Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என‌து ந‌ண்ப‌னுக்கு கொரோனா

Featured Replies

பையா உங்கள் நண்பர் நலம்பெற வேண்டுகிறேன்.அவர் எந்த நாட்டில் இருக்கிறார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பையன்,

ஆள் கிட்டதட்ட மீண்டமாரித்தான். நீங்கள் தெம்பாக பேசி ஆளை ஸ்டெடியாக வைத்திருங்கள்.

அவருக்கு முன்பே ஏதும் அஸ்மா போல வியாதிகள் இருந்ததா?

சிலருக்கு தும்மலும் இல்லாமல் போகும் வியாதி, சிலரை மரணத்தின் வாசல் வரையும் இன்னும் சிலரை அதை தாண்டியும் கொண்டு செல்கிறது.

Underlying வருத்தங்கள் உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை விடாமல் எடுக்க வேண்டுமாம். 

நில்மினி ஒரு குறிப்பு போட்டால் நல்லம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

ந‌ண்ப‌னுக்கு இதுக்கு முத‌ல் ஒரு வ‌ருட்த‌மும் இல்லை , அவ‌ன் வீட்டுக்கை இருப்ப‌தே குறைவு ,  ,கூட‌  வேலை , விடுமுறை கால‌ங்க‌ளில் ம‌லேசியா போன்ற‌ நாடுக‌ளை சுற்றி பார்க்க‌ போயிடுவான் , கொரோனாவுக்கு பிற‌க்கு தான் இவ‌ள‌வு வ‌ருட்த‌மும் 

47 minutes ago, ஜெகதா துரை said:

பையா உங்கள் நண்பர் நலம்பெற வேண்டுகிறேன்.அவர் எந்த நாட்டில் இருக்கிறார்?

டென்மார்க் நாட்டில்  உற‌வே 

6 hours ago, Kapithan said:

அவர் நோய்த்தொற்றுக்குள்ளானது எவ்வாரு எனத் தெரியுமா. நீங்கள் அவரை அண்மையில் நேரில் சந்தித்தீர்களா ?

எல்லாம் வெல்லுவம் கவலைப் படாதேயுங்கோ.👍

ந‌ண்ப‌ன் ஜேர்ம‌ன் நாட்டு க‌டையான‌ ALDIயில் வேலை செய்கிறார் டென்மார்க்கில் , இப்போது உள்ள‌ சூழ‌லில் ந‌ண்ப‌னுக்கு கிட்ட‌ ம‌ருத்துவ‌ர்க‌ளை த‌விற‌ வேறு யாரும் நெருங்க‌ முடியாது / வீட்டில் த‌னிமையில் , போனுக்காள் தான் க‌தைக்க‌ முடியும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பையா
வயது குறைவென்றபடியால் வெகுவிரைவில் குணமாகிவிடுவார்.
கொஞ்சம் சுகம் என்றவுடன் எழும்பி திரிந்து மற்றவர்களுக்கும் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் வயதெல்லை 65 என்றாலும் 
இப்போ 55 வயதாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நியூயோர்க்கும் கலிபோர்ணியாவும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுவே இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் போல.

ஓம் ஓம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா விழிப்புண‌ர்வுட‌ன் இருப்ப‌து முக்கிய‌ம் / ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ முடியாது , வீட்டுக்கை தான் , 

உங்கள் நண்பர் சுகமடைந்தது மகிழ்ச்சி. மேலும் கவனமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகின்றேன்

உங்கள் நண்பன் நலம்பெற வேண்டுகிறேன்!!

உங்கள் நண்பன் மீண்டதையிட்டு சந்தோசம். வைரஸ் தொற்றிய பின் ஏற்பட்ட அறிகுறிகள், வந்த பின் எடுத்துக் கொண்ட மருத்துவ விடயங்கள், தனிமைப்படுத்தல் போன்றவற்றை அவரால் பகிர முடிந்தால்...அல்லது அவரிட்ம் கேட்டு நீங்களும் எழுதினால் பலருக்கு பயனாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

உங்கள் நண்பன் மீண்டதையிட்டு சந்தோசம். வைரஸ் தொற்றிய பின் ஏற்பட்ட அறிகுறிகள், வந்த பின் எடுத்துக் கொண்ட மருத்துவ விடயங்கள், தனிமைப்படுத்தல் போன்றவற்றை அவரால் பகிர முடிந்தால்...அல்லது அவரிட்ம் கேட்டு நீங்களும் எழுதினால் பலருக்கு பயனாக இருக்கும்.

நாளைக்கு விப‌ர‌மாய் எல்லாத்தையும் கேட்டு எழுதுகிறேன் / 

பாவிச்ச‌ ம‌ருந்தை ப‌ட‌ம் பிடிச்சு அனுப்ப‌ சொல்லுகிறேன் , அனுப்பின‌ உட‌ன் இந்த‌ திரியில் இணைக்கிறேன் நிழ‌லி அண்ண‌ 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 5:14 PM, பையன்26 said:

என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னுக்கு கொரோனா , 

இளைய வயது என்பதால் அவரால் நோயிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது.  நீங்களும் அவதானமாக இருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இளைய வயது என்பதால் அவரால் நோயிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது.  நீங்களும் அவதானமாக இருங்கள்.

ந‌ன்றி ஜ‌யா , நீங்க‌ளும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இப்போது உள்ள‌ சூழ‌லில் யாருக்கு எப்ப‌  என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது /

புறா போல் ப‌ற‌ந்து திரிந்த‌ என்ர‌ ந‌ண்ப‌னை ப‌டுத்த‌ ப‌டுக்கையில் கொன்டு போய் விட்டுது உந்த‌ கொரோனா 😓

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 7:49 PM, goshan_che said:

பையன்,

ஆள் கிட்டதட்ட மீண்டமாரித்தான். நீங்கள் தெம்பாக பேசி ஆளை ஸ்டெடியாக வைத்திருங்கள்.

அவருக்கு முன்பே ஏதும் அஸ்மா போல வியாதிகள் இருந்ததா?

சிலருக்கு தும்மலும் இல்லாமல் போகும் வியாதி, சிலரை மரணத்தின் வாசல் வரையும் இன்னும் சிலரை அதை தாண்டியும் கொண்டு செல்கிறது.

Underlying வருத்தங்கள் உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை விடாமல் எடுக்க வேண்டுமாம். 

நில்மினி ஒரு குறிப்பு போட்டால் நல்லம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

Covid -19 வைரஸ் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டதென்றே யாருக்கும் தெரியாது. எல்லாம் ஒரு ஊகம் தான். பக்டீரியா மாதிரி வைரஸ்க்கு  Antibiotic கும் வேலை செய்யாது. Vaccine தான் கண்டு பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார்கள்.முதலில் தும்மல் இருமல் துளிகள் ஒருவரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது துளிகள் 2 - 72 மணி வரை வெளியில் ஏதாவது ஒரு surface இருந்து அதை நாம் தொட்டு முகத்தில் காய் வைத்தால் எமது சுவாசக் குழாய்கள் மூலம் நுரயை  ஈரலை அடையும் என்று சொன்னார்கள். இப்போ இது காற்றிலும் கொஞ்ச நேரம் நிண்டுபிடிக்கும் என்கிறார்கள் (வைரஸ் எமது அல்லது மற்றய  உடல் கலங்களில்  மட்டும் தான் வாழும். வெளியில் கொஞ்ச நேரம் தான் பிழைக்கும். அத்துடன் இந்த வைரஸ் மனிதருக்கு உரியது. விலங்குகளை தாக்காது. வைரஸ்க்கு தானே இனப்பெருக்கம் செய்ய முடியாது. எமது கலங்களுக்குள்  சென்று  எமது DNA  யை  hijack பண்ணி நாமே வந்த ஒரு சில வைரஸ் யை மில்லியன் கணக்கில் பெருப்பித்து கொடுப்போம். அவை தான் எமது உடலை தாக்குகிறது. அதே வேளை எமது உடலில் உள்ள வெள்ளை கலங்கள்  வந்தது எந்த விதமான வைரஸ் என்று அறிந்து  அதற்கு எதிர்ப்பு கலங்களை உருவாக்கி அதை மில்லியன் கணக்கில் clone பண்ணி இந்த வைரஸ்க்கு எதிராக போரிடும். இப்படி போரிடுவதுக்கு எமக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். வயது போனவர்களுக்கு கலங்கள் போதிய அளவுக்கு வேலை செய்யாது. பயந்து கவலை பட்டால் . Stress ஆள் சில ஹோர்மோன்ஸ் சுரந்து அது நோய் எதிர்ப்பை குறைக்கும். வைரஸ் வராமல் தடுக்க நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் முற்றுமாக தடுப்பது கடினம்.  பொக்கிளிப்பான், கூவக்கட்டு, சின்னமுத்து போன்ற வைரஸ் களுக்கு எதிராக  vaccine இருக்கு , வந்தாலும் எமது உடலே நோய் எதிர்ப்பை உருவாக்கி ஞாபக கலங்களை (மெமரி செல்ஸ்) வைத்திருக்கும். அடுத்த முறை இந்த வைரஸ் உடலுக்கு வரும்போது இந்த  மெமரி செல்ஸ் உடனேயே கண்டு பிடித்துவிடும். விரைவில் தன்னை பல மடங்குகளாக பெருக்கி வைரஸ் உடன் சண்டை போடு கொன்றுவிடும். அனால் சாதரண தடிமன் மற்றும் இந்த மாதிரி COVID  19 வைரஸ் கள் அடிக்கடி உருமாறும். அதனால் vaccine கண்டுபிடிப்பது கடினம். எமது உடலும் எதனை மெமரி செல்ஸ் ஆக வைத்திருக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

முதலில் தும்மல் இருமல் துளிகள் ஒருவரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது துளிகள் 2 - 72 மணி வரை வெளியில் ஏதாவது ஒரு surface இருந்து அதை நாம் தொட்டு முகத்தில் காய் வைத்தால் எமது சுவாசக் குழாய்கள் மூலம் நுரயை  ஈரலை அடையும் என்று சொன்னார்கள். இப்போ இது காற்றிலும் கொஞ்ச நேரம் நிண்டுபிடிக்கும் என்கிறார்கள் (வைரஸ் எமது அல்லது மற்றய  உடல் கலங்களில்  மட்டும் தான் வாழும். வெளியில் கொஞ்ச நேரம் தான் பிழைக்கும்

சமீபத்தில், ஜப்பான் இன் மருத்துவ ஆராய்ச்சி சொன்னதாக ஓர் செய்தி வந்தது.

அதாவது, வெளியில் சென்று வந்தாலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ அடிக்கடி எமது இதழ்களை இயலுமானவரை வாய்க்குள் மூடியவாறு உள்ளிளுகும் படி.

இதன் நோக்கம், வைரஸ் இருந்தால், அதை எமது உணவுக் கால்வாயினூடாக வெளியேற்றுவதத்திற்காகவும்,

முக்கியமாக, சுவாசப் பைகுள் சென்றடவைதை தடுப்பதற்கும்.

இது உண்மையா?  
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

உங்கள் நண்பன் மீண்டதையிட்டு சந்தோசம். வைரஸ் தொற்றிய பின் ஏற்பட்ட அறிகுறிகள், வந்த பின் எடுத்துக் கொண்ட மருத்துவ விடயங்கள், தனிமைப்படுத்தல் போன்றவற்றை அவரால் பகிர முடிந்தால்...அல்லது அவரிட்ம் கேட்டு நீங்களும் எழுதினால் பலருக்கு பயனாக இருக்கும்.

வ‌ண‌க்க‌ம் நிழ‌லி அண்ணா /
ந‌ண்ப‌ன் மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்டான் , ம‌ருத்துவ‌ர்க‌ள் சொல்லி இருக்கின‌மாம் மீண்டும் ந‌ண்ப‌னுக்கு கொரோனா வ‌ந்தா உயிருக்கு ஆவ‌த்து என்று , காச்ச‌ல் 40க்கு மேல‌ வ‌ந்தா த‌ங்க‌ளுக்கு போன் ப‌ண்ண‌  சொல்லி இருக்கின‌ம் ம‌ருத்துவ‌ர்க‌ள் , த‌ண்னை ப‌டுக்க‌ வைத்து விட்டு உட‌ம்புக்கு பூசின‌ ம‌ருந்து த‌ன‌க்கு என்ன‌ என்று தெரியாதாம் ,  ம‌ருத்துவ‌ர்க‌ளின் அறிக்கை வ‌ரும் வ‌ரை ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ முடியாதாம் , கொரோனாவால் ப‌ய‌ந்த‌ போது ப‌ய‌ம் இல்லாம‌ இருக்க‌ ந‌ண்ப‌னுக்கு இந்த‌ ம‌ருந்தை குடுத்த‌வையாம்

 20200321-145127.png

இதை எடுத்த‌ பிற‌க்கு ப‌ய‌ம் என்ற‌தே த‌ன‌க்கு தெரிய‌ வில்லையாம் , 

தொன்டை எரிவு , அதிக‌ த‌லை இடி , மூச்சு இழுத்து விட‌ சிர‌ம‌ம் , 
உட‌ம்பில் ப‌ல‌ம் இல்லை ,
அதிக‌ வ‌லிக‌ள் நோவுக‌ள் உட‌ம்புக‌ளில் ,  ம‌ற்றும் அதிக‌ காச்ச‌ல் , இவ‌ள‌வு  சிர‌ம‌ங்க‌ளை கொரோனா வைர‌ஸ் ந‌ண்ப‌னுக்கு  குடுத்த‌தாம் , த‌ன‌க்கு தாங்கி கொள்ளுகிற‌ ச‌க்தி இருந்த‌ ப‌டியால் த‌ப்பிட்டேனாம் , 

வ‌லிக்ள் நோவுக‌ள் எரிவுக‌ள் நின்ற‌து உட‌ம்புக்கு அந்த‌ த‌ண்ணீர் ம‌ருந்து பூசின‌ பிற‌க்காம் 

இம்ம‌ட்டு த‌க‌வ‌ல்  தான் பெற‌ முடிந்த‌து / 

தகவல்களுக்கு நன்றி பையன். உங்கள் நண்பனுக்கும் என் நன்றி

இப்ப எமக்கிருக்கும் ஒரே ஒரு வழி, எம் நோய் எதிர்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது ஒன்றுதான். உங்கள் நண்பனுக்கு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தமையால் பாராதூரமாக ஒன்றும் நிகழாமல் தப்பி விட்டார். இது எமக்கும் ஒரு பாடமாக அமைகின்றது.

நான் ஒரு நாளைக்கு இரண்டு mandarin பழங்களை தொடர்ச்சியாக உண்டு வருகின்றேன். அத்துடன் அடிக்கடி தேசிக்காய் சாறு, வல்லாரை போன்றவற்றையும் உண்பதுண்டு. விற்றமின் சி தான் நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க செய்வது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

என்ர‌ அம்மாடை அண்ணாவுக்கு 74வ‌ய‌து ம‌னுச‌ன் வல்லாரை போன்ற‌ ச‌த்து உண‌வுக‌ள் தான் சாப்பிடுவார் இப்ப‌விம் நோய் நொடி இல்லாம‌ வாழுகிறார் ஊரில்  /

டென்மார்க்கில் வல்லாரைய‌ தேடினாலும் கிடைக்காது இங்கை 10ஆயிர‌த்துக்கு குறைவான‌ த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌ம் , க‌ன‌டா போல் சாப்பாட்டு வ‌ச‌தி இங்கை இல்லை , 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nilmini said:

Covid -19 வைரஸ் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டதென்றே யாருக்கும் தெரியாது. எல்லாம் ஒரு ஊகம் தான். பக்டீரியா மாதிரி வைரஸ்க்கு  Antibiotic கும் வேலை செய்யாது. Vaccine தான் கண்டு பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார்கள்.முதலில் தும்மல் இருமல் துளிகள் ஒருவரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது துளிகள் 2 - 72 மணி வரை வெளியில் ஏதாவது ஒரு surface இருந்து அதை நாம் தொட்டு முகத்தில் காய் வைத்தால் எமது சுவாசக் குழாய்கள் மூலம் நுரயை  ஈரலை அடையும் என்று சொன்னார்கள். இப்போ இது காற்றிலும் கொஞ்ச நேரம் நிண்டுபிடிக்கும் என்கிறார்கள் (வைரஸ் எமது அல்லது மற்றய  உடல் கலங்களில்  மட்டும் தான் வாழும். வெளியில் கொஞ்ச நேரம் தான் பிழைக்கும். அத்துடன் இந்த வைரஸ் மனிதருக்கு உரியது. விலங்குகளை தாக்காது. வைரஸ்க்கு தானே இனப்பெருக்கம் செய்ய முடியாது. எமது கலங்களுக்குள்  சென்று  எமது DNA  யை  hijack பண்ணி நாமே வந்த ஒரு சில வைரஸ் யை மில்லியன் கணக்கில் பெருப்பித்து கொடுப்போம். அவை தான் எமது உடலை தாக்குகிறது. அதே வேளை எமது உடலில் உள்ள வெள்ளை கலங்கள்  வந்தது எந்த விதமான வைரஸ் என்று அறிந்து  அதற்கு எதிர்ப்பு கலங்களை உருவாக்கி அதை மில்லியன் கணக்கில் clone பண்ணி இந்த வைரஸ்க்கு எதிராக போரிடும். இப்படி போரிடுவதுக்கு எமக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். வயது போனவர்களுக்கு கலங்கள் போதிய அளவுக்கு வேலை செய்யாது. பயந்து கவலை பட்டால் . Stress ஆள் சில ஹோர்மோன்ஸ் சுரந்து அது நோய் எதிர்ப்பை குறைக்கும். வைரஸ் வராமல் தடுக்க நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் முற்றுமாக தடுப்பது கடினம்.  பொக்கிளிப்பான், கூவக்கட்டு, சின்னமுத்து போன்ற வைரஸ் களுக்கு எதிராக  vaccine இருக்கு , வந்தாலும் எமது உடலே நோய் எதிர்ப்பை உருவாக்கி ஞாபக கலங்களை (மெமரி செல்ஸ்) வைத்திருக்கும். அடுத்த முறை இந்த வைரஸ் உடலுக்கு வரும்போது இந்த  மெமரி செல்ஸ் உடனேயே கண்டு பிடித்துவிடும். விரைவில் தன்னை பல மடங்குகளாக பெருக்கி வைரஸ் உடன் சண்டை போடு கொன்றுவிடும். அனால் சாதரண தடிமன் மற்றும் இந்த மாதிரி COVID  19 வைரஸ் கள் அடிக்கடி உருமாறும். அதனால் vaccine கண்டுபிடிப்பது கடினம். எமது உடலும் எதனை மெமரி செல்ஸ் ஆக வைத்திருக்க முடியாது

நில்மினி,

இந்த மருந்துகள் நல்லா வேலை செய்துதாமே?

http://www.dailymirror.lk/top_story/Hydroxychloroquine-Azithromycin-for-COVID-19-Treatment-GMOA-submits-concept-paper/155-185449

https://techstartups.com/2020/03/18/breaking-controlled-clinical-study-conducted-doctors-in-france-shows-hydroxychloroquine-cures-100-coronavirus-patients-within-6-days-treatment-covidtrial-io/

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் நிழ‌லி அண்ணா /
ந‌ண்ப‌ன் மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்டான் , ம‌ருத்துவ‌ர்க‌ள் சொல்லி இருக்கின‌மாம் மீண்டும் ந‌ண்ப‌னுக்கு கொரோனா வ‌ந்தா உயிருக்கு ஆவ‌த்து என்று , காச்ச‌ல் 40க்கு மேல‌ வ‌ந்தா த‌ங்க‌ளுக்கு போன் ப‌ண்ண‌  சொல்லி இருக்கின‌ம் ம‌ருத்துவ‌ர்க‌ள் , த‌ண்னை ப‌டுக்க‌ வைத்து விட்டு உட‌ம்புக்கு பூசின‌ ம‌ருந்து த‌ன‌க்கு என்ன‌ என்று தெரியாதாம் ,  ம‌ருத்துவ‌ர்க‌ளின் அறிக்கை வ‌ரும் வ‌ரை ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ முடியாதாம் , கொரோனாவால் ப‌ய‌ந்த‌ போது ப‌ய‌ம் இல்லாம‌ இருக்க‌ ந‌ண்ப‌னுக்கு இந்த‌ ம‌ருந்தை குடுத்த‌வையாம்

வந்தவர்களுக்கு மீண்டும் வருமா கொரோனா ???????

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவிலிருந்து மீண்ட உங்கள் நண்பன் முழுதாகக் குணம்பெற இறைவனை வேண்டுகின்றேன் பையா

8 hours ago, பையன்26 said:

ந‌ண்ப‌ன் மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்டான்

மகிழ்ச்சி.  நண்பரும் நாமும் கவனமாக, அடிப்படை சுகாதர தேவைகளை அமுல்படுத்துவோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வந்தவர்களுக்கு மீண்டும் வருமா கொரோனா ???????

தெரிய‌ வில்லை அக்கா , ம‌ருத்துவ‌ர்க‌ள் சொன்னார்க‌லாம் , திருப்ப‌ வ‌ந்தா ஆவ‌த்து என்று / 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

என்ர‌ அம்மாடை அண்ணாவுக்கு 74வ‌ய‌து ம‌னுச‌ன் வல்லாரை போன்ற‌ ச‌த்து உண‌வுக‌ள் தான் சாப்பிடுவார் இப்ப‌விம் நோய் நொடி இல்லாம‌ வாழுகிறார் ஊரில்  /

டென்மார்க்கில் வல்லாரைய‌ தேடினாலும் கிடைக்காது இங்கை 10ஆயிர‌த்துக்கு குறைவான‌ த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌ம் , க‌ன‌டா போல் சாப்பாட்டு வ‌ச‌தி இங்கை இல்லை , 

நான் இப்பான் வல்லாரை நட்டிருக்கிறன். வளந்து வரட்டும் இருக்கு கொரனோவுக்கு.

நண்பன் தப்பினது அருந்தப்புபோல. வாழ்க நூறாண்டு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

Covid -19 வைரஸ் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டதென்றே யாருக்கும் தெரியாது. எல்லாம் ஒரு ஊகம் தான். பக்டீரியா மாதிரி வைரஸ்க்கு  Antibiotic கும் வேலை செய்யாது. Vaccine தான் கண்டு பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார்கள்.முதலில் தும்மல் இருமல் துளிகள் ஒருவரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது துளிகள் 2 - 72 மணி வரை வெளியில் ஏதாவது ஒரு surface இருந்து அதை நாம் தொட்டு முகத்தில் காய் வைத்தால் எமது சுவாசக் குழாய்கள் மூலம் நுரயை  ஈரலை அடையும் என்று சொன்னார்கள். இப்போ இது காற்றிலும் கொஞ்ச நேரம் நிண்டுபிடிக்கும் என்கிறார்கள் (வைரஸ் எமது அல்லது மற்றய  உடல் கலங்களில்  மட்டும் தான் வாழும். வெளியில் கொஞ்ச நேரம் தான் பிழைக்கும். அத்துடன் இந்த வைரஸ் மனிதருக்கு உரியது. விலங்குகளை தாக்காது. வைரஸ்க்கு தானே இனப்பெருக்கம் செய்ய முடியாது. எமது கலங்களுக்குள்  சென்று  எமது DNA  யை  hijack பண்ணி நாமே வந்த ஒரு சில வைரஸ் யை மில்லியன் கணக்கில் பெருப்பித்து கொடுப்போம். அவை தான் எமது உடலை தாக்குகிறது. அதே வேளை எமது உடலில் உள்ள வெள்ளை கலங்கள்  வந்தது எந்த விதமான வைரஸ் என்று அறிந்து  அதற்கு எதிர்ப்பு கலங்களை உருவாக்கி அதை மில்லியன் கணக்கில் clone பண்ணி இந்த வைரஸ்க்கு எதிராக போரிடும். இப்படி போரிடுவதுக்கு எமக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். வயது போனவர்களுக்கு கலங்கள் போதிய அளவுக்கு வேலை செய்யாது. பயந்து கவலை பட்டால் . Stress ஆள் சில ஹோர்மோன்ஸ் சுரந்து அது நோய் எதிர்ப்பை குறைக்கும். வைரஸ் வராமல் தடுக்க நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் முற்றுமாக தடுப்பது கடினம்.  பொக்கிளிப்பான், கூவக்கட்டு, சின்னமுத்து போன்ற வைரஸ் களுக்கு எதிராக  vaccine இருக்கு , வந்தாலும் எமது உடலே நோய் எதிர்ப்பை உருவாக்கி ஞாபக கலங்களை (மெமரி செல்ஸ்) வைத்திருக்கும். அடுத்த முறை இந்த வைரஸ் உடலுக்கு வரும்போது இந்த  மெமரி செல்ஸ் உடனேயே கண்டு பிடித்துவிடும். விரைவில் தன்னை பல மடங்குகளாக பெருக்கி வைரஸ் உடன் சண்டை போடு கொன்றுவிடும். அனால் சாதரண தடிமன் மற்றும் இந்த மாதிரி COVID  19 வைரஸ் கள் அடிக்கடி உருமாறும். அதனால் vaccine கண்டுபிடிப்பது கடினம். எமது உடலும் எதனை மெமரி செல்ஸ் ஆக வைத்திருக்க முடியாது

அக்கா உங்க‌ளின் த‌க‌வ‌லுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌ 🙏, கொரோனா வ‌ந்த‌ ஆளுக்கு திருப்ப‌வும் வ‌ர‌ வாய்ப் இருக்கா , டென்மார்க் நாட்டு ம‌ருத்துவ‌ர்க‌ள் ந‌ண்ப‌னுக்கு சொல்லி இருக்கின‌ம் ந‌ண்ப‌னுக்கு மீண்டும் கொரோனா வ‌ந்தா உயிருக்கு ஆவத்து என்று , இதை ப‌ற்றி தெரிந்தா எங்க‌ளுக்கு விள‌ங்க‌ப் படுத்துங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பையன்26 said:

அக்கா உங்க‌ளின் த‌க‌வ‌லுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌ 🙏, கொரோனா வ‌ந்த‌ ஆளுக்கு திருப்ப‌வும் வ‌ர‌ வாய்ப் இருக்கா , டென்மார்க் நாட்டு ம‌ருத்துவ‌ர்க‌ள் ந‌ண்ப‌னுக்கு சொல்லி இருக்கின‌ம் ந‌ண்ப‌னுக்கு மீண்டும் கொரோனா வ‌ந்தா உயிருக்கு ஆவத்து என்று , இதை ப‌ற்றி தெரிந்தா எங்க‌ளுக்கு விள‌ங்க‌ப் படுத்துங்கோ 

2 விதமான கொரோனோ வைரஸ் உலாவுது . S type தான் முதல் வந்தது. ஆனால் அதிலிருந்து L type உருமாறி மிக வேகமாக பரவுது. 70% வீதமானவர்களுக்கு L  type  என்றாலும் எது வீரியம் கூடியது என்று கண்டுபிடிக்கவில்லை. அத்துடன் உங்கள் நண்பருக்கு இப்ப வந்த கோரோனோ வைரஸ் க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இப்ப இருக்கும். ஆனால் இது புதிய வைரஸ் என்பதால் இந்த எதிர்ப்பு எவ்வளவு தூரம் வலிமையானது எவ்வளவு காலம் நின்று பிடிக்கும் என்று எவருக்கும் இன்னும் தெரியாது. இப்பதான் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ( எமக்கு பொக்குளிப்பான் சிறு வயதில் வந்தபோது உடலில் உருவாகிய எதிர்ப்பு சக்திதான் இப்பவும் (சாகும் அளவும்) இருக்கும் . அதனால் திருப்பி அந்த வைரஸ் வர சாத்தியமே இல்லை. வந்தவுடன் இது பொக்குளிப்பான் வைரஸ் என்று எமது உடல் கண்டுபிடித்து அவற்றை கொன்றுவிடும். அல்லது பொக்குளிப்பான் vaccination எடுத்தவர்களுக்கு எமது உடல் அந்த செயற்கையாக புகுத்தப்பட்ட வீரியம் குறைந்த வைரஸ் க்கு ( vaccination  என்றால் அதுதான்) எதிராக எதிர் அணுக்களை உருவாக்கி காலம் முழுதும் வைத்திருக்கும். இந்த கோரோனோ வைரஸ் க்கு எதிராக vaccine கண்டுபிடிக்க கொஞ்ச காலமாகும். என்றபடியால் இதன் பரவல் குறைந்து இல்லாமல் போகும் வரை எல்லோரும் கவனமாக தான் இருக்க வேணும். நல்ல மஞ்சள், லெமன், பெர்ரி வகைகள் , காய் கறி , கீரை என்று சாப்பிட்டு உடலை கொஞ்சம் நல்ல நிலையில் வைத்தால் வைரஸ் வந்தாலும் எதிர்த்து அழிக்கலாம்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2020 at 23:13, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வந்தவர்களுக்கு மீண்டும் வருமா கொரோனா ???????

இதோ வ‌ந்த‌வ‌ருக்கு மீண்டும் கொரோனா குழ‌ப்ப‌த்தில் ம‌ருத்துவ‌ர்க‌ள் 😓/

20200422-234954.png

டென்மார்க் நாட்டு ம‌ருத்துவ‌ர்க‌ள் , அனுப‌வ‌ம் இல்லா ம‌ருத்துவ‌ர்க‌ள் என்று ப‌ல‌ர் இங்கை ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைப்பின‌ம் தாயே , ஆனால் இந்த‌ நாட்டில் திற‌மான‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம் 👏🤞

  • கருத்துக்கள உறவுகள்

பையா.... இங்கு, எந்த நாடு என்று,  பிரச்சினை  இல்லையே....
மனித உயிர்... எல்லாம்... மாறுபட்டதல்ல, எல்லாம்.... சமமான உயிர்கள்.

எந்த நாட்டில் வைத்து.... 
எந்த நாட்டு.... மருத்துவ கருவிகளை வைத்து,
இப்படியான... சோதனைகளை, நடத்தி இருப்பார்கள் என்பதனையும்,
முற்று... முழுதாக ஆராய வேண்டும்.

சும்மா.... அரசியல் செய்வதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும்... 
பல நாடுகள் முயன்று கொண்டு இருக்கும் வேளையில்...
மருத்துவர்களை... குறை சொல்லாதீர்கள்.

மருத்துவர்களும், அவர்களின் உதவியாளர்களும் மிக...
இக்கட்டான நிலையில்... உலகம் எல்லாம் இருக்கிறார்கள்.   
பாவம்... அவர்களை, விமர்சிக்காதீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.