Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணே நீங்க வேற லெவல் படத்தையும் புறமோட் பண்ணீட்டீங்கள் பதிலும் எழுதிட்டீங்கள். 

இரண்டு மாங்காய் அண்ணே 😂

10 minutes ago, கிருபன் said:

எனது கனடா நண்பர் “கண்டம்” என்று ஒரு படம் தயாரித்து யாழ்பாணத்தில் எல்லாம் போய் ஷூட்டிங் செய்து எடுத்தார். அதுவும் இந்த குமரிக் கண்டம் பற்றித்தான். படத்தின் இலண்டனில் premiere show க்கு தயாரிப்பாளர் நண்பருடனும் இயக்குநருடனும் ஒரு கிழமைக்கு மேலாக அலைந்து ரிக்கெற்றுகளும் விற்றுக்கொடுத்தேன்😉

 

  • Replies 269
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

பேச்சு வழக்குகளை பாத்தால் அப்பிடித்தான் தெரியுது...😂

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை முதல்வன், கு.சா அண்ணையின் துணையுடன் திசைதிருப்பி ராஜீவ் கொலை கேசில் பிசியாக்கி விட்டு, இந்த திரிக்குள் புகுந்து இதை ஒரு நகைச்சுவை திரியாக்கும் ஜஸ்டின் அண்ணா, கிருபன் ஜி யின் சதியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த திரியை நீங்கள் எந்த பகுதிக்கும் மாற்றுங்கள், ஆனால் குறைந்தபட்ச நிவாரணமாக எனக்கு (அ)கெளரவ போலி டாக்டர் (போலி -வரலாற்று ஆய்வு) பட்டமாவது வழங்குங்கள்.😂😂😂

துல்பென் வேற என்னை சுருளிராஜன் சீடர் என்கிறார்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அட்லாண்டிஸ் என்று கடலுக்குள் மறைந்திருக்கும் கண்டம்தான் லெமூரியக் கண்டம் என்றுன் குமரிக் கண்டம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஏழாம் அறிவு படைத்த ஏழு அடி உயரத்திற்கும் மேலான ரெலிபதி மூலம் பேசும்  ஆணும், பெண்ணும் ஒரே உடலான அர்த்தநாரீஸ்வரன் தொல் தமிழன் லெமூரியன். தொல்தமிழன் லெமூரியன் வம்சத்தினன்! கண்டம் மறைய ரெலிபதியும் போய் அவர்கள் பேசிய மொழி தமிழ். அவர்களில் இருந்து தோன்றியதுதான் இந்த மானிடகுலமும் மற்றைய மொழிகளும். எனவே தெலுங்கும், சமஸ்கிரதமும், ஏன் உலகத்து மொழி அனைத்துக்கும் தாய்மொழி தமிழ்!

எனது கனடா நண்பர் “கண்டம்” என்று ஒரு படம் தயாரித்து யாழ்பாணத்தில் எல்லாம் போய் ஷூட்டிங் செய்து எடுத்தார். அதுவும் இந்த குமரிக் கண்டம் பற்றித்தான். படத்தின் இலண்டனில் premiere show க்கு தயாரிப்பாளர் நண்பருடனும் இயக்குநருடனும் ஒரு கிழமைக்கு மேலாக அலைந்து ரிக்கெற்றுகளும் விற்றுக்கொடுத்தேன்😉

 

 

large.0C2CD3D9-A939-4392-9CD4-CCD510C367D7.jpeg.502259090619a15ab73ea11bd95372e8.jpeg

எவனோ லெமூரியாவ தூக்கீட்டு இந்து சமுத்திரத்தை ஊணிட்டு போய்டாங்க சார்🤣

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையில் படம் எடுப்பது பரவாயில்லை (ஹொலிவூட்டில் அற்லான்ரிசை வைத்து பல படங்கள் வந்தன).

ஆனால் உண்மையென்று நம்பி முகநூல் அங்க இங்கயெல்லாம் ஜோக்கர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் நம் ஆட்கள். இப்ப கீழடி நல்லூர் வந்து எங்களைக் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது! அதிலயும் என்னத்தைப் பின்னப் போறாங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

கற்பனையில் படம் எடுப்பது பரவாயில்லை (ஹொலிவூட்டில் அற்லான்ரிசை வைத்து பல படங்கள் வந்தன).

ஆனால் உண்மையென்று நம்பி முகநூல் அங்க இங்கயெல்லாம் ஜோக்கர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் நம் ஆட்கள். இப்ப கீழடி நல்லூர் வந்து எங்களைக் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது! அதிலயும் என்னத்தைப் பின்னப் போறாங்களோ?

ஏற்கனவே வந்திட்டு. நேற்று கண்ணில் பட்டது ஒரு யுடியூப் வீடியோ -கீழடி -தமிழரின் ஆச்சரியம் - அங்கே வாழ்ந்தவர்கள் மனிதர்களே இல்லை என்கிறது தலைப்பு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

மருது,

தஞ்சை நாயக்கர் இல்லை- மதுரை நாயக்கர் என நினைக்கிறேன்.

அது பின்னாளில் இப்போ நாம் எட்டிப்பார்க்கும் வரலாறு  உள்ள 
இடத்தில்தான் மதுரையில் பரம்பரையாகவே பெண் எடுக்கும் வழக்கம் இருந்தது.
அதற்கு முன்பு தஞ்சைதான் நாயக்கர்கள் வசம் இருந்தது அதுக்கு காரணம் 
சோழர்கள் காலத்தில் தஞ்சை பெரு நகரமாகவே கட்டப்பட்டு இருந்தது 
சுந்தர சோழர் காலத்திலேயே தஞ்சை பேர் நகரம் என்றால் பின்னாளில் எவ்வாறு இருந்து இருக்கும்.
அதை விட முக்கிய காரணம் இலங்கையும் ஒரு கால கடத்த்தில் விஜயநகர பேர் அரசு ஆண்டது.
விஜயநகர பேரரசின் ஆடசியின் கீழ் ஒரு காலத்தில் இலங்கையும் இருந்தது 

இது பாண்டிய நாட்டுடன் சிங்கள மன்னர்கள் கொண்ட தொடர்பில் தொடங்குகிறது.

சோழருக்கு பயந்து பாண்டியர்கள் மணி முடியை கொடுத்து வைக்கும் அளவுக்கு பாண்டிய-சிங்கள உறவு இறுக்கமானது.

இது அருண்மொழி சோழர் இலங்கைக்கு படையெடுத்து வந்தவுடன் முடிவுக்கு வருகிறது 
ஆதித்ய கரிகால சோழர் பாண்டியநாட்டுக்கு படையெடுக்கும்போதே சோழர்கள் அப்ப அப்ப 
பாண்டியருக்கு துணைக்கு வரும் சிங்கள அரசை இலங்கையில் வைத்தே அடிப்பது என்று திட்டம்வகுத்துதான் 
தொடங்கினார்கள் ஆனால் அதையொரு பழுவேடடையார் ஒருவரே தலைமைதாங்கி வந்தார் 
அந்த போரில் அவர் அந்த பளுவேடடையார் இறந்தும் போகிறார். அவருடைய மகளான வானதியைத்தான் 
அருண்மொழி சோழர் திருமணம் முடித்தது.

வேறு வேறு கால கிரங்களை நீங்கள் குழப்பி கொள்கிறீர்கள் என்று நினைக்கிறன் 
சிலப்பதிகார காலத்திலேயே ஈழம் பாண்டிய பேர் அரசின் ஆடசிக்குள்தான் இருக்கிறது 
அவர்கள் பின்னாளில் சிங்கள மொழியை கொண்டார்களே தவிர இலங்கையின் கீழ்ப்பகுதியினர் 
பாண்டியர்கள்தான். அவர்களுக்கும் நாயக்கர்களுக்குமான தொடர்பு 13-14ஆம் நூற்றாண்டளவில் 
விஜபேரசின் எழுச்சியின் பின் வந்ததுதான். ( நீங்கள் கண்ணகியை பற்றி வாசித்திருப்பீர்கள் கண்ணகி பிறந்தது சோழ நாட்டில் தஞ்சையில்.... வளர்ந்தது சேர நாட்டில் ...  மணம் முடித்ததுதான் பாண்டிய நாட்டில். 
ஒரு கட்டத்தில்  கண்ணகி செங்குட்டுவனிடம் நீதி கேட்டு செல்கிறாள் அது அவள் அங்குதான் வளர்ந்ததால்).
இது ஒரு வெள்ளைக்காரர்கள் யூடியூப்பில் உலக ராஜ்ஜிய சரித்த்ரிரத்தை கால எல்லையுண்டன் தெளிவாக போட்டு இருந்தார்கள் சில காலம் முன்பு அதை இங்கே இணைத்து இருந்தேன் ......... அதில் பார்த்தால் பாண்டிய அரசின் பேர் எழுச்சி தெரியும் ............ 

குவேனியை துரத்தி விட்டு - விஜயனும் அவனின் தோழர்களும் பாண்டிய நாட்டில் மணம் முடித்து அதன் வழி வந்தவர்கள் சிங்களவர் என்பது உண்மையாகின் இப்போ நாம் தமிழ்-சிங்களம் எனப் போடுவது சோழ-பாண்டிய சண்டையின் நீட்சியே.

உண்மை அதுதான் 
அதைவிட கசப்பானது உண்மையான தமிழர்கள் சிங்களவர்கள்தான் 
நாங்கள் கலப்பினம். மதங்களின் வாரலாறை படிக்கும்போது இது தெரிகிறது

 

பின்னாளில் பாண்டியர்களை பிரதியீடு செய்தவர்கள் நாயக்கர்கள். மதுரையில் 1752 வரை அவர்கள் ஆட்சி -சிங்களவர்களுக்கும் நாயக்கருக்கும் உள்ள தொடர்பை மறுக்க முடியாது.

 ஆனால் அது அரச குடும்ப மட்டத்திலேயே இருந்தது. படைவீரர்களாயும் சிலர் வந்திருக்கலாம். ஆனால் அப்படி வந்தவர்கள் கூட தமது மொழி அடையாஅடையாளத்தை பேணவில்லை.

இப்போதும் சில சிங்கள பெயர்கள் தமிழில் நல்ல பொருள் தரும் பெயர்களாக ஆனால் சிங்களத்தில் இடுகுறி பெயர்களாக இருப்பதை காணலாம்.

அழகப்பெருமா(ள்)

அழக(கூ) கோன். 

தேவாரபெருமா(ள்)

அழகியவண்ண (வண்ணன்)

ஆக இலங்கை தமிழர்களிலும், சிங்களவர்கலும் பல தென்னிந்திய பெயர்களின் தாக்கம் இருந்துள்ளது. 

இது அந்த காலத்து fashion ஆக கூட இருந்திருக்கலாம்.  இப்போ இலங்கையில் பிறக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு சச்சின், ரொஷான், விதுஷன், மதுஷன் என்று பெயர் வைப்பதால் அவர்களை இன்னும் ஒரு 300 வருடத்தில் வட இந்திய வம்சாவளி என சொல்ல முடியுமா?

ஆகவே பெயர்களை வைத்து வரலாற்றை புனைவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

பண்டாரநாயக்க தெலுங்கன் என்பதை நிறுவும் அதே எடுகோளை வைத்து செல்வநாயகமும் தெலுங்கன் என நாம் நிறுவ முடியும்.

இதைதான் நான் சொல்கிறேன்.

அதுக்கு அடிப்படை ஆதாரம் வேண்டுமே?
கண்டியை ஒட்டிய பகுதியை நாயக்கர்கள் ஆண்டத்துக்கு 
வரலாற்று சான்றுகள் உண்டு. முதலில் நாம் தெலுங்கு மொழியை ஆய்வு செய்ய வேண்டும் 
எந்த கால கட்டத்தில் தெலுங்கு மொழி உருவானது என்பது முக்கியம் 
இவர்கள் விஜய நகர பேராசின் தொடர்ச்சி என்றாலும் இவர்கள் யாரும் 
தெலுங்கு பேசியதாகவோ .... தெலுங்கின் ஆதிக்கம் மதுரையிலோ தஞ்சையிலோ 
கண்டியிலோ ஒருபோதும் இருக்கவில்லையே? இது மிகவும் குழப்பானதாக இருக்கிறது 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

 

விரிவான பதிலுக்கு நன்றி. 

எம்மிருவருக்கும் வரலாறு பற்றிய புரிதலில் பெரிய மாறுபாடு இல்லை என்பது தெரிகிறது.

நான் இங்கே எழுதியது எந்த ஆதாரமும் இல்லாமல் பண்டார-நாயக்க எனும் பெயரின் உச்சரிப்பு ஒற்றுமையை வைத்து அவர்களை நாயக்க வம்சம் என்று கூற முடிந்தால் -அதே போல் செல்வ-நாயகத்தையும் நாயக்க வம்சம் கூற முடியும் என்பதை சுட்டவே.

தவிர என்னை பொறுத்தவரை, எனக்கு தெரிந்த தரவுகள் எதுவும் பண்டாரநாயக்கவையும் தெலுங்கன் என நிறுவவில்லை. செல்வநாயகத்தையும் தெலுங்கன் என நிறுவவில்லை.

இலங்கை தமிழர் வரலாறும், சிங்களவர் வரலாறும் இடியப்ப சிக்கல் போன்றது. பல தொடர்சியான தென்னிந்திய குழுக்களின் தாக்கம் இரெண்டின் மீதும் உண்டு. 

ஆனால் வேறு எந்த தரவும் இல்லாமல் உச்சரிப்பு ஒற்றுமையை கொண்டு மட்டும் இந்த முடிவுக்கு வரமுடியாது.

இதை சுட்டி காட்டவே இப்படி ஒரு அங்கதமான கட்டுரையும் வரைந்து, கவனத்தை ஈர்க்கும் தலைப்பையும் இட்டேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:
3 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

பேச்சு வழக்குகளை பாத்தால் அப்பிடித்தான் தெரியுது...😂

இடியப்பம் புட்டு சாப்பாடுகளும் அப்படி தான் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:
2 hours ago, குமாரசாமி said:
4 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

பேச்சு வழக்குகளை பாத்தால் அப்பிடித்தான் தெரியுது...😂

இடியப்பம் புட்டு சாப்பாடுகளும் அப்படி தான் இருக்கிறது

மலையாளம் தோன்றியதே 500 வருடங்கள் என்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

 

இதில் இருக்கும் அரைவாசி நாயக்கர்களும் கிறீஸ்தவர்கள். 

கருணா நாயக்க..

ராஜசிங்க.(ம்)

தயானந்த(ன்)

கபில(ன்)

சந்திரிக்கா

மாலினி

பார்த்தா மொத்த சிங்களப் பெயர்களும்.. தமிழ்.. போர்த்திக்கேய.. ஒல்லாந்து ஆகவே இருக்கிறது.

ஆக.. தமிழர்கள்.. பாண்டிய பெரும்பாட்டன் (இன்றைய கர்நாடம் மற்றும்..ஆந்திரா முன்னைய பாண்டியன் இராச்சியங்கள் அடங்கியவை).. சேரப் பெரும்பாட்டனின் ஊர்கள்.. (இன்றைய கேரளா..).. சோழப் பெரும்பாட்டனின் இராச்சியம்.. தமிழகம் இலங்கை உட்பட.. இந்தோனிசியா வரை நீண்டது)

ஆக மொத்தத்தில்.. சிங்களவர்கள்.. 100% தமிழர்களாக இருக்கவே வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் மட்டும்.. விஜயக் கள்ளனின் வழிவந்திருக்கலாம். அதுவும் இப்போ கலந்துவிட்டது. 

இதனை உறுதி செய்ய வேண்டின்.. டி என் ஏ ரெஸ்ட் செய்யலாமே சிங்களவர்கள். அதை ஏன் செய்யுறாங்கள் இல்லை..?????!

மகா வம்சப்படி சிங்கத்தில் இருந்து பிறந்திருந்தால்.... பாதி ஜீன் சிங்கத்துக்குரியதாக இருக்க வேண்டும். எப்படி.. வசதி..???!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இடியப்பம் புட்டு சாப்பாடுகளும் அப்படி தான் இருக்கிறது

ஒரு விசயம் - கூர்ந்த அவதானத்துக்குரியது

தேசவழமை எனும் யாழ்பாணத்துக்கே உரித்தான, இன்று வரை புழக்கத்தில் உள்ள சொத்து சட்டம், இதை டச்சுகாரரக்ள் எழுத்தில் இட்டார்கள் (codified) - இந்த சட்டம் malabar inhabitants அதாவது மலபாரிய (மலையாள பகுதி) வாழிகளின் சட்டம் என்றே தன்னை தானே அழைக்கிறது. 

14 minutes ago, ஈழப்பிரியன் said:

மலையாளம் தோன்றியதே 500 வருடங்கள் என்கிறார்களே?

1100 வருடங்களுக்கு முன், நம்பூதிரி பிராமணர்கள் மணிபல்லவம் எனும் புதிய எழுத்து முறையை புகுத்தியதாலும், மேற்கு தொடர்சி மலைகள் ஒரு பிரிப்பாக அமைந்ததாலும் - அதிக சம்ஸ்கிருத கலப்பாலும் மலையாளம் தனிமொழியாகியதாக படித்துள்ளேன்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் இலங்கை தமிழர்கள், சிங்களவர்கள் எல்லாருமே நெருங்கிய தொடர்புடைய, தென்னிந்திய தாக்கம் மிகுந்த இனக்குழுக்களே. இதில் ஒரு பகுதியை தெலுங்கு வந்தேறி என்றால் மறுபகுதியும் தெலுங்கு வந்தேறியே.

 

  • கருத்துக்கள உறவுகள்

மலை (ஆழம்) 
மலையாளம் என்பதே தமிழ்தான் 

இது பற்றி முன்பு வேறு ஒரு திரியில் பேசி முடிந்துவிட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் மக்களுக்கு தீமை தரும் திட்டம் அல்லது ரகசியமான தமிழர் பாதிக்கும் விடயம் உள்ள சட்டம் போன்றவை கொண்டுவருவது என்றால் மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் சம்பவங்களே ஊடகங்களில் கதை கதையாய் முன்பக்கத்தில் வரும் அந்த சந்தடி சாக்கில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்வார்கள் .அதே இங்கிலாந்தில் என்றால் தொடர் வெயில் காலத்தில் சனமெல்லாம் கடற்கரையில் படுத்து குடித்து கூத்தடிக்க சந்தடி சாக்கில்  2008 ல் வங்கி  வட்டி விகிதங்களை ஐந்து க்கு மேல் கூட்டி  விடுவார்கள் .

இங்கு இந்த திரி துறந்தவர் ?....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

தமிழ் நாட்டில் மக்களுக்கு தீமை தரும் திட்டம் அல்லது ரகசியமான தமிழர் பாதிக்கும் விடயம் உள்ள சட்டம் போன்றவை கொண்டுவருவது என்றால் மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் சம்பவங்களே ஊடகங்களில் கதை கதையாய் முன்பக்கத்தில் வரும் அந்த சந்தடி சாக்கில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்வார்கள் .அதே இங்கிலாந்தில் என்றால் தொடர் வெயில் காலத்தில் சனமெல்லாம் கடற்கரையில் படுத்து குடித்து கூத்தடிக்க சந்தடி சாக்கில்  2008 ல் வங்கி  வட்டி விகிதங்களை ஐந்து க்கு மேல் கூட்டி  விடுவார்கள் .

இங்கு இந்த திரி துறந்தவர் ?....................

நீங்கள் எல்லோரும் இந்த திரிக்குள் நிக்க, நான் லெமூரியா கண்டத்தை அப்படியே லவட்டி கொண்டு போகும் திட்டத்தில் உள்ளேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ooravan said:

 

 

அதே மொக்கு தியரிய வீடியோவா போட்டாலும் மொக்கு தியரிதாம்லே🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.2A2896E1-C9B2-41F7-B03A-FB142C1D7CCA.jpeg.fa558ceb1ae9eedeffa3e21bc1449b30.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

அதே மொக்கு தியரிய வீடியோவா போட்டாலும் மொக்கு தியரிதாம்லே🤣

இதில் என்ன மொக்கு தியரி இருக்கிறது?
கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதே மொக்கு தியரிய வீடியோவா போட்டாலும் மொக்கு தியரிதாம்லே🤣

கோஷன் காணோளியைப் பார்த்தனீரா? ஏது மொக்கு தியரி இதில்?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

இதில் என்ன மொக்கு தியரி இருக்கிறது?
கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா? 

தெளிவா நாம் இருவரும் விவாதித்ததுதான்.

விக்ரமராஜசிங்கன் - நாயக்கன் என்பது ஊருக்கே தெரிந்த விசயம். இதை ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போல சொல்லிகிட்டு. அவன் ஏன் பெயர மாத்தினான்? மதுராந்தகன் ஏன் உத்தம சோழன் ஆனான்? அருண்மொழி வர்மன் ஏன் ராஜராஜ சோழன் ஆனான்? அதே காரணம்தான். அரசர்கள் இயற்பெயருடன் அரச கட்டில் ஏறுவதில்லை.

கண்டிய சிங்கள மன்னர்கள் 2 ம் ராஜசிங்கன் காலம் தொட்டு நாயக்க ராணிகளை மணம் முடிப்பது வழமை. நாயக்க ராணிகள் சிங்கள மன்னர்களை திருமணம் முடித்து, கடைசி கண்டிய சிங்கள மன்னன் பராகிரம நரேந்திர சிங்கன் இறந்த பின் அவனின் நாயக்க மனைவியின், நாயக்க தம்பி, விஜயராஜ சிங்கன் அரியாசனம் ஏறியது 1739 இல். கண்டிய நாயக்க வம்ச ஆட்சி 1739-1815 வரை.

ஆனால் இதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே பண்டார எனும் பெயர் சிங்கள மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் இருந்தது. கொனப்பு பண்டார, கெரலியத்த பண்டார, இப்படி பல. பண்டார என்பது ஒரு ராஜ இளவலை குறிக்கும் சொல். நாம் முன்னரே பார்ததை போல நாயக்க என்பது தலைவன். ஆக பண்டாரநாயக்க என்பது பண்டாராக்களில் முதன்மையானவன்.

தமிழ் செல்வநாயகமும் இதே போலத்தான். செல்வங்களின் தலைவன். ராசநாயகம் -ராசாக்களில் முதல்வன்.

கண்டிய நாயக்க ஆளுமை வெறும் 75 வருடம்தான். அதுவும் கூட கரைநாட்டில் இல்லை. பெயருக்கு மன்னன் மற்றும்படி மஹா அதிகாரம்களான சிங்கள பிரதானிகளே நாட்டை ஆண்டனர்.

நீங்களே சொன்னது - பிற்கால தஞ்சை/மதுரை நாயக்கர்கள் தெலுங்கர் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

தமிழ் குடியான வன்னியர்களிடமும் நாயகம் எனும் பெயர் உள்ளது. பண்டார வன்னியன் கண்டியோடு திருமணம் பந்தம் செய்கிறான். போற போக்கில் பண்டாரவன்னியனும் நாயக்கன் என்று முடிப்பார்கள் இவர்கள்.

உண்மையில் பண்டாரநாயக்கவின் அடி நீலப்பெருமாள் எனும் ஒரு தமிழர் என்றும் கூறுவார்கள்.

ஆகவேதான் சொல்கிறேன் இது வெறும் உச்சரிப்பை மட்டும் வைத்து, இலங்கயின் சிக்கலான வரலாறு அறியாதவர்களால் கட்டபடும் மொக்கு தியரி. மிகவும் ஆபத்தான தியரி.

 

8 minutes ago, உடையார் said:

கோஷன் காணோளியைப் பார்த்தனீரா? ஏது மொக்கு தியரி இதில்?

 

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வாத பிரதிவாதங்களை வைத்தவர்களை ஒன்றாக பிடித்து ஐயா விக்னேஸ்வரனுக்கு உதவிக்காக அனுப்பலாம் என்று எண்ணுகிறேன்.

சிங்களத் தலைவர்கள் விவாதத்துக்கு கூப்பிடும் போது அவருக்கும் ஆள் உதவி தேவை தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஊரவனின் வீடியோவில் இருக்கிற தம்பியா அந்த சீமானின் ஏதோ விவாத நட்சத்திரம் என்றார்கள்? தெரியாததால் கேட்கிறேன். 

ஏன் இவர்கள் இப்படி  தமிழ் நாட்டில் பிறந்த மக்களையே வந்தேறி வந்தேறி என்று அவமதித்து வன்மம் வளர்க்கிறார்கள்? இதனால் இது வரை விளைந்த நன்மைகள் என்ன, இனி விளையும் என எதிர்பார்க்கிற நன்மைகள் என்ன? இது புத்திசாலித்தனமான வீடியோ என்று சான்று கொடுத்தோரில் யாராவது விளக்குவீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, உடையார் said:

கோஷன் காணோளியைப் பார்த்தனீரா? ஏது மொக்கு தியரி இதில்?

 

 

1 hour ago, Maruthankerny said:

இதில் என்ன மொக்கு தியரி இருக்கிறது?
கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா? 

ஆனா ஒண்டு,

நீங்க கேள்வி கேட்டா நாங்க மாங்கு மாங்குன்னு எழுதுறோம். 

சில திரிகளில் - நாளைக்கு சாவகாசமா பேசுவோம்னுட்டு போய்டுறாங்க.

பின்னே — போய் விக்கி பீடியாவ நோண்ட டைம் ஆகுமா இல்லையா🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.