Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Popular Post

அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ்.
இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை.
கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது.

கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே  உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர்,
இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர்.

பலர்  நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர்.
சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர்.

அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய்  தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று  சேர்ந்தவர்கள்,   இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று  ஓடியே போய்விட்டனர்.

அவர்கள் ஓடி  போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு  சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள்.

எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே.

இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை.  ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த  சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது.

அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்..
உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, 
இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது.

யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன்.

அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும்.
 ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., 
வாழிய உங்கள் இன பணி.
 
ஆம், நீங்கள் சொல்வது மிகச்சரி. பகிர்வுக்கு நன்றி வளவன்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வளவன் இப்ப்டிச் சொல்லுகின்றீர்கள்?

யாழ் என்பவள் பெண் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால்....அவளுக்கு இப்போது இருபத்து மூன்று வயது தானே?

அவளுக்கு  ஐம்பது வயது வரும்போது நாடி ....நரம்புகளைப் பற்றி யோசிப்போமே...!😀

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, valavan said:

அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும்.

வளவன் அண்ணா!

யாழ் முறுக்குடன் 23 வயதில்தான் இருக்கு. ஆனால் கருத்தாளர்கள்தான் நாடி, நரம்பு தளர்ந்த முதியோர்களாக இருந்துகொண்டு, முறுக்காக இருப்பதாகப் பாவனை பண்ணுகின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வளவன், 

யாழில் இணைய முதலே யாழை ஒருதலையாக காதலித்தேன், இணையும் போது பதிவு திருமணம் முடித்துவிட்டேன்😎

  • கருத்துக்கள உறவுகள்

அரிதாரம் போடாத எழுத்துகள் வளவன். எத்தனையோ முறை மனம் சொல்வதை எழுத முயல்வதும் பின்னர் அழிப்பதுமாக கடந்த காலங்களைக் கடந்திருக்கிறேன். நிதர்சனத்தை புரிந்து கொள்ள விரும்பாத பக்கங்களை யாழின் கருத்துக்கள நண்பர்களில் காண்பதுண்டு. சில சமயங்களில் அதுவும் நன்றே என்றும் தோன்றும். எழுத்துக்களில் அதி மேதாவித்தனம் அல்லது அடிமுட்டாள்த்தனம் அவை மட்டுமே கருத்துக்களத்தை கொண்டு நகர்த்தும் அடிப்படையாக உணர்வதுண்டு. போட்டு உடைத்து எழுதும் திராணி எப்போதும் இருந்ததில்லை. மேலே கிருமி சொன்னதைப்போல் யாழ் இணையம் இளமைதான் எழுதும் கருத்தாளர்கள் அரும்பும் முதுமையில்.... எழுத்துகளுக்கு அப்பால் நாமெல்லாம் வெறும் பூஜ்ஜியங்கள் ஆகிவிட்டோமோ என்றும் அதிகம் தோன்றுகிறது. உங்கள் மனதில் தோன்றிய எண்ணம்போல் நமக்கும் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடியவர்கள் திண்டாடுகிறார்கள் திண்டாடியவர்கள் கொண்டாடுகிறார்கள்  இந்த கருத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்திலே இருக்கிறது  

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான எழுத்துக்கள்.
பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/2/2021 at 18:32, valavan said:

யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன்.

உங்கள் சுய ஆக்கமும் அதன் பின் வந்த ஒரு சில கருத்துக்களும் கிட்டத்தட்ட தினசரி  யாழ்களம் வந்து கருத்திடுபவர்களை சாடுகின்றதா?

Edited by குமாரசாமி
அதிகமாக பதியப்பட்ட ஒரு சொல் நீக்கம் "வந்து"

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உங்கள் சுய ஆக்கமும் அதன் பின் வந்த ஒரு சில கருத்துக்களும் கிட்டத்தட்ட தினசரி  யாழ்களம் வந்து கருத்திடுபவர்களை சாடுகின்றதா?

கவனித்தேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, விசுகு said:

கவனித்தேன். 

வணக்கம் விசுகர்! என்றும் யாருக்கும் தொந்தரவாகவோ இடைஞ்சலாகவோ இருக்க நான் விரும்புவதில்லை. இதை என் தனிப்பட்ட/குடும்ப வாழ்விலும் மிக கண்ணியமாக எவ்வித கோபதாபங்களுமின்றி பின்பற்றுபவன்.சரியோ பிழையோ எதையும் நேருக்கு நேர் கதைப்பது எனக்கு பிடித்த விடயம்.

யாழ்களத்தில் அண்மைக்காலங்களில் ஒரு சிலர் ஏதோ சொல்ல விழைகின்றார்கள். நேரடியாக சொல்லி விட்டார்கள் என்றால் மனக்கசப்புகள் இல்லாமல் இருக்கலாம் என்பது எனது நிலைப்பாடு.

எதற்கும் வளவன் பதில் சொல்லட்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

நானும் அதை கவனித்தேன் அண்ணா.

நான் நினைக்கிறேன் ஒரே குறிக்கோளுடன்  இருப்பது அல்லது சுயநல அரசியல்களுக்கு முட்டுக்கொடுக்காதிருப்பது இன்றைய உலகில் சபிக்கப்பட்டதாக இருக்கலாம் இருக்கிறது. நமது கொள்கைகளுக்கு வயதாகி விட்டது என்பதை வேறு மாதிரி சொல்ல வந்து அது முடியாததால் வருத்தம் அடைகிறார்கள் போலும் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் எங்களுக்கு ஊன்றுகோலாகும் ஒரு கைத்தடி தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2021 at 08:21, குமாரசாமி said:

உங்கள் சுய ஆக்கமும் அதன் பின் வந்த ஒரு சில கருத்துக்களும் கிட்டத்தட்ட தினசரி  யாழ்களம் வந்து கருத்திடுபவர்களை சாடுகின்றதா?

சத்தியமா அப்படி ஒன்றும் இல்லை குமாரசாமியண்ணா.

பலவிதமான கருத்துக்களின் மீதான பார்வை/ஆதங்கம் அது.

கருத்தாளர்களை சாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? களவிதிகளே அதுக்கு இடம் கொடுக்காதே.

மற்றவர்களை சாடுகிறேன் என்று தோன்றினால், என்னை மற்றவர்கள் சாடுவதற்கும் அவர்களுக்கு  முழு உரிமையுண்டு. அதை எதிர்க்க எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, valavan said:

சத்தியமா அப்படி ஒன்றும் இல்லை குமாரசாமியண்ணா.

பலவிதமான கருத்துக்களின் மீதான பார்வை/ஆதங்கம் அது.

கருத்தாளர்களை சாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? களவிதிகளே அதுக்கு இடம் கொடுக்காதே.

மற்றவர்களை சாடுகிறேன் என்று தோன்றினால், என்னை மற்றவர்கள் சாடுவதற்கும் அவர்களுக்கு  முழு உரிமையுண்டு. அதை எதிர்க்க எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று நினைக்கிறேன்.

சந்தேகங்கள் வருவது மனித இயல்பு. அதை நேரடியாகவே உங்களிடம் கேட்டேன். அவ்வளவுதான். உங்கள் பதிலுக்கு நன்றி வளவன்.

  • கருத்துக்கள உறவுகள்

வளமான எழுத்து வளவன் எழுத்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.