Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் ரிஷாத் கோரிக்கை விடுத்தது உண்மையே அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை ; மஹேஷ் சேனாநாயக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார். 

mahesh_senaaaaaaaa.jpg

அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். 

இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்   கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே இது குறித்த உண்மை என்ன? என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில். 

 குறித்த அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். 

முதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது  தடவையும்  அமைச்சர்  தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். 

எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன். 

இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை  நான் அவதானித்தேன். குறித்த அமைச்சர் எனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்டது. ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளது. இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என்ற எனக்கு தெரியவில்லை. கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறிவிட்டேன் என்றார். 

கேள்வி:- யாரை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் ?

பதில்:- ஹ்ம்ம், அவர் கூறிய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, அங்கு எல்லாம் முஹம்மட்களாக இருந்தனர். அவர்களின் உரிய பெயர் எனக்கு தெரியவில்லை. எனத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/56119

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சனைக்கிடையேயும், காக்கா, போனை போட்டு கேட்டு இருக்கிறார் என்றால்.... என்ன ஒரு துணிவு.

தமிழ் பழமொழி நினைவுக்கு வருகிறது.... அர்த்ததின் மிடுக்கில, அரசரிடம், அவருக்கு சவரம் செய்பவர், காதோட, இளவரசியை, பெண் கேட்டாராம்' 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதையேன் இவர் இவ்வளவு மென்றுமுழுங்கிச் சொல்கிறார். பேரம் படியவில்லைப் போலும். இவர் பல கோடிகள் கேட்டிருப்பார்.. அவர் சில கோடிகளில் விசயத்தை முடிப்பம் என்று நினைத்திருப்பார்.

கேவலம் என்ன என்றால்.. இவர்கள் கையில் அரசும்... அரசின் இராணுவ இயந்திரமும்.

ஒருவர் அமைச்சர். இன்னொருவர் இராணுவத் தளபதி

இதொரு நாடு. இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம்.

ஐநா இலங்கையின் அதிகாரங்களை தன்னகத்தே எடுப்பது தான் நல்லது. தமிழ் மக்களை அவர்கள் பாட்டில் அவர்கள் நிலத்தில் ஆள விடுவதும் நல்லது. இதுவே..உலகிற்கும் இலங்கை மக்களுக்கும் பாதுகாப்பு. இன்றேல்.. இலங்கை என்பது உலகப் பயங்கரவாதத்தின் தலைமை இடமாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

3தரம் போன் எடுப்பது அழுத்தம் இல்லை....இது சிரிலங்கா

  • கருத்துக்கள உறவுகள்

rishatmahesh-720x450.jpg

தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு 3 தடவைகள் ரிஷாட் கோரினார்! – இராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 3 தடவைகள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்றும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது பயங்கரவாத தாக்குதலின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு கோரி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் ரிஷாட் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தார் என்றும் எனினும் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டரர்.

முதலில் தனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்றும் பின்னர் 3 தடவைகள் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தாரென்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.

எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து தன்னால் அறிந்துகொள்ள முடிந்ததால், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் அப்போது உங்களின் கோரிக்கையை தான் ஆராய்வதாக கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை தான் அவதானித்ததாகவும் குறித்த அமைச்சர் தனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்ட போதிலும் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதோடு கோரிக்கையை மாத்திரம் முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளதென்றும் இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என தனக்கு தெரியாததோடு, அதனை கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் தான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விடுவிக்குமாறு கூறிய சந்தேகநபரின் பெயர் தனக்கு இப்போது நினைவில்லை என்றும் எல்லோரும் மொஹம்மட்களாக இருந்தமையினால், அவரின் உரிய பெயர் தனக்கு தெரியவில்லை என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தாக்குதலுடன்-தொடர்புடை-2/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

3தரம் போன் எடுப்பது அழுத்தம் இல்லை....இது சிரிலங்கா

மூன்று தடவைதான் நீரும் மன்னிக்கும். ரிச்சாத் நான்காவது தடவையும் எடுத்திருந்தால்.........!  சேனா என்ன செய்திருப்பார்......???? 🤔🤔🤔😬 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள்

ஒன்றைரை ஆண்டு கழிந்து மீண்டும் அமைச்சராக வந்தால் பார்ப்போம் என்ற அர்த்தமாயிருக்குமோ ....

  • கருத்துக்கள உறவுகள்

"அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர் இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டரர்.

அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளதென்றும் இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என தனக்கு தெரியாததோடு அதனை கோரிக்கையாகவும் பார்க்கலாம் அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் தான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறியதாக குறிப்பிட்டுள்ளார்."

இவ்வாறு சட்டத்துக்கு புறம்பான  கோரிக்கையை வைக்கும் ஒரு அமைச்சர் குண்டுத்தாக்குதலுக்கு துணைபோயிருப்பார் அவரையும் அழைத்து விசாரிக்கவேண்டும் என்பது இந்த கோழி மூளைக்கு விளங்கவில்லையா. இவனையெல்லாம் எப்படி தேடி கண்டுபிடித்து இராணுவத்தில் இணைத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. முகத்தை காட்டியே சின்ன குழந்தைக்கு சோறூட்டலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vanangaamudi said:

இவனையெல்லாம் எப்படி தேடி கண்டுபிடித்து இராணுவத்தில் இணைத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. 

தமிழனை கொலை செய்ய தெரிந்தால் சிறிலங்கா இராணுவத்தில் சேர தகுதியுடையவர்கள்......பதவி உயர்வு  எண்ணிக்கையின் அடிப்படையில் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்😄

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, putthan said:

தமிழனை கொலை செய்ய தெரிந்தால் சிறிலங்கா இராணுவத்தில் சேர தகுதியுடையவர்கள்......பதவி உயர்வு  எண்ணிக்கையின் அடிப்படையில் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்😄

ராணுவத்தில் இருக்கும்வரை பதவியுயர்வு. அதற்குப் பின் வெளிநாட்டு உயர்ஸ்த்தானிகர் அந்தஸ்த்து. கூடவே எந்தவொரு விசாரணைக்கும் அகப்படமுடியாத காப்பு. முடிந்தால் அமைச்சர் பதவி. குறைந்தது பாதுகாப்புச் செயலாளர் பதவி. இதைவிட வேறு என்ன வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரவில்லை - அமைச்சர் பதியூதீன் மறுப்பு

ரிசாத் பதியூதீன்

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு, ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிடயம் தான் கோரியதாக கூறப்படுவதை அமைச்சர் ரிசாட் பதியூதீன் மறுத்துள்ளார்.

"ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர், கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் கோரிக்கை விடுத்தது உண்மைதான்" என்று, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராணுவத் தளபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், "அவ்வாறான எந்தவித கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை" என அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

ஆயினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக, ராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு தான் வினவியதை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான ரிஷாத் பதியுதீன் Image captionஇலங்கையின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான ரிஷாத் பதியுதீனுடன் முகமது இப்ராஹிம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து, அவரையும் இந்த தாக்குதலில் தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்தன.

"தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு கூறினர். எனவே, நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் கோரியிருந்தனர்" என்று அமைச்சர் ரிசாட் பதியூதீன் கூறினார்.

"இதனையடுத்து ராணுவத் தளபதியை நான் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக விவரம் கூறினேன். மேலும், நபர் ஒருவரின் விவரத்தைக் கூறி, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விவரத்தையே ராணுவத் தளபதிடம் நான் கேட்டேன். ஆனால் அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை" என்று அமைச்சர் விவரித்தார்.

"தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கிடையாது" - அமைச்சர் ரிசாத் பதியூதீன்

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

மேலும், "ராணுவத் தளபதியுடன் நடத்திய உரையாடலை எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளேன். தேவையாயின் அதனைத் தர முடியும்" என்றும் அமைச்சர் கூறினார்.

"இதனை தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் விடுக்குமாறு நான் கோரவில்லை என்பதனை பொறுப்புடன்கூறிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார் ரிசாத் பதியுதீன்.

"ராணுவத்தினரிடமோ போலீஸாரிடமோ வேறு எவரிடமோ எவரையும் விடுவிக்குமாறு நான் வேண்டுகோள் விடுவிக்கவில்ல" என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48302434

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
20 minutes ago, ஏராளன் said:

 

"தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கிடையாது" - அமைச்சர் ரிசாத் பதியூதீன்

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

 

உலகமே இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிறது. இவர் வெறுமனே பயங்கரவாதம் என்கிறார்.

கொல்லப்பட்டவர்களில் தமிழர்கள் அதிகம், அதிலும் கிழக்கில் முக்கியமானவர்கள்.

இவர் தமிழர்கள் என்றே சொல்லாமல், கத்தோலிக்கர்கள் என்று மதத்தினை தூக்கிப் பிடிக்கிறார்.

சிங்கள மல்கொம் ரஞ்சித்க்கும், கிழக்கின் தமிழர்கள் அழிவுக்கும் என்ன தொடர்பு?

கொல்லப்படுவது தமிழர்கள், வருத்தம் தெரிவிப்பது சிங்கள பாதிரியாருக்கா?

தகப்பன் உங்களுடன் இருந்த படம்... சரி... ராணுவத்தளபதிக்கு எதுக்கு 3 தரம் போன் செய்தீர்கள்?

பொய் மேல் பொய் பேசுகிறார். 

இவரும், ஹிஸ்புல்லாவும் இலங்கையின் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முழு ஆதரவு தந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

 சிங்கள மல்கொம் ரஞ்சித்க்கும், கிழக்கின் தமிழர்கள் அழிவுக்கும் என்ன தொடர்பு?

 

பிழைக்க தெரிந்த அரசியல்வாதி.....தமிழர்கள் இவர்களுக்கு கிள்ளிகீரைகள்....

@Nathamuni

அவர் தான் இஸ்லாமியர் என்பதால் “பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை இஸ்லாமியர்கள் என அழைக்க முடியாது” என ஏனையோர் கூறியது போல் இஸ்லாத்தை பயங்கரவாதத்தோடு சம்பந்தப்படுத்தாமல் பிரித்து தான் கதைப்பார்.

கொல்லப்பட்டவர்களில் தமிழர்கள் அதிகம் என்றாலும் தாக்குதல் நடத்தப்பட்டது கத்தோலிக்க தேவாலயங்களில் என்பதால் கத்தோலிக்கர்கள் என்று கதைக்கிறார். அது கூட பரவாயில்லை.

ஆனால் அதன் பின் முஸ்லிம்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு விட்டு “ஈஸ்டர் தாக்குதலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் தலைமையிலான கும்பல் முஸ்லிம்களுடன் வன்முறையில் ஈடுபட்டது” என வெளிநாட்டு ஊடகங்களில் சிங்களவர்கள் செய்திகளை எழுதினார்கள். சிங்களவர்கள் என்ற பெயர் செய்தியில் வராமல் பார்த்துக்கொண்டார்கள். அது ரொம்ப ஒவர்.

சிங்கள மல்கம் ரஞ்சித், சிங்கள அரசின் வால், சிங்களவர்களிடையே பிரபலம் பெற்றவர், முஸ்லிம்களுடனும் ஒட்டு என்பதால், கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்து நல்ல பெயரெடுக்க பார்த்திருப்பார். தமிழர்கள் கொல்லப்பட்டால் (அதுவும் கிழக்கில் கொல்லப்பட்டால்) முஸ்லிம்களுக்கு என்ன கவலை?

Edited by Lara

 

5.39 இல்

கேள்வி: இப்படியான பிரச்சினைகள் எங்கு உருவானது?

பதில்: இது இன்று நேற்றல்ல, உங்களுக்கு தெரியும் நீண்ட காலமாக நல்ல வளங்களை கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளிருக்கிறது, மத்திய கிழக்கு நாடுகள். மத்திய கிழக்கு நாடுகளில் அவ்வளவு வளங்கள் இருந்தும் நிம்மதியிழந்து ஒவ்வொரு நாட்டிலும் துன்பமும் யுத்தமும் கொலையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு நடைபெறுவதற்கு, இதற்கு பின்னால் ஒரு சக்தி, பயங்கரவாதிகளுக்கும் பயிற்சி வழங்குகிறார்கள், அதேபோல் அரசாங்கத்திலேயுள்ள இராணுவத்திற்கும் பயிற்சி வழங்குகிறார்கள், பிறகு ஆயுத உற்பத்தியை செய்து 2 பேரையும் ஆயுதம் வாங்குமாறு சொல்கிறார்கள். இவ்வாறான ஒரு பெரிய சக்தி, இதன் பின்னாலிருந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை இஸ்லாத்தின் பெயரை சொல்லி பொய்யான பாதையிலே..., சதி, வெளிநாட்டு சதி என்று தான் சொல்ல வேண்டும். இந்த சதி, இதன் பின்னால், இலங்கையில் மட்டுமல்ல உலக பூராக இஸ்லாமிய நாடுகளிலும் இத்துன்பத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

——————————

இவர் இதில் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரிகிறது. ஆனால் அதே சதி இலங்கையில் ஈஸ்டர் தினமென்று குண்டு வெடிப்பாக நிகழ இலங்கை அரசு மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் துணை போனார்கள் என்பதே என் கருத்து.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குப் பின்னால் ஏதேனும் சதி இருக்கிறதா? அப்படியிருந்தால் அறிந்துகொள்ள ஆவல்.

மதவெறி பிடித்த அடிப்படைவாதக் காட்டுமிராண்டிகளின் கோரத்தை வேற்றுச் சக்தியொன்றின் சதி என்று மிக எளிதாக எம்மால் கூறிவிட்டுப் போகமுடிகிறது. 

சமூகமயப்படுத்தப்பட்டுவரும் இஸ்லாமிய அரபு வஹாபிசத்தை வேற்றுச் சக்தியொன்றின் சதியென்று அடிப்படைவாதத்தைத் தனது பதவிக்காகவும், பணத்திற்காகவும் பயன்படுத்தும் ஒரு முஸ்ளீம் அமைச்சர் சொல்வது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இதையே உண்மையென்று நம்பி அந்த வேற்றுச் சக்தியைத்தேடும் சிலர் இருக்கவும் செய்கிறார்கள். 

12 hours ago, ரஞ்சித் said:

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குப் பின்னால் ஏதேனும் சதி இருக்கிறதா? அப்படியிருந்தால் அறிந்துகொள்ள ஆவல்.

மதவெறி பிடித்த அடிப்படைவாதக் காட்டுமிராண்டிகளின் கோரத்தை வேற்றுச் சக்தியொன்றின் சதி என்று மிக எளிதாக எம்மால் கூறிவிட்டுப் போகமுடிகிறது. 

சமூகமயப்படுத்தப்பட்டுவரும் இஸ்லாமிய அரபு வஹாபிசத்தை வேற்றுச் சக்தியொன்றின் சதியென்று அடிப்படைவாதத்தைத் தனது பதவிக்காகவும், பணத்திற்காகவும் பயன்படுத்தும் ஒரு முஸ்ளீம் அமைச்சர் சொல்வது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இதையே உண்மையென்று நம்பி அந்த வேற்றுச் சக்தியைத்தேடும் சிலர் இருக்கவும் செய்கிறார்கள். 

இவர் சொல்வதை உண்மையென நம்பி நான் இங்கு எழுதவில்லை. இவர் கருத்துக்கு முன்னமே நான் அரசல் புரசலாக இதுபற்றி இன்னொரு திரியில் எழுதியுள்ளேன்.

இவர் “சக்தி” என திரும்ப திரும்ப விளிப்பது secret societies பற்றி. நீங்கள் தான் எல்லா திரியிலும் நான் இது பற்றி எழுதி திரிகிறேன் என்று கூறியதால் அதை தவிர்த்து இங்கு எழுதினேன்.

இப்ப நீங்கள் கேட்டதால் தான் எழுதுகிறேன். இதை தூக்கிப்பிடித்து வாதாட வேண்டாம். 

இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளது. அதை தூண்டி விடுவோர் பற்றியே என் கருத்து. அதேநேரம் இலங்கையில் அடிப்படைவாதம் பரவ, தாக்குதல் நடக்க இலங்கை அரசின் பங்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் (இவர் உட்பட) பங்கும் இருந்தது என்பதையும் குறிப்பிட்டே இருக்கிறேன். 

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு, ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிடயம் தான் கோரியதாக கூறப்படுவதை அமைச்சர் ரிசாட் பதியூதீன் மறுத்துள்ளார்.

"ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர், கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் கோரிக்கை விடுத்தது உண்மைதான்" என்று, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராணுவத் தளபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், "அவ்வாறான எந்தவித கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை" என அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். 

ஆயினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக, ராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு....

இதில் யார் பொய்யர்.?????????🤔

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்... இங்கு இரண்டு சோறுகள், ஒன்று அமைச்சர், மற்றது அதிகாரி இரண்டும் கேடுகெட்ட தங்கள் அரசின் தன்மைபற்றி உலகிற்கும் அறிவிக்கின்றது.

 

 

ஒன்று சொல்கிறது, "அதோபார் இமயமலை உச்சியில் ஒரு எறும்பு ஊர்ந்து ஊர்ந்து போகிறது."

மற்றது சொல்கிறது, "ஆமாம் பார்த்தேன், அது பின்னங்காலொன்றை இழுத்து இழுத்துப் போகிறது எங்கோ அடிபட்டிருக்க வேண்டும்." 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

அசல் தொப்பிபிரட்டி அரசியல்வாதி.

  • கருத்துக்கள உறவுகள்

 

9 minutes ago, Nathamuni said:

அசல் தொப்பிபிரட்டி அரசியல்வாதி.

சிங்கள மோடையன், முசுலீம் தொப்பி பிரட்டி. ஆனால் தமிழன்.......! கிடைத்த தலைவனையும் தொலைத்துவிட்டு அம்மணமாக நிற்கிறான். 😲

  • கருத்துக்கள உறவுகள்

கலோ ... யாரு தன்ராஜா ..?😍

hqdefault.jpg

(ரெண்டுமே உடான்ஸ் பார்ட்டிகள்),,

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

 

சிங்கள மோடையன், முசுலீம் தொப்பி பிரட்டி. ஆனால் தமிழன்.......! கிடைத்த தலைவனையும் தொலைத்துவிட்டு அம்மணமாக நிற்கிறான். 😲

யாருமே சாகாவரம் பெற்று வருவதில்லை. புலிகள் தம்மால் முடிந்த அதி உச்ச போராட்டத்தை நடாத்தினர்.

தொடர்ஓட்டம் போல அடுத்து வருபவர்கள் எடுத்துக் கொண்டோடுவர்.

நம் காலத்தில் இல்லாவிடினும், நமது விடுதலை வேறு வகையில் வந்து சேரும்.

ஹிஸ்புல்லா, ரிசாட்டை தவிர்த்து பாருங்கள். தமக்கும் ஆதங்கம் உண்டு என தம்மை வன்செயலுக்கு பலமுறை உள்ளாக்கிய சிங்களவர்களுக்கு புரிய வைத்துள்ளனர். மதவாதம் ஒரு காரணி, தேவையான பொருளாதாரத்தை வழஙகி இருக்கும். சிங்களத்தின் பொருளாதாரம் பெரும் அடி வாங்கி உள்ளது. மீன்று எழ நாளாகலாம்.

உரிமைகளை பகிர்ந்து கொள்ளாவிடில், சிங்களமும் நாட்டை இழககும்.

அமெரிக்கன் இலகுவாக உள்ளே வந்துவிட்டான். இதை தடுக்கவே இந்தியா தமிழர் இயககங்களை வளர்த்தது (1983).

நிலையாமை. இதுதான் யதார்த்தம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.