Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து - அமைச்சர் பந்துல குணவர்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/89712/Bandula.jpg

நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை சுதந்திரம்  அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவோ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது எமது அரசாங்கமோ காரணம் அல்ல.

நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு நாளில் வருவதும் அல்ல, நீண்டகாலமாக தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இறுதியாக நெருக்கடியை  உருவாகும். 

இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு  2015 ஆம் ஆண்டு அரசாங்கமே காரணமாகும். முன்னைய ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் விவசாயம் வீழ்ச்சி கண்டது, சகல ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டு இறக்குமதிக்காக  நாடு திறக்கப்பட்டது.

131 ரூபாவில் இருந்த டொலருக்கான பெறுமதி நாம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேளையில் 181 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை இனியும் முன்னெடுக்க முடியாது என்ற நெருக்கடி நிலையிலேயே ஆட்சி எமது கைகளுக்கு கிடைத்தது. 

தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அவ்வாறான ஒரு நெருக்கடி நிலையில் நாம் உள்ளோம்.

அடுத்த வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக நாம் செலுத்தியாக வேண்டும், இவ்வாறு மிகப்பெரிய தொகையை கடனாக வழங்குவது இலகுவான விடயமல்ல. அவ்வாறு கொடுக்காது போனால் நாம் வங்குரோத்து நாடாக மாறுவோம்.

இப்போதே நாம் வீழ்ச்சி கண்ட நாடாக மாறியுள்ளோம். கடன் பெரும் நாடுகளில் பட்டியலில் இனி வீழ்ச்சி காண எமக்கு இடம் இல்லை. நாம் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வேளையில் கடன் பத்திரமொன்றை கையாள வேண்டும், அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களாக இருந்தாலும், எரிபொருள், உரம், திரவங்கள் போன்ற பொருட்களாக இருந்தாலும், இயந்திரங்கள் போன்ற மூலதனப்பொருட்களாக இருந்தாலும் கடன் பத்திரம் ஒன்றை முன்வைக்க வேண்டும். இது இல்லாது எதனையும் இறக்குமதி செய்ய முடியாது. தடுப்பூசிகளை கூட கொண்டுவர முடியாது. எனவே நாட்டின் நிலைமைகளை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். 

கட்சி அரசியலை  தாண்டி நாடு குறித்து சிந்திக்க வேண்டும், நாடே நெருக்கடியில் இருக்கின்ற வேளையில் ஒரு தரப்பு மீது பொறுப்பை சுமத்தாது சகலரும் ஒன்றிணைந்து எழுர்ச்சி பெற வேண்டும். நாம் இதுவரை எந்தவொரு கடனையும் திரும்ப செலுத்தாது கைவிட்டதில்லை. நாட்டில் இருக்கின்ற சகல பணத்தையும் சுரண்டியேனும் அடுத்த வாரம் இந்த கடன் தொகையை செலுத்திவிடுவோம், செலுத்தவில்லை என்றால் நாம் பாரிய நெருக்கடியில் விழுவோம் என்றார். 

ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து - பந்துல குணவர்தன | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடன் பிரச்சினை ஏற்படாமல் இருக்க…

நாடு, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து… சிங்களவர்களால், தமிழர் மீது வலிந்து திணிக்கப் பட்ட இனப் பிரச்சினை தான் காரணம் என்று அமைச்சருக்கு தெரிந்து இருந்தாலும்… அதனை ஒரு காரணமாக எந்த இடத்திலும் குறிப்பிட அவர் மனம் விரும்பவில்லை.

ஏனென்றால்… பிரச்சினைகளை, திசை திருப்பி… குளிர்காய விரும்புவதுதான் சிங்களவர் குணாதிசயம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இந்த கடன் பிரச்சினை ஏற்படாமல் இருக்க…

நாடு, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து… சிங்களவர்களால், தமிழர் மீது வலிந்து திணிக்கப் பட்ட இனப் பிரச்சினை தான் காரணம் என்று அமைச்சருக்கு தெரிந்து இருந்தாலும்… அதனை ஒரு காரணமாக எந்த இடத்திலும் குறிப்பிட அவர் மனம் விரும்பவில்லை.

ஏனென்றால்… பிரச்சினைகளை, திசை திருப்பி… குளிர்காய விரும்புவதுதான் சிங்களவர் குணாதிசயம்.

என்னிடம் ஒரு 600ம் இருக்குது, நீங்கள் ஒரு 400ம் தந்தால், அடுத்த கிழமை 1பி பிரச்சனைக்கு உதவலாம்.

என்ன சொல்லுறியள்?🤔

****

ஜே ஆர் ஜெயவர்த்தன காலத்தில் இருந்து மீடியா மேல் அடக்குமுறை பாவித்து, சிங்கள மக்களுக்கு எவ்வித உண்மையான தகவலும் போகாமல் செய்தார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவு குறித்த சேனல் 4, செய்திகளை கூட மடக்கினார்கள்.

சகலமும் தாண்டி, இன்று சிங்களமக்களும் சில செய்திகளை பார்க்கிறார்கள். நியாயமும் புரிகிறது.

சீனாவினால் வரும் ஆபத்தும், அரசின் நிலையால், புலம் பெயர் தமிழ் முதலீடுகள் நாட்டினுள் வர முடியாமல் உள்ளத்தையும் உணர்கிறார்கள்.

ஆனால் சகலமும், திரும்ப முடியாத, ஒரு வழிப்பாதையில் போய், நீண்ட காலமாகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

என்னிடம் ஒரு 600ம் இருக்குது, நீங்கள் ஒரு 400ம் தந்தால், அடுத்த கிழமை 1பி பிரச்சனைக்கு உதவலாம்.

என்ன சொல்லுறியள்?🤔

இரண்டு பேரும் சேர்ந்து… அந்த 1பி பிரச்சினையை வாற கிழமை சமாளித்தாலும்…

2029’ம் ஆண்டு வரை… பல பி கட்ட வேணுமாமே. அதுக்கு நம்மால் முடியாதப்பா… 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு பேரும் சேர்ந்து… அந்த 1பி பிரச்சினையை வாற கிழமை சமாளித்தாலும்…

2029’ம் ஆண்டு வரை… பல பி கட்ட வேணுமாமே. அதுக்கு நம்மால் முடியாதப்பா… 🤣

ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம்.

மிச்சத்தை தல கோசன் பார்த்துக்கொள்ளுவார். ஆள், வேர்ல்ட் பாங்குக்கே கடன் கொடுக்கக்கூடிய பசை பார்ட்டி. பெரும் முதலை. 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம்.

மிச்சத்தை தல கோசன் பார்த்துக்கொள்ளுவார். ஆள், வேர்ல்ட் பாங்குக்கே கடன் கொடுக்கக்கூடிய பசை பார்ட்டி. பெரும் முதலை. 😁

வேர்ல்ட் பாங்க்குக்கு… கடன் குடுக்கிற ஆள் என்றால்…  முதலை 🦎  இல்லை.  🦕 டைனேசர் 🦖  🤣

🏃🏽தமிழ்சிறி🏃🏽‍♂️ எஸ்கேப்பு… 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே எனக்கும் கொஞ்சம் கிள்ளித் தெளியுங்கோவன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

அடுத்த வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக நாம் செலுத்தியாக வேண்டும், இவ்வாறு மிகப்பெரிய தொகையை கடனாக வழங்குவது இலகுவான விடயமல்ல. அவ்வாறு கொடுக்காது போனால் நாம் வங்குரோத்து நாடாக மாறுவோம்.

ஏற்கெனவே வங்குரோத்திலதான் நாடு இருக்கு என்பது இவருக்கு புரியவில்லையா,  நடிக்கிறாரா? ராஜபக்க்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை எடுத்தாலே போதும் கடன் கட்டலாம். வெளிநாடுகளில் கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்திக்கொண்டு, பணத்தையும் வெளிநாடுகளில் பதுக்கி, குடியுரிமை பெற்றுக்கொண்டு மக்கள்மேல் கடன் சுமையை ஏற்றிவிட்டு வெளிநாடுகளில் குடியமர்ந்து விடுவினம். கஸ்ரப்படுவது சாதாரண மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முன்பு வீரகேசரியில் வாசித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகின்றது.

 

***

 

தலைப்பு: ஏணி

 

ஏறும்வரை

நீ வேண்டும்!

ஏறியபின் எதற்கு

நீ வேண்டும்?

 

***

 

இப்போது ஏணியை இலங்கை நாடு என்று நினையுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு நாளில் வருவதும் அல்ல, நீண்டகாலமாக தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இறுதியாக நெருக்கடியை  உருவாகும். 

இறுதி நிலைக்கு சிறிலங்கா வந்திட்டுதா?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

ஏற்கெனவே வங்குரோத்திலதான் நாடு இருக்கு என்பது இவருக்கு புரியவில்லையா,  நடிக்கிறாரா? ராஜபக்க்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை எடுத்தாலே போதும் கடன் கட்டலாம். வெளிநாடுகளில் கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்திக்கொண்டு, பணத்தையும் வெளிநாடுகளில் பதுக்கி, குடியுரிமை பெற்றுக்கொண்டு மக்கள்மேல் கடன் சுமையை ஏற்றிவிட்டு வெளிநாடுகளில் குடியமர்ந்து விடுவினம். கஸ்ரப்படுவது சாதாரண மக்களே.

அப்படி ஒரு நிலை வந்தால் உவையளை நம்பி வடக்கு கிழக்கில் அரசியல் செய்யும் எம்மவர்கள் பாவம்....சில நேரம் அவையளையும் கூட்டிகொண்டு போவினம் ....வெளிநாட்டில் பாதுகாப்பு வீரர்களாக வைச்சிருப்பதற்கு 

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது கஷ்டப்படுகிறவனுக்கு கடன் கொடுத்தால் சிறிது சிறிதாகவாவது அந்த கடன் திரும்பக் கிடைக்கும் ......பிச்சைகாரனுக்கு கடன் குடுத்தால் அதை வசூலிக்க முடியுமா.....!

முதலில் வட்டி வேண்டாம் என்பார்கள்...... சில வருடங்களின் பின் அசலில் அரைவாசி தந்தால் போதும் என்பார்கள் .......அதன் பின் அங்கும் அரசு மாறி  இங்கும் அரசு மாறி ஒருத்தர் மீது ஒருத்தர் பழி போட்டுக்கொண்டிருக்க நாடு கடனில் மூழ்காது கடன்தான் கடலில் மூழ்கும்.......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம்.

மிச்சத்தை தல கோசன் பார்த்துக்கொள்ளுவார். ஆள், வேர்ல்ட் பாங்குக்கே கடன் கொடுக்கக்கூடிய பசை பார்ட்டி. பெரும் முதலை. 😁

ஏனப்பா அந்தாளை இழுக்கிறியள்,அந்தாள் சிவனே எண்டு லீவு முடிந்து வேலையிலை மும்முரமாக இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

யாராவது கஷ்டப்படுகிறவனுக்கு கடன் கொடுத்தால் சிறிது சிறிதாகவாவது அந்த கடன் திரும்பக் கிடைக்கும் ......பிச்சைகாரனுக்கு கடன் குடுத்தால் அதை வசூலிக்க முடியுமா.....!

முதலில் வட்டி வேண்டாம் என்பார்கள்...... சில வருடங்களின் பின் அசலில் அரைவாசி தந்தால் போதும் என்பார்கள் .......அதன் பின் அங்கும் அரசு மாறி  இங்கும் அரசு மாறி ஒருத்தர் மீது ஒருத்தர் பழி போட்டுக்கொண்டிருக்க நாடு கடனில் மூழ்காது கடன்தான் கடலில் மூழ்கும்.......!  😎

👆🏼இதுதான் உண்மை.

 

13 hours ago, Nathamuni said:

ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம்.

மிச்சத்தை தல கோசன் பார்த்துக்கொள்ளுவார். ஆள், வேர்ல்ட் பாங்குக்கே கடன் கொடுக்கக்கூடிய பசை பார்ட்டி. பெரும் முதலை. 😁

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துக்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் ஹர்ஷ டி சில்வா

 
அரசாங்கத்துக்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் ஹர்ஷ டி சில்வா
 

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாணயத்தாள்களை அச்சிடுவதன் ஊடாக மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்து விட முடியாது என்பதை அரசாங்கம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது நாடு, பாரிய பொருளாதார பின்னடைவை முதன் முறையாக சந்தித்துள்ளது.  அதனை கட்டியெழுப்புவதற்கு உடனடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் நாணயத்தாள்களை அச்சிடுவதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதுடன் இலங்கை ரூபாயின் நாணய பெருமதி மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது என ஹர்ஷ டி சில்வா  கவலை வெளியிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் உரிய தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப்  அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என  அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2021/1226352

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருட இறுதிக்குள் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்த்துள்ளோம் - அஜித் நிவாட் கப்ரால்

(நா.தனுஜா)

கொவிட் பரவல் காரணமாக இவ்வருட இறுதிக்குள் எதிர்பார்த்த 6 வீத சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீட்சிக்கான செயற்திட்டங்கள் மூலம் 2021 ஆம் ஆண்டு முடிவில் 5 - 5.5 சதவீதம் வரையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்ப்பதாக நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் இறையாண்மைக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், அவ்வரிச்சலுகை நீக்கப்படுவதால் பொருளாதார ரீதியில் பாரியதொரு சேதம் ஏற்படாது என்றும் அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

36.jpg

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,  

கேள்வி - தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் அது மிகமோசமான வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகின்றது. இதன் உண்மை நிலைவரம் என்ன?

பதில் - நாட்டில் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் காலப்பகுதியிலும் மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிடும் என்றுதான் கூறப்பட்டது. இது தற்போது புதிதாகக் கூறப்படுகின்ற விடயமல்ல. எமது அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து பல்வேறு தரப்பினராலும் இவ்வாறு கூறப்பட்டுவருகின்றது. நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வித நெருக்கடிகளும் இல்லை என்று நான் கூறவில்லை. அதில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சியடையப்போவதாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலராலும் கூறப்படும் விடயங்கள் அரசியல் கோணத்தை மையப்படுத்தியவையாகும். பொருளாதாரத்தில் பிரச்சினைகள் காணப்படுவதாகக் கூறுகின்ற எந்தவொரு தரப்பினரும் அதற்கான தீர்வுகளைக்கூற முன்வரவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எமது நாடு மாத்திரமன்றி உலகின் அநேக நாடுகள் பலகாலம் தொடர்ச்சியாக முடக்கப்பட்டிருந்தன. அதனால் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பங்களிப்புச்செய்கின்ற பல்வேறு துறைகளும் சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆகவே இவ்விடயத்தைப் பொறுத்தவரையில், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் பிரச்சினைகளை மாத்திரமே சுட்டிக்காட்டுவதையும்விடுத்து, அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கேள்வி - நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியிருக்கின்றார். இதுகுறித்த உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் - பொருளாதாரத்தின் மீட்சிக்கு ஒவ்வொரு தரப்பினரும் பல்வேறு வழிமுறைகளையும் நிலைப்பாடுகளையும் கொண்டிருக்க முடியும். சிலர் வரையறுக்கப்பட்ட அல்லது தவறான தரவுகளை மாத்திரம் மேற்கோள்காட்டி, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகோருமாறு கூறுகின்றார்கள். ஆனால் அவ்வாறு கூறுகின்றவர்கள் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோது சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகோரியதால் ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில் பேசுவதில்லை.

ஆகவே இதுவிடயத்தில் எம்மிடம் மாற்றுயோசனைகள் உள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக ஏற்கனவே பல்வேறு செயற்திட்டங்களை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். எம்மை வீழ்ச்சியுறச்செய்வது மாத்திரமே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதனை செவிமடுத்து, முறையற்ற கொள்கைகளை வகுப்பதற்கு நாம் தயாரில்லை.

கேள்வி - கொவிட் - 19 வைரஸ் பரவலின் முதலாம், இரண்டாம் அலைகளின் பின்னர் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எனினும் ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பிவந்த பொருளாதாரம், தற்போது மீண்டும் ஏற்பட்ட வைரஸ் பரவல் அலை காரணமாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. எனவே ஏற்கனவே கூறியதன்படி இவ்வருட முடிவில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவது சாத்தியமா?

பதில் - இவ்வருட இறுதியில் பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதமாகப் பேணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போதைய சூழ்நிலைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அது சற்றுக் கடினமானதாகவே அமையும். நாட்டில் நீண்டகாலத்திற்கு அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை அதற்குப் பிரதான காரணமாகும். எனினும் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் விரைவிலேயே நாட்டை மீளத்திறக்க முடிந்திருக்கிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், அனைவருக்கும் வெகுவிரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்து ஏனைய நடவடிக்கைகளை இயல்புநிலைக்குத் திருப்பவேண்டும். குறிப்பாக சுற்றுலாத்துறையின் செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் விமானங்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்குக் கிடைத்த வருமானம் கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக முழுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அதேபோன்று பயணக்கட்டுப்பாடுகளின்போது அனைத்து நிறுவனங்கள், வணிகங்களும் மூடப்படுவதால் அவற்றின் வருமானம் வீழ்ச்சியடையும். அதன் விளைவாக அவை அரசாங்கத்திற்குச் செலுத்துகின்ற வரியின் அளவிலும் வீழ்ச்சி ஏற்படும். மக்களின் உயிரைப் போன்றே அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும். அதற்குரிய நடவடிக்கைகயை மேற்கொள்வதுடன் தற்போதைய நிலை மேலும் மோசமடையாமல் பேணுவதற்கும் வெகுவிரைவில் இயல்புநிலையை அடைவதற்கும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவற்றின் ஊடாக வருட இறுதியில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியாவிட்டாலும், 5 அல்லது 5.5 சதவீதம் வரையில் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி - சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

பதில் - நாட்டை மீண்டும் இயல்புநிலைக்குத்திருப்பி, முழுமையாகத் திறப்பதே இதற்கான அடிப்படையாகும். சுகாதாரத்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு நாம் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவி;ல்லை. ஆனால் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மீண்டும் நாட்டைத் திறப்பதற்கும் பொருளாதார நடவடிக்கைகளை இயல்புநிலைக்குத் திருப்புவதற்கும் தீர்மானித்திருக்கின்றன. நாமும் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதன் ஊடாகப் இயல்புநிலைக்கு திரும்பினால், நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி - இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வரிச்சலுகை இல்லாமல்போகுமா? அவ்வாறு இல்லாமல்போகுமாயின், அதனை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் எவை?

பதில் - முதலில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதிகளைச் செய்யும்போது கிடைக்கின்ற வரிச்சலுகையாகும். இந்த வரிச்சலுகையானது பொலிவியா, ஆர்மேனியா, பாகிஸ்தான், மொங்கோலியா, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளடங்கலாக ஒன்பது நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவில்லை.

அதேபோன்று ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும்போது அதற்காகப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அவை பொருளாதாரம் சார்ந்த நிபந்தனைகள் அல்ல. மாறாக நாடொன்றின் கொள்கைகள், மனித உரிமைகள் உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் சார்ந்த நிபந்தனைகளாகவே இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கடந்த 2002 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது, போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் எமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டு 2010 ஆம் ஆண்டில் இல்லாமல்செய்யப்பட்டது. அப்போதும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையப்போகின்றது என்பது உள்ளடங்கலாக இப்போது முன்வைக்கப்படும் அனைத்துக் கூச்சல்களும் எழுந்தன. ஆனால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுவந்த ஏற்றுமதிகளை விடவும் 2010 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் ஏற்றுமதிகளின் அளவு 20 சதவீதத்தினால் அதிகரித்தது. இவர்கள் கூறுவதைப்போன்று பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை.

பின்னர் மீண்டும் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 30ஃ1 தீர்மானத்திற்கு உடன்படுவதாகக் கூறினார்கள். எமது இராணுவ வீரர்களை சிறைகளில் அடைத்தார்கள். சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்தார்கள். அதன்மூலமே அந்த வரிச்சலுகை மீண்டும் பெறப்பட்டது. இவையனைத்தும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் அல்ல. மாறாக அரசியல் நடவடிக்கைகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே எமது கொள்கைகள் மற்றும் நாட்டின் இறையாண்மை தொடர்பில் நாம் அவர்களுக்கு விளக்கமளிக்க முடியும். இல்லாவிட்டால், ஜி.எஸ்.;பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராயவேண்டும். அடுத்தவாரமளவில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, உரிய செயற்திட்டங்கள் வகுக்கப்படும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், எமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளை பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதற்கான கொள்கைகளும் திட்டங்களும் தயாரிக்கப்படும்.

கேள்வி - கடந்த காலத்தில் வேறு எவ்வித அழுத்தங்களும் காணப்படாததன் காரணமாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்ட போதிலும் அதற்கு சிறப்பாக முகங்கொடுக்க முடிந்தது. எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்த வரிச்சலுகையும் நீக்கப்பட்டால் அதற்கு முகங்கொடுப்பது சாத்தியமா?

பதில் - கடந்த காலத்திலும் இதேபோன்ற கருத்துக்கள்தான் கூறப்பட்டன. போரை வெற்றிகொள்ளமுடியாது என்றும் கூறப்பட்டது. அதேபோன்று, இப்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தச் சவாலுக்கும் முகங்கொடுப்பது கடினம் என்கிறார்கள். நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் நிபந்தனைகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியமுடியாது என்பதே எமது கொள்கையாகும். ஆகவே இந்தச் சவாலுக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராகிவருகின்றோம்.

கேள்வி - அண்மைக்காலத்தில் ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சிகண்டுவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

பதில் - எந்தவொரு விடயத்திலும் இலக்கு ஒன்று இருக்கவேண்டு;ம். அதனை குறித்த காலப்பகுதிக்குள் அடைவது சாத்தியமில்லாவிடினும், அதனை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேபோன்று ரூபாவின் பெறுமதியை நிலையான மட்டத்தில் பேணுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த காலப்பகுதியில் அதனை அடையமுடியாதுபோனாலும், அந்த இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

நான் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவிவகித்தபோது டொலருக்கெதிரான ரூபாவின் பெறுமதி 131 ஆகக் காணப்பட்டது. எனினும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அது 185 ரூபா வரை அதிகரித்தது. அதன் காரணமாகவே தற்போது டொலருக்கெதிரான ரூபாவின் பெறுமதி 200 ஐ அண்மிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த அரசாங்கம், அதாவது தற்போதைய எதிர்க்கட்சி தமது காலத்தில் இடம்பெற்ற தவறுகளை மறைத்துக்கொள்வதற்கு எம்மீது குற்றஞ்சுமத்துகின்றார்கள்.

கேள்வி - எரிபொருள் விலையதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன அல்லவா?

பதில் - எந்தவொரு அரசாங்கமும் தமது நாட்டுமக்கள் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதை விரும்பாது. அந்தவகையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்புவது இயல்பானதாகும். ஆனால் இப்போது எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால், எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படும்.

எதிர்வரும் காலத்தில் உலகசந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடையும் போது, அதன்மூலம் கிடைக்கும் நன்மையை எமது நாட்டுமக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும். இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் எரிபொருள் விலை மிகவும் குறைந்த மட்டத்திலேயே பேணப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

வருட இறுதிக்குள் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்த்துள்ளோம் - அஜித் நிவாட் கப்ரால் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு  குண்டாக  தமிழரின் தலையில்  கொட்டி

ஒவ்வொரு  அங்குலமாக பிடித்த  எம்  மண்ணையும்

வட்டியாக தன் மண்ணையும்  சேர்த்து  விற்றாலும்

முடியாது  இந்த  வட்டிக்கடன்

எவ்வளவு  சொன்னாலும்  மதம்  பிடித்தவனுக்கு????

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

குண்டு  குண்டாக  தமிழரின் தலையில்  கொட்டி

ஒவ்வொரு  அங்குலமாக பிடித்த  எம்  மண்ணையும்

வட்டியாக தன் மண்ணையும்  சேர்த்து  விற்றாலும்

முடியாது  இந்த  வட்டிக்கடன்

எவ்வளவு  சொன்னாலும்  மதம்  பிடித்தவனுக்கு????

யாருக்கு எதை சொன்னீர்கள்? 

நீங்கள் சண்டை பிடித்திருக்காவிட்டால் அவர்கள் கடன்வாங்க வேண்டியநிலை வந்திருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, கற்பகதரு said:

யாருக்கு எதை சொன்னீர்கள்? 

நீங்கள் சண்டை பிடித்திருக்காவிட்டால் அவர்கள் கடன்வாங்க வேண்டியநிலை வந்திருக்காது.

குடுக்க வேண்டியதை குடுத்தால் ஏன் சண்டை சச்சரவு வரப்போகுது கற்பகத்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

யாருக்கு எதை சொன்னீர்கள்? 

நீங்கள் சண்டை பிடித்திருக்காவிட்டால் அவர்கள் கடன்வாங்க வேண்டியநிலை வந்திருக்காது.

உடல் நலம் சார்ந்து எந்த பிரச்சினையும் இல்லைத்தானே  சகோ?

நலம்  தானே???

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

அடுத்த வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக நாம் செலுத்தியாக வேண்டும், இவ்வாறு மிகப்பெரிய தொகையை கடனாக வழங்குவது இலகுவான விடயமல்ல. அவ்வாறு கொடுக்காது போனால் நாம் வங்குரோத்து நாடாக மாறுவோம்

☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

யாருக்கு எதை சொன்னீர்கள்? 

நீங்கள் சண்டை பிடித்திருக்காவிட்டால் அவர்கள் கடன்வாங்க வேண்டியநிலை வந்திருக்காது.

ஏன்  சண்டை பிடிக்க வேண்டி வந்தது ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உடல் நலம் சார்ந்து எந்த பிரச்சினையும் இல்லைத்தானே  சகோ?

நலம்  தானே???

இதையா சொன்னீர்கள்? ஏதோ உங்கள் புண்ணியத்தால் முன்னர் இருந்த பிரச்சினைகள் இல்லாமல் போனதால் உடல்நலம் முன்னேறியிருக்கிறது.🙂

1 hour ago, பெருமாள் said:

ஏன்  சண்டை பிடிக்க வேண்டி வந்தது ?

சண்டியர்கள் இருந்ததால் சண்டைபிடிக்க வேண்டிவந்தது. இப்ப சண்டை இல்லையல்லவா?🙂

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கற்பகதரு said:

சண்டியர்கள் இருந்ததால் சண்டைபிடிக்க வேண்டிவந்தது. இப்ப சண்டை இல்லையல்லவா?🙂

1958 ல் தொடங்கி தமிழரை இனவழிப்பு செய்தவர்கள் இப்ப இல்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கற்பகதரு said:

இதையா சொன்னீர்கள்? ஏதோ உங்கள் புண்ணியத்தால் முன்னர் இருந்த பிரச்சினைகள் இல்லாமல் போனதால் உடல்நலம் முன்னேறியிருக்கிறது.🙂

சண்டியர்கள் இருந்ததால் சண்டைபிடிக்க வேண்டிவந்தது. இப்ப சண்டை இல்லையல்லவா?🙂

நான் நினைத்தேன் வயதாக வயதாக சில விடயங்கள் மரத்து போகும் என்பார்கள். 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.