Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.

Bild

Bild

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாநகர காவல் படை, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது

 
168243129_145119737541120_68138312307250
 31 Views

யாழ் .மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் முறையாக இன்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகர பாதுகாப்பு படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

168019606_145575107494460_25217898653008

இதையடுத்து இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர பாதுகாப்பு படை கண்காணித்தது.ஷ

யாழ் மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் 5 பேரை புதிய சீருடை ஒன்றை அறிமுகம் செய்து மாநகர காவல் படை என்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=46756

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, உடையார் said:

யாழ்.மாநகர காவல் படை, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது

நல்லதொரு ஆரம்பம். சட்டங்கள் வலிமையாக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செயற்பாடு .......!  👍

3 minutes ago, தமிழ் சிறி said:

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

எங்காவது வேலிக்கதியாலுக்க துப்புறதுக்கும் முடியாது....... எல்லா இடமும் மதிலாய் கிடக்கு......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்..👌

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

ஆட்டோ பிடிச்சு, வெளியாலை, தின்னவேலி, கொக்குவில் பக்கமா போய், துப்பிவிட்டு வரலாம் தானே. 😜

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

 

👏👏👏

அதுக்கும் ஆப்பு வைச்சிடுவாங்க நம்ம ஆட்கள்

Enforcement  Team  

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

உஸ்.... மூச்சுக் காட்டாதீர்கள், போட்டுக் கொடுத்து விடுவார்கள். 🤫

  • கருத்துக்கள உறவுகள்


எதிர் பார்த்ததை விட மணிவண்ணன் நன்றாக செய்கின்றார். இருக்கின்ற சட்டங்களையும், வளங்களையும் வைத்து சிறப்பாக செயற்படவேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்

எப்பபோவோ செய்யவேண்டிய விடயம் இப்பவாவது செய்ய நினைக்கிறார்கள் ...அது சரி பழக்க தோஷம் விடாது கண் டியளோ  ?

 "தம்பி பஸ்சை நிப்பாட்டு  துப்பி போட்டு வாறன்"  😀
 
அண்மையில் நான் பார்த்த வீடியோக்களில் எல்லாருடைய  வாயும் வெத்திலைக் காவி படிந்த படி ....வேறேதும் வைத்து மெல்லு ( சப்பு ) வார்களோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

எப்பபோவோ செய்யவேண்டிய விடயம் இப்பவாவது செய்ய நினைக்கிறார்கள் ...அது சரி பழக்க தோஷம் விடாது கண் டியளோ  ?

 "தம்பி பஸ்சை நிப்பாட்டு  துப்பி போட்டு வாறன்"  😀
 
அண்மையில் நான் பார்த்த வீடியோக்களில் எல்லாருடைய  வாயும் வெத்திலைக் காவி படிந்த படி ....வேறேதும் வைத்து மெல்லு ( சப்பு ) வார்களோ ? 

பீற்றூட்கறி சாப்பிட்டாலும், வாய் சிவக்கும். 😃

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.

Bild

Bild

 

ஆஆஆஆ
மாநகரசபைக்கு இப்படியும் அதிகாரங்கள் இருக்கிறதா?

ததேமுன்னணியுடன் இருந்த போது போட்ட நல்ல திட்டங்களை தீட்டி வைத்திருந்தார்கள்.

யார் செய்தாலும் நல்லதே.

சிங்கள அரசுகள் குழம்பாமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

ஆனால் தமிழர்களிடையே இவ்வாறான விடயங்களை செயற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

புலிகள் கூட தோற்ற விடயம் இது.

இது மணிவண்ணனுக்கு நற்பெயருக்கு பதிலாக எதிரானவர்களையே வளர்த்து விடும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது.

யாழ். மாநகரில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கும் கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணிப்பதற்கும் மற்றும் மாநகரின் ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கும் என குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதிய காவல் படையில் பணிபுரியும் ஒருவர் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபையின் காவல் படையின் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் வீதியில் இந்தப் பணியை ஆரம்பித்தோம். வாகனம் ஒன்றிலிருந்து கழிவு எண்ணெய் வீதியில் ஊற்றப்பட்டிருந்த நிலையில் பெண்ணொருவர் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் நாம் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். எமது பணி சிறப்பாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council-3.jpg

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council.jpg

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council-4.jpg

https://athavannews.com/2021/1208291

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

பாடசாலை தொடங்கும் முடியும் நேரங்களில் இவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆரோக்கிய பயனும் இல்லை என்றால் 
வெற்றிலையை தடை செய்து விடலாம் .... சாப்பிடுபவர்கள் எங்காவது துப்ப தானே செய்வார்கள்?
மக்கள் குப்பைகளை கொட்டுவதும் உரிய முறைமைகளை முதலில் உருவாக்க வேண்டும். 

யாழ் மாநகர சபை அள்ளும் குப்பைகளை என்ன செய்கிறார்கள்?
யாருக்காவது தெரியுமா? 

சீமான் இனவாதம் பேசுவதால்தான் மக்கள் இவ்வாறு குப்பை கொட்டுகிறார்கள் 
தெரிந்தோ தெரியாமலோ புலிகளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படியும் 
குப்பைகளை கொட்டிக்கொண்டுதான் திரிவார்கள். கோத்த பையாவின் இது போன்ற சேவை 
மக்களுக்கு தேவை. 

(வாசித்துக்கொண்டு வரும்போது இது யாழ் களத்தில் இருப்பதுபோல  தெரியவில்லை. உண்மையிலேயே சந்தேகம் வந்துவிட்டது ... இப்போதான் யாழ் களத்தில் இருக்கும் திரிபோல இருக்கு வாசிப்பவர்களுக்கு என்னைப்போல எங்கு வாசித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற சந்தேகமும் வாராது) 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

எந்த ஆரோக்கிய பயனும் இல்லை என்றால் 
வெற்றிலையை தடை செய்து விடலாம் .... சாப்பிடுபவர்கள் எங்காவது துப்ப தானே செய்வார்கள்?
மக்கள் குப்பைகளை கொட்டுவதும் உரிய முறைமைகளை முதலில் உருவாக்க வேண்டும். 

யாழ் மாநகர சபை அள்ளும் குப்பைகளை என்ன செய்கிறார்கள்?
யாருக்காவது தெரியுமா? 

குப்பைகளை recycling & landfill என்று பிரித்தாலே குப்பைகளின் அளவு குறைந்துவிடும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

இப்படியான நடைமுறைகள் தொடர்ந்தால் சந்தோசம்.
ஆனால் தொடர விட மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

கொஞ்சம் பொறுங்கோ

யாரைக் கேட்டு இதெல்லாம் தொடங்கினீர்கள் என்று மணிவண்ணனிடம் 3 மணிநேர விசாரணை.

கோத்தாவா கொக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆ
மாநகரசபைக்கு இப்படியும் அதிகாரங்கள் இருக்கிறதா?

ததேமுன்னணியுடன் இருந்த போது போட்ட நல்ல திட்டங்களை தீட்டி வைத்திருந்தார்கள்.

யார் செய்தாலும் நல்லதே.

சிங்கள அரசுகள் குழம்பாமல் இருந்தால் சரி.

மணிவண்ணன் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதி என்பதில் எல்லோருக்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது
முன்னணியில் இருந்து கொண்டே  இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் சிறிதளவாவது
முன்னேற்றம் கிடைத்திருக்கும்
சில விடையங்களைக் கையாள்வதில் அவருக்கு அனுபவம் காணாது
எங்களை போன்ற பழுத்த அரசியல்வாதிகளிடம்😄
அவர் இன்னும் பல கல்லெறிகளை வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாத்தியார் said:

மணிவண்ணன் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதி என்பதில் எல்லோருக்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது
முன்னணியில் இருந்து கொண்டே  இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் சிறிதளவாவது
முன்னேற்றம் கிடைத்திருக்கும்
சில விடையங்களைக் கையாள்வதில் அவருக்கு அனுபவம் காணாது
எங்களை போன்ற பழுத்த அரசியல்வாதிகளிடம்😄
அவர் இன்னும் பல கல்லெறிகளை வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை

 

அவருக்கு கலாச்சாரத்தை சிதைப்பவர்களுடன் நிறைய தொடர்பிருப்பதாக சொல்கிறார்கள்.

உண்மையானால் அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

காவல்படை உருவாக்கத்தையும் தடுப்பார்கள் போல இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக அவரிடம் நேற்று (புதன்கிழமை) மாலை சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர்.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல்படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பாக கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறையைக் கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

jaffna-1-1140x570.jpg

https://athavannews.com/2021/1208386

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடாவடி பிக்குகள் சும்மா இருக்குங்கள் என்கிறீர்கள்? ஒரு கதகளி ஆடாமல் ஓயாதுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.