Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்ன கலைவாணர் விவேக் காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாரடைப்பினால் வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் காலமானார்.

சென்னை: மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். வெள்ளிக்கிழமை காலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/actor-vivek-passed-away-sudden-heart-attack-418069.html?story=1

  • Replies 51
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துயர் மிகுந்த செய்தி. நகைச்சுவை மன்னருக்கு இதய அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நடிகர் மட்டுமல்ல லட்சக் கணக்கான மரங்களையும் நட்டுக் கொண்டிருந்தார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சியான செய்தி. 

தமிழை நேசித்த... நல்ல ஒரு கலைஞன் இள வயதில் மறைந்து விட்டான்.

விவேக்கின் குடும்பத்தினருக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 தன் நகைச்சுவையால் எல்லோரையும் கவர்ந்த ஒரு மனிதர் .

ஆழ்ந்த இரங்கல்கள் 

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

 

தனது சமூக அக்கறையுடன் கூடிய நகைச்சுவையால் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் விவேக். 1987ஆம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். அதன்பிறகு ஆயிரக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.

 

நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். ஊசியை செலுத்தி கொண்ட பின்னர், 'எல்லோரும் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

 

இந்நிலையில் நேற்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக, மோசமான நிலையில் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு இடது ரத்த குழாயிலிருந்த அடைப்பு நீக்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரம் விவேக் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

விவேக் நலம் பெற வேண்டி தமிழக முதலமைச்சர் முதல் திரை பிரபலங்கள், ரசிகர்கள் வரை பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

https://www.minnambalam.com/politics/2021/04/17/38/Tamil-News-Actor-Vivek-life-history

நகைச்சுவை மட்டுமல்ல சமூக அக்கறை கருத்துக்களை சொன்ன 'சின்னக்கலைவாணர்' விவேக்

சென்னை: மதுரையில் பிறந்து சின்னக்கலைவாணராக மக்களின் மனதில் வாழ்ந்து மறைந்துள்ளார் நடிகர் விவேக். அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்த விவேக், தீராத சினிமா தாகம் கொண்டவர். 1986 ஆம் முதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழக தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார் விவேக். அரசு ஊழியராக பணியாற்றினாலும் சினிமா மீதான கொண்ட ஆசையால் கலைத்துறையில் பயணத்தை தொடங்கினார். தமிழ் திரைப்படத்துறையில் சின்னக்கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் தனது திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனை கருத்துக்களை பரப்பி வந்தவர். அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் 'சின்னக்கலைவாணர்' எனப் போற்றப்பட்டார்.


Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chinna-kalaivanai-actor-vivek-who-said-social-caring-ideas-418070.html

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பில் இருந்து தப்பி விடுவார் என நினைத்திருந்தோம்.

இப்படி ஒரு சோகச் செய்தியை... எதிர் பார்க்கவே இல்லை.

கண்ணீர் அஞ்சலிகள். 😢 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்

என் மனம் கவர்ந்த  கலைஞனுக்கு கனத்த இதயத்துடன், அஞ்சலிகள்...!

இவரது நகைச்சுவையில் 'செயற்கை' இருக்க மாட்டாது!

சிரிக்கவும் சில நேரங்களில் சிந்திக்கவும் வைத்த நடிகன்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மீது பெரு மதிப்பு வைத்திருந்த கலைஞன்.

பல நூறு ஈழத்தமிழர்களின் நல்ல நண்பன்.

அஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்

மகன் இறந்தபின் அவர் பாதி உடைந்துவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

 

spacer.png

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

spacer.png

சின்ன கலைவாணர், கருத்து கந்தசாமி என்று அழைக்கப்படும் விவேக், மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்ரல் 17) காலமானார்.

அவர் சிகிச்சை பெற்ற சிம்ஸ் மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக்கின் மறைவு அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விவேக்கின் மனைவி அருட்செல்வி. முதலில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். மகள்களில் மூத்தவர் அமிர்த்தா நந்தினி, இளைய மகள் தேஜஸ்வனி. மூன்றாவதாகப் பிறந்தவர் மகன் பிரசன்ன குமார்.

பிரசன்ன குமார் இசை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் கீபோர்டு பிரிவில் பட்டம் பெற்றவர். தனது 13ஆவது வயதில், 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது, 2015ஆம் ஆண்டு மூளை காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

spacer.png

தனது ஒரே மகனை இழந்தது விவேக்கை நீங்கா துயரில் ஆழ்த்தியது. அவரது மகன் நினைவாக குழந்தைகள் ட்ரஸ்ட் ஒன்றையும் நடத்தி வந்தார் விவேக். அதோடு மீண்டும் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதால், ஜிஜி செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து அவரது மனைவி கருவுற்ற நிலையில், மீண்டும் தங்களது மகனே வந்து பிறக்க போகிறான் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அக்குழந்தைகளுக்குச் சிறு பிரச்சினை என்றாலும், தானே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவாராம் விவேக்.

 

“நான் இளம் வயதாக இருக்கும் போது, என் அப்பா அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுவார். அம்மாவுடன் தான் வளர்ந்தேன். சாலையில் ஒரு குழந்தை அப்பா, அம்மாவோடு நடந்து சென்றாலே ஆச்சரித்துடன் பார்ப்பேன். அப்பாவை ரொம்ப மிஸ் செய்வேன். அது அப்படியே எனது பிள்ளைகளுக்கும் இருக்க கூடாது என்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்தினருடன் ஒட்டிக்கொள்வேன்” என்று நகைச்சுவை கலந்த தனது பாணியில் விவேக் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த சூழலில் விவேக்கின் திடீர் மரணம் குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 

https://minnambalam.com/politics/2021/04/17/39/actor-vivek-passed-away

 

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான தமிழ் அன்பு கொண்ட நடிகர் விவேக்கின் ஆன்மா சாந்தியடையட்டும் .🙏

நகைச்சுவை மூலம் சிந்திக்க வைத்த கலைஞன்.கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் மறைவு, கண்ணீரில் தமிழ்நாடு: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், கலைஞர்கள் இரங்கல்

நடிகர் விவேக்

பட மூலாதாரம், TWITTER

 
படக்குறிப்பு, விவேக்

தமிழ் திரைப்படத்துறையின் பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழில் மட்டும் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59.

முன்னதாக, நேற்று (ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை) காலை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டு அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் தமிழ்திரைப்பட நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள விவேக்கின் இல்லத்தில் அவருக்கு நடிகர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் இரங்கல்

Twitter பதிவின் முடிவு, 1

"பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை டைமிங் மற்றும் புத்திசாலித்தனமான வசனங்கள் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என பிரதமர் மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

முதல்வர், ஸ்டாலின் இரங்கல்

அவரது மறைவால் தமிழ் திரைப்பட உலகிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகர்கள் பலரும் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப் பெரிய இழப்பு" என்று அவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் நடிகர் விவேக் என்று முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

"'சின்ன கலைவாணர்' என திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் நடிகர் விவேக். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். பல சாதனையை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்தவரை இயற்கை அவசரமாக ஏன் பறித்துகொண்டதோ?" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின்

 

டிடிவி தினகரன், ரஜினிகாந்த்

அ.ம.மு.க. கட்சி தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 'சிவாஜி'படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

"சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த எனது தம்பி விவேக் நம்மோடு இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தான் வெளியிட்டுள்ள காணொளியில் நடிகர் சத்தியராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நடிகர் விவேக்கின் இறப்பை நம்ப முடியவில்லை. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்; திரைத்துறையில் பல ஆண்டுகள் மக்களை மகிழ்வித்து வந்த நீங்கள் என்றென்றும் எங்கள் நினைவுகளில் இருப்பீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

காலமானார் நடிகர் விவேக்: கண்ணீர் வடிக்கும் தமிழகம்

பட மூலாதாரம், TWITTER

"சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!" என்று நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் 

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதிமையம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன்.

Twitter பதிவின் முடிவு, 4

ஜனங்களின் கலைஞன் - எம்.எஸ்.பாஸ்கர்

ஊடகங்களிடல் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஜனங்களின் கலைஞராக வாழ்ந்தவர் விவேக் என்றார். ''மரணம் பொதுவானது. ஆனால் இவரின் மரணம் கொடுமையானது. இறக்கவேண்டிய வயதில் அவர் இல்லை. அவரை காலம் நம்மிடம் இருந்து பறித்துகொண்டு போய்விட்டது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தைரியமான மனது கொண்டவர்,'' என்றார். 

மரங்கள் கண்ணீர் சிந்தும் - நாசர்

விவேக்குக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் நாசர் ஒரு மாதத்திற்கு முன்னர் விவேக்குடன் பேசிய தருணத்தை நினைவுகூர்ந்தார். ''என்னால் இன்னும் அவரது மரணத்தை நம்பமுடியவில்லை. நகைச்சுவை நடிகராக தனக்கென அடையாளத்தை உருவாக்கிகொண்டவர். பல லட்சம் மரங்களை அவர் நட்டுள்ளார். மனிதர்களை விட அந்த மரங்கள் அவருக்காக கண்ணீர் சிந்தும். நான் ஒரு நண்பனை இழந்துவிட்டேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருடன் நீண்டநேரம் உரையாடினேன். ஆன்மிகம், நாத்திகம், சுற்றுசூழல், உடல்நலம் என பலவற்றை பேசினார். தற்போது அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை,'' என்றார். 

இது மட்டுமின்றி, நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி, சூரியா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்டவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

https://www.bbc.com/tamil/india-56783133

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

Gone too early': Sorrowful condolences pour in for actor Vivek | The News  Minute

அருமையான கலைஞன் ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

விவேக்... நேற்று முன் தினம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசியால் அவருக்கு... மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவமனை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.

https://athavannews.com/2021/1210150

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

விவேக்... நேற்று முன் தினம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசியால் அவருக்கு... மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவமனை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.

https://athavannews.com/2021/1210150

 

காமென்ற்கள் தெறிக்குது தோழர்..😢

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கலுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்.:100_pray:

நகைச் சுவையால் சிரிக்கவைத்தது மட்டுமல்ல... கலைவாணரைப் போல் அந்தச் சுவையால் மக்களைச் சிந்திக்கவும் வைத்த நல்ல மனிதர். 

கண்ணீர் அஞ்சலிகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.