Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!

IMG-20210127-104907.jpg

யாழ்.குடாநாட்டிலிருந்து நெடுந்தூர பயணிகள் சேவைக்கான பேருந்து நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய,

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் சுமார் 122 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேரூந்து நிலைய திறப்பு விழா,

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா,

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குறித்த பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/22951

  • Replies 54
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா.?

FB_IMG_1611670923071.jpg

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்..

யாழ் நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கான பெயர் பலகைகளிலும் சிங்கள மொழிக்கு முதலுரிமையும் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வடகிழக்கில் நிர்வாக மொழியாக முதல் தமிழ் மொழி உள்ள போதிலும் இலங்கை அரச திணைக்களங்கள்  தமிழ் மொழியின் முதன்மை தன்மையை புறக்கணித்து இரண்டாவதாக பின்தள்ளியுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முற்று முழுவதுமாக தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களே வாழ்கின்ற ஒரு நிலை இருந்தும் அரச திணைக்களங்களின் இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக்கைகள் தமிழ் உணர்வாளர்களையும், மக்களையும் மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது.

எனவே சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தனி சிங்கள மாவட்டங்களில் தமிழ் மொழியை முதல் மொழியாக போட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?  அல்லது போடத்தான் விட்டிருப்பார்களா? இதை இந்த சிங்கள பேரினவாத அரசும், அதன் அரச திணைக்களங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே தமிழ் மக்களின் தாய் மொழியை இரண்டாம் நிலைப்படுத்தும்  சம்மந்தப்பட்ட அரச திணைக்களத்தின் இச் செயலை வன்மையாக எதிர்ப்பதுடன் கடும் கண்டனத்தையும் பேரவையினராகிய நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

மேலும் யாழ் மாநகர சபை இவ் விடயத்தை கவனத்திலேடுத்து சபையின் அனுமதியைப்பெற்று  சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு உரிய முறையில் தெரிவித்து மீண்டும் தமிழ் மொழி முதலாவதாக மாற்றப்பட்ட புதிய பெயர் பலகையினை மாற்றியமைக்க ஆவணை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

எஸ்.நிஷாந்தன்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

https://vanakkamlondon.com/world/srilanka/2021/01/100148/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

FB_IMG_1611670923071.jpg

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

நிலத்திற்கு கீழ்... ஐந்து மாடி உள்ளது.

அங்கு சைக்கிள், கார், பேரூந்து தரிப்பிடம் எல்லாம் உள்ளதாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யாழ்நகர பகுதிகளில் சுற்றிதிரியும் கட்டாக்காலி நாய்கள், மாடுகளை கட்டுபடுத்துங்கள்.

பலகோடி செலவுபண்ணி கட்டுமானங்கள் செய்தாலும் நகர பகுதிகளின் நடுவே மாடு குடும்பத்தோடு படுத்திருக்கிறது,

நடைபாதை பூங்காக்களின் புற்களை மேய்கிறது.

3 hours ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

யாழ் நகரில் இடம் போதாமையால் இந்த கட்டடத்தின் ஒரு பகுதி பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு கட்டட ஒப்பந்தம் கொடுத்தொர்களால்  சில கிராமங்களில் சிறிய சிறிய கட்டங்களாக  கட்டப்பட்டிருக்கலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

அங்கஜன்  டக்கி  ஆட்சியில் இருக்கும்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையை போடும் செயல்களில் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, பெருமாள் said:

அங்கஜன்  டக்கி  ஆட்சியில் இருக்கும்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையை போடும் செயல்களில் .

புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள்  கீழ்வரும் கருத்தை  எழுத அருகதை/உரிமை இருக்கோ தெரியாது. இருந்தாலும்........

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அதிகாரிகள் அசண்டை; கைவிடப்பட்ட மண்டைதீவு சுற்றுலா மையம் - 16.8 மில்லியன்  ரூபா மக்கள் நிதி வீண்விரயம் | Muthalvan News

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

FB_IMG_1611670923071.jpg

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா??

இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???

1 hour ago, விசுகு said:

யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா??

இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???

ஓம், யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கு, பொத்துவில், அக்கரைப்பற்று போன்ற இடங்களுக்கு கூட நேரிடையாக பஸ் உள்ளது.

https://www.facebook.com/JaffnaBus/photos/a.958064214529898/958064197863233/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள்  கீழ்வரும் கருத்தை  எழுத அருகதை/உரிமை இருக்கோ தெரியாது. இருந்தாலும்........

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அதிகாரிகள் அசண்டை; கைவிடப்பட்ட மண்டைதீவு சுற்றுலா மையம் - 16.8 மில்லியன்  ரூபா மக்கள் நிதி வீண்விரயம் | Muthalvan News

இது எல்லாம் ஒரு வகையான புணர் நிர்மானங்கள் தாத்தா..நாகரீகம் முற்றிட்டால் இப்படித் தான் செய்வார்கள் கேட்கப் போனால் வக்காலத்து வாங்க வருவீனம் நின்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அது ஒரு தந்திரம் சனம்  இல்லாத இடத்தில் 20 லட்ஷத்தில் முடிக்கிற  வேலைக்கு 20 கோடி கணக்கு காட்டலாம் கேட்பார் கிடையாது பிரதான வீதிகளில் நடந்து முடிந்த வேலைக்கு கணக்கு எல்லோரும் பார்ப்பார்கள் அதனால் தேவையில்லாத இடங்களில் ரோடு போடுவார்கள் முக்கிய பிரதான வீதிகள் தேவை மக்களுக்கு அத்தியாவசியமான தேவைகள் செய்ய இழுத்தடிப்பார்கள் .

சுமத்திரனில்   உள்ள கடுப்பில் சனம்  வேறு வழி இன்றி குத்த  இந்த அங்கஜன் கூட்டம் தட்டு தடுமாறி வந்து இருக்கினம் இவர் அங்கு வந்ததும் வராததுமாக தேவையற்ற திட்டங்களில் வெறுமே திட்ட விளம்பர பலகை மட்டும் மேளதாளத்துடன் திரை நீக்கம் செய்துவைக்கிறார் கடைசியில் அதுவே அவருக்கு அடுத்த தேர்தலில் ஆப்பாகி விடும் என்பதை இலகுவாக மறந்துவிடுகிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

முதலில் யாழ்நகர பகுதிகளில் சுற்றிதிரியும் கட்டாக்காலி நாய்கள், மாடுகளை கட்டுபடுத்துங்கள்.

பலகோடி செலவுபண்ணி கட்டுமானங்கள் செய்தாலும் நகர பகுதிகளின் நடுவே மாடு குடும்பத்தோடு படுத்திருக்கிறது,

நடைபாதை பூங்காக்களின் புற்களை மேய்கிறது.

வாழ்த்துக்கள் அங்கஜன்  டக்ளஸ் ஊர் கொஞ்சம் வளர்ச்சியடைகிறது இல்லாவிட்டால் யாழ்பாணத்தில் இப்பவும் சண்டை நடக்கிறது என்பார்கள் .

மட்டக்களப்பில் பல கோடி  செலவு செய்ததாக கட்டினார்கள் காட்டினார்கள் மாடுகள் இருந்தது வெள்ளத்திலும் மிதந்தது ஆனால் தற்போது தனியார் பேருந்துகள் அதிலிருந்து செல்கின்றன 

அது போக இலங்கை மாடுகள் செல் கேளாது  ரெண்டு போட்டு விரட்டினால் திரும்ப வராது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது போக இலங்கை மாடுகள் செல் கேளாது  ரெண்டு போட்டு விரட்டினால் திரும்ப வராது 

மாடுகளுக்கு எதுக்கு அடிப்பான், அதன் உரிமையாளர்களுக்கு சகட்டுமேனிக்கு அபராதம் விதித்தால் தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வரும், இல்லையென்றால் நகரசபை அவற்றை உரிமையாக்கி கொள்ளலாம்.

இலங்கையில்  தமிழருக்கென்று  மூன்று பெரும் நகரங்கள் இருந்தன, அதில் இரண்டு எம் கையைவிட்டு போய்விட்டது. எஞ்சிய யாழ்நகரையாவது குப்பை கூழங்களின்றி, கட்டாக்காலி கால்நடைகளின்றி அழகாகவும் சுத்தமாகவும் பேணப்படவேண்டுமென்பது மனசில் படும் ஆதங்கம்.

இங்கே வெளிநாடுகளில் பல தசாப்தங்களாய் வாழ்கிறவர்களுக்குகூட இன்னும் இந்நாடுகளின் வானம் தொட்டுவிட்ட வளர்ச்சியை பார்த்து அதன் பிரமிப்பிலிருந்து விடுபடவேயில்லை. நேற்றுத்தான் இந் நாடுகளுக்கு வந்தவர்கள்போலவே இன்றும் உணர்பவர்கள் பலர். தினம் தினம் புதுமைகள்.

அவற்றை நினைக்கும்போது எமது தாயகபகுதியும் வேலைவாய்ப்பு பொருளாதாரம் அபிவிருத்தியென சிறு அளவிலாவது உயர்ந்து நிக்கவேண்டுமே என்ற ஏக்கம் பெரு மூச்சாய் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

உண்மை இது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

அதே பஸ் ஸ்ரான்ட தான் முக்கியம் அதில் தமிழ் இல்லாட்டியும் அவர்களின்  செய்கையை பாராட்டணும் 😜 முன்பு இதே டக்கி யும்  இருந்தது அங்கஜனும் இருந்தவர் புதிசாக ஒன்றுமில்லை வழக்கம்போலவே எல்லாம் நடக்குது .

அடுத்த முறை எலக்சன் வைக்கும் போது  வடபகுதிக்கு முற்றாக மதுபானத்தை தடை செய்யுங்கள் அதன் பின் பார்ப்பம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

அன்று தொடக்கம் மாற்றுகருத்து அரசியல்வாதிகளும் நல்லதையே செய்கின்றார்கள். இதில் மாற்றுக்கருத்து என்னிடம் இல்லை. ஆனால் ஒன்றை நிறுவிய பின் அதை பராமரிப்பதில் மிகவும் தவறு விடுகின்றார்கள். அண்மைக் காலங்களில் யூரியூப் வீடியோக்கள் மூலம் அதிக இடங்களை/தெரியாத இடங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
அவற்றில் தேவையில்லாத இடங்களுக்கு அபிவிருத்தி அல்லது அபிவிருத்தி செய்த இடங்களை ஒழுங்கில்லாத பராமரிப்பு. இவற்றை பார்க்கும் போது ஏனோ தானோ என செய்கின்றார்கள் போலவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட திண்ணையை போல, சந்தடி சாக்கில்லாமல் சுண்ணாம்பை தூணில  தடவி  "பச்சக்" எண்டு வெத்திலை குதம்பலை துப்பாமல் போனால் சரி.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2021 at 21:40, குமாரசாமி said:

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

படங்களை பார்த்ததும் நான் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள் 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, Sasi_varnam said:

எங்கட திண்ணையை போல, சந்தடி சாக்கில்லாமல் சுண்ணாம்பை தூணில  தடவி  "பச்சக்" எண்டு வெத்திலை குதம்பலை துப்பாமல் போனால் சரி.
 
நாங்களும் அங்கே தொடர்ந்து இருந்தால் எமது மனநிலையும் அங்கு வாழ்பவர்கள் போலவே இருந்திருக்கக்கூடும்.

புலம்பெயர் தேசங்களுக்கு வந்த பின்னர் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என நிறையவே கற்றுவிட்டோம். இங்கே இருக்கும் அரசியல் கட்டமைப்புகள் சம உரிமைகள் மொழி கலாச்சார புரிந்துணர்வுகள் நாம் பிறந்த மண்ணிலும் வராதா என்ற எக்க உணர்வுகள் நெஞ்சை பிளக்கின்றன. இவற்றை மனதில் வைத்து நல்லது ஏதாவதை எழுதினால் விதண்டாவாத பதில்கள் தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people

உடையாரின் காசில் சடையார் வாணம் விடுவதென்பது இதுதான்...

போஸ்டரில் உள்ள எவரும் பேருந்து நிலையத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.. கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வெட்கமின்றி திறந்து வைத்ததோடு மட்டுமில்லாமல் போஸ்டர் வேறு...

யாரோ பெத்த பிள்ளைக்கு அப்பன் நானென்பது அசிங்கம் கொமாரு...

சுப்ரமணிய பிரபா

2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் சிறி,

எமது தெற்காசிய நாடுளில் இது தான் அரசியல் நடைமுறை   நல்ல விடயங்களை, அடுத்தவன் செய்தாலும் தனது என்று உரிமை கொண்டாடுவதும், தனது ஆட்சியில் நடந்த எதிர்மறை விடயங்களுக்கு தாங்கள்  பொறுப்பெடுக்காமல் அடுத்தவர்  மீது போடுவதும் அங்கு சாதாரண விடயம். மகிந்த அதை ஒரு படி மேலே போய் செய்கிறார். 

இதை வாசிக்கும் போது  சுவிற்சர்லாந்தில் திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக நீளமான தொடரூந்து சுரங்கமான Gotthard-Basistunnel (Gotthard Base Tunnel(  (57 km) திறப்பு விழா 2016 ஜூன் மாதம் நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான அரசு தலைவர்கள் அநேகர் கலந்து கொண்ட அந்த வைபவத்தில் அன்றைய போக்குவரத்து அமைச்சர் Doris Leuthard  (CVP)பேசும் போது தனது காலத்தில் இது திறந்து வைக்கப்பட்டது தனது அதிஷ்டம் என்றும் ஆனால் இந்த திட்டத்திற்காக மிக அதிகமாக உழைத்தவர் தனக்கு முன்பு பதவியில் இருந்த வேறு கட்சியை செர்ந்த  Moritz Leuenberger (SP)என்றும் அவரை பாராட்டினார்.  எமது நாட்டில் என்றால் 57 கி.மீ நீளத்திற்கும் பதவியில் இருப்பவரின் பிரமாண்டமான கட்அவட் தொங்கியிருக்கும்.😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அந்த பெயர்ப் பலகை தமிழ் முதலாவாதாய் மாற்றப்படுகிதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்அவுட் கலாச்சாரம் தமிழ்நாட்டில் இருந்து கொப்பியடிக்கபட்ட தீமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.