Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது

மனம் திறந்த இயக்குநர் ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அட்டை பாக்ஸ் போல் இயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்பதாவது, அதாவது ஒரு காட்சியில் நடிகை அமலா பால் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பரை வைத்து நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு வரவேண்டும் என்று கூறினாராம். இதனைக் கேட்ட அமலா பால் உடல் முழுவதும் டிஷ்யூ பேப்பரை சுற்றிக் கொண்டு அட்டை பாக்ஸ் போல் வந்து நின்றாராம்.
 

எவ்வளவு முக்கியம் இதனை பார்த்த இயக்குநர், டிஷ்யூ பேப்பர் கூட கிடைக்காது, ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
 

பார்க்கவே பாவமாக இருந்தது இதைத்தொடர்ந்து அமலாபால் மிகக்குறைந்த டிஷ்யூ பேப்பர்களை வைத்து உடலை மறைத்தவாறு ஒருவித பயத்துடன் வந்துள்ளார். அப்போது அவரது முகம் முழுக்க பயமும் பதட்டமும் பரவியிருந்ததாம். அமலா பாலை பார்க்கவே பாவமாக இருந்ததாகவும் பரிதாபமாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.
 

'ஆடை' விமர்சனம்!

 

Aadai review: Its a Amala paul show


பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் எனும் பிம்பத்தை கிழிக்கிறது அமலா பாலின் ஆடை. தலைக்கனம் அதிகம் கொண்ட, திமிர் பிடித்த பெண் காமினி (அமலா பால்). சுதந்திர கொடி என பெற்றோர் வைத்தப் பெயரை, 'பெயரில் மட்டும் சுதந்திரம் இருந்து என்ன பயன்' என அந்த பெயரை மாற்றி தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் தான் காமினி. ஆண் நண்பர்களுடன் நடுராத்திரி ஊர் சுற்றுவது, பசங்களே பொறாமைப்படும் அளவுக்கு பைக் ஓட்டி அலுவலகத்துக்கு செல்வது, கஞ்சா, புகை, மது என சகல பழக்கமும் கொண்ட அல்ட்ரா மாடர்ன் பொண்ணு தான் காமினி.

காமினி வேலைப் பார்ப்பது ஒரு தொலைக்காட்சியில். ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன் ஆகியோருடன் சேர்ந்து பிராங்க் ஷோ (கேன்டிட் கேமரா நிகழ்ச்சி) நடத்துவது தான் காமினியின் வேலை. இவர்களுடைய அலுவலகத்தை ஒரு புதிய கட்டடத்திற்கு மாற்ற ஏற்பாடு நடக்கிறது. அந்த கட்டடத்தில் இரவு பார்ட்டி கொண்டாட முடிவு செய்கிறார்கள் காமினியும் நண்பர்களும். பார்ட்டி முடிந்து கண் விழிக்கும் காமினி, ஆடையில்லாமல்... நிர்வாணக் கோலத்தில் அந்த கட்டடத்தில் கிடக்கிறார். இந்த கோலத்தில் அவர் கிடக்க என்ன காரணம் என்பதை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.

ஒரு புதிய கதைகருவை தேர்ந்தெடுத்த இயக்குனர் ரத்னகுமாருக்கு பாராட்டுகள். காமினியின் கதாபாத்திரத்தை மிக ஆழமாக யோசித்து உருவாக்கி இருக்கிறார். டபுள் மீனிங் காமெடி, ஜாலி பைக் ரைட், அமலா பால் கேரக்டரின் குணாதிசியங்கள் என முதல் பாதி படம் சூப்பர். இடைவேளை காட்சி உண்மையிலேயே மிரட்டல். இரட்டை அர்த்த அடல்ட் காமெடிகள் நிச்சயம் சிரிப்பை வரவைக்கின்றன. அந்தாக்ஷரி விளையாடும் போது இந்த பாடலுக்கு ராயல்டி தருனுமா என கேட்கும் இடம் செம ரகளை. ஆனால் இதையெல்லாம் தாண்டி, பார்வையாளர்களுக்கு நிறைய கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர். அது தான் இந்த படத்தின் வெற்றி. க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் செம.

ஒரு பெண் நிர்வாணமாக ஒரு இடத்தில் சிக்கி இருக்கும் போது இந்த சமூகம் அவளை எப்படி பார்க்கிறது?, ஒரு பெண் எப்படி ஒரு காட்சிப் பொருளாக, செக்ஸ் மெட்டிரியலாக இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறாள் எனும் கேள்விகள் தான் படம் முடிந் து வெளியே வந்த பின்னரும் நம் மனதுக்குள் ஓடுகிறது. எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணை ஆடையில்லாமல் நிர்வாணமாக தானே பார்க்க விரும்புறான் என அழுத்தமாக கூறுகிறார் இயக்குனர். இத்தனை நல்ல கருத்துகள் படத்தில் இருந்தாலும், திரைக்கதை மற்றும் கதையில் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லாம் மறக்கடித்துவிடுகிறார் அமலா பால். அவரது திரை வாழ்க்கையில் நிச்சயம் ஒரு முக்கியமான படம் ஆடை. முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார்.

அமலாவுக்காகவே படத்தை பார்க்க வேண்டும். இந்த காமினி இன்றைய சமூகத்துக்கு ஒரு பாடம். போல்டான பெண்ணாக இருந்தாலும், சதா ஆண் நண்பர்களுடனே சுற்றித்திரிந்தாலும் ஆடையில்லாமல் நிர்வாணமாக்கப்படும் போது, அமலா முதலில் தேடுவது ஒரு பெண்ணின் உதவியை தான். அப்போது அவருக்குள் ஏற்படும் கற்பனை தான் இந்த படத்தின் செய்தி. இந்த காட்சிகளில் எல்லாம் தோனியை போல் ஹெலிக்காப்டர் ஷாட்டாக பறக்கிறது அமலாவின் நடிப்பு பால். ஹேட்ஸ் ஆப் அமலா.

அமலா பாலின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, சரித்திரன், ரம்யா என அனைவருமே சூப்பர் நடிப்பு. பிஜிலி ரமேஷின் கேரக்டர் தான் கொஞ்சம் சலிப்பு. ஊர்கா பேண்ட்டின் இசை செம மாஸ். பாப் ஸ்டைலில் ஒலிக்கும் பாடல்கள் ராக்கர்ஸ்க்கு நிச்சயம் பிடிக்கும். ஆனால் பின்னணி இசை காட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் ஒலிக்கிறது. ஒவ்வொரு பிரேமையும் மிக கனவமாக வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். அதை மிக கவனமாக கையாண்டிருக்கிறார் எடிட்டர் சபீக் முகமது அலி. அதனால் படத்தில் ஆபாசமோ, விரசமோ இல்லை. நெருடல் இல்லாமல் படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்.

வெறிப்பிடித்த நாய்கள், காமக்கொடூர ஆண் என படத்தில் நிறைய குறியீடுகளை வைத்து கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அவை எத்தனை பார்வையாளர்களுக்கு புரியும் என்பதை இயக்குனர் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். இரண்டாம் பாதியில் படம் தட்டுதடுமாறுகிறது. ஓழுங்கற்ற திரைக்கதை அமைப்பு நம்மை குழப்புகிறது. சொல்ல வந்த விஷயத்தை இன்னும் ஜனரஞ்சகமாக சொல்லி இருக்கலாம். அமலா பாலின் நடிப்புக்காக, உழைப்புக்காக, அர்ப்பணிப்புக்காக இந்த 'ஆடை'யை அணியலாம்.

Read more at: https://tamil.filmibeat.com/reviews/aadai-review-its-a-amala-paul-show-061215.html

இந்த திரியில் வந்து நிழலி ஏதாவது எழுதுவான் என்று இஞ்ச கனக்க பேர் எதிர்பார்த்து இருப்பினம்.

நிழலி மானஸ்தன்...ஒன்றுமே எழுத மாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் பாக்கிறத்திற்கு என்ன இருக்கு அதான் முதல் படத்திலேயே எல்லாத்தையும் காட்டிட்டாவே 

 

Quote

வெறிப்பிடித்த நாய்கள், காமக்கொடூர ஆண் என படத்தில் நிறைய குறியீடுகளை வைத்து கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர்.

காமவேட்டைக்காக தான் பெற்ற 2 பிஞ்சுகளையும் கொன்ற பெண் அபிராமியைவிடவா? ஆண்கள் கொடூரமானவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

இந்த திரியில் வந்து நிழலி ஏதாவது எழுதுவான் என்று இஞ்ச கனக்க பேர் எதிர்பார்த்து இருப்பினம்.

நிழலி மானஸ்தன்...ஒன்றுமே எழுத மாட்டான்

வீட்டில் நல்லபடியாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் மூன்று வேளை சாப்பாட்டில் மண் விழுவதை யாரோ தவிர்க்க முயல்வது போல ஒரு தோற்றம் ….        

  • கருத்துக்கள உறவுகள்

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

இந்த திரியில் வந்து நிழலி ஏதாவது எழுதுவான் என்று இஞ்ச கனக்க பேர் எதிர்பார்த்து இருப்பினம்.

நிழலி மானஸ்தன்...ஒன்றுமே எழுத மாட்டான்

ம்.பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்குது.

11 hours ago, தமிழ் சிறி said:

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

வெண் திரையில் பார்த்தால்த் தான் வடிவாக தெரியும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

Bildergebnis für à®à®¾à®²à¯ à®à®´à®à¯

அரைவாசிப்படம் என்னட்டை இருக்கு......மிச்சத்தை வேறை ஆரெண்டாலும் போடுவினம்.😀

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

வெண் திரையில் பார்த்தால்த் தான் வடிவாக தெரியும்.

வெண்திரையில்.. வடிவாக தெரிந்தாலும், நெடுக தியேட்டருக்கு போய் பார்க்க முடியாது.
கணனியில்... இருந்தால்,  "மூடு"  வரும் போதெல்லாம் பார்த்து ரசிக்கலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für à®à®¾à®²à¯ à®à®´à®à¯

அரைவாசிப்படம் என்னட்டை இருக்கு......மிச்சத்தை வேறை ஆரெண்டாலும் போடுவினம்.😀

அமலாபாலின்.... அரைவாசி  நிர்வாணப் படம் போட்டமைக்கு, மிக்க நன்றி குமாரசாமி அண்ணா.
மிச்ச படத்தை... போடுகின்றவர்கள், தயவு செய்து.. முதுகு படத்தை போட்டு, 
கடுப்பு... ஏத்த வேண்டாம் என்று,  அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

13 hours ago, தமிழ் சிறி said:

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

Hollywood ரேஞ்சுக்கு Kollywood போய்க்கொண்டிருக்கு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Lara said:

Hollywood ரேஞ்சுக்கு Kollywood போய்க்கொண்டிருக்கு.

 

 

மனிசி.... இப்ப முழிப்பாக,  என்னை கண்காணித்துக் கொண்டு இருக்கிறா. லாரா. 😀
இப்ப இதை, பார்த்தால்.... என்னுடைய வார விடுமுறை. 💥 அதகளமாக போய்விடும்.  🤣
அவ... நித்திரை கொண்டால் பிறகு, இந்தக் காணொளியை பார்க்கின்றேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2019 at 10:28 AM, colomban said:

எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணை ஆடையில்லாமல் நிர்வாணமாக தானே பார்க்க விரும்புறான் என அழுத்தமாக கூறுகிறார் இயக்குனர்.

இது பெண்களை  எப்போதும் ஓர் அனுதாபக் காணோட்டத்திலேயே அணுகப்படும் அல்லது நோக்கப்படும் சமூக பார்வை சரி என்பதை மீளுறுதி செய்வதாகவே படத்தின் கருப்பொருள் அமைந்துள்ளது.

மறு வளமாக, ஆடையில்லாமல் ஓர் ஆண் நபரை சமூகம் காட்சிப்பொருளாக இன்றி எந்த வேற்றுப் பார்வை இருக்கும், முக்கியமாக அப்படி பார்க்கும் ஆசை பெண்களிடம்  அறவேயில்லையா என்பததற்கும் படத்தில் ஓர் காட்சி இருந்திருக்கவேண்டாமா?

மற்றும் படி, அமலா Paul பெண் நிர்வாணம் சம்பந்தப்பட்ட சமூக விலக்குகளை உலுப்பியிருக்கிறார்.

படம் வெளிவருவதற்கு அமலா Paul  பங்கிற்க்கு தன்னுடைய பணத்தை கொடுத்ததாகவும் அறிந்தேன்.

இது அமலா Paul தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்த பாத்திரமாகவே தெரிகிறது. எனவே பாராட்டப்பட வேண்டும்.

 

27 minutes ago, Lara said:

Hollywood ரேஞ்சுக்கு Kollywood போய்க்கொண்டிருக்கு.

Kollywood at the jucture of 1930 - 50 Hollywod.

இப்போதைய ஹாலிவுட், பெரும்பாலும் unsimulated கலவி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

Ãhnliches Foto

நடந்து வந்தால்... ஒண்டும்,  நடக்காது. 
ஓடி,  வந்தால்....  "ரிஷ்சூ"  பேப்பர், காத்தில்.. பறந்து இருக்குமே. :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

நடந்து வந்தால்... ஒண்டும்,  நடக்காது. 
ஓடி,  வந்தால்....  "ரிஷ்சூ"  பேப்பர், காத்தில்.. பறந்து இருக்குமே. :grin:

வெள்ளிக்கிழமையை மறந்திட்டன் அண்ணோய்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2019 at 7:05 PM, நிழலி said:

இந்த திரியில் வந்து நிழலி ஏதாவது எழுதுவான் என்று இஞ்ச கனக்க பேர் எதிர்பார்த்து இருப்பினம்.

நிழலி மானஸ்தன்...ஒன்றுமே எழுத மாட்டான்

 

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வார்கள். என்ன செய்வது

  • கருத்துக்கள உறவுகள்

திரை விமர்சனம்- ஆடை

508420.jpg

எல்லாவற்றுக்கும் பந்தயம் கட்டி வெற்றியை ருசிப்பவர் அமலாபால். இவர் தனியார் டிவியில் ‘தொப்பி தொப்பி’ என்ற குறும்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். நீதிமன்ற உத்தரவு காரணமாக, டிவி அலுவலகத்தை காலி செய்ய நேரிடுகிறது. எல்லோரும் வெளியேறிவிட, அமலாபால், தோழி ரம்யா, 4 ஆண் நண்பர்கள் மட்டும் அந்த கட்டிடத்திலேயே குடித்து கும்மாளமாக இரவு முழுவதும் கழிக்க முடிவெடுக்கின்றனர். போதையில் முதலில் ஆட்டம் பாட்டமாக தொடங்குவது, ஒரு கட்டத்தில் சண்டை சச்சரவாக மாறு கிறது. இந்த நிலையில், நிர்வாண மாக செய்தி வாசிப்பதாக அமலா பால் கட்டிய பந்தயத்தை நினை வூட்டுகிறார் ரம்யா. போதை ஏறிய அமலாபால், ‘செய்தி வாசிப்பது என்ன.. இரவு முழுவதும் இந்த கட்டிடத்தில் நிர்வாணமாக இருக் கிறேன்’ என்று சொல்லி, அவ்வாறே செய்கிறார். மறுநாள் பொழுது விடியும்போது, தான் மட்டும் அங்கு தன்னந்தனியாக நிர்வாணமாகப் படுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அந்த கட்டிடத்தில் இருந்து அவர் தப்பினாரா? உடன் இருந்த நண் பர்கள் என்ன ஆனார்கள்? இந்த கேள்விகளின் விடையாக இருக் கிறது ‘ஆடை’.

ஆடையின் அவசியம் பற்றி கூறுவதற்காக, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் நடந்த தோள்சீலைப் போராட்டம் தொட்டுக் காட்டப்படு கிறது. வரலாற்று நாயகி நங்கேலி யின் கதையோடு படம் தொடங்கு வது, இது பெண்ணியக் கதை என் பதற்கான கட்டியத்தை துணிச்ச லாக கூறுகிறது. பிறகு, எப்படியான பெண்ணியம் இன்றைய தேவை என்பதை மலைவாழ் பெண் கதாபாத்திரத்தின் ஊடாகக் காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.

டிவி நிகழ்ச்சி சம்பவங்கள் சற்று நீளம் என்றபோதும், இடைவேளை வரை படம் வேகமாக நகர்கிறது. அதன் பிறகு, கட்டிடத்தில் இருந்து தப்பிக்க அமலாபால் மேற்கொள் ளும் முயற்சிகள் காரணமாக சிறிது தொய்வு ஏற்படுகிறது. இறுதியில் எதிர்பார்க்காத வகையில் திரைக் கதை சென்று முடிகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகன் அறிமுகக் காட்சிக்கு இணையாக, கதாநாயகி அமலாபாலுக்கு கொடுக்கப்படும் வர்ணனை ரசிக்கவே வைக்கிறது. அமலாபாலை நம்பித்தான் படம் முழுவதுமே நகர் கிறது. அவரும் இதை உணர்ந்து கொண்டு, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இடை வேளைக்குப் பிறகு பெரும்பாலும் ஆடை இல்லாமலே வருகிறார். ஆனால், எந்த காட்சியும் கவர்ச்சி யாகவோ, ஆபாசமாகவோ இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பார்வையில் இருந்து உடலைக் காட்ட முனைந்தது பாராட்டுக்குரியது.

பெண்ணியம் தொடர்பாக கருத்து சொல்ல ஆசைப்பட்ட இயக்குநர், படம் போரடித்துவிடக் கூடாது; மெசேஜ் சொல்லும் படமாக மாறிவிடக் கூடாது என்பதிலும் ஜாக்கிரதையாகவே இருக் கிறார். ஆங்காங்கே அரசியல் நையாண்டிகள், இரட்டை அர்த்த காமெடி துணுக்குகள் என படத்தை நகர்த்தியிருக்கிறார். இறுதியில் நங்கேலியின் அறிவுரை கொஞ்சம் அதிகம்.

ஊர் தப்பாக பேசிவிடக் கூடாதே என்று பதைபதைக்கும் சராசரி அம்மாவாக ஸ்ரீரஞ்சனி சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். விவேக் பிரசன்னா, ‘வி.ஜே’ ரம்யா, சரித் திரன், ரோஹித் நந்தகுமார் ஆகி யோரும் படத்தைச் சுவாரஸ்யப் படுத்த உதவுகின்றனர்.

விவேக் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, படத்துக்கு பலம். பாடகர் பிரதீப் குமாரின் பின்னணி இசையும், தனது ‘ஊர்கா’ இசை பேண்டு மூலமாக அவர் தந் திருக்கும் பாடல்களும் சில கட்டங்களை விறுவிறுப்பாக்க உதவுகின்றன. ‘நீ வானவில்லா’ பாடல் ரசனை.

எதிர்ப்படும் மக்களை திடீ ரென அதிர்ச்சியில் ஆழ்த்தி, கடைசி யாக, மறைத்து வைத்திருக்கும் கேமராவை காட்டி அவர்களை முட்டாளாக்கும் டிவி நிகழ்ச்சிதான் படத்தின் மையம். இது வெறும் கேளிக்கை அல்ல; சக மனிதர் கள் இடையே உள்ள நம்பகத் தன்மையை சுக்குநூறாக்கும் விபரீத விளையாட்டு என்று ஊடகங்களின் தலையில் குட்டு வைத்திருக்கிறார் இயக்குநர். விளையாட்டு வினையாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையை, பெண்ணின் சுதந்திரம் எதுவரை என்ற கருத்தை பொழுதுபோக்காக எடுத்துரைக்கிறது ‘ஆடை’.

 

1563937123.JPG

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/508420-aadai-review-1.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை பார்த்தேன்...ஒருக்கால் பார்க்கலாம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2019 at 1:57 AM, ரதி said:

ஆடை பார்த்தேன்...ஒருக்கால் பார்க்கலாம் 😎

ஆடை பார்த்தீர்கள் சரி ஆண்கள் பார்க்கலாமோ பிறகு  இயக்குநரை குற்றம் சொல்வீர்கள் வக்கிர குணம் படைத்தது என்று  பெண்களை ஆடை இல்லாமல் ரிசு கடதாசி கொடுத்து  இருக்குறான் என 

 

சும்மா இந்த  திரியை எட்டிப்பார்த்த போது ஆடையுடன் அமலா பால் என்று சொல்லி இருக்கலாம்  நானும் இல்லை என்றுதும் சிலிப் ஆயிட்டன்😄😆

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையில் மிக அழகா இருந்தார் 
ஆடையை ....... ஆடையால் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார். 

பேசாமல் ஒரு துணியுடன் நடித்து உண்மைகளை மறைத்து இருக்கலாம். 

Amala-Paul-in-Aadai-1-784x441.jpg

838032-aadai-teaser-amala-paul.jpg

aadai.jpg?fit=1280%2C720&ssl=1

aadai-movie-1.jpg

After-gushes-of-controversies-Amala-Paul%E2%80%99s-Aadai-has-blessing.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆடை பார்த்தீர்கள் சரி ஆண்கள் பார்க்கலாமோ பிறகு  இயக்குநரை குற்றம் சொல்வீர்கள் வக்கிர குணம் படைத்தது என்று  பெண்களை ஆடை இல்லாமல் ரிசு கடதாசி கொடுத்து  இருக்குறான் என 

 

சும்மா இந்த  திரியை எட்டிப்பார்த்த போது ஆடையுடன் அமலா பால் என்று சொல்லி இருக்கலாம்  நானும் இல்லை என்றுதும் சிலிப் ஆயிட்டன்😄😆

திரையில் ஆபாசமாய்த் தெரியவில்லை. ஆனால் சூட்டிங்கில் அந்த நேரத்தில் இருந்தவர்களுக்கு அட சீ என்றிருக்கும்😂😂😂....முழுமையாய் ஒன்றுமே போடாமல் நடிச்த்திற்கு இரு தில் இருக்கத் தான் வேண்டும்...இவவை பார்த்து கொஞ்ச பேர் நிர்வாணமாய் காட்ட வெளிக்கிடுவினம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

திரையில் ஆபாசமாய்த் தெரியவில்லை. ஆனால் சூட்டிங்கில் அந்த நேரத்தில் இருந்தவர்களுக்கு அட சீ என்றிருக்கும்😂😂😂....முழுமையாய் ஒன்றுமே போடாமல் நடிச்த்திற்கு இரு தில் இருக்கத் தான் வேண்டும்...இவவை பார்த்து கொஞ்ச பேர் நிர்வாணமாய் காட்ட வெளிக்கிடுவினம் 

அவர்கள் முன் அமலா பால் ஏற்கனவே அம்மணமாக நடிக்கவில்லை 
இருக்கவில்லை என்பது எமக்கு எப்படி தெரியும்? 
குளத்தில் அப்ப அப்ப குளித்து வந்தவர் இப்போது முழுகி இருக்கிறார் அவளவுதான்.

இது புதிதில்லை 80 90 களிலேயே இப்படியான சூட்டிங்குகள் நடந்திருக்கு 
ஹிந்தியில் தெலுங்கில் முன்னணி நடிகைகளே இப்படி நடித்து இருக்கிறார்கள் 

கமராகுழு டைரக்டர் எல்லாம் பார்த்து எடிட்ட்டார் வெட்டி 
பின்பு ஆசை தீர தணிக்கை குழுவும் பார்த்துவிட்டு அவர்களும் வெட்டிய 
எச்சம்தான் எமக்கு கிடைக்கிறது....

நீங்களும் நாங்களும் கொடுத்துவைத்தது அவளவுதான்.
அல்லது கொடுத்துவைத்தவர்கள் நாங்களோ தெரியவில்லை...
முன்பு அமலா பாலின் ஆடைக்குள் எதோ அழகு பெட்டகம் ஒன்று 
அடைபட்டு இருக்கிறது என்று எண்ணம் எனக்கும் இருந்தது 
இப்போ எல்லாம் கெட்டுப்போச்சு ........ ஒரே சுருக்கும் பொருக்குமாக இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குமார் பிள்ளை இப்படி ஒரு நிலையில் நிற்பதை 
பார்க்கும்போது ...... நெஞ்சு பொறுக்கவில்லை-
இந்த நிலைகேட்ட மனிதரை நினைந்துவிடடால் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அவர்கள் முன் அமலா பால் ஏற்கனவே அம்மணமாக நடிக்கவில்லை 
இருக்கவில்லை என்பது எமக்கு எப்படி தெரியும்? 
குளத்தில் அப்ப அப்ப குளித்து வந்தவர் இப்போது முழுகி இருக்கிறார் அவளவுதான்.

இது புதிதில்லை 80 90 களிலேயே இப்படியான சூட்டிங்குகள் நடந்திருக்கு 
ஹிந்தியில் தெலுங்கில் முன்னணி நடிகைகளே இப்படி நடித்து இருக்கிறார்கள் 

கமராகுழு டைரக்டர் எல்லாம் பார்த்து எடிட்ட்டார் வெட்டி 
பின்பு ஆசை தீர தணிக்கை குழுவும் பார்த்துவிட்டு அவர்களும் வெட்டிய 
எச்சம்தான் எமக்கு கிடைக்கிறது....

நீங்களும் நாங்களும் கொடுத்துவைத்தது அவளவுதான்.
அல்லது கொடுத்துவைத்தவர்கள் நாங்களோ தெரியவில்லை...
முன்பு அமலா பாலின் ஆடைக்குள் எதோ அழகு பெட்டகம் ஒன்று 
அடைபட்டு இருக்கிறது என்று எண்ணம் எனக்கும் இருந்தது 
இப்போ எல்லாம் கெட்டுப்போச்சு ........ ஒரே சுருக்கும் பொருக்குமாக இருக்கு. 

அதுக்குத் தான்....அவசரப்பட வேண்டாம்...என்று திரும்பத் திரும்பச் சொல்லிறது...!

சனம் கேட்டால் தானே..!😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.