Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை – வாக்கெடுப்பு இன்று!

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை – வாக்கெடுப்பு இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

விவாதத்தின் நடுவில், சில நாடுகள் தலையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு பெரும்பாலும் நாளை இடம்பெற வாய்ப்புள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென இலங்கை நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக் கோரியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த விடயம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தீர்மானித்துள்ளதாக ஜெனீவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என்றதன் அடிப்படையில் இலங்கையை சீனா ஆதரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பாக இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1203679

Edited by நிழலி
தலைப்பு மாற்றப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவாதம் இன்று இடம்பெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.

எனினும் சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக வாக்கெடுப்பை ஒத்திவைக்க ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், இந்த தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், வாக்களிப்பு இலங்கைக்கு எதிராக முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1203765

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் நாட்டு தலைவர்களுடன் கோட்டா, மஹிந்த அவசர பேச்சு – ஆதரவைப் பெற முயற்சி

 
gota-mahinda-696x348.png
 38 Views

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் முஸ்லிம் நாடுகள் பலவற்றின் தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு ஆதரவைக் கோரியிருக்கின்றார்கள்.

இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் யுசெப் ஏ.அலோத்திமேனுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொண்ட ஜனாதிபதி, இரு தரப்பு உறவுகள் குறித்தும், சிறிலங்காவில் முஸ்லிம் மக்களின் நிலை தொடர்பாகவும் உரையாடியுள்ளார். கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருப்பதற்கு இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் நன்றி தெரிவித்தார்.

இதேவேளையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பஹ்ரெயின் மன்னர் சல்மான் பின் ஹமீட்டுடன் தொலைபேசி மூலமாகப் பேசியுள்ளார். இருதரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார்.

https://www.ilakku.org/?p=45132

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா, வாக்கடுப்பு நாளை வரை ஒத்திவைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இதை நீதி யான முறையில் சந்திக்க அவர்களுக்கு அவகாசம் தேவை.......!  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடம்பிடிக்கிற   முஸ்லீம் நாடுகளுக்கு, பாகிஸ்தான் மூலமாக.... ஏதாவது கொடுத்து, வழிக்கு கொண்டு வரப் போகிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென இலங்கை நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எமது தலைவர்கள் ஆதரவு ஒன்றும் கேட்கவில்லையோ?

2 minutes ago, தமிழ் சிறி said:

அடம்பிடிக்கிற   முஸ்லீம் நாடுகளுக்கு, பாகிஸ்தான் மூலமாக.... ஏதாவது கொடுத்து, வழிக்கு கொண்டு வரப் போகிறார்கள் போலுள்ளது.

 

என்ன சிறி இது?

திருப்பதிக்கே லட்டா?

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

 
1-135.jpg
 4 Views

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  சிறீலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று  இடம்பெறவுள்ளது.

சிறீலங்காவின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு சிறீலங்கா அரசாங்கம்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜெனீவா நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு பிரேரணை குறித்து விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நேற்று இடம்பெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் பிரேரணையை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட நேர சிக்கல் காரணமாக இன்று வரை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

இதேவேளை, 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறீலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென சிறீலங்கா நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி,  இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை சிறீலங்காவுக்கு கோரியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த விடயம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், சிறீலங்காவுக்கு ஆதரவளிக்க சீனா  வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என்றதன் அடிப்படையில் சிறீலங்காவை சீனா ஆதரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேபோன்று பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

https://www.ilakku.org/?p=45195

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் பட்ட துன்பம் போதும். இன்று நல்ல முடிவு வரவேண்டும். 🙏🏽

Won by 22 / 11 ✌️

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது- இந்தியா உள்ளிட்ட 14 நநாடுகள் புறக்கணிப்பு

 
1-135.jpg
 

சிறீலங்காவுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் சபைில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

https://www.ilakku.org/?p=45257

 

 
ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது- வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது- வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
 

கொழும்பு,

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. 'இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, ஐ.நா.,மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 


கடந்த, 2012 - 2014 ல், அப்போது அதிபராக இருந்த, தற்போதைய பிரதமர், மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில்,அந்த தீர்மானங்கள், இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை விசாரித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. 

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது. இலங்கைக்கு ஆதரவாக  சீனா, ரஷ்யா, பாகிஸ்தான்,கியூபா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. 

இலங்கைக்கு எதிரான மேற்கூறிய தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து  22 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும்  வாக்களித்துள்ளன. 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/03/23170403/India-bycott-UN-resolution-against-Sri-Lanka.vpf

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது. தங்கள் நாட்டுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளை இலங்கை அரசு கேட்டுக்கொண்டது,

இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர்க்குற்ற தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது.

https://www.maalaimalar.com/news/topnews/2021/03/23172112/2471332/India-abstains-in-a-vote-in-the-UN-Human-Rights-Council.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.

vote.PNG

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு குறித்து பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணியாளவில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தன. 

 

இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் அமைந்துள்ளதாக வாக்கெடுப்பின் போது பிரித்தானியா தெரிவித்துள்ளது.

 

அத்துமீறிய தலையீடாகவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது எனவும் இலங்கை அதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் அமர்வில் தெரிவித்துள்ளது.

 

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அரசியல்மயப்பட்ட இரட்டை நிலைப்பாட்டையுடையதென  ஜெனிவா அமர்வில் சீனா தெரிவித்துள்ளது.

 

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் பொறுப்புக்கூறலிலும் இலங்கையின் ஈடுபாட்டை தாம் வரவேற்பதாக பாக்கிஸ்தான்  தெரிவித்துள்ளது.

 

நடுநிலையற்ற இலங்கைக்கு எதிரான  தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக ஜெனிவாவில் ரஷ்யா அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள்  என ஜெனிவாவில்  இந்தியா வலியுறுத்தியுள்ளது.

 

இதேவேளை, இலங்கை குறித்த தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சீனா, பாகிஸ்தான்,பங்களதேஷ்,கியூபா,ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ஜெனிவாவில் வாக்களித்துள்ளன.

 

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம் | Virakesari.lk

  • நிழலி changed the title to ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறியது!
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது; இந்தியா புறக்கணிப்பு; சீனா, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவு

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது.

இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று கூறி அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற பிப்ரவரியில் கொண்டு வந்தது.

இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்படுவது இலங்கை அரசுக்கு ஒருவித சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதே வேளை, இதை அப்படியே செயல்படுத்த வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு இல்லை.

முன்னதாக, தீர்மானம் மீதான இறுதி வாதத்தின்போது இலங்கை அரசு சார்பில் பேசிய அதன் பிரதிநிதி, "எங்கள் நாட்டுக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த வரைவு தீர்மானம் பற்றிய அசாதாரணமான யோசனை, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அனுமதித்தால் இது மிகப்பெரிய ஆபத்தாக மாறும். இந்த தீர்மானத்தின்படி திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தால், அதற்காக 2.8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி தேவை."

"அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இலங்கை அரசு ஒரு நடவடிக்கையை எடுத்து மனித உரிமைகளை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்மானம், இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும். இலங்கை இந்த தீர்மானத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தை மற்ற நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளைக் காப்பதில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு பொறுப்பு இருப்பதாக கூறினார். அண்டை நாடு எனும் அடிப்படையில் இறுதிப்போருக்கு பின்னர் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதைப் போல, 13வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அவர் வலியுறுத்தினார்.

ஐ.நா

பட மூலாதாரம்,UNHRC

சீனா, பாகிஸ்தான் வாக்கெடுப்பின்போது கூறியது என்ன?

மனித உரிமைகள் என்ற பெயரில் இவ்வாறான தீர்மானங்கள் மூலம் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை தாங்கள் எதிர்ப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்த சீன அரசின் பிரதிநிதி, இந்தத் தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார். பிற நாடுகளும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்தார்.

இலங்கை அரசு அமைதி மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சீனா தரப்பில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானும் இந்தத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.

சீனாவைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, இந்தத் தீர்மான வரைவு ''சர்வதேச தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவதில் தோல்வியடைந்து விட்டது," என்று கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கவும் இந்தத் தீர்மானம் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் முஸ்லிம்கள் உடல்கள் புதைக்க மறுக்கப்பட்டது குறித்தும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் பேசிய அவர், கொரோனாவால் இறந்த இஸ்லாமியர்கள் உடலைப் புதைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

வெனிசுவேலா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்த தீர்மானத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்துள்ளன.

ஐ.நா

பட மூலாதாரம்,UNHRC

இந்தியாவுக்கு தயக்கம் ஏன்?

இலங்கையின் பிரதான துறைமுகமாக இருக்கும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஏற்கனவே ஓர் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால் அதை இலங்கை துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்று கூறிய இலங்கை அரசு இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து பிப்ரவரி தொடக்கத்தில் பின்வாங்கியது.

இந்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடர்வதற்கு இந்தியா முயற்சி செய்து கொண்டுள்ளது. எனவே இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களித்தால் இந்த துறைமுகத் திட்டத்தில் பின்னடைவு ஏற்படும் என்று இந்திய அரசு கருதுகிறது.

ராஜபக்ஷ சகோதரர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தபின் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசுடன் நெருக்கம் காட்டி வருகிறது.

இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது இருநாட்டு வெளியுறவுத் தொடர்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,NARENDRA MODI TWITTER PAGE

 
படக்குறிப்பு,

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ. (கோப்புப்படம்)

இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தால் தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்.

இந்த இரண்டு கூறுகளையும் கருத்தில் கொண்டே இந்திய அரசு இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என கருதப்படுகிறது.

மு.க. ஸ்டாலின், ப. சிதம்பரம் உள்ளிட்ட பல முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை இந்திய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தனர்.

இதேபோல உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று, இலங்கை அரசுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்திய அரசு விலகியிருந்தது.

அப்போது இலங்கைக்கு எதிராக 23 நாடுகளும் ஆதரவாக 47 நாடுகளும் வாக்களித்தன.

அதற்கு முன்பு 2012 இலங்கை போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு இடையிலான உள்நாட்டுப் போர்

இலங்கை போரில் தமிழீழ விடுதலை புலிகள், அரசு படைகளின் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா-வில் புதிய தீர்மானம்
 
படக்குறிப்பு,

காணாமல் போன தங்கள் உறவினர்கள் பற்றி இன்னும் பல தமிழர்களுக்கு தகவல் எதுவும் இல்லை

இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுப் படை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என இரு தரப்பினரும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இப்போரில் குறைந்தபட்சம் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை நசுக்கிவிட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் 40,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மற்றும் பிற தொண்டூழிய அமைப்புகள் மதிப்பிடுகின்றன.

பல்லாயிரக் கணக்கானோர் இந்தப் போர் காலத்தில் காணாமல் போய்விட்டனர். இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள், இலங்கையிடம் சரணடைந்தவர்கள் அல்லது பிடிபட்டவர்கள் காணாமல் போனதற்கு, இலங்கை அரசுப் படையினர் மீது குறை கூறப்பட்டது.

அப்போதிலிருந்து, கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன தமிழர்களின் குடும்பம் நீதிகேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசோ தமிழ் மக்கள் காணாமல் போனதற்கு, தான் பொறுப்பல்ல என தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுக்கிறது.இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது; இந்தியா புறக்கணிப்பு; சீனா, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவு - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210323-WA0000.jpg 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நாம் பட்ட துன்பம் போதும். இன்று நல்ல முடிவு வரவேண்டும். 🙏🏽

செய்தி தகவல்கள் வழங்கும் சிறி அண்ணாவையே இந்தளவுக்கு தங்களை நல்லவனாக நம்பும்படியாக சர்வதேசநாடுகள் செய்துள்ளதே 🤔

  • கருத்துக்கள உறவுகள்

எரித்திரியா

கியூபா

வெனிசுவேலா 

சுமாலியா 

ஒரு இனத்தின் மீதான கொடூரமான அடக்குமுறையை ஆதரிக்கின்றன???

உலகம் எங்கே போகிறது??

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிரான தீமானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் 46-வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இலங்கைக்கு எதிரானத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் இனப்படுகொலை மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா-வில் பிரட்டன் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், `வாக்கெடுப்பில் இந்தியா எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது’ என்றும் கூறியிருந்தது.

ஆனால், இனப்படுகொலை மற்றும் போர் குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பின் போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்றன. இந்நிலையில், இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. 13-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்றும் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மீதும் எந்த கருத்தையும் இந்தியா தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014 என நான்கு முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மூன்று முறை மட்டுமே வாக்களித்துள்ளது. 2014-ம் ஆண்டு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா: இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை! |UN resolution passed against Sri Lanka India does not participate (vikatan.com)

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

எரித்திரியா

கியூபா

வெனிசுவேலா 

சுமாலியா 

ஒரு இனத்தின் மீதான கொடூரமான அடக்குமுறையை ஆதரிக்கின்றன???

உலகம் எங்கே போகிறது??

நித்திரையால எழும்பிட்டியள் போல தெரியுதே? 😇

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

நித்திரையால எழும்பிட்டியள் போல தெரியுதே? 😇

இவர்களை நம்பி தான் நாம் விழித்தோம் 

சுயநலக்கூட்டம் 

இவர்களை நம்பி நம்பி விழித்து அழிவதை விட மௌனம் தூக்கம் எவ்வளவோ மேல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லதொரு செய்தி. உழைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சி, இது ஆரம்பமே. போர்க் குற்ற விசாரணைக்கு கால எல்லை கிடையாது. ஒரு நாள் இந்த கூட்டம் கூண்டில் ஏறும் (இப்போது வேட்டிக்கு பின்னால் ஒழித்து இருப்பவர்களும் சேர்ந்து)

 

உழைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்

 

இப்பத்தான் இங்க வந்து இருக்காங்க. நடக்கட்டும் நடக்கட்டும் 

போர்க்குற்ற (ஒண்ணுக்கும் ஆகாத உள்நாட்டு) விசாரணையை ஆரம்பிக்க சொல்றதுக்கே பத்து வருஷத்துக்கு மேலே …

இப்பவே மயிரெல்லாம் நரைச்சு போச்சு . மிச்சம் உள்ளதும் புடுங்கிகிட்டு போகுது ... கொஞ்சம் நஞ்சம் மிச்சமும் தன்னால உதிர்கிறது ...

ஸ்ஸ்ஸ்ஸ் ... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

செய்தி தகவல்கள் வழங்கும் சிறி அண்ணாவையே இந்தளவுக்கு தங்களை நல்லவனாக நம்பும்படியாக சர்வதேசநாடுகள் செய்துள்ளதே 🤔

விளங்க நினைப்பவன்..... 
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நிறைவேறியதன் மூலம், 
நன்மை கிடைக்கின்றதோ  இல்லையோ...

இந்த வாக்கெடுப்பில் நாம் தோல்வியுற்றிருந்தால்,
ஸ்ரீலங்கா அரசு... தான் செய்தது சரி என்று சொல்லி,  
கொண்டாடி... தமிழரை கேலி செய்து, அயோக்கியத்தனம்  செய்ய முற்பட்டு.. 
எம் மீதான அடக்குமுறையும், நில அபகரிப்பும்  படு வேகமாக நடத்த ஆயத்தப் படுத்தியிருக்கும்.

இப்ப நடந்தது... அவர்களின் கொட்டத்தை, கொஞ்சமாவது கட்டுப் படுத்தும்.
இனி, தமிழர் தரப்பு,   மேற்கு உலகத்துக்கு... 
உரிய அழுத்தங்களை கொடுப்பதன் மூலம், 
உரிய பலன் கிட்டும் என நம்புகின்றேன்.

United Nations Human Rights Council on a resolution on alleged human rights violations by Sri Lanka
during the days of the Tamil Eelam war was adopted. It is a small step forward for UNHRC but giant leap forward for humanity.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை
தமிழீழ போரின் நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது யு.என்.எச்.ஆர்.சிக்கு ஒரு சிறிய படியாகும், ஆனால் மனிதகுலத்திற்கான மாபெரும் பாய்ச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

இதேவேளை, இலங்கை குறித்த தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை(abstain) அது நடுநிலை வகித்ததாக கொள்ளமுடியாது. வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தது என்றுதான் கொள்ளவேண்டும்.

மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய கத்தும் ஜப்பான் அடித்தட்டு நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டதுதான் பெரிய கோமாளிக்கூத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.