Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழியர்களின் எதிர்ப்பால் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

Featured Replies

625.183.560.350.160.300.053.800.330.160.

கொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்.

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

இது குறித்த தகவலை அறிந்துக்கொண்டதும் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் நேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து சிரேஷ்ட அதிகாரிகள் தலையிட்டு அவர்களை தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.\

safe.png

14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தனிமைபபடுத்தல் சட்டத்தை மீறி பேராசிரியர் ஹூல் தனது புதல்வியை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்ததன் மூலம் தினமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அவரது புதல்வி ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்களின் எதிர்ப்பை அடுத்து நேற்று மதியம் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதாகவும் இதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் முற்றாக கிருமி தொற்று நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் இன்று நடைபெறும் தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பேராசிரியரை வீடியோ தொழிற்நுட்பத்தின் மூலம் கலந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246501?ref=home-imp-parsely

Edited by Gowin

1 hour ago, Gowin said:

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

சாதாரண மக்களுக்கு மட்டும் தான் விதிமுறைகள், அதுவும் சுகாதார விதிமுறைகள் என எண்ணும் இவர்களை படித்த முட்டாள்கள் என்று சொல்வதா? இல்லை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று சொல்வதா? 
 
  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமென்றே தலைப்புகள் தவறாக வைக்கப்படுகின்றனவா?

ஆணக்குழுவில் இருந்து வெளியேறுவது வேறு. ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து வெளியேறுவது வேறு.

இரண்டுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது என்பதை தமிழவின் செய்தியாளருக்கு தெரியவில்லையோ.

செய்தியை பார்த்தால் ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 🥺

2 hours ago, ampanai said:

சாதாரண மக்களுக்கு மட்டும் தான் விதிமுறைகள், அதுவும் சுகாதார விதிமுறைகள் என எண்ணும் இவர்களை படித்த முட்டாள்கள் என்று சொல்வதா? இல்லை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று சொல்வதா? 
 
செத்த வீட்டில் கூட தானே பிணமாக இருந்து மற்றவர்களின் முக்கியத்துவத்தை தான் பெற நினைக்கும் கூட்டத்தில் இருப்பவர் இந்த பேராசிரியர். காலகாலமாக தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராக கதைத்து சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கியவர். இவரிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Gowin said:

safe.png

இடை இடையே கோரோனோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் யாழ் களம் பாராட்டுக்குரியது..👍

6 hours ago, Gowin said:

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

பனை முறிந்த படியாதான் கூல் பாதை மாறி மகளை தேர்தல் அலுவலகம் கூட்டி போயிருக்கார். 

அதுவும் கூல் பேமிலிக்கே கொரோனா தொற்றாது என தெரிஞ்ச பிறகும் தனிமைப்படுத்துறது கூடாது. 

தேர்தல் அலுவலகத்தில இருக்கிற புலி ஆதரவாளர்கள் சும்ம்மா  சும்ம்மா கூல் மேல குறை சொல்ல கூடாது. 
 
13 hours ago, ampanai said:

சாதாரண மக்களுக்கு மட்டும் தான் விதிமுறைகள், அதுவும் சுகாதார விதிமுறைகள் என எண்ணும் இவர்களை படித்த முட்டாள்கள் என்று சொல்வதா? இல்லை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று சொல்வதா? 
 
மேலே செய்தியில் 14 நாட்கள் ஹோட்டலில் தனிப்படுத்தலுக்கு பின்னர் மேலதிக தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்வதாக எழுதப்பட்டுள்ளது. அதில் தவறிருப்பதாக தெரியவில்லை. எனவே சில காரணங்களை வைத்துக்கொண்டு நேர்மையான பேராசிரியரை தாக்குவது நல்லதல்ல. 

20 minutes ago, Vankalayan said:

மேலே செய்தியில் 14 நாட்கள் ஹோட்டலில் தனிப்படுத்தலுக்கு பின்னர் மேலதிக தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்வதாக எழுதப்பட்டுள்ளது. அதில் தவறிருப்பதாக தெரியவில்லை. எனவே சில காரணங்களை வைத்துக்கொண்டு நேர்மையான பேராசிரியரை தாக்குவது நல்லதல்ல. 

இல்லை, நீங்கள் இந்த பகுதியை வசிக்கவில்லை : " வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்

பின்னர் இதை செய்துள்ளார் :

"தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்."

4 minutes ago, ampanai said:

எப்படி இருந்தாலும் தனிமைப்படுத்தல் 14 நாட்கள்தான். மேலும் 14 நாட்கள்  மேலதிகமாக கேட்டிருக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை. அவருக்கு வழங்கப்படட அவரது அலுவலக வாகனத்தில் போய் இருப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. 
 
இங்குள்ள அதிகாரிகளுக்கு ஒரு வாகனமும், குடும்பத்துக்கு ஒரு வாகனமும் இருக்கும்போது இது தவறில்லை. அப்படி என்றால் சடட நடவடிக்கை எடுக்கலாம். இங்கு நிறைய அரசியல் காரணங்களுக்காக இதை எல்லாம் பெரிது படுத்துகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை. 

3 minutes ago, Vankalayan said:

எப்படி இருந்தாலும் தனிமைப்படுத்தல் 14 நாட்கள்தான். மேலும் 14 நாட்கள்  மேலதிகமாக கேட்டிருக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை. அவருக்கு வழங்கப்படட அவரது அலுவலக வாகனத்தில் போய் இருப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. 

"தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்."

வாகனத்தில் ஏறி அலுவலகம் வந்துள்ளார். அதுதான் தவறு 

Just now, ampanai said:

"தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்."

வாகனத்தில் ஏறி அலுவலகம் வந்துள்ளார். அதுதான் தவறு 

14 நாட்கள் முடிந்துதான் அங்கு போய் இருக்கிறார். எனவே அது ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாம் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான். அவருக்கும் மற்றைய இருவருக்கும் பிரச்சினை இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Vankalayan said:

14 நாட்கள் முடிந்துதான் அங்கு போய் இருக்கிறார். எனவே அது ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாம் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான். அவருக்கும் மற்றைய இருவருக்கும் பிரச்சினை இருக்கிறது. 

நீங்களே குற்றம் சாட்டி , எதிராளிக்கு ஆதரவாக ஆஜராகி , பின்னர் நியாயத் தீர்ப்பையும் வழங்கும் ஒரு கிளாசிக் உதாரணமாகவெல்லோ இது இருக்கு ..
அவர் 14 நாட்கள் அல்ல கூடுதலாக 40 நாட்கள் தன்னும் மேலதிகமாவோ அன்றி அல்லாமலோ தனிமைப்படுத்தப் பட வேண்டும் என்று இருந்தால் , அவரை நேரடியாக தனிமைப்படுத்தும் இடத்தை தவிர வேறு எங்கேயும் கொண்டு செல்வது மிகவும் தப்பான செயல் .
இதற்கு சமாந்தரமான முறையில் செயல் பட்டிருந்த அவுஸ்திரேலியா , நியூசீலாந்து நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்திருக்கின்றார்கள் ..
இப்படியான முன்னுதாரணங்கள் எல்லாம் எங்களுக்கு அந்நியமான செயல்பாடுகள் என்பது தான் கவலைக்குரிய விடயம் , என்ன செய்யலாம் , இளைத்துப் போவதைத் தவிர ...      

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறீலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் 28 நாட்கள் 

4 hours ago, Vankalayan said:

14 நாட்கள் முடிந்துதான் அங்கு போய் இருக்கிறார். எனவே அது ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாம் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான். அவருக்கும் மற்றைய இருவருக்கும் பிரச்சினை இருக்கிறது. 

Quote

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்.

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதே

1) 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல்

2) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லல்

என்ற அடிப்படையில்

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கு படிச்ச அளவுக்கு மூளை வேலை செய்யுதில்லை.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதுக்கு மகளை இழுத்திக்கிட்டு திரியனும்..??! அவாவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் என்ன தொடர்ப்பு..??!

அசாதாரண வேளையில் அசாதாரண நடத்தை.. இது படிச்ச மனுசர் செய்யுற செயற்பாடா..??!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறீலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் 28 நாட்கள் 

———

1) 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல்

2) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லல்

என்ற அடிப்படையில்

மீரா..... 14 நாட்கள் அவரின் மகள், வீட்டில் தனிமைப் படுத்தப் படவில்லை என்ற விடயம்... தேர்தல் ஆணைக்குழு அலுவலர்களுக்கு எப்படி தெரிந்தது? 🔎

வெளி நாட்டில் இருந்து வந்தவர்களை.... 😷அடையாளம் காண, ஏதாவது வித்தியாசமன ஏற்பாடுகள்... அங்கு நடைமுறையில் உள்ளதா?  🙂

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

மீரா..... 14 நாட்கள் அவரின் மகள், வீட்டில் தனிமைப் படுத்தப் படவில்லை என்ற விடயம்... தேர்தல் ஆணைக்குழு அலுவலர்களுக்கு எப்படி தெரிந்தது? 🔎

வெளி நாட்டில் இருந்து வந்தவர்களை.... 😷அடையாளம் காண, ஏதாவது வித்தியாசமன ஏற்பாடுகள்... அங்கு நடைமுறையில் உள்ளதா?  🙂

அண்ணா உங்களுக்கு இந்த செய்தி ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அழைத்து வரப்பட்டது இப்படியானவர்களின் பிள்ளைகள்

மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் அரசாங்கத்தால் தனிமைப்படுத்தல்

May 3ம் திகதி வரை அரச தனியார் கட்டடங்களில் தங்கவைக்கப்படனர், ஆனால் May 4ம் திகதி வந்தவர்கள் நட்சத்திர விடுதிகளில்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

உவருக்கு படிச்ச அளவுக்கு மூளை வேலை செய்யுதில்லை.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதுக்கு மகளை இழுத்திக்கிட்டு திரியனும்..??! அவாவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் என்ன தொடர்ப்பு..??!

அசாதாரண வேளையில் அசாதாரண நடத்தை.. இது படிச்ச மனுசர் செய்யுற செயற்பாடா..??!

மகளை அரசியலில் இறக்கப் போறாரோ ?
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அண்ணா உங்களுக்கு இந்த செய்தி ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அழைத்து வரப்பட்டது இப்படியானவர்களின் பிள்ளைகள்

மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் அரசாங்கத்தால் தனிமைப்படுத்தல்

May 3ம் திகதி வரை அரச தனியார் கட்டடங்களில் தங்கவைக்கப்படனர், ஆனால் May 4ம் திகதி வந்தவர்கள் நட்சத்திர விடுதிகளில்

ஆம் மீரா.... அந்தச் செய்திகளை, வாசித்திருந்தேன்.
எனக்கென்னவோ.... ரட்ணஜீவன் ஹூல்தான், 
தன்னுடை மகள்.... "லண்டனில் இருந்து, வந்திருக்கிறா" என்று  ஊழியர்களிடம் சொல்லி...
மாட்டுப் பட்டுப் போனார் போலை... கிடக்குது. :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

மகளை அரசியலில் இறக்கப் போறாரோ ?

இவரே... இன்னும் அரசியலில், குதிக்க முடியாமல்... 
கரையில் நின்று நோட்டம் விட்டுக்  கொண்டிருக்கிறார்.
அதுக்குள்ளை... மகளை, இறக்கப் போகிறாரா.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மகளை அரசியலில் இறக்கப் போறாரோ ?
 
உவரே அரசியலுக்கு வர இயலாது.. இவர் ஒரு அமெரிக்க பிரஜையும் கூட. இதுக்க மகள்.

மேலும் இவர் இவரின் மனைவி அளவுக்கு கூட தமிழர் விவகாரப் பற்றில்லாதவர் போல் தான் திரிந்தார். இப்ப இவரின் சகோதரரின் அடியை ஒற்றி.. சனநாயகம்.. மனித உரிமை மீறல் என்று சொல்லித் திரிகிறார். வெட்டிப் புகழுக்கு தான். 

ஏலவே டக்கி மாமாவோடு மனித உரிமை மீறல் குற்றம்சாட்டப் போய் டக்கி மாமா தன் பாணியில் தன் சிங்களப் பொலிஸ் அரசியல் செல்வாக்கை.. விளையாட்டக் காட்ட இவர் நாட்டை விட்டு ஓடினவர். அடிக்கடி நாட்டை விட்டு ஓடுவார். இதில அரசியல்.. ஐயோ ஐயோ..??! 

Edited by nedukkalapoovan

3 hours ago, nedukkalapoovan said:

ஏலவே டக்கி மாமாவோடு மனித உரிமை மீறல் குற்றம்சாட்டப் போய் டக்கி மாமா தன் பாணியில் தன் சிங்களப் பொலிஸ் அரசியல் செல்வாக்கை.. விளையாட்டக் காட்ட இவர் நாட்டை விட்டு ஓடினவர். அடிக்கடி நாட்டை விட்டு ஓடுவார். இதில அரசியல்.. ஐயோ ஐயோ..??! 

சும்மா இல்ல துண்டை காணம் துணியைக் காணம் என்டு ஓடினர். ஆள மிரட்டி ஓடவைச்சது மகிந்த.

18 hours ago, MEERA said:

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறீலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் 28 நாட்கள் 

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதே

1) 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல்

2) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லல்

என்ற அடிப்படையில்

18 hours ago, MEERA said:

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறீலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் 28 நாட்கள் 

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதே

1) 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல்

2) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லல்

என்ற அடிப்படையில்

நீங்கள் என்னதான் எழுதினாலும் இங்கு அரசியல் பிரச்சினையே ஒழிய வேறொன்றும் இல்லை. அது தமிழர்களிடமிருந்து வரலாம், சிங்களவர்களிடம் இருந்தும் வரலாம்.

இங்கு இவர் ஹோட்டலுக்கு உரிய பணம் வழங்கி, சுகாதார , ராணுவ அதிகாரிகளின் சான்றுப்பத்திரத்துடன்தான் அங்கு சென்றிருக்கிறார். இது பற்றி வீரகேசரி பத்திரகையில் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதை வாசித்தால் உங்களுக்கு விளங்கும்.

இவரை தமிழர்களோ , சிங்களவர்களோ எதிர்ப்பதட்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று எந்த பயங்கரவாத அமைப்புக்கும் அஞ்சாதவர். மற்றது அரசியல் பலத்துக்கு அடிபணியாதவர். இதட்கு மேலே எழுத ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Vankalayan said:

 ஒன்று எந்த பயங்கரவாத அமைப்புக்கும் அஞ்சாதவர். மற்றது அரசியல் பலத்துக்கு அடிபணியாதவர். ..... 

😀 சும்மா காலங்காத்தால பகிடி விடதையுங்கோ, முடியல

Just now, உடையார் said:

😀 சும்மா காலங்காத்தால பகிடி விடதையுங்கோ, முடியல

சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?

34 minutes ago, Vankalayan said:

, சுகாதார , ராணுவ அதிகாரிகளின் சான்றுப்பத்திரத்துடன்தான் அங்கு சென்றிருக்கிறார்.

இப்பிடி பச்சைப் பொய்களை எழுதினால் தான் கூல் செய்த தவறுகளை நியாயப்படுத்த முடியும்.

பேராசிரியர் பட்டத்தை, மனித உரிமையாளர் என்கிற போலிக் கவசத்தை சுமந்துகொண்டு தனிமைப்படுத்தல் முடியாத நிலையில மகளை பொது இடத்துக்கு கூடிச் சென்ற ரட்ணஜீவன் கூல் எப்படிப்பட்ட கேவலமான புத்தியுடைய, ஏனையவர்களின் உரிமைகளை மதிக்காத ஏமாற்று பேர்வழி என்கிறதை அறிய முடியும்.

கூல் கோஷ்டியே வெறிபிடித்த ஒரு அஜென்டாவுடன் அரசியல் பலமுள்ளவர்களிடம் சுயநல ஆதாயம் பெறும் போலி மனிதவுரிமை கோஷ்டி என்கிறது ஊரறிந்த விஷயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.