Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய மலை நடைப்ப‍யணம்

Featured Replies

நீண்ட காலத்தின் பின்னர் குடும்பத்துடன்  ஒரு நாள்  இனிய மலை நடைபயணம் செய்ய கூடிய சந்ததப்பம் நேற்று  கிடைத்த‍து. சுவிற்சர்லாந்தில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை.  நான் வசிக்கும் இடத்தில் இருந்து கிட்ட தட்ட 100 கி. மீ தூரத்தில் உள்ள Grindelwald  என்னும் இடத்தை தெரிவு செய்தோம்.  கடல் மட்டத்தில் இருந்து 1030 மீற்றர் உயரமான பிரதேசம்.  நடந்து போகும் பாதை மிகவும் அழகான இயற்கை காட்சிகளை கொண்டதாக இருந்த‍து. மிக ரம்மியமான காற்றுடன் கூடிய காலநிலை பயணத்தை இன்பமூட்டியது.  அல்ப்ஸ் மலை தொடரின்  Wetterhorn, Eiger,Faulhorn, Mittelhorn, Mättenberg  மலைகளின் சிகரங்களின்  அழகான காட்சிகள் மனதிற்கு இதம் தருவதாக இருந்த‍து. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அங்கு செலவிட்டோம். அங்கு எடுத்த படங்களை யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

சுவிற்சர்லாந்திற்கு வர சந்தர்ப்பம் கிடைத்தால் யாழ்கள உறவுக்கள் மலை நடைப்பயணத்திற்கு இந்த பிரதேசத்தை தெரிவு செய்யயலாம். மிக அழகான இயற்கை காட்சிக்கள்  மனத்திற்கு மிகவும் சந்தோசத்தை கொடுக்கும்.  Bernerhighland  ல் இருக்கும் Interlanken  நகரத்தை அண்டியுள்ள இப்பிரதேசம் இயற்கை அழகு கொண்டது. 

large.D25452D0-5D4D-4AC2-A1C1-4C468F8594BD.jpeg.1ac6eb95bb13cd0e27af238f6c318be5.jpeglarge.49AC5612-1944-4A1B-B9F6-ACB0640AEF16.jpeg.8910d8c0bb6a40f066291b012b6a5dac.jpeglarge.091DCEFC-2719-451A-8375-D64E529EC7C3.jpeg.0f9bd57e6a2d435bf4f768fcf5a0343d.jpeglarge.0EF6EC94-8F8A-4856-8EF2-C49945BF2D8E.jpeg.2fd7fcca92f75d9d93f192b6fc087bac.jpeglarge.2825F971-5DF7-48B0-A341-12F7DAC70480.jpeg.043f738258ee134633f1b2dffa2b4d45.jpeglarge.1F1A25EB-B51E-4138-8342-2D511E42D95A.jpeg.201259c6d6972262f6105aa72c1c8711.jpeglarge.21A5C076-EA74-470B-8FC0-433EB9CB7AAE.jpeg.87d382bbc8f203b812ac63620b14d407.jpeglarge.AB8AB868-60C6-482D-885B-638C76D0879E.jpeg.20902dd8971d7d8af0deac0ffcfcdc3d.jpeglarge.78C7736C-E3FA-4A1A-B4DF-14B9AEAAA7F1.jpeg.ab8d689ba6e7b5434cecb5d8c6efd9b8.jpeg

large.F4F0F3D9-802F-4EA4-959C-62FB71467798.jpeg.623bbea1191a393857e390c2a0ea5f16.jpeglarge.07044075-A18A-44A5-8CCA-FE3BCD0F93D4.jpeg.8d5d961d517d13b4924210cbee141b15.jpeglarge.90A0EB17-B26E-410F-9B9F-33605C0AD58D.jpeg.a6ff9ab6c7a18900d05c325f25bd6486.jpeglarge.F2DE892D-CB4E-445C-8143-B6509D749173.jpeg.dfe5288f8256c0cf518fce168338474c.jpeglarge.D25452D0-5D4D-4AC2-A1C1-4C468F8594BD.jpeg.1ac6eb95bb13cd0e27af238f6c318be5.jpeg

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ருல்ப்பன்.... 
சுவிற்சலாந்து.... எனக்குப் பிடித்த நாடுகளில் ஒன்று.
ஜேர்மனியில்... நான், வசிக்கும் இடத்திலிருந்து, 
"சூறிச்" நகரம் 250 கிலோ மீற்றர்கள் மட்டுமே.

காரில், மெதுவாக.... அழகை ரசித்துக் கொண்டு போனாலும், 
மூன்று மணித்தியாலம் போதும்.
 
நான், திருமணம் செய்த... காலங்களில், மனைவியுடன்....
அடிக்கடி... அங்கு சென்று.. ஜெனிவா வரையும்,
மற்றையை பகுதியான.... இத்தாலிய எல்லையை தாண்டி... இத்தாலிக்குக்கும்... 
குறுக்கும், மறுக்குமாக... சென்று வருவோம்.

பிள்ளைகள்... பிறந்த பின், பொறுப்புகள் அதிகமாகி... 
அங்கு... சென்று வரமுடியவில்லை, என்ற கவலை இன்றும் மனதை உறுத்தினாலும்.
உங்கள்,  படங்கள்.... மனதை, கிளறி  விட்டது.

எனக்கு... இங்கு, தூரதேசங்களில், உறவினர்கள் வந்தால்....
அவர்களை.... "போர்டன் சீ " வரை கூட்டிக்  கொண்டு போய்....
ஒரே.... ஒரு,  இடத்தில் நின்று....
ஒஸ்ரியா, சுவிற்சலாந்து, ஜேர்மனி.... எல்லைகளை காட்டும் போது...
அவர்களின்... முகத்தில், பார்க்கும் சந்தோசம்... மிகப் பெரியதாக இருக்கும். 

ருல்ப்பன்....  உங்கள்... பயணத்தை, மேலும் எதிர் பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுலாத்தலம்......படங்களும் மிக அழகாக இருக்கின்றன.....பகிர்வுக்கு நன்றி tulpen ...முடிந்தால் பயண அனுபவங்களையும் பகிரலாமே......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

அழகான சுவிஸ் நாட்டுக்கு அடிக்கடி வந்தாலும் குறுகிய பயணங்களால் Interlaken பகுதிக்கு இரண்டு தடவைகள்தான் போயிருந்தேன்.

2014 இல் Meiringen எனும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருந்தோம். மலைப்பகுதியில் உள்ள மரங்கள் உள்ள பகுதியில் பறவைகளின் கூச்சல் இல்லாமல் அமைதியாக இருந்தது. அங்கு ஏன் பறவைகள் வருவதில்லை என்ற கேள்வி பல காலமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸின் அழகே மலைகள் தானே. இயற்கை ரம்மியம் நிறைந்த நாடு. படங்களின் பகிர்விற்கு நன்றி.

அதுசரி.. அவுஸில் இருந்து சுவிஸுக்கு எப்போ வந்தீர்கள். சொல்லவே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் இயற்கை அழகை உங்கள் கமராவுக்குள் அடக்கியிருக்கிறீர்கள்.
இவ்வளவும் எவ்வளவு தூரம், நேரம்?

  • தொடங்கியவர்

பார்வையிட்ட  நிழலி, விளங்க நினைப்பவர்,   மற்றும் கருத்து எழுதிய தமிழ் சிறி, சுவி, கிருபன் ,ஈழப்பிரியன் ஆகியோருக்கு நன்றகள். 

சுவி  பயண அனுபவங்கள் என்றால் இது ஒரு  நீண்ட காலப் பயணம் அல்ல. மிக குறுகிக காலத்தில் திட்டமிட‍ப்பட்ட ஒரு நாள் பயணம் தான். காலநிலை மிகவம் எமக்கு கை கொடுத்த‍த‍து. பொதுவாக  இந்த பிரதேசம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். பிரபல்யமான சுற்றுலா மையமான  Jungfraujoch (3434 மீற்றர் உயரத்தில் உள்ளது) போகும் பாதை இது. கொரோனா பிரச்சனைக்கு பிறகு எல்லா Bergbahn  களும் நிறுத்தி வைக்கபட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காணவில்லை. வந்த எல்லோரும் சுவிஸ் பயணிகளாகவே இருந்தனர். நேற்று  சுவிற்சர்லாந்தில் பொது விடுமுறை என்பதால் பல பகுதிகளில் இருந்து Bergwandern செய்வதற்காக மக்கள் வந்திருந்தார்கள்.  அமைதியான சுற்றுலா, இதமான சுத்தமான காற்று  மனதிற்கு மகிழ்வை கொடுத்த‍து. பொதுவாக வக்கேசனில் வரும் ரென்சன் இருக்க வில்லை.

இப்பிரதேசத்தில்  நடைப் பயணத்திற்காக பல்வேறு ரூட்கள் உண்டு.  மிக கடினமான மலை ஏற்றங்கள் உள்ள ரூட் உம் உண்டு. நாம் இலகுவான பாதையை தான் தெரிவு செய்தோம்.  படத்தில் காட்டப்பட்ட மலை சிகரங்கள் எல்லாம் கிட்டத்தட்ட 4000 மீற்றர் உயரமானவை.

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

துல்பன் இயற்கை அழகை உங்கள் கமராவுக்குள் அடக்கியிருக்கிறீர்கள்.
இவ்வளவும் எவ்வளவு தூரம், நேரம்?

நடை தூரம் கிட்டத்தட்ட 11  கிலோ மீற்றர் வரும். கிட்டத்தட்ட 400 மீற்றர் ஏற்றம் இறக்கதுடன்  ஆறுதலாக சுற்றி நடக்க 2 -15 நிமிடம் மணித்தியாலம் எடுத்த‍து.  இதை விட கடினமான ஏற்றம் உள்ள பாதைகளும் உண்டு.  எடுத்த எல்லா படங்களையும்  யாழ் களத்தின் சேர்வர்  நலன்  கருதி இங்கு இணைக்கவில்லை. 

3 hours ago, nedukkalapoovan said:

சுவிஸின் அழகே மலைகள் தானே. இயற்கை ரம்மியம் நிறைந்த நாடு. படங்களின் பகிர்விற்கு நன்றி.

அதுசரி.. அவுஸில் இருந்து சுவிஸுக்கு எப்போ வந்தீர்கள். சொல்லவே இல்லை. 

நெடுக்கு நான் அவுஸில் இருந்த‍தாக உங்களுக்கு யாரப்பா கூறியது. அன்றும் என்றும் சுவிஸில் தான் அடியேன். 

Edited by tulpen
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

நெடுக்கு நான் அவுஸில் இருந்த‍தாக உங்களுக்கு யாரப்பா கூறியது. அன்றும் என்றும் சுவிஸில் தான் அடியேன்.

உங்களை மாதிரியே வேறு ஒருவரும்.. இப்படியான பதிவுகளை பகிர்வதால்.. நீங்கள் தான் அவரோன்னு நினைச்சம். 😀

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

----நெடுக்கு நான் அவுஸில் இருந்த‍தாக உங்களுக்கு யாரப்பா கூறியது. அன்றும் என்றும் சுவிஸில் தான் அடியேன். 

 

14 minutes ago, nedukkalapoovan said:

உங்களை மாதிரியே வேறு ஒருவரும்.. இப்படியான பதிவுகளை பகிர்வதால்.. நீங்கள் தான் அவரோன்னு நினைச்சம். 😀

இண்டைக்கு... முழுக்க, நல்ல   "தமாசாக..."   இருக்கப்பு. 👏 😂
ம்ம்ம்... நடக்கட்டும்,   அப்ப தானே... எங்களுக்கும்  சந்தோசம்.  :grin: 😛

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகான இயற்கை . சுவிற்சர்லாந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஊர். ஆனால் இன்னும் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஜெர்மனி எல்லை (Bavaria ) இல் இருந்து பார்த்தோம். 

  • கருத்துக்கள உறவுகள்

Tulpen படங்களின் பகிர்விற்கு நன்றி. நான் ஒரு தடவை 1994 இல் Grindelwald  என்ற இடத்திற்கு போய் இருக்கின்றேன். மிகவும் அழகான பிரதேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கு ரம்மியமான இடம், நல்லயிருக்கு, சுவிஸும் பயணத்திலிருக்கு, வரும்போது சொல்லிவிட்டு வருகிறோம், தங்குமிடம் சாப்பாடு சுற்றி காட்டுவது எல்லாம் Tulpen னின் பொறுப்பு😀

  • தொடங்கியவர்
6 hours ago, உடையார் said:

மனதுக்கு ரம்மியமான இடம், நல்லயிருக்கு, சுவிஸும் பயணத்திலிருக்கு, வரும்போது சொல்லிவிட்டு வருகிறோம், தங்குமிடம் சாப்பாடு சுற்றி காட்டுவது எல்லாம் Tulpen னின் பொறுப்பு😀

சரி உடையார் வாங்கோ. 🙏உங்களுக்காக Tourist guide அக மாறினால் போச்சு😀 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு சூம் பாக்ரவுண்டுக்கு ஏற்ற இனிமையான படம்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான இடங்களும் அழகான படங்களும் கண்ணுக்கு குளிர்ச்சி தருகின்றன.

large.78C7736C-E3FA-4A1A-B4DF-14B9AEAAA7F1.jpeg.ab8d689ba6e7b5434cecb5d8c6efd9b8.jpeg

இந்த அழகான படத்தை பார்க்கும் போது சிவபெருமான் வீற்றிருக்கும் இமயமலைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. 🪔 🙏🏿

  • கருத்துக்கள உறவுகள்

Tandoori-Love.jpg

சாதாரண புது அல்லு சில்லு ஹீரோக்கள் கூட கதை கேட்கும் போதே எனக்கு சுவிஸ்ல் கதாநாயகிய இறுக்கமா கட்டிபிடிச்சு ஆடுற "ரூயற் சாங்" ஒன்டு வேணும் என்டு அடம் பிடிச்சு தயாரிப்பாளர் தலையில் துண்டை போடும் மர்மம் இப்போதான் விளங்குது..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அழகான இடங்களும் அழகான படங்களும் கண்ணுக்கு குளிர்ச்சி தருகின்றன.

large.78C7736C-E3FA-4A1A-B4DF-14B9AEAAA7F1.jpeg.ab8d689ba6e7b5434cecb5d8c6efd9b8.jpeg

இந்த அழகான படத்தை பார்க்கும் போது சிவபெருமான் வீற்றிருக்கும் இமயமலைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. 🪔 🙏🏿

அண்ணா , உங்கட குசும்பிற்கு ஒரு அளவில்லையாtw_lol: 

 

  • தொடங்கியவர்

வந்து பார்வையிட்டு கருத்துகளை தெரிவித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

அழகான, மனதை கொள்ளைகொள்ளும் படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள். 

நான் ஒரு தரம் சுவீடனிற்கு வந்திருக்கிறேன்,வாவிகளும்,மரங்களும் அழகான ஒரு நாடு. 4நாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன், துக்கமான சம்பவம் ஒன்றிற்கு வந்தமையால் இடங்கள் பார்க்கவில்லை, ஆனாலும், பார்த்தளவில், கண்ணுக்குஎட்டியவரை, வாவிகளும்,மரங்களும் நிறைந்திருந்தது.

ஆனால், சுவிஸ்லாந்து இன்னமும் அழகாக தெரிகிறது.

அவுஸ்ரேலியாவிலிருந்து ஐரேப்பா ... மிகவும் நீண்ட பயணம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.