Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

ஹைதராபாத்

தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

bbctamil

  • Replies 66
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுடவேண்டும் என்று சுட்டு இருக்கிறார்கள் 
பாலியல் வல்லுறவு ஒரு ஆணாதிக்க கொடூரம் என்றால் 
இது இன்னொரு போலீஸ் அராஜகம் 

ஒழுங்கான சட்டமுறைமை இல்லை என்பதே இதன் பொருள். 
இவர்களுக்காக வாதாட வந்து பொய்களை கூறும் இரண்டு வக்கீலை 
தூக்கி நீதிமன்றில் பொய்கூறிய குற்றத்துக்கு உள்ளே போட்டால் 
மீதி தானாக திருந்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

பெண்ணென்றால் கேவலமா..?

இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும்.

மரண தண்டனையே சரியானது.

ELEyRC_U8AEcb4L?format=jpg&name=small

ELEyOZyUYAAivgS?format=jpg&name=small

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் மருத்துவர், வேலை முடிந்த களைப்பில்.... வீடு  திரும்பும் போது,
அவரை நான்கு பேர் மறித்து.... பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாது,
அவரை எரித்துக் கொன்றவர்கள், எப்படிப் பட்ட  மனநிலை உடைய  மனிதர்களாக இருப்பார்கள்?

அவர்களை... இந்த  உலகில் நடமாட விடுவதே ஆபத்தானது.
போலீசார் அவர்களை சுட்டுக் கொன்றது சரி.

இதனைப் பார்த்தாவது... இந்தியாவில் அதிகரித்து வரும், 
பாலியல் வன்கொடுமைகள் முடிவுக்கு வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

பெண்ணென்றால் கேவலமா..?

இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும்.

மரண தண்டனையே சரியானது.

ELEyRC_U8AEcb4L?format=jpg&name=small

ELEyOZyUYAAivgS?format=jpg&name=small

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

14 minutes ago, Maruthankerny said:

இவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் குழப்பம் இல்லை ஆனால் மத்திய மாநில அரசும் போலீசும் ஆலோசித்து வெளிப்படையாக இதை செய்திருக்கின்றார்கள். இதனால் பெரும்பாலான மக்களுக்கு திருப்தி கிடைக்கும் ஆனால் சட்டத்தை அரசே கேலிப்பொருளாக்கி கேள்விக்குறியாக்கிவிட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசே செயற்படும் நிலை என்பது நாட்டின் இறையாண்மைக்கே பங்கம். நீதிமன்றத்தால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடே  பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பிறக்கும் இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

இந்த நாலுபேரும் திட்டமிட்டு குற்றத்தை செய்ததிற்கான ஆதாரம் காவல்துறையிடம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை. பாலியல் வல்லுறவை நேரடி சாட்சியை வைத்துக்கொண்டா செய்கிறார்கள்..?

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது. மற்ற குற்றவாளிக்கு இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது..

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காகத்தான் அரசும், நீதியுமே தவிர, நீதிக்காக மக்கள் இல்லை.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

... இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது. 

இதுக்குப் பெயர்தான் 'Lateral Thinking'..!

தங்களுக்கு முதல்வருக்கு ஆலோசகராகும் 'விற்பன்னம்' உள்ளது ஐயா..!  vil-yes.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

👍

17 minutes ago, ராசவன்னியன் said:

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தி கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று ஈழத்தில்  கேட்கிறார்கள். இந்திய போலிசின் என்கவுண்டரை கேட்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

👍

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தி கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று ஈழத்தில்  கேட்கிறார்கள். இந்திய போலிசின் என்கவுண்டரை கேட்கவில்லை.

உலக போலீசிடம் உடனடியாக தண்டனை கேட்கிறீர்களே? அதுதான் கேள்வி இங்கே..!

இந்திய மக்களும், தன்னுடைய இந்திய அரசிடம்தான் கேட்கிறார்கள்.

நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் இது ஓப்பிடு என.!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போலீஸின் இவ்வளவு அவசரம் எங்கேயோ உதைக்குது அதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒருவர் இரவு தனியாக வீட்டுக்கு போய்  திரும்பி உள்ளார் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இந்த நாலு பேரின் உதவியுடன் அங்குள்ள பணமுதலை  அல்லது பணமுதலைகள் கூட்டாக இந்த அநியாயத்தை செய்து இருக்கலாம் ஏனென்றால் இந்த நால்வருக்கென்ன சின்ன பிள்ளைக்கே தெரியும் டோல் கேட்டில் கமராக்கள் இருப்பது பற்றி நம்பர்  பிளேட் மூலம் போலீஸ் இலகுவாக மோப்பம் பிடிக்கும் என்பதும் தெரியும் அவர்களுக்கு அப்படியிருந்தும் இப்படியான பாரதூரமான குற்றம் செய்ய யாரும் யோசிக்க மாட்டார்கள். உண்மையான குற்றவாளிகளையும் இவர்களுடன் சேர்த்து நடுச்சந்தியில் வைத்து கொளுத்தி இருக்கணும் அதுதான் சரியாகும் நாளை எவனும் தனியாக போகும் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன்  பார்க்கமாட்டன் .

இக்கருத்துக்கு வரிந்து கட்டிக்கொண்டு கல்லெறிய வருபவர்களுக்கு செய்தி - 80லட்ஷசம் பேர் கூகிளை போய்  கேட்டு இருக்கினம் இந்த வல்லுறவு ஒளிநாடா  காட்ச்சிகள்  இருக்கா எண்டு .😡

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது.

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காத்தான் அரசும், நீதியுமே தவிர நீதிக்காக மக்கள் இல்லை.

அதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை 

ஒரு வேளை சுவாதி கொலையிலும்  அந்த சிறுவனை முதல் நாளே போலீசு 
இப்படி போட்டு தள்ளி இருந்தால் ...
அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள்.

உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் 
வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் 
ஆனால் நடந்தது வேறே.
மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் 
ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை? அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. 

ஈழத்தில் உடனடி தண்டனை என்றால்  83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை 
புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் 
இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான்.

எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை.
ஆனால் இது இந்திய போலீசு  நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது 

கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .
அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ராசவன்னியன் said:

வன்னியன் அண்ணா பட்டு தெளிந்ததால்தான் சொல்கிறேன் 
இன்னும் இரண்டு மூண்டு கொலைகள் இப்படி நடக்கும்போது 
நீங்கள் மிகுந்த ஆதரவு கொடுப்பீர்கள் 
இது போலீசுக்கு ஒரு ஆணவத்தை உருவாக்கும் 
பின்பு ஒரு நாளில் இல்லை அவர்கள் அதை செய்திருக்கவில்லை என்பது 
உங்களுக்கு தெரியவரும்போது  ............ நீங்களே போலீசு அராஜகம் ஒழிக என்பீர்கள்.

அப்போது அப்பாவி  உயிர்கள் பல போயிருக்கும் 
கொடிய குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி உங்கள் கண் முன்னாலேயே திரிவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

... கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .

அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

இதுதென்னவோ உண்மைதான்.

சட்டங்கள் மிகக்கடுமையாக்கபட வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற வேண்டும், அதற்கு எத்தனை தடைகளோ..? இந்தியா ஒரு போலி தேசியவாத நாடு. வல்லவனுக்கு சட்டம் எளிதில் வளைந்து கொடுக்கும். எளியவனை தூக்கி மிதிக்கும்.

ELFvxtKXkAEB73z?format=jpg&name=small

உன்னாவ் பாலியல் குற்ற வழக்கில், பி.ஜே.பி எம் எல் ஏ இன்னமும் சுதந்திரமாக மேலிட பாதுகாப்பால் திரிந்துகொண்டுதான் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

அதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை 

ஒரு வேளை சுவாதி கொலையிலும்  அந்த சிறுவனை முதல் நாளே போலீசு 
இப்படி போட்டு தள்ளி இருந்தால் ...
அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள்.

உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் 
வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் 
ஆனால் நடந்தது வேறே.
மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் 
ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை? அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. 

ஈழத்தில் உடனடி தண்டனை என்றால்  83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை 
புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் 
இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான்.

எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை.
ஆனால் இது இந்திய போலீசு  நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது 

கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .
அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

ஐயா கும்புடுறனுங்க, 

தயவுசெய்து புலியள  இங்கே இழுக்க வேண்டாமுங்க . பிறகு திரி வேற எங்கோ  போய் முடியுமுங்க . அதுக்கு நீங்க பிள்ளையார் சுழி போட்டுறாதீங்கய்யா. 

தப்பு இருந்நதா மன்னிச்சிருங்கய்யா. 

Edited by Maharajah
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான் 

போடணும்  என்று முடிவு  எடுத்துவிட்டால் அப்பனாலேயே  போடமுடியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

நிகழ்விடத்தில் திரண்ட மக்கள் அங்கிருந்த போலீஸார் மீது பாலத்தின் மேல் இருந்தவாறே ரோஜா மலர்களைத் தூவி வாழ்த்தினர். டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க என கோஷமிட்டனர். பெண் மருத்துவரின் அண்டை வீட்டார் திரண்டு வந்து போலீஸாருக்கு இனிப்புகளை வழங்கினர். சிலர் போலீஸாரை தங்களின் தோள்களின் மீது தூக்கி ஆரவாரம் செய்தனர்.

தெலங்கானா முழுவதுமே மக்கள் ஒரேமாதிரியான மகிழ்ச்சி மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ani_mic_logo_bigger.jpg
 
#WATCH Hyderabad: 'DCP Zindabad, ACP Zindabad' slogans raised near the spot where where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter by Police earlier today. #Telangana

Embedded video
 
https://twitter.com/i/status/1202818900452237313

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் நாலு பேரை போட்டுத்தள்ளினத்துக்கு போலீசை தோளில்  தூக்கி கொண்டாடும் பொதுமக்கள் இன்னொரு பக்கம் ................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்ட்டர் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

”மரணமே தண்டனை என்றால் தான் ஒழுக்கம் வரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்” - சீமான்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது நினைவு நாளையொட்டி அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்து கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக தெரிவித்தார்

மேலும், பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என்று கூறிய அவர்,

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது தவறு என்று குறிப்பிட்டார்

https://tamil.news18.com/news/tamil-nadu/seeman-about-hyderabad-encounter-san-232447.html

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சிதான்.

இதுபோன்ற என்கவுண்டர்கள்  பெண்கள்மீது கை வைக்கநினைக்கும்  ஆயிரம்பேருக்காவது பேருக்காவது மரண பயத்தை உண்டாக்குமென்றால் 100 பெண்களாவது இந்த மண்ணில் தமது இயற்கை மரணம்வரை பாலியல் படுகொலைகளிலிருந்து தப்பித்து சகமனிதர்களிபோல் ஆசைகளுடனும் கனவுகளுடன் வாழ்வை வாழ்ந்து முடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இந்த தண்டனைகளை அரசியலும், பண பலமும் உள்ளவர்கள்மேல் நிறைவேற்றிகாட்டும் தைரியம் இந்திய காவல்துறைக்கு உள்ளதா?

பிடித்து உள்ளே போட்டால் அடுத்தகிழமையே ஜாமீன் வாங்கிகொண்டு வெளியே வந்து பிஎம் டபிள்யூ காரில் திரிவார்கள்.

அதையுமீறி அவர்களை என்கவுண்டர் பண்ணினால் பண்ணிய காவல்துறை அதிகாரிக்கு பதவி பறிபோகும் சிறை தண்டனையும் நிச்சயம்.

பாலியல் படுகொலைக்குள்ளாகும் பெண்களுக்கான நீதி என்பது அவர்களை பாலியல் பலாத்காரம் பண்ணியவர்களின் அந்தஸ்து என்ன என்பதை பொறுத்தே இந்தியாவில் தீர்மானிக்கப்படுகிறது,

சீனாவைப் போன்று ஒரு மிகப்பெரிய இணைய தடுப்புச்சுவர் (Great Internet Firewall) அமைத்து இணையத்தைத் தணிக்கை செய்வது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு மிக மிக அத்தியாவசியமானது. இன்றைய இந்தியாவின் மொத்த இணைய உள்ளடக்க பாவனையின் (Content Usage) 50%மானவை இந்த சுவரை தாண்டி செல்ல தகுதி அற்றவை. ஆனால், இது பல தொலைதொடர்பு பெருநிறுவனங்களின் வருமானத்தை கடுமையாக பாதிக்கக் கூடியதனால், பெருமுதலைகள் அனுமதிப்பார்களோ தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

பிரான்சிலே நடக்கும் அநேகமான  பயங்கரவாதத்தாக்குதல்களும்

தனிமைப்படுத்தப்பட்டு  போட்டுத்தள்ளுவதனுடன்  தான்  நிறைவு பெறும்

நீதி  சரியாக  கிடைத்தாலும்  வைத்துப்பராமரிக்கும் செலவு மற்றும்  இடம்  என்பனவே  முக்கிய  காரணிகள்

"ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். "

குற்றம் நிரூபிக்கப்படாதவரையில், அவர்கள் நிரபராதிகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.