Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலரின் உண்மை முகங்கள் தெரியா, அதனால் keyboard அதிருது 

  • Replies 100
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இங்கு பலரின் உண்மை முகங்கள் தெரியா, அதனால் keyboard அதிருது 

உண்மை முகங்களை மறைப்பதற்குப் பல நியாயமான காரணங்களுண்டு. 👍

ஆனால் தேவையேற்படின் என்னை வெளிப்படுத்த நான் தயார். சாதி, சமயம், கல்வி, சொந்த இடம், எல்லாமே. 😎

அடிக்கடி நாட்டிற்குப் போய் வரும் தேவை உண்டு. அதனால் சிறிய தயக்கம். இல்லை துணிவிருந்தால் போடுங்கோ பார்ப்போம் என்றால் யோசிக்கலாம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

ஓரி வைத்தியராக புலமை பெற்ற நில்மினியை   அவரது சுதந்திரமாக கருத்துகளை பேசவிடாது சமையல் குறிப்புகளுடன் நின்று விடுமாறும் அரிசியல் பேசவேண்டாம் என்றும்  அன்பு கட்டளை இடும் நாம் பச்சிளம் சின்னஞ்சிறிய இளம் பெண்பிள்ளைகள் காட்டிலும், மழையிலும், கடலிலிலும் அவர்களின் உடல் வலிமைக்கு மிஞ்சிய ஆயுதங்களை காவி கொண்டு எமக்காக போராடிய போதும்  வெடிகுண்டாக வெடித்த போதும் அதை ரசித்தவர்கள் தான்.   எமது அரசியலுக்காக உன் உயிரைக் கொடுத்து  உழை. ஆனால் அரசியல் கருத்து கூறும்  சுதந்திரம் உனக்கு இல்லை. இது தான் எமது கலாச்சாரம். 

மிகச் சரியாக சொன்னீர்கள்.💐

5 hours ago, tulpen said:

இரண்டாவது புலிகள் செய்த எல்லாம் சரி என்று நீங்கள் வாதாடுவது சரியானதல்ல.  புலிகளும் முன்பின் யோசிக்காது பல கொலைகளை செய்தவர்கள் தான். புலிகள் செய்த பல கொலைகளுக்கு பின்னால் அதை நடத்தியவர்களின் சுய நலமும், ஆத்திரம், அறியாமையும் உள்ளது.  கண்ணை மூடிக்கொண்டு புலிகள் செய்த எல்லா நடவடிக்கைகளுக்கும் நீங்கள் நியாயம் கற்பிப்பதுஎந்த வகையில் நியாயம். 

✔️

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

ஆனந்தராஜாவை கொன்றது புலிகள் அல்ல ரெலோ.

எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்?

எனக்கு தெரிந்நதை எழுதுகிறேன். ஆனந்தராஜா சுடப்பட்ட சில நிமிடங்களில் அந்த வழியே செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவரது பாடசாலை வாயிலுக்கு முன் மாணவர்கள் கூடி அழுத வண்ணம் நின்றிருந்தனர். அவருடன் ஒரு மணித்தியாலமாக அவரது பாடசாலை மாணவர்களை ஒரு போராட்டத்துக்கு அனுமதிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பம் அதற்கு முன் கிடைத்திருந்தது. மாணவர்கள் போற்றிய நல்ல அதிபர் அவர்.

சில ஆண்டுகளின் பின், என்னுடன் கூடப்படித்து பின்னர் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தில் இருந்த ஒருவர் இந்தியாவில் இருந்து விசாரணை ஒன்று நடத்த வந்த சந்தர்ப்பத்தில் சந்திக்க விரும்பினார் பழைய மாணவர்கள் சிலர் சந்தித்து கொண்டோம். பல கேள்விகளுள் ஒன்றாக, ஏன்ஆனந்தராஜாவை கொன்றீர்கள்? என்று கேட்டோம். அவர் தந்த பதிலை நீங்களே தந்திருக்கிறீர்கள் கீழே: 

19 hours ago, nedukkalapoovan said:

இந்த நிலையில்.. ஆனந்தராஜா யாழ் கோட்டை இராணுவத்தோட்டு.. நட்புறவு கால்பந்துப் போட்டிக்கு சொந்தக் கல்லூரி மாணவர்களை அனுப்ப ஏற்பாடு செய்கிறார். இதே இராணுவ முகாமில் இருந்து தினமும் செல் மற்றும் துப்பாக்கிச் சூடு (சினைப்பர் தாக்குதல்) மூலம் பொதுமக்கள் பலியாகியும் காயமடைந்தும் வரும் நிலையில்.. இந்த நட்புறவு என்பது எதற்கு..???! 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, tulpen said:

ஓரி வைத்தியராக புலமை பெற்ற நில்மினியை   அவரது சுதந்திரமாக கருத்துகளை பேசவிடாது சமையல் குறிப்புகளுடன் நின்று விடுமாறும் அரிசியல் பேசவேண்டாம் என்றும்  அன்பு கட்டளை இடும் நாம் பச்சிளம் சின்னஞ்சிறிய இளம் பெண்பிள்ளைகள் காட்டிலும், மழையிலும், கடலிலிலும் அவர்களின் உடல் வலிமைக்கு மிஞ்சிய ஆயுதங்களை காவி கொண்டு எமக்காக போராடிய போதும்  வெடிகுண்டாக வெடித்த போதும் அதை ரசித்தவர்கள் தான்.   எமது அரசியலுக்காக உன் உயிரைக் கொடுத்து  உழை. ஆனால் அரசியல் கருத்து கூறும்  சுதந்திரம் உனக்கு இல்லை. இது தான் எமது கலாச்சாரம். 

நில்மினிக்கு வாதாடும் திறமையும் நேரமும் இருந்தால் தாராளமாக வரலாம் என்பது என் கருத்து. மனதுக்கு சங்கடம் தரும் விவாதத்தில் பங்கேற்கும் மனப்பக்குவம் இல்லை என தெரிந்த படியால் தான் நானும் அரசியல் திரியிலிருந்து ஒதுங்கி இருங்கள் என ஆலோசனை சொன்னேன். வேறு எந்த அடக்குமுறை எண்ணங்களும் இல்லை.
ஈழப்பிரியனும் நானும் சொன்னதை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஒரு கருத்திற்கு மாறுபட்ட சிந்தனைகளை சிந்திப்பதை தவிர்த்தால் ஒன்றும் குறையப் போவதில்லையே...!

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கற்பகதரு said:

எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்?

எனக்கு தெரிந்நதை எழுதுகிறேன். ஆனந்தராஜா சுடப்பட்ட சில நிமிடங்களில் அந்த வழியே செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவரது பாடசாலை வாயிலுக்கு முன் மாணவர்கள் கூடி அழுத வண்ணம் நின்றிருந்தனர். அவருடன் ஒரு மணித்தியாலமாக அவரது பாடசாலை மாணவர்களை ஒரு போராட்டத்துக்கு அனுமதிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பம் அதற்கு முன் கிடைத்திருந்தது. மாணவர்கள் போற்றிய நல்ல அதிபர் அவர்.

சில ஆண்டுகளின் பின், என்னுடன் கூடப்படித்து பின்னர் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தில் இருந்த ஒருவர் இந்தியாவில் இருந்து விசாரணை ஒன்று நடத்த வந்த சந்தர்ப்பத்தில் சந்திக்க விரும்பினார் பழைய மாணவர்கள் சிலர் சந்தித்து கொண்டோம். பல கேள்விகளுள் ஒன்றாக, ஏன்ஆனந்தராஜாவை கொன்றீர்கள்? என்று கேட்டோம். அவர் தந்த பதிலை நீங்களே தந்திருக்கிறீர்கள் கீழே: 

சொறீலங்கா அரசின் குற்றச்சாட்டே இது.

குறிப்பாக ஆலாலசுந்திரத்தை மற்றும் தர்மலிங்கத்தை சுட்டது ரெலோ என்றே நம்பப்படுகிறது. ஈ என் எல் எவ் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு.

ஆனால்.. சொறீலங்கா இப்பவும் சொல்வது வி பு தான் சுட்டனர் என.

ஆனந்தராஜா வை சுடுவதற்கு அந்தக் காலத்தில் இயங்கிய எல்லோருமே அவரிடைய நடவடிக்கையால் மிகக் கோபமுற்றிருந்தனர். அவர் சொறீலங்கா சிங்கள கொலைகாரப் படைகளுடன் கால்பந்துப் போட்டியை ஒழுங்கு செய்தார் என்று கூறினார்கள் சிலர். சிலர் கிரிக்கெட் போட்டி என்கிறார்கள். 

ஆனந்தராஜாவை  கொன்றது இன்னார் தான் என்பதை உறுதியாக இனங்காண முடியாவிட்டாலும்.. அன்றைய காலத்தில் டெலோ தான் சொறீலங்கா அரசுக்கு இராணுவத்திற்கு அடிவருடிய அரசியல்வாதிகளையும் இதர தரப்பினரையும் பழிதீர்த்து வந்தனர். அந்த வகையில் ரெலோ மீது இந்தக் குற்றச்சாட்டு உள்ளது. புலிகளும் செய்திருக்கலாம். வேறு யாராவதும் செய்திருக்கலாம். ஆனால்.. தெளிவான காரணம் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்னவை கூட்டமைப்பின் கருத்தல்ல; அவரின் தனிப்பட்ட கருத்து; சம்பந்தன்

Sampanthan-300x169.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக்கருத்து தனிப்பட்ட கருத்து. அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய சர்ச்சைக்குரிய செவ்வி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், அவரின் தனிப்பட்ட செவ்வியை – அவரின் சொந்தக் கருத்துக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.”

http://thinakkural.lk/article/41364

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

யாரது,  என்னையா கூறுகிறீர்கள் 😀.

என்னைக் கூறியிருந்தால், இதோ உங்களுக்கு திரும்பவும் ஒருமுறை கூறுகிறேன். கேட்டுக் கொள்ளுங்கள்.

 என்னை இழிவுபடுத்துவதை நான் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை 😎

ஆனால்,

இன்னொரு மனிதனை (அதிலும் குறிப்பாக, சக தமிழனை) சாதி, மதம் போன்ற காரணங்களுக்காக இழிவுபடுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அவர்களது ஆயுதத்தாலேயே அவர்களுக்குத் திருப்பி அடிப்பேன். 😡

இதில் மிகவும் தெளிவாக  இருக்கிறேன். 😎

நீங்கள் இல்லை என்னை பேசியவருக்கு அது தெரியும் எத்தனை நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்தாலும் 

மனதும் , எண்ணங்களும் சிந்தனைகளும் தூய்மையாக இருக்க வேண்டும் 

உங்களுக்கும் எனக்கும் விவாதம் வந்தாலும் அநாகரிகமாக நீங்களும் பேசியதில்லை

நானும் இதுவரையில் யாருக்கும் பேசியதும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் இல்லை என்னை பேசியவருக்கு அது தெரியும் எத்தனை நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்தாலும் 

மனதும் , எண்ணங்களும் சிந்தனைகளும் தூய்மையாக இருக்க வேண்டும் 

உங்களுக்கும் எனக்கும் விவாதம் வந்தாலும் அநாகரிகமாக நீங்களும் பேசியதில்லை

நானும் இதுவரையில் யாருக்கும் பேசியதும் இல்லை 

நன்றி தனி. 😀

சற்று தர்மசங்கடமாக இருந்தது. இப்போது நிம்மதி எனக்கு 👏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா அரசின் குற்றச்சாட்டே இது.

குறிப்பாக ஆலாலசுந்திரத்தை மற்றும் தர்மலிங்கத்தை சுட்டது ரெலோ என்றே நம்பப்படுகிறது. ஈ என் எல் எவ் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு.

ஆனால்.. சொறீலங்கா இப்பவும் சொல்வது வி பு தான் சுட்டனர் என.

ஆனந்தராஜா வை சுடுவதற்கு அந்தக் காலத்தில் இயங்கிய எல்லோருமே அவரிடைய நடவடிக்கையால் மிகக் கோபமுற்றிருந்தனர். அவர் சொறீலங்கா சிங்கள கொலைகாரப் படைகளுடன் கால்பந்துப் போட்டியை ஒழுங்கு செய்தார் என்று கூறினார்கள் சிலர். சிலர் கிரிக்கெட் போட்டி என்கிறார்கள். 

ஆனந்தராஜாவை  கொன்றது இன்னார் தான் என்பதை உறுதியாக இனங்காண முடியாவிட்டாலும்.. அன்றைய காலத்தில் டெலோ தான் சொறீலங்கா அரசுக்கு இராணுவத்திற்கு அடிவருடிய அரசியல்வாதிகளையும் இதர தரப்பினரையும் பழிதீர்த்து வந்தனர். அந்த வகையில் ரெலோ மீது இந்தக் குற்றச்சாட்டு உள்ளது. புலிகளும் செய்திருக்கலாம். வேறு யாராவதும் செய்திருக்கலாம். ஆனால்.. தெளிவான காரணம் உள்ளது. 

யார் என்ன சொன்னாலும் ஆனந்தராஜாவை புலிகள் தான் சுட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

யார் என்ன சொன்னாலும் ஆனந்தராஜாவை புலிகள் தான் சுட்டது. 

எப்படிச் சொல்லுறீங்க... அப்ப நீங்கள் புலிகளில் இருந்து சுட்டீங்களா..?! அல்லது ஈபிடிபி தினமுரசு அற்புதன் சொன்னதைச் சொல்லுறீங்களோ..??! 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

உண்மை முகங்களை மறைப்பதற்குப் பல நியாயமான காரணங்களுண்டு. 👍

ஆனால் தேவையேற்படின் என்னை வெளிப்படுத்த நான் தயார். சாதி, சமயம், கல்வி, சொந்த இடம், எல்லாமே. 😎

அடிக்கடி நாட்டிற்குப் போய் வரும் தேவை உண்டு. அதனால் சிறிய தயக்கம். இல்லை துணிவிருந்தால் போடுங்கோ பார்ப்போம் என்றால் யோசிக்கலாம் 😀

வேண்டாமே கபிதன், நீங்கள் யாழுடன் நீண்ட காலமிருக்கனும், உங்கள் கருத்துகளை என்னைபோல் பலர் இழக்கவிரும்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

வேண்டாமே கபிதன், நீங்கள் யாழுடன் நீண்ட காலமிருக்கனும், உங்கள் கருத்துகளை என்னைபோல் பலர் இழக்கவிரும்பவில்லை. 

நன்றி உடையார். 🙂

எங்களில் பலருக்கு (நானும்கூடவே) ஒருவர் கூறும் கருத்தை ஆராயாமல் அவரின் பின்புலத்தை வைத்து அதனூடாகப் பார்க்கும் வழக்கம் உள்ளது. அதனால் கூறவரும் உண்மையான கருத்து வலுவிழந்து போகிறது.  இதன் காரணமாகவே என்னை வெளிப்படையாக அடையாளப்படுத்த முனையவில்லை. 🙂

யாழ் களத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பிலுள்ள இருவருக்கு என்னை யார் என்று தெரியும். 🙂

மறைப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை 😂

On 11/5/2020 at 12:00, Elugnajiru said:

வடக்குக் கிழக்கின் தற்போதைய நிலை சுமந்திரன் போன்றோருக்கே சாதகமாக இருக்கின்றது.தமிழ்  இனத்தை அஞ்சுக்கொ பத்துக்கோ சம் சுங் குழு அடமானம் வைத்தாலும் அங்கு யாரும் கண்டுக்க மாட்டினம் காரணம் அப்படியான சூழலுக்குள் வாழப்பழகிவிட்டார்கள் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது பத்துவயதில் இருந்தவர்கள் இப்போது இளைஞர்களாகி விட்டார்கள் அப்போது அவர்களுக்கு அறியாப்பருவம் எதுவுமே தெரியாது அவர்களது பெற்றோர் பிள்ளைகளை விடுதலை நோக்கிய அரசியலில் உள்நுழைய விடமாட்டார்கள்காரணம் சிங்களம் அவர்களது வயிற்றில் அந்த அளவுக்குப் புளியைக்கரைத்து விட்டிருக்கிறது. ஆகவே உரிமையோ எதுவோ மெதுவாக வருப்போது வரட்டும் ஆனால் நாம் இப்போது கிடைக்கும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துவிடுவோம் என வாழத்தலைப்பட்டு விட்டார்கள் ஆகவே அவர்களுக்குக் கூட்டமைப் பே தகுதியானவர்கள் தாயகத் தமிழினம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

எழுஞாயிறு நீங்கள் சொல்வது சரி 

 தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பு தகுதியானது என மக்கள் எண்ணுவதற்கு காரணம் அது  விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட்து என்று சாதாரண மக்களுக்கும் அறிந்திருப்பதால் , அதனால் அக்கட்சியில் யாரை நிப்பாடினாலும் அவர்கள் வெல்வார்கள். 

இதுதான்  நிதர்சனம் .

16 hours ago, nedukkalapoovan said:

Image may contain: 2 people, people sitting, people standing, child and outdoor

நீங்கள் எழுதிய காரணங்கள் பற்றி பக்கச்சார்பற்ற உண்மைகள் உங்களை விட அவர்களுக்கு கிடைத்திருக்க முடியும். பல அரசாங்க அதிபர்கள்.. அரசு உளவாளிகளாக இருந்த காலங்களும் உண்டு..குறிப்பாக வடக்குக்கிழக்கில் இருக்கும் போது ஒரு கதை.. கொழும்பு திரும்பியதும் இன்னொரு கதை. இவர்களின் இரட்டை நாக்கை கண்காணிக்க புலிகளிடமும் ஆக்கள் இருந்திருப்பார்கள். மக்களும் தகவல் கொடுத்திருப்பாகள். அரச அதிபர்களில்... சிலர் உண்மையில்.. நடுநிலையோடு.. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டும் செயற்பட்டனர். அப்படியான எவருக்கும் எந்த அச்சுறுத்தலும் எழவில்லையே. முழுப் பதவிக்காலங்களையும்.. எந்த அச்சுறுத்தல்கள் இன்றித்தானே முடித்துச் சென்றனர். 

அப்படி இருந்தாலும் , அவரின் மணடயில் போடும் திடடத்தை தோற்கடித்தவர்களும் புலிகள்தான்। புலிகளுக்குளேயே இரண்டு பிரிவுகள்। இது எப்படி இருக்குது? பொட்டு அம்மன் விசாரணைக்கு கூப்பிட்டும் ஒரு அரச அதிபர் போகவில்லை। அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் எண்டு தடுத்தவர்களும் புலிகள்தான்। அளவுக்கதிகமாக வெள்ளையடித்தால் அது வெள்ளையடிக்கப்படட கல்லறையாக மாறி விடும்। அதாவது அதட்குள் நாற்றமும் , எலும்புக்கூடுகளுமாகத்தான் இருக்கும்।

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

அந்தர்  "பல்டி" அடித்த, சுமந்திரன்.
இதுவரை... அவருக்கு,
முட்டுக் கொடுத்தவர்களை...
மேடைக்கு... "பின்புறம் வரும்படி" ... அன்புடன் அழைக்கின்றோம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பெ தாயகத் தமிழர்களுக்குத் தகுதியானவர்கள் எனக்கூறியது அவர்களை எந்தவித விமர்சனங்களும் இல்லாது ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதற்கில்லை இப்போதைய தாயகத் தமிழர்களது எண்ணங்கள் எல்லாம் மாறிவிட்டது அரசியலுக்கும் அவர்களுக்கும் மிகவும் தூரமாகிவிட்டத் தமக்கான அரசியலை யார் முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதற்கான நிதர்சனம் இல்லாதுபோய்விட்டது. ஆகவே அப்படியான ஒரு சமூகக்கூட்டத்துக்கு சம்பந்தன் சுமந்திரன் மாவையர் தலைமையிலான ஒரு அரசியல் கட்சி எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரு குழுநிலைவாத குத்தகைக்காரரே தேவைப்படுகிறார் காரணம் அவர்கள் செய்யும் அரசியல் எனும் தகிடுதித்தம் தமது நடைமுறவாழ்வில் எந்தவித இடையூறையும் ஏற்படுத்தாது அவ்வரசியலில் தாம் எந்தவகையிலும் பங்குகொள்ளாது வெறும் வாக்குகளை போட்டு ஒரு ஏஜண்டை தமக்காக நியமிப்பதுபோன்ற ஒரு செயல்பாடாகும்.

இல்லாதுவிடின் தற்போதைய குரோணா காலத்தில் தாயக மக்கள் நேரடியாகவே தாம் கடந்தகாலங்களில் தெரிவுசெய்த தமது பிரதிநிதிகளை நோக்கியே தமது தேவைக்காகக் கோரிக்கை வைத்திருப்பார்கள். எமக்கு இந்த நெருக்கடியான காலத்தில் எமக்கான சிறீலங்கா அரசினது சட்டரீதியிலான உதவிகளை சரியான விதத்தில் எமக்காக ஏன் ஒருங்கமைக்கவில்லை என அவர்களது வீடுகளுக்கு முன்பு வந்து கேள்வி கேட்டிருப்பார்கள்.

தற்போது புலம்பெயர் தேச உறவுகள் தாயகத்து மக்களுக்கான தொடர்புகள் உறவுகள் மற்றும் உதவிகள் அனைத்தையும் வெட்டிவிடுவதே உங்களுக்கும் எங்களுக்கு இனிமேல் எதுவுமே இல்லை உங்களது செல்லும்வழி என்ன என்பதை நீங்களே தேர்மானித்துக்கொள்ளட்டும்.

10 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

அந்தர்  "பல்டி" அடித்த, சுமந்திரன்.
இதுவரை... அவருக்கு,
முட்டுக் கொடுத்தவர்களை...
மேடைக்கு... "பின்புறம் வரும்படி" ... அன்புடன் அழைக்கின்றோம்.  :grin:

ஏமாற்றுவதில் சுமந்திரன் ஒரு எம்டன் என புரிகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

எப்படிச் சொல்லுறீங்க... அப்ப நீங்கள் புலிகளில் இருந்து சுட்டீங்களா..?! அல்லது ஈபிடிபி தினமுரசு அற்புதன் சொன்னதைச் சொல்லுறீங்களோ..??! 

சுட்டவை சொன்னவை 😉தாங்கள் தான் சுட்டோம் என்று...சில,பல கொலைகள் புலிகள் உணர்ச்சி வசப்பட்டு செய்ததுண்டு...இவருக்கும் 2,3 தடவை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தான் கொலை செய்யப்பட்டார் ...பிழை விட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ..புலிகள் பிழையே விடாத மாதிரி நீங்கள் எல்லோரும் சொல்வதால் தான் , நியாயமான கருத்தை நாம் சொல்லும் போதும் பொய்யர்களாகி நிற்கிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Bild

நன்றி.

தவறுகளைத் திட்டமிட்டுச் செய்வோர் எப்போதும் தமது இலக்கை அடைந்துவிடுவதில் வல்லோர்.  அதனால் இவருக்கு எப்போதுமே புரியாது. இவர் புரிந்துகொள்ளும் போது இவராகவே இருப்பாரா என்பதே ஐயம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுட்டவை சொன்னவை 😉தாங்கள் தான் சுட்டோம் என்று...சில,பல கொலைகள் புலிகள் உணர்ச்சி வசப்பட்டு செய்ததுண்டு...இவருக்கும் 2,3 தடவை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தான் கொலை செய்யப்பட்டார் ...பிழை விட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ..புலிகள் பிழையே விடாத மாதிரி நீங்கள் எல்லோரும் சொல்வதால் தான் , நியாயமான கருத்தை நாம் சொல்லும் போதும் பொய்யர்களாகி நிற்கிறோம் 

புலிகள் சுட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் வைச்சுக் கொண்டு.. இதுதான் நியாயம் என்கிறீர்கள்.

இப்படித்தான் எல்லாக் கொலைகளையும் புலிகள் மேல் போட்டுவிட்டு.. உலகம் பூராவும் அவர்களைப் பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டீர்களே. ஏன் எத்தனை பொய் கதைகளை எம்மவர்கள் உலகம் பூராவும் நீதிமன்றங்களில் சமர்ப்பித்து தங்கள் அகதி விண்ணப்பம் வெல்ல உழைத்தார்கள்..இதனால் பாதிக்கப்பட்டது புலிகள் தான். 

ஆதாரத்தை காட்டுங்கள்..?!

சிங்களவன் ஒரு இனப்படுகொலையை செய்து போட்டே இல்லை எங்கிறான்.

புளொட் காரன் வவுனியாவில் நின்று காட்டிக்கொடுத்தும் சுட்டும் கொன்று விட்டு இன்று சனநாயகவாதி ஆகிட்டான்.

முழுக் கூலிக்கொலைகளையும் செய்த டக்கிளஸ் கும்பல்.. சனநாயகம் பேசுது.

இன அழிப்புக்கு ஒத்தூதிய கருணா என்ற கொலைஞன்.. சனநாயகவாதி.

இதில் யாரை எல்லாம் நீங்கள் எந்தக் கொலைக்கு பொறுப்பாக்கினீர்கள்.

அதேன் புலிகள் என்றவுடன் மட்டும்.. காதால் கேட்டது.. சிங்களன் சொன்னது.. ஒட்டுக்குழு பேப்பரில் வந்தது.. ஹிந்தியன் கட்டிவிட்டது.. அமெரிக்க அவிழ்த்துவிட்டது எல்லாம் உங்களுக்கு ஆதாரமாகிறது.

புலிகள் சொன்னார்களா..??! அல்லது ஏற்றுக் கொண்டார்களா...??? ஆதாரம் இருக்கா இதற்கு. 

நெடுக்ஸ் நீங்கள் எத்தனை பக்கம் எழுதி தள்ளினாலும் சாமான்ய  மக்களுக்கு தெளிவாக தெரியும் எந்த இயக்கம் எந்த கொலையை செய்தது என்று. நீங்கள்  பக்கம் பக்கமாக எழுதுவதில் பெரும் பகுதியை உங்கள் மனச்சாட்சி கூட  நம்பாது. 

  • கருத்துக்கள உறவுகள்

5 minutes ago, tulpen said:

நெடுக்ஸ் நீங்கள் எத்தனை பக்கம் எழுதி தள்ளினாலும் சாமான்ய  மக்களுக்கு தெளிவாக தெரியும் எந்த இயக்கம் எந்த கொலையை செய்தது என்று. நீங்கள்  பக்கம் பக்கமாக எழுதுவதில் பெரும் பகுதியை உங்கள் மனச்சாட்சி கூட  நம்பாது. 

இப்படிச் சொல்வதால் மட்டும் எல்லாத்தையும் புலிகள் தலையில் கட்டலாம் என்பதையும் மக்களில் பெரும்பான்மையானோர்.. அறிந்திருக்கிறார்கள்.  அவர்கள் எத்தனை இராணுவங்களை.. துரோகிகளை.. தேசத்துரோகிகளை.. ஒட்டுக்குழுக்களை கண்டுவிட்டார்கள். 

என்னுடைய கேள்வி சிம்பிள். புலிகள் இந்தக் கொலையை ஏற்றுக் கொண்டார்களா.. என்பது தான். அதற்கு ஆதாரம் இருக்கா..??!

Edited by nedukkalapoovan

18 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

அந்தர்  "பல்டி" அடித்த, சுமந்திரன்.
இதுவரை... அவருக்கு,
முட்டுக் கொடுத்தவர்களை...
மேடைக்கு... "பின்புறம் வரும்படி" ... அன்புடன் அழைக்கின்றோம்.  :grin:

வங்காலையில் இருந்து வந்தவர்களுக்கு ஏதாவது கேள்விகள் இருக்குமாயின் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.