Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   

இஸ்‌ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.   

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, காஸாவில் இஸ்‌ரேலிய விமானங்கள் குண்டுமழை பொழிந்து கொண்டிருப்பதாக, பதுங்கு குழிகளில் இருந்து பலஸ்தீனிய நண்பர்கள், மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.   

ஒரு தசாப்தகாலமாக நீடித்த அமைதி, முடிவுக்கு வந்துவிடுமோ என்று அரசியல் அவதானிகள் அஞ்சுகிறார்கள். சர்வதேச தலைவர்கள், இஸ்‌ரேலைத் தடவிக் கொடுத்தபடி கவலை வெளியிடுகிறார்கள்.   

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதிகள், நடப்பதற்கும் தமக்கும் எதுவிதத் தொடர்புமில்லை எனும் தொனியில் அமைதி காக்கிறார்கள்.   

ஜெரூசலத்தில் இப்போது காணப்படும் பதற்றம் புதிதல்ல. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மிகவும் அமைதியாக இருந்த நிலத்தில், அண்மைய நிகழ்வுகள் உருவாக்கியிருக்கும் பதற்றம் பெரிது; கவலையளிக்கக் கூடியது. இரண்டு முக்கிய நிகழ்வுகள், இப்பதற்றத்துக்கு வழி கோலியுள்ளன.   

முதலாவது, பலஸ்தீனர்கள் வசிக்கும் மேற்குக்கரையில், அதிகளவான சட்டவிரோதமான இஸ்‌ரேலியக் குடியிருப்புகள் உருவாக்கப்படுவது தூண்டப்படுகிறது. தங்களது நிலங்களில், இஸ்‌ரேலியர்கள் அடாவடியாகக் குடியேறுவது, பலஸ்தீனியர்களின் பெரும் பிரச்சினையாக உள்ளது.   

இரண்டாவது, ரமழான் தொடங்கியது முதல், பலஸ்தீனியர்கள் வழிபடுவதற்கும் ஒன்றுகூடுவதற்கும் தொடர்ச்சியான தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வந்துள்ளன. இது பலஸ்தீனியர்களை வேண்டுமென்று ஆத்திரமூட்டும் செயல்.   
இவை இரண்டுக்கும் மட்டுமன்றி, இன்று பலஸ்தீனம் பற்றி எரிவதற்குக் காரணம், இஸ்‌ரேலின் அரசியல் எதிர்நோக்கும் நெருக்கடியுமாகும்.  

கிழக்கு ஜெரூசலத்தின் ஷேக் ஜராப் பகுதியில், பலஸ்தீனியக் குடியிருப்பாளர்கள் இஸ்‌ரேலிய சட்டவிரோத குடியேற்றவாசிகளோடு ஒரு நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இஸ்‌ரேலிய குடியேற்றவாசிகள், அந்த நிலம் வரலாற்று ரீதியாகத் தங்களுடையது என்றும், எனவே அங்கு குடியிருக்கும் பலஸ்தீனியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோருகிறார்கள். இந்தப் பிரச்சினை, பலஸ்தீனியர்களின் நிலம் தொடர்பான, முக்கியமான சிக்கலாகும்.   

அதிதீவிரத் தேசியவாத சியோனிச அமைப்புகளினதும் இஸ்‌ரேலிய நீதிமன்றின் ஆதரவுடனும் இஸ்‌ரேலிய குடியேற்றவாசிகள் அந்நிலத்துக்கு உரிமை கோருகிறார்கள். அவர்கள் 1948ஆம் ஆண்டுக்கு முன், இந்த நிலமானது யூத சமய அமைப்புக்குச் சொந்தமாக இருந்தது என்று வாதிடுகிறார்கள். 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்‌ரேலியச் சட்டமானது, கிழக்கு ஜெரூசலமில் தங்கள் காணிகளை மீட்டுக்கொள்ளும் உரிமையை, இஸ்‌ரேலியர்களுக்கு வழங்குகிறது.   

ஆனால், அந்த உரிமை அங்கு வசிக்கும் பலஸ்தீனர்களுக்குக் கிடையாது. இதனால், 1948ஆம் ஆண்டு, இஸ்‌ரேலின் உருவாக்கத்தின் பின்னர் பலஸ்தீனியர்கள், இஸ்‌ரேலிடம் இழந்த நிலங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இஸ்‌ரேலியச் சட்டம் அதற்கு அனுமதிக்கவில்லை.  

1967ஆம் ஆண்டு ஜோர்டானிடம் இருந்து கைப்பற்றிய கிழக்கு ஜெரூசலமை, இஸ்‌ரேல் தனது பகுதியாக்கியதோடு, பலஸ்தீனியர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியது. அதன் தொடர்ச்சியே, இப்போது நடக்கின்றது. கிழக்கு ஜெரூசலமில், இஸ்‌ரேலியக் குடியேற்றங்களை அமைத்து, பலஸ்தீனியர்களை அங்கிருந்து அகற்றி, குடிசனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த இஸ்‌ரேல் முனைகிறது.   

இஸ்‌ரேலியர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ‘ஜெருசலேம் தினம்’, கடந்த 10ஆம் திகதி நினைவுகூரப்பட்டது. இது 1967ஆம் ஆண்டு, போரில் ஜோர்டானில் இருந்து கிழக்கு ஜெருசலேம் கைப்பற்றப்பட்டு, இஸ்‌ரேலுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது.   

இந்நாளில், சியோனிஸ்டுகள் பலஸ்தீனியர்களை இழிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். இம்முறையும் அதன் வழித்தடத்தில், வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம், ஜெரூசலேம் நகரின் அரபுக் குடியிருப்புப் பகுதிகளின் ஊடாகத் திட்டமிடப்பட்டது.   

திட்டமிட்ட இந்த ஊர்வலமானது, வன்முறையைத் தூண்டக்கூடும் என்றும் இதன் தாக்கம் மேற்குக் கரையிலும் காசாவிலும் பரவக்கூடும் என்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்திருந்தார்கள். 

இது இஸ்‌ரேலின் அரசியல் உயரடுக்குகளில் விவாதப்பொருளாகியது. இருந்தபோதும், திட்டமிட்டபடி ஊர்வலம் நடக்கும் என பொலிஸ் செய்தித்தொடர்பாளர் அறிவித்தார். ஊர்வலத்தில் ‘அராபியர்களுக்கு மரணம்’ என்ற கோசங்களோடு சியோனிஸ்டுகள், அராபியர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளினூடாக வலம் வந்தார்கள்.   

இதேவேளை, வெள்ளிக்கிழமை (07) முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமாகக் கொள்ளப்படும் அல்-அஸ்கா மசூதிக்குள், சப்பாத்துகளுடன் நுழைந்த இஸ்‌ரேலிய இராணுவத்தினர் அங்கிருந்தோரைத் தாக்கினார்கள். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை (09) இரவு தொழுகைகளுக்குப் பிறகு, பலஸ்தீனியர்கள் கூடுகின்ற டமாஸ்கஸ் வாசலின் அருகே, அங்கு கூடியிருந்த பலஸ்தீனியர்களுக்கு எதிராக, இராணுவத்தினர் வன்முறையில் இறங்கினார்கள். 

பலஸ்தீனர்கள் தினந்தினம் வன்முறைகளுக்கு ஆளாகிவரும் நிலையில், மேற்குலக நாடுகள், தங்கள் மறைமுக ஆதரவை இஸ்‌ரேலுக்கு வழங்குகிறார்கள். அமெரிக்கா, “வன்முறையைத் தணிக்க, இரு தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்” என்று கோருகிறது. ஏனைய மேற்குலக நாடுகளும், இதே தொனியிலேயே பேசுகின்றன. வன்முறையை மேற்கொள்வோரையும் ஆளாகுவோரையும் சமப்படுத்தும் செயலிலேயே, இந்நாடுகளின் அறிக்கைகள் அமைந்திருக்கின்றன.   

இஸ்‌ரேலின் செயல்கள், வேண்டுமென்றே திட்டமிட்டுப் பலஸ்தீனியர்களைக் கோபமூட்டி, வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளாகவே காணப்படுகின்றன. இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைப்பதற்காக, இச்செயல்களைச் செய்கிறார் என, இஸ்‌ரேக்குள் இருக்கும் முற்போக்குச் சக்திகள் குற்றம் சாட்டுகின்றன.   

கடந்த இரண்டாண்டுகளில், இஸ்‌ரேலியப் பாராளுமன்றமான கினசட்டிற்கான தேர்தல், நான்கு முறை நடைபெற்றுள்ளது. நான்கு தடவையும் எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.   

இறுதியாகத் தேர்தல், 2021 மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது. எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், ஜனாதிபதி ஆட்சியமைக்கும் முதல் வாய்ப்பை, அதிகளவான ஆசனங்களைப் பெற்ற பிரதமர் நெத்தன்யாகுவுக்கு வழங்கினார். மே மாதம் நான்காம் திகதிக்குள் அவர் பாராளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனால், இறுதித் திகதிக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.   

இந்நிலையில், ஆட்சியமைக்கும் வாய்ப்பை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் யயிர் லப்பிட்டுக்கு வழங்கியுள்ளார். அவர், அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜூன் இரண்டாம் திகதி வரை, கால அவகாசம் உண்டு.   

லப்பிட்டு ஆட்சி அமைப்பதற்கு, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள பலஸ்தீனியப் பிரதிநிதிகளின் ஆதரவு வேண்டும். லப்பிட்டுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை, ஜனாதிபதி வழங்கியது முதலே, பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.   

திங்கட்கிழமை (10) பாராளுமன்றில் உள்ள பலஸ்தீன உறுப்பினர்களுக்கும் லப்பிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்ற செய்திகள் வரத் தொடங்கிய பின்னணயிலேயே, பலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறைகள் புதிய கட்டத்தை எட்டின. எதிர்வரும் ஜூன் இரண்டாம் திகதிக்குள், லப்பிட் ஆட்சியமைக்காத பட்சத்தில், இன்னொரு தேர்தல் வருவது தவிர்க்க இயலாதது. இன்னொருவர் பிரதமராகுவதை, நெத்தன்யாகு விரும்பவில்லை. எனவே, அதற்கு முட்டுக்கட்டை போட்டு, இன்னொரு தேர்தலுக்கு வழிகோல அவர் விரும்புகிறார்.   

இதற்கிடையில், பலஸ்தீனர்களைத் தூண்டி, அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, அதன் மூலம் கிடைக்கின்ற பெயரைப் பயன்படுத்தி, அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நெத்தன்யாகு நினைக்கிறார். அவருக்குச் சாதகமான திசையிலேயே நிகழ்வுகள் நடக்கின்றன.   

இதேவேளை, பலஸ்தீன அதிகார சபையின் தலைவராக இருக்கின்ற முஹமட் அப்பாஸ், எதிர்வரும் 22ஆம் திகதிக்குத் திட்டமிடப்பட்டிருந்த தேர்தலை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.   

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, பலஸ்தீனத்தில் தேர்தல்கள் நடைபெற இருந்தன. இம்முறை தேர்தலில் அப்பாஸின் பத்தா கட்சி, தோல்வியடைவது உறுதி என்ற நிலையில் இம்முடிவு எட்டப்பட்டது. இத்தேர்தலில், எதிர்க்கட்சியும் காசா பகுதியை ஆட்சிசெய்வதுமான ஹமாஸ் வெற்றிபெறுவது உறுதியாகவுள்ள நிலையில், இம்முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

பலஸ்தீனர்கள் உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவையும் தார்மிக ஒருமைப்பாட்டையும் வேண்டி நிற்கிறார்கள்.   

ஈழத்தமிழரை இஸ்‌ரேலியர்களுடன் அபத்தமாக ஒப்பிடுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். நமது ஒற்றுமைகள், இஸ்‌ரேலியர்களுடனா அல்லது பலஸ்தீனர்களுடனா என்பதை முதலில் முடிவு செய்வோம். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பற்றி-எரியும்-பலஸ்தீனம்-நாமென்ன-செய்வது/91-271848

  • Replies 52
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன 

நிலைமையை... உன்னிப்பாக, அவதானிப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் குடியேறிய முஸ்லிம் அரபிகள் பலஸ்தீனர்களு ஆதரவு என்று சொல்லி மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டில் குடியேறிய முஸ்லிம் அரபிகள் பலஸ்தீனர்களு ஆதரவு என்று சொல்லி மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

2009 இல் புலம் பெயர்ந்த தமிழர் தொல்லை கொடுத்த மாதிரியா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, zuma said:

2009 இல் புலம் பெயர்ந்த தமிழர் தொல்லை கொடுத்த மாதிரியா? 

எங்கே எப்படி தொல்லை கொடுத்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எங்கே எப்படி தொல்லை கொடுத்தார்கள்?

2009 இல் தாங்கள் ஆழ்உறக்க நிலையிலா இருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மிக மோசமான ஒரு இசுலாமிய எதிர்ப்பு மனோநிலை உள்ளது போல படுகிறது ? 

ஈழ உறவுகளுக்கு ஏன் இசுலாமிய சொந்தங்கள் மீது இத்துணை வெறுப்பு?

நாம் தமிழரில் சாகுல் ஹமீது மாமா உட்பட பல முனைப்பான உறுப்பினர்கள் இசுலாமிய சொந்தங்கள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

ஈழ உறவுகளுக்கு ஈழ உறவுகள் தவிர மற்ற எல்லோர் மீதும் வெறுப்புத்தானே? இது தமிழகனுக்கு தெரியாதா?

தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள் தாங்களை தமிழர்கள் என அழைப்பதில் பெருமை கொள்வார்கள். இலங்கையில் அப்படியல்ல. நாங்கள் தைபொங்கல் வாழ்த்து கூறினால், அல்லா கோவித்து கொள்வார் என கூறும் எனும் மதவெறி கூட்டமே உள்ளது. இலங்கை இஸ்லாமியர்கள் இப்பொழுது எவ்வளவோ மாறு விட்டர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எங்கே எப்படி தொல்லை கொடுத்தார்கள்?

பேர்ளினில்  2009 இதே நேரம் மிகப்பெரிய ஆர்பாட்டம் நடத்தது  ..மறத்துவிட்டீர்களா? விசுகுயண்ணை பிரான்ஸ்சிலிருந்து  ஒரு அமைச்சரையும். நாதம்ஸ் யு.கே இருந்து ஒரு அமைச்சரையும்  கோத்தாவுடன்  பேச அனுப்பியிருத்தர்கள்.   ...இன்னும். எழுதலாம். இப்ப நேரமில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நிலைமையை... உன்னிப்பாக, அவதானிப்போம். 

இப்படியே உன்னிப்பாய்  அவதானித்து  எதுவும் மாறப்போவதில்லை...எனவே. ஒரு  சிறு. உண்ணவிரதமாகிலும் இருக்க முயற்ச்சிக்கவும்..அதை அறித்து இஸரேல் போரை நிறுத்துவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு விடுதலை ஏன் தள்ளிப்போனது என்பதற்கு இங்கே எழுதப்பட்ட கருத்துக்களே சாட்சி. 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, zuma said:

2009 இல் தாங்கள் ஆழ்உறக்க நிலையிலா இருந்தீர்கள்?

புலம்பெயர் தமிழர்களின் கண்டன ஊர்வலங்கள் தாம் சார்ந்த நாட்டுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் அந்த நாட்டு காவல்துறைக்கும் எவ்வித இடையூறுகளும்  வராமல் பார்த்துக்கொண்டார்கள்.
இப்படியான நிலை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படவில்லை.

Polizisten halten bei einer pro-palästinensische Demonstration auf dem Marienplatz in Stuttgart eine Person am Boden fest.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழகன் said:

இங்கே மிக மோசமான ஒரு இசுலாமிய எதிர்ப்பு மனோநிலை உள்ளது போல படுகிறது ? 

ஈழ உறவுகளுக்கு ஏன் இசுலாமிய சொந்தங்கள் மீது இத்துணை வெறுப்பு?

நாம் தமிழரில் சாகுல் ஹமீது மாமா உட்பட பல முனைப்பான உறுப்பினர்கள் இசுலாமிய சொந்தங்கள்தான். 

எனக்கு தெரிய ஈழத்தமிழர்கள்  இஸ்லாம் மதத்தவர்க்கு எதிரானவர்கள் இல்லை. அவர்களும் தமிழர்களே. ஈழ விடுதலைப்போராட்டத்தில் அவர்களுக்கும் பங்கு இருக்கின்றது.

முள்ளிவாய்கால் நிகழ்வின் போது சிங்கள மக்களுக்கு நிகராக பால் சோறு பொங்கி கொண்டாடியவர்கள்.. இன்றுவரை அரசியல் நிகழ்வுகளில் தமிழர் சார்பு அறவே இல்லை. தாம் ஒரு தனிச்சமூகம் என நிறுவ முனைப்படுகின்றார்கள். இலங்கை முஸ்லீம்கள் தமிழினம் சம்பந்தப்பட்ட அரசியல் போராட்டங்களுக்கு வரமாட்டார்கள். ஆனால் அரசியல் பேச்சுவார்த்தை என வந்தால் தமக்கும் ஒரு அலகு வேண்டுமென  இரண்டு கதிரை கேட்பார்கள்.

இங்கே ஒரு சிறிய உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்த்தீனியர்கள் தான் ஈழத்து தமிழர்களின் விடுதலைக்கான முன்னோடிகள்.

அவர்களின் போராட்டத்தை அசிங்கப்படுத்துவது அபத்தம்.

தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் சிங்கள மக்களும் இருக்கின்றார்கள்
அதே போல சிங்கள அரசின் அத்துமீறல்களை எதிர்க்கும் சிங்கள மக்களை ஆதரிக்கும் தமிழர்களும் இருக்கின்றார்கள்

போராட்ட வரலாற்றில் எதிரிகள் நண்பர்களாகவும்  நண்பர்கள் எதிரிகளாகவும் மாறும் நிலை இருக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, வாத்தியார் said:

இங்கே பலஸ்தீனியர்களின் போராட்டத்தை அவமானப்படுத்தவில்லை. மாறாக தாம் இருக்கும் நாடுகளின் அரசியல் கோட்புகளுக்கமைய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதே என்னைப்போன்றவர்களின் கருத்து. வன்முறைகளும் காவல் துறையினரை தாக்குவதும்,கல் எறிவதும், தேசிய கொடிகளை எரிப்பதும் கண்டன ஊர்வலம் அல்ல.....

ஜேர்மன் செய்திகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது ஆர்ப்பாட்டத்தில் 100க்கு மேற்ப்பட்ட பொலிசார் காயம் , பொது சொத்துக்கள் சேதம் என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

தாம் இருக்கும் நாடுகளின் அரசியல் கோட்புகளுக்கமைய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதே என்னைப்போன்றவர்களின் கருத்து. வன்முறைகளும் காவல் துறையினரை தாக்குவதும்,கல் எறிவதும், தேசிய கொடிகளை எரிப்பதும் கண்டன ஊர்வலம் அல்ல.....

இஸ்ரேலை  எதிர்த்து யார் போராட்டம் செய்தாலும் அவர்களுக்கான ஆதரவு ஐரோப்பாவில் கிடைக்காது.
அதை முடக்கத்தான் செய்வார்கள்.
தீர்வுத் திட்டம் வைக்காமல் போராட்டங்களை அடக்க முனைந்தால் கல்லும் ஆயுதமாவது தான் வழமை

இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள்  என்று கூறிக்கொண்டு பலரும் இங்கே இனத்துவேசத்தை கட்டவிழ்த்து விடுவது முறையல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

ஈழ உறவுகளுக்கு ஈழ உறவுகள் தவிர மற்ற எல்லோர் மீதும் வெறுப்புத்தானே? இது தமிழகனுக்கு தெரியாதா?

கற்பத்தார்! நீங்கள் நிக்கிற கிணறு இப்பிடி இருக்குமோ? :grin:
எதுக்கும் கெதியாய் வெளியிலை வரப்பாருங்கோ. உலகம் வலு கெதியாய் மாறிக்கொண்டு போகுது.:cool:

Well (கிணறு) | Mapio.net

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை சந்திக்கும் பலஸ்தீன சேதம்.. ஈழத் தமிழ் இனப்படுகொலை சிங்கள அரசை ஆதரித்து நின்றமை.. பலஸ்தீனம் எம் இன விடுதலையின் தார்ப்பரியத்தை புரிந்து கொண்டு ஆரம்ப காலங்களில் சில உதவிகளை செய்ததா.. அல்லது அன்றைய காலத்தேவையை எம்மவர்கள் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டனரா என்பதுவே.. பலஸ்தீனத்தின் இரட்டை நிலைப்பாட்டை நோக்குகையில் கேட்கத்தோன்றுகிறது.

எமது தேச விடுதலையை.. எமது தேச இனப்படுகொலையை மிக முக்கியமாக இனப்படுகொலை சிங்கள அரசுக்கு ஆதரவாக நின்று ஆதரிக்கும் நாடுகளில்.. பலஸ்தீனம்.. கியூபா.. வெனிசுலா போன்ற ஏகாதபத்தியத்திற்கு எதிரான புரட்சி நாடுகள் என்ற பொய் தோற்றம் காட்டிய நாடுகளே... அதிகம் செய்கின்றன.

இஸ்ரேல்.. வெளிப்படையாக செய்ததை.. பலஸ்தீனம் மறைமுகமாக செய்துள்ளது. 

இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.. ஏனெனில்.. எம் சாவுகளும் இதே தரப்புக்களால் வேடிக்கை தான் பார்க்கப்பட்டன. புரிந்து கொள்ளப்படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஈழத்தமிழரை இஸ்‌ரேலியர்களுடன் அபத்தமாக ஒப்பிடுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். நமது ஒற்றுமைகள், இஸ்‌ரேலியர்களுடனா அல்லது பலஸ்தீனர்களுடனா என்பதை முதலில் முடிவு செய்வோம். 

இரண்டு தேசங்களுமே ஈழதமிழரின் ஆயுதபோராட்டம் அழித்தொழிக்கப்பட்டபோது இலங்கை அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தன.

பிரேமதாஸ காலத்தில் யாசீர் அரபாத் இலங்கை வந்து குலாவினார் அவருக்கு டக்ளஸ் தேவானந்தாவைவேறு பிரேமதாஸ உங்கள் நாட்டில் பயிற்சி எடுத்தவர் என்று அறிமுகம் செய்து வைத்ததாகவும், அப்படி இருக்க வாய்ப்பில்லையென்று அரபாத் மறுத்ததாகவும் ஒரு கதை ஊடகங்களில் உலாவியது.

ஒருகால கட்டத்தில் (இஸ்ரேலிய) அரச பயங்கர வாதத்தால் ஒடுக்கப்படும் மக்களின் உரிமை போராட்டத்துக்கு உதாரணமாக அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் பாலஸ்தீனத்தை உதாரணம் காட்டியதுண்டு,

அவர்களின் போராட்டத்துக்கு மானசீக ஆதரவு வழங்கியதும் உண்டு.அவர்களின் வாழ்வுக்கான போராட்டத்தை நியாயபடுத்தியதுண்டு அவர்களின் குருதி தோய்ந்த போராட்டத்தை போற்றி புகழ்ந்ததுண்டு.

அதே பாலஸ்தீனம் ஒடுக்கப்பட்ட எமது மக்களின் போராட்டம் அழித்தொழிக்கப்பட்டபோது இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு தனது வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தது.

கட்டுரையாளரின் பெயர் ஒரு சிங்களர்போலவே தோற்றமளிக்கிறது, எதுவானாலும்...

இஸ்ரேலியர்களுடன் ஈழதமிழர்களை அபத்தமாக ஒப்பிடுகிறோம் என்று எமக்காக கவலை படுகிறார் ..

இஸ்ரேலியர்களுடன் ஈழதமிழர்களை ஒப்பிட்டதுக்கு காரணம் நாசிகளால் ஏறக்குறைய அழிவின் விளிம்பிற்கு சென்ற நிலையிலும் அவர்களைபோல் தன்னம்பிக்கையுடன் மீண்டு எழும் தைரியமுள்ளவர்கள் என்பதற்காகதான்.

இஸ்ரேலியர்களின் முயற்சியை ,எத்தனை அழிவுகள் வந்தாலும் விழ விழ எழும் தைரியத்தையும் அவர்கள் தன்னம்பிக்கையையும்தான் ஈழ தமிழர்கள் உதாரணமாக கொண்டார்களேயொழிய ,

தனக்கு சொந்தமில்லாத ஒரு நிலத்தின் மக்களை தனது ராணுவ வல்லமையை பயன்படுத்தி அழித்து ஒழிக்கும் இஸ்ரேலின் ராணுவ கொள்கையை உதாரணமாக கொண்டவர்கள் இல்லை.

பல தசாப்தகால ஈழபோரின்போது புலம்பெயர்வாழ்மக்கள் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கா வண்ணம் மிக அமைதியாகவும், கண்ணியமாகவும்தான் தமது இனத்துக்கான ஆதரவையும் இலங்கை அரசுக்கெதிரான எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

இறுதிபோரின் கடைசி நாட்களின்போது மட்டுமே கனடா பெல்ஜியம் போன்ற நாடுகளின் தீகுளிப்பு நெடுஞ்சாலைகள் மறிப்பு போன்ற ஒரு சில அசாதாரண செயல்களில் ஈடுபட்டனர், அதற்கு முன்பும் அதற்கு பின்னும் புலம் பெயர் நாடுகளின் இயல்பு வாழ்க்கையை உடைக்கும் விதத்தில் நடந்து கொண்டதாய் நான் அறிந்ததில்லை.

ஆனால் இஸ்லாமிய சமுதாயம் புலம்பெயர்நாடுகளின் நடத்தும் போராட்டங்கள் எண்ணற்றமுறை வன்முறையில் முடிந்திருக்கிறது.

அப்பாவி பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் அழித்தொழிப்பு கண்டனத்துக்குரியதுதான், ஆனால் அதன் பின்னால் இருக்கும் உலகையே இஸ்லாம்தான் ஆளவேண்டும் என்று பெரும் சதிவலையுடன் காத்துகிடக்கும் நாடுகள், சக்திகள், பயங்கரவாத இயக்கங்கள்மீதான இஸ்ரேலின் அழித்தொழிப்புக்கு எப்போதும் எனது ஆதரவு பதிவு செய்யப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, வாத்தியார் said:

இஸ்ரேலை  எதிர்த்து யார் போராட்டம் செய்தாலும் அவர்களுக்கான ஆதரவு ஐரோப்பாவில் கிடைக்காது.

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிரான அரச சார்பு கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றது.
பலஸ்தீன விடயத்தில் ஜேர்மனிய அரசு நிறையவே நல்லது செய்து வருகின்றது. அதாவது தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியில்.... 

அன்று செய்த தவறுக்காக பல இடங்களில் ஜேர்மனி வாயை பொத்திக்கொண்டிருக்க வேண்டிய நிலை.

8 minutes ago, வாத்தியார் said:

இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள்  என்று கூறிக்கொண்டு பலரும் இங்கே இனத்துவேசத்தை கட்டவிழ்த்து விடுவது முறையல்ல

 நான் எனது உரிமையை கேட்கும் போது அதை எப்படி இனவாதமாக பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

2009 இல் புலம் பெயர்ந்த தமிழர் தொல்லை கொடுத்த மாதிரியா? 

மிகப் பெரும்பாலான ஈழத் தமிழர் விடுதலைப் புலிகளின் நேர்மையையும் ஒழுக்கத்தையும் தியாகத்தையும் போற்றுவதே..

 மாற்றுக் குழுக்கள் ஒட்டுமொத்த ஈழத் தமிழரையும் விடுதலைப் புலிகளையும் மிக வன்மத்துடன் எதிர்ப்பதற்குக் காரணமாகும். 

☹️

2 hours ago, கற்பகதரு said:

ஈழ உறவுகளுக்கு ஈழ உறவுகள் தவிர மற்ற எல்லோர் மீதும் வெறுப்புத்தானே? இது தமிழகனுக்கு தெரியாதா?

அதெப்படி ஈழத் தமிழருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் உங்களுக்குத் தெரிய வந்தது..?

😏

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

தமிழர்களுக்கு விடுதலை ஏன் தள்ளிப்போனது என்பதற்கு இங்கே எழுதப்பட்ட கருத்துக்களே சாட்சி. 😡

விசுகுயண்ணை நீங்கள் எப்படித்தான் கருத்தை வையுங்கள் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.   1972 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து ...சிறுபான்மையினருக்கு ஆதரவாயிருந்த ஒரே சட்டவிதியை ...சோல்பரி..29..மாற்றும்போது  தமிழ்தலைமைகள் ஒன்றும் செய்யவில்லை. இப்போ என்ன செய்ய முடியும் ?அன்றுயுள்ள  எண்ணிக்கையில் தான் இன்றும் தமிழ்ப்பிரதிநிதிகள் ...(எமபிகள்).  சிங்களவர் அன்றுள்ளதைவிட்இனறு மூன்று மடங்கு அதிகம். (எம்பிகள்)

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

கற்பத்தார்! நீங்கள் நிக்கிற கிணறு இப்பிடி இருக்குமோ? :grin:
எதுக்கும் கெதியாய் வெளியிலை வரப்பாருங்கோ. உலகம் வலு கெதியாய் மாறிக்கொண்டு போகுது.:cool:

Well (கிணறு) | Mapio.net

ஐயா,

எப்படி படங்களை இணைப்பதென்ற பரகசியத்தை எனக்கொருக்காச் சொல்லித் தருவியளா..? 

😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

இரண்டு தேசங்களுமே ஈழதமிழரின் ஆயுதபோராட்டம் அழித்தொழிக்கப்பட்டபோது இலங்கை அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தன.

பிரேமதாஸ காலத்தில் யாசீர் அரபாத் இலங்கை வந்து குலாவினார் அவருக்கு டக்ளஸ் தேவானந்தாவைவேறு பிரேமதாஸ உங்கள் நாட்டில் பயிற்சி எடுத்தவர் என்று அறிமுகம் செய்து வைத்ததாகவும், அப்படி இருக்க வாய்ப்பில்லையென்று அரபாத் மறுத்ததாகவும் ஒரு கதை ஊடகங்களில் உலாவியது.

ஒருகால கட்டத்தில் (இஸ்ரேலிய) அரச பயங்கர வாதத்தால் ஒடுக்கப்படும் மக்களின் உரிமை போராட்டத்துக்கு உதாரணமாக அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் பாலஸ்தீனத்தை உதாரணம் காட்டியதுண்டு,

அவர்களின் போராட்டத்துக்கு மானசீக ஆதரவு வழங்கியதும் உண்டு.அவர்களின் வாழ்வுக்கான போராட்டத்தை நியாயபடுத்தியதுண்டு அவர்களின் குருதி தோய்ந்த போராட்டத்தை போற்றி புகழ்ந்ததுண்டு.

அதே பாலஸ்தீனம் ஒடுக்கப்பட்ட எமது மக்களின் போராட்டம் அழித்தொழிக்கப்பட்டபோது இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு தனது வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தது.

கட்டுரையாளரின் பெயர் ஒரு சிங்களர்போலவே தோற்றமளிக்கிறது, எதுவானாலும்...

இஸ்ரேலியர்களுடன் ஈழதமிழர்களை அபத்தமாக ஒப்பிடுகிறோம் என்று எமக்காக கவலை படுகிறார் ..

இஸ்ரேலியர்களுடன் ஈழதமிழர்களை ஒப்பிட்டதுக்கு காரணம் நாசிகளால் ஏறக்குறைய அழிவின் விளிம்பிற்கு சென்ற நிலையிலும் அவர்களைபோல் தன்னம்பிக்கையுடன் மீண்டு எழும் தைரியமுள்ளவர்கள் என்பதற்காகதான்.

இஸ்ரேலியர்களின் முயற்சியை ,எத்தனை அழிவுகள் வந்தாலும் விழ விழ எழும் தைரியத்தையும் அவர்கள் தன்னம்பிக்கையையும்தான் ஈழ தமிழர்கள் உதாரணமாக கொண்டார்களேயொழிய ,

தனக்கு சொந்தமில்லாத ஒரு நிலத்தின் மக்களை தனது ராணுவ வல்லமையை பயன்படுத்தி அழித்து ஒழிக்கும் இஸ்ரேலின் ராணுவ கொள்கையை உதாரணமாக கொண்டவர்கள் இல்லை.

பல தசாப்தகால ஈழபோரின்போது புலம்பெயர்வாழ்மக்கள் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கா வண்ணம் மிக அமைதியாகவும், கண்ணியமாகவும்தான் தமது இனத்துக்கான ஆதரவையும் இலங்கை அரசுக்கெதிரான எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

இறுதிபோரின் கடைசி நாட்களின்போது மட்டுமே கனடா பெல்ஜியம் போன்ற நாடுகளின் தீகுளிப்பு நெடுஞ்சாலைகள் மறிப்பு போன்ற ஒரு சில அசாதாரண செயல்களில் ஈடுபட்டனர், அதற்கு முன்பும் அதற்கு பின்னும் புலம் பெயர் நாடுகளின் இயல்பு வாழ்க்கையை உடைக்கும் விதத்தில் நடந்து கொண்டதாய் நான் அறிந்ததில்லை.

ஆனால் இஸ்லாமிய சமுதாயம் புலம்பெயர்நாடுகளின் நடத்தும் போராட்டங்கள் எண்ணற்றமுறை வன்முறையில் முடிந்திருக்கிறது.

அப்பாவி பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் அழித்தொழிப்பு கண்டனத்துக்குரியதுதான், ஆனால் அதன் பின்னால் இருக்கும் உலகையே இஸ்லாம்தான் ஆளவேண்டும் என்று பெரும் சதிவலையுடன் காத்துகிடக்கும் நாடுகள், சக்திகள், பயங்கரவாத இயக்கங்கள்மீதான இஸ்ரேலின் அழித்தொழிப்புக்கு எப்போதும் எனது ஆதரவு பதிவு செய்யப்படும்.

சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியாக இருந்த போதே சிறீலங்காவிற்கு வந்தார்

டக்கிளஸை  அவ்வாறு அறிமுகப்படுத்தியதும் உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.