள் அனுமதிக்கப்படுமா?

விளம்பரங்கள், அறிவித்தல்கள் தமிழரிடம் மட்டும் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றதா அல்லது கூகிள் AdSense மூலமும் விளம்பரங்கள் காட்டப்படுமா?

ஆம் கிருபன். யாழ் இணையத்தின் ஊடாக தாயகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அடிக்கடி யோசித்தாலும் பல்வேறு காரணங்களால் விடுபட்டுப் போய்விட்டது. கள உறுப்பினர்களும் சேவையடிப்படையில் உள்ளூர் தொடர்பாளராக இருக்கும்பட்சத்தில் இலகுவாக இத்திட்டத்தினைக் கொண்டு செல்ல முடியும்.

விளம்பரங்கள் மேலே நிழலி குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கினால் அவைகளை இணைப்பதில் பிரச்சனையிருக்காது. விளம்பரங்கள் தொடர்பாக சில விளக்கங்கள் எழுதப்படத்தான் வேண்டும்.

விளம்பரங்கள் தமிழரை நோக்கியிருக்கும்பட்சத்தில் விளம்பர விதிகளுக்கு உட்பட்டால் யாரும் இணைக்க முடியும். 

சில காரணங்களால் google AdSense யாழில் இணைக்கப்பட மாட்டது.

17 minutes ago, ரதி said:

மாதம்,மாதம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா?...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா?...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்..

12 minutes ago, Nathamuni said:

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், நேரடியாக அந்த தொண்டு நிறுவனத்துக்கு ( TNRA அமைப்பு) அளிக்கலாமே.

நாதமுனி குறிப்பிட்ட பதிலே எனது பதிலுமாகும். தாயகத்திற்கு உதவி செய்ய என்று நிறைய அமைப்புகள் உள்ளன. கொடுக்க விரும்புபவர்கள் நேரடியாக அவ்வமைப்புக்களுக்கு பங்களிப்புச் செய்து தாயகத்திற்கு உதவலாம்.

இங்கு நாம் ஒரு சேவையினை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினையே தாயக மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம். 

நல்ல முயற்சி. என்னால் இயன்றவரை இத்தகவலைப் பகிர்கிறேன். நேரம் வரும் போது எனது பங்களிப்பையும் செய்வேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மோகன் அண்ணைக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2019 at 5:48 AM, மோகன் said:

வணக்கம்

போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது.

யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன்  நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக் தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

இன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும்.

https://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

மோகன் அண்ணா,
இந்த திட்டம் குறித்த சிறிய விளக்கங்களுடன் ஒரு சின்ன அறிவித்தல் கோரும் படிவத்தை தயார் செய்யலாமா?
அப்படி எதுவும் இருந்தால் அதனை காட்டி, அறிவித்து வியாபார நண்பர்களிடம், வர்த்தக மக்களிடம் தங்கு தடை இன்றி அணுகி விளம்பரங்கள் பெறலாம்.
நிச்சயம் என்னாலான முயற்சிகளை செய்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமானதைத் தெரிவு செய்க*

  • மரண அறிவித்தல்
  • கண்ணீர் அஞ்சலி
  • நினைவஞ்சலி
  • வாழ்த்து
  • பிறந்தநாள் வாழ்த்து

இத்தனை தானே வருகிறது. விளம்பரங்கள் என்றால் எதை அழுத்துவது ???

  • தொடங்கியவர்
33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பொருத்தமானதைத் தெரிவு செய்க*

  • மரண அறிவித்தல்
  • கண்ணீர் அஞ்சலி
  • நினைவஞ்சலி
  • வாழ்த்து
  • பிறந்தநாள் வாழ்த்து

இத்தனை தானே வருகிறது. விளம்பரங்கள் என்றால் எதை அழுத்துவது ???

விளம்பரம் என்பது மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏதாவது தவற விடப்பட்டு இருந்தால் அறியத் தாருங்கள்.

4 hours ago, Sasi_varnam said:

மோகன் அண்ணா,
இந்த திட்டம் குறித்த சிறிய விளக்கங்களுடன் ஒரு சின்ன அறிவித்தல் கோரும் படிவத்தை தயார் செய்யலாமா?
அப்படி எதுவும் இருந்தால் அதனை காட்டி, அறிவித்து வியாபார நண்பர்களிடம், வர்த்தக மக்களிடம் தங்கு தடை இன்றி அணுகி விளம்பரங்கள் பெறலாம்.
நிச்சயம் என்னாலான முயற்சிகளை செய்வேன்.

இம்மாத இறுதிப் பகுதியிலேயே இது சாத்தியமாகும்.

எனினும் முற்கூட்டி தர முயற்சிக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இருபத்தி ஐந்தாவது, ஐம்பதாவது திருமண நாள் என்பதையும் இணைத்தால் என்ன மோகன். இப்ப வரவர அவற்றைத்தானே அதிகம் கொண்டாடுகின்றனர்.

யாழ் இணையத்தின் ஆண்டு நிறைவுக்கு கூட விரும்பியவர்கள் பணம் செலுத்தி வாழ்த்துவது போல் இருந்தால் அதுவும் கணிசமான தொகையாகிவிடுமே.

நல்லதொரு முயற்ச்சி.  இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்!

பொது அறிவித்தல்களையும் இணைக்கலாம் அல்லவா? ( ஊர் ஒன்று கூடல்  நிகழ்வுகள் - அரங்கேற்ற நிகழ்வுகள் - இசை நிகழ்ச்சிகள் - நூல் வெளியீடு -  போன்ற பொது நிகழ்வுகள் )

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து என்பதிலும் மாற்றம் தேவை என நினைக்கிறேன். ஏனெனில்  மணமகளுக்கு , தாயை வாழ்த்துவதற்கு கணவரின் பெயரைத்தான் போடுவார்கள்.

பெயர் விபரம்*
முதற் பெயர்
தந்தையின் பெயர்
படம்*
Drop files here or
Accepted file types: jpg, png.
பிரசுரிக்க வேண்டிய படத்தினை இங்கு இணைக்கலாம்.
விடயம் / Body text*

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்

15 hours ago, தமிழினி said:

நல்லதொரு முயற்ச்சி.  இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்!

பொது அறிவித்தல்களையும் இணைக்கலாம் அல்லவா? ( ஊர் ஒன்று கூடல்  நிகழ்வுகள் - அரங்கேற்ற நிகழ்வுகள் - இசை நிகழ்ச்சிகள் - நூல் வெளியீடு -  போன்ற பொது நிகழ்வுகள் )

ஓம் இணைக்கலாம் தமிழினி.

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருபத்தி ஐந்தாவது, ஐம்பதாவது திருமண நாள் என்பதையும் இணைத்தால் என்ன மோகன். இப்ப வரவர அவற்றைத்தானே அதிகம் கொண்டாடுகின்றனர்.

இவையும் வாழ்த்துகள் வகைக்குள் அடங்கும் என்பதால் இணைக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

இவையும் வாழ்த்துகள் வகைக்குள் அடங்கும் என்பதால் இணைக்க முடியும்

அவற்றுள் அடங்கும் ஆனால் ஓர் ஆண் தான் விளம்பரங்களை இணைக்கவேண்டுமா ? ஏனெனில் முதற்பெயர் தந்தையில் பெயர் என்று கேட்டுள்ளீர்கள். தந்தையின் பெயருக்குப்பதிலாக குடும்பப் பெயர் என்றுதான் வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் அண்ணா / தம்பி

வரவேற்கத்தக்க திட்டம்

தொடர்ந்து செயற்படுவதற்கு சாத்தியமானதும் கூட. இத்திட்டத்திற்கு எனது முழுமையான ஒத்துழைப்பும் உண்டு. என்னுடைய விளம்பரம் பற்றி ஏற்கனவே யாழோடு இணைந்துள்ளேன். இருப்பினும் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இணைப்பில் நேர்த்தியாக இணைவதுதான் சிறந்தது அவ்வகையில் சில கேள்விகள்...

1.

விளம்பரம் தொடர்பான அலங்கரிப்புகளை நாங்களே உருவாக்கித் தரவேண்டுமா அல்லது தகவல்களை      தந்தால் நீங்கள் தளத்தின் அளவுகளுக்கு ஏற்றாற்போல் உருவாக்கி இணைப்பீர்களா?

2.

விளம்பர சந்தா பகுதியில் கால அளவீட்டைக்குறிக்கவில்லை மாதாந்த சந்தா, காலாண்டு சந்தா, அரையாண்டு சந்தா, ஆண்டு சந்தா என்பன ( விளம்பரம் கொடுப்பவர்கள் தள்ளுபடியை எதிர்பார்த்தால் அதற்கு வழிவகைகள் உண்டா?)

3.

பேபால் மூலமாக மட்டுந்தான் கட்டணத்தைச் செலுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியிலிருந்து  சில  கருத்துக்கள்  நீக்கப்பட்டுள்ளன

அத்துடன்

இங்கே திட்டத்தை  விரைவாக்கவும்  அமுலாக்கவும்  தேவையான கேள்விகளை  விடுத்து

நேரத்தை  விழுங்கும்  வேலையே  நடப்பது

வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

விதிமுறைகள்

பொது:
அறிவித்தல்/விளம்பர சேவைக்கான  இந்தத் தளத்தையும் சேவைகளையும் நீங்கள் உபயோகிப்பது கீழே விளக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் தளம் அல்லது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தோன்றும், அதைக் குறிப்பிடும் அல்லது அதனுடன் இணைக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதற்கும் உட்படும்.

தேவையான விபரங்கள்:

  • மரணமடைந்தவரின் முழுப்பெயர்
  • பிறப்பிடம் – வசிப்பிடம்
  • ஒளிப்படம்
  • பிறந்த திகதி, இறந்த திகதி,  கிரியை நடைபெறும் திகதி
  • ஏனைய விபரங்கள்
  • தகவல் தருபவரின் பெயர், தொலைபேசி இலக்கம்

பணம் செலுத்தும் முறை:
• தற்போது Paypal மூலம் மட்டுமே பணத்தினை நேரடியாக TNRA அமைப்புக்குச் செலுத்திக் கொள்ள முடியும்.

 அறிவித்தல்/விளம்பர சேவைக்கான பாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
 
  • அறிவித்தலை/விளம்பரத்தை எமக்கு அனுப்பி பணம் செலுத்திய பின்னரே பிரசுர வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
  • அனைத்து விபரங்களும் எமக்கு கிடைக்கப்பெற்ற பிற்பாடு அறிவித்தல்/விளம்பரமானது ஒரு மணிநேரத்தில் இருந்து எட்டு மணிநேரத்தில் பிரசுரிக்கப்படும்.
  • ஒரு நிறுவனத்திற்குரிய அல்லது அது சார்ந்த விளம்பரத்திற்குரிய banner விளம்பரதார் வடிவமைத்து தரவேண்டும். அவ்வாறு இல்லாத பட்டசத்தில் அடிப்படையான ஒரு banner எம்மால் இணைக்கப்படும்.
  • எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அறிவித்தல்/ விளம்பரம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
  • குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்.
  • தகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும்.
  • வழங்கப்பட்ட விபரங்களை உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்.
  • பிரசுரிக்கப்படும் அறிவித்தலின்/ விளம்பரத்தின் கால எல்லையினை நீங்கள் குறிப்பிடலாம். கால எல்லை குறிக்கப்படாவிடின் இவ் அறிவித்தல் பகுதி உள்ளவரை அறிவித்தல்/ விளம்பரம் இருக்கும். (அதாவது நீக்கப்பட மாட்டாது).
  • ஒரு வாரத்தின் பின்னர் தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கம் காண்பிக்கப்பட மாட்டாது.
  • பிரசுரிப்பில் தவறுகள் இருப்பின் எமக்கு தகவல் தந்தவர் எம்முடன் தொடர்பு கொண்டு திருத்தங்களைத் தர முடியும். திருத்தங்கள் செய்வதற்கும் எமக்கு கால அவசாகம் தேவை.
  • கிடைக்கப்பெறும் பணம் அனைத்தும் தாயகத் திட்டங்களுக்காக TNRA அமைப்பினால் பயன்படுத்தப்படும்.
  • விளம்பரதாரரோ அல்லது யாழ் இணையமோ TNRA அமைப்பு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தடையாக இருக்கவோ அல்லது எவ்விதத்திலும் ஆதிக்கம் செலுத்தவோ முடியாது.
  • அறிவித்தல்/ விளம்பரத்தில் இணைக்கப்படும் பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் உரியவர்களின் அனுமதியுடனேயே தரப்பட வேண்டும். பதியப்படும் விபரங்கள் அனைத்திற்கும் தகவல் தருபவரே முழுப்பொறுப்பாளியாவார்.
  • அறிவித்தல்/ விளம்பரம் யாழ் இணையத்தில் பிரசுரிக்கப்படும்.
  • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல்/ விளம்பரம் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
  • யாழில் பிரசுரிக்கப்படும் அறிவித்தல் வாசகர்கள் மூலம் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது.
  • அறிவித்தல்/ விளம்பர வேலைகள் ஆரம்பிக்கப்படாதவிடத்து அறிவித்தலினை/விளம்பரத்தினை இடைநிறுத்தி முழுப்பணத்தினையும் மீளப்பெற்றுக் கொள்ள முடியும்.

அறிவித்தல் பகுதியில் இருந்து வெட்டி ஒட்டியுள்ளேன் 
தேவை இல்லை என்று கருதினால் அழித்துவிடவும் 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் ஊடாக என்னால் இயன்றதை செய்ய தயாராக உள்ளேன். ஊரில் யாசகம் செய்யும் தெரு வியாபாரம் செய்யும் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு நீண்ட கால வருவாய் ஒழுங்கில் ஒரு செயற்திட்டம் அமைந்தால் நல்லது. 

  • 11 months later...

பொதுநல நோக்குடனும் தாயக மக்களின் மேம்பாட்டினைக் கருத்திற் கொண்டும் யாழிணையத்தில் 'கொரோனா விழிப்புணர்வு' விளம்பரம் ஒன்றிற்கான அனுசரணையை வழங்கிய உவகை நிர்வாகிக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.