Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு!

1524831350-0767.jpg?189db0&189db0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும் இன்னமும் வடக்கிற்கு மஞ்சள் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது.

அரசாங்கத்தினால் மஞ்சள் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் 4000 ரூபாவுக்கும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியவில்லை என வடக்கு மாகாண நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் உணவுக்கு மாத்திரமின்றி ஆலய செயற்பாடுகள், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு மஞ்சள் பயன்படுத்துகின்றனர்.

மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கடை உரிமையாளர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://newuthayan.com/வடக்கில்-மஞ்சளுக்கு-தட்ட/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

Edited by nilmini

growturmericslide3-1000-1524579660.jpg?r

வீட்டில் சாடிகளில் வளர்க்கலாம்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

இதைப்பார்த்துவிட்டுபோய் மாமா வீட்டுகுள் பாய போகின்றார்கள் எல்லோரும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 15:25, nilmini said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

ஜேர்மன் கடைகளிலும் முன்பு தாராளமாக கிடைத்த மஞ்சள், இஞ்சி போன்றவை ...
கொரோனா அமளி வந்த பின்.... தட்டுப்பாடாகவும், 
அப்படி கிடைத்தாலும்... முன்பை விட இரு மடங்கு விலைகளில் தான் விற்கிறார்கள்.
ஜேர்மன்காரரே... கொரோனா  வராமல் தடுப்பதற்கு, 
இவை நல்லவை என்று விரும்பி வாங்குகிறார்கள்.
ஆனால்... இவை மருத்துவ ரீதியாக, எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

நில்மினி.... றஞ்சு மாமாவுக்கு, மஞ்சளில்  இவ்வளவு ஆசை வந்ததை நினைக்க சிரிப்பாக உள்ளது.
நான், சென்னையில் இருந்த போது... அவர் செய்த உதவிகளை மறக்க முடியாது.
ஊரில் இருந்த காலங்களில்.... ஆலடி சந்தியில் தான், 
நாம் ஒரு குழுவாக   "அரட்டை" அடித்துக்  கொண்டு இருப்போம்.
அந்தக் காலங்கள்... இனி வராது என்ற போது, ஏக்கமாகத் தான் உள்ளது.    

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மாமாவுக்கு உங்கள் பதிவை கொப்பி பண்ணி அனுப்பினேன் சிறி . உண்மைதான் இங்கயும் அமெரிக்கர்கள் தேங்காய்ப்பால், மஞ்சள் தண்ணி குடித்து, முருக்கம்  இலை , வல்லாரை இலை பவுடர் எல்லாம் சாப்பிடுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nilmini said:

மாமாவுக்கு உங்கள் பதிவை கொப்பி பண்ணி அனுப்பினேன் சிறி . உண்மைதான் இங்கயும் அமெரிக்கர்கள் தேங்காய்ப்பால், மஞ்சள் தண்ணி குடித்து, முருக்கம்  இலை , வல்லாரை இலை பவுடர் எல்லாம் சாப்பிடுகிறார்கள் 

சிவனே என்று இருந்த மனிசனுக்கு பேதி கொடுத்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 15:25, nilmini said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

அந்த ஒருமுறைதான் சிறியர் அவரின் சமையலை சாப்பிட்டது.... போற உயிர் நிலத்தில போனால் என்ன வானத்திலே போனால் என்ன என்று அடுத்த பிளேனில் கொரியருக்குள்  பூந்தவர்தான். பிறகு ஜெர்மனியில்தான் குதித்தவர்....இதையும் லைட்டா றஞ்சி மாமாவின் இயரில போட்டு விடுங்கோ.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

நஞ்சு கலந்த போலி மஞ்சள் 

4 minutes ago, கற்பகதரு said:

நஞ்சு கலந்த போலி மஞ்சள் 

As turmeric and other spices are commonly sold by weight, the potential exists for powders of toxic, cheaper agents with a similar color to be added, such as lead(II,IV) oxide ("red lead"). These additives give turmeric an orange-red color instead of its native gold-yellow, and such conditions led the US Food and Drug Administration (FDA) to issue import alerts from 2013 to 2019 on turmeric originating in India and Bangladesh.[37] Imported into the United States in 2014 were approximately 5.4 million kilograms (12 million pounds) of turmeric, some of which was used for food coloring, traditional medicine, or dietary supplement.[38] Lead detection in turmeric products led to recalls across the United States, Canada, Japan, Korea, and the United Kingdom through 2016.[38]

Lead chromate, a bright yellow chemical compound, was found as an adulterant of turmeric in Bangladesh, where turmeric is used commonly in foods and the contamination levels were up to 500 times higher than the national limit.[39] Researchers identified a chain of sources adulterating the turmeric with lead chromate: from farmers to merchants selling low-grade turmeric roots to "polishers" who added lead chromate for yellow color enhancement, to wholesalers for market distribution, all unaware of the potential consequences of lead toxicity.[39]

Another common adulterant in turmeric, metanil yellow (also known as acid yellow 36), is considered an illegal dye for use in foods by the British Food Standards Agency.[40]

மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் பொதுவாக எடையால் விற்கப்படுவதால், ஈயம் (II, IV) ஆக்சைடு ("சிவப்பு ஈயம்") போன்ற நச்சு, மலிவான முகவர்களின் பொடிகளைச் சேர்ப்பதற்கான சாத்தியம் 
உள்ளது. இந்த சேர்க்கைகள் மஞ்சளுக்கு அதன் சொந்த 
தங்க-மஞ்சள் நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு-சிவப்பு நிறத்தை
 அளிக்கின்றன, மேலும் இதுபோன்ற நிலைமைகள் அமெரிக்க 
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) இந்தியா 
மற்றும் பங்களாதேஷில் தோன்றும் மஞ்சள் குறித்து 
2013 முதல் 2019 வரை இறக்குமதி எச்சரிக்கைகளை 
வெளியிட வழிவகுத்தது. [37] 2014 ஆம் ஆண்டில் 
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 
தோராயமாக 5.4 மில்லியன் கிலோகிராம் (12 மில்லியன் பவுண்டுகள்) மஞ்சள் இருந்தது, அவற்றில் சில உணவு வண்ணம்,
 பாரம்பரிய மருத்துவம் அல்லது உணவு 
நிரப்பிக்கு பயன்படுத்தப்பட்டன. [38] 
மஞ்சள் தயாரிப்புகளில் ஈயத்தைக் கண்டறிதல் 2016, 
அமெரிக்கா, கனடா, ஜப்பான், கொரியா மற்றும் 
யுனைடெட் கிங்டம் முழுவதும் நினைவு கூர 
வழிவகுத்தது. [38]

லீட் குரோமேட், ஒரு பிரகாசமான மஞ்சள் ரசாயன 
கலவை, பங்களாதேஷில் மஞ்சள் கலப்படம் செய்வதற்குக்
 கண்டறியப்பட்டது, அங்கு மஞ்சள் பொதுவாக 
உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் மாசுபடுத்தும் 
அளவு தேசிய வரம்பை விட 500 மடங்கு அதிகமாக 
இருந்தது. [39] ஈய குரோமேட்டுடன் மஞ்சள் 
கலப்படம் செய்யும் ஆதாரங்களின் சங்கிலியை 
ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்:
 விவசாயிகள் முதல் குறைந்த தர மஞ்சள் வேர்களை 
விற்கும் வணிகர்கள் வரை மஞ்சள் நிற மேம்பாட்டிற்காக
 ஈய குரோமேட்டைச் சேர்த்த "பாலிஷர்கள்", 
சந்தை விநியோகத்திற்கான மொத்த விற்பனையாளர்கள்,
 அனைவருக்கும் ஈயத்தின் சாத்தியமான விளைவுகள் 
பற்றி தெரியாது நச்சுத்தன்மை. [39]

மஞ்சள் நிறத்தில் உள்ள மற்றொரு பொதுவான 
கலவை, மெட்டானில் மஞ்சள் (அமில மஞ்சள் 36 
என்றும் அழைக்கப்படுகிறது), பிரிட்டிஷ் உணவு தர 
நிர்ணய நிறுவனத்தால் உணவுகளில் பயன்படுத்த கூடாத
 சட்டவிரோத சாயமாக கருதப்படுகிறது. [40]

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

நஞ்சு கலந்த போலி மஞ்சள் 

பல ஆசியநாட்டவர்களின் உடலில் ஏற்கெனவே  கலந்திருக்கும்😟

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இவ்வாறான பொருட்கள் பெரும்பாலும் port health இனால் பரிசோதனை செய்யப்பட்டே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 15:25, nilmini said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

On 2/7/2020 at 17:23, ஈழப்பிரியன் said:

சிவனே என்று இருந்த மனிசனுக்கு பேதி கொடுத்திருக்கிறீர்கள்.

On 2/7/2020 at 17:33, suvy said:

அந்த ஒருமுறைதான் சிறியர் அவரின் சமையலை சாப்பிட்டது.... போற உயிர் நிலத்தில போனால் என்ன வானத்திலே போனால் என்ன என்று அடுத்த பிளேனில் கொரியருக்குள்  பூந்தவர்தான். பிறகு ஜெர்மனியில்தான் குதித்தவர்....இதையும் லைட்டா றஞ்சி மாமாவின் இயரில போட்டு விடுங்கோ.....!   😁

முகுந்தன்...  எனது, தம்பி.
தமிழ் நாட்டில், படித்துக் கொண்டு இருந்தவர்.
அம்மாவை... பார்க்க, இலங்கைக்கு செல்லப் போகின்றேன் என்று,
றஞ்சன் மாமாவிடம், சொல்லிய போது... 
இப்ப.. போக வேண்டாம் என்று, தடுத்தவராம்.

அப்படி இருந்தும், இலங்கைக்கு வந்து... அம்மாவை பார்த்து விட்டு,
திரும்பிப் போகும்... நாளில், நல்லூர் சிவன் கோவில் வாசலில்...
ஸ்ரீலங்கா விமானப் படையின், தாக்குதலில்...
அவரும்.. அவரது  நண்பரும் இறந்து... 27.06.1990  ஆண்டுடன்...
30 வருடங்கள், கடந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அன்று நடந்த நிகழ்வுகள் முழுவதும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது சிறி. அந்த நேரத்தில் நானும் இந்தியாவில் படித்துக்கொண்டு இருந்ததால் முகுந்தன் 3 முறை விமான நிலையத்துக்கு போய் flight பிரச்சனையால் திரும்பியிருக்கிறார். அப்பபோதுதான் றஞ்சு மாமா  சொல்லியிருக்கிறார் தடையாக இருக்கு முகுந்தன் இம்முறை சிலோன் போகவேண்டாம் என்று. என்றாலும் விதி புகுந்து விளையாடிவிட்டது. அதற்கு பின் செல்வராஜா மாமா மாமியின் புன்னகையும் மறைந்து விட்டது. சிறி நீங்கள் முன்னர் குறிப்பிட்ட மாதிரி இவற்றையெல்லாம் நினைக்கவே விருப்பமில்லை. எதேச்சையாக இந்த நிகழ்ச்சியை இந்த திரிக்குள் கொண்டு வந்ததுக்கு மன்னிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

புகலிட நாடுகளிலேயே நம்மாக்கள் மஞ்சள் நீராடிட்டுத்தான் வீட்டுக்குள்ள வாறாய்ங்களாம்.. என்றால்.. ஊரில்.. மஞ்சளுக்கு தட்டுப்பாடு வரமால்.. கேர்க்குமா லொங்கா.. மஞ்சளா கொக்கா.. என்று வாசித்தால் தவறில்லை.. ஆனால்.. மஞ்சளின்.. தாவரவியல் பெயர் இது.. Curcuma longa 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2020 at 15:00, nilmini said:

அன்று நடந்த நிகழ்வுகள் முழுவதும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது சிறி. அந்த நேரத்தில் நானும் இந்தியாவில் படித்துக்கொண்டு இருந்ததால் முகுந்தன் 3 முறை விமான நிலையத்துக்கு போய் flight பிரச்சனையால் திரும்பியிருக்கிறார். அப்பபோதுதான் றஞ்சு மாமா  சொல்லியிருக்கிறார் தடையாக இருக்கு முகுந்தன் இம்முறை சிலோன் போகவேண்டாம் என்று. என்றாலும் விதி புகுந்து விளையாடிவிட்டது. அதற்கு பின் செல்வராஜா மாமா மாமியின் புன்னகையும் மறைந்து விட்டது. சிறி நீங்கள் முன்னர் குறிப்பிட்ட மாதிரி இவற்றையெல்லாம் நினைக்கவே விருப்பமில்லை. எதேச்சையாக இந்த நிகழ்ச்சியை இந்த திரிக்குள் கொண்டு வந்ததுக்கு மன்னிக்கவும். 

நில்மினி.... எதேச்சையாக, நடந்தது தானே...
அதற்காக யோசிக்காதீர்கள். :)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதுக்கப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் கைப்பற்றல்

1584686531-9088.jpg?189db0&189db0

கொழும்பு – புறக்கோட்டை பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் மற்றும் 300 கிலோ தக்காளி நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (15) இவ்வாறு மஞ்சள் தூள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/பதுக்கப்பட்ட-ஆயிரம்-கிலோ/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

பதுக்கப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சள் தூள்

இதைப் பார்க்க மாமாவையும் தூக்கப் போறாங்களோ என்று நில்மினிக்கு கலக்கப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இதைப் பார்க்க மாமாவையும் தூக்கப் போறாங்களோ என்று நில்மினிக்கு கலக்கப் போகுது.

ஐயோ அந்தாள் பாவம். தனக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும்தானே வாங்கி வைச்சிருக்கிறார்? 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

இதைப் பார்க்க மாமாவையும் தூக்கப் போறாங்களோ என்று நில்மினிக்கு கலக்கப் போகுது.

7 hours ago, nilmini said:

ஐயோ அந்தாள் பாவம். தனக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும்தானே வாங்கி வைச்சிருக்கிறார்? 😂

  Vandu Vadivelu GIF - Vandu Vadivelu Murugan GIFs

நில்மினி,  ஒரு  இறாத்தல்  மஞ்சளுக்கு மேல், வீட்டில் வைத்திருந்தால்....
இ.பி.கோ. 306´வது  சட்டத்தின் படி... பதுக்கல் என்று, பொலிஸ்  பிடிக்குமாம்.  :grin:
றஞ்சு  மாமா வைத்திருக்குற மஞ்சள், 50 இறாத்தலை  தாண்டும் போலை கிடக்கு. 😝
எதுக்கும்.... சுமந்திரனை பிடித்து... முன் ஜாமீன் எடுத்து வைத்திருப்பது நல்லது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

🤣 சும்மாவே பாவத்தாருக்கு 30 வருடங்களாக ஆமிக்காறங்களுக்கு பயந்து முழி வெளிக்கிட்டு போய் இருக்கு. அந்த பாதிப்பில் இப்ப என்னத்த, யாரையும் வில்லங்கமாக கண்டால் ஆட்டம் பிடிக்கும். இதில நீர் வேற வழக்கு, ஜெயில் என்று சிறி 😂
பிகு: சுமந்திரனும் மாமாவும் நல்ல ஒட்டு 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக கடத்தப்பட்ட 1000 கிலோ மஞ்சள்..! கடத்தல்காரன் தனிமைப்படுத்தலில், மஞ்சள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது.!

116521844_2658367284412996_1019160358158

இந்தியாவிலிருந்து மன்னார் வழியாக இலங்கைக்குள் 1000 கிலோ மஞ்சள் கடத்திவந்தவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மன்னார் - சிலாவத்துறை பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கடற்கரையிலிருந்து வண்டி ஒன்றினூடாக மஞ்சளைக் கொண்டு சென்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 மூடைகளில் பொதியிடப்பட்ட நிலையில் இவை பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

மஞ்சளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோரோனோ தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்துவதற்காக மன்னார் பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட 1000 கிலோகிராம் மஞ்சளை யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

https://jaffnazone.com/news/19665

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 22:07, MEERA said:

பிரித்தானியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இவ்வாறான பொருட்கள் பெரும்பாலும் port health இனால் பரிசோதனை செய்யப்பட்டே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

யேர்மனியில் தம்பி வீட்டில் ஒருமுறை சமையலுக்கு மஞ்சள் போடஎடுத்தால் நிறமே ஒரு மாதிரியாக இருந்தது. கறிக்கு எவ்வளவு போட்டும் நிறம் நன்றாக வரவில்லை. நிதிசயமாக அது கலப்படம்தான். ஆனால் லண்டனில் நல்ல மஞ்சள் தான் வருகிறது. நான் இலங்கை போனபோது மஞ்சள் கூட அங்கு தான் அரைத்துக்கொண்டு வந்தேன். கலப்படம் அற்ற மஞ்சளில் ஒரு வாசம் இருக்கும்.

  • 1 month later...

33 ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் மீட்பு

களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள குறித்த களஞ்சியசாலையில் இருந்து 33,000 கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மூன்று கொள்கலன்களில் குறித்த மஞ்சள் தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/33-ஆயிரம்-கிலோகிராம்-மஞ்சள்-மீட்பு/150-255570

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உணவில் முக்கிய கவனம் செலுத்துங்கள்- மஹிந்தவுக்கு யாழ்.வர்த்தக சங்கம் கோரிக்கை..

Sri.jpg

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்விடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதி செயலாளருக்கு இன்று காலை இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உளுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ் வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமர் இன்று காலை ஆலோசனை வழங்கியுள்ளார்.

 https://thamilkural.net/newskural/news/71352/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.