Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள் (முழு ஆதாரங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வியல் குறித்து ஆய்வு செய்த கலாநிதி அனஸ் அவர்கள், இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக,, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
 
நிற்க,
பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமேயிருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது அரேபியரின் புராதன குடியிருப்பான புத்தளம் பொன்பரப்பியைக் குறிக்கிறது.
 
அதுபோக,
இலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும்,
 
குளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு (கி.பி. 140 - 150 இல்) தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-
 
அத்தோடு,
கி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது (இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாச்சாரமும், இரண்டாம் பதிப்பு, இஸ்லாமிய புக் ஹவுஸ், கொழும்பு, பக்.4)
 
இன்னும்,
இலங்கையின் வரலாற்றாசிரியர்களில் மிகச் சிறந்தவர் என வர்ணிக்கப்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் "பன்னெடுங் காலமாக (முகம்மது நபியவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே) இலங்கையில் அரேபியர் வாழ்ந்தனர்" என்று தமது 'இலங்கை' என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். (இலங்கைச் சோனகர் வரலாறு (1907) அப்துல் ஐ.எல்.எம்.அஸீஸ், பக்.17)
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, colomban said:

இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக,, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

7 நூற்றாண்டில் மெக்காவிலும் மெதீனாவிலும் இஸ்லாம் தோற்றம் பெற்றது. அதற்கு முன்னால் மெக்காவில் இருக்கும் காபாவுக்கு யாத்திரை செய்தவர்கள் கட்டாயம் சைவர்களாகத்தான் இருந்திருப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு வாட்ஸ் அப் வீடியோ வந்தது.

பார்த்து, சிரிப்பதா, அழுவதா என்று புரியாத நிலை.

மதவெறியின் முட்டாள் தனம்.

இஸ்ரேலிய படையினர், ஒரு தற்கொலை குண்டுதாரியை சுட்டுக் கொள்கின்றனர்.

அவரை, ஒரு அப்பாவியை, கொலை செய்ததாக கூறி, அவரது உடலை காவி செல்கின்றனர், புதைகுழிக்கு...

அல்லாவு அக்பர் கோசம் விண்ணை தொடுகிறது...... ஆனாலும், அந்த உடலில், இன்னும் நேரம் குறித்து வெடிக்க தயாராக குண்டு இருப்பதை அறியாமலே....

ஊர்வலமாக போகையில், வெடிக்கிறது.....

புழுதி கண்ணை மறைக்கிறது... வீடியோ எடுப்பவர் நிறுத்தாமல் எடுக்கிறார்....

 அல்லாவு அக்பர் கோசம்.... வீராவேசத்தில் இருந்து.... சோகத்துக்கு மாறுகிறது...

பலர் விழுந்து கிடக்கிறார்கள்..... 

வீடியோ அவலத்தினை காட்டுகிறது.... பார்க்கும் நமக்கு, சிரிப்பதா, அழுவதா என்று புரியாத நிலை.

என்ன முட்டாள் தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலியிலும்.... கசுக்கொட்டை மரம் வளர்ந்திருக்குப் போல உள்ளது!

முஹம்மது நபியால் உடைக்க பட்ட சிலைகள்...உருவ வழிபாடு செய்பவர்களால் வழி படப் பட்டவை! 

சைவ மதக் கடவுள்களின் சிலைகளாகவும் இருந்திருக்கலாம்!

கொஞ்ச நாள் பம்மிகொண்டு இருந்தாங்கள், இப்ப மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ...நபிகளார் ஞான சேர தேரரைவிட பெரியவரோ?

உலகம் முழுதும் குண்டு வைத்துவிட்டு , அங்கெல்லாம் உள்ள மனித நேய ஓட்டைகளை வைத்து தப்பித்து வாழ்ந்த இஸ்லாமிய பயங்கரவாதம்..

அடித்தால் எப்படி பதிலடி கிடைக்கும் என்றதை முழுமையா அனுபவித்தது சிங்கள தேசத்தில்தான்.,,

எனக்கு சிங்களவனையும் பிடிக்காது , இஸ்லாமியனையும் பிடிக்காது...

ஆனால் இந்த இரண்டு இனங்களும் முட்டிக்கொள்ளும் இந்த காட்சி ஒவ்வொரு தமிழனுக்கும் ரொம்ப பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள்

தமிழர்களின்  வரலாற்றை அறிந்தபின்

எழுதினார்களா??

சிங்களவர்கள் வரலாற்றை மாற்றிய மாதிரி இவர்களும் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். தமிழர்கள் தான் இளிச்சவாயர்களோ? 😀

6 hours ago, colomban said:

இலங்கையில் அரேபியர் வாழ்ந்தனர்" என்று தமது 'இலங்கை' என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். (இலங்கைச் சோனகர் வரலாறு (1907) அப்துல் ஐ.எல்.எம்.அஸீஸ், பக்.17)

கள்ளக் காணி பிடிப்பதில் மட்டுமல்ல கள்ள வரலாறு புனைவதிலும் முஸ்லிம்கள் கில்லாடிகள்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

முஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள்

தமிழர்களின்  வரலாற்றை அறிந்தபின்

எழுதினார்களா??

6 hours ago, Lara said:

சிங்களவர்கள் வரலாற்றை மாற்றிய மாதிரி இவர்களும் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். தமிழர்கள் தான் இளிச்சவாயர்களோ? 😀

3 hours ago, போல் said:

கள்ளக் காணி பிடிப்பதில் மட்டுமல்ல கள்ள வரலாறு புனைவதிலும் முஸ்லிம்கள் கில்லாடிகள்!

கொழும்பான் ஆதாரங்களை காட்டி எழுதி இருக்கிறாரே?

சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

அரேபியர் என்று சொல்லுகிறார்கள் ,பிறகு சோனகர் என்று சொல்லுகிறார்கள்,பின்பு முஸ்லீம் எங்கிறார்கள் ,ஒரே கொன்வுயசனா இருக்கு......................இந்தியாவில் இஸ்லாம் பரவ தொடங்க சிறிலங்காவிலும் இஸ்லாம் பரவத்தொடங்கியிருக்கும்.....அதுதான் அவர்கள் தமிழ் மொழியை பேசுபவர்களாக இருக்கின்றானர்.....இஸ்லாம் என்று சொல்லுகின்றனர்....யார் முதல் வாழ்ந்ததாம் ....முட்டையா  கோழியா என்ற மாதிரி கிடக்கு.....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சோனக என்பது யோவன அல்லது யெளவன என்பதன் திரிபு. மஹா அலக்சாண்டர் தெரியும்தானே? பஞ்சாப் வரை படை கொண்டு வந்தவர். அந்த காலத்திலேயே அவரோடு வந்த கிரேக்கர்களை யெளவனர்கள் என்றே அழைதுள்ளனர்.

யெளவன என்பது வெள்ளைத்தோலர்களை குறிக்கும் சொல். அது அரபியாயும் இருக்கலாம். கிரேக்கனாயும் இருக்கலாம்.

இதே போல எகிப்துடன் சோழர்காலத்திலேயே கடல் வாணிபம் நடந்துளது. ஆகவே இஸ்லாத்துக்கு முந்திய அரேபியர்கள் தமிழ் தேசங்களுடனும்,பராகிரமபாகுவிடனும் வர்தக தொடர்பு வைத்திருந்தமை பெரிய கண்டுபிடிப்பு இல்லை.

ஆனால் அவர்கள் இலங்கையின் குடிகளாக, இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சும்மா பம்பலுக்கு எழுதுகிறேன்....

சிட்னி முருகன் கோவிலை சைவமன்றம் தான் நடத்துகின்றது ஆனால் இந்து வழிபாட்டுமுறை தான் அதிகம்......இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து அவுஸ்ரேலியாவில் பூர்வீககுடிகள் வாழ்ந்த காலத்திலயே சைவர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லுவது போலத்தான் இதுவும்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, Jude said:

கொழும்பான் ஆதாரங்களை காட்டி எழுதி இருக்கிறாரே?

சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?

கொழும்பான் எங்கை எழுதினவர்? இணைச்சவர் எல்லோ? விட்டால் டாக்டர் பட்டமும் குடுப்பியள் போலை கிடக்கு...

எட்டாம் வகுப்புக்கு முதலே இலங்கை வரலாறு படித்து விட்டோம். இனியும்  வரலாறு தெரியாதவர்களுக்கு ஆட்டுக்கல் வாங்கி கொடுக்கலாம். அரைத்துக்கொண்டிருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எட்டாம் வகுப்புக்கு முதலே இலங்கை வரலாறு படித்து விட்டோம். இனியும்  வரலாறு தெரியாதவர்களுக்கு ஆட்டுக்கல் வாங்கி கொடுக்கலாம். அரைத்துக்கொண்டிருக்கட்டும்.

அடடா, அந்த எட்டாம் வகுப்பு இலங்கை வரலாற்றில் இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு! 😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

சும்மா பம்பலுக்கு எழுதுகிறேன்....

சிட்னி முருகன் கோவிலை சைவமன்றம் தான் நடத்துகின்றது ஆனால் இந்து வழிபாட்டுமுறை தான் அதிகம்......இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து அவுஸ்ரேலியாவில் பூர்வீககுடிகள் வாழ்ந்த காலத்திலயே சைவர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லுவது போலத்தான் இதுவும்🤣

😂 ஆனால் நீங்கள் பம்மலுக்கு சொன்னதிலயும் ஒரு விசயம் இருக்கு - அபொர்ஜினிகளும், மதுரை பக்கம் ஒரு ஊரில் வசிக்கும் தமிழ்பேசும் பழங்குடிகளும் ஒரு குறித்த mtDNA கூறைக் கொண்டுள்ளதாயும் ஆபிரிக்காவில் தொடங்கி, அவுஸ்ரேலியா வரை நீண்ட மனித இனப் பரம்பல், மதுரை வழியாக சென்றதாயும் ஒரு எடுகோள் இருக்கிறது.

அதுசரி நீங்கள் எப்ப மருதடி பிள்ளையார விட்டுட்டு சிட்னி முருகனுக்கு தாவினியள்?😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அதுசரி நீங்கள் எப்ப மருதடி பிள்ளையார விட்டுட்டு சிட்னி முருகனுக்கு தாவினியள்?😂

20 வருடத்திற்க்கு முன்பு மருதடியானிடம் போயிட்டுவரான் சொல்லபோனான்,  அப்ப அவர் சொன்னார் என்ட தம்பி சிட்னியில செட்டில் பண்ணிட்டான் உனக்கு எதாவது உதவிகள் தேவை என்றால் அவனிட்ட கேள் என்று.....அதன் பின்பு நான் சிட்னி முருகனின் தீவிரபக்தன்.....

அதோட உந்த வள்ளி வந்து அபோஜிர்னல் தொடர்பு இருக்கு என்று கதை அடிபடுது  வேடுவ இனத்தவர் என்று சொ நான் முருகனை அரவணைத்துக்கொண்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

😂 ஆனால் நீங்கள் பம்மலுக்கு சொன்னதிலயும் ஒரு விசயம் இருக்கு - அபொர்ஜினிகளும், மதுரை பக்கம் ஒரு ஊரில் வசிக்கும் தமிழ்பேசும் பழங்குடிகளும் ஒரு குறித்த mtDNA கூறைக் கொண்டுள்ளதாயும் ஆபிரிக்காவில் தொடங்கி, அவுஸ்ரேலியா வரை நீண்ட மனித இனப் பரம்பல், மதுரை வழியாக சென்றதாயும் ஒரு எடுகோள் இருக்கிறது.

அதுசரி நீங்கள் எப்ப மருதடி பிள்ளையார விட்டுட்டு சிட்னி முருகனுக்கு தாவினியள்?😂

கோஷான் ...நீங்களும் நானும் அவுஸ் அபோர்ஜினிகளும் ...அவுஸ்ற்றொலொயிட்ஸ் என்னும் வகைப் படுத்தலுக்குள் அடங்குவோம்! அபோரிஜினிகள் சூரியனை ‘றா’ என்று அழைப்பார்கள்! எகிப்தியர்களும் அவ்வாறு தான் அழைப்பார்கள்!

கொழும்பானுக்கிச் சொல்லில் போடாதிர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

கொழும்பான் ஆதாரங்களை காட்டி எழுதி இருக்கிறாரே?

சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?

1977 ஆம் ஆண்டுகளில் மூன்று அல்லது நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லீகள் கொண்டிருந்தனர் இன்று 20 க்கு மேற்பட்ட உறுப்பினர் அதாவதுகடந்த40 வருடங்களில் மூஸ்லீம்கள் பல்கி பெருகியுள்ளனர்.. ..1300  வருடங்களுக்கு முன்பே  முஸ்லீம்கள் வாழ்ந்திருந்தாள் இன்று அவர்கள் தான் சிறிலங்காவின் பெரும்பான்மையாக இருந்திருக்க வேண்டும்....இன்று குறைந்தது 200 உறுப்பினர்களாவ்து இருந்த்திருப்பார்கள்....ஆகவே எனது ஆராச்சியின்படி முஸ்லீகள் பின்புதான் வந்துள்ளனர்🤣

8 minutes ago, புங்கையூரன் said:

கோஷான் ...நீங்களும் நானும் அவுஸ் அபோர்ஜினிகளும் ...அவுஸ்ற்றொலொயிட்ஸ் என்னும் வகைப் படுத்தலுக்குள் அடங்குவோம்! அபோரிஜினிகள் சூரியனை ‘றா’ என்று அழைப்பார்கள்! எகிப்தியர்களும் அவ்வாறு தான் அழைப்பார்கள்!

கொழும்பானுக்கிச் சொல்லில் போடாதிர்கள்!

பிளீஸ் என்னையும் அந்த குறுப்பினுள் இணைத்துவிடவும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Jude said:

அடடா, அந்த எட்டாம் வகுப்பு இலங்கை வரலாற்றில் இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு! 😎

அப்ப  முதலாம் வகுப்பில் படித்த அ ஆ எல்லாம் பொய்யா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அப்ப  முதலாம் வகுப்பில் படித்த அ ஆ எல்லாம் பொய்யா? 😎

அண்ணே அது எல்லாம் உண்மை ஆனால் சிங்களசகோதரஜாக்கள் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் பற்றி படித்தவை யாவும் பிழை......அவர்கள் இப்ப என்ன சொல்லுகிறார்களோ அது தான் உண்மை....🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பண்டைய மன்னர்கள்.. அரேபிய தேசங்களுடன் வியாபாரத் தொடர்பில் இருந்தனர். தமிழ் இராசதானிகளின் எச்சங்கள் ரோமிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதற்காக ரோம் தமிழர்களின் இராச்சியம் என்று சொல்ல முடியுமா.

இலங்கை இஸ்லாமியர்கள்.. மத வெறி பிடித்து அலைகிறார்கள். இது ஆபத்தானது மொத்தப் பிராந்தியத்திற்கும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?

முசுலீம் பாடசாலை ஒன்றில் முசுலீம்வாத்தியார் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டிருக்கிறோம்....

'அம்மா அம்மா என்று உம்மாக்கு சொல்கிறது'

'அப்பா அப்பா என்று வாப்பாக்கு சொல்கிறது'

சோனகர் முதலில் வந்திருந்தால் சோனகருக்கு முன்னுரிமை கொடுத்து அந்த முசுலீம்வாத்தியாரே இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருப்பார்.... 

'உம்மா உம்மா என்று அம்மாக்கு சொல்கிறது'

'வாப்பா வாப்பா என்று அப்பாக்கு சொல்கிறது'

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் பண்டைய மன்னர்கள்.. அரேபிய தேசங்களுடன் வியாபாரத் தொடர்பில் இருந்தனர். தமிழ் இரசாதானிகளின் எச்சங்கள் ரோமிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதற்காக ரோம் தமிழர்களின் இராச்சியம் என்று சொல்ல முடியுமா.

இலங்கை இஸ்லாமியர்கள்.. மத வெறி பிடித்து அலைகிறார்கள். இது ஆபத்தானது மொத்தப் பிராந்தியத்திற்கும். 

அதை நாம் சொன்னால் நாம் பிற்போக்குவாதிகள்......அந்த இஸ்லாமிய மத வெறியாளர்களுடன் உறவு கொண்டாடினால் நாம் முற்போக்குவாதி....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

கோஷான் ...நீங்களும் நானும் அவுஸ் அபோர்ஜினிகளும் ...அவுஸ்ற்றொலொயிட்ஸ் என்னும் வகைப் படுத்தலுக்குள் அடங்குவோம்! அபோரிஜினிகள் சூரியனை ‘றா’ என்று அழைப்பார்கள்! எகிப்தியர்களும் அவ்வாறு தான் அழைப்பார்கள்!

கொழும்பானுக்கிச் சொல்லில் போடாதிர்கள்!

இந்த “றா” பற்றிய தகவல் எனக்குப் புதியது. நன்றி. “(இ)ரவி” தான் மருவி “றா” வாயிற்றோ? யார் கண்டார்.

றவி வடசொல்லா? தமிழா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.