Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் அரசியலுக்காக பிசாசுடன் பேசுவதற்கும் நாங்கள் தயார்! சிறீதரன்

Featured Replies

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது.

இந்நிலையில், அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்துகொண்டிருந்தது.

இதற்கிடையில் அன்று மாலை பிரதமர் மகிந்தவுடன் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் மீண்டும் தனிமையில் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இதன்போது பேசப்பட்டது என்ன? கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்ன? வடக்கு கிழக்கில் கொரோனா தொற்றின் நிலவரம் என்ன? இராணுவத்தின் பிரசன்னம் எந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் இருக்கின்றன.

இதுபோன்ற பல தகவல்களை ஐபிசி இணையத்தளத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,

https://www.ibctamil.com/srilanka/80/142737

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் ரத்தம் குடிப்பவர்கள் பிசாசை பற்றி  கதைக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைக்காக அல்ல காசுக்காக எந்தப் பிசாசோடும் கூட்டமைப்பு கோமாளிக்கும்பல் கூட்டு வைக்கும் பேச்சு நடத்தும் என்று தான் செய்தி வந்திருக்கனும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, போல் said:

அன்று மாலை பிரதமர் மகிந்தவுடன் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் மீண்டும் தனிமையில் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இவையள் அண்டு தொடக்கம் ஆரோடை எண்டாலும் தனிமையிலை தான் பேசுவினமாம்😁
ஆனால் கலியாணம்தான் இன்னும் முடியேல்லை....😎

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் அரசியலுக்காக பிசாசுடன் பேசுவதற்கும் நாங்கள் தயார்!

முன்பு ஜே ஆர் ஜெயவர்த்தன இப்படியொரு வசனத்தை பேசியதாக என்  வீட்டில் சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

ஈழத் தமிழர் அரசியலுக்காக பிசாசுடன் பேசுவதற்கும் நாங்கள் தயார்!

முன்பு ஜே ஆர் ஜெயவர்த்தன இப்படியொரு வசனத்தை பேசியதாக என்  வீட்டில் சொல்லுவார்கள்.

அது இஸ்ரேலிடம்  உதவி பெறுவதுக்கு  மூனாக்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தை அது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிசாசுகளுக்குத்தான் பிசாசுகளின் மொழி தெரியும்.

நீங்கள் பேயுடனோ, நாயுடனோ யாருடனாவது பேசி உங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள்।

நீங்கள்தானே கிளிநொச்சி மாவட்த்தை பிரதிநிதித்துவம் செய்க்கிறீர்கள்। கடந்த வராம  உங்கள் மீது கிளிநொச்சி மக்கள் அடுக்காக குற்றம் சுமதி இருந்தார்கள்। முப்பது வருடமாக அவர்களது கணிப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும், வாழ்வாதாரம் இல்லாமல் ஓலைக்குடிசையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள்।

உரிமையை பற்றி பேச முதல் அவர்கள் வாழ்வதட்கு எதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்। நீங்கள் எல்லாம் காணி பிடித்து விடடீர்கள்। பாவம் அப்பாவி ஜனங்கள்। 

தேர்தல் முடிந்ததும் வாக்களிச்ச கிளிநொச்சி மக்களை மறந்து போன சிறீதரன் இப்ப தேர்தல் காலம் என்டபடியா  அந்தரப்படுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

ஈழத் தமிழர் அரசியலுக்காக பிசாசுடன் பேசுவதற்கும் நாங்கள் தயார்!

முன்பு ஜே ஆர் ஜெயவர்த்தன இப்படியொரு வசனத்தை பேசியதாக என்  வீட்டில் சொல்லுவார்கள்.

தமிழர் போராட்டத்தை அழிக்க நான் எந்த பிசாசுடனும் கை கோர்ப்பேன் என 80 களில் ஜெ ஆர் கூறினார்.இஸ்ரேலின்  மொசாட்டின் உதவியை நாடிய பொழுது எழுந்த எதிர்ப்பை(முஸ்ளீம்களால்) சமாளிக்க இந்த
வீரவசனம் பேசப்பட்டது‌

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

நீங்கள் பேயுடனோ, நாயுடனோ யாருடனாவது பேசி உங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள்।

நீங்கள்தானே கிளிநொச்சி மாவட்த்தை பிரதிநிதித்துவம் செய்க்கிறீர்கள்। கடந்த வராம  உங்கள் மீது கிளிநொச்சி மக்கள் அடுக்காக குற்றம் சுமதி இருந்தார்கள்। முப்பது வருடமாக அவர்களது கணிப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும், வாழ்வாதாரம் இல்லாமல் ஓலைக்குடிசையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள்।

உரிமையை பற்றி பேச முதல் அவர்கள் வாழ்வதட்கு எதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்। நீங்கள் எல்லாம் காணி பிடித்து விடடீர்கள்। பாவம் அப்பாவி ஜனங்கள்। 

கிளீநொச்சிக்கு சாராய பார் வேணுமென்டு கேட்ட ஜெமீன் இவரு  மீண்டும் இவங்களுக்கு ஓட்டிட்டு அழகு பார்க்கும் தமிழ் சனங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிளீநொச்சிக்கு சாராய பார் வேணுமென்டு கேட்ட ஜெமீன் இவரு  மீண்டும் இவங்களுக்கு ஓட்டிட்டு அழகு பார்க்கும் தமிழ் சனங்கள் 

கஷ்டப்பட்ட மக்களுக்கு போன பணத்திலும் கை வைத்த தரங்கெட்டவர்

  • கருத்துக்கள உறவுகள்

மகத நாட்டை ஆண்டு வந்த ப்ருஹத்ரதா எனும் அரசன் சிறந்த சிவ பக்தன். பேரும் புகழுமாக இருந்த அவன்  பெனாரசின் இரட்டை அரச குமாரிகளை மணந்து பரிபாலம் செய்து வந்தவனுக்கு வெகுநாட்கள் வரை புத்திர பாக்கியமில்லாதிருந்தது. மனம் வெறுத்துக் கானகம் சென்று சந்திரகௌஷிகா என்னும் முனிவருக்குப் பணிவிடை செய்து வந்தான்.

இவனது நிலை கண்டு இரங்கிய முனிவர் பழம் ஒன்றைக் கொடுத்து அதை அவனது மனைவி உண்டால் குழந்தை பாக்கியம்கிடைக்கும் என்றார். இரண்டு பெண்டாட்டிக்காரன் பழத்தினை இரு சம பாகமாக்கித் தன் இரு மனைவியருக்கும் கொடுத்தான் இருவரும் கர்ப்பமுற்றனர், குழந்தைகளும் பெற்றனர். ஆனால் ஒரு பழத்தை இரு பாதியாக்கி அரசன் கொடுக்க அவர்கள் உண்டதால் மனிதக் கூறின் இரு பாதிகளைப் பெற்றெடுத்தனர்.

அரசன் விசனமுற்று அந்த இரு கூறுகளையும் கானகத்தில் வீசி எறிந்தான். கானகத்தில் "ஜரா" ன்னும் பிசாசு இரு கூறுகளையும் உண்ணப் போகும் முன் ஒன்றாக்கினாள்.  ஒம் என்ன ஆச்சிரியம்.! இரு கூறுகளும் ஓருயிராகி சத்தமாக அழத் துவங்கிற்று. "உயிருள்ள குழந்தையை உண்ண விரும்பா இரக்கமடைந்த அந்த பிசாசு" குழந்தையை அரசனிடம் கொடுத்து நடந்தவற்றைக் கூறினாள். அந்த பிசாசின் பெயரை அக் குழந்தைக்கு சூட்டினான் "ஜராசந்தன்"

டிஸ்கி

Ad.gif அட ஏம்பா பிசாசை கேவலபடுத்துறியள்..? ☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

பிசாசுகள் அழிவைபற்றிப் பேசுங்களா? அல்லது விடிவைபற்றிப் பேசுங்களா? யாராவது பிசாசு மொழி தெரிந்தவர்கள் மொழி பெயர்த்து விடுங்களப்பா. அதுகள் தங்களைபற்றிப் பேசுங்களா? மக்களைபற்றிப் பேசுங்களா? என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.

13 hours ago, உடையார் said:

கஷ்டப்பட்ட மக்களுக்கு போன பணத்திலும் கை வைத்த தரங்கெட்டவர்

இங்கு  பிரச்சினை என்ன எண்டால் இவர்களைத்தான் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்। ஒரு மாற்றத்துக்காகவாவது வேறு ஒருவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க மாடடார்கள்। பின்னர் அடுத்த ஐந்து வருடங்களுக்கு திட்டிக்கொண்டு இருப்பார்கள்। இவர்களும் கொள்ளையடித்துக்கொண்டு இருப்பார்கள்। தமிழனின் சாபக்கேடு। 

Edited by Vankalayan
Need to change some wordings

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Vankalayan said:

இங்கு  பிரச்சினை என்ன எண்டால் இவர்களைத்தான் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்। ஒரு மாற்றத்துக்காகவாவது வேறு ஒருவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க மாடடார்கள்। பின்னர் அடுத்த ஐந்து வருடங்களுக்கு திட்டிக்கொண்டு இருப்பார்கள்। இவர்களும் கொள்ளையடித்துக்கொண்டு இருப்பார்கள்। தமிழனின் சாபக்கேடு। 

சைக்கிள் இரண்டு பக்கமும் காசு வாங்குது என்பது தெட்ட  தெளிவு .

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Vankalayan said:

இங்கு  பிரச்சினை என்ன எண்டால் இவர்களைத்தான் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்। ஒரு மாற்றத்துக்காகவாவது வேறு ஒருவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க மாடடார்கள்। பின்னர் அடுத்த ஐந்து வருடங்களுக்கு திட்டிக்கொண்டு இருப்பார்கள்। இவர்களும் கொள்ளையடித்துக்கொண்டு இருப்பார்கள்। தமிழனின் சாபக்கேடு। 

பேசாமல் நீங்களே களத்தில் இறங்கலாமே வங்காலையான்.

Just now, satan said:

பேசாமல் நீங்களே களத்தில் இறங்கலாமே வங்காலையான்.

பேசுவதட்குத்தானே களம் இருக்கிறது। அதுதான் களத்தில் இறங்கிவிடடேன்। 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 17:13, உடையார் said:

கஷ்டப்பட்ட மக்களுக்கு போன பணத்திலும் கை வைத்த தரங்கெட்டவர்

உன்மையும் இதெல்லாம் ஒரு அரசியல் வாதி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.