Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

பார்க்கலாம். 

பொருளாதார அறிவு  வரலாற்று கல்வி அறிவு உள்ள சிங்களவர்கள் 
ராஜபக்சே அரசுக்கு எதிராகவே பேசுகிறார்கள் இதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் 
காரணம் சீனா மெது மெதுவாக இலங்கையை கைப்பற்றிக்கொண்டு இருப்பதாலதான் 
ஒரு கையறு நிலைக்கு இலங்கை போய்க்கொண்டிருப்பதை அவர்கள் உணருகிறார்கள் 

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் ட்ரம்ப் நூலிழையில் வென்றது போல மட்டுமே பைடன் வெல்லக் கூடிய வழிகள், (மிச்சிகன், விஸ்கொன்சின்) இருக்கின்றன. பென்சில்வேனியாவின் மீதமிருக்கும் 25% வாக்குகள் இப்போதிருக்கும் நிலையை மாற்றும் போல தெரியவில்லை. ஆனால், அரிசோனா நீலமாக வாய்ப்புண்டு. 

சுருக்கமாக: too close to call

ஆனால், உலகத்திற்கும் அமெரிக்காவிற்கும் ஆபத்தான ட்ரம்ப் வந்தால் எமக்கு நல்லம் என்ற மாதிரியான ஈழத்தமிழர் சிலரின் கருத்துகள், நாம் ஏன் சர்வதேச அரங்கில் இன்னும் தோற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்று விளக்குகிறது! 😁

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையவன் மடையன் என்றும் தன்னை மேதாவி என்றும் எண்ணும் தலைக்கணம் எதற்குமே உதவாது. நிற்க,

ட்ரம்புக்கு முன்னாலிருந்தவர்கள் எவரின் ஆட்சியிலும் உலகம் ஆபத்தினை நெருங்கவில்லை அல்லது ஆபத்தில் இருக்கவில்லையென்று ஒருவராலும் கூறமுடியாது. ஏதோ, ட்ரம்ப் வரும்வரையில் உலகம் அமைதிப் பூங்காவாக இருந்ததென்றும், இப்போதுதான் அது போர்க்களமாக மாறிவிட்டதாகவும் வியாக்கியானம் செய்வது வேடிக்கை. ட்ரம்ப்பின் எதிர்வினைகள் ஈரானினதும், சீனாவினதும், வடகொரியாவினதும், ரஷ்ஷியாவினதும் செயற்பாடுகளினாலேயே ஏற்பட்டது. 

சரி, எதுவும் வேண்டாம், இன்று ட்ரம்பினால் தொடங்கப்பட்ட போர் ஒன்றினை இங்கே மற்றையவர்களை எள்ளிநகையாடி தம்மைத்தாமே மேதாவிகள் என்று நாமம் சூட்டிக்கொள்ளும் சிலர் கூறலாமே? 

ஒபாமாவின் ஆட்சியில் பெருமளவு பொருளாதார சலுகைகளுக்காகவும், தம்மீதான பொருளாதார தடைகளை நீக்கவுமே ஈரான் அணுவாயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கு பெருமளவு அமெரிக்க நிதி கைமாறியது. ஆனால், ஈரானின் அணுவாயுத கனவு ஒருபோதுமே நிறுத்தப்படவில்லை, இது உலகம் அறிந்ததுதான்.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையினைத் தொடங்கியதே ட்ரம்ப்தான். ஆனால், வடகொரியாவின் பின்னாலிருந்து அதனை இயக்குவது சீனாதான் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். ட்ரம்ப் ஆட்சிக்கு வருமுன்னமே வடகொரியாவின் ஏவுகணை பரீட்சைகளும், அணுவாயுதம் மீதான அதன் ஆர்வமும் இருந்தன, இப்போதும் அப்படித்தான். 

சீனாவுடனான பொருளாதார பிணக்கில், அமெரிக்க உற்பத்திகளைப் பெருக்கும் நோக்கிலேயே சீன இறக்குமதிகள் மீதான தடையினை  ட்ரம்ப் அரசு கொண்டுவந்தது. அமெரிக்காவின் நலன்களே பிரதானம் என்று ஆட்சிக்கு வந்த ட்ரம்ப் , அதன் மக்களுக்காக செயற்படுவதென்பது கட்டாயமானது. அமெரிக்காவுக்கு ஆபத்தென்று கவலைப்படும் சிலர், அமெரிக்காவின் பொருளாதாரம் கொரொணா ஆரம்பமாகும்வரையிலும் சிறப்பானதாக இருந்ததென்பதை ஏன் பேசுவதில்லை? 

அன்று, ஹிலரியின் தோல்விக்கு ரஷ்ஷியாவின் கணிணிப் பிரிவே காரணம் என்று கூறிய ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களும், ட்ரம்ப் எதிர்ப்பாளர்களும், இன்று ட்ரம்பினால் ரஷ்ஷியாவுடன் மோதும் நிலை உருவாகிவிட்டதென்று கூறுவது வேடிக்கை. 

சரி, இவை எதுவுமே வேண்டாம். ட்ரம்பின் ஆட்சிக்கு முன்னர், ஈழத்தமிழரின் வாழ்வில் அமெரிக்காவின் அரசியல் செலுத்திய தாக்கம் என்ன? அவ்வரசியல் ஈழத்தமிழருக்கு எந்தவிதத்தில் அனுகூலமாக இருந்தது? அது தற்போது எந்தவிதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது? 

இலங்கையில் சீனாவின் இருப்பினைக் காரணம் காட்டி, அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ தலையிடுவதோ, இலங்கைக்கெதிரான நிலைப்பாட்டினை தமிழர்களைப் பாவித்து எடுப்பதோ எந்தவிதத்தில் எமக்குப் பாதிப்பானது? ஆதரிப்போர் எவருமற்று, ஆக்கிரமிப்பாளனின் கருணையில் மட்டுமே உயிர்வாழும் ஈழத்தமிழருக்கு, உயிரற்றிருக்கும் அவர்களின் விடுதலைக்கான அரசியலுக்கு வெளியில் இருந்து வரும் சக்தியொன்றிலிருந்து ஏதாவது ஒரு ஆறுதல் கிடைப்பது ஏன் அவர்களுக்கு ஆபத்தானது? இன்று அசைவற்ற நிலையில் தேங்கி நிற்கும் எமது அரசியல் போராட்டம், ஏதோ ஒருவகையிலாவது மீள ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு நம்பிக்கை நோக்கிப் பயணிப்பது எப்படி எமக்கு ஆபத்தானது? 

சரி, இவை எதுவுமே வேண்டாம், பைடன் ஜனாதிபதியாக வரட்டும். சீனாவுடனும், ரஷ்ஷியாவுடனும் சமாதானம் செய்யட்டும். இதனால் எமக்கு என்ன ஆகிவிடப்போகிறது? 

மற்றையவனை எப்போதுமே மடையன் என்றும் தன்னை மட்டுமே படித்தவன் என்றும் எண்ணிக்கொண்டு கருத்தெழுதுவதை விட்டுவிட்டு, மற்றையவனும் தன்னைப்போலவே படித்தவன் அல்லது விடயம் தெரிந்தவன் என்று ஏற்கின்ற பக்குவம் வரவேண்டும். படித்தவனுக்கு அதுதான் அழகு. 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

2016 இல் ட்ரம்ப் நூலிழையில் வென்றது போல மட்டுமே பைடன் வெல்லக் கூடிய வழிகள், (மிச்சிகன், விஸ்கொன்சின்) இருக்கின்றன. பென்சில்வேனியாவின் மீதமிருக்கும் 25% வாக்குகள் இப்போதிருக்கும் நிலையை மாற்றும் போல தெரியவில்லை. ஆனால், அரிசோனா நீலமாக வாய்ப்புண்டு. 

சுருக்கமாக: too close to call

ஆனால், உலகத்திற்கும் அமெரிக்காவிற்கும் ஆபத்தான ட்ரம்ப் வந்தால் எமக்கு நல்லம் என்ற மாதிரியான ஈழத்தமிழர் சிலரின் கருத்துகள், நாம் ஏன் சர்வதேச அரங்கில் இன்னும் தோற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்று விளக்குகிறது! 😁

அப்போ எல்லோரும் ஒத்து ஊதிறமாதிரி நாங்களும் பைடேன் வந்தால் நல்லது என்று கூவுவம். இதைத்தானே 11 வருடங்களாய் சிறிலங்காவிலும் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஏதாவது நன்மை? சும்மா வந்து சர்வதேச அரங்கு அது இது என்று பாடமெடுக்க வேண்டியதுதான்.

அதுசரி, பைடேன் வென்றால் அதனால் இலங்கை தமிழருக்கு வரக்கூடிய நன்மையொன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம்? ஒன்றே ஒன்று உங்களையெல்லாம் திரும்பிபோவென்று கலைக்கமாட்டான் அவ்வளவுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

படித்தவனுக்கு அதுதான் அழகு. 

நீங்கள் கூறுவதெல்லாம் படித்தவர்களுக்கானது ரகு, நான்தான் புத்திசாலி மேதாவி என தம்பட்டமடிக்கும் மேட்டுக்குடிகளுக்கு இது என்றுமே பொருந்தாது, உறைக்காது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, Eppothum Thamizhan said:

அப்போ எல்லோரும் ஒத்து ஊதிறமாதிரி நாங்களும் பைடேன் வந்தால் நல்லது என்று கூவுவம். இதைத்தானே 11 வருடங்களாய் சிறிலங்காவிலும் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஏதாவது நன்மை? சும்மா வந்து சர்வதேச அரங்கு அது இது என்று பாடமெடுக்க வேண்டியதுதான்.

அதுசரி, பைடேன் வென்றால் அதனால் இலங்கை தமிழருக்கு வரக்கூடிய நன்மையொன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம்? ஒன்றே ஒன்று உங்களையெல்லாம் திரும்பிபோவென்று கலைக்கமாட்டான் அவ்வளவுதான்!

இப்பிடி முகத்திலை அடிச்சமாதிரி பதிலே இல்லாத கேள்வியை கேட்டால் அவையள் எங்கை போவினம்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Eppothum Thamizhan said:

அப்போ எல்லோரும் ஒத்து ஊதிறமாதிரி நாங்களும் பைடேன் வந்தால் நல்லது என்று கூவுவம். இதைத்தானே 11 வருடங்களாய் சிறிலங்காவிலும் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஏதாவது நன்மை? சும்மா வந்து சர்வதேச அரங்கு அது இது என்று பாடமெடுக்க வேண்டியதுதான்.

அதுசரி, பைடேன் வென்றால் அதனால் இலங்கை தமிழருக்கு வரக்கூடிய நன்மையொன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம்? ஒன்றே ஒன்று உங்களையெல்லாம் திரும்பிபோவென்று கலைக்கமாட்டான் அவ்வளவுதான்!

இங்கே சர்வதேசம் எங்களுக்குப் புரியவில்லை, சர்வதேசம் எங்களுக்குத் தெரியவில்லை என்று அடிக்கொருதரம் பாடமெடுக்கும் அதிமேதாவிகள் அந்தச் சர்வதேசம் என்று தாங்கள் விளங்கிவைத்திருப்பது என்னவென்பதையாவது இங்கு கூறலாம். ஆனால், அதைச் செய்யமாட்டார்கள், அதுகூட யாரோ சொல்லித்தான் பாடமாக்கி இங்குவந்து உமிழ்கிறார்கள். இவர்கள் கூறும் சர்வதேசம் இவர்களுக்கே வெளிச்சம். 

என்னைப்பொறுத்தவரையில் இவர்கள் சர்வதேசம் என்று பேசுவதே தம்மை மற்றையவர்களிலும் மேலானவர்கள் என்று காட்டவும், எம்மை ஏளனம் செய்யவும் மட்டும்தான். அப்படியென்ன படித்துவிட்டார்கள்? நாம் எவரும் காணாத படிப்பா அல்லது எட்டாத அறிவா? ஏன் இந்த அகம்பாவம்? இங்கே கருத்தெழுதும் பலர் ஏதோவொரு புலம்பெயர் நாட்டில் ஏதோவொரு துறையில் அறிவாளிகளாக, நிபுணர்களாக, அனுபவஸ்த்தர்களாக , கல்வியறிவில் நன்குமுன்னேறியவர்களாகத்தான் இருக்கிறோம். இங்கே எவருக்குமே எவரும் சளைத்தவர்களோ, கீழானவர்களோ, மேலானவர்களோ கிடையாது. அப்படி யாரும் நினைத்தால் அது அவர்களது அறிவீனமே. 

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இவர்கள் பீற்றிக்கொள்ளும் இந்த சர்வதேசம் எங்களுக்கு என்ன நன்மை செய்தது புலம்பெயர்ந்தோருக்கான அடைக்கலத்தைவிட? எல்லோரும் ஒன்றாய் சேர்ந்துதான் எம்மவர்களை அழித்தார்கள் அல்லது அழிப்பதற்கு உடந்தையாக இருந்தார்கள்.

எதிரிக்கு எதிரி எமக்கு நண்பன் இதுவே இனி எமக்கான பாதை!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

 Nevada, Arizona, Wisconsin, Michigan ஆகிய மாநிலங்களில் biden முன்னணி வகிப்பதினால் 
அவர் வெல்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உள்ளது.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

Biden 238 - Trump 213

  • கருத்துக்கள உறவுகள்

1280px-Electoral_map_2012-2020.svg.pngமாநிலத்தித்துக்குரிய  தேர்தல் கல்லூரி  வாக்குகள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரஞ்சித் said:

இவர்கள் சர்வதேசம் என்று பேசுவதே தம்மை மற்றையவர்களிலும் மேலானவர்கள் என்று காட்டவும், 

ஸ்ரீலங்காவில் ரணில் இவ்வளவுகாலமும் அடிச்சுவிட்டமாதிரி 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

 Nevada, Arizona, Wisconsin, Michigan ஆகிய மாநிலங்களில் biden முன்னணி வகிப்பதினால் 
அவர் வெல்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உள்ளது.

கடைசில மிக்ஸிகன் வோட்டுக்களை கபளீகரம் செய்றம் அப்புறம் வெல்றம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

Biden 238 - Trump 213

(Early votes and Absentee ballets)முதல் இருந்தே போட்ட வாக்குகளை ஒழுங்காக எண்ணவிட்டால் பைடன் வெல்லலாம்.
ஆனால் குடியரசுக்கட்சியினர் தேர்தலன்றே வாக்களிக்கிறவர்கள் என்பதால் முதல் போட்ட வாக்குகளை எண்ணவிடாமல் தடுப்பார்கள்.
இதற்கு உதவியாக ஜனநாயககட்சி நீதிபதிகள் உள்ள நீதிமன்றில் நீதி நிஞாயத்தை விட கட்சிக்கே முன்னுரிமை கொடுத்து தீர்ப்பு வரும்.

போததற்கு சுப்றீம்கோட் 9 பேரைக் கொண்ட நீதிமன்றில் கூடுதலானவர்கள் ஜனநாயக கட்சியினர்.

ஆனபடியால் ரம் தான் திரும்பவும் வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறைய இடங்களில் இப்போதும் வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் MI மற்றும் WI அதிஷ்டவசமாக பெய்டன் பக்கம் திரும்பாதவரை, ரப்புக்குதான் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, theeya said:

இங்கு நிறைய இடங்களில் இப்போதும் வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் MI மற்றும் WI அதிஷ்டவசமாக பெய்டன் பக்கம் திரும்பாதவரை, ரப்புக்குதான் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. 

வாக்களிப்பா? வாக்கெண்ணலா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

வாக்களிப்பா? வாக்கெண்ணலா?

பல இடங்களில் வாக்கெண்ணல் முடிந்து விட்டது ஆனால் இன்னும் சில இடங்களில் வாக்களிப்பு நடக்கிறது. உதாரணமாக விஷ்கன்ஷனில் இப்போதும் விடிய விடிய வாக்களிப்பு நடக்கிறது. பென்சில்வேனியாவில் முன்கூட்டிய வாக்களிப்பை எண்ணக்கூடாது என்று வாதிடுகிறார்கள். இறுதியில் எதுவும் நடக்கலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முடிவுகள் வர இருக்கும் இடங்கள் ரம்புக்கு மிகவும் சாதகமான இடங்கள். ஆனால் விஷ்கன்சன் மற்றும் மிக்ச்சிகனில் பெய்டனுக்கு மெதுவான ஒரு தற்காலிக முன்னேற்றம் தெரிவது போல இருக்கிறது. 

இதுவரை பெய்டன் 238 + விஷ்கன்சன் மற்றும் மிச்சிகன் வென்றால் (26) = 264 (கிட்ட நெருங்கலாம் ) Win இதில் ஒன்றில் பெய்டன் தோற்றாலும் டிரம்ப் வெல்வார்.

Edited by theeya

  • கருத்துக்கள உறவுகள்

Current state of uncalled states

Michigan 16
Wisconsin 10
Nevada 6
16+10+6= 32
 
Biden 238+32= 270
  • கருத்துக்கள உறவுகள்

போங்கய்யா நீங்களும் உங்கடை தேர்தலும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

போங்கய்யா நீங்களும் உங்கடை தேர்தலும்.

நோ டென்ஷன் சுவை....இவ்வளவு பொறுத்தனீங்கள் இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்கக்கூடாதா.....!  😁

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

போங்கய்யா நீங்களும் உங்கடை தேர்தலும்.

Vadivelu Memes

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, theeya said:

சார்! இரண்டு கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்து ஆளுக்கு இரண்டு வருசம் நல்லாட்சி செய்து அதிபராக இருக்கலாம் தானே எண்டு என் நண்பன் கேட்கிறான் சார் 😎

என்னத்தை சொல்ல......தன்ரை மனுசியே பைடனுக்கு வோட் பண்ணிடும் எண்ட மனப்பயம் போல....😜

Bild

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சார்! இரண்டு கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்து ஆளுக்கு இரண்டு வருசம் நல்லாட்சி செய்து அதிபராக இருக்கலாம் தானே எண்டு என் நண்பன் கேட்கிறான் சார் 😎

கல்லோ, புட்டினோ,

இஞ்சை டிரம்ப்.... ம்....ம்..... நடக்கட்டும், நடக்கட்டும்....

பிடனை.... ஓட, ஓட திரத்தோனும்... நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

கல்லோ, புட்டினோ,

இஞ்சை டிரம்ப்.... ம்....ம்..... நடக்கட்டும், நடக்கட்டும்....

பிடனை.... ஓட, ஓட திரத்தோனும்... நடக்கட்டும்.

இல்லை பாருங்கோ இஞ்சை ஜேர்மனியிலை ட்ரம்ப் வந்திட்டால் என்ன செய்யிறதெண்டு இப்பவே மூக்காலை அழ வெளிக்கிட்டாங்கள்......😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.