Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
June 17, 2019

20190617_095904-1.jpg?zoom=1.10249994993

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.

 

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,அளகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.  #அம்பாறைமாவட்டம் #கல்முனைவடக்குதமிழ்பிரதேசசெயலகம் #சாகும்வரைஉண்ணாவிரதப்போராட்டம்

http://globaltamilnews.net/2019/124518/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அகிம்சைவழியிலான போராட்டம் வெற்றியடையட்டும்.நல்ல முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதால் முஸ்லிம்களுக்கு அப்படி என்ன பாதிப்பு?...ஏன் எதிர்க்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”

 

தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.

po17.jpg

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை முதல் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், அவர்களுடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு. இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர். 

po15.jpg

இந்த போராட்டத்தில் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக களமிருங்கியிருந்தனர். இரண்டாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் கூடிவருகிறது.

போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் எங்கள் விடயத்தில் அரசாங்கம் பொடுபோக்காக இருப்பதாகவும் உடனடியாக இந்த விடயத்தை கவனத்தில்கொண்டு தீர்வது காணும் விதமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

po14.jpg

இரண்டாவது நாளான இன்று மாலை இவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அம்பாறை அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் , கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திரு.அதிசயராஜ் ஆகியோருடன் பிரதேசத்திறக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்கள்.

அரச உயரதிகாரிகளுக்கு பதிலளித்த போராட்டகாரர்கள் நாங்கள் இனவாத குழப்பங்களை உருவாக்க இங்கு பட்டினியுடன் அமரவில்லை. இந்த நல்லாட்சி எங்களை ஏமாற்றி விட்டது. சகல வளமும் மிக்க செயலகமாக இந்த செயலகத்தை தரமுயர்த்தி தர வேண்டும். அதுவரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். அரச வர்த்தகமானி வரும்வரை காத்திருக்கிறோம். எங்கள் மக்களுக்கு அரசு அவர்களின் உரிமைகளை தர முன்வர வேண்டும் என்றனர்.

po11.jpg

தொலைபேசி மூலம் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் அவை பலனளிக்கவில்லை. தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

 

https://www.virakesari.lk/article/58522

 

எங்கட ஈழ போராளிகள் யாரையும் காணோம்......!!!!!!;

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Dash said:

எங்கட ஈழ போராளிகள் யாரையும் காணோம்......!!!!!!;

 

ஊரில் இடம் பறி போனால் என்ன?...போராளிகள் அங்கவீனர்களாய் இருந்தால் என்ன?...பொது மக்கள் மடிந்தால் என்ன?...அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆமா பாட்டும், உசுப்பேத்தும் கதைகளும் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

 

ஊரில் இடம் பறி போனால் என்ன?...போராளிகள் அங்கவீனர்களாய் இருந்தால் என்ன?...பொது மக்கள் மடிந்தால் என்ன?...அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆமா பாட்டும், உசுப்பேத்தும் கதைகளும் தான் 

உங்கட கீச்சக அண்ணர் மாதிரி 

தமிழருடன் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த பிக்கு! கடும் எச்சரிக்கையுடன் இரண்டுநாள் காலக்கெடு விதித்த ஞானசார!!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஞானசார தேரர் குரல் கொடுத்துள்ளார்.

மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்னும் இரு தினங்களில் தரம் உயர்த்தாவிடின் பாரிய போராட்டம் ஒன்றை கல்முனையில் மேற்கொள்ள இருப்பதாகவும் ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி கல்முனை விகாராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களும் இணைந்து இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கல்முனை விகாராதிபதி ரன் முத்துகல சங்கரத்தின தேரரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விகாராதிபதியின் உடல் நலம் பற்றியும் கேட்டறிந்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/122263?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கிழக்கு மாகாணத்தில்

முஸ்லிம்களோடு தமிழர்களை மோதவிட பிக்குமார் திட்டம்

உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் பௌத்த ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஏற்பாடு
 
 
main photomain photomain photo
  • இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களை மோதவிட்டு. மேலும் பிளவுகளை உருவாக்க பௌத்த பிக்குமார் முற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அம்பாறை- கல்முனை பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் பௌத்த பிக்குமாரினால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றது. இதற்கு சில தமிழ்ப் பிரமுகர்களும் தங்களை அறியாமல் உடன்பட்டுள்ளனர். வேறு சில தமிழர்கள் நன்கு திட்டமிடப்பட்ட இலங்கைப் புலனாய்வுத் துறையின் தந்திரத்தை அறியாமல் துணைபோயுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


 
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று அனைத்தையும் இழந்து நிற்கும் தமிழச் சமுகத்தின் பண்பாட்டைச் சிதைத்து, முஸ்லிம் சமுகத்தையும் கேவலப்படுத்துவதே பௌத்த பேரினவாதிகளின் பிரதான நோக்கமென பெயர் குறிப்பிட விரும்பாத அருட் தந்தையொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

 

தமிழ்- முஸ்லிம் மோதலை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே பௌத்த பேரினவாதிகளின் நோக்கம். அதன் முதல் நடவடிக்கையே இந்த உண்ணாவிரதப் போராட்டமென பிரதேச மக்கள் கூறுகின்றனர்

 

கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் சிவசிறீ சச்சிதானந்தசிவம் சிவாச்சாரியார், பெரியநீலாவணை தேவாலய அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன், ஆகியோருடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்தினம் ஆகியோரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றுத் திங்கட்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சைவ, கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் பிரதேச மக்களும் ஆதரவு வழங்கி வருவதாக பௌத்த குருமார் கொழும்பில் உள்ள சிங்கள ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரை தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன கூறியுள்ளார்.

 

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. ஆனால் அதனைக் கையாள வேண்டிய வழிமுறைகள் வேறு. அதற்காக பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து போராடுவது தற்கொலைக்கு ஒப்பானதாகும்

 

ஆனால், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திட்டமிட்டு நடத்தும் சில பௌத்த பிக்குமார், இலங்கை இராணுவப் புலனாய்வுடன் இணை்ந்து போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் என்வும் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனவின் உறுப்பினர்கள் எனவும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது அவசியமெனில் அது குறித்து தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச வேண்டும். கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அது குறித்துப் பேசியுள்ளனர்.

ஆனால் இதுவரையும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை. எனினும் சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரும் மற்றும் சிலரும் அதற்காக இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாதெனவும், அது பௌத்த பேரினவாத அரசியல் நாடகம் என்றும் பிரதேச மக்கள் பகிரங்கமாகவே கூறுகின்றனர்.

இந்தியாவில் இருந்து வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் ஊடுருவியுள்ள இந்துத்துவா அமைப்பும் இதன் பின்னணியில் செயற்படுகின்றது. பௌத்த- இந்து உறவுப்பாலம் என்று கூறிக் கொண்டு, தமிழ் மக்களுக்குள்ளேயே சமய முரண்பாடுகளை தோற்றுவிப்பதே இந்துத்துவா அமைப்பின் நோக்கம் என்று ஏலவே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

பௌத்த- இந்து என்ற அடிப்படையில் ஒற்றுமை ஒன்றைக் கட்டியெழுப்ப பௌத்த பிக்குமாரும் சில தமிழ் சைவக் குருக்களும் ஒன்றினைந்துள்ளனர். அதற்கு ஆதரவாக தமிழ்க் கிறிஸ்த்தவ குருமாரையும் இவர்கள் அழைத்துமுள்ளனர்.

ஆனால் இதனைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுடன் தங்களுக்குப் பிரச்சினை இல்லையென்றும் போர்க்காலத்தில் சில தவறுகள் நடத்ததாகவும் ஆனாலும் அதனை மறந்து தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணி பௌத்த- இந்துசமய உறவை வளர்க்க வேண்டுமென்றும் கூறி பௌத்த பிக்குமார் சிலர் அம்பாறையில் தமிழ்ப் பிரதேசங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், வடக்கு- கிழக்கு தாயகப் பிரதேசங்களில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகள் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்டு, அங்கு பௌத்த பிக்குமார் விகாரைகளைக் கட்டி வருகின்றனர். புத்தர் சிலைகளை வைக்கின்றனர்.

இவற்றையெல்லாம் எதிர்க்காத பௌத்த பிக்குமார், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்காக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் நகைப்புக்கிடமானதென மக்கள் கூறுகின்றனர்.

மீண்டுமொரு தமிழ் முஸ்லிம் மோதலை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே பௌத்த பேரினவாதிகளின் நோக்கம். அதன் முதல் நடவடிக்கையே இந்த உண்ணாவிரதப் போராட்டமென பிரதேச இளைஞர்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. ஆனால் அதனைக் கையாள வேண்டிய வழிமுறைகள் வேறு. அதற்காக பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து போராடுவது தற்கொலைக்கு ஒப்பானதாகுமென அவதானிகள் கூறுகின்றனர்.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=1034&fbclid=IwAR3KbS_7YKETQMXqF9NpMGw0NAF4fSzwjiKlR5Woxb1Fco90XHQi8xAhx1U

  • கருத்துக்கள உறவுகள்

பிர­தமர் ரணில் வழங்­கிய வாக்­கு­று­தியை மீறி­விட்டார்  - கோடீஸ்வரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தாக பிர­தமர் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலும் தனது கட­மை­யி­லி­ருந்து பிர­தமர் தவ­றி­விட்டார் என தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட எம்.பி. கவீந்­திரன் கோடீஸ்­வரன் தெரி­வித்தார்.

kodiswaran1.jpg

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மது­வரி கட்­டளை சட்ட விதிகள் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 

அம்­பாறை மாவட்­டத்தில் கல்­முனை வடக்கு பிர­தே­சத்தில் தற்­போது மிகவும் பார­தூ­ர­மான பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இது நாட­ளா­விய ரீதியில் பாரிய பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வது சம்­பந்­த­மாக மாவட்­டத்தில்   உண்­ணா­வி­ரத போராட்­டத்தை  ஆரம்­பித்­துள்­ளனர்.   30 வருட கால­மாக தர­மு­யர்த்­தப்­ப­டா­துள்ள கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த வேண்­டு­மென கடந்த திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து  உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­துள்­ளனர். இந்­தப்­போ­ராட்­டத்தில் பௌத்த மதத்­த­லை­வ­ரான  ரண்­முத்­துக்­கல சங்­க­ரத்ன தேரர், கிழக்கு இந்து மத­கு­ருமார் ஒன்­றிய தலைவர் சிவஸ்ரீ சச்­சி­தா­நந்­தக்­கு­ருக்கல், மாந­க­ர­சபை உறுப்­பி­னர்கள்  சந்­தி­ர­சே­கரம் ராஜன்,விஜே­ய­ரட்ணம் ஆகியோர் உணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். 

தற்­போது பௌத்த மதத்­த­லை­வ­ரான   ரண்­முத்­துக்­கல சங்­க­ரத்ன தேரரின் நிலை கவ­லைக்­கி­ட­மா­க­வுள்­ளது. அனைத்து மதத்­த­லை­வர்­களும் ஒன்று சேர்ந்து கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­தித்­த­ர­வேண்­டு­மென்று கோரியே உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கின்­றனர். ஒரு இனத்தை அடி­மை­யாக வைக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக ,ஒரு இனத்­துக்கு செய்­யப்­பட்ட அநீ­திக்­காக நீதி கோரு­கின்­ற­வர்­க­ளாக ,அந்த இனத்­துக்­கான உரி­மையை கோரு­கின்­ற­வர்­க­ளாக இன்று அவர்கள் உண்­ணா­வி­ரத போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளனர். 

இந்த அர­சிடம் நாம் பல­த­டை­வைகள் கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த வேண்­டு­மென்ற பல கோரிக்­கை­களை முன்­வைத்தோம். பல கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்தோம். பிர­தமர் கூட இதனை தர­மு­யர்த்­தித்­த­ரு­வ­தாக பல தடை­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலும் தனது கட­மை­யி­லி­ருந்து பிர­தமர் தவ­றி­விட்டார். எங்­களை பல தடை­வைகள் ஏமாற்­றி­விட்டார். 1993 ஆம் ஆண்டு இந்த கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­தது. ஆனால் 30 வரு­டங்­க­ளாக தமிழ் மக்­க­ளுக்­கான இந்த உரிமை மறுக்­கப்­பட்­டுள்­ளது. 

அடிப்­படை மத­வா­தத்தை தோற்­று­வித்து இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை, இஸ்­லா­மிய ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உறு­து­ணை­யாக நிற்­ப­வர்கள் தான் இந்த தமிழ் மக்­க­ளுக்­கான கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த தடை போடு­கின்­றனர். அந்தப் பிர­தே­சத்­திலே இருக்­கின்ற 46ஆயிரம் மக்­க­ளுக்­கான அந்த உரிமை கிடைக்­கக்­கூ­டாது என்­ப­தனை அவர்கள் நிலை­நி­றுத்தி அந்­தப்­பி­ர­தே­சத்­திலே இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் அத­னைத்­த­டுத்து நிறுத்­து­கின்­றனர். இந்த  இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­க­ளுக்கு, மத அடிப்­படை வாதி­க­ளுக்கு உறு­து­ணை­யா­கவே இந்த அரசும் செயற்­ப­டு­கின்­றது. இதனை ஏறுக்­கொள்ள முடி­யாது.

கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்­தை­த­ர­மு­யர்த்­தக்­கோ­ரு­வது நியா­ய­மான கோரிக்­கை­யாகும்.  இதனால் தமிழ் மக்கள் பிரச்­சி­னையை எதிர்­நோக்­கு­கின்­றனர். அவர்­க­ளுக்­கு­ரிய நிர்­வாகம் கிடைக்க வேண்டும், அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது. அதற்­கு­ரிய சகல வளங்­களும் உள்­ளன. 29 கிராம சேவகர் பிரி­வு­க­ளையும் 234 ஆள­ணி­க­ளையும் கொண்­ட­தாக இருக்­கின்­றது. அதற்­கான நிதி அதி­கா­ரமும் காணி அதி­கா­ரமும் மறுக்­கப்­பட்­டுள்­ளன என்று அரசு கூறு­கின்­றது. ஆனால் 30 வரு­டங்­க­ளாக தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர். 

இதற்கு காரணம் யார்?கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­தக்­கூ­டா­தென தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்­பினர் பள்­ளி­வா­சலில் தீர்­மா­ன­மெ­டுத்து அதற்­கான அறிக்­கை­யையும் வெளி­யிட்­டனர். ஆகவே இந்த அரசு தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் கருத்தை ஏற்­றுக்­கொண்­டு­தானே கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­தா­துள்­ளது?தமிழ் மக்­க­ளுக்­கான நீதி கிடைக்­கக்­கூ­டா­தென தடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உய­ரிய சபையில் கூட நாம் தர­மு­யர்த்தல் வேண்­டு­கோளை விடுத்­தி­ருந்தோம்.எங்­க­ளது கட்­சியும் இது தொடர்பில் பிர­த­மரை சந்­தித்­தது.ஆனால் வாக்­கு­றுத்தி அளித்து அளித்தே பிர­தமர் தமி­ழர்­களை ஏமாற்றி விட்டார். அர­சியல் தீர்­வைத்­த­ர­வில்லை,குறைந்­த­பட்சம் கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தி தரு­வ­தற்கு கூடவா  இந்த அரசு மறுக்­கின்­றது என தமிழ் மக்கள் எங்­க­ளிடம் கேட்­கின்­றனர். 

எமது மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்ட நீதியை, உரி­மையை இந்த சபை தர வேண்டும். கல்முனை நகரம் 95 வீதம் தமிழர்களின் பிரதேசம். இவர்களுக்கான உரிமையே மறுக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேசத்தை மாற்றும் நடவடிக்கை கூட எடுக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நாட்டப்பட்ட பெயர்ப்பலகை கல்முனை நகரத்திலிருந்து கல்முனைக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பெரும் அநீதி. இந்த அதிகாரத்தை,அங்கீகாரத்தை கொடுத்தது யார்? கல்முனைக்குடி என்பது வேறு,கல்முனை என்பது வேறு. தமிழர்களின் செறிவைக்குறைக்கவே இவ்வாறு செயற்படுகின்றனர். எனவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்றார். 

 

https://www.virakesari.lk/article/58534

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணாவும்,கோடிஸ்வரனும் !!

Untitled.jpg

மூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணாவும்,கோடிஸ்வரனும் !!


சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.

உடல்நிலை மோசமடைந்துள்ள அவருக்கு இரு தடவைகள் முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று மாலை போராட்ட களத்திற்குச் சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய நிர்வாகசேவை அதிகாரிகள், போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.

எனினும் போராட்டக்காரர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அத்தோடு அரச அதிபர் இந்த விடயத்தில் ஏதாவது முடிவெடுப்பதென்றால் இன்று மதியம் 2 மணிக்குள் எடுக்கும்படியும் அதற்குள் முடிவொன்று எடுக்கப்படாவிட்டால் மதியம் 2 மணிக்கு அதிரடி முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர் .

இப்போது உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்க்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் ஆகியோர் சமூகமளித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துவருகிறார்கள்.

நூருல் ஹுதா உமர்
( மாளிகைக்காடு நிருபர் )

https://www.madawalaenews.com/2019/06/km.html

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

உங்கட கீச்சக அண்ணர் மாதிரி 

தமிழரின் துரதிஸ்டத்தை  பார்த்தீர்களா மீரா ? ...மக்களால் தெரிவு செய்யப்பட பிரதிநிதிகள் இருக்கும் போது  இன்னும் துரோகியின் கையை எதிர் பார்த்து இருக்க வேண்டிய நிலை 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டால் கருணாவை யாரும் வரச்சொல்லி ஒப்பாரி வச்ச மாதிரியும் ... அவரிண்ட  கையையோ காலையோ பிடிச்ச மாதிரியும் தெரியேல்ல ரதி... 🙄

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாவிட்டால் ஆதரவை விலக்குவோம் – த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை

Yogeshwaran-MP-1.jpg

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தாது விட்டால் அரசாங்கத்திற்கு வழங்கும் தமது ஆதரவை விலக்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடக்கூடா என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரிஷும் மிகத் தீவிரமாகவுள்ளனர்.

இவர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை அரசு உதாசீனம் செய்கின்றது. இந்த அரசையும் ஜனாதிபதியையும் பிரதமரையும் கொண்டு வந்தவர்கள் நாங்கள். அந்த நன்றிக்கடன் உங்களுக்கு இருக்கின்றதா எனக்கேட்க விரும்புகின்றோம்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக அரசு தரமுயர்த்தாதுவிட்டால் அரசுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை விலக்குவோம். இப்போது கூட தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே நாம் ஆதரவளித்து வருகின்றோம். இனியும் எமது மக்களை நாம் சமாதானப்படுத்த முடியாது. எனவேதான் அரசுக்கான ஆதரவை மீளப்பெறவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை ஏற்படக்கூடாதெனில் அங்கு தற்போது நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படத்தான் வேணும்.

ஆனால் இப்ப நடக்கும் போராட்டம் பக்கா அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்ப பாத்தீங்கள் என்டால் சசி,  கருணா உண்ணாவிரத மேடைக்கு போனது தான் காணும் கூட்டமைப்பினர் அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கினம் 

5 hours ago, Lara said:

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படத்தான் வேணும்.

ஆனால் இப்ப நடக்கும் போராட்டம் பக்கா அரசியல்.

இந்த போராட்டம் இப்ப தொடங்கினது இல்லை ...சிறு,சிறு போராட்டமாய் நடந்து கொண்டு இருக்கையில் ஈஸ்டர் குண்டு வெடிப்புகளால் நிறுத்தப் பட்டு தற்போது தொடரப்படுகின்றது...பிக்குகள் இணைந்தது அரசியல் காரணங்களுக்காகத் தான்.அதனை தமிழர்கள் பயன்படுத்துவதில் என்ன தப்பு?...இவ்வளவு நாளும் இதே சிங்களவர் முஸ்லிம்களுக்கு வால் பிடித்துக் கொண்டு இருந்தார்கள் ..இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாது 
 

2 hours ago, ரதி said:

இந்த போராட்டம் இப்ப தொடங்கினது இல்லை ...சிறு,சிறு போராட்டமாய் நடந்து கொண்டு இருக்கையில் ஈஸ்டர் குண்டு வெடிப்புகளால் நிறுத்தப் பட்டு தற்போது தொடரப்படுகின்றது...பிக்குகள் இணைந்தது அரசியல் காரணங்களுக்காகத் தான்.அதனை தமிழர்கள் பயன்படுத்துவதில் என்ன தப்பு?...இவ்வளவு நாளும் இதே சிங்களவர் முஸ்லிம்களுக்கு வால் பிடித்துக் கொண்டு இருந்தார்கள் ..இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாது

நான் பௌத்த பிக்குகளுடன் சேர்ந்து செய்யும் இவ் உண்ணாவிரதப்போராட்டத்தை தான் பக்கா அரசியல் என கூறினேன்.

தமிழர்களையும் தூண்டி விட்டு முஸ்லிம்களையும் தூண்டி விட்டு மோதவிடும் முயற்சி. முஸ்லிம் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் எதை செய்தார்களோ அனைத்தும் அரச ஆதரவுடனே செய்தார்கள். இப்பொழுதும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசு பெருசா பிரச்சினை கொடுக்காது. சாதாரண தமிழ், முஸ்லிம்களை மற்றும் முஸ்லிம், சிங்களவர்களை தான் மோத விடுகிறார்கள்.

இந்த பிக்குகளுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்குக்கு அவர்கள் நினைத்தால் உண்ணாவிரதம் இருக்காமலே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். சும்மா இந்து-பௌத்த, தமிழ்-சிங்கள ஒருங்கிணைப்பு போல் காட்டி தமது அரசியலையும் செய்து முஸ்லிம்களையும் கடுப்பேற்ற நினைக்கிறார்கள். ஏற்கனவே இதை காரணம் காட்டி சமூக வலைத்தளங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் முரண்படுகிறார்கள்.

இவர்கள் இணைந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அதன் விளைவுகளையும் எதிர் பார்த்திருக்க வேண்டும். 

முன்னர் தமிழ் முஸ்லிம் பிரச்சினை ஏற்பட்டதன் பின்னணியில் சில உளவு அமைப்புகள் இருந்தன. அதன் பாதிப்பு இன்னும் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம் ; இன்று நடக்கப்போவது என்ன?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நாட்களாக பல அரசியல்வாதிகளும் வருகை தந்தது இந்தபோராட்டத்திற்காக  தங்களது ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வருகை தந்த அத்துரேலிய ரத்தின தேரர் இப்பிரச்சினைக்கு நல்லதொரு  தீர்வு ஒன்று இன்று எட்டப்படும் என உறுதியளித்திருந்தார்.

kalmuna.jpg

இது ஒரு புறமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதிநிதிகள் மற்றும் பொது நிருவாக உள்நாட்டு அமைச்சர் பிரதமர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதன் போது தரமுயர்துவதற்கு பிரதமர் அறிவுறித்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட சில விடயங்களை எழுத்து மூலம் கொண்டுவந்து பிரதேச செயலகம் தரமுயர்துவதற்கு சட்டப்படியான ஆவணம் என அம்பாறை மாவட்ட அரச அதிபர் ஊடாக காண்பித்து உண்ணாவிரதத்தினை கைவிடுமாறு கோரி  போராட்டத்தினை இடை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

64951862_464417314313801_686529595466946

இந்நிலையில் ஒருபோது தாங்கள் செவிசாய்க்க போவதில்லை எனவும் வர்த்தமானி பிரகடனத்தின் பின்னரே எமது போராட்டம் நிறைவுறுத்துவது பற்றி சிந்திப்போம் என போராட்டக்கார்கள் அறிதியும் உறுதியுமாக தெரிவித்து விடாப்பிடியிலுள்ளனர். இதுவே அனைத்து மக்களினது ஏகோபித்த தீர்மானமாகவும் இருந்து வருகின்றது எனவே இன்று போராட்டத்தில் நடக்கபோவது என்ன என்பதனை பொருத்திருந்துதான் பார்கக்க வேண்டும். 

 

https://www.virakesari.lk/article/58709

 

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடம் போராடிய தமிழினத்துக்கு போராட்டம் என்பது புதிதான விடயமல்ல : வியா­ழேந்­திரன்

முப்­பது வரு­ட­காலம் போரா­டிய தமிழ் இனத்­துக்கு போராட்டம் என்­பது புதி­தான விட­ய­மல்ல என்­பதை இவ்­வி­டத்தில் நான் கூறி­வைக்க விரும்­பு­கின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனை­வரும் இந்த போராட்­டத்தில் ஒன்­றி­ணைய வேண்­டி­யது அவ­சியம் என்று  மட்­டக்­க­ளப்­பு­ மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியாழேந்­திரன் தெரி­வித்தார்.

viyalendiran.jpg

கல்­முனை வடக்கு உபபிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தக் கோரி பிர­தேச செய­லகம் முன்­பாக  சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடை­பெற்று வரு­கின்­றது. 

அதன் மூன்றாம் நாளா­கிய கடந்த புதன்­கி­ழமை  உண்ணாவிரதத்தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களைப் பார்­வை­யிட்­ட­பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்

1993.07.28 ஆம் திகதி அன்று நாட­ளா­விய ரீதியில் அமை­யப்­பெற்ற 29 உப பிர­தேச செய­ல­கங்­களில் 28 பிர­தேச செய­ல­கங்கள் தர­மு­யர்த்­தப்­பட்­டி­ருக்க  ஏன் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் மாத்­திரம் தர­மு­யர்த்­தப்­ப­டாமல் இருக்­கின்­றது என்ற கேள்வி எங்­க­ளுக்குள் எழு­கின்­றது. 

கடந்த மூன்று தசாப்தம் தாண்­டிய காலத்தில் எந்த அர­சாங்கம் வந்­தாலும் அந்த அர­சாங்­கத்­தோடு இணைந்து கொண்டு கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­களின் இருப்பை கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்ற விதத்­திலே  இந்த மாகா­ணத்தை தங்­களின் மாகா­ண­மாக மாற்ற முற்­ப­டு­கின்ற செயற்­றிட்டம் இந்த மண்­ணிலே சகோ­தர இன அர­சி­யல்­வா­தி­களால் அரங்­கேறிக் கொண்டு இருக்­கின்­றது. 

இதனைக் கடந்த காலத்தில் இருந்­த­வர்கள் வாய்­பொத்தி கைகட்டி பார்த்து கொண்டு இருந்­தி­ருக்­கலாம்.

 நாம் அவ்­வாறு இருப்­ப­தற்கு தயா­ரில்­லை­யென கூறிக்கொள்ள விரும்­பு­கின்றேன்.

கிழக்கு மாகா­ணத்­திலே 58.9 வீத­மாக இருந்த தமி­ழர்கள் 38.7 வீதத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். நல்­லி­ணக்க அர­சி­யலில் கிழக்கு தமி­ழ­ரு­டைய இருப்பை கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்ற நிலமை கிழக்கு மாகா­ணத்­திலே நாளுக்கு நாள் நடை­பெற்றுக் கொண்டிருக்­கின்­றது. 

அம்­பாறை மாவட்­டத்­தில் இருக்­கின்ற ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் நில­வ­ளத்தை சூறை­யாடி இருப்பை கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்ற செயற்­றிட்­டங்­களில் ஒன்றாகவே இவ்விடயத்தை பார்க்கின்றேன். 1996 ஆம் ஆண்டில் இருந்து மூன்று தசாப்த கால­மாக இந்த பிர­தேச செய­லகம் தர­மு­யர்த்தப்படாமல் இருப்­ப­தற்கு அதுவே காரணமாகும்.

16 கிராம சேவகர் பிரி­வு­களைக் கொண்டு அமைச்சர் ஒருவர் ஓட்­ட­மா­வ­டி­யில் இரண்டு பிர­தேச செய­ல­கங்­களை அமைத்­துள்ளார். ஏறாவூர் நக­ரில் 15 கிராம சேவகர் பிரி­வுக்கு ஒரு பிர­தேச செய­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

 இலங்­கை­யில் எங்­கு­மில்­லா­த­படி காத்­தான்­குடி ஓட்­ட­மா­வ­டி­யையும் இணைத்து நிலத்­தொ­டர்­பற்ற தனி கல்வி வலயம் அமைக்கப்பட்டுள்ளது. 

அது­மாத்­தி­ர­மின்றி முன்னாள் ஆளுநர் காத்­தான்­கு­டியில் 22 பாட­சா­லை­களைக் கொண்டு தனி­யான கல்வி வலயம் அமைப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். இவ்­வாறு தங்­க­ளுக்கு ஏற்ற விதத்­தில் அர­சாங்­கங்­களை பயன்­ப­டுத்தி  தமிழ் மக்­களைப் புறந்­தள்­ளு­கின்ற இவ்­வா­றான செயற்பாடுகளை நாங்கள் இனிமேலும் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்கமுடியாது. 

இதற்கு இனியொருபோதும் இந்த கிழக்கு மண்ணிலே இடமளிக்க மாட்டோம். முப்பது வருடகாலம் போராடிய தமிழ் இனத்திற்கு போராட்டம் என்பது புதிதான விடயமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றும்   தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/58813

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்தில் கல்முனையை தரமுயர்த்துவாராம் ஞானசாரர்: போராட்டம் முடிக்கப்படுகிறது!

June 22, 2019
 
 

கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த ஒரு மாதத்தில் நடவடிக்கையெடுப்பதாக ஞானசேரர் வழங்கிய வாக்குறுதியையடுத்து, கல்முனை போராட்டம் இன்று மதியம் 1 மணிக்கு முடித்து வைக்கப்படுமென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இன்று மதியம் 1 மணிக்கு முறைப்படி போராட்டம் முடித்து வைக்கப்படுகிறது.

கல்முனையை தரமுயர்த்துமாறு கோரி நடத்தப்படும் போராட்டம் இன்றுடன் 6வது நாளை எட்டியுள்ளது. நேற்று அரசியல் பிரமுகர்கள் போராட்டக்களத்திற்கு சென்றிருந்தனர். அப்பொழுது முன்கூட்டியே திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு, அவர்கள் மீது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று அங்கு சென்ற ஞானசார தேரருடன் பேச்சு நடந்து வருகிறது.

போராட்டத்தை கைவிடும்படியும், தான் கல்முனையை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஞானசார தேரர் கூறினார். 7 நாள் அவகாசம் தருவதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

“என்னால் 5 நாளிலும் கல்முனையை தரமுயர்த்தி தர முடியும். ஆனால் விளைவுகள் மோசமாக இருக்கும். நிதானமாக இந்த நடவடிக்கையை செயற்படுத்த எனக்கு ஒரு மாதம் அவகாசம் தாருங்கள். அதற்குள் கல்முனையை நான் தரமுயர்த்தி தருவேன்“ என ஞானசாரர் தெரிவித்தார். இந்த பேச்சுக்கள் தற்போது நடந்து வருகிறது.

எனினும், இன்று மதியம் 1 மணிக்கு போராட்டத்தை ஞர்னசாரர் முடிப்பதென்றும், அவர் தரமுயர்த்தும் நடவடிக்கையை பொறுப்பேற்பார் என அறிவிப்பதென்றும் முடிவாகியுள்ளது.

நேற்று அரச, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளின் 3 மாத அவகாசத்தை ஏற்காத போராட்டக்குழு, இன்று ஒரு மாத அவகாசம் கோரும் மததத்தலைவரின் பேச்சை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.