Jump to content

`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

spacer.png

பெப்ரவரி 14 இல் உலகெங்கும் காதலர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் வந்தால் போதும், சிலர் தம்மைக் கலாச்சாரக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு, அடாவடிகளில் இறங்கி விடுவார்கள். கேட்டால்: “காதலர் நாள் தமிழ்க் கலாச்சாரமன்று, ஆங்கிலேயக் கலாச்சாரம்” எனப் பொங்குவார்கள்; உண்மையில் அவர்களுக்குக் `கலாச்சாரம்` என்ற சொல்லே தமிழல்ல எனத் தெரியாத போது, தமிழ்ப் பண்பாடு எப்படித் தெரியப் போகுகின்றது. அவர்களை அணுகிப் பார்த்தால், அவர்களில் மிகப் பெருமளவானோர் சாதி வெறியர்களாக /மத வெறியார்களாக இருப்பதனைக் காணலாம். ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒரே புள்ளியில் ஒன்றுபடும் நாளும் இந்த நாளேயாகும். மதம்-சாதி என்பனவே தமிழர்களின் மரபல்ல (சான்று – கீழடி) எனும் போது; இந்த அடிப்படைவாதிகள் பொங்கி எழுவது தமது சாதி-மதங்களுக்காகவேயன்றி, தமிழுக்காகவல்ல என்பது தெளிவாகின்றது. இவர்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டுத் தமிழர் பண்பாடு `காதலர் நாள்` கொண்டாடத்தினை ஏற்றுக் கொள்கின்றதா எனப் பார்ப்போம்.

பழங் காலத்தில் தமிழர்கள் காதலை மட்டுமல்ல காமத்தினையே கூடக் கொண்டாடினார்கள். `காமம்` என்ற சொல் இன்று போல அன்று மறைவான சொல்லன்று. ஐயன் வள்ளுவனே குறளில் குறிப்பிடும் மூன்றாவது பால் காமத்துப் பாலேயாகும் (அறம், பொருள், காமம்). பின்னரான காலப்பகுதியில் காமத்துப் பாலை `இன்பத்துப் பால்` என மாற்றி விட்டார்கள். உண்மையில் அது தவறு. காமம் வேறு, இன்பம் வேறு. இத் தவறு குறித்துப் பாவாணர் முதல் பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்

கூடி முயங்கப் பெறின்” : (குறள் 1330)

{காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்}

பார்த்தீர்களா! வள்ளுவனே காமம், இன்பம் ஆகிய இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளதனை. காமத்தினால் விளைவதே காதல். முனைவர் இரவி சங்கர் இந்த இரு சொற்களையும் பின்வருமாறு தொடர்புபடுத்துவார்.

# “`கா` = காத்தல் என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டவையே காதல், காமம் ஆகிய இரு சொற்களும். 

கா-மம்= விழைவு காத்தல் : Desire to Love

கா-தல்= விழைந்ததை, வாழ்வில் கா(த்துக்) கொள்ளல்!: During the Love.

மேலும் காமம் என்பது முறை தவறும் போது, அது கழிநுகர்ச்சி (Lust ) எனப்படுமே தவிர காமமே கழிநுகர்ச்சியன்று.

காமம் என்பது காரணம் (Cause ), இன்பம் என்பது விழைவது (Effect ). “#

எனவேதான் பழந் தமிழர்கள் காதலை மட்டுமன்றிக் காமத்தினையும் கொண்டாடினார்கள்.

சங்க இலக்கியங்களில் காமன் விழா :-

spacer.png

பொதுவாக ஒரு காலத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக் காட்டும் கருவியாக இலக்கியங்கள் திகழுவதாகச் சொல்லுவார்கள். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன எனப் பார்ப்போம். சங்க இலக்கியங்களில் `காமன் விழா` பெரிதும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.குறுந்தொகைப் பாடலிலும் ஒரு செய்தி ` காமன் விழா` தொடர்பாகக் கூறப்படுகின்றது.

மள்ளர் குழீஇய விழவினானும்

மகளிர் தழீஇய துணங்கையானும்

யாண்டும் காணேன் மாண் தக்கோனை

யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த 5

பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே

: குறுந்தொகை 31 : 1-6

மேலுள்ள பாடலில் `கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள்,அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர், அப்போது ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது, ஆட்டனந்தி காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள், அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது` என்ற செய்தி சொல்லப்படுகின்றது.

கலித்தொகையும் காமன் விழா பற்றிப் பேசுகின்றது. ஆற்றங்கரையில் நடைபெறும் காமன்விழாவில் தலைவன் தன்னுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தலைவி பாடுவதாகப் பின்வரும் பாடல் அமைகின்றது.

கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால்

ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை

மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர்

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ

:கலித்தொகை 35:11-14

{பொருள் – கண்ணுக்குள் நிற்காத அளவு நீர் பெருக, அவரைத் தழுவியபின் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது, ஒளிபடைத்த நெற்றியையுடையவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது; பெருகிய நீர்நடுவேயுள்ள ஆற்றுமேட்டில், தாம் மகிழும் துணையான எம்முடன் கூடிக்கலந்து, அவர் வில்லவனான காமன் திருவிழாவில் விளையாடும் காலம் அன்றோ?}

பரத்தையருடன் கூடக் காமன்விழா கொண்டாடப்பட்டுள்ளது.

உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள்

விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ

: கலித்தொகை 30: 13-14

{ அவரை அடைவதற்குரிய நான் இங்கே அழகிழந்து வாட, காமன் விழாவில் சிறந்த அணிகலன் அணிந்த பரத்தையரோடு விளையாடி மகிழ்ந்திருப்பாரோ!}

பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவனை நோக்கி வருந்தி இளைத்துப் போயுள்ள தலைவியினை, இதோ தலைவன் காமன் விழா கொண்டாடத் தலைவன் வந்துவிட்டதாகத் தோழி ஆற்றும் பாடல் வருமாறு.

இன்னொரு கலித்தொகைப் பாடலையும் பார்ப்போம்.

நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்

காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என

ஏமுறு கடும் திண் தேர் கடவி 25

நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே

: கலித்தொகை 29: 23-26

{ பொருள்-நாம் இல்லாத தனிமைத் துயருடன், தனிமையில் மனத்தை நடுங்கவைக்கும் இளவேனிற்காலத்தில், காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று பகைவர் மயக்கமுறும் வகையில் விரைவாக ஓடும் திண்ணிய தேரினை ஓட்டிக் கொண்டு நாம் விரும்பும் காதலர் நமக்குத் துணையாக இருக்க விரைந்து வருகின்றார்}.

பிற்காலத்தில் இந்தக் `காமன்` என்பவனே `மன்மதன் ` ஆக்கப்படுகின்றான். இதோ கீழுள்ள பரிபாடலைப் பாருங்கள்.

`எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்

தொழில் வீற்றிருந்த நகர்”: பரிபாடல் 18:28

என்று காமவேள் பற்றிப் பரிபாடல் எனும் சங்க இலக்கிய நூல் குறிக்கின்றது . இந்த காமன் தான் பிற்காலத்தில் `மன்மதன்` ஆக்கப்படுகின்றான். இதிலிருந்தே மன்மதன் கையில் வில், மற்றும் அவன் அம்பு விடுதல் போன்ற புராண உருவகப்படுத்தல்கள் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். இங்கு காமன் விழாவினை `வில்லவன் விழா` என அழைக்கப்பட்டமை எமது கருத்துக்குக் கூடிய வலுவூட்டும்.

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது . { இந்த நிகழ்வு காதலர்கள் காதலர் நாளை ஒட்டி விடுதிகளுக்குச் சென்று தங்கியிருப்பதனை ஏனோ நினைவுபடுத்துகின்றது.}

மேலே பார்த்த சங்க காலப் பாடல்களில் `காமன் விழா` கொண்டாடப்பட்டதனைத் தெளிவாகப் பார்த்தோம். எக் காலப் பகுதியில் இந்த விழா (காமன் விழா/ காமவேள் விழா) கொண்டாடப்பட்டது என இனிப் பார்ப்போம். பின்வரும் ஆண்டாள் பாடலினைப் பாருங்கள்.

காமன்போதரு காலமென் றுபங்

குனிநாள்கடை பாரித்தோம்,”

: நாச்சியார் திருமொழி (11).

{ எங்களுக்குத் துன்பம் நீங்குமே, காமன் வருகின்ற காலமென்று, பங்குனி நாள் அவன் வரும் வழியில் கடை விரித்தோம்}

மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம். எனவே மாசி- பங்குனி மாத காலப்பகுதியில் காமன் விழா கொண்டாடப்பட்டமை தெரிய வருகின்றது. இத்தகைய காமன் விழாவே சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவாக உரு மாறியது என்ற கருத்தும் ஒன்றுமுள்ளது. ` இந்திர விழா` (உரு மாறிய காமன் விழா) பின்பனிக் காலத்தில் இடம் பெற்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது [சிலம்பு. 2:14: 106 – 112.] இங்கு `பின்பனிக்காலம்` என்பது இன்றைய மாசி-பங்குனி மாதக் காலமேயாகும்.

சோழ நாட்டில் மட்டுமல்லாமல் பாண்டிய நாட்டிலும் கொண்டாடப்பட்டது. மதுரை நகரில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.

கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் 

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் 

பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்

:(சிலம்பு. மதுரை: ஊர்காண்: 110 – 112)

எனவே காமவேள் விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.

எனவே மேலே பார்த்த இலக்கியச் சான்றுக ளின்படி மாசி முதல் பங்குனி மாதக் காலப் பகுதியில் ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா கொண்டாடப்பட்டமை தெளிவாக்குகின்றது. புராணக் கதைகளும் மன்மதனின் ( பெயர் மாற்றப்பட்ட காமன்) பிறந்த நாளாக மாசி மாத முழுமதி (பௌர்ணமி) நாளினையே சொல்லுகின்றன. எனவே இன்றைய வலன்ரைன் நாள் (Valentine’s Day ) கொண்டாடப்படும் காலப்பகுதியினை ஒத்த ஒரு காலப் பகுதியில் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா காணப்படுகின்றது. பழைய தொடர் விழாக்கள் யாவும் இன்றைய பரபரப்பான உலகில் ஒரு நாள் விழாவாகச் சுருங்கிப் போவது இயல்பானது {எ.கா – தைத்திருநாள் விழா}. அந்த வகையில் உலகுடன் ஒத்து, பெப்ரவரி 14 இல் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு முரணானதல்ல.

முடிவாகக் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் பண்பாட்டுக்கு முரணானதல்ல. மரபுகளுக்கு அப்பால் சாதி+ மத வெறியர்களைக் கடுப்பாக்குவதற்காகவேனும் காதலர் நாளினைக் கொண்டாடலாம். நோய்த் தொற்றுக் காலத்தில் உரிய எச்சரிக்கையுடன் கொண்டாடக் கூடிய நாடுகளில் கொண்டாடுங்கள். எல்லோருக்கும் காதலர் நாள் வாழ்த்துகள்.
 
https://inioru.com/tamils-valentines-day/

Link to comment
Share on other sites

16 minutes ago, Paanch said:

Love.jpg

காதலியின் அல்லது காதலனின் காதலும் உன்னதமானது தான் பாஞ்ச். ❤️

Link to comment
Share on other sites

44 minutes ago, tulpen said:

காதலியின் அல்லது காதலனின் காதலும் உன்னதமானது தான் பாஞ்ச். ❤️

மறுக்கவில்லை ருல்பென் அவர்களே! காதலர் தினம் என்றால்... காதலன் காதலிதானே எல்லோர் நினைவிலும் வருவார்கள்!! 

சூரியனைக் காண்பதற்கு வெளிச்சம் எதற்கு.? 🔦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒரே புள்ளியில் ஒன்றுபடும் நாளும் இந்த நாளேயாகும்.

மற்ற பலவற்றிலும் சாதி மதவாதிகளின் கருத்துக்களை பார்த்தால் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் போன்றே ஒற்றுமையாக இருக்கும்.

10 hours ago, கிருபன் said:

மதம்-சாதி என்பனவே தமிழர்களின் மரபல்ல (சான்று – கீழடி) எனும் போது;

இது பெருமைக்குரியது.

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
காதலும், காமமும் தமிழுக்கு புதிதல்ல. எமது பண்டைய கால இலக்கியங்களில் அதற்கு ஒரு தனித்துவமான இடமிருந்தது.

Image

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 06:03, கிருபன் said:

`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

spacer.png

பெப்ரவரி 14 இல் உலகெங்கும் காதலர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் வந்தால் போதும், சிலர் தம்மைக் கலாச்சாரக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு, அடாவடிகளில் இறங்கி விடுவார்கள். கேட்டால்: “காதலர் நாள் தமிழ்க் கலாச்சாரமன்று, ஆங்கிலேயக் கலாச்சாரம்” எனப் பொங்குவார்கள்; உண்மையில் அவர்களுக்குக் `கலாச்சாரம்` என்ற சொல்லே தமிழல்ல எனத் தெரியாத போது, தமிழ்ப் பண்பாடு எப்படித் தெரியப் போகுகின்றது. அவர்களை அணுகிப் பார்த்தால், அவர்களில் மிகப் பெருமளவானோர் சாதி வெறியர்களாக /மத வெறியார்களாக இருப்பதனைக் காணலாம். ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒரே புள்ளியில் ஒன்றுபடும் நாளும் இந்த நாளேயாகும். மதம்-சாதி என்பனவே தமிழர்களின் மரபல்ல (சான்று – கீழடி) எனும் போது; இந்த அடிப்படைவாதிகள் பொங்கி எழுவது தமது சாதி-மதங்களுக்காகவேயன்றி, தமிழுக்காகவல்ல என்பது தெளிவாகின்றது. இவர்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டுத் தமிழர் பண்பாடு `காதலர் நாள்` கொண்டாடத்தினை ஏற்றுக் கொள்கின்றதா எனப் பார்ப்போம்.

பழங் காலத்தில் தமிழர்கள் காதலை மட்டுமல்ல காமத்தினையே கூடக் கொண்டாடினார்கள். `காமம்` என்ற சொல் இன்று போல அன்று மறைவான சொல்லன்று. ஐயன் வள்ளுவனே குறளில் குறிப்பிடும் மூன்றாவது பால் காமத்துப் பாலேயாகும் (அறம், பொருள், காமம்). பின்னரான காலப்பகுதியில் காமத்துப் பாலை `இன்பத்துப் பால்` என மாற்றி விட்டார்கள். உண்மையில் அது தவறு. காமம் வேறு, இன்பம் வேறு. இத் தவறு குறித்துப் பாவாணர் முதல் பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்

கூடி முயங்கப் பெறின்” : (குறள் 1330)

{காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்}

பார்த்தீர்களா! வள்ளுவனே காமம், இன்பம் ஆகிய இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளதனை. காமத்தினால் விளைவதே காதல். முனைவர் இரவி சங்கர் இந்த இரு சொற்களையும் பின்வருமாறு தொடர்புபடுத்துவார்.

# “`கா` = காத்தல் என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டவையே காதல், காமம் ஆகிய இரு சொற்களும். 

கா-மம்= விழைவு காத்தல் : Desire to Love

கா-தல்= விழைந்ததை, வாழ்வில் கா(த்துக்) கொள்ளல்!: During the Love.

மேலும் காமம் என்பது முறை தவறும் போது, அது கழிநுகர்ச்சி (Lust ) எனப்படுமே தவிர காமமே கழிநுகர்ச்சியன்று.

காமம் என்பது காரணம் (Cause ), இன்பம் என்பது விழைவது (Effect ). “#

எனவேதான் பழந் தமிழர்கள் காதலை மட்டுமன்றிக் காமத்தினையும் கொண்டாடினார்கள்.

சங்க இலக்கியங்களில் காமன் விழா :-

spacer.png

பொதுவாக ஒரு காலத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக் காட்டும் கருவியாக இலக்கியங்கள் திகழுவதாகச் சொல்லுவார்கள். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன எனப் பார்ப்போம். சங்க இலக்கியங்களில் `காமன் விழா` பெரிதும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.குறுந்தொகைப் பாடலிலும் ஒரு செய்தி ` காமன் விழா` தொடர்பாகக் கூறப்படுகின்றது.

மள்ளர் குழீஇய விழவினானும்

மகளிர் தழீஇய துணங்கையானும்

யாண்டும் காணேன் மாண் தக்கோனை

யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த 5

பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே

: குறுந்தொகை 31 : 1-6

மேலுள்ள பாடலில் `கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள்,அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர், அப்போது ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது, ஆட்டனந்தி காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள், அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது` என்ற செய்தி சொல்லப்படுகின்றது.

கலித்தொகையும் காமன் விழா பற்றிப் பேசுகின்றது. ஆற்றங்கரையில் நடைபெறும் காமன்விழாவில் தலைவன் தன்னுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தலைவி பாடுவதாகப் பின்வரும் பாடல் அமைகின்றது.

கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால்

ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை

மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர்

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ

:கலித்தொகை 35:11-14

{பொருள் – கண்ணுக்குள் நிற்காத அளவு நீர் பெருக, அவரைத் தழுவியபின் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது, ஒளிபடைத்த நெற்றியையுடையவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது; பெருகிய நீர்நடுவேயுள்ள ஆற்றுமேட்டில், தாம் மகிழும் துணையான எம்முடன் கூடிக்கலந்து, அவர் வில்லவனான காமன் திருவிழாவில் விளையாடும் காலம் அன்றோ?}

பரத்தையருடன் கூடக் காமன்விழா கொண்டாடப்பட்டுள்ளது.

உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள்

விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ

: கலித்தொகை 30: 13-14

{ அவரை அடைவதற்குரிய நான் இங்கே அழகிழந்து வாட, காமன் விழாவில் சிறந்த அணிகலன் அணிந்த பரத்தையரோடு விளையாடி மகிழ்ந்திருப்பாரோ!}

பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவனை நோக்கி வருந்தி இளைத்துப் போயுள்ள தலைவியினை, இதோ தலைவன் காமன் விழா கொண்டாடத் தலைவன் வந்துவிட்டதாகத் தோழி ஆற்றும் பாடல் வருமாறு.

இன்னொரு கலித்தொகைப் பாடலையும் பார்ப்போம்.

நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்

காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என

ஏமுறு கடும் திண் தேர் கடவி 25

நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே

: கலித்தொகை 29: 23-26

{ பொருள்-நாம் இல்லாத தனிமைத் துயருடன், தனிமையில் மனத்தை நடுங்கவைக்கும் இளவேனிற்காலத்தில், காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று பகைவர் மயக்கமுறும் வகையில் விரைவாக ஓடும் திண்ணிய தேரினை ஓட்டிக் கொண்டு நாம் விரும்பும் காதலர் நமக்குத் துணையாக இருக்க விரைந்து வருகின்றார்}.

பிற்காலத்தில் இந்தக் `காமன்` என்பவனே `மன்மதன் ` ஆக்கப்படுகின்றான். இதோ கீழுள்ள பரிபாடலைப் பாருங்கள்.

`எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்

தொழில் வீற்றிருந்த நகர்”: பரிபாடல் 18:28

என்று காமவேள் பற்றிப் பரிபாடல் எனும் சங்க இலக்கிய நூல் குறிக்கின்றது . இந்த காமன் தான் பிற்காலத்தில் `மன்மதன்` ஆக்கப்படுகின்றான். இதிலிருந்தே மன்மதன் கையில் வில், மற்றும் அவன் அம்பு விடுதல் போன்ற புராண உருவகப்படுத்தல்கள் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். இங்கு காமன் விழாவினை `வில்லவன் விழா` என அழைக்கப்பட்டமை எமது கருத்துக்குக் கூடிய வலுவூட்டும்.

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது . { இந்த நிகழ்வு காதலர்கள் காதலர் நாளை ஒட்டி விடுதிகளுக்குச் சென்று தங்கியிருப்பதனை ஏனோ நினைவுபடுத்துகின்றது.}

மேலே பார்த்த சங்க காலப் பாடல்களில் `காமன் விழா` கொண்டாடப்பட்டதனைத் தெளிவாகப் பார்த்தோம். எக் காலப் பகுதியில் இந்த விழா (காமன் விழா/ காமவேள் விழா) கொண்டாடப்பட்டது என இனிப் பார்ப்போம். பின்வரும் ஆண்டாள் பாடலினைப் பாருங்கள்.

காமன்போதரு காலமென் றுபங்

குனிநாள்கடை பாரித்தோம்,”

: நாச்சியார் திருமொழி (11).

{ எங்களுக்குத் துன்பம் நீங்குமே, காமன் வருகின்ற காலமென்று, பங்குனி நாள் அவன் வரும் வழியில் கடை விரித்தோம்}

மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம். எனவே மாசி- பங்குனி மாத காலப்பகுதியில் காமன் விழா கொண்டாடப்பட்டமை தெரிய வருகின்றது. இத்தகைய காமன் விழாவே சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவாக உரு மாறியது என்ற கருத்தும் ஒன்றுமுள்ளது. ` இந்திர விழா` (உரு மாறிய காமன் விழா) பின்பனிக் காலத்தில் இடம் பெற்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது [சிலம்பு. 2:14: 106 – 112.] இங்கு `பின்பனிக்காலம்` என்பது இன்றைய மாசி-பங்குனி மாதக் காலமேயாகும்.

சோழ நாட்டில் மட்டுமல்லாமல் பாண்டிய நாட்டிலும் கொண்டாடப்பட்டது. மதுரை நகரில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.

கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் 

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் 

பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்

:(சிலம்பு. மதுரை: ஊர்காண்: 110 – 112)

எனவே காமவேள் விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.

எனவே மேலே பார்த்த இலக்கியச் சான்றுக ளின்படி மாசி முதல் பங்குனி மாதக் காலப் பகுதியில் ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா கொண்டாடப்பட்டமை தெளிவாக்குகின்றது. புராணக் கதைகளும் மன்மதனின் ( பெயர் மாற்றப்பட்ட காமன்) பிறந்த நாளாக மாசி மாத முழுமதி (பௌர்ணமி) நாளினையே சொல்லுகின்றன. எனவே இன்றைய வலன்ரைன் நாள் (Valentine’s Day ) கொண்டாடப்படும் காலப்பகுதியினை ஒத்த ஒரு காலப் பகுதியில் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா காணப்படுகின்றது. பழைய தொடர் விழாக்கள் யாவும் இன்றைய பரபரப்பான உலகில் ஒரு நாள் விழாவாகச் சுருங்கிப் போவது இயல்பானது {எ.கா – தைத்திருநாள் விழா}. அந்த வகையில் உலகுடன் ஒத்து, பெப்ரவரி 14 இல் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு முரணானதல்ல.

முடிவாகக் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் பண்பாட்டுக்கு முரணானதல்ல. மரபுகளுக்கு அப்பால் சாதி+ மத வெறியர்களைக் கடுப்பாக்குவதற்காகவேனும் காதலர் நாளினைக் கொண்டாடலாம். நோய்த் தொற்றுக் காலத்தில் உரிய எச்சரிக்கையுடன் கொண்டாடக் கூடிய நாடுகளில் கொண்டாடுங்கள். எல்லோருக்கும் காதலர் நாள் வாழ்த்துகள்.
 
https://inioru.com/tamils-valentines-day/

ஆதலால் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் காமம் என்றால் என்ன.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுவைப்பிரியன் said:

காதல் காமம் என்றால் என்ன.🤣

காதலின்றி காமம்கொள்பவர்கள் அனைவரும் அவ்வுடலை மட்டுமே நாடுகிறார்கள். 

வெறும்பெண்ணுடலை காமத்துடன் நாடுபவர்களுக்கு அப்பெண்ணுடலும் பொருட்டல்ல. அவர்கள் தங்களைத் தாங்களே புணர்ந்துகொள்கிறார்கள். தன் கட்டைவிரலை சுவைத்துண்ணும் குழந்தைகள்.👶

Link to comment
Share on other sites

9 minutes ago, சுவைப்பிரியன் said:

காதல் காமம் என்றால் என்ன.🤣

அதை பற்றி உரையாற்ற தமிழ்சிறீ அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

தமிழ் சிறீ எங்கிருந்தாலும் உடனடியாக ஒலிபெருக்கி நிலையத்துக்கு வரவும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலன்டைன் டேக்கு வேலையிடத்திலை வேலை செய்யிற இரண்டு மூண்டு பேருக்கு பூ குடுத்து அசத்துவம் எண்டுட்டு பூக்கடைக்கு போய் ஒரு றோசாப்பூவின்ரை விலையை கேட்டால் எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சுது. நாய் பேய் விலை விக்கிறாங்களப்பா..:shocked:

நைசாய் அல்டியிலை சொக்கிளேட்டை வாங்கிக்குடுத்து சமாளிச்சிட்டன்.:love:

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

இப்படி எத்தனை பேர் ஆளுக்கு இரண்டோ மூண்டோ இன்னும் அதிகம் பேருக்கோ பூக்குடுத்து அசத்த நினைச்சிருப்பங்கள் அண்ணை! 😆 அந்த டிமாண்டால தான் பூக்கடைக் காரன் விலையைக் கூட்டி உங்களையே அசத்திட்டான் போல! 😆

உங்கட நாட்டு சொக்ளேற்றுக்கள் எங்கட ஊரில உள்ள அல்டிக்கு வாறது. எங்களுக்கு மிகவும் பிடிச்சது. இதுக்காகவே சில நேரம் அல்டிக்குப் போறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அதை பற்றி உரையாற்ற தமிழ்சிறீ அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

தமிழ் சிறீ எங்கிருந்தாலும் உடனடியாக ஒலிபெருக்கி நிலையத்துக்கு வரவும்.  

May be an image of text that says 'பெப். 14 கிறிஸ்தவ துறவி வாலன்டைன் நினைவுதினம் Valentine's HAPPY, Day'

ருல்ப்பனுக்கு... இண்டைக்கு, இதோடை  பொழுது  போகும்.  :grin: 🤣

//கிறிஸ்தவ மத இலட்சியத்திற்காக... தியாக மரணத்தை தழுவிக் கொண்ட.. புனித வாலன்டைன் துறவியின் நினைவு தினம்... காதலர் தினமானது எப்படி?//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

காதல் காமம் என்றால் என்ன.🤣

சுவைப்பிரியன்,  கீழே வருவது நான் சொல்லும் விளக்கமில்லை!  புத்தர் சொன்ன விளக்கம்!

அன்புக்கும், ஆசைக்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் ஒரு அழகிய பூவொன்றைப் பார்க்கின்றீர்கள்!

அந்தப் பூவின் மீது அன்பிருந்தால்...அதை மரத்திலிருந்த படியே ரசிப்பீர்கள்! அதைப் பிடுங்க மாட்டீர்கள்.!

அதன் மீது ஆசையிருந்தால்.....அந்தப்  பூவைப் பறித்து முகர்ந்து பார்ப்பீர்கள்!

இந்த விடை உங்கள் கேள்விக்கும் பதிலாக அமையும் என நம்புகின்றேன்!

ஏதோ நம்மால  முடிஞ்சது..!🥰

Link to comment
Share on other sites

4 hours ago, புங்கையூரன் said:

அந்தப் பூவின் மீது அன்பிருந்தால்...அதை மரத்திலிருந்த படியே ரசிப்பீர்கள்! அதைப் பிடுங்க மாட்டீர்கள்.!

அதன் மீது ஆசையிருந்தால்.....அந்தப்  பூவைப் பறித்து முகர்ந்து பார்ப்பீர்கள்!

அருமையான விளக்கம் அண்ணா.

அத்துடன் பூவைப் பறிக்கும்போது செடியில் பால் வருவது போல, காதலில் பால் மயக்கம் வந்தால் அதைக் காமம் ஆகிவிடும் என்று எடுத்துக்கொள்ளலாமா! 😀

இன்னொன்றும் சொல்லலாம்; பூவை மரத்திலிருந்து பறிக்காமலே நிபந்தனையற்ற அன்புடன் ரசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவுக்கு ஈடில்லை! அதனால் தானோ என்னவோ வென்றாலும், தோற்றாலும் காதல் என்ற உணர்வே பெரிதாகக் கொண்டாடப்படுகிறது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மல்லிகை வாசம் said:

இப்படி எத்தனை பேர் ஆளுக்கு இரண்டோ மூண்டோ இன்னும் அதிகம் பேருக்கோ பூக்குடுத்து அசத்த நினைச்சிருப்பங்கள் அண்ணை! 😆 அந்த டிமாண்டால தான் பூக்கடைக் காரன் விலையைக் கூட்டி உங்களையே அசத்திட்டான் போல! 😆

உங்கட நாட்டு சொக்ளேற்றுக்கள் எங்கட ஊரில உள்ள அல்டிக்கு வாறது. எங்களுக்கு மிகவும் பிடிச்சது. இதுக்காகவே சில நேரம் அல்டிக்குப் போறது. 

அதாலைதான் நானும் அல்டிக்கு போறனான். மற்றும் படி...............😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.