Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`கட்சி தொடங்கவில்லை; கூட வருபவர்களைப் பலிகடாவாக்க விரும்பவில்லை!’ - ரஜினி

Featured Replies

20 hours ago, பிரபா said:

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்.

இந்த முடிவை பல ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாக அறிவித்திருந்தால் ஆகக் குறைந்து ஒரு தலைமுறை ரசிகர்களாவது உருப்பட்டிருப்பார்கள். சரி, இப்போதாவது முடிவாகச் சொன்னாரே என்பதில் ரசிகர்கள் நிம்மதியடைய வேண்டியது தான்.

பாபா படப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது: 'கட்சிகளை, பதவிகளை நான் விரும்ப மாட்டேன்; காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்'

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 2 people, beard
சாகும் வரை பதவி ஆசையில் இருக்கிறவர்கள் மத்தியில்
என் உடல் நிலை இதுதான் என்னால் மற்றவங்களும் பாதிக்கப்பட கூடாது என சொல்கின்ற அந்த மனசு 👌
எங்கள் ரஜினி எப்பவுமே கெத்து தான் சார் 🤘
##############
Ricky Gervais Laughing GIF
:grin: 🤣 😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

ஆகா.... அருமையான, கருத்துப் படம். :grin:

தமிழர்களை ஏய்த்து பார்பணியத்திடம் அடகு வைத்து சனாதன தர்மத்தை மீள நிலை நிறுத்தி தமிழினத்தை 2000 வருடங்களுக்குப் பின்னிளுத்துச் செய்யும் பார்ப்பணிய சதி வலைப்பின்னலை இயற்கை கலைத்தது...

1 hour ago, Kavi arunasalam said:

spacer.png

அரசியலுக்குள் பிரவேசிக்காமலே அரசியலில் இருந்து வெளியேற ராஜனிகாந்த்தினால் மட்டும்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியின் இந்த முடிவு குடும்பத்துக்கும், ஊருக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்கும். இறுதி காலங்களில் பேரப்பிள்ளைகளுடன் இனிதாய் வாழ வாழ்த்துக்கள்.

4 hours ago, பெருமாள் said:

நாலு படம் ஓடியவுடன் முதல்வர் கனவில் திரியும் சைத்தான்களுக்கு  இவரின் முடிவு நல்ல அடி .

இவர் அரசியலுக்கு வேணுமென்றால் கருணாநிதி இருந்த காலத்தில் வந்திருந்தால் ஒன்னிரண்டு  ஸீட் ஆவது கிடைத்து இருக்கும் இது சீமான் காலம் வந்தால் கழு ஏற்றம்தான் .

அவரே கழுவிலே தான் நிற்கின்றார்(NOTA), பின்னர் எப்படி மற்றவர்களை கழுவிலே ஏற்றுவர் ?

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் விமர்சனம் தவிர்க்க முடியாது போதும் பல ஆண்டுகளாக  கலையோடு பயணம் செய்த கலைஞன் என்ற பெயரோடும் புகழோடும் அவர் சுகம் பெற்று பல்லாண்டு வாழ பிராத்திப்போம்🙏

நான் ஒரு தடவை சொன்னா 
நூறு தடவை சொன்னமாதிரி 


போர் முடஞ்சுருச்சு 
சிஸ்டம் மாறிடிச்சு 
தமிழ் நாட்டுக்கு 
தண்ணி வந்திடிச்சு 
தாகம் தீந்திடிச்சு.

பா.உதயன் 

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி அரசியல் வருகையை திமுக எதிர்க்கவில்லை; அதிமுக தலைமை எதிர்க்கவில்லை. பாமக எதிர்க்கவில்லை; தேமுதிக எதிர்க்கவில்லை.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து சமரசமின்றி எதிர்த்த ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி. ரஜினி ரசிகர்கள், அபிமானிகளின் வாக்குகளை இழப்பது குறித்து அவர்கள் கவலை கொள்ளவில்லை.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்வி. ரஜினி அரசியல் கட்சி தொடங்காமல் போன காரணம் நாம் தமிழர் கட்சியின் எதிர்ப்புதானாமே என கேட்கிறார்கள். அதை சீமான் அவர்கள் நயமாக மறுத்துள்ளார்கள்.

நக்கீரன் இணையத் தளத்தில் சென்று பார்த்தேன் சீமானின் பேட்டியின் பின்பும் ரசிகர்களின் கொந்தளிப்பு அதிகமாகவே உள்ளது. அவர்களுக்கு தெரிந்துள்ளது, சில காரணிகளுள் நாம் தமிழர் ஒரு முதன்மை காரணி என.

அடுத்து வரிசையில் உள்ளவர் கமலன் 😁

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் இருக்கட்டும்.உங்களை கண்டதில் மிக்க மகிழச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் இருக்கட்டும்.உங்களை கண்டதில் மிக்க மகிழச்சி.

உங்கள் எல்லோரையும் காண்கிறேன். மகிழ்ச்சி கொள்கிறேன். ☺️ சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் நேரம் கிடைப்பதும் அரிதாக உள்ளது. இதைவிட பல நாட்கள் 16-18 மணிநேரங்கள் வேலையில் போய்விடுகிறது. எல்லாம் நன்மைக்கே!

  • கருத்துக்கள உறவுகள்
இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்-தமிழருவி மணியன் உருக்கம்

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்-தமிழருவி மணியன் உருக்கம்

சென்னை, 

ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று நேற்று அறிவித்தார். முன்னதாக ரஜினி தொடங்க இருந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து தான் விலகுவதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன.

அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை.

நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்கவேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது.

எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். 

தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்” என்று அதில் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/30092201/I-quit-politics--Tamilaruvi-Maniyan.vpf

 
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, uthayakumar said:

அரசியலில் விமர்சனம் தவிர்க்க முடியாது போதும் பல ஆண்டுகளாக  கலையோடு பயணம் செய்த கலைஞன் என்ற பெயரோடும் புகழோடும் அவர் சுகம் பெற்று பல்லாண்டு வாழ பிராத்திப்போம்🙏

நான் ஒரு தடவை சொன்னா 
நூறு தடவை சொன்னமாதிரி 


போர் முடஞ்சுருச்சு 
சிஸ்டம் மாறிடிச்சு 
தமிழ் நாட்டுக்கு 
தண்ணி வந்திடிச்சு 
தாகம் தீந்திடிச்சு.

பா.உதயன் 

Bild

  • கருத்துக்கள உறவுகள்

`ரஜினிக்கு என் வாழ்த்துகள்!’ - வரவேற்கும் சீமான்

சீமான்

சீமான்

`அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை’ என்று அறிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். ரஜினியின் இந்த திடீர் அறிவிப்பு, தமிழக அரசிலையே தகிக்கவைத்திருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த `அண்ணாத்த’ ஷூட்டிங்கில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஷூட்டிங் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. ரஜினிக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றாலும், ரத்த அழுத்தத்தில் திடீர் மாறுபாடு ஏற்பட்டு ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள்கள் சிகிச்சையிலிருந்த ரஜினி, டிசம்பர் 27-ம் தேதி சென்னை திரும்பினார்.

ரஜினி
 
ரஜினி

`ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும், அதிக பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால், திட்டமிட்டபடி டிசம்பர் 31-ம் தேதி, தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவாரா என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, `அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை’ என இன்று அறிவித்திருக்கிறார் ரஜினி.

ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்கினால், அவருக்கு எதிரான அரசியலைத் தீவிரமாக முன்னெடுக்கப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாகவே கூறியிருந்தார். `இது மராட்டியனா, மானத்தமிழனா என்பதற்கான போர்’ என்று வெளிப்படையாகவே ரஜினியின் மீது தாக்குதலைத் தொடுத்திருந்தார் சீமான். இதைத் தொடர்ந்து சீமானிடமிருந்து ரஜினியைக் கடுமையாகத் தாக்கி, பேட்டிகளும் வந்தன. இந்தச் சூழலில், அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ரஜினி. ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்.

சீமான்
 
சீமான்

``ரஜினியின் இந்த முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள். ஒரு நேர்மையான அரசியலுக்காக கடந்த பத்தாண்டுகளாக களத்தில் நிற்கிறோம். எங்கள் கொள்கைகள், போராட்டங்கள், கருத்துகளை ரஜினி பார்க்கட்டும். அவருக்குப் பிடித்திருந்தால் எங்களுக்கு வாழ்த்து சொல்லட்டும்.`நீங்க நிம்மதியா இருங்க, எங்களுக்கு ஆதரவு கொடுங்க’ என்றுதான் ரஜினியிடம் நான் சொல்லிவருகிறேன். கட்சி ஆரம்பித்திருந்தால், உட்கட்சிப் பிரச்னையைச் சமாளிப்பதற்கே ரஜினிக்கு நேரம் போதாது. இளம் வயதிலேயே அமைதி, தியானம் என்று மனநிம்மதியைத் தேடி ஓடிய ரஜினிக்கு, இந்த அரசியல் சூழல் சரிப்பட்டு வராது. முதுமையான இந்த வயதில் அமைதியைத்தான் அவர் பெரிதும் விரும்புவார். அவர் எடுத்திருக்கும் முடிவை வரவேற்கிறேன்” என்றார்.

`ரஜினிக்கு என் வாழ்த்துகள்!’ - வரவேற்கும் சீமான் | seeman wishes rajinikanth after his political statement (vikatan.com)

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

புது பட சூட்டிங் முடிஞ்சுது .. இனி புரமோசன்தான்..

213558106_4801343413261162_7240200140451

g12111.jpg

நாராயண.. இந்த நுளம்பு தொல்லை தாங்க ஏலாமல் கிடக்கு மருந்து அடிச்சி கொல்லுங்கப்பா..☺️..😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.