Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாம் தமிழர் செய்தியா கிடக்குதே... என்று புலம்பியவர்களுக்காக.... ஒரு திமுக செய்தி ஒன்று.

உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு

பேச்சாளராக அறிமுகமான பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் கொண்டிருக்கிறார் 67 வயதான திமுக நிர்வாகி. திருவண்ணாமலையில் இந்த திருமணம் பற்றிதான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வயசானாலும் அழகும் இளமையும் மாறலையை என்று சிலரை சொல்வார்கள். சிலருக்கு 60 வயதிலும் ஆசை வரும் அப்படித்தான் சாவல் பூண்டி ஊரைச்சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவருக்கு 67 வயதில் காதல் வந்துள்ளது. அவருக்கு மனைவி மகன்கள் இருந்தாலும் தனது பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு எங்கே யாருடன் எப்படி காதல் வந்தது என்று பார்க்கலாம்.

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

சுந்தரேசன் பல ஆண்டுகளாக திமுகவில் நிர்வாகியாகவும் இருக்கிறார். தற்போது திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராகவும் ஆறுமுறை பதவி வகித்திருக்கும் இவர் ஏ.வ.வேலுவின் தீவிர விசுவாசி சாவல் பூண்டி சங்கப்பலகை என்ற அமைப்பின் சார்பில் பேச்சாளர்களையும் உருவாக்கி வருகிறார் சுந்தரேசன். அவரிடம் பட்டிமன்ற பேச்சாளராக திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயதான அபிதா என்ற பெண் அறிமுகமானார். பேச்சாளராக அறிமுகமான அபிதா உடன் நெருக்கமானார் சுந்தரேசன். இந்த நெருக்கம் காதலாக மாறியது. மூன்று ஆண்டுகள் காதலித்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே மனைவி, மகள், மகன்கள் உள்ள நிலையில் தன்னை விட 40 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றிதான் பலரும் பேசி வருகின்றனர்.

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/thiruvannamalai/tiruvannamalai-dmk-executive-who-romantically-married-granddaughter-age-girl-398403.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சில பேருக்கு வயித்தெரிச்சல். சுந்தரேசன்- அபிதா தம்பதிகளுக்கு, திருமண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இதுக்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு..??!

திருமணம் என்பது அவரவர் விருப்பத் தெரிவு. இதில வெளியார் வயித்தெரிச்சலை கொட்டுவதை நிறுத்திவிட்டு.. வாழ்த்துவிட்டுச் செல்வதே சிறப்பு. மிச்சத்தை சம்பந்தப்பட்ட இருவரும் பார்த்துக் கொள்வார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, zuma said:

சில பேருக்கு வயித்தெரிச்சல். சுந்தரேசன்- அபிதா தம்பதிகளுக்கு, திருமண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள். 

அப்ப, அய்யா... நீங்கள்...கன்போம்ட்.... திமுக தான்.... 😁

Just now, nedukkalapoovan said:

அதுசரி.. இதுக்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு..??!

திருமணம் என்பது அவரவர் விருப்பத் தெரிவு. இதில வெளியார் வயித்தெரிச்சலை கொட்டுவதை நிறுத்திவிட்டு.. வாழ்த்துவிட்டுச் செல்வதே சிறப்பு. மிச்சத்தை சம்பந்தப்பட்ட இருவரும் பார்த்துக் கொள்வார்கள். 

அதில பிழை இல்லை நெடுக்கர்.... ஒரே நாம் தமிழர் அரசியல் எண்டது தான் சிலரது மண்டையிடி....

அதாலை.... திமுக நிர்வாகி பத்தின செய்தி...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அப்ப, அய்யா... நீங்கள்...கன்போம்ட்.... திமுக தான்.... 😁

அதில பிழை இல்லை நெடுக்கர்.... ஒரே நாம் தமிழர் அரசியல் எண்டது தான் சிலரது மண்டையிடி....

அதாலை.... திமுக நிர்வாகி பத்தின செய்தி...

ஒரு ஆர்வக் கோளாறில்.. கொரானா பகுதிக்குள் தவறுதலாக ஒட்டிவிட்டீர்கள்.

மற்றும்படி.. செய்தி இணைத்தது தவறல்ல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

ஒரு ஆர்வக் கோளாறில்.. கொரானா பகுதிக்குள் தவறுதலாக ஒட்டிவிட்டீர்கள்.

மற்றும்படி.. செய்தி இணைத்தது தவறல்ல. 

மேலே தவறான பகுதிக்குள் வந்துவிட்டத என்று சொல்லி, நிர்வாக உதவி கேட்டுள்ளேன்.

3 minutes ago, Nathamuni said:

மேலே தவறான பகுதிக்குள் வந்துவிட்டத என்று சொல்லி, நிர்வாக உதவி கேட்டுள்ளேன்.

மாற்றி விட்டாச்சு.... ஆனால் இந்த செய்தி தேவைதானா என்ற கேள்வி நிர்வாகத்துக்குள் இருக்கின்றது. ஏனெனில் தனிப்பட்ட இருவரின் சட்ட ரீதியிலான உறவு சம்பந்தமான விடயம் செய்தி ஆக்கப்படுவதே தவறு முதலில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

மாற்றி விட்டாச்சு.... ஆனால் இந்த செய்தி தேவைதானா என்ற கேள்வி நிர்வாகத்துக்குள் இருக்கின்றது. ஏனெனில் தனிப்பட்ட இருவரின் சட்ட ரீதியிலான உறவு சம்பந்தமான விடயம் செய்தி ஆக்கப்படுவதே தவறு முதலில்.

சட்டபூர்வமான தல்ல என்பதே உண்மை. மணைவி.... மகள்... மகன்கள் ....

சரி, நீஙகள் சொல்வதை கவனத்தில் எடுக்கிறேன்.

நன்றி

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

திருமணம் சொக்கத்தில் நிர்ச்சயிக்கப்படுகின்றது.
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள். 💐

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனக்கு இன்னும் வயசு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

SKB திருமண நாள் வாழ்த்துக்கள் பாடல் புல்லங்குடி - YouTube

பதினாறும் பெற்று... பெரு வாழ்வு வாழ, இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.  💐

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

யௌவன வாழ்வில் செங்கனி மாது

சந்தோசம் கொண்டாடும் போது

உலகம் யாவும் அழகில் ஆடும்

உள்ளந்தோறும் கலைகள் கூடும்

ஒய்யார வண்ணங்கள் பாடும் - இளமை

டாடாட....... டடாட...... டாடா.....

ஒரு முறைதான் வரும் கதை பல கூறும்

உல்லாசப் புதுமைகள் காட்டும்இளமை

ஒய்யார வண்ணங்கள் பாடும் இளமை

டாடாட....... டடாட...... டாடா.....

வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

20 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப எனக்கு இன்னும் வயசு இருக்கு.

நானும்  இப்படித்தான்  நினைச்சன்

யாழிலயும் தம்பிமார்  உட்பட எந்த  எதிர்ப்பும்  வராது என்று தெரியுது???😜

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியனந்த சுவாமிகள் திருவண்ணாமலையின்ர புகழ இன்டர்நேஷனல் லெவலில் எடுத்து செல்ல .. 👍 இது உப்பு சப்பில்லா கேஸ் .. விடுங்கப்பா

.."பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.."..👌

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வின் வின் சிட்டிவேஷன் 

அடுத்தவரும் 5 வருடமும் பெண்ணுக்கு சாதகமானது 
(அதனாலதான் சில வயது குறைந்த பெண்கள் இதுக்குள் நுழைகிறார்கள்)

5 வருடம் கடந்து மரணம் வரை மாப்பிள்ளைக்கு சாதகமானது 
(5 வருடத்துக்கு பின்பும் அந்த பெண் உறவை பேணுவார் என்று எண்ணி எடுக்கும் ஒரு ரிஸ்க். அல்லது 5 வருடத்துக்குளேயே அனுபவித்து முடிக்கவேண்டும் எனும் மனோ நிலையில் சமூக சொந்த குடும்ப உறவுகளை எதிர்த்தும் ஆண்கள் நுழைகிறார்கள்) 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

திருமணம் சொக்கத்தில் நிர்ச்சயிக்கப்படுகின்றது.
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள். 💐

கு.ச. வெக்கையில புழுங்குகிற மாதிரி பகல் கனவு கண்டனான். 😜

2 hours ago, தமிழ் சிறி said:

SKB திருமண நாள் வாழ்த்துக்கள் பாடல் புல்லங்குடி - YouTube

பதினாறும் பெற்று... பெரு வாழ்வு வாழ, இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.  💐

வாழ்த்துவது சரிதான். அதென்ன பதினாறும் பெற்று ... 🤔

நக்கலோ.. 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

கு.ச. வெக்கையில புழுங்குகிற மாதிரி பகல் கனவு கண்டனான். 😜

நான் நிஜத்திலையே அனுபவிச்சவன்யா......😎
உந்த விசயத்திலை நான் கனவெல்லாம் காணுற பழக்கம் என்னட்டை இல்லை ஐய்யா......எடுத்தால் மொட்டை வைச்சால் குடுமி 😂

1 hour ago, Kapithan said:

வாழ்த்துவது சரிதான். அதென்ன பதினாறும் பெற்று ... 🤔

நக்கலோ.. 😡

 கபிதன்  நிற்க.....✋🏽
பதினாறு எண்டால் பிள்ளையள் மற்ற அதுதான்.....அதை நான் என்னெண்டு இதிலை வைச்சு சொல்லுறது...😶

அவர் சும்மா ஒரு பேச்சு துணைக்கு இன்னொரு துணையை தேடி வைச்சிருக்கிறார்....அவ்வளவுதான் கக்கக போ...😷

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நிழலி said:

இந்த செய்தி தேவைதானா என்ற கேள்வி நிர்வாகத்துக்குள் இருக்கின்றது. ஏனெனில் தனிப்பட்ட இருவரின் சட்ட ரீதியிலான உறவு சம்பந்தமான விடயம் செய்தி ஆக்கப்படுவதே தவறு முதலில்.

நிழலி நியாயஸ்தன் ஆனால்.....

சீமான் விஜயலச்சுமி சம்பந்தப்பட்ட செய்தியை கிருபன் இணைத்த போது தடுத்திருக்க வேண்டும்.
திரைப்பட சீமான் அரசியல் சீமான் என்பதற்கு அப்பால் ஒரு தனிமனிதனை நான்கு சுவருக்குள் நடந்த விடயங்களை ஒரு பாலியல் ஒளிப்பதிவு போல் பிரசுரித்தவரின் செய்திகளை இணைக்க எப்படி அனுமதித்தீர்கள்?

உங்களுக்கு பிடித்ததோ எங்களுக்கு பிடித்ததோ என்ற பேதம் இல்லாமல் சீமான் இன்று தமிழ்நாட்டு/இந்திய அரசியலில் பேசு பொருளாகி விட்டார். இனி வரும் காலங்கள் நல்லதோ கெட்டதோ முடிவு செய்யும்.

இன்னும் வரும்..

மன்னிக்கவும் நிழலி! இன்னுமொரு கருத்தை உங்களுக்கு சொல்ல விழைகின்றேன்.நீங்கள்  பல கருத்துக்களை அனுமதித்து சில கருத்துக்களை அகற்றுவதன் மூலம் பல தவறுகளை இழைக்க முயல்கின்றீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.யாழ்களம் எமது களம். தமிழர்களின் களம். அந்த உரிமையுடன் மட்டுமே நான் உங்களுக்கு என் அனுபவத்தில் சொல்கிறேன்.

தடுமாறலும் தளம்பலும் நமக்குள் வேண்டாம். நமது பயணத்தின் இலக்கு ஒன்றே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

மாற்றி விட்டாச்சு.... ஆனால் இந்த செய்தி தேவைதானா என்ற கேள்வி நிர்வாகத்துக்குள் இருக்கின்றது. ஏனெனில் தனிப்பட்ட இருவரின் சட்ட ரீதியிலான உறவு சம்பந்தமான விடயம் செய்தி ஆக்கப்படுவதே தவறு முதலில்.

விட்டா புதிதுபுதிதாக எல்லாம் கண்டுபிடிப்பீங்களோ...  😂

பில் கிளின்ரன் எண்டாச் செய்தி லோவ லெவலில உள்ள ஆட்களெண்டா அது செய்தியில்ல.. ☹️

அம்மாடி....உது என்ன புதுசாக்கிடக்கு 😜

1 hour ago, குமாரசாமி said:

நிழலி நியாயஸ்தன் ஆனால்.....

சீமான் விஜயலச்சுமி சம்பந்தப்பட்ட செய்தியை கிருபன் இணைத்த போது தடுத்திருக்க வேண்டும்.
திரைப்பட சீமான் அரசியல் சீமான் என்பதற்கு அப்பால் ஒரு தனிமனிதனை நான்கு சுவருக்குள் நடந்த விடயங்களை ஒரு பாலியல் ஒளிப்பதிவு போல் பிரசுரித்தவரின் செய்திகளை இணைக்க எப்படி அனுமதித்தீர்கள்?

நல்ல கேள்வி.

கிருபன் இணைத்த போது அதை ரிப்போர்ட் செய்து எமக்கு அறியப்படுத்தினீர்களா? இந்த திரியை நிர்வாகத்தின் கவனத்துக்கு ஒருவர் உடனடியாக கொண்டு வந்து சரியான பிரிவுக்குள் நகர்த்த கேட்டு இருந்தார், அதனால் தான் உடனடியாக நகர்த்தி பதிலையும் வைத்து நகர முடிந்தது. 

உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உதுதான் ஆட்டுக்கில மாட்டை விடுகின்றது என்றது.

Quote

மன்னிக்கவும் நிழலி! இன்னுமொரு கருத்தை உங்களுக்கு சொல்ல விழைகின்றேன்.நீங்கள்  பல கருத்துக்களை அனுமதித்து சில கருத்துக்களை அகற்றுவதன் மூலம் பல தவறுகளை இழைக்க முயல்கின்றீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.யாழ்களம் எமது களம். தமிழர்களின் களம். அந்த உரிமையுடன் மட்டுமே நான் உங்களுக்கு என் அனுபவத்தில் சொல்கிறேன்.

தடுமாறலும் தளம்பலும் நமக்குள் வேண்டாம். நமது பயணத்தின் இலக்கு ஒன்றே.

நிழலி ஒரு பனங்காட்டு நரி, உந்த சல சலப்புகளுக்கு எல்லாம் மசியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, நிழலி said:

நல்ல கேள்வி.

கிருபன் இணைத்த போது அதை ரிப்போர்ட் செய்து எமக்கு அறியப்படுத்தினீர்களா? இந்த திரியை நிர்வாகத்தின் கவனத்துக்கு ஒருவர் உடனடியாக கொண்டு வந்து சரியான பிரிவுக்குள் நகர்த்த கேட்டு இருந்தார், அதனால் தான் உடனடியாக நகர்த்தி பதிலையும் வைத்து நகர முடிந்தது. 

உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி

இல்லை. 

 கிருபன் இணைத்த அந்த செய்திபற்றி கேட்கவும் மொட்டைக்கடுதாசி போடவும் தோன்றவில்லை. காரணம் செய்திகளும் கருத்துக்களும் எவருக்கும் சமம் என்றே நினைத்திருந்தேன்.
ஆனால் கிருபன் இணைத்த போது அதை ரிப்போர்ட் செய்து அறியப்படுத்தினீர்களா  எனும் போது தான் பல சந்தேகங்கள் முளைக்கின்றன.

விடுங்கள்  நிழலி!  தமிழர்கள் என்று வரும் போது நீங்களோ நாங்களோ தனிமனிதர்கள் இல்லை. நாங்கள் தமிழர்கள். இனியும் வேறுபாடுகளை எமக்குள் வைத்துக்கொண்டால் இனிவரும் எமது தமிழ் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் ஆகிவிடுவோம்.

இன்னொரு வெளிப்படையான கருத்தில் சந்திக்கும் வரை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

உதுதான் ஆட்டுக்கில மாட்டை விடுகின்றது என்றது.

நிழலி ஒரு பனங்காட்டு நரி, உந்த சல சலப்புகளுக்கு எல்லாம் மசியாது.

18 பதிவுகளையோடை இந்தளவு 'நிதானமா' பேசுறியல் எண்டால்.... நீங்கள் பழம் திண்டு கொட்டை போட்ட ஆள் போலை தான் இருக்குது. 

******

இந்த மாப்பிளை தலையில், ஊர் உலகத்து டை எல்லாம் இருக்குது. 

மனமகிழ் சிரிப்பு அப்படியே கட்டுமரம் போலை கிடக்குது. நாடகம் நடிக்க வந்த ராசாத்தி அம்மாவை மடக்கி கலியாணம் கட்டின தலைவரை மாதிரியே இவரும் செய்திருக்கிறார்.

சரி விடுங்கோ. திரியின் நோக்கத்துக்கு வருவோம்.

மறந்திடாம திமுகவில் இணைந்து ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.

https://dmk.in/joindmk/

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, zuma said:

உதுதான் ஆட்டுக்கில மாட்டை விடுகின்றது என்றது.

நிழலி ஒரு பனங்காட்டு நரி, உந்த சல சலப்புகளுக்கு எல்லாம் மசியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி திமுகவுக்கு தனித்திரி தொடங்கலாம் எண்ட யோசணைல இருக்கிறன்.🤔

மறந்திடாம திமுகவில் இணைந்து ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.

https://dmk.in/joindmk/

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.