Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இதை வேறு இடத்தில் விவாதிக்கலாம். ஜனரஞ்சமாக வணிக நோக்கத்திற்காக எழுதுவதையும், நவீன இலக்கியத்தையும் ஒன்றாக குழப்பிக்கொள்கின்றீர்கள். இது தங்க நகையையும் கில்ட் நகையையும் ஒன்று என்று சொல்வது போலத்தான்.

ஒருவர் பொழுதுபோக்குக்காக எழுதுகின்றார். ஒருவர் பெருமை, புகழுக்காக எழுதுகின்றார், ஒருவர் பிரச்சாரத்துக்காக எழுதுகின்றார், ஒருவர் எழுதுவதை தொழிலாக செய்கின்றார். எல்லாரும் ஒரு காரணத்துக்காக எழுதுகின்றர்கள். ஒரு ஊடக சாதனத்தை இன்னொன்றுடன் ஒப்பிடுவதும் கடினம். 

நேரம், வசதி, வாய்ப்பு எல்லாம் கிடைத்தால் எல்லாரும் நவீன இலக்கியத்தில் மினக்கடலாம். எழுதலாம் வாசிக்கலாம். இந்த நவீன உலகில் மக்களை படைப்புக்கள் சென்றடைவதில் சினிமாவுக்குள்ள வீரியம் அபரிமிதமானது. 

ஒரு சிறியகூட்டம் தாங்கள் கல்விமான்கள், அதிகம் படித்தவர்கள், தமக்கு தெரிந்ததே இலக்கியம், தாம் கூறுவதே இலக்கியம் என்று நிறுவிக்கொண்டு போவார்கள். ஆனால், இவர்கள் பெருன்பான்மை மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெறமுடியாவிட்டால்.. இவர்கள் மொழி சாதாரண மக்களுக்கு புரியாவிட்டால் சுய இன்பம் காண்பது தவிர வேறு அதிகம் என்ன செய்யமுடியும் என தெரியவில்லை.

Edited by நியாயத்தை கதைப்போம்

  • Replies 180
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, shanthy said:

தமிழ் ஈழக்காற்றே பாடல் தான் தமிழினத்தின் ஒட்டுமொத்த துயரையும் சொல்லுதாம் என வைரமுத்துவுக்கு பலரும் குடை பிடிக்கினம். 

ஆனால் எங்கள் கலைஞர்கள் எங்கள் துயரை எத்தனையோ வடிவில் பாடி எழுதிய எதையும் ஈழக்காற்றே பாடலுக்கு பிடில் வாசிப்போர் திரும்பியும் பார்ப்பதில்லை. 

வைரமுத்துவுக்கு சண் குழுமம் கொடுக்கும் விளம்பரம் தான் பலரையும் கவர்கிறது. 

வைரமுத்து பாட்டை கேட்க ஏதோ நல்லா இருந்தது அவ்வளவுதான்... இணைத்த நுணாவுக்கு ஒரு பச்சை அவ்வளவு தான் என்னுடைய குடை பிடிப்பு :)
மற்றப்படி எங்களுடைய போராட்ட உணர்வை, தியாகத்தை வைரமுத்து போன்றவர்களால் முற்று முழுதாக உணர்ந்து காவியம் படைக்கலாம்  என்ற எதிர்பார்ப்பும் அற்றது. 

"ஆனால் எங்கள் கலைஞர்கள் எங்கள் துயரை எத்தனையோ வடிவில் பாடி எழுதிய எதையும் ஈழக்காற்றே பாடலுக்கு பிடில் வாசிப்போர் திரும்பியும் பார்ப்பதில்லை. "  ~~ இந்த வட்டத்துக்குள்  நான் அடங்க மாட்டேன்.

 அமரர் புதுவை அய்யாவின் கவிதை வரி படிக்க கண்ணில் நீர் சொட்டும்... அப்போதும் , இப்போதும், எப்போதும்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

கஞ்சல் திரியென்றால் இதற்குள் ஏன் மூக்கை நுழைத்தீர்கள்?

மீண்டுமொரு முறை சொல்கிறேன். வைரமுத்துவிற்கு இங்கு வெள்ளையடிக்கவில்லை. மாறாக பார்ப்பனிய ஆதிக்கவெறிக்கு மட்டுமே அரிவாள் எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சல் திரிக்குள் நான் மூக்கை நுழைக்க காரணம் - நான் கண்ணியாவன் இல்லை🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

கஞ்சல் திரிக்குள் நான் மூக்கை நுழைக்க காரணம் - நான் கண்ணியாவன் இல்லை🤣.

தெரியும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

என் மீது ஒரு பெண் பொதுவெளியில் பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்.. 

என்னை வைத்து செஞ்சுவிட்டார் பப்ளிக்கில்.. குடும்பம் பிள்ளைக்குட்டி என்று யாரும் வெளியில் தலைகாட்டமுடியாத அளவுக்கு அசிங்கப்பட்டு கூனிக் குறுகி விட்டேன்...

மனைவி அவமானத்தில் நஞ்சருந்தி இறந்துவிட்டார்...

இப்போழுது நான் உண்மைக்குற்றவாளி அஎனில் இந்த தண்டனைகளுடன் வாழ்கிறேன் எனக்கு கிடைத்த தண்டனை சரியானதே என்றுவிடலாம்...

இப்பொழுது நான் நிரபராதி எனுமிடத்து எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு என்ன தீர்வை இந்த மீரூ ஆதரிப்போர் முன்வைத்து விட்டு எந்த ஆதாரமும் இல்லாத இடத்தும் உறுதியாக தம் கருத்தில் நிற்கிறார்கள்..? விடை பூச்சியம்...

தவறாக பாதிக்கப்படும் ஆணுக்கு நிகழ்ந்த அநியாயங்களுக்கு என்ன தீர்வு என்பதில் தெளிவு இல்லாதவரை இப்படியான விடயங்கள் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை ஒருபோதும் பெறமுடியாது...

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனபதுதான் நீதிமன்றங்களின் அடிநாதம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பகுத்தறிவு உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த பதிவு...
வைரமுத்து மீது சின்மயி 3 ஆண்டுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டு வைத்தார்..
அதற்கு பின்னால் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பெண்களுக்கு பல முறை பல நேரங்களில் பாலியல் தொந்தரவுகள் நடந்திருக்கிறது..
இடை நிலை ஜாதிக்காரர்களின் பள்ளியிலும் பாலியல் புகார் வந்திருக்கிறது..
மிக முக்கியமாக பொள்ளாச்சி கொடூரம் நடந்திருக்கிறது...
அப்போதெல்லாம் அமைதி காத்த சின்மயி PSBB பள்ளி பிரச்சனையை திமுக தலைவர் கனிமொழி பேசியதுமே " எனக்கு வைரமுத்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரே அதை பேசுனீர்களா " என்கிறார்..
தொடர்ச்சியாக வைரமுத்துவை பற்றியே பேசுகிறார்..
PSBB பள்ளி நிர்வாகத்தின் மீது தீவிரமாக எதிர்ப்பு வருவதை சின்மயி வைரமுத்து மீது திசை திருப்புகிறார்...
இதை ஏன் சொல்றேன்னா...
மேலே சொன்னது போல கடந்த 3 ஆண்டுகளில் வைரமுத்து பற்றி வாய்திறக்கவே இல்லை PSBB விவகாரம் வரும் போது மட்டுமே அதை பேசுகிறார்..
அடுத்ததாக
கேரளாவில் வைரமுத்துவிற்கு விருது அறிவிக்கிறார்கள் அங்கிருக்கும் நடிகையான பார்வதி அதை எதிர்க்கிறார் - நம்மவர்களும் அதை எதிர்த்தார்கள் PSBB விவகாரத்தின் வீரியம் குறைந்து வைரமுத்து பேசும் விசயமாக்கப்படுகிறார்..
உங்களுக்கு நினைவிருக்கிறதா..
நடிகை சுசித்ரா சுசீலீக்சில் நடிகர் தனுஷ் அனிருத் குறித்து பாலியல் செய்திகளை வெளியிட்டார்..
அதாவது போதையில் நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக
அதே போல அனிருத்தின் புகை படங்களே வெளியாகின..
இவையெல்லாம் பெரிதாக பேசபடவில்லை..
இவையெல்லாம் நடந்த பின் தான் நடிகர் தனுசுக்கும் - அனிருத்துக்கும் பல விருதுகள் வழங்கப்பட்டன
பார்வதி போன்ற நடிகைகள் வைரமுத்துவை எதிர்ப்பது போல தனுஷையோ அனிருத்தையோ எதிர்க்கவில்லை..
ஆதாரங்களோடு பாலியல் குற்றச்சாட்டுள்ள நடிகர்களுக்கு எதற்காக தேசிய விருது கொடுக்குறீங்க என்று யாருமே பேசவில்லை..
வைரமுத்து மீது பல பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள் பொது வெளியில் அதை மதிக்க வேண்டும் புகார் அளிக்கப்பட்டால் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கட்டும் அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை
ஆனால் பார்ப்பனர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது மட்டுமே சின்மயி வைரமுத்து பிரச்சனையை திரும்ப திரும்ப பேசுகிறார்... பார்ப்பனர்கள் மீதான வலுவான குற்றச்சாட்டுகளை மக்கள் மனதிலிருந்து மலுங்கடிக்க செய்கிறார்....
இப்போது காயத்ரி விஷால் மீது
கருப்பர் கூட்டம் பிரச்சனையின் வீரியத்தையும் - அண்ணன் திருமா பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்கிற பிரச்சனையையும் அதன் வீரியம் குறையாமல் தேர்தல் வரை பார்த்து கொண்டார்கள்..
ஒரு வாரம் கூட இந்த PSBB பிரச்சனையை நம்மால் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை ..
பார்ப்பன நுண்ணரசியலை பொறுமையாக கவனித்து பாருங்கள்... பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம்..
எழுத்து மணி அமுதன் ம.ப
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இதைத் தான் வேறு விதமாக எழுதினேன்!

என்னை யாழ் களம் தமிழ்த் தேசீய குழுமத்தில் இணைத்து விட்டார்கள்!

மிகவும் பெருமையாக இருக்கின்றது...!  இடைக்கிடை புல்லரிப்பும் ஏற்படுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

நீங்கள் அருணகிரிநாதருக்கும் அடிவாங்கி குடுக்க முடிவெடுத்திட்டியள்.😊 அருணகிரிநாதா உனக்கும் சோதனைக்காலம்.😷

நல்லவர்களைத்தான் கடவுள் அதிகமாகச் சோதனை செய்வார் என்று, அரிவரியிலேயே சொல்லிக்கொடுத்து என்னை வளர்த்துவிட்டார்களே சாந்தியம்மா...! அது தவறா....! 🥴 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:
இடை நிலை ஜாதிக்காரர்களின் பள்ளியிலும் பாலியல் புகார் வந்திருக்கிறது..
மிக முக்கியமாக பொள்ளாச்சி கொடூரம் நடந்திருக்கிறது...
அப்போதெல்லாம் அமைதி காத்த சின்மயி PSBB பள்ளி பிரச்சனையை திமுக தலைவர் கனிமொழி பேசியதுமே " எனக்கு வைரமுத்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரே அதை பேசுனீர்களா " என்கிறார்..
தொடர்ச்சியாக வைரமுத்துவை பற்றியே பேசுகிறார்..

ஏன் தனக்கு பாலியல் துன்பம்  கொடுத்த வைரமுத்து மீது சின்மயி வழக்கு தொடுக்க கூடாது?

தனக்கு பாலியல் துன்பம்  கொடுத்த வைரமுத்துவை தனது திருமணத்திற்கு அழைத்து அவர் காலில் மகிழ்சியாக விழுந்து கும்பிட எப்படி முடிந்தது.?
சின்மயி ஒரு அபலை பெண் அவர் சொல்வதை எல்லாம் ஆதரிக்க வேண்டும் என்ற போக்கே இங்கு காணபடுகிறது 😟

2 hours ago, Paanch said:

நல்லவர்களைத்தான் கடவுள் அதிகமாகச் சோதனை செய்வார் என்று, அரிவரியிலேயே சொல்லிக்கொடுத்து என்னை வளர்த்துவிட்டார்களே சாந்தியம்மா...! அது தவறா....! 🥴 

பாஞ்ச், அப்படி அரிவரியில் சொல்லி வளர்க்கப்பட்டதன் காரணம் உங்களுக்கு கஷ்ரம் வரும் போது உங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்ட வேறு வழி தெரியாததால் உங்களுக்கு ஆறுதல் சொல்ல அவர்களுக்கு தெரிந்த வழி அது.  அதை உங்களுக்கு சொன்னது அரிவரியில்.  ஆனால் இப்போது நீங்கள் வளர்ந்து maturity அடைந்த gentleman. 

உலக சனத்தைகையின் 7 பில்லியன் மக்களில் நல்லவரை மட்டும் கண்டு பிடித்து அவர்களுக்கு சோதனை நடத்தி பாஸாக்கி, பெயிலாக்க ஒரு examination department ம் இல்லை. அப்படி செய்ய நேரத்தையும் சக்தியையும் செலவு செய்யும் முட்டாள்தனம் இருக்க முடியாது. 😂 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2021 at 18:43, shanthy said:

ஆதரவாளர் அனுதாபிகள் எனும் பெயரில் பெறுமதி இல்லாத விடயங்களை காவித்திரிவதால் விமர்சனங்கள் நின்று விடப்போவதில்லை. 

புரியவில்லை ! எமது போராட்டம், போராளிகள், மாவீரர்களின் அர்ப்பணிப்பு எல்லாம் பெறுமதியில்லாத விடயங்களாகிவிட்டதா இப்போது??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

புரியவில்லை ! எமது போராட்டம், போராளிகள், மாவீரர்களின் அர்ப்பணிப்பு எல்லாம் பெறுமதியில்லாத விடயங்களாகிவிட்டதா இப்போது??

புரியவில்லையே....! 🤔 மாவீரரை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது. 🤨

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

புரியவில்லை ! எமது போராட்டம், போராளிகள், மாவீரர்களின் அர்ப்பணிப்பு எல்லாம் பெறுமதியில்லாத விடயங்களாகிவிட்டதா இப்போது??

உங்கள் புரிதல் தவறு. நான் மாவீரர் போராளிகள் போராட்டம் பற்றி எதுவும் கூறவில்லை. முழுமையான கருத்தை வாசியுங்கள். 

29 minutes ago, Paanch said:

புரியவில்லையே....! 🤔 மாவீரரை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது. 🤨

கருத்துக்களை முழுவதும் வாசியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியத்தினை, இலக்கிய வாதிகளை, அரசியலுடன் கலந்து குழப்பாமல், அப்படியே மட்டுமே பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து அவர்கள் வாயால் வடை சுடுவதில் வல்லவர் என்பது யாம் அறிந்ததே( அது அவருடைய தொழிலும் கூட ). சிம்மயி ஒரு படிதாண்ட பத்தினியுமில்லை, வைரமுத்து அவர்கள் ஏகபத்தினி விதரனுமில்லை என்பது உலகறிந்ததே.இங்கு சிலபேர் கிளிப்பிள்ளை போல், எல்லாத்  திரிகளிலும் ஏன் சிம்மயி வழக்கு தொடரவில்லை என திரும்ப திரும்ப ஒப்பிவிக்கின்றார்கள். நான் மற்றைய திரிகளில் சொன்னது போல், ஏன் வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?. சிம்மயி ஒரு பாலியல் தொழிலாளியாய்  இருந்து, அவருடைய விருப்பின்றி வைரமுத்து அவர்கள்  அவரை படுக்கை அறைக்கு அழைத்திருந்தால் அது குற்றமே. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது தமிழர் வாழ்வியல் நெறியாகும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

தமிழ் இலக்கியத்தினை, இலக்கிய வாதிகளை, அரசியலுடன் கலந்து குழப்பாமல், அப்படியே மட்டுமே பார்ப்போம்.

அவர்களும் அரசியல் பேசாமல், அரசியல்வாதிகளை தமிழின தலைவர் என. வெள்ளையடிக்காமல் இருந்தால் - செய்யலாம்.

தவிரவும் இது விளையாட்டு வேறு அரசியல் வேறு என இலங்கை கிரிகெட் அணிக்கு கொடி தூக்குபவர்கள் சொல்வது போன்ற சால்ஜாப்பு. 

அரசியல் கலக்காத இலக்கியம் இல்லை. இலக்கியவாதியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

அவர்களும் அரசியல் பேசாமல், அரசியல்வாதிகளை தமிழின தலைவர் என. வெள்ளையடிக்காமல் இருந்தால் - செய்யலாம்.

தவிரவும் இது விளையாட்டு வேறு அரசியல் வேறு என இலங்கை கிரிகெட் அணிக்கு கொடி தூக்குபவர்கள் சொல்வது போன்ற சால்ஜாப்பு. 

அரசியல் கலக்காத இலக்கியம் இல்லை. இலக்கியவாதியும் இல்லை.

சின்மயி பின்னால் பிஜேபி. வைரமுத்து பின்னால் திமுக.

நமக்கு அதுவும் வேண்டாம், இதுவும் வேண்டாம். என்ன பிரச்சனை?

முத்தர் கேட்டார் என்று வைத்துக்கொள்வோம். கொடுத்தார் சின்மயி, சான்ஸ் கிடைத்தது, பணம் வந்தது.

இப்போது அதுகுறித்து நினைக்கையில் கோபம் வருகிறது. தெரிந்து தானே போனார்?

அவர்களுக்கு, கட்டில் பொழுது போக்கு.. அதுக்கு, நாம்... வேலை மினக்கெட்டு.... முட்டி, மோத தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

வைரமுத்துவை நாம் எதிர்கவோ, ஆதரிக்கவோ தேவையில்லை.

எவர் பின் எவர் நிண்டால் எமக்கென்ன ?

நான் சொல்லும் வரைமுத்துவின் அரசியல் கீழே.

வைரமுத்து 2009 எம் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார்?

அதற்கு இன்றுவரை மன்னிப்பு கேட்டாரா?

கருணாநிதி 2009 செய்தது துரோகம் என ஒத்து கொண்டாரா?

இல்லை. மாறாக தொடர்ந்தும் கருணாநிதியை வெள்ளை அடிக்கும் அரசியல் செய்கிறார்.

இவருக்கு என்ன ஆனால் எமக்கென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

உங்கள் புரிதல் தவறு. நான் மாவீரர் போராளிகள் போராட்டம் பற்றி எதுவும் கூறவில்லை. முழுமையான கருத்தை வாசியுங்கள். 

"விடுதலைப் புலிகள் பற்றி விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதப்படும் எழுத்துகளோடு மல்லுக்கட்ட தயாராக உள்ளவர்கள் எத்தனை பேர் விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களை வாசிக்கிறார்கள் மற்றவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்?

ஆதரவாளர் அனுதாபிகள் எனும் பெயரில் பெறுமதி இல்லாத விடயங்களை காவித்திரிவதால் விமர்சனங்கள் நின்று விடப்போவதில்லை. "

நன்றாக வாசித்துவிட்டுத்தான் கருத்து எழுதப்பட்டுள்ளது!!

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

வைரமுத்துவை நாம் எதிர்கவோ, ஆதரிக்கவோ தேவையில்லை.

எவர் பின் எவர் நிண்டால் எமக்கென்ன ?

நான் சொல்லும் வரைமுத்துவின் அரசியல் கீழே.

வைரமுத்து 2009 எம் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார்?

அதற்கு இன்றுவரை மன்னிப்பு கேட்டாரா?

கருணாநிதி 2009 செய்தது துரோகம் என ஒத்து கொண்டாரா?

இல்லை. மாறாக தொடர்ந்தும் கருணாநிதியை வெள்ளை அடிக்கும் அரசியல் செய்கிறார்.

இவருக்கு என்ன ஆனால் எமக்கென்ன?

நீங்க எப்ப சீமானின் தம்பியாய்  மாறினீர்கள் ?🤣

பார்த்து இங்கு திமுகா எதிர்ப்பு அரசியல் செய்தால் பிடிக்காது முதுகிலே செம்புள்ளி குத்தி அனுப்பி விடுவார்கள் .

இந்த திரி குழுவாதத்துக்கு உதாரணமானது . 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

நீங்க எப்ப சீமானின் தம்பியாய்  மாறினீர்கள் ?🤣

பார்த்து இங்கு திமுகா எதிர்ப்பு அரசியல் செய்தால் பிடிக்காது முதுகிலே செம்புள்ளி குத்தி அனுப்பி விடுவார்கள் .

இந்த திரி குழுவாதத்துக்கு உதாரணமானது . 

செந்தமிழன் சீமானின், நாம் தமிழர் கட்சியில்... புதிதாக இணைந்து கொண்ட,

கோசான் அவர்களை... வருக, வருக என இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம். 🙏🏽

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

நீங்க எப்ப சீமானின் தம்பியாய்  மாறினீர்கள் ?🤣

பார்த்து இங்கு திமுகா எதிர்ப்பு அரசியல் செய்தால் பிடிக்காது முதுகிலே செம்புள்ளி குத்தி அனுப்பி விடுவார்கள் .

இந்த திரி குழுவாதத்துக்கு உதாரணமானது . 

22 minutes ago, தமிழ் சிறி said:

செந்தமிழன் சீமானின், நாம் தமிழர் கட்சியில்... புதிதாக இணைந்து கொண்ட,

கோசான் அவர்களை... வருக, வருக என இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம். 🙏🏽

சீமானின் ஆயுட்கால சந்தாதாரருக்கு வணக்கம் 🤣.

எனக்கு பேகர் பிடிக்கும். நல்ல இறச்சியை நாமே வாங்கி, கழுவி, அளவான உப்பு காரம் சேர்த்து எண்ணையில் இடாமல் வாட்டி, அதை பாண் துண்டுகளுக்கு மத்தியில் இலைகுலையோடு, சாப்பிடுவதை போல சிறந்த உணவு இல்லை.

எனக்கு மக்டொல்ண்ட் பேகரை பிடிக்காது. அது பேகர் என்ற பெயரில் உள்ள குப்பை.  சொல்லப்போனால் ஸ்லோ பாய்சன்.

நான் ஒரு போதும் திமுக ஆதரவு அரசியலும் செய்யவில்லை, எதிப்பரசியலும் செய்யவில்லை. ஆனல் திமுக வின் அரசியலை - அது தனக்கானதே அன்றி எமக்கானதல்ல என்ற புரிதல் எனக்கு எப்போதும் உண்டு.

அதே போல் கருணாநிதி மீதான விமர்சனப்பார்வையிலும் ஒரு மாற்றமுமில்லை.

அதற்காக பொது வெளியில் அவர்களை சீண்டி கோடிக்கணக்கான திமுக அனுதாபிகளை எமது எதிரிகளாக்கும் மடைத்தனமும் என்னிடம் இல்லை.

அதே நிலைப்பாடுதான் இப்போதும்.

நாம் எதிர்த்தோ ஆதரித்தோ மினெகெடும் அளவுக்கு எமது இனத்துக்கு வேண்டபட்டவரல்ல வைமு.

👆🏼இந்த நிலைபாடு குழுநிலை வாதமல்ல.

ஆதரவு, எதிர்ப்பு என்பதுதான் இங்கே குழுக்கள்.

இந்தாள் எல்லாம் எமக்கு யார்? இதில் நாம் ஏன் மினகெடவேண்டும்? என்ற மூன்றாம் நிலையே என் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இவருக்கு என்ன ஆனால் எமக்கென்ன?

நமக்கு அல்ல.

தமிழுக்கே இழப்பு.... நிரூபிக்க முடியாத குற்ற சாட்டுகளை அள்ளி வீசாமல், அவரை எழுத விடட்டும், இந்த ஆரிய கூட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நமக்கு அல்ல.

தமிழுக்கே இழப்பு.... நிரூபிக்க முடியாத குற்ற சாட்டுகளை அள்ளி வீசாமல், அவரை எழுத விடட்டும், இந்த ஆரிய கூட்டம். 

ஏன் இவரின் கையை சின்மயி கட்டி ஏதும் வைத்துள்ளாரா🤣.

முன்பே சொல்லி விட்டேன் வைரமுத்து நல்ல கவிஞர், பாடலாசிரியர் ஆனால் இவர் எழுதாவிட்டால் தமிழுக்கு ஒரு இழப்பும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.