Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்

Featured Replies

தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது.

jei_sanker.jpg

கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் இன்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். 

தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானம் மற்றும் கன்னியத்துடனும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங்கை ஜனாதிபதியிடம் ஜெய்ஷங்கர் பேச்சுவார்த்தையின் போது தெரியப்படுத்தினார் என்று கூறிய பேச்சாளர் குமார், இனத்துவ அடையாள பாகுபாடு இன்றி சகல இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என்று கோத்தாபய ராஜபக்ஷ ஜெய்ஷங்கரிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். 

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.

https://www.virakesari.lk/article/69453

  • Replies 53
  • Views 4.2k
  • Created
  • Last Reply

2014 செய்தியில்,

ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். 

- மோடி

https://yarl.com/forum3/topic/140659-பிரத்தியேக-செய்தி-மஹிந்தவிடம்-மோடி-கூறியவை-என்ன/

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Lara said:

இன்னும் 1௦௦ வருடம் போனாலும் இப்படித்தான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Lara said:

இந்தியா மற்றைய மாநிலங்களில் ஓரளவுக்கு காலூன்றி விட்டது.

தமிழ்நாட்டில் மட்டுமே ரொம்ப கஸ்டப்படுகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுத்தால் தமிழகத்தில் பிஜேபிக்கு ஆதரவு வரலாம் என முழு முயற்சி செய்யலாம்.

6 minutes ago, பெருமாள் said:

இன்னும் 1௦௦ வருடம் போனாலும் இப்படித்தான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, poet said:

தமிழர்களின் மேலுள்ள அக்கறை இல்லை.

தமிழகம் மீது சவாரி விட ஒரு சந்தர்ப்பம்.

21 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களின் மேலுள்ள அக்கறை இல்லை.

தமிழகம் மீது சவாரி விட ஒரு சந்தர்ப்பம்.

அதை ஏன் சவாரி என நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது.

8 hours ago, poet said:

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

8 hours ago, நிழலி said:

அதை ஏன் சவாரி என நினைக்கின்றீர்கள்?

Admin, please allow my comments in English now and I will redact later in Tamil as I have currently no facilities for commenting in Tamil.

Poet, with your observation, I would like to add the following comments, and most members of Yarl forum will brush it off. 
 
This is change of position, albeit small but significant,  from a solution acceptable to all communities to a solution that can satisfy aspirations of Tamil community.

நிர்வாகம், ஆங்கிலத்தில் எழுதுவதை அப்போது அனுமதிதற்கு நன்றி, இப்பொது அதன் தமிழாக்கத்தை இணைக்கிறேன்.

"புலவரே, உங்கள் கருத்து அவதானத்தோடு, கீழிருக்கும் எஎனது கருத்தை இணைக்கிறேன், யாழ் இணைய மன்றத்தில் அநேகமானோர் இதை கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

ஜெய்ஷ்ங்கர் கூறியது, இந்திய அரசின் சிறிய ஆனால் முக்கியமான நிலைப்பட்டு மாற்றம், இலங்கை தீவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வில் இருந்து தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை   நிறைவேற்றப்படக்  கூடிய தீர்வு.

Edited by Kadancha
add info

  • தொடங்கியவர்
47 minutes ago, poet said:

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

@DrSJaishankar 

நாங்கள் முடிந்தால் இவரை பின்தொடரலாம் ...

தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள். 

நீங்களும் நானும் கூட  தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வடகிழக்கின் கழநிலவரங்களை உணர ஆரம்பித்திருக்கிறது. எங்கள் தலைமுறைக்கு இந்தியா மெக்காபோல.  இளைய தலைமுறை  எங்களைவிட உலகளாவிப் பரந்துபட்டது. 

எங்கள் (ஈழ தமிழரின்) இளைய இளைய தலைமுறை எங்களைவிட உலகளாவிப் பரந்துபட்டது. எங்கள் இளைய தலைமுறை திரு.ஜெயசங்கர் அவர்களது சீரிய முயற்ச்சியை ஆதரிக்க முன்வரவேண்டும் என பணிவன்புடன் கோருகிறேன்.
 
*

இந்தியா மட்டுமன்றி அமரிக்கா சீனா என பலரது தலையீடுள்ள பிரச்சினை இது.

*

இந்தியா ஈழத் தமிழரது நட்புறவின் ஆக்கபூர்வமான புதிய அத்தியாயமாக  இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்களது முயற்ச்சிகள் வெற்றிபெறவேண்டும். நல் வாழ்த்துக்கள் திரு. ஜெயசங்கர் அவர்களே. அத்தகைய ஒரு வளற்ச்சிக்கு நம் எல்லோரதும் ஈடுபாடும் ஆதரவும் அவசியம்.  - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

https://twitter.com/drsjaishankar?lang=en

இது அவரது டுவிட்டர் பக்கம். முடிந்தவர்கள் அங்கு சென்று அவரது இலங்கை விஜயம் தொடர்பான டுவிட்டர் பதிவில் உங்கள் கருத்துக்களை இடலாம். முயன்றுதான் பார்ப்போமே.

ஜெய்சங்கர் ஒடோடி வந்தாரா டுயட் பாடினாரா நான் அதை   ரசித்தோமோ என்றதோடு இருக்கனும் அதை விடுத்து அதிக ஆசையெல்லாம் வளர்கக்க் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரஞ்சித் said:

https://twitter.com/drsjaishankar?lang=en

இது அவரது டுவிட்டர் பக்கம். முடிந்தவர்கள் அங்கு சென்று அவரது இலங்கை விஜயம் தொடர்பான டுவிட்டர் பதிவில் உங்கள் கருத்துக்களை இடலாம். முயன்றுதான் பார்ப்போமே.

Thanks. 

default_profile_x96.png
 
Congratulations Hon. Dr.S.Jayasankar. Regime change is not a solution to the ethnic question. We Sri Lankan Tamils and our leader Sampanthan are supporting your initiations to make real peace in our Island country. - V.I.S.Jayapalan Poet
3 minutes ago, poet said:

We Sri Lankan Tamils and our leader Sampanthan

இன்றைய சிறந்த நகைச்சுவை! 🤣

சீனா எங்கட பொருளாதார கூட்டு, இந்தியா அயல்நாடே என்ட கோத்தாட அறிவிப்பில கதிகலங்கிப் போய் சொறிலங்காக்கு ஓடின இந்தியன் அங்கிருந்து தமிழரின் பிரச்சினை பற்றி அறிக்கைவிட தில் இல்லாம இந்தியா திரும்பி அறிக்கை விட்டடிருக்கான்.

ரோட்டுக்கு வந்த நாய் தன்ர வளவுக்குள்ள ஓடிப்போய் நின்டுகொண்டு குரைக்கிற ஞாபகம் தான் வருது.

இந்தியனின் கபட நாடகங்களை நம்பும் ********* கொஞ்சப்பேர் இப்பவும் இருக்கினம்.

Edited by Rajesh
பொயட்டின் வேண்டுகோளுக்கு அமைய ஒரு சொல்லு நீக்கப்படுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

Rajesh  உங்களுக்கு எட்டிய அர்த்தம் நகைச்சுவையாக அமைந்தது என் ராஜதந்திர தோல்விதான். இப்ப எங்களிடம் இருக்கும் பிடி வடகிழக்கு கோத்தபாயாவை எதிர்த்ததுதான். ஒட்டுமொத்த தமிழர் ஆதரவை சம்பந்தருடன் அல்லது சஜித்துடன் இணைத்துத்தான் பேசமுடியும். தனிபட்ட விருப்பு வெறுப்பு அரசியலோ இராஜதந்திரமோ இல்லை Rajesh. நான் சஜித்துக்கு தமிழர் ஆதரவு என அந்த அரசியல் ஆதாயத்தை வளங்க தயாரில்லை. ஒரே மாற்றுவழி சம்பந்தனுடன் இணைத்து நகர்த்துவதுதான்.   அன்புக்குரிய Rajesh  இ என் வழியை புரிந்துகொள்ளாமல் கிண்டலாக்கி என் வலி யாக்கிவிட்டீர்களே. தயவு செய்து உங்கள் கிண்டலை மீழாய்வு செய்ய வேண்டுகிறேன்.

திரு Rajesh  உங்கள் அரசியல் மொழியும் புரிதலும் தவறானது. தமிழர் நலன் சார்ந்து தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். மீழாய்வு செய்யுங்கள்

திரு Rajesh , விடுபேயர்கள் என்கிற சொல்லையாவது நீக்கிவிடுங்கள்.

Edited by poet

5 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா மற்றைய மாநிலங்களில் ஓரளவுக்கு காலூன்றி விட்டது.

தமிழ்நாட்டில் மட்டுமே ரொம்ப கஸ்டப்படுகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுத்தால் தமிழகத்தில் பிஜேபிக்கு ஆதரவு வரலாம் என முழு முயற்சி செய்யலாம்.

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.

1 hour ago, poet said:

திரு Rajesh , விடுபேயர்கள் என்கிற சொல்லையாவது நீக்கிவிடுங்கள்.

உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது!
ஆனால், சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை நாங்கள் தலைவராக எக்காலத்திலும் ஏற்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

@DrSJaishankar 

நாங்கள் முடிந்தால் இவரை பின்தொடரலாம் ...

தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள். 

நீங்களும் நானும் கூட  தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 

தமிழ் நாட்டு அரசம்,சர்வதேசமும் ,புலம் பெயர் எல்லா தமிழர் அமைப்புகளும் சேர்ந்து 
இந்திய அரசுக்குக்கு மேல் மேலும் அழுத்தம் கொடுத்து இந்தியா மூலமாக இலங்கை அரசை முழுமையான ஒரு அதிகார பகிர்வுக்கு வலியுறுத்தவேண்டும்.இதை விட வேறு வழி இப்போதைக்கு ஈழத்தமிழருக்கு திறப்பதாக இல்லை.சிறி லங்கா அரசு இறங்கி வருமா இல்லை  தமிழர் பகுதிக்கான அபிவிருத்தி என்ற பணியோடு மீண்டும் ஒர் ஏமாற்றத்தோடும் காலம் கடத்தலோடும் தமிழருக்கான தீர்வை தட்டிக் கழிக்குமோ காலம் தான் பதில் சொல்லவேண்டும்.முன்பு இருந்த பேரம் பேசும் வலுவோடு இன்று ஈழத் தமிழர் இல்லை.இந்தியா வேண்டாம் சர்வதேசம் வேண்டாம் எமது பிரச்சனையை நாமே தீர்ப்போம் என்ற நிலையில் நாம் இப்போ இல்லை.நடப்பது நமது மக்களுக்கு நல்லதாக ஒரு விடிவு வருமானால் வரவேற்போம்.
 
  • தொடங்கியவர்
36 minutes ago, Lara said:

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.  ஆனால், இலங்கையின் மனத்தில் மாற்றம் வருவதற்ககு அகத்திலும் புறத்திலும் அழுத்தம் கொடுக்கும் வல்லமை எம்மிடம் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்

இல்லாவிட்டால் என்ன  செய்வதாக உத்தேசம்  ? 

இந்தியாவில் இருக்கும் பரந்தன் ராஜன் குழுவினரை இறங்குவீர்களா ? 

அல்லது பழிவாங்கும் ஆவேசத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளை தூண்டி விடுவீர்களா 

இந்திய சிதறினால்  மட்டும்தான் தமிழருக்கு விடுதலை. 

32 minutes ago, ampanai said:

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.  ஆனால், இலங்கையின் மனத்தில் மாற்றம் வருவதற்ககு அகத்திலும் புறத்திலும் அழுத்தம் கொடுக்கும் வல்லமை எம்மிடம் உள்ளது. 

EJ0mHOuU8AEqNqB?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறவுகள்

2049 டிசெம்பர்

தமிழர்களுக்கு நியாயமான, அவர்கள் அபிலாசைபடும் தீர்வொன்றை வழங்குமாறு, புதிதாக பதவியேற்ற இலங்கை ஜனாதிபதியை இன்று கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.

யாழ் களத்தில்: ஆஹா தொனி மாறிவிட்டது, இனி கனி கையில் விழும். இந்தியா, சீனா, அமெரிக்கா முக்கோண காதலில் இலங்கையை நெருக்கி நாம் வெல்லும்நாள் தொலைவில் இல்லை.

பிகு: ஜெய்சங்கரின் டுவிட்டரை பயன்படுத்துவது நல்ல ஐடியாதான். ஆனால் கண்ணியம் முக்கியம். இங்கே பொயட் எழுதியதை போல எழுதி, அதற்கு ராஜேஷ் எழுதிய பதிலை போலவும் எழுதினால். மனிசன் கடுப்பாகி, உள்ளதை கெடுத்த நொள்ளை கண்ணன் கதையாகி விடக்கூடும்.

  • தொடங்கியவர்
29 minutes ago, Lara said:

EJ0mHOuU8AEqNqB?format=jpg&name=medium

Myanmar's Aung San Suu Kyi faces first legal action over Rohingya crisis

Reforms In Myanmar Show Positive Signs : News Photo

https://www.theguardian.com/world/2019/nov/14/myanmars-aung-san-suu-kyi-faces-first-legal-action-over-rohingya-crisis

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, poet said:

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

கவிஞரே, 

இந்தியா இதய சுத்தித்தியோடு செயட்படுகின்றது என உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா ??? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.