Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பரவிய, போலி செய்தி - மஞ்சள் நீரில் குளித்து அல்லல்பட்ட ஆண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்கள் தொடர்பில் பரப்பப் பட்ட விடயங்கள் வதந்தி என பொலிஸார் தெரிவிப்பு.

நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள் நீராடவேண்டுமெனவும் , இவை நாட்டுக்கு நல்லதல்லவெனவும் திட்டமிட்டு வதந்திகளை யாரோ பரப்பியிருப்பதாக தெரிகிறது.
 
இப்படியான போலி செய்திகளை – வதந்திகளை பரப்புவோர் கைது செய்யப்படுவார்களென பொலிஸார் தெரிவித்தனர்.
 
மக்களை குழப்பமடையச் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்படுகிறது .
 
இலங்கையில் பரவிய, போலி செய்தி - மஞ்சள் நீரில் குளித்து அல்லல்பட்ட ஆண்கள்

இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
 
சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது.
 
நாட்டிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் வதந்தி பரவ ஆரம்பித்திருந்தது.
 
இந்த நிலையில், நாட்டிலுள்ள பெரும்பாலான இந்துக்கள் தமது வீடுகளிலுள்ள ஆண்களை அதிகாலையில் எழுப்பி, நீராடச் செய்து வீட்டு முற்றத்திற்கு மஞ்சள் நீர் தெளித்து, வீட்டு ஆண்களை ஆர்த்தி எடுத்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது.
 
சில ஆண்களை மஞ்சள் நீரில் நீராடச் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
 
பல ஆண்கள் அதிகாலை வேளையிலேயே குளித்து வீட்டுக்குள் பூஜைகளை நடத்தி வரவழைக்கப்பட்டதாக இதனால் பாதிக்கப்பட்ட பல ஆண்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த சம்பவமானது, இன்று அதிகாலை முதல் பாரிய பரபரப்பை இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
 
அதனைத்தொடர்ந்து, உள்நாட்டு ஊடகங்கள் சம்பவம் தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையிடம் விடயங்களை வினவி, இன்று அதிகாலை செய்திகளில் உண்மை தன்மையை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
போலீஸார் பதில்
 
நாட்டில் குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
போலி வதந்திகளைப் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் இறக்குமதி செய்யும் முதலாலியை பிடித்தால் தொரியும்,யார் இதை பரப்பினார்களென்று😀

  • கருத்துக்கள உறவுகள்

91337221_1535705953266145_72013267742050

அப்படியே விழுந்திருந்தாலும் அதுக்கு என்ன இப்ப. ஒரு சிறந்த கட்டிட ஒப்பந்தகாரரிடம்   கொடுத்தால் திரும்பவும் இருந்ததை விட அழகாக நவீன தொழில்நுட்பத்துடன்  கட்டித்தருவார் தானே.  

Edited by tulpen

எப்பிடி இந்த செய்தி போலியோ அதுபோலத் தான் மடவல, ஜப்னாமுஸ்லீம் செய்திகளும் போலியாம்.
இந்த இரண்டு ஊடகங்களும் தரங்கெட்ட ஆட்களால நடத்தப்படுற தரங்கெட்ட ஊடகங்கள் என்டு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.

இந்த தரங்கெட்ட ஊடகங்கள் சொல்ற மாதிரி அப்பிடி யாரும் பதட்டப்படவும் இல்லையாம் மஞ்சள் நீரில் குளிக்கவும் இல்லையாம்.
அதைவிட ஜோக் என்னென்டா மஞ்சள் நீரில் குளிச்ச ஆட்களுக்கு பாதிப்பு என்டு தரங்கெட்ட ஊடகங்கள் விடுற ரீல்.

இதுவும் கடந்து போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

அப்படியே விழுந்திருந்தாலும் அதுக்கு என்ன இப்ப. ஒரு சிறந்த கட்டிட ஒப்பந்தகாரரிடம்   கொடுத்தால் திரும்பவும் இருந்ததை விட அழகாக நவீன தொழில்நுட்பத்துடன்  கட்டித்தருவார் தானே.  

அப்படி ஓர் சம்பவமும் நடக்கவில்லை அதற்குள் ஓப்பந்தக்காரர் வரை போயாச்சு

40 minutes ago, Rajesh said:

எப்பிடி இந்த செய்தி போலியோ அதுபோலத் தான் மடவல, ஜப்னாமுஸ்லீம் செய்திகளும் போலியாம்.
இந்த இரண்டு ஊடகங்களும் தரங்கெட்ட ஆட்களால நடத்தப்படுற தரங்கெட்ட ஊடகங்கள் என்டு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.

இந்த தரங்கெட்ட ஊடகங்கள் சொல்ற மாதிரி அப்பிடி யாரும் பதட்டப்படவும் இல்லையாம் மஞ்சள் நீரில் குளிக்கவும் இல்லையாம்.
அதைவிட ஜோக் என்னென்டா மஞ்சள் நீரில் குளிச்ச ஆட்களுக்கு பாதிப்பு என்டு தரங்கெட்ட ஊடகங்கள் விடுற ரீல்.

இதுவும் கடந்து போகும்.

ஊரில் மஞ்சள் வைத்து குளிப்பது வழைமையே, இதனால் என்ன பாதிப்பு,

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Rajesh said:

எப்பிடி இந்த செய்தி போலியோ அதுபோலத் தான் மடவல, ஜப்னாமுஸ்லீம் செய்திகளும் போலியாம்.
இந்த இரண்டு ஊடகங்களும் தரங்கெட்ட ஆட்களால நடத்தப்படுற தரங்கெட்ட ஊடகங்கள் என்டு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.

வதந்திகள்தான்.

ஆனால் பிபிசி தமிழில் வந்ததை சுட்டு நன்றி கூட போடாமல் தமது செய்தியாக மடவல, ஜப்னாமுஸ்லீம் தளங்கள் போட்டுள்ளன. 

கொரோனா வைரஸுக்கு மத்தியில் பரவிய போலி செய்தி - இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்

கொரோனா வைரஸுக்கு மத்தியில் பரவிய போலி செய்தி - இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்Getty Images சித்தரிப்புக்காக

இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது. 

நாட்டிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் வதந்தி பரவ ஆரம்பித்திருந்தது. 

இந்த நிலையில், நாட்டிலுள்ள பெரும்பாலான இந்துக்கள் தமது வீடுகளிலுள்ள ஆண்களை அதிகாலையில் எழுப்பி, நீராடச் செய்து வீட்டு முற்றத்திற்கு மஞ்சள் நீர் தெளித்து, வீட்டு ஆண்களை ஆர்த்தி எடுத்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. 

சில ஆண்களை மஞ்சள் நீரில் நீராடச் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

பல ஆண்கள் அதிகாலை வேளையிலேயே குளித்து வீட்டுக்குள் பூஜைகளை நடத்தி வரவழைக்கப்பட்டதாக இதனால் பாதிக்கப்பட்ட பல ஆண்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவமானது, இன்று அதிகாலை முதல் பாரிய பரபரப்பை இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. 

கொரோனாவுக்கு மத்தியில் இப்படியும் வதந்தி - இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்Facebook

அதனைத்தொடர்ந்து, உள்நாட்டு ஊடகங்கள் சம்பவம் தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையிடம் விடயங்களை வினவி, இன்று அதிகாலை செய்திகளில் உண்மை தன்மையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கையில் பகிரப்பட்ட மீம்கள் இலங்கையில் பகிரப்பட்ட மீம்கள்

குறித்த சம்பவம் வதந்தி என அறிந்துகொண்ட மக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதனை கேலி செய்து பகிர்ந்து வருகின்றனர். 

கொரோனாவுக்கு மத்தியில் இப்படியும் வதந்தி - இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்Vikcy Facebook

போலீஸார் பதில் 

நாட்டில் குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போலி வதந்திகளைப் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது. 

https://www.bbc.com/tamil/sri-lanka-52074059

1 minute ago, கிருபன் said:

பிபிசி தமிழில் வந்ததை

பிபிசி தமிழும் ஒரு தரங்கெட்ட ஊடகமாக மாறி சில வருடங்கள் ஆகுது.
அவங்கட 95% ஆன தமிழ் செய்திகளும் தலைப்புகளும் பதியப்படும் விதம் பல தரங்கெட்ட ஊடகங்களை விட கேவலமான நிலைல இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள் போலியாக இருந்தாலும் மஞ்சள் என்பது நல்லவிடயம்தானே.அறிவியலாளர்களும் விஞ்ஞானிகளும்  மருத்துவர்களும் மஞ்சளை சிறந்த நோய் நிவாரணியாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
மஞ்சளை எமது சைவ/இந்து சமயயத்திலும் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர்.அதன் தார்ப்பரியங்களை மத ரீதியாக எமது முன்னோர்கள் அறிந்து  எமக்கு விட்டுச்சென்றது இவ்வுலகிற்கு பெரும் கொடை.

Kurkuma - Herkunft und Verwendung | Suppenhandel.de

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எமது சைவ/இந்து சமயயத்திலும்

சைவ சமயம் எமது.

இந்து மதம் எமதல்ல. 

சைவ சமயம் இந்து மதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை பல ஆராச்சியாளர்கள் கண்டறிந்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றனர். பல நூற்றாண்டு காலங்களாக இந்து மதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பல அரசர்களும் தமிழர்களை ஆண்டு வந்ததால்.... அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்பதற்கிணங்க தமிழ் குடிகளும் தங்களை இந்துக்களாகவே கருதி அதனைத் தங்கள் மரபுவழியாக்கிக் கொண்டனர்.

அரசன் ஆட்சிமாறி மக்களாட்சி வந்ததும் தமிழ்குடிகளும் தாங்கள் இந்துமதத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதை அறிந்து உணரக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு, அதனின்றும் வெளிவரத் தொடங்கவே, அதனைத் தடுப்பதற்கு, இந்துமதவாதிகள், தங்களாலான அனைத்தையும் மேற்கொண்டு வருவது கண்கூடு. மேற்கண்ட தரங்கெட்ட வேலைகளை இவர்கள் மேற்கொள்வதற்கு, தமிழர்களிலிருந்து வேற்று மதங்களுக்கு மாறிய ஒருசிலரின் செயற்பாடுகளும் உதவிநிற்பதால் இத்தகய கேவலங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.    

2 hours ago, Paanch said:

உண்மைதான் பாஞ்ச். மருதங்கேணி அடிக்கடி இங்கு  சொல்வது போல சைவமதம் என்றால் என்ன என்றே யாருக்கும்  தெரியாத அளவுக்கு இந்து  மதம் என்ற நச்சு மதம் அதனை விழுங்கி அறிவுக்கு சற்றும்  ஒவ்வாத கேவலமான  பழக்கங்களை மக்களுக்கு பரப்பி சைவமதத்தையும்  கேவலப்படுத்தி விட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சைவ சமயத்தவர்கள்தான் தெளிவான விளக்கத்தைத் தர முடியும்.🙂

இவ்வாறான வதந்திகள் பின்விளைவுகளை சிந்திக்கும் வலுவற்ற நபர்களால் பொறுப்பற்ற விதத்தில் உருவாக்கப்படுகின்றன *****

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த தாமதம் ......
குளிர் என்றும் பாராமல் நான் ஏற்கனவே மஞ்சள் நீர் ஆடிவிட்டேன் 

ஆண்கள் மஞ்சள் நீர் ஆடுவதால் ஏதும் பக்க விளைவு இருப்பின் 
அதுக்கு ஏதும் பரிகாரம் உண்டோ? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

மிகுந்த தாமதம் ......
குளிர் என்றும் பாராமல் நான் ஏற்கனவே மஞ்சள் நீர் ஆடிவிட்டேன் 

ஆண்கள் மஞ்சள் நீர் ஆடுவதால் ஏதும் பக்க விளைவு இருப்பின் 
அதுக்கு ஏதும் பரிகாரம் உண்டோ? 

பரிகாரம் சிவப்பு நீரை அருந்த வேண்டும் தொடர்ந்து 108 நாள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உண்மைதான் பாஞ்ச். மருதங்கேணி அடிக்கடி இங்கு  சொல்வது போல சைவமதம் என்றால் என்ன என்றே யாருக்கும்  தெரியாத அளவுக்கு இந்து  மதம் என்ற நச்சு மதம் அதனை விழுங்கி அறிவுக்கு சற்றும்  ஒவ்வாத கேவலமான  பழக்கங்களை மக்களுக்கு பரப்பி சைவமதத்தையும்  கேவலப்படுத்தி விட்டது.  

மதத்தை மட்டும் மாற்றவில்லை ......
ஒரு கிருமி போல கூடவே இருந்து 
எமது செம்மொழியான தமிழுக்குள் சம்ஸ்கிருதத்தை கலந்தது 
முன்னைய நாளில் ஏடுகள் ஓலைகளை கோவிலில் வைத்தே காத்து வந்துள்ளனர் 
கி.பி 600-1000 பகுதியில்தான் இந்த பார்ப்பான் வந்து எமது கோவில்களை கைப்பற்றி இருக்கிறான் 
அப்போது கோவிலில் இருந்த தமிழ் ஓலைகள் எல்லாவற்றையும் திருடி அழித்து இருக்கிறான் 
பின்பு ஓலைகளில் இருந் கதைகளை புனைந்துதான் இந்த கேவலமான கதைகளை 
உருவாக்கி இருக்கிறான்.அப்படிதான் முருகன் சுப்ரமணியாகி இருக்கிறார் 
முருகனுக்கு இரண்டு மனைவிகள் இல்லை 
ஒவையார்களில் ஒருவர் முருகன் ஆடசிகாலத்தில் வாழ்ந்து  அவனது ஆடசியை போற்றி பாடிக்கொண்டு 
இருக்கும்போதே இரண்டாம் முருகன் சிறுவனாகவும் இருக்கிறான் 
இரண்டாம் முருகனின் மனைவிதான் வள்ளி..... இவர்கள் ஒரு காலத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஆட்ச்சியை இழந்து வனங்களில் வாழ்கிறார்கள் ......... பின்புதான் இரண்டாம் முருகன் போர் புரிந்து 
மீண்டும் தமிழர்களின் ஆடசியை நிலைநாட்டி இருக்கிறான். 
வள்ளியை குறத்தி ஆகியது பார்ப்பான்தான் ........ இவர்கள் வனத்தில் இருக்கும்போதுதான் இந்த திருமணம் நடந்து இருந்ததால்  அவளை குறத்தி ஆக்கி இருக்கிறார்கள் 

1 minute ago, putthan said:

பரிகாரம் சிவப்பு நீரை அருந்த வேண்டும் தொடர்ந்து 108 நாள்

நான் இந்த பக்க விளைவுகளுடனேயே வாழ பழகி கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:
10 hours ago, Paanch said:

சைவ சமயம் எமது.

இந்து மதம் எமதல்ல. 

8 hours ago, tulpen said:

உண்மைதான் பாஞ்ச். மருதங்கேணி அடிக்கடி இங்கு  சொல்வது போல சைவமதம் என்றால் என்ன என்றே யாருக்கும்  தெரியாத அளவுக்கு இந்து  மதம் என்ற நச்சு மதம் அதனை விழுங்கி அறிவுக்கு சற்றும்  ஒவ்வாத கேவலமான  பழக்கங்களை மக்களுக்கு பரப்பி சைவமதத்தையும்  கேவலப்படுத்தி விட்டது.  

😕,
உங்கள் கருத்துபடி சைவ மதம் உயர்ந்த மதம். கெட்ட இந்து மதம் அதனை கெடுத்துவிட்டது. முன்பு தமிழர்கள்  சமண மதத்தை பெரிதும் பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்றும், பவுத்த மதத்தை பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்று நம்புகிறவவர்கள் தமிழ்நாட்டில் இலங்கையிலும் உள்ளார்கள். அதே போல் கிறிஸ்தவ மதம் எமது. இந்து மதம் எமதல்ல
இஸ்லாம் மதம் எமது இந்து மதம் எமதல்ல என்றும் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யார் சொல்கிறார்கள் ? 

கிறீத்தவம், இசுலாம், யூதாயிசம் என்பன மத்திய கிழக்கு நாடுகளுக்குரியது. பெளத்தமும் , சைவமும் தென் இந்திய கண்டத்திற்குரியது. இந்து மதம் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப் பட்டது.

தமிழர்களின் சமயங்கள் என சைவம் வைணவம் என சிலவற்றைச் சொல்லலாம். எல்லாக் கண்டங்களிலும் ஒவ்வொரு நாகரீகங்களும் தமக்கேயுரித்தான சிறப்பம்சங்களுடன் தமக்கென சமய வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தன. 

ஆனால் ஏறக் குறைய எல்லா நாகரீகங்களிலும் சூரியனை வழிபட்டனர். 🌞

10 hours ago, putthan said:

பரிகாரம் சிவப்பு நீரை அருந்த வேண்டும் தொடர்ந்து 108 நாள்

சிவப்பு நீர் என்று நீங்கள் கூறுவது ரெட் வைனைத் தானே புத்தன். 

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

😕,
உங்கள் கருத்துபடி சைவ மதம் உயர்ந்த மதம். கெட்ட இந்து மதம் அதனை கெடுத்துவிட்டது. முன்பு தமிழர்கள்  சமண மதத்தை பெரிதும் பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்றும், பவுத்த மதத்தை பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்று நம்புகிறவவர்கள் தமிழ்நாட்டில் இலங்கையிலும் உள்ளார்கள். அதே போல் கிறிஸ்தவ மதம் எமது. இந்து மதம் எமதல்ல
இஸ்லாம் மதம் எமது இந்து மதம் எமதல்ல என்றும் சொல்கிறார்கள்.

நான் இங்கு கூற வந்த விடயம் சைவ மதத்தில் என்ன தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது என்பது தெரியாத அளவுக்கு இந்து மதத்தின் அடிமூடத்தனங்கள் அதன் மீது  பார்பனத் திருடர்களல்  திணிக்கப்பட்டு விட்டது.  அதனால் தான் சைவ/இந்து என்று இந்து மத அடிமூடத்தனங்களை எமது பாரம்பரியங்களக காட்ட முனைகின்றனர்.  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, tulpen said:

சிவப்பு நீர் என்று நீங்கள் கூறுவது ரெட் வைனைத் தானே புத்தன். 

ரெட் வைன் உக்கிரம் குறைவானது, "சிவா"ஸ்  உக்கிரம்  அதிகம்

11 hours ago, Maruthankerny said:

மிகுந்த தாமதம் ......
குளிர் என்றும் பாராமல் நான் ஏற்கனவே மஞ்சள் நீர் ஆடிவிட்டேன் 

ஆண்கள் மஞ்சள் நீர் ஆடுவதால் ஏதும் பக்க விளைவு இருப்பின் 
அதுக்கு ஏதும் பரிகாரம் உண்டோ? 

அடிக்கடி டாக்டரிடம் சென்று  கருவுற்று  உள்ளீர்களா என்று செக் பண்ணி பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

😕,
உங்கள் கருத்துபடி சைவ மதம் உயர்ந்த மதம். கெட்ட இந்து மதம் அதனை கெடுத்துவிட்டது. முன்பு தமிழர்கள்  சமண மதத்தை பெரிதும் பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்றும், பவுத்த மதத்தை பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்று நம்புகிறவவர்கள் தமிழ்நாட்டில் இலங்கையிலும் உள்ளார்கள். அதே போல் கிறிஸ்தவ மதம் எமது. இந்து மதம் எமதல்ல
இஸ்லாம் மதம் எமது இந்து மதம் எமதல்ல என்றும் சொல்கிறார்கள்.

இந்து மதம் என்றால் என்ன?
உங்களால் அல்லது அதுக்கு முண்டு கொடுக்கும் யாராலும் 
கொஞ்சம் விளக்கமாக எழுதமுடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே சிவம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.