Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு!

சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு!

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர், கடந்த ஒக்டோபரில் சீன மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் (Yang Jiechi) வருகையைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் மேற்கொண்ட இரண்டாவது மிக உயர்ந்த பயணமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_06a35591e2-600x384.jpg

image_ab496d7cd9-600x440.jpg

https://athavannews.com/2021/1212991

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்பு இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்- சீனபாதுகாப்பு அமைச்சர்

14-696x466.jpg
 23 Views

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்கும் விதத்தில் காணப்பட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் தெரிவித்துள்ளார்.

21-2.jpg

ஜனாதிபதி மாளிகையில் இன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கும் சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
இந்நிலையில், சிறீலங்கா  ஜனாதிபதிக்கும் தனக்குமடையிலான பலனளிக்கும் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
  • கருத்துக்கள உறவுகள்

Meanwhile  in India..

பனிச்சரிவில் சிக்கி இந்திய இராணுவத்தினர் பலி.  பலரைக் காணவில்லை. மீட்புப்பணி தீ....வி.... ர... மா...க.. இடம்பெற சீரான வானிலையை எதிர்பார்த்தபடி உள்ளனர்..

😂😂

இன்னும் 4 நாளைக்குள் இந்திய உயர் அதிகாரி ஒருவர் வருவார். கோத்தபாயாவுடன் பேசியபின் வெளியே வந்து, வடக்கு கிழக்கு இணைப்பது பற்றியும் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் தாம் வலியுறுத்தியதாகச் சொல்லிச் சிரிப்புக் காட்டிவிட்டுப் போவார். 😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு!

சிறித்தம்பி! தலையங்கம் இப்பிடியிருந்தால் எப்பிடியிருக்கும்? 😁
 
சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – தம்பிக்காரன் மற்றும் தமையனுடன் பேச்சு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! தலையங்கம் இப்பிடியிருந்தால் எப்பிடியிருக்கும்? 😁
 
சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – தம்பிக்காரன் மற்றும் தமையனுடன் பேச்சு!

May be an image of 2 people and people standing

குமாரசாமி அண்ணை... இதையும் பாருங்கோ. 
இலங்கை மாநில முதலமைச்சர் கோத்தாவை... சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார்.! 
இலங்கை மாநில உறவு வலுவாக இருப்பதாக.... சீனா பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு. :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 12:47, இணையவன் said:

இன்னும் 4 நாளைக்குள் இந்திய உயர் அதிகாரி ஒருவர் வருவார். கோத்தபாயாவுடன் பேசியபின் வெளியே வந்து, வடக்கு கிழக்கு இணைப்பது பற்றியும் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் தாம் வலியுறுத்தியதாகச் சொல்லிச் சிரிப்புக் காட்டிவிட்டுப் போவார். 😆

யாழ்ப்பாண தமிழில் சொன்னால்: 'என்னெண்டு சொன்னியள்'?

நீங்கள் சொன்னமாதிரியே, அடுத்த மூன்று மணிநேரத்தில், இந்திய தூதர், மகிந்தரை சந்தித்தார். பின்னர், கோவிட் சம்பந்தமாக உரையாடியதாக டுவீட் பண்ணி உள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாண தமிழில் சொன்னால்: 'என்னெண்டு சொன்னியள்'?

நீங்கள் சொன்னமாதிரியே, அடுத்த மூன்று மணிநேரத்தில், இந்திய தூதர், மகிந்தரை சந்தித்தார். பின்னர், கோவிட் சம்பந்தமாக உரையாடியதாக டுவீட் பண்ணி உள்ளார்.

நாதமுனி.... இணையவனுக்கு, இந்திய தூதரகத்தில்... தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள் போலுள்ளது.

அவர் மூலம், இந்த விசயத்தை... முன்பே அறிந்து உள்ளார் என நினைக்கின்றேன். ஹா... ஹா... ஹா.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 19:47, இணையவன் said:

இன்னும் 4 நாளைக்குள் இந்திய உயர் அதிகாரி ஒருவர் வருவார். கோத்தபாயாவுடன் பேசியபின் வெளியே வந்து, வடக்கு கிழக்கு இணைப்பது பற்றியும் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் தாம் வலியுறுத்தியதாகச் சொல்லிச் சிரிப்புக் காட்டிவிட்டுப் போவார். 😆

சீனப் பாதுகாப்பு அமைச்சர் புறப்பட்டவுடன் பிரதமரை சந்தித்த இந்தியத் தூதுவர்

03-3-696x456.jpg
 21 Views

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் தமது பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவுக்குப் புறப்பட்ட நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுக்காலை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

https://www.ilakku.org/?p=48556

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையோடை இதையும் கொஞ்சம் கவனியுங்கோ..😁

1 நபர் மற்றும் , ’ளை முன்னிட்டு க்கு ங்கல் i கட்சி, 1 IBC தமிழ் Capital NEWS ATHAVANNEWS.COM சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்- இரா.சம்பந்தன் Athavan News’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

On 28/4/2021 at 13:47, இணையவன் said:

இன்னும் 4 நாளைக்குள் இந்திய உயர் அதிகாரி ஒருவர் வருவார். கோத்தபாயாவுடன் பேசியபின் வெளியே வந்து, வடக்கு கிழக்கு இணைப்பது பற்றியும் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் தாம் வலியுறுத்தியதாகச் சொல்லிச் சிரிப்புக் காட்டிவிட்டுப் போவார். 😆

1 hour ago, Nathamuni said:

யாழ்ப்பாண தமிழில் சொன்னால்: 'என்னெண்டு சொன்னியள்'?

நீங்கள் சொன்னமாதிரியே, அடுத்த மூன்று மணிநேரத்தில், இந்திய தூதர், மகிந்தரை சந்தித்தார். பின்னர், கோவிட் சம்பந்தமாக உரையாடியதாக டுவீட் பண்ணி உள்ளார்.

1 hour ago, தமிழ் சிறி said:

நாதமுனி.... இணையவனுக்கு, இந்திய தூதரகத்தில்... தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள் போலுள்ளது.

அவர் மூலம், இந்த விசயத்தை... முன்பே அறிந்து உள்ளார் என நினைக்கின்றேன். ஹா... ஹா... ஹா.... 🤣

எப்பிடியோ இங்க கதைச்சது அங்க போயிருக்கு. 😀 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனி.... இணையவனுக்கு, இந்திய தூதரகத்தில்... தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள் போலுள்ளது.

அவர் மூலம், இந்த விசயத்தை... முன்பே அறிந்து உள்ளார் என நினைக்கின்றேன். ஹா... ஹா... ஹா.... 🤣

றோ உளவாளி இணையவன் ஒழிக 😆

(இங்கே கொஞ்சம் எழுதுகிறார். இத்துடன் அதுக்கு ஆப்பு. ஏதோ நம்மால் முடிந்தது 😜)

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

றோ உளவாளி இணையவன் ஒழிக 😆

(இங்கே கொஞ்சம் எழுதுகிறார். இத்துடன் அதுக்கு ஆப்பு. ஏதோ நம்மால் முடிந்தது 😜)

விசுகர்.... இனிமேல், நமது இயக்க ரகசியங்களை... 
இங்கை,  கதைக்கப் படாது போலை கிடக்கு. :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people

என்ன இஞ்சை ஒரே சல சலப்பாக இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிங்களவன் வாழுறான்...

உண்மை தான்....! 

அதுக்கு இந்தியன் தான் செலவழிக்கிறான்..!🤑

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியன் எக்ஸ்பிரசன்ஸ்

IMG-20210501-105823.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

உண்மை தான்....! 

அதுக்கு இந்தியன் தான் செலவழிக்கிறான்..!🤑

செலவில்லாமல் சின்னவீடு வைத்திருக்க முடியுமா....... சீனனும் அள்ளிச் செலவளிக்கிறான், இந்தியனும் கிள்ளிச் செலவளிக்கிறான்... இருந்தும் கள்ளிக்கு வாரிசு பிறந்தால் யாருக்குச் சொந்தமாகும்...??🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

செலவில்லாமல் சின்னவீடு வைத்திருக்க முடியுமா....... சீனனும் அள்ளிச் செலவளிக்கிறான், இந்தியனும் கிள்ளிச் செலவளிக்கிறான்... இருந்தும் கள்ளிக்கு வாரிசு பிறந்தால் யாருக்குச் சொந்தமாகும்...??🤔

ஊர்ப் பண்ணையாருக்குச் சொந்தம். 😂

சீனா பெரிய பண்ணை. இந்தியா மைனர் குஞ்ச்சு...சூ. கள்ளி வீட்டுக்கு பண்ணையார் வந்து போனபிற்பாடுதானே ஊர் மைனர் ஒழிந்து ஒழிந்து போக முடியும். 

(பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்ததன் விழைவு. 🤦🏼‍♂️)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

செலவில்லாமல் சின்னவீடு வைத்திருக்க முடியுமா....... சீனனும் அள்ளிச் செலவளிக்கிறான், இந்தியனும் கிள்ளிச் செலவளிக்கிறான்... இருந்தும் கள்ளிக்கு வாரிசு பிறந்தால் யாருக்குச் சொந்தமாகும்...??🤔

இதில பிறக்கிற குழந்தை கலுப் பாட்ட (கறுப்பு நிறத்தோட) இருந்தால் நாங்கள் துணிந்து சொந்தம் கொண்டாட வேண்டும் கண்டியளோ ....சும்மா வடக்கு மாகாண மரபை கட்டிபிடிச்சு கொண்டு வெட்க படாமல் புலம்பெயர்ந்த கொள்கையுடன் வரம்பை மீறி செயல்பட்டு  உரிமை கோர வேண்டும் 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இதில பிறக்கிற குழந்தை கலுப் பாட்ட (கறுப்பு நிறத்தோட) இருந்தால் நாங்கள் துணிந்து சொந்தம் கொண்டாட வேண்டும் கண்டியளோ ....சும்மா வடக்கு மாகாண மரபை கட்டிபிடிச்சு கொண்டு வெட்க படாமல் புலம்பெயர்ந்த கொள்கையுடன் வரம்பை மீறி செயல்பட்டு  உரிமை கோர வேண்டும் 😀

புத்தன் உன்னும் யசோதரையின் நினைப்பில் இருக்கிறீர்கள் போல... 😜

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

செலவில்லாமல் சின்னவீடு வைத்திருக்க முடியுமா....... சீனனும் அள்ளிச் செலவளிக்கிறான், இந்தியனும் கிள்ளிச் செலவளிக்கிறான்... இருந்தும் கள்ளிக்கு வாரிசு பிறந்தால் யாருக்குச் சொந்தமாகும்...??🤔

யார் செலவு செய்தாலும் வாரிசு பிறந்தால் (தமிழ்ஈழம்)ஈழத்தமிழருக்குத்தான் சொந்தம் ஆனாலும்  இருவரும் (சீனா..இந்தியா ) வாரிசு பிறக்காது என்று உறுதியளித்துள்ளார்கள் யாருடன்  நெருக்கம். கூடினாலும் வாரிசு. பிறக்கும்.  எனவே  பணத்தை செலவு செய்யாது சேமித்து வையுங்கள்செலவுக்கு இடமுண்டு..😎😎😜😜

  • கருத்துக்கள உறவுகள்

இறுகும் சீனாவின் பிடி – சீன வெளிவிவகார அமைச்சரும் ஜூன் மாதம் இலங்கை வருகின்றார்

china-forign-minister-696x349.png
 36 Views

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (WANG YI) அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

சீன பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய அதேவேளை, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில்,வெளியுறவு அமைச்சர் வாங் தன்னுடைய பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். கடந்த வாரம் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றில் அவர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இந்த சந்திப்பில் கொரோனா கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்து அவர் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/?p=48750

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.