Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

பொன்னம்பலம், திருச்செல்வம், தொண்டைமான் என்று பலமிக்க தமிழ் தலைமைத்துவத்தில், கிழட்டு குள்ளநரி ஜெயவர்த்தனே செய்த வேலையினால் அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு முதலில் கழண்டு கொண்டவர் தொண்டைமான். 

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அஷ்ரபினை அதே வகையில் கழட்டி, தீவின் ஒட்டு மொத்த தமிழர்களையும் பிரித்து மேய்ந்தார்கள்.

அதேபோல, ஜெயவர்த்தனே மருமகன் ரணில், புலிகளை, கருணாவை கழட்டி, வீழ்த்தினார்.

இந்த குள்ள நரித்தனத்தினால் தான், ஜெயவர்த்தனேவின் ஐதேக இன்று வரை அவர் உருவாக்கிய ஜனாதிபதி பதவிக்கு வரமுடியாமல் தவிக்கின்றது.

புலிகளும், 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு தராமல் போனதன் காரணமும் இந்த குள்ளநரித்தனம் தான். 

அதன் விளைவு அமெரிக்க அரசின் மறைமுக ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் அழிவு.

ஒரு நாட்டை உருவாக்கி அதன் மக்களை பாதுகாக்க அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமானது. குள்ளநரிகளிடம் மட்டுமல்ல வெற்றிபெற்ற தலைவர்களிடமும் இந்த அரசியல் சாணக்கியத்தின் முதிர்ச்சியினை காணலாம். லெனின், மாவோ சே துங், வின்சற் சேர்ச்சில், ஜோர்ஜ் வாஷிங்டன் ஆகிய எல்லோருமே இவ்வாறான அரசியல் சாணக்கியத்தை (குள்ளநரித்தனத்தை) தாராளமாக பயன்படுத்தியே வெற்றி பெற்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சமரச அரசியல் செய்தும் மலையக மக்களின் துன்ப வாழ்வு தொடரும் இந்த வேளையில் இந்த மலையக மக்களின்  பிரதிநிதி என்ற வகையில் அன்னாரின் ஆத்ம சாந்தியடையட்டும்.

  • தொடங்கியவர்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் அவருக்குப் பதிலாக நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவின் இளைஞரணி தலைவர் ஜீவன் தொண்டமானை களமிறக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரப் பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் இம்முறை இ.தொ.கா போட்டியிடுகிற நிலையில், இ.தொ.காவின் இத்தீர்மானத்தை அக்கூட்டணியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அக்கட்சியின் உயர்மட்டக் குழு இன்று அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தொண்டமானுக்கு-பதிலாக-ஜீவன்-தொண்டமான்-களமிறக்கம்/175-250983

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கற்பகதரு said:

அதன் விளைவு அமெரிக்க அரசின் மறைமுக ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் அழிவு.

அமெரிக்கா உள்ளே வரப்போகின்றது என்றே இந்திய உள்ளே வந்தது.

இந்தியாவை வெளியே அனுப்ப, புலிகளுக்கு உதவிகள் கிடைத்தன. மேலைநாடுகளில் இயங்க அனுமதி கிடைத்தது. கிட்டு லண்டனில் இருந்து இயங்க அனுமதித்தனர்.

பின்னர் புலிகள், வல்லரசுகளின் நோக்கங்களுக்கு தடையாக இருப்பார்கள் என்பதால் அழிக்கப்பட்டனர். 

இப்போது 1980 முன்னரான, கள நிலையில் இலங்கை வந்துள்ளது.

மீண்டும் வல்லரசுகள் உள்ளே நுழைய முனைகின்றன. இந்த வகையில், முன்னாள் அமெரிக்க பிரஜை, ஜனாதிபதியாக உதவி கிடைத்தது. 

ஆனால் அவரும், நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக சீனாவிடம் கை ஏந்தபோகின்றார்.

சீனா கொடுக்கக்கூடிய பணத்தினைக் கொடுக்க கூடிய நிலையில் கொரோனவால் பாதிப்புள்ளான மேலை நாடுககள் இல்லை.

சீனா, அமெரிக்கா இடையேயான போட்டி மூலமே எமக்கு விடிவு கிடைக்கும்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
1 hour ago, Nathamuni said:

சீனா, அமெரிக்கா இடையேயான போட்டி மூலமே எமக்கு விடிவு கிடைக்கும்.

கதவுகள் திறக்கும் பொழுது, நுழைந்து அதிகம் அறுவடை செய்யக்கூடிய, சோரம்போகாத,  தமிழின தலைவர்கள் தேவை எமது இனத்திற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்.

 

12 hours ago, Rajesh said:

மகிந்த கோஷ்டியுடன் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக மகன் ஜீவன் தொண்டமான் தேர்தலில்.

jeevan-thonaman.jpg?fit=640,374&ssl=1

மலையக மக்களின் வாக்குப்பலத்தை கொண்டு கிடைத்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழினப் படுகொலைகாரர்களில் ஒருவரான ஹிந்தியாவுக்கு விசுவாசமான அடிமையாக காலத்தை ஓட்டிய ஆறுமுகன் தொண்டமான் வாக்களித்த மலையக மக்களுக்கு விசுவாசமாக நடந்தது இல்லை.  
 
இந்த கொரோனா தொற்று காலத்திலும் அவரது மகனும் கட்சியும் அவரது பிரேதத்தை வைத்து 5 நாட்கள் அரசியல் செய்ய முடிவெடுத்து மிகவும் மோசமான குணத்தை வெளிப்படுத்துகிறது, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகன் தொண்டமானுக்கு நாடாளுமன்றில் இறுதி அஞ்சலி

 

 

 

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கியப் பேழையை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் சென்றனர். 

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஆறுமுகன்-தொண்டமானுக்கு-நாடாளுமன்றில்-இறுதி-அஞ்சலி/150-251001

 

13 hours ago, போல் said:

இந்த கொரோனா தொற்று காலத்திலும் அவரது மகனும் கட்சியும் அவரது பிரேதத்தை வைத்து 5 நாட்கள் அரசியல் செய்ய முடிவெடுத்து மிகவும் மோசமான குணத்தை வெளிப்படுத்துகிறது, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது.

ம்ம்ம்.
1 அல்லது 2 நாள்ல எரிச்சிருக்க வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகனின் பூதவுடலுக்கு கண்ணீருடன் வீதியில் நின்று மக்கள் அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பிலிருந்து இறம்பொடை, வேவண்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன் தற்போது புசல்லாவை நகரில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை கொழும்பிலிருந்து ஹெலிகப்டர் மூலம் கம்பளைக்கு கொண்டு செல்லப்பட்ட பூதவுடல் அங்கிருந்து புஸல்லாவை வழியாக வேவண்டன் எடுத்துச்செல்லப்படுகின்றது. -(3)100972974_1514216022071407_2869693144830574592_n101349640_1514216228738053_7098830557961781248_n101850849_1514215818738094_5877626482167119872_nhttps://www.facebook.com/ArumuganThondaman/videos/270952124314238/
 

http://www.samakalam.com/செய்திகள்/ஆறுமுகனின்-பூதவுடலுக்கு/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/5/2020 at 16:08, Rajesh said:

 

மரணச்சடங்கிலும் இந்தியாவின் மனம் குளிர வைக்கின்றார்கள்.

On 28/5/2020 at 08:28, போல் said:

இந்த கொரோனா தொற்று காலத்திலும் அவரது மகனும் கட்சியும் அவரது பிரேதத்தை வைத்து 5 நாட்கள் அரசியல் செய்ய முடிவெடுத்து மிகவும் மோசமான குணத்தை வெளிப்படுத்துகிறது, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது.

தொண்டமான் கும்பலின் பொறுப்பற்ற மரணவிழா அரசியலைக் கட்டுப்படுத்த நுவரெலியாவில் மே 31வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஆறுமுகனின் பூதவுடலுக்கு கண்ணீருடன் வீதியில் நின்று மக்கள் அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பிலிருந்து இறம்பொடை, வேவண்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன் தற்போது புசல்லாவை நகரில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை கொழும்பிலிருந்து ஹெலிகப்டர் மூலம் கம்பளைக்கு கொண்டு செல்லப்பட்ட பூதவுடல் அங்கிருந்து புஸல்லாவை வழியாக வேவண்டன் எடுத்துச்செல்லப்படுகின்றது. -(3)100972974_1514216022071407_2869693144830574592_n101349640_1514216228738053_7098830557961781248_n101850849_1514215818738094_5877626482167119872_nhttps://www.facebook.com/ArumuganThondaman/videos/270952124314238/
 

http://www.samakalam.com/செய்திகள்/ஆறுமுகனின்-பூதவுடலுக்கு/

 

இந்த சனங்களைத் திருத்தவே முடியாது 😟
 

  • தொடங்கியவர்

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கும் போது தான் ஆறுமுகனின் ஆத்மா சாந்தியடையும் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாயின் மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடன் வழங்கும் போது தான் அவருடைய ஆத்மா சாந்தியடையும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.

tamil_tiger.jpg


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மறைந்த ஆறுமுகன் தொண்டமானிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (29) மட்டக்களப்பு வாவிக் கரையிலுள்ள கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கட்சியின் மத்தியகுழுவினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு மறைந்த ஆறுமுகன் தொண்டாமானின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். 

இதன் போது அங்கு உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவானது நாட்டில் இருக்கும் சிறுபான்மை சமூக மக்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும் 1994 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் மக்களின் ஆனையினை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு சுமார் 25 வருடங்களாக மலையக மக்களுக்காக குரல் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து குரல்கோடுத்துக் கொண்டிருந்த அவரது மறைவானது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத மறைவாகும்.

இறுதி நேரம் வரை மலையக மக்களுக்கு நியாயமான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என மிக அக்கறையுடன் செயற்பட்ட ஒரு தலைமை அது மாத்திரமல்ல மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது தொண்டமான் என்கின்ற நாமங்களும் தொழிலாளர் காங்கிரசும் மிக நிதானமாக ஜனநாயக ரீதியாக செயற்பட்டதன் காரணமாக பறிக்கப்பட்ட குடியுருமையை மீண்டும் பெறப்பட்டது என்பது ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டதனால் தான்.

அது மாத்திரமல்ல பல அரசியல் வாதிகள் மக்களின் வாக்குகளை பெற்று ஆசனங்களை சூடாக்கி கொண்டிருக்கையில் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்ட ஒரு தலைமை இறப்பதற்கு முதல் நாள் நாட்டின் பிரதமரை சந்தித்து மலையக மக்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

நாட்டின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இன்று வேண்டுகொள் விடுத்துள்ளோம் மலையக மக்களுக்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடன் வழங்கும் போது தான் அவரின் ஆத்மாசாந்தியடையும். அந்த மலையக மக்களின் சம்பள மற்று அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு எமது கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதுடன்,

அவரின் பிரிவால் துயருற்றிருக்கின்ற இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் மலையக மக்களுக்கும்.அவரது உறவினர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சார்பாகவும் கட்சியின் சார்பாகவும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவரின் ஆத்மசாந்திகாக பிராத்திக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/83022

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது

May 30, 2020

(க.கிஷாந்தன்)

xx.jpg

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30.05.2020) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து செல்லப்பட்ட அன்னாரின் பூதலுடல் நேற்று (29.05.2020) வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதலுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சிஎல்எப் வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இடையில் எங்கும் வாகனம் நிறுத்தப்படவில்லை.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நாளை மாலை 4 மணிக்கு நோர்வூட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.  #ஆறுமுகன்தொண்டமான் #பூதவுடல் #பாதுகாப்பு  #கொட்டகலை 

DSC00007.jpgDSC00045.jpgDSC00067-1.jpgDSC00096.jpgDSC09963.jpg  xx5.jpg

 

http://globaltamilnews.net/2020/143983/

On 28/5/2020 at 08:28, போல் said:

மலையக மக்களின் வாக்குப்பலத்தை கொண்டு கிடைத்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழினப் படுகொலைகாரர்களில் ஒருவரான ஹிந்தியாவுக்கு விசுவாசமான அடிமையாக காலத்தை ஓட்டிய ஆறுமுகன் தொண்டமான் வாக்களித்த மலையக மக்களுக்கு விசுவாசமாக நடந்தது இல்லை.  
 
இந்த கொரோனா தொற்று காலத்திலும் அவரது மகனும் கட்சியும் அவரது பிரேதத்தை வைத்து 5 நாட்கள் அரசியல் செய்ய முடிவெடுத்து மிகவும் மோசமான குணத்தை வெளிப்படுத்துகிறது, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது.

உயிரோட இருந்த போதும் மக்களுக்கு உருப்படியா ஒன்டும் செய்யாத ஆறுமுகன் தொண்டமான் இறந்த பின்னரும் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில அவரை வென்ட அவரது பிள்ளைகளின் பொறுப்பற்ற செத்தவீட்டு அரசியல் கொண்டாட்டங்கள் மூலம் ஊரடங்கை வரவழைச்சு மக்களின் சுதந்திரத்தை மே 31 வரை பறித்துள்ளார்.

Edited by Rajesh

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.