Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அபராஜிதன் said:

அதை ஏன்யா என்கிட்ட கேட்கிறீங்க நான் என்ன நீங்க சீமானுக்கு முட்டு கொடுப்பது போல சம்பந்தன் சுமந்திரன் அல்லது் கருணாநிதி குடும்பத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்தாலும் சரி என்டு  முட்டு கொடுத்தேனா?

சீமானது பேச்சுத்தான்  பிரச்சினை  என்றால்

அவர்  பேசுவதில் 99 வீதம்  சரி

தேவையானது

ஒரு  வீதம்  தான்  எமக்கு  சிக்கலானது

அப்படியாயின் கண்ணை  மூடிக்கொண்டு 99 வீதத்தை  எதிர்ப்பவர் யார்??

உங்களுக்கு எதுவுமே  சரியில்லை  அல்லது சரிவராது

மற்றவருக்கு ஒன்று  பரவாயில்லை  பார்க்கலாம்  என்றால் 

ஒன்றையுமே  தொடாத உங்களுக்கு

அதில்  என்ன  சங்கடம்  வந்துவிடப்போகிறது???

  • Replies 193
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்னெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ 

26992050-936194369864339-347877469646984

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maruthankerny said:

உலகின் ஒட்டுமொத்த மீடியாவும் பண முதலாளிகள்  அரசியல் கட்சிகள் சார்ந்தவை 
சீமானின் 1 மணிநேர பேச்சில்  1 நிமிடத்தை மக்களிடம் சேர்த்து வெறுப்பை உண்டுபண்ணுவது என்பதை 
தமிழக மீடியாக்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள். இதை செய்கிறார்கள் என்பது தெரிந்துகொண்டும்

4 hours ago, Maruthankerny said:

பிரபாகரன் எமது தலைவன் என்று இன்று தமிழகத்தில் எவன் சொன்னாலும் அதுக்கு சீமான்தான் காரணம்.
அப்படி ஏற்றுக்கொள்ளும் மனநிலை யாருக்கும் இருந்து இருந்தாலும் அரசியல் லாபம்  சொந்த வாழ்வு என்று எண்ணி  பயநிலையில்தான் இருந்தார்கள். அதை தகர்த்து ஒரு அக்கினி குஞ்சை முதலில் வைத்தது சீமான்தான் அதனால் அவர் சிறைக்கு கூட போனார் ........ அடங்கவில்லை தொடர்ந்தார். 

நேர்த்தியாக நீங்கள் விரும்புவதுபோல பேசிக்கொண்டு இருந்தால் ....... சீமானை எனக்கே தெரியாமல் போயிருக்கும். மீடியாக்கள் அப்படியே மழுங்கடித்து இருப்பார்கள். இப்போது கரி பூசுவத்துக்காவது 1 நிமிடம் என்றாலும்  சீமானை காட்டுகிறார்கள்.  சர்ச்சை பேச்சு வேண்டாம் என்று உங்களைப்போல நானும் விரும்புகிறேன் .......... சர்ச்சை இல்லாதுபோனால்  சீமானும் இல்லாமல் போய்விடுவார் என்ற இன்னொரு கசப்பான  உண்மையும் இருக்கிறது. 

நிதர்சனமான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அப்படியானால்  எனது  பெயரை  முதலாவதாக  பதிந்து  வைத்துக்கொள்ளுங்கள்

தமிழன்  ஒன்று படாமல் 

சிங்களத்தை  சிறுபான்மையாக்காமல்

எமக்கு  விடிவில்லை

அதற்காக நான்  ஒரு  முகவர்

இது என்ன புதிய செய்தியா?

நீங்கள் முகவர் என்பது தெரியும்.  உங்கள் முகவர் பதவியை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள என்ன முயற்சியும் செய்வீர்கள் என்பதும் தெரியும்.

நான் கேட்டது பையனுடைய முகவரை உங்களை அல்ல.... ஒரு வேளை நீங்கள்தான் பையனின் முகவராக இருந்தால்...  நாம ஏன் இவ்வளவு மொக்கையாக இருக்கிறோம் என்பதை விளக்கம் வைத்து எழுதவேண்டியதில்லை.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

இது என்ன புதிய செய்தியா?

நீங்கள் முகவர் என்பது தெரியும்.  உங்கள் முகவர் பதவியை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள என்ன முயற்சியும் செய்வீர்கள் என்பதும் தெரியும்.

நான் கேட்டது பையனுடைய முகவரை உங்களை அல்ல.... ஒரு வேளை நீங்கள்தான் பையனின் முகவராக இருந்தால்...  நாம ஏன் இவ்வளவு மொக்கையாக இருக்கிறோம் என்பதை விளக்கம் வைத்து எழுதவேண்டியதில்லை.

என்ன‌ சொல்ல‌ வாறீங்க‌ள் ஒன்றும் புரிய‌ வில்லை , 

😮

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என்ன‌ சொல்ல‌ வாறீங்க‌ள் ஒன்றும் புரிய‌ வில்லை , 

😮

சீ

ஒன்றுமில்லை

மௌனத்தை  கலைக்கப்பார்க்கிறாவாம்...??:grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

அதை ஏன்யா என்கிட்ட கேட்கிறீங்க நான் என்ன நீங்க சீமானுக்கு முட்டு கொடுப்பது போல சம்பந்தன் சுமந்திரன் அல்லது் கருணாநிதி குடும்பத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்தாலும் சரி என்டு  முட்டு கொடுத்தேனா?

சீமான் என்று ஒருவன் அரசியலில் பிறந்த நாளில் இருந்து 
உங்களால் முடிந்த சேறை வாரி வாரி அடிக்கிறீர்கள்.
காரணம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் அவர் ஒன்றும் செய்ததில்லை என்று.

ஒன்றும் செய்யாத மற்றவர்கள் மேல் நீங்கள் இதே சேறை அடிப்பதில்லையே 
இதே காரணத்தை சொல்லி?

கேள்வி முட்டுக்கொடுப்பது பற்றியது அல்ல ...... அவதூறும் அதன் காரணமும் பற்றியது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Maruthankerny said:

சீமான் என்று ஒருவன் அரசியலில் பிறந்த நாளில் இருந்து 
உங்களால் முடிந்த சேறை வாரி வாரி அடிக்கிறீர்கள்.
காரணம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் அவர் ஒன்றும் செய்ததில்லை என்று.

ஒன்றும் செய்யாத மற்றவர்கள் மேல் நீங்கள் இதே சேறை அடிப்பதில்லையே 
இதே காரணத்தை சொல்லி?

கேள்வி முட்டுக்கொடுப்பது பற்றியது அல்ல ...... அவதூறும் அதன் காரணமும் பற்றியது.

சீமான் தமிழகத்தில் பாசிசத்தை  விதைக்கிறார்

தனித்தமிழ் பற்றிப்பேசுகிறார் 

தமிழகத்தில்  தமிழன் ஆட்சி  பற்றிப்பேசி மற்றவர்களை  பகைக்கிறார்   என்கிறார்கள்

ஏதாவது  புரிகிறதா  உங்களுக்கு???

உண்மையில்  ஆரம்பத்தில் எம்மையும்  இப்படித்தான் வடிகட்டினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அருமையான‌ க‌ருத்து ம‌ருத‌ங்கேணி அண்ணா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

சீமான் தமிழகத்தில் பாசிசத்தை  விதைக்கிறார்

தனித்தமிழ் பற்றிப்பேசுகிறார் 

தமிழகத்தில்  தமிழன் ஆட்சி  பற்றிப்பேசி மற்றவர்களை  பகைக்கிறார்   என்கிறார்கள்

ஏதாவது  புரிகிறதா  உங்களுக்கு???

உண்மையில்  ஆரம்பத்தில் எம்மையும்  இப்படித்தான் வடிகட்டினார்கள்

அன்று வடிகட்ட ஆரம்பித்தவர்கள் இன்றும் வடிகட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நான் முதலில் அவர்கள் ஏதோ அறிந்துதான் சொல்கிறார்கள் என நினைத்தேன்.2009க்கு பின்னரும்  தொடரவே அவர்கள் அறிந்து சொல்லவில்லை அது அவர்கள் தொழில் என்பதை புரிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அன்று வடிகட்ட ஆரம்பித்தவர்கள் இன்றும் வடிகட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நான் முதலில் அவர்கள் ஏதோ அறிந்துதான் சொல்கிறார்கள் என நினைத்தேன்.2009க்கு பின்னரும்  தொடரவே அவர்கள் அறிந்து சொல்லவில்லை அது அவர்கள் தொழில் என்பதை புரிந்து கொண்டேன்.

இது தான் என் ம‌ன‌சிலும் தாத்தா , 

முக‌ நூலில் அல்ல‌து வேறு த‌ள‌ங்க‌ளில் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி இவ‌ர்க‌ள் எழுத‌னும் , காணொளி மூல‌ம் இவ‌ர்க‌ளுக்கு புரியும் ப‌டி சொல்லுவின‌ம் , அப்போது ஒரு சில‌ கெட்ட‌ வார்த்தைக‌ளும் வ‌ரும் கோவ‌த்தில் அத‌ கேட்டால் இவ‌ர்க‌ளாக‌வே ஒதுங்கி கொள்ளுவின‌ம் , 

அண்ண‌ன் சீமானுக்கு எதிரா க‌ருத்து ப‌திவிடும் இவ‌ர்க‌ள் சீமானை நேரில் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் ? 

அண்ண‌ன் சீமான் நேரில் ஆள் பொறுமையும் அமைதியும் , 

இவ‌ர்க‌ள் யாழில் எழுதுவ‌த‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னால் சொல்ல‌னும் , க‌டுப்பாகி அடி உதை அந்த‌ ரேஞ்சுக்கு போகும் நில‌மை , 

2013ம் ஆண்டு சிங்க‌ள‌ புத்த‌பிக்குக்கு ரெயினுக்கை வைச்சு அடிச்ச‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சேர்ந்த‌ தொண்ட‌ர்க‌ள் ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/1/2019 at 5:24 PM, வல்வை சகாறா said:

இன்னும் திருந்தேல்லை

திருந்தோணும் எண்டால்.....திருந்தி யாரைப்போல இருக்கவேணும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌டைய‌ல் ப‌ல‌ர் எம் இன‌த்தில் ஒருவ‌ர் வ‌ள‌ந்து வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு பிடிக்காது , த‌லைவ‌ர் ஆயுத‌ம் தூக்கின‌ கால‌த்தில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ எவ‌ள‌வு விம‌ர்ச‌ன‌த்தை ச‌ந்திச்சார் , வான‌த்தை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌ கால‌ம் இது தாத்தா 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2019 at 5:55 PM, ரதி said:

****

சீமான் ,புலிக் கொடியையும்,தலைவர் படத்தையும் வைத்து எதுவும் செய்யலாம் ...இந்திய அரசு கண்டு கொள்ளாது....சீமான் றோவின் ஆள் என்று தெரியாதா?...தலைவரது படத்தை ,புலிக் கொடியை வைத்து வைகோவோ அல்லது வேறு யாராவது தமிழகத் தலைவர் ஆர்ப்பாட்டம் செய்தால் உடன் உள்ளுக்கு போய் விடுவார்கள்

உந்தக் கதை கதைக்காதேங்கோ ரதி. சீமானுக்கு இந்திய மத்திய அரசாங்கமே பயம். அதனாலதான் அவரைப்பிடிச்சு உள்ள வைக்கிறதில்லை. இருந்து பாருங்கோ புலம்பெயர் தமிழர்கள் அனுப்புற காசிலையே ஈழத்தை வாங்கித் தந்திடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் வணக்கம்,

எங்கட ஆட்டகளில கொஞ்சப்பேர் இருக்கீனம். அவங்க எல்லாம்  தாங்க மட்டும் தான் எல்லாத்துக்கும் முன்னணியில இருக்கோணும்.  மற்றவன் எல்லாரும் தம்மை தூக்கி பிடிக்கோணும் என்ர நினைப்பில இருக்கீனம். 

சரிதான். நல்ல விஷயம் தான்.  ஆனால் அவங்கள தூக்கி பிடிக்கிறதுக்கு அவங்கட்ட என்ன இருக்கு, தகுதியானவ தானா  என பார்த்தா அங்க ஒன்டுமே இல்ல.  இவங்கள சனம் திரும்பிப்பார்க்க மாட்டுது. 

உவங்களுக்கு உடன கோவம் வந்திடும். 

பின்ன அவங்கள தூக்கிப் பிடிக்காட்டி கோவம் வரத்தானே செய்யும். உடன தூக்கிப் பிக்காத  ஆட்களையெல்லாம் கண்டமாதிரி திட்ட வெளிக்கிடுவாங்க. ஏண்டாப்பா அவன திட்டுறாய் எண்டு அதால வாறவன் கேட்டா கேட்டவனுக்கும் திட்டுதான். 

நீ  திட்டுறது பிழை எண்டு சொன்னால்.  இல்லாட்டி அவனில என்ன பிழை எண்டு கேட்டால், நான் படிச்சவன் நான் சொல்லுறது தான் சரி எண்டு நிப்பாங்கள். 

சரியடாப்பா,  படிச்சனீயெல்லோ,  எது பிழை எண்டு சொல்லன் எண்டு கேட்டால்.  எனக்கு எழுதத் தெரியும் அதனால நான் சொல்லுறதுதான் சரி எண்டு திரும்ப சொல்லுவாங்க.

அதத்தான் நானும் கேக்கிறன். எது சரி எண்டு சொல்லன் எண்டு சொன்னால்,  நீ சொல்லுறது பிழை எண்டு ஏவம் கேக்கப் போன எனக்கும் ஏச்சுசுத்தான்.

கடைசீல,  அவன கணக்கில எடுக்காதவனும் பேச்சு வேண்டி,  ஏவம் கேக்கப்போனவனும் பேச்சு வேண்டி,  ரென்சு பேரும் மண்டை குழம்பி மயிர பிக்கேக்க......

அந்தக் கூட்டம் திரும்பவும் வேறொருவன குழப்புற வேலைக்கு போயுடும். 

இங்க நாங்க எல்லாம் மண்டைய போட்டு சொரிஞ்சதுதான் மிச்சம். 

அந்தக்கூட்டம் ஆரெண்டு பாத்தா,  அது தானும் படுக்கான்,  தள்ளியும் படுக்கான் கூட்டம். 

இம்மட்டிலதான் எனக்கு விளங்கினது. வேற ஆருக்காலும் இதவிட வேற மாதிரி விளங்கினால் என்க்கொருக்கா சொல்லுங்கப்பு........... 

Edited by Maharajah
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிய சிரிப்பு பகுதிக்கு மாத்துங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maharajah said:

எல்லாருக்கும் வணக்கம்,

எங்கட அட்டகளில கொஞ்சப்பேர் இருக்கீனம். அவங்க எல்லாம்  தாங்க மட்டும் தான் எல்லாத்துக்கும் முன்னணியில இருக்கோணும்.  மற்றவன் எல்லாரும் தம்மை தூக்கி பிடிக்கோணும் என்ர நினைப்பில இருக்கீனம். 

சரிதான். நல்ல விஷயம் தான்.  ஆனால் அவங்கள தூக்கி பிடிக்கிறதுக்கு அவங்கட்ட என்ன இருக்கு, தகுதியானவ தானா  என பார்த்தா அங்க ஒன்டுமே இல்ல.  இவங்கள சனம் திரும்பிப்பார்க்க மாட்டுது. 

உவங்களுக்கு உடன கோவம் வந்திடும். 

பின்ன அவங்கள தூக்கிப் பிடிக்காட்டி கோவம் வரத்தானே செய்யும். உடன தூக்கிப் பிக்காத  அட்டகளையெல்லாம் கண்டமாதிரி திட்ட வெளிக்கிடுவாங்க. ஏண்டாப்பா அவன திட்டுறாய் எண்டு அதால வாறவன் கேட்டா கேட்டவனுக்கும் திட்டுதான். 

நீ  திட்டுறது பிழை எண்டு சொன்னால்.  இல்லாட்டி அவனில என்ன பிழை எண்டு கேட்டால், நான் படிச்சவன் நான் சொல்லுறது தான் சரி எண்டு நிப்பாங்கள். 

சரியடாப்பா,  படிச்சனீயெல்லோ,  எது பிழை எண்டு சொல்லன் எண்டு கேட்டால்.  எனக்கு எழுதத் தெரியும் அதனால நான் சொல்லுறதுதான் சரி எண்டு திரும்ப சொல்லுவாங்க.

அதத்தான் நானும் கேக்கிறன். எது சரி எண்டு சொல்லன் எண்டு சொன்னால்,  நீ சொல்லுறது பிழை எண்டு ஏவம் கேக்கப் போன எனக்கும் ஏச்சுசுத்தான்.

கடைசீல,  அவன கணக்கில எடுக்காதவனும் பேச்சு வேண்டி,  ஏவம் கேக்கப்போனவனும் பேச்சு வேண்டி,  ரென்சு பேரும் மண்டை குழம்பி மயிர பிக்கேக்க......

அந்தக் கூட்டம் திரும்பவும் வேறொருவன குழப்புற வேலைக்கு போயுடும். 

இங்க நாங்க எல்லாம் மண்டைய போட்டு சொரிஞ்சதுதான் மிச்சம். 

அந்தக்கூட்டம் ஆரெண்டு பாத்தா,  அது தானும் படுக்கான்,  தள்ளியும் படுக்கான் கூட்டம். 

இம்மட்டிலதான் எனக்கு விளங்கினது. வேற ஆருக்காலும் இதவிட வேற மாதிரி விளங்கினால் என்க்கொருக்கா சொல்லுங்கப்பு..........

உங்களுக்கும் வணக்கம்..

எனக்கு சில ஈழத் தமிழ் சொற்றொடர்கள் புரியவில்லை.

'ஏவம் கேக்கப் போவது' என்றால் நியாயம் கேட்கப் போவதா?

'அட்டக' என்றால் 'அட்டைகளா..?' பொருத்தமாக விளங்குதில்லையே..!

ஈழத் தமிழ் கற்க, மறுபடியும் அரிச்சுவடியிலிருந்து வரணும் போல தெரியுது..!! 😋

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களை அட்டகள் என்று குறிப்பிட்டாரோ? இல்லை தமிழ் தட்டச்சு குழப்பமோ?!

On 12/2/2019 at 8:21 AM, நிழலி said:

சீமான் பேசுவதில் உள்ளது குறை அல்ல. அவர் ஈழம் தொடர்பாக, தலைவர் தொர்பாக பேசுவது பொய்,பம்மாத்து, பித்தலாட்டம்.

போலி திராவிடம் பேசும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன் கட்சியை மக்கள் முன் நிறுத்துகின்றேன் என்று பறை சாற்றும் சீமான் பேசுவதும் பொய்யும் பித்தலாட்டமும் பாசிசமும் தான். பிரச்சனைகளின் மூலத்தினை விட்டு விட்டு தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு திராவிடமும், தமிழர் அல்லாதவர்களும் மட்டுமே காரணம் என்கின்ற பாசிசமும் அவரின் அரசியல் முழுதும் வியாபித்து கிடக்கு.

தமிழகத்தின் பிரச்சனைகளின் மூலத்தை தேடுவதின் விழைவாகவே திராவிட அரசியலுக்கு மாற்று அரசியலும் தமிழரல்லாதோர் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.  

மேலும் உங்கள் சொல்லாடல்கள் எல்லாம் தனியே கருத்தியல் ரீதியான எதிர்வினையாக இல்லை. போராட்ட காலத்தில் தேனீ இணையம் தமிழரங்கம் இரயாகரன் சிறிரங்கன் யுரிஎச் ஆர்  போன்றவர்கள் பாசிசப் புலிகள் என்று கத்தினதையே நினைவுபடுத்துகின்றது. போராட்டம் முடிந்தவடன் அவர்கள் சத்தமும் நின்றவிட்டது.  தமிழர்களின் அரசியலை சூனியத்தை நோக்கி நகர்த்துவதே அவர்கள் நோக்கமாக இருந்தது. அதுவும் நடந்தது. அவர்களிடம் இருந்த மேலாதிக்க  வக்கிரத்தை அறிவை பயன்படுத்தி ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் இன விடுதலைப்போரை எதிர்த்தார்கள். அவர்களால் எதையும் இனத்துக்காக செய்ய முடியாது என்பதை நூறுவீதம் அறிந்தும் இனத்தின் எதிர்காலம் குறித்து எந்த வருத்தமும் இல்லாமல் செய்தார்கள்.புலிகளின் முடிவோடு அவர்களும் அமைதியானார்கள். இப்போது அதே பாணியை தமிழகத்தில் எழும் நாம் தமிழர் என்ற குரலுக்கு எதிராக இங்கு கிழம்புகின்றார்கள். இந்த குரலை நிர்மூலமாக்கி சூனியமான ஒரு நிலையை தோற்றுவிப்பதற்கு தங்களாலான பங்களிப்பை செய்கின்றார்கள். இது பாசிசம் என்பதை கண்டுபிடிக்க பயன்படுத்தும் மகா அறிவை இது தமிழர்களுக்கான தேசியத்தின் ஜனநாயக சக்தி என்று ஒரு துரும்பை சுட்டிக்காட்டுங்களேன்.. எல்லோரும் அதை பின்பற்றி பலப்படுத்தலாம். 

நேற்று மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பட்டேல் இன அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அதை நியாயம் கேட்டவர்கள் போலீசால் அடித்து இழுத்து செல்லப்பட்டனர். தமிழகம் மட்டுமல்ல ஈழத்திலும் எமது சமூகக் கட்டமைப்பே பாசிசம் தான் .  இதற்குள் யாரொருவரும் ஜனநாயகவாதியாக தமது அறிவைக்கொண்டு மாறிவிட முடியாது.. இனமாக மேலெழுவதற்கு எது கிடைக்கின்றதோ அது பயன்படும் வரை அதைப்பிடித்து மேலேள வேண்டியதுதான். இல்ல கீழ இழுத்து விழுத்திவிட்டுசாதித்து விட்டதாக அதே இடத்தில் நிற்பதுதான் அறிவென்றால் அதற்கு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நந்தன் said:

இந்த திரிய சிரிப்பு பகுதிக்கு மாத்துங்கப்பா

நண்டர்! நீங்கள் அங்கை நிண்டுதான் இதை எழுதுறியள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

உங்களுக்கும் வணக்கம்..

எனக்கு சில ஈழத் தமிழ் சொற்றொடர்கள் புரியவில்லை.

'ஏவம் கேக்கப் போவது' என்றால் நியாயம் கேட்கப் போவதா?

'அட்டக' என்றால் 'அட்டைகளா..?' பொருத்தமாக விளங்குதில்லையே..!

ஈழத் தமிழ் கற்க, மறுபடியும் அரிச்சுவடியிலிருந்து வரணும் போல தெரியுது..!! 😋

மன்னிக்கவும் ரசவன்னியன், 

ஏவம் -  நியாயம். 

அட்டகள்  - ஆட்கள் (எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது )

நன்றி 

6 hours ago, ஏராளன் said:

ஆட்களை அட்டகள் என்று குறிப்பிட்டாரோ? இல்லை தமிழ் தட்டச்சு குழப்பமோ?!

எழுத்துப்பிழை, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த திரி கொஞ்சம் தொய்யிற மாரிக் கிடக்கு?

விடப்படாது மக்காள்- நான் வேற மூண்டு பக்கெட் சோளப்பொரி வாங்கி வந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி போதியளவு எழுதியாகிவிட்டது. எனவே அதை கடந்து போகிறேன்.

ஆனால் நேற்று இதை ஒரு இந்திய நண்பரிடம் சிலாகித்த போது, அவர் சொன்னார்:

”சீமான் ஒரு வெறும் பயல் என்பது எனக்கே தெரிகிறது, பிரபாகரனை சந்தித்த போது சீமான் ஒரு ரெண்டு படம் எடுத்த பையன். அவருக்கு போய் பிரபாகரன் இவ்வளவு முக்கியதுவம் கொடுத்தார், ஒரு போராளியை, கடும் சண்டை ஆளணி பற்றாக்குறையின் மத்தியிலும் இப்படி வீணடித்தார் எனும் போது, பிரபாகரனின் ஆளுமை நிர்வாகத் திறன் பற்றிய என் மேலான மதிப்பீடு தகர்கிறது” என்றார்.

பிரபா அப்படிச் செய்திருக்கமாட்டார், அப்படி சீமானின் பெறுதி தெரியாத ஆளில்லை அவர் என விளங்கப் படுத்திவிட்டு வந்தேன்.

ஆனால் இப்படி இன்னும் எத்தனை தமிழக மக்கள் மத்தியில் சீமானின் பேச்சு, எமது போராட்டம், புலிகள், பிரபா பற்றிய எதிர் மறை கருத்தை விதைக்கிறது என்பது நம் எல்லாரினதும் கவனத்துக்குரியது.

இப்படி செய்யும் படி ரோ சீமானை ஏவுவதாயும் இருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

சீமானின் பேச்சுக்களில் பிழை இருப்பின் அதனை பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும்.  மாறாக சேறடித்தல் ஒரு தகுதிவாய்ந்தவனின் செயல் அல்ல.

நாங்கள் ஒன்றை இலகுவாக மறந்துவிடுகின்றோம். இங்கு யாரும்  சீமானை பிழைவிடாத ஒருவர் என்று கூறவில்லை.  ஆனால் சகட்டுமேனிக்கு வசைபாடுதல்,  தூற்ருதல் தவிர்க்கப்பட வேண்டும்.  

தற்போதைய சூழலில்,  தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சார்பாக குரல் கொடுப்பவர்களில் சீமானும் திருமுருகனும் முக்கியமானவர்கள். இவர்களின் செயட்பாடுகள்தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக, தமிழக மக்களுக்கு எப்போதும் எம்மை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கிறது.  இவர்களை நாங்கள் காயப்படுத்துவது எந்த அளவில் தகுதியான செயல் ?? 

நாங்கள் அவர்களை தூக்கிப் பிடிக்காவிட்டாலும்,  காயப்படுத்தாமல் இருக்கலாமல்லவா  ??? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

என்ன இந்த திரி கொஞ்சம் தொய்யிற மாரிக் கிடக்கு?

விடப்படாது மக்காள்- நான் வேற மூண்டு பக்கெட் சோளப்பொரி வாங்கி வந்துள்ளேன்.

roflphotos-dot-com-photo-comments-20170516094943.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.